வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

எண்பத்து நான்கு ஆண்டுகள் பழைமைச் சிறப்பு கொண்ட கொழும்பு பரடைஸ் பிளேஸ் மகாகாளியம்மன் ஆலய திருவிழா

கொழும்பில் தமிழர் கள் செறிந்து வாழுகின்ற ஒரு பகுதியான பரடைஸ் பிளேஸ் என்ற ஆங்கிலப் பதத்திற்கு உரிய தமிழ் வரைவிலக்கணம் ‘சொர்க்கபுரி’ என்பதாகும். அந்நியர் இலங்கையை ஆண்ட போது ஆங்கிலேயரால் இந்நாமம் சூட்டப்பட்டிருக்கலாம். உலகில் தல விருட்சங்கள் இரண்டு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து வளர்வது அபூர்வம். அரசும் பனையும் பின்னிப் பிணைந்த அபூர்வதலத்திலே 1931 ஆம் ஆண்டு இத்திருத்தலம் அமைந்தது. இத்தல விருட்சங்களில் அன்று நாகமாக நிலைகொண்டு நாகத்தம்பாளாக அருள்பாலித்து வந்தவள் ஸ்ரீ மகா காளியம்பாள். இதனை உணர்ந்த அம் பாள் அடியார்கள் இவ்விருட்சங்களைச் சுற்றி மாடம் அமைத்து அதில் சூலாயுத த்தை வைத்து வணங்கத் தலைப்பட்டனர். அன்று கொழும்பு நகரமாக இருந்த ¡லும் கூட இம்மக்கள் கிராமிய வழக் கப்படியே பூஜைகளை நடாத்தி வந்தனர். அம்பாளின் சக்தி படிப்படியாக வெளிப்பட காலத்தின் கோலத்திற்கேற்ப இவ்வாலயத்தை கட்டியெழுப்ப வாய்ப்புக் கிடைத்தது. அதற்கமைய கொழும்பு பரடைஸ் பிளேஸ் மக்கள் அனைவரும் அம்பாள் அருளால் அமரர் அ. குருசாமி தலைமையில் ஒன்றிணைந்து 1949 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் திகதி இவ்வாலயத்தை கட்டியெழுப்பத் திட்டமிட்டனர். அதற்கமைய தமிழகத்திலிரு ந்து சிற்ப சாஸ்திரி யான ஆர். நாகலிங்கம் அழைத்துவரப்பட்டார். ஆவணி 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அவரது கை வண்ணத்தில் மூலமூர்த்தியான சப்தசதி ஸ்ரீ மகாகாளியம்மனுக்கும். ஸ்ரீ முனீஸ் வரப் பெருமானுக்கும் ஸ்ரீ சூலாயுத மூர்த்திக்கும் கோபுரங்களுடன் கூடிய திருக்கோயில்கள் அமைக்கப்பட்டன. இக் கோயில்களின் இஷ்ட தெய் வங்களின் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு புரட்டாதி மாதம் 30 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருடா வருடம் திருவிழா வெகு விம ரிசையாகக் கொண்டாடப்பட்டது. பத்து நாட்கள் நடைபெறும் இத் திருவிழாவில் முதல் நாளன்று காப்புக் கட்டு வைபவம் இடம்பெறும். அதற்கடுத்த ஏழு நாட்களும் அம்பாளுக்கு விசேட அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறும். எட்டாம் நாள் கொழும்பு பரடைஸ் பிளேஸிலிருந்து அருள்பாலிக்கும் அம்பாளுக்கு முகத்துவாரம் சங்குமுகத்தில் கரகம் பாலித்தல் இடம்பெறும்.அதனைத் தொடர்ந்து கரகம், காவடி தீச்சட்டிகள் என பக்தர்கள் புடைசூழ அம்பாள் முகத்துவாரம் ஆலயத்திலிருந்து பாலத்துறை, சேதவத்தை, பலாமரச் சந்தி, பபாபுள்ளே தோட்டம், கிரா ண்ட்பாஸ் வீதியூடாக ஆலயத்தை வந் தடைவாள். ஒன்பதாம் நாள் காலை பாலாபிஷேக மும் மாலையில் மங்கல மங்கையரின் மாவிளக்கு பூஜையும், ஆலய முற்றத்தில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். பத்தாவது நாளன்று பக்த கோடிகள் மஞ்சள் நீராடி அம்மன் அருளைப் பெற்று சக்தி அடியார்களுக்கு அருள் வாக்குக் கூறுவார். அந்த அருளோடு சக்தி கரகமும் தீச்சட்டியும் ஏந்தி முகத் துவார சங்குமுகத்திற்குச் சென்று தீர்த் தமாடுவர். அதனைத் தொடர்ந்து பரடைஸ் பிளேஸ் ஸ்ரீ மகா காளியம்மன் சந்நிதானத்தில் மகேஸ்வர பூஜை நடா த்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். இத் திருக்கோவிலில் விஷேஷமாக முதலில் சூரியன், சந்திரனுக்கும் தலவிருட்ஷங்களான அரசும், பனையும் பின்னிப் பிணைந்து நிழலில் வீற்றிருக்கும் ஸ்ரீ விநாயகருக்கும் பூஜை செய்தபின் ஸ்ரீ விநாயகர், மூல மூர்த்தியும் சப்த சதி நாயகியாகிய ஸ்ரீ மகா காளியம்மனுக்கு, ஸ்ரீ முருகனுக்கும் பூஜை நடைபெற்று ஏனைய பரிவார மூர்ததிகளுக்கும் பூஜை நடைபெறும். தினந்தோறும் ஆறு காலப் பூஜைகள் நடைபெறும். காலை 5.30 மணிக்கு திருவனந்தல் பால் பூஜை காலை 6.30 மணிக்கு காலைச்சந்தி காலை 10.30 மணிக்கு உச்சிக்காலம் கோபூஜை மாலை 5.00 மணிக்கு சாயரட்சை மாலை 6.30 மணிக்கு இரண்டாம் காலம் மாலை 8.00 மணிக்கு அர்த்த சாமம் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் 12.00 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 9.00 மணிக்கு அர்த்த சாம பூஜையும் நடைபெறும். ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் வருடா வருடம் வரும் விசேட விழாக்களாவன: வருஷாபிஷேகம், முதல் பத்து நாட்களும் காலையும் மாலையும் இலட்சார்ச்சனை வெகு விமரிசையாக நடைபெறும். தை மாதம் பூர்வ பட்ச அத்த நட்சத்திரத்தில் வருஷாபிகேம் சகஸ்ட சத சங்காபிஷேகம் நடைபெறும். ஆதி காலந் தொட்டு கிராமிய முறையில் நடைபெற்றதுபோல் இன்றும் கொழும்பு முகத்துவாரம் சங்குமுகத்தில் அம்பாள் அருளோடு தீமிதிப்பும் இரதபவனி, பால்குட பவனியும் பாலாபிஷேகமும். மாவிளக்கு பூஜையும் நடாத்தப்பட்டு இறுதி நாளன்று மஞ்சள் நீராட்டத்துடன் கொழும்பு முகத்துவாரம் சங்கமத்தில் தீர்த்த உற்சவம் நடைபெறும். அதன்பின் மகேஸ்வர பூஜை நடாத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். மாலை ஸ்ரீ பைரவருக்கும். ஸ்ரீ பத்ராகாளியம் மனுக்கும் மடைபரவி பொங்கல் படைத்து பூஜை நடாத்தப்படும்.இத் திருக்கோவிலில் நான்கு நவராத்திரி விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.முதலாவதாக தை மாதம் சியாமளா நவராத்திரியும், சித்திரை மாதம் வசந்த நவராத்திரியும், ஆடி மாதம் ஆஷாட நவராத்திரியும், புரட்டாதி மாதம் சாரதா நவராத்திரியும் நடைபெறும். சாரதா நவராத்திரியுடன் விஜயதசமி நடைபெறுவது போல ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி ஆரம்பிக்கப்பட்ட பத்தாம் நாள் மஹா சண்டி ஹோமமும் நடாத்தப்படும். ஆவணி மாதம் திருக்குளிர்த்திப் பெருவிழா நடைபெறும். இவ்விழா வேறு எந்தவொரு ஆலயங்களிலும் நடைபெறுவதில்லை. இத்திருந்கோவிலில் இவ்விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.மாதா மாதம் வரும் பெளர்ணமி நாளன்று விஷேஷமாக 108 சங்காபிஷேகமும். ஸ்ரீ சக்கர பூஜையும், கோபூஜையும் அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜையும் நடைபெறும். பங்குனி மாதம் வரும் பங்குனித் திங்கள் நான்கிலும் இத்திருக்கோவில் முற்றத்தில் அடியார்கள் தங்கள் கரங்களாலே பொங்கல் வைத்து ஸ்ரீ பத்ராகாளியம்மனுக்குப் படைத்து பூஜை செய்வர். செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் இராகுகாலப் பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.ஏனைய விஷேஷங்களாவன: விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, ஸ்கந்த ஷஷ்டி, வரலட்சுமி நோன்பு, கெளரி நோன்பு இன்னும் விஷேஷ பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. வேண்டியவருக்கு வேண்டிய வர த்தை வாரி வழங்கி கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகாகாளியம்மனை நடி வரும் பக்த கோடிகளின் எண் ணிக்கையை நாளுக்கு நாள் பெருகி கொண்டிருப்பதன் மர்மம் அம்பாளின் மகிமையாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812