வேதங்களில் உள்ள கருத்துகளை தெளிவாக கூறுவது எது?
புராணங்கள்
புராணம் என்ற சொல்லிற்கு உரிய பொருள் என்ன?
பழமை வாய்ந்தது
நெடுங்காலமாக செவிவழியாகவே கற்பிக்கப்பட்டு வந்த புராணங்கள் யாரால் நூல்களாக தொகுப்பட்டுள்ளன?
வேதவியாசர் என்பவரால்
இவற்றில் வேதவியாசரே தொகுத்த புராணங்கள் எத்தனை?
பதினெட்டு
வேதவியாசரே தொகுத்த 18 புராணங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
மகாபுராணங்கள்
இவையல்லாத உபபுராணங்கள் எத்தனை?
பதினெட்டு
வேதத்தில் கூறப்பட்டுள்ளவைகளின் சாரங்கள் கதைகளின் வடிவில் கூறப்பட்டுள்ளது எதில்?
புராணங்களில்
புராணங்களில் என்னென்ன கூறப்பட்டுள்ளன?
பேரண்டங்களின் தோற்றம், அவற்றின்
பிரளயம், மும்மூர்த்திகள் தோற்றம் மற்றும் அவர்களின் அவதாரங்கள்,
தேவர் -அரக்கர்களின் போர்கள் போன்றவைகள்
புராணம் என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் எதில் முதன்முதலில் வருகிறது?
மணிமேகலையில்
திருவாசகத்திலே மாணிக்கவாசகர் முதலில்
பாடியது எது?
சிவபுராணம்.
பிரம்மாவால் நாரதருக்குக் கூறப்பட்டது என்ன புராணம்?
சிவ புராணம்
புலஸ்தியரால் நாரதருக்கு கூறப்பட்டது என்ன புராணம்?
கூர்ம புராணம்
கருடனால் காசியப்பருக்கு கூறப்பட்டது என்ன
புராணம்?
கருட புராணம்
மார்க்கண்டேயர் வியாசர் சீடர்களில் ஒருவரான
ஜைமினி முனிவருக்கு கூறியது எது?
மார்க்கண்டேய புராணம் -
அக்கினி தானே வசிஷ்டருக்குக் கூற அவர்
வியாசருக்கு கூறியது எது?
அக்கினி புராணம்
வராகரே கூறியது எந்த புராணம்?
வராக புராணம்
கந்தனே கூறி அருளியது எந்த புராணம்?
கந்த புராணம்
வாயுவாலேயே கூறப்பட்டது எந்த புராணம்?
வாயு புராணம்
மத்ஸ்யாவதார விஷ்ணு மனுவுக்குக் கூறியது எந்த புராணம்?
விஷ்ணு புராணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக