புதன், 3 டிசம்பர், 2025

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

பெண்களுக்கான பாதுகாப்பு குறைவாகவே உள்ளது கீர்த்தி சுரேஷ்

இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைவாகவே உள்ளது என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சுனில், ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’. நவம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதற்காக நடைபெற்ற சந்திப்பில் ‘ரிவால்வர் ரீட்டா’ குறித்து, அதன் படக்குழுவினர் குறித்தும் விரிவாக பேசினார். அதனைத் தொடர்ந்து, நாயகியாகி 12 ஆண்டுகள் ஆனது குறித்து கீர்த்தி சுரேஷ் விவரிக்கும்போது, “திரைத் துறைக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், கடலில் ஒரு துளி போல தான் கற்றுக் கொண்டுள்ளேன். இன்னும் நிறைய கற்றுக்கொள்ள ஆசை இருக்கிறது. இப்போது தான் திரையுலக வாழ்க்கை தொடங்குவது போல உணர்கிறேன். இன்னும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்ய ஆசைப்படுகிறேன். நிறைய கிண்டல்கள், கடினமான தருணங்களை தாண்டி வந்திருக்கிறேன். சமூக வலைதளத்தில் பரவும் எதிர்மறை கருத்துகளுக்குள் சென்றதில்லை. நான், எனது வேலை என போய் கொண்டே இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு, “இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. அமெரிக்கா அல்லது துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றால் அங்கு பாதுகாப்பு அதிகம். அங்கு சட்ட திட்டங்களே வேறு மாதிரி இருக்கும். அவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவுதான். இது மாற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்

சைவத் திருநூல்கள்

சைவத் திருநூல்கள் 207675. சைவ சமயத்தின் முதன்மையான நூல்கள் யாவை? வேதமும் சிவாகமமும். 207676. இவை எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளன? ஆரியம் எனப்படும் சமஸ்கிருத மொழியில். 207677. தமிழ் மொழியில் உள்ள சைவத் திருநூல்கள் நான்கு கூறுக. தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பெரிய புராணம். 207678. தேவாரம், திருவாசகம் முதலிய திருநூல்கள் அடங்கிய தொகுப்புக்குப்பெயர் யாது? திருமுறை. 207679. தேவாரங்களைப் பாடியருளியவர் யாவர்? திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவர். 207680. திருவாசகத்தைப் பாடியருளியவர் யாவர்? மாணிக்கவாசக சுவாமிகள். 207681. திருமந்திரத்தைச் செய்தருளியவர் யாவர்? திருமூல நாயனார். 28 207682. பெரியபுராணத்தைப் பாடியருளியவர் யாவர்? சேக்கிழார் பெருமான். 08 207683. சைவத் திருநூல்களை எவ்விதம் ஓதுதல் வேண்டும்? அன்புடன் கண்ணில் ஒற்றி, சிவசிந்தனையுடன் நியமமாக ஓதுதல் வேண்டும். 207684. சைவத் திருநூல்களை அன்புடன் ஓதுபவர் அடையும் நன்மைகள் சில கூறுக. அறியாமையாகிய இருள் நீங்கப் பெறுவர்; உள்ளத்தூய்மை பெறுவர்; நல் முயற்சிகளிற் சித்தி பெறுவர்

கொழும்பு தட்டாரத்தெரு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயம்

நீதியும் நியாயமும தர்மமும் நிலைத்து நிற்கக்கூடிய தளம் திருத்தலம். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த திருத்தலத்திலே எழுந்தருளி அல்லது வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் நீதிக்கும் நியாயத்திற்கும் தர்மத்திற்கும் உரிய குல தெய்வமாக விளங்கக் கூடியவள் வீரத்திற்கு அதிபதியான ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆவார். திருமூலராய் ‘சிவபூமி’ என போற்றப்பட்ட இலங்கைத் திருநாட்டிலே, நீதியும் நேர்மையும் உண்மையும் சத்தியமும் வெற்றிபெற்று நிலைத்து நிற்க வேண்டும் என்று வாய்மையால் வாதாடும் வக்கீல்களும் நீதி தவறாது தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளும் காலைப் பொழுதானால் சோம்பல் இன்றி வீரத்தின் அடையாளமாய் சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருக்கின்ற நீதிமன்றங்களும் நிறைந்து விளங்கும் புதுக்கடை என அழைக்கப்படும் ஹல்ஸ்டொப் சில்வர் சிமித் ஒழுங்கையில் அமைந்துள்ளது ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம். இலங்கையிலே துர்க்கை அம்மனை மூல மூர்த்தியாக கொண்டுள்ள தலங்கள் இரண்டே இரண்டு தான் உள்ளன. அதில் ஒன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ளது. அடுத்தது கொழும்பு தட்டாரத்தெருவில் அமைந்துள்ள இத்திருத்தலமாகும். இத்தலம் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்தது. இற்றைக்கு 102 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1910 ஆம் ஆண்டு வைகாசியான மே மாதம் 27 ஆம் திகதி இத்திருத்தலத்தை அமைப்பதற்கான அடித்தளமிடப்பட்டு அதற்கான திருப்பணிகள் மேற்கொண்டதன் விளைவாக இவ்வாலயம் முளையிடப்பட்டது. அன்று முதல் ஸ்ரீ துர்க்கை அம்பாளின் அருள் மகிமை இப்பகுதி எங்கும் வியாபித்து தூபமிடத் தொடங்கியது. ‘அவளின்றி அணுவும் அசையாது’ என்ற அடை மொழிக்கு அமைய மடாலயமாக இருந்தது ஆலயமானது. குடிலாக இருந்தது கோபுரமானது. இந்த அரும்பெரும் கைங்கரியம் நிறைவேற முத்தாக வித்தாகியவர் அ. பெருமாள் செட்டியார். இவர் தான் இந்த ஆலயத்தை முதன் முதலில் அமைத்தவர். இவர் அம்பாளின் திருவடியை எய்திய பின் அ. சுப்பையா செட்டியார், ஏ.பி. எஸ். ஆறுமுகம் செட்டியார், ஏ. பி. எஸ். அருணாசலம் செட்டியார் ஆகியோருக்கு இவ்வாலயத்தின் பரிபாலன அறப்பணிகளை மேற்கொள்ள அம்பாளின் அருட்கடாட்சம் கிடைத்தது. இவர்களுக்குப் பின் ஏ. ரத்னவேல் செட்டியாருக்கு இத்திருத்தலத்தை பரிபாலிக்கக்கூடிய அரிய வாய்ப்பு கிடைத்தது. இந்தக் காலகட்டத்தில் தான் இவ்வாலயத்தின் அருமை பெருமை இப்பகுதி எங்கும் பரவத் தொடங்கியது. இதுவரை காலமும் காலியாக இருந்த கஜானாவின் மீது ஸ்ரீ லட்சுமி அம்பாளின் அருட் பார்வை படத்தொடங்கியது. இவரைத் தொடர்ந்து பி. கலியப் பெருமாள், க. சுப்பிரமணியம் ஆகியோரிடம் இவ்வாலய திருப்பணிகள் ஒப்படைக்கப்பட்டன. இவர்களது காலத்தில் தான் இத்திருத்தலத்தில் கர்ப்பக் கிரகம், மகாமண்டபம், கோபுரம் ஆகியன அமைக்கப்பட்டன. ஆகம விதிகளுக்கு அமைய அமைக்கப்பட்ட இத்திருத்தலத்தில் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு ஏற்ப கும்பாபிஷேகம் நடத்தக்கூடிய வாய்ப்பு கிடைத்தது 1982 ஆண்டிலாகும். 1982-03-02 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்திற்குப் பின் தான் ஆலய தலைவராக லயன் முத்துக்கிருஷ்ண ராஜா கேசவராஜா ஜே. வி. யும் உப தலைவராக பீ. ராஜேந்திரனும் செயலாளராக எஸ். ஸ்ரீ காந்தும் உப தலைவராக ஆர். பாலசுப்பிரமணியமும் நியமிக்கப்பட்டனர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி. ஆனால் 1982 ஆம் ஆண்டுக்குப் பின் நீண்டகாலமாக ஆகம விதிக்கு ஏற்ப இங்கு மகா கும்பாபிஷேகம் நடததப்படவில்லை. அதன் பின் ஆலய அறங்காவலர் சபைத் தலைவராக லயன் எம். கேசவராஜா நீண்ட காலம் பணியாற்றி வந்தார். அவரது பார்வையில் புதிய நிர்வாக சபையொன்று அமைக்கப்பட்டது. அப்போது தலைவராக லயன் எம். கேசவராஜாவும் செயலாளராக கே. ஈஸ்வரலிங்கமும், பொருளாளராக பீ. முருகேசுவும், உப தலைவர்களாக டி. சீ. மூர்த்தி, பி ராஜேந்திரன் ஆகியோரும் நிர்வாக சபை உறுப்பினர்களாக எஸ். ஸ்ரீகாந்த், ஆர். சுப்பிரமணியம், கே. பாலசுப்பிரமணியம், ஆர். எஸ். எஸ். முரளி, டீ. சுவேந்திரராஜா, கே. உதயச்சந்திரன் ஆகியோரும் கணக்காளராக என். முருகதாஸ¤ம் தெரிவு செய்யப்பட்டார். இந்தக் குறையை போக்கும் வண்ணம் ஆலய புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஆலயத் தலைவர் லயன் எம். கேசவராஜாவினால் பிரபல தொழிலதிபர் எஸ். சந்திரசேகர் தலைவராகவும் வர்த்தகரான டி. சி. மூர்த்தி பொருளாளராகவும் கொண்டு 1999 ஆம் ஆண்டு திருப்பணிச் சபையொன்று அமைக்கப்பட்டு 1999 வைகாசியில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் பின் மேற்கொள்ளப்பட்ட திருப்பணியின்போது அஷ்ட லஷ்மிகள், நவதுர்க்கைகள், லக்ஷ்மி நாராயணன், உமையொருபாகன், வைரவப் பெருமான் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு பண்டிகைகள் அமைக்கப்பட்டு திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதற்கமைய இவ்வாலயத்தில் கஜ லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, வீரலக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, ஐஸ்வர்ய லக்ஷ்மி, தனலக்ஷ்மி, அருள் லக்ஷ்மி ஆகிய அஷ்ட லக்ஷ்மிகளினதும் வன துர்க்கை, ஆலனி துர்க்கை, ஜாத வேதோ துர்க்கை, சாந்தி, துர்க்கை, சபரி துர்க்கை, ஜ்வலத் துர்க்கை, லவண துர்க்கை, தீப துர்க்கை, ஆஸ¤ர துர்க்கை என நவ துர்க்கைகளினதும் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கதிரவனின் ஒளிக் கதிர்கள் கோபுர கலசத்தின் ஊடாகக் கர்ப்பக் கிரகத்திற்கு ஊடுருவிப் பாயும் வண்ணம் கோபுரத்தை அண்டியுள்ள முகட்டுப் பகுதி திறந்தவெளியாக்கப்பட்டது. அடியார்களின் உள்ளத்து உணர்வுகளை அம்பாள் ஈர்த்து உணர்ந்து கொள்ள இலகுவாகும் வண்ணமும் அம்பாளின் அருளை அடியார்கள் உவந்து பெற்றுக்கொள்ள இலகுவாகவும் ஆலய வாயிலிருந்து கர்ப்பக்கிரகம் வரை குளுகுளுவென குளுமையூட்டக் கூடிய கருங்கற்கள் பதிக்கப்பட்டன. ஆலயம் முழுவதும் தெய்வீகக் கலை வண்ணம் மிளிரும் வகையில் ஆலய முகட்டில் தாமரை மலர்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு திருப்பணிகள் பல மேற்கொள்ளப்பட்டு 2000ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ளதால் கடந்த 2011.11.14ஆம் திகதி பாலஸ்தானம் செய்யப்பட்டு தற்போது ஆலயத்தின் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. 2012.04.06ஆம் திகதி இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கே. ஈஸ்வரலிங்கம் முன்னாள் செயலாளர்

அறநெறி அறிவு நொடி

207685. திருவுந்தியாரை அருளிச்செய்தவர் யார்? உய்யவந்ததேவ நாயனார். 207686. திருக்களிற்றுப்படியாரை அருளிச்செய்தவர் யார்? திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார். 207687. சிவஞானபோதம் அருளிச் செய்தவர் யார்? மெய்கண்டதேவர். 207688. சிவஞானசித்தியார், இருபாஇருபஃது ஆகிய இரண்டையும் அருளிச் செய்தவர் யார்? அருணந்தி சிவாச்சாரியார். 207689. உண்மை விளக்கம் அருளிச் செய்தவர் யார்? மனவாசகங்கடந்தார். 207690. ஏனைய சிவப்பிரகாசம் முதல் சங்கற்பநிராகரணம் வரையுள்ள எட்டு நூல்களையும் செய்தருளியவர் யார்? உமாபதி சிவாச்சாரியார். 207691. உமாபதி சிவாச்சாரியார் செய்தருளிய நூல்கள் எட்டும் எவ்வாறு பெயர் பெறும்? சித்தாந்த அட்டகம் எனப் பெயர் பெறும். 207692. இந்த எட்டும் ஏனைய ஆறும் ஆகிய பதினான்கு சைவசித்தாந்த சாத்திர நூல்களும் எவ்வாறு பெயர் பெறும்? மெய்கண்ட சாத்திரங்கள் எனப் பெயர் பெறும். 207693. மெய்கண்ட சாத்திரங்கள் எதனை விளக்குகின்றன? சைவசித்தாந்த உண்மைகளை விளக்குகின்றன. 207694. சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள் உண்மைகள் யாவை? பதி, பசு, பாசம்.

தட்டாரத்தெரு அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய சங்காபிஷேகம்

கொழும்பு, புதுக்கடை, சில்வர் சிமித்லேன் (தட்டாரத்தெரு) அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் 09-12-2025 ஆம் திகதி வரை தினமும் காலையும் மாலையும் விஷேச அபிஷேகமும் ஹோமத்துடன் இலட்சார்ச்சனையும் நடைபெறும். எதிர்வரும் 10-12-2025 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நவோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று காலை 10.00 மணியளவில் இரதபவனி ஆரம்பமாகும். ஆலயத்தில் இருந்து ரதம் அப்துல் ஹமீட் வீதி, குவாரிரோட், பழைய சோனக தெரு, ஸ்ரீ சங்கராராஜ மாவத்த, பண்டாரநாயக்க மாவத்த வழியாக ஆலயத்தை வந்தடையும். அன்று நண்பகல் 13.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். இவ்வாரலயத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை பால்குட பவனி நடைபெறும். இந்த பால்குட பவனி, அன்று காலை 8.30 மணிக்கு தட்டாரத்தெரு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலிருந்து ஆரம்பமாகி ஆலயத்தை வந்தடையும். அத்தோடு தீர்த்தமும், கொடி இறக்குமும் நடைபெறும். 12-12-2025 வெள்ளிக்கிழமை மாலை திருவூஞ்சலும் 16-12-2025 செவ்வாய்க்கிழமை வைரவர் மடையும் இடம்பெற்று திருவிழா நிறைவுபெறவுள்ளது.
Good Morning

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...