திங்கள், 27 செப்டம்பர், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர்,
தமிழர் நற்பணி மன்றம்

(விநாயகப் பெருமான்)


8017) இறைவனை அவரது பல வித நாமங்களையும் சொல்லி ஓம்காரத்துடன் உச்சரித்து வணக்கம் செலுத்துவதை என்னவென்று கூறுவர்
அர்ச்சனை

8018) அர்ச்சனையில் ஒவ்வொரு நாமம் சொல்லும் போதும் என்ன செய்வார்கள்?
ஒவ்வொரு புஷ்பம் அல்லது பத்திரம் சமர்ப்பித்தல் மரபு.

8019) அர்ச்சனையின் பின் என்ன செய்யப்படும்?
வேதபாராயணம், தேவபாராயணம், விநாயகர் துதி பாராயணம் செய்யப்படும்.

8020) இவ்வாறு பாராயணம் செய்த பின் என்ன செய்யப்படும்?
அர்ச்சகருக்குரிய தாம்பூல தட்சிணைகளை வழங்கி விருந்தினர், அடியவர், ஏழைகள் ஆகியோருக்கு உணவிட்டு அதன்பின் உணவருந்துவது முறை.

8021) மாதந்தோறும் வருகின்ற பூர்வபட்சம் சதுர்த்தி நாட்கள் யாருக்குரியது?
விநாயகருக்குரியது

8022) இந்த நாட்களை எவ்வாறு அழைப்பர்?
மாத சதுர்த்தி

8023) மாதந்தோறும் விரதமிருக்க விரும் புவோர் என்ன செய்யலாம்?
ஆவணி சதுர்த்தியிலே பூஜை வழிபாடு களுடன் சங்கல்ப பூர்வமாக ஆரம்பித்து இந்த விரதத்தை கைக்கொள்ள வேண்டும்.

8024) சங்கல்ப பூர்வமாக என்பது என்ன?
இன்ன காரணத்துக்காக இந்த விரதத்தை நான் இத்தனை வருடம் கைக்கொள் வேன் என்று உறுதியாக நினைப்பது சங்கற்ப பூர்வமாக எனலாம்.

8025) இந்த சதுர்த்தி விரதத்தை எவ்வ ளவு காலம் அனுஷ்டிக்க வேண்டும்?
21 வருடம் விரதமிருப்பது நன்று.

8026) 21 வருடம் விரதமிருக்க இயலாத வர்கள் என்ன செய்யலாம்?
7 வருடங்கள் அனுஷ்டிக்கலாம். அல்லது 21 ற்கு குறையாமல் மாத சதுர்த்தி விரத மிருந்து, அதையடுத்து வரும் ஆவணி சதுர்த்தியில் நிறைவு செய்யலாம்.

விநாயக சஷ்டி

8027) கார்த்திகை மாதத் தேய் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறை சஷ்டி வரையிலான 21 நாள் அனு ஷ்டிக்கப்படும் விரதம் எது?
விநாயக சஷ்டி.

8028) மஹா விஷ்ணுவுக்கு சாபம் ஏற்பட் டது எதனால்?
முன்பொரு சமயம் பொய்ச் சாட்சி சொன்னதால்.

8029) விஷ்ணு யாரை வணங்கியதால் சாபம் நீங்கப் பெற்றார்?
விநாயகரை.

8030) இச்சாபம் நீங்கப் பெற்றது எப்போது?
மார்கழி மாத வளர்பிறை சஷ்டி நாளான விநாயக சஷ்டி அன்று ஆகும்.

8031) இந்நாளை இறுதியாகக் கொண்ட 21 நாள் விரதத்தை என்னவென்பர்?
பெருங்கதை விரதமென்பர்.

8032) இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் போது முதல் 20 நாளும் உணவு உண்ணலாமா?
ஒரு பொழுது மட்டும் போசனம் செய்யலாம். இரவு பால் பலம் அல்லது பலகாரம் உட்கொள்ளலாம்.

8033) தினமும் விநாயகருக்கு எவற்றை நிவேதனம் செய்யலாம்?
இளநீர், கரும்பு, அவல், மோதகம், எள்ளுருண்டை.

8034) இவற்றை நிவேதனம் செய்து என்ன செய்யலாம்?
பெருகதை, விநாயகர் புராணம் போன்றவற்றை படிக்கலாம். அல்லது கேட்கலாம். விநாயகர் அகவல், விநாயகர் கவசம் போன்றவற்றை பாராயணம் செய்து வழிபாடு செய்யலாம்.

8035) விநாயகரின் சரிதம் கூறும் நூல் எது?
பெருங்கதை

8036) இறுதி நாளில் என்ன செய்யலாம்?
விசேஷ பூசை வழிபாடுகள் செய்து உபவாசமிருந்து மறுநாள் பாரணை செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...