திங்கள், 31 டிசம்பர், 2012
கே. ஈஸ்வரலிங்கம்
9770) எண் கோணக் குண்டம் எந்த பாகத்தில் அமைக்கப்படும்?
வடகிழக்கு
9671) எண் கோணத்தில் எந்தனை குண்டங்கள் அமைக்கப்படும்?
எட்டு
9672) எண் கோணக் குண்டம் யாரைக் குறிக்கும்?
சந்திரன்
9673) யாகசாலையில் தென்கிழக்கு பாகத்தில் அமைக்கப்படுவது எந்த குண்டம்?
அரசிலைக் குண்டம்
9674) இதனை ஏன் அரசிலைக் குண்டம் என அழைக்கின்றனர்?
அரச இலை வடிவத்தில் அமைக்கப்படுவதால்.
9675) அரச இலைக் குண்டம் எதனைக் குறிக்கிறது?
இயமானன் என்ற ஆன்மா மாயா தத்துவத்தை
9676) யாகசாலையில் தென்மேற்கு பாகத்தில் அமைக்கப்படுவது எந்தக் குண்டம்?
முக்கோண குண்டம்
9677) இதனை ஏன் முக்கோண குண்டம் என்று அழைக்கின்றார்கள்?
முக்கோண வடிவத்தில் அமைக்கப்படுவதால்
9678) ஆறு கோண வடிவத்தில் குண்டம் அமைக்கப்படுவது எந்த பாகத்தில்?
வடமேற்கு
9679) இதனை என்ன கோணம் என்று கூறுவார்கள்?
அறுகோணம்
9680) அறுகோணம் எதைக் குறிக்கும்?
காற்றை
9681) எட்டு திக்குகளிலும் அமைக்கப்பட்ட குண்டங்களுக்கும் ஈசானத்திற்கும் கிழக்கிற்கும் இடையில் அமைக்கப்படுவது எந்தக் குண்டம்?
பிரதான குண்டம்
9682) பிரதான குண்டம் எந்த வடிவில் அமைக்ககப்படும்?
வட்டவடிவம்
9683) யாகசாலையின் நான்கு பக்கங்களிலும் என்ன அமைக்கப்படும்?
நான்கு கலசங்கள்
9684) இந்த நான்கு கலசங்களும் எதைக் குறிக்கும்?
நான்கு கலைகளை
9685) இரண்டு காப்பாளர்களுக்கு என கலசங்கள் வைப்பது எங்கு?
வாசலில்
புதன், 26 டிசம்பர், 2012
கும்பாபிஷேகம்
9640) கோயில்களில் தினமும் எத்தனை கால பூசை செய்ய வேண்டும்?
ஆறு
9641) பல கோவில்களில் ஆறு கால பூசை செய்வ தில்லை. அந்த குறையை நீக்க என்ன செய்வார்கள்?
பிரம்மோற்சவம்
9642) பிரம்மோற்சவம் எப்போது செய்யப்படும்?
வருடத்துக்கு ஒரு முறை
9643) பிரம்மோற்சவம் செய்யும் போது ஏற்படும் குறைகளை நீக்க என்ன செய்வார்கள்?
கும்பாபிஷேகம்
9644) கும்பாபிஷேகம் எப்போது செய்யப்படும்?
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை
9645) வேறு என்ன காரணங்களுக்காக கும்பாபிஷேகம் செய்யப்படும்?
கோவில் கட்டி பல வருடங்களாகி இருந்தால் நித்தியபூஜை, நிவேதனம் தடைபட்டு இருந்தால், அஷ்டபந்தன மருந்தின் சக்தி குறைந்து இருந்தால்
9646) கும்பாபிஷேக யாகம் எத்தனை நாட்களுக்கு செய்யப் படும்?
ஏழு, ஐந்து, மூன்று, ஒரு நாள் என்ற விதி முறைப்படி நடக்கிறது.
9647) இதை என்ன வென்று சொல்லுவார்கள்?
புனராவர்தம்
9648) பிரதிஷ்டைக்கு முதலில் என்ன செய்வார்கள்?
பாலஸ்தானம்
9649) பிம்பத்தில் பிளவு ஏற்பட்டால் என்ன செய்வார்கள்?
ஸ்தலகர்ம ஆதார பத்ம பீடம், பிரத்யங்கம் முதலியவற்றை நிவர்த்தி செய்வார்கள்.
9650) இதற்கு முதலில் என்ன செய்வார்கள்?
நல்ல நேரம் பார்ப்பார்கள்.
9651) குண்டங்கள், கம்பங்கள் என்ற அரு உருவ நிலை மாறி, இறைவனின் முழு உருவமும் திருமேனியில் இடம் பெறச் செய்வதை என்னவென்று கூறுவார்கள்?
கும்பாபிஷேகம்
9652) இந்த காரியம் நடத்தும் இடத்தை என்னவென்று கூறுவார்கள்?
யாகசாலை
9653) யாகசாலை என்ற விதத்தில் ‘ய’ என்பது என்ன?
யஞ்ஞம்
9654) ‘க’ என்பது என்ன?
செல்லுதல்
9655) ‘ஸ’ என்பது என்ன?
சுகம்
9656) ‘ல’ என்பது என்ன?
லயம்
9657) எட்டு திக்குகளிலும் யாக சாலையில் என்ன அமைக்கப்படுகிறது?
குண்டங்கள்
9658) கிழக்கில் என்ன வடிவமான குண்டம் அமைப்பார்கள்?
சதுர வடிவமான
9659) இந்த சதுர வடிவமான குண்டத்தை வேறு எவ்வாறு அழைப்பார்கள்?
நாற்கோண குண்டம்
9660) இந்த நாற்கோண குண்டம் எதை குறிக்கும்?
நிலத்தை
9661) தெற்கில் எந்த வடிவமான குண்டம் அமைப்பார்கள்?
நிலா வடிவமான
9662) இந்த குண்டத்தை என்னவென்று சொல்லுவார்கள்?
அர்த்த சந்திர குண்டம்
9663) அர்த்த சந்திர குண்டம் எதை குறிக்கும்?
நீரை
9664) மேற்கில் எந்த வடிவமான யாகம் அமைக்கப்படும்?
வட்டவடிவமான
9665) இந்த வட்ட வடிவமான யாகத்தை என்ன வென்று சொல்லுவார்கள்?
விருத்த குண்டம்
9666) விருத்த குண்டம் எதை குறிக்கும்?
ஆகாயத்தை
9667) வடக்கு யாகத்தில் எந்த வடிவ குண்டம் அமைக்கப்படும்?
தாமரைப்பூ
9668) தாமரைப்பூ வடிவ குண்டத்தை என்ன வென்று சொல்லுவார்கள்?
பத்ம குண்டம்
9669) பத்ம குண்டம் யாரை குறிக்கும்?
சூரிய பகவானை
திங்கள், 17 டிசம்பர், 2012
9615 சிவன் எத்தனை தத்துவங்களை கடந்தவர்?
96
9616) முருகப்பெருமான் எத்தனை தத்துவங்களை கடந்தவர்?
36
9617) தாமசாஸ்தா ஐயப்பன் எத்தனை தத்துவங்களை கடந்தவர்?
18
9618) சபரிமலையில் அமைந்துள்ள 18 படிகளில் முதல் ஐந்து படிகளும் எதை குறிக்கின்றன?
இந்திரியங்கள் ஐந்தையும்
9619) அடுத்த 8 படிகள் எதனை குறிக்கும்?
அஷ்டமா சித்திகளை
9620) 14, 15, 16 வது படிகள் எதனை குறிக்கின்றன?
மூன்று குணங்களையும் குறிக்கும்
9621) 17வது படி எதனை குறிக்கும்?
ஞானத்தை
9622) 18வது படி எதனை குறிக்கிறது?
அஞ்ஞானத்தை
9623) கடவுளை காண கடக்க வேண்டிய 18 படிகளும் எவை?
புலன் ஐந்து, பொறி ஐந்து, பிராணன் ஐந்து, மனம் ஒன்று, புத்தி ஒன்று, அலங்காரம் ஒன்று
9624) பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் மூவரில் தனித்தன்மையும் தனிச்சிறப்பும் பெற்றவர் யார்?
ருத்ரன்
9625) ருத்ரன் எத்தகைய சக்தி உடையவர்?
அழியாத சக்தியும் அனந்த சக்தியும்
9626) இவர் எத்தகைய ஆற்றல் உடையவர்?
செயற்கரிய பல காரியங்களைச் செய்யும் பேராற்றல்
9627)’ருத்’ என்றால் என்ன?
துக்கம் அல்லது துக்கத்தை விளைவிக்கக் காரணமாயுள்ளது.
9628) ருத்ரன் என்ற பெயர் இவருக்கு எவ்வாறு பொருத்தமாய் உள்ளது.
தீயோரை அழ வைக்கின்றான் என பொருள் கொள்வதால்
9629) ருத்ரன் நித்யவாஸம் செய்யும் இடம் எது?
திருக்கைலாயம்
9630) பிரம்மன் தங்குமிடம் எது?
ஸத்ய லோகம்
9631) விஷ்ணு வீற்றிருக்கும் இடம் எது?
வைகுண்டம்
9632) லோக ஸ்ருஷ்டியை செய்பவர் யார்?
பிரம்மன்
9633) லோக பரிபாலனத்தை செய்பவர் யார்?
விஷ்ணு.
9634) லோக ஸம்ஹாரத்தை செய்பவர் யார்?
ருத்ரன்
9635 )ஓம் காரத்தின் பொருள் எது?
நமசிவாய
9636) இது ஸப்த கோடி மஹா மந்திரங்களில் முதன்மையானது என்று எதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்கந்த புராணத்தில்
9637) ருத்ரன் எத்தகைய தன்மை வாய்ந்தவர்?
எங்கும் உள்வர் என்றும் எல்லாமாய் இருப்பவர்
9638) அண்டியவர் பிணிகளைப் போக்குவதால் இவர் எவ்வாறு வர்ணிக்கப்படுகின்றார்?
திவ்ய வைத்தியவன்
9639) இவரை வேதாகம இதிஹாச புராணங்கள் எவ்வாறு அழைக்கின்றன?
சம்பூ, சங்கரன், பார்வதீபதி, நீலகண்டன், சிவன்.
திங்கள், 10 டிசம்பர், 2012
கே. ஈஸ்வரலிங்கம்
9603) வாரியார் எதனைப் போல் இனிமை யாக பேசு என்கிறார்?
கிளியைப்போல
9604) எதனைப் போல் ஒருமையுடன் இறை வனை நினை என்கிறார்?
கொக்கைப் போல
9605) ஆடு போல் என்ன செய்ய சொல்கிறார்?
நன்கு மென்று உண் என்கிறார்.
9606) யானையைப் போல் என்ன செய்ய சொல்கிறார்?
குளி
9607) நாயைப் போல் என்ன செய்ய சொல்கிறார்?
நன்றியுணர்ந்து ஒழுகச் சொல் கிறார்
9608) எதனைப் போல் குறிப் பறிந்து கொஎன்கிறார்?
காக்கையைப் போல்
9609) எதனைப் போல் சுறு சுறு ப்பாக இருக்க சொல் கிறார்?
எறும்பைப்போல்
9610) செல்வம் பெற வேண் டின்எதனை வணங்கச் சொல்கிறார்?
அக்னியை
9611) ஆற்றல் பெற வேண்டின் யாரை வணங்க வேண்டும்?
அம்பிகையை
9612) சுகம் பெற வேண்டின் யாரை வணங்க வேண்டும்?
திருமாலை
9613) பெண்களுக்கு உரியவை எவை?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
9614) ஆண்களுக்கு உரியவை எவை?
அறிவு, நிறை, கடைப்பிடிப்பு
வெள்ளி, 7 டிசம்பர், 2012

புதன், 28 நவம்பர், 2012
சமஸ்கிருதம்
9573. சமஸ்கிருத இலக்கியம் எத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து வருகின்றது?
4000 ஆண்டுகளாக
9574. சமஸ்கிருத இலக்கிய பரப்பினை எத்தனை பெரும் பகுதிகளாக வகுத்துக் கொள்ளலாம்?
மூன்று
9575. அம் மூன்று பெரும் பகுதிகளையும் தருக.
வேத இக்கியம், இதிகாச இலக்கியம், பிற்கால இலக்கியம்.
9576. இருக்கு, யசுர், சாமம், அதர்வம் இவை நான்கும் என்ன?
வேதங்கள்
9577. வேதங்களின் சார்பு நூல்கள் எவை?
பிராணங்கள், ஆரண்யங்கள், உப நிடதங்கள், சூக்தங்கள்
9578. வேத இலக்கியம் என அழைக்கப்படுபவை எவை?
இருக்கு, யசுர், சாம, அதர்வ வேதங்களும் அவற்றின் சார்பு நூல்களான பிராணங்கள் ஆரண்யங்கள், உப நிடதங்கள், சூக்தங்கள் ஆகியனவும் ஆகும்.
9579. இவற்றுள் உலக இலக்கியங்களில் அழகிய கவிதையோடும் சீரிய கருத்துடனும் இன்று எமக்கு கிடைத்துள்ளவற்றுள் மிகப் பழையது எது?
இருக்கு வேதம்
9580. இந்நூல் எவ்வாறு திகழ்கிறது,
பல ரிஷிகள் பல காலங்களில் இயற்றிய 1028 பாடல்களின் தொகுப்பாகத் திகழ்கிறது.
9581. இது எங்கு பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாக காணப்படுகிறது?
வேள்விகளில்
9582. இதனையும் ஏனைய மூன்று வேதங்களையும் என்னவென்று அழைப்பார்கள்?
சங்கிதைகள்
9583. இருக்கு வேதப் பாடல்களை வேள்வி யிலே பயன்படுத்தும் யாக விதிகளை கூறுவது எது?
யசுர் வேதம்
9584. யசும் வேதம் எந்த நடையில் அமைந்துள்ளது?
வசன நடையில்
9585. யசுர் வேதம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
இரண்டு
9586. அந்த இரண்டு பிரிவுகளையும் தருக.
கிருஷ்ண யசுர் வேதம், சுக்ல யசுர் வேதம்
9587. ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புள்ள, ஒரே வட்டத்தைச் சேர்ந்த மூன்று வேதங்கள் எவை?
இருக்கு, யசுர், சாமம்
9588. இந்த மூன்று வேதத்திலும் கூறப்பட்டுள்ளவை எவை?
வேள்வியிலே பயன்படுத்தப்படும் பாடல்கள், அதற்கான இசை, கிரியை விதிகள்.
9589. பாமர மக்களின் சமய நம்பிக்கை களும் சமூகப் பழக்க வழக்கங்களும் எந்த வேதத்தில் இடம்பெற்றுள் ளன. அதர்வ வேதங் களில்
9590. அதர்வ வேதத்தில் எவ்வாறான பாடல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன?
மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் அல்லல்களை நீக்கவல்ல பாடல்கள்
9591. இந்த நான்கு வேதத் திற்கும் தனித்தனியே என் னென்ன காணப்படு கின்றன?
பிராமணங்கள், ஆரணியங்கள், உபநிடதங்கள்
9592. வேள்விகளுக்கான வேத சூக்தங்கள் வேள்வி விதிகளின் விபரங்கள் விளக்கங்கள் முதலியன எதில் உள்ளன?
பிராமணங்களில்
9593. காட்டில் வாழும் துறவிகளுக்காக எழுதப்பட்டவை எவை?
ஆரணியங்கள்
9594. ஆரணியங்களில் இடம் பெற்றிருப்பது என்ன?
வேள்விகளுக்கான மறை பொருள் விளக்கம்.
9595. ஆரணியங்களைத் தொடர்ந்து தோன்றிய தத்துவ நூல்கள் எவை?
உபநிடதங்கள்
9596. இவை வைதீக சிந்தனையின் சாரமாகவும் முடிவாகவும் இருப்பதால் என்னவென்று கூறப்படுகிறது?
வேதாந்தம்
9597. இவை சூத்திர வடிவில் இருப்பதால் என்னவென்று கூறப்படுகிறது?
சூத்திரங்கள்
வியாழன், 22 நவம்பர், 2012
சமஸ்கிருதம்)
9556) இந்துக்களின் புனித மொழி எது?
சமஸ்கிருதம்
9557) இந்த மொழி எத்தனை ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது?
ஏறக்குறைய நாலாயிரம் ஆண்டுகள்
9558) சமஸ்காரம் என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன?
பண்படுத்துதல்
9559) இந்த மொழி எந்த இலக்கண ஆசிரியர்களால் பண்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது?
பாணினி
9560) சமஸ்கிருத மொழி எத்தனை நிலைகளைக் கொண்டது? அவை எவை?
மூன்று வைதிக மொழி (வேதங்களின் மொழி) இதிகாச மொழி, பிற்கால மொழி.
9561) தமிழ் இலக்கிய மரபிலே இந்த மொழிக்குரிய சொல்லாக வழக்கில் இருப்பது எது?
வடமொழி
9562) சமஸ்கிருதம் இலக்கிய மொழியாகவும் பேச்சு மொழியாகவும் இருந்தது எந்த காலத்தில்?
வேத காலத்திலும் அதற்கு பின்னும்
9563) இந்த மொழியுடன் தொடர்புள்ள மொழிகளை எவ்வாறு அழைப்பர்?
பிராகிருத மொழிகள்
9564) பிராகிருத மொழிகளால் இலங்கையில் பாவனையிலுள்ள ஒரு மொழி எது?
பாளி
9565) பாளி மொழி எந்த மதத்தினரின் இலக்கிய மொழியாக விளங்கி வந்துள்ளது?
தேரவாத பெளத்தர்களின்
9566) பாளியுடன் பிராகிருதங்களாக மாறிய மொழிகள் எவை?
அர்த்தமாகதி, செளரசேனி, மகாராட்டிரம், கொடும் சமஸ்கிருதமான பைசாசி
9567) அர்த்தமாகதியை கையாண்டவர்கள் யார்?
சீனர்கள்
9568) செளரசேனியை கையாண்டவர்கள் யார்?
சமஸ்கிருத நாடங்களிலுள்ள கீழ் நிலை நாடக மாந்தர்
9569) மகாராட்டிரம் எதில் கையாளப்பட்டது?
காப்பியங்களில்
9570) மக்களிடையே வழங்கும் கதை இலக்கியத்திற்கு பயன்படுத்திய மொழி எது?
பைசாகமொழி
9571) இவற்றிலிருந்து உருவாகிய மொழிகள் எவை?
ஹிந்தி, வங்காளி, பஞ்சாபி, குஜராத்தி
9572) இவை எத்தனையாம் ஆண்டளவில் உருவாகின?
கி. பி. 1000 ஆம் ஆண்டளவில்
வியாழன், 15 நவம்பர், 2012
9540) மாலையில் விளக் கேற்றிய பின் தலை வாரலாமா?
கூடாது
9541) மாலை நேரம் எதற்குரிய நேரம்?
வழிபாட்டுக்குரிய நேரம்
9542) மாலையில் விளக் கேற்றும் வேளை யில் யார் இல்ல த்தில் உறைந்திருப் பதாக கூறப்படுகி றது?
திருமகள்
9543) அந்த சமயத்தில் பெண்கள் கூந்தலை விரித்தபடி நிற்பது நல்லதா?
நல்லதல்ல
9544) மாலையில் பெண்கள் எப்போது தலைவாரி கொள்ள வேண்டும்?
விளக்கு வைப்பதற்கு முன் மாலை 5.30 மணிக்குள் தலைவாரி பூ முடித்து நெற்றியில் திலகமிட்டுக் கொள்வது நல்லது.
9546) திரு என்றால் என்ன?
லட்சுமி
9547) மதி என்றால் என்ன?
அறிவு
9548) திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்?
திருமணத்திற்கு முன் பொறுப்பில்லாமல் மற்றும் ஆண்கள் வீணாக செலவழித்து திரிவார்கள். திருமணத்துக்குப் பின் தறிகெட்டு அலையும் கணவனை மனைவி திருத்திவிடுகிறாள். அவள் கணவனின் வரம்பற்ற செலவுகளைக் குறைத்து வீட்டில் செல்வம் நிறைய முயற்சி செய்கிறாள். இதற்காக தனது மதிநுட்பத்தை பயன்படுத்துகிறாள். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படுகிறது. திருவையும் மதியையும் இணைந்தே திருமணமான பெண்களுக்கு திருமதி என்ற பட்டம் ஏற்பட்டது.
9549) பெண்களுக்கு நடத்தப்படும் வளைகாப்புக்கு kமந்தம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?
தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் மாப்பிள்ளை வீட்டில் வளைகாப்பு நடத்தி தாய் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால் அக்காலத்தில் தாய் வீட்டுக்கு பெண்ணை வர வழைத்து அங்கு வைத்தே வளைகாப்பு நடக்கும். அப்போது பெண்ணின் தாய் மகளுக்கு லட்சுமியைப் பற்றிய பாடல்களைப் பாடிக் கொண்டே நெற்றி வகிட்டில் முள்ளம் பன்றியின் முள்ளால் லேசாக கீறி குங்குமம் வைப்பார். முள்ளம்பன்றியின் முள்ளால் கீறுவது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நன்மையைத் தரும். வகிடு என்ற சொல்லின் சமஸ்கிருதப் பெயரே kமந்தம்.
9550) பெண்ணுக்கு வளைகாப்பு (kமந்தம்) நடத்துவது ஏன் தெரியுமா?
பெண்களின் வகிட்டில் லட்சுமி குடியிருக்கின்றாள். நெற்றியில் பொட்டிட்டால் அவள் சந்தோஷமடைவாள். அப் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை செல்வ வளத்துடன் வாழும் என்ற நம்பிக்கையினால் நான் kமந்தம் நடத்துகிறார்கள்.
9551) ஒருவர் நம்மை பொறாமையோடு பார்த்தால் என்ன நடக்கும்?
நமது மன நிலையும் உடல் நிலையும் பாதிக்கப்படும்.
9552) ஒருவர் நம்மை பொறாமையோடு பார்ப்பதால் ஏற்படுவது என்ன தோஷம்?
திருஷ்டி தோஷம்
9553) வேறு எவ்வாறு திருஷ்டி தோஷம் ஏற்படலாம்?
இவ்வளவு அழகாக வீடு கட்டிவிட்டார்களே என்று யாராவது பொறாமையுடன் பார்த்தால்.
9554) வீடுகட்டினால் திருஷ்டி தோஷத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்வார்கள்?
பூசணிக்காய் தொங்கவிடுவர்.
9555) பூசணிக்காய் தொங்கவிடுவதால் திருஷ்டி தோஷம் நீங்குமா?
இல்லை புதுவீட்டை பார்ப்பவர் கண்களில் பூசணிக்காயும் அதில் வரைந்துள்ள வடிவமும் சிறிது நேரம் படும். புதுவீட்டை முழுமையாகப் பார்ப்பதில் இருந்து அவரது கவனம் சிதறும். இதன் காரணமாக திருஷ்டி தோஷம் குறையும்.
புதன், 7 நவம்பர், 2012
கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கும் முறை
தண்டாயுதபாணி கோயில்
அகந்தையை அழித்திடும் கிருஷ்ணார்ப்பணம்
கே. ஈஸ்வரலிங்கம்
திருப்பதியில் ஒரே நாளில் ரூ.3 கோடி வசூல்
கே. ஈஸ்வரலிங்கம்
தெய்வ உபசாரங்கள்
9527) அர்ச்சனை என்ற சொல் எந்த சொல்லில் இருந்து வந்தது?
அர்ச்சா
9528) அர்ச்சா என்பதன் பொருள் என்ன?
சிலை
9529) அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்த சொற்கள் எவை?
அர்ச்சனை, அர்ச்சித்தல், அர்ச்சித்தர்
9530) அர்ச்சித்தர் என்ற சொல்லின் பொருள் என்ன?
சிலை
9531) ஆண்டவனுக்கு எத்தனை வகை உபசாரங்கள் செய்யப்படும்?
ஆறு
9532) ஆறு வகை உபசாரங்களையும் தருக
அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம், ஆராதனை, உற்சவம்
9533) இந்த ஆறு வகை உற்சவங்களில் முக்கியத்துவம் பெறுவது எது?
அர்ச்சனை
9534) அபிஷேகம் எவற்றால் செய்யப்படும்?
தண்ணீர், பால், தேன், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் பல பொருட்களால்
9535) அலங்காரம் என்பது என்ன?
பட்டு பீதாம்பரத்தாலும், பொன்னாலும் மலர் மாலைகளாலும் தங்க நகைகளாலும் வைர வைடூரியங்களாலும் தெய்வத்தை அழகு படுத்தல்
9536) அர்ச்சனை எவற்றால் செய்யப்படும்?
பூக்களாலும் பாக்களாலும்
9537) நைவேத்தியம் என்பது என்ன?
பல்வேறு உணவு வகைகள், பால், பழம் முதலியவற்றை படைப்பது
9538) ஆராதனை என்பது என்ன?
தூபம் காட்டுதல், தீபம் காட்டுதல்
9539) உற்சவம் என்பது என்ன?
பெரு விழா நடத்தி மூர்த்தியை வலமாக வீதிகளில் கொண்டு செல்லுதல்.
9540) 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்துவது ஏன்?
ஆண்டுதோறும் பண்டிகை வரும்போது வீட்டை சுத்தம் செய்து வர்ணம் தீட்டி கொண்டாடுகிறோம். அதுபோல கடவுள் குடியிருக்கும் கோயிலை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்து வர்ணம் தீட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்கிறார் காஞ்சிப் பெரியார். சுவாமி பீடத்தில் சாத்தப்படும் அஷ்டப்பந்தன மருந்து 12 ஆண்டுகளில் வலிமை இழந்து கரையத் தொடங்கும். எனவே புதிதாக மருந்து சாத்தி, திருப்பணிகளையும் செய்துவிட்டால், தெய்வ சாந்நித்யம் குறையாமல் விளங்கும்.
வெள்ளி, 2 நவம்பர், 2012
ல்லாளன் காலத்திற்கு முற்பட்ட
கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம்
கொழும்பு மாநகரிலே கொட்டாஞ்சேனை சந்தியிலிருந்து 50 மீற்றர் தொலைவிலே வீதியின் மேற்கிலே குளுகுளுவென குளிர்மையான தென்றல் தவழும் அரச மரத்தடியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம்.
இந்த ஆலயம் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது என்ற தோற்ற காலத்தையோ இந்த ஆலயத்தின் முழுமையான பரிபாலன தகவல்களையோ அறியக்கூடிய வாய்ப்புகள் அரிதாகவே இருந்தன.
ஆனால் ஆதியில் அரச மரத்தடியில் வழிபாடு நடந்ததும் கருங்கல்லினால் செதுக்கப்பட்ட விநாயகப் பெருமானின் திருவுருவச் சிலையும் நாகதம்பிரானின் திருவுருவச் சிலையும் வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததும் 1890 என்னும் எண்களை தாங்கி இருந்த கருங்கல்லினால் செதுக்கப்பட்ட விளக்கு பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.
எனவே இவ்வாலயம் 1890 ஆம் ஆண்டுக்கு முற்பட்டது என்பது இதிலிருந்து புலனாகிறது. இவ்வாலயம் எல்லாள மன்னன் காலத்திற்கு முந்தியதென்றும் போர்த்துக்கேயர் காலத்தில் அவர்களது இராணுவ வீரர்கள் இந்த ஆலயத்தை பதுங்கி இருக்கும் இடமாகவும் பயன்படுத்தினார்கள் என்றும் ஒல்லாந்தர் காலத்தில் தங்களுக்கு தேவையானவற்றை சுருட்டிக்கொண்டு ஆலயத்தை அழித்து விட்டார்கள் என்றும் கருத்துக்கள் உண்டு.
முதலாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாகவிருந்த வேளையில் கொட்டாஞ்சேனை ஸ்ரீ முத்துமாரியம்பாள் ஆலய சிவாச்சாரியார்களின் இன்றைய வதிவிடமாக அமைந்துள்ள அன்றைய அரசடி இடுகாட்டுப் பகுதியில் 1913 இல் ஓர் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்டிருந்த பல நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் குறிப்பிட்ட அந்த முகாமில் இருந்திருக்கிறார்கள்.
அந்த முகாமில் வட இந்தியாவைச் சேர்ந்த சண்முகர்ஜீ பட்டேல் என்பவர் தலைமையை ஏற்று பணிபுரிந்துகொண்டிருந்தார். அவர் விநாயகர் வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு உடையவர் எனவே அரச மரத்தடியில் அமர்ந்து அருள்பாலித்த வரதராஜ விநாயகப் பெருமானை வழிபடும் முறைமை அவருக்கும் உரியதாயிற்று.
இந்த வழிபாட்டு தலத்திற்கு அருகில் வசித்து வந்த வில்லவராஜா என்பவருடனான தொடர்பும் வலுவானது. இதனால் வில்லவராஜாவின் மகளை சண்முகர்ஜி பட்டேல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தால் சண்முகர்ஜி பட்டேலுக்கு விநாயகர் மீது இருந்த பக்தி மென்மேலும் வளர வழிகோலியது. இதன் விளைவாக அரச மரத்தின் தெற்மேற்கில் விநாயகரின் திருத்தலம் உருவாக வழியேற்பட்டது. 1917 ஆவணியில் விநாயகரின் திருவுருவச் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபடும் முறைமையை சண்முகர்ஜி பட்டேல் ஏற்படுத்தி கொடுத்தார்.
இந்த காலகட்டத்தில் பிக்கரிங்ஸ் வீதியில் பஞ்சலோக வேலை செய்யும் ஆசாரியர் வாழ்ந்து வந்தனர். இவர்களும் வரதராஜா விநாயகர் மீது தீவிர பக்தி கொண்டனர். 1921 இல் சண்முகர்ஜி பட்டேலுக்கு நாட்டை விட்டு போக வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் இவ்வாறு போகும் போது தமக்கு உதவியாளராக இருந்த பஞ்சலோக ஆசாரியர் சமூகத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணன் என்பவரிடம் ஆலயத்தை கவனிக்கும்படி ஒப்படைத்து விட்டுச் சென்றார். இரண்டாவது உலக மகா யுத்த நெருக்கடிகளுடன் பிக்கரிங்ஸ் வீதியில் இருந்த ஆசாரியர் 1943 இடம்பெயர்ந்தனர்.
அதனால் விநாயகராலய பரிபாலனம் சில ஆண்டுகள் கவனிப்பார் அற்றிருந்து.
1944.08.27 இல் எழுந்தருளி விநாயகர் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கவனிப்பாரற்று ஒழுங்கற்ற முறையில் இருந்த ஆலயத்தை திருமதி சொர்ணம்மா சுப்பிரமணியம் அர்ச்சகர் ஒருவரை நியமித்து பூஜை முறைகளை ஒழுங்காக்கினார்.
1951 இல் பரிபாலன சபை ஸ்தாபிக்கப்பட்டது. 1952 இல் சிவஸ்ரீ நடராசா சோமஸ்கந்தக் குருக்கள் பூசை நடைமுறைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 1961 இல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 1962.07.10இல் முதலாவது மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 1988 நவம்பர் 27இல் இரண்டாவது மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
2012.04.12 ஆம் திகதி இவ்வாலயத்தில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு இன்று காலை 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது.
அமிர்தகல பஸ்லே கணகல
அவிசாவளை கிளனெக்ஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்
கொழும்பிலிருந்து 60 கிலோ மீற்றர் தொலைவிலுள்ளது அவிசாவளை அமிர்தகல பஸ்லே கணகல என்னும் ஊர். இந்த ஊரில் கிளனெக்ஸ் என்ற எஸ்டேட் உள்ளது.
மலையும் மலைசார்ந்த இந்த குறிஞ்சி நிலப்பரப்பிலே இலங்கைக்கு அந்நிய செலா வணியை ஈட்டித் தரும் இறப்பர் தோட்டத்திற்கு மத்தியில் அமைந்துள்ளது ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம். இந்தியாவிலிருந்து பெருந்தோட்ட பயிர்ச் செய்கைக்காக அழைத்து வரப்பட்ட தமிழர்கள், மலையகத்திலே காடுகளை வெட்டி கழனிகளாக்கியது மட்டுமன்றி மரத்தடிகளில் தங்களது இஷ்டதெய்வங்களை வைத்து வழிபட்டு வந்தனர். காலப் போக்கில் இவை ஆகம விதிகளுக்கேற்ற ஆலயங்களாக கட்டியெழுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு அமை யப் பெற்ற ஆலயங்களில் ஒன்றுதான் இந்த முத்துமாரி அம்மன் ஆலயம். இந்த ஆலயம் எப்போது தோன்றியது என்று சரியான கணிப்புக் காலம் தெரியாது.
ஆனால் இற்றைக்கு 65 ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்து வந்த அன்னமலை என்பவர் இந்த ஆலயத்தின் பொறுப்பாளராக இருந்து இதனை பராமரி த்து வந்துள்ளார். அவருக்குப் பின் அவரது புதல் வர் நடேசன் முதலியார் பராமரித்து வந்த ஆலயத்தை அவருக்குப் பின் தற்போது அவரது புதல்வர் முருகேசன் பராமரித்து வரு கிறார். ஆரம்பத்தில் மடாலயமாக இருந்ததை இவர்கள் ஆலயமாக கட்டியெழுப்பியுள்ளனர்.
1970 - 72 ஆம் ஆண்டுகளில் இவ்வாலயம் புனரமைப்பு செய்யப் பட்டது. 1983 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது இந்த ஆலயத் துக்கும் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பாலஸ்தாபனம் செய்யப் பட்டு இன்று காலை 9.32 மணிக்கு இவ்வாலய த்தில் கும்பாபிஷேகம் நடை பெறவுள்ளது.
சுமார் அரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து ள்ள இவ்வாலயத்தில் 30 அடி உயரமான இராஜகோபுரம் ஒன்று பொம்மைகள் சூழ அமை க்கப்பட்டுள்ளது. இங்கு எல்லாம்வல்ல ஸ்ரீ முத்துமாரி அம்பாள் மூல மூர்த்தியாக வீற்றி ருந்து அருள்பாலிக்க விநாயகப் பெருமான், முருகப் பெருமான், நந்தி தேவர், வைரவப் பெரு மான் ஆகிய தெய்வங்கள் பரிவார மூர்த்திகளாக இருந்து அருள் பாலிக்கின்றன.
இலக்கம் 101, கடை வீதி, பத்தனையைச் சேர்ந்த ஏ. பெரியசாமி ஸ்தபதி, தமிழகத்தைச் சேர்ந்த நாகலிங்கம் ஜெகநாதன் சிற்பி ஆகியோர் ஆலய சிற்ப திருப்பணி வேலைகளை செய்ய டீ மோகன்ராஜ் வர்ண வேலைப்பாடுகளையும் அவிசாவளை கிரனேட் ஸ்டேட்டைச் சேர்ந்த பீ. ரஞ்சன் பூச்சு வேலைகளை செய்தார். இவ்வாலய திருப்பணி வேலைகளை செய்யவும் கும்பாபிஷேக கிரியைகளை செய்ய வும் உதவிய அனைவருக்கும் நடேசன் முருகேசன் திருப்பணிச் சபை சார்பில் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
கே. ஈஸ்வரலிங்கம்
திதி
9511) வளர்ப்பிறை தேய்பிறை காலங்களில் சில பகுதிகளுக்கு ஒரு கண் மட்டுமே உண்டு என கூறப்படுகிறது. இந்த சமயத்தில் செய்யப்படும் செயல்கள் பயன் தருமா?
பூரண பலன் தராது
9512) பூரண பலன் தராத இத்திதிகளில் சுபகாரியங்கள் செய்யலாமா?
தவிர்ப்பது நல்லது
9513) வளர்பிறையில் பூரண பலன் தராத திதிகள் எவை?
பஞ்சமி, சஷ்டி, சப்தமி, சதுர்த்தி, பெளர்ணமி
9514) தேய்பிறையில் பூரண பலன் தராத திதிகள் எவை?
பிரதமை, அஷ்டமி, நவமி, தசமி
9515) பொதுவாக வளர்பிறை தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலுமே பலரும் தவிர்க்கும் திதிகள் எவை?
அஷ்டமி, நவமி
516) ஆகாத திகதிகள் எவை?
அமாவாசை, பெளர்ணமிக்கு முந்தைய நாளாக வரும் சதுர்த்தசியும் அடுத்த நாளாக வரும் பிரதமையும்
9517) இவ்விரண்டு திதிகள் வரும் நாட்களில் எந்த ஒரு நல்ல காரியத்தைத் தொடங்கினாலும் என்ன நடக்கும்?
பொருள் நஷ்டம், எதிர்ப்பு, விரோதம், நோய் போன்ற பாதிப்புகள் வரக்கூடும்.
9518) திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயிலியம், பூரம், பூராடம் பூரட்டாதி, கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம் ஆகிய பன்னிரெண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் தவிர்க்கக் கூடிய செயல்கள் எவை?
கடன் கொடுப்பது, வெளியூர்ப் பிரயாணம் மேற்கொள்வது, கடுமையான நோய் வாய்ப்பட்டவர் அன்று சிகிச்சையை ஆரம்பிக்கக் கூடாது.
கலைமகள்
9519) கலைமகள் வெண்ணிற ஆடையுடுத்தி வெண்தாமரையில் வீற்றிருப்பது ஏன்?
தூய்மையை உணர்த்தும் பொருட்டு
9520) கலைமகளின் வாகனம் எது?
வெண்ணிற அன்னம்
9521) கலைமகளின் கையிலுள்ள வீணையை யார் கொடுத்தது?
சிவபெருமான் உருவாக்கி கொடுத்தது.
*
9522) வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் எவை?
கோவணம் கட்டிய மொட்டைத் தலை தண்டாயுத பாணி, தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம். தனித்த காளியும் கால கண்டன் படமும் ஆகாது.
9523) சனிஸ்வர பகவானின் படம் இல்லங்களில் வைக்கலாமா?
வைக்கக் கூடாது.
9524) நவகிரகங்களின் படம் இல்லங்களில் பூஜைக்கு உபயோகிக்கலாமா?
கூடாது
9525) சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படம் இல்லங்களில் வைக்கலாமா?
ஆகாது
9526) ருத்ர தாண்டவமாடுவதும் கொடூர பார்வை உள்ளதும் கோபாவேசமாக தவ நிலையிலுள்ளதும், தலைவிரி கோலங்களில் உள்ளதுமான அம்பிகை படங்கள் பூஜைக்கு உபயோகிக்கலாமா?
ஆகாது
புதன், 24 அக்டோபர், 2012
அறநெறி அறிவுநொடி
ஒன்பது
9500) விக்ரமார்க்களின் சபையிலிருந்த நவரத்னங்கள் என சிறப்பிக்க ப்பட்ட புலவர்கள் பெயர்க ளைத் தருக?
தன்வந்த்ரி, க்ஷணபகர், அமரஸி ம்ஹர், சங்கு, வேதாலபட்டர், கடகர்ப் பார், காளிதாசர், வராக மிஹிரர், வரருசி.
9501) பக்தர்களின் நவகுணங்களும் எவை?
அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மெளனம்.
9502) யாகசாலையில் எத்தனை வகையான குண்டங்கள் அமைக்கப்படும்?
ஒன்பது
9503) யாகசாலையில் அமைக்கப்படும் ஒன்பது வகையிலான யாக குண்ட அமைப்புக்களையும் தருக?
சதுரம், யோனி, அர்த்த சந்திரன், திரிகோணம், விருத்தம் (வட்டம்), அறுகோணம், பத்மம், எண் கோணம், பிரதான விருத்தம்.
9504) நவவித பக்திகளும் எவை?
சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்கியம், ஆத்ம நிவேதனம்.
9505) நவபிரம்மாக்கள் யார்?
குமார பிரம்மன், அர்க்க பிரம்மன், வீர பிரம்மன், பால பிரம்மன், சுவர்க்க பிரம்மன், கருட பிரம்மன், துனிஸ்வ பிரம்மன், பத்ம பிரம்மன், தராக பிரம்மன்.
9506) நவபாஷாணங்களும் எவை?
வீரம், பூரம், ரசம், ஜாதிலிங்கம், கண்டகம், கவுரி பாஷாணம், வெள்ளை பாஷாணம், ம்ருதர்சிங், சிலாவித்.
9507) நவதுர்க்கா யார்?
ஸித்திதத்ரி, கஷ்முந்தா, பிரம்மச்சாரினி, ஷைலபுத்ரி மகா கவுரி, சந்திர காந்தா, ஸ்கந்த மாதா , மகிஷாசுரமர்த்தினி, காளராத்ரி.
9508) நவசக்ரங்களும் எவை?
த்ரைலோக்ய மோகன சக்கரம், சர்வசாபுரக சக்கரம், சர்வ சம்மோகன சக்கரம், சர்வ செளபாக்ய சக்கரம், சர்வார்த்த சாதக சக்கரம், சர்வ ரக்ஷகர சக்கரம், சர்வ ரோஹ ஹர சக்கரம், சர்வஸித்தி ப்ரத சக்கரம், சர்வனந்தமைய சக்கரம்.
9508) நவநாதர்கள் யார்?
ஆதி நாதர், உதய நாதர், சத்ய நாரதர், சந்தோஷ நாதர், ஆச்சாள் அசாம்பயநாதர், கஜ்வேலி கஜ்கண்டர் நாதர், சித்த சொங்றங்கி நாதர், மச்சேந்திர நாதர், குரு கோரகுக நாதர்.
9509) உடலின் நவ துவாரங்களும் எவை?
இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள், ஒரு வாய், இரண்டு மலஜல துவாரங்கள்.
9510) உடலின் ஒன்பது சக்கரங்களும் எவை?
தோல், ரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மங்கை, சுக்கிலம், தேகஸ், ரோமம்.
புதன், 17 அக்டோபர், 2012
கே. ஈஸ்வரலிங்கம்
ஒன்பது
9481) எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படும் எண் எது? ஒன்பது
9482) அந்த எண்ணில் என்ன பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர்?
நீண்ட வாழ்வு எனும் அர்த்தம்
9483) சீனர்களின் சொர்க்க கோபுரம் எத்தனை வளையங்களால் சூழப்பட்டது? ஒன்பது
9484) பெண்களின் கர்ப்பம் பூரணமாவது எப்போது?
ஒன்பதாம் மாத நிறைவில்
9485) ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் என்ன பெயர்? நவம்
9486) நவ என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன?
புதிய, புதுமை
9487) நவசக்திகள் எவை?
வாமை, ஜேஷ்டை, ரவுத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமணி, மணோன்மணி.
9488) நவதீர்த்தங்கள் எவை?
கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு நர்மதை, காவிரி, பாலாறு, குமரி
9489) நவவீரர்கள் யார் யார்?
வீரவாகுதேவர், வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசன், வீரபுரந்திரன், வீரராக்ஷசன், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன்
9490) நவ அபிஷேகங்கள் எவை?
மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், வீபூதி
9491) நவரசங்களும் எவை?
இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம்
9492) நவக்கிரங்கள் எவை?
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது
9493) நவமணிகள் எவை?
கோமேதகம், நீலம், வைரம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம்
9494) நவதிரவியங்கள் எவை?
பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம்
9495) நவலோகங்களும் (தாது) எவை?
பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு, தரா, துத்தநாகம்
9496) நவதானியங்களும் எவை?
நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை
9497) சிவ விரதங்கள் ஒன்பதும் எவை?
சோமவார விரதம், திருவாதிரை, உமாகேச்வர விரதம், சிவராத்திரி, பிரதோசம், கேதார, ரிஷப, கல்யாண சுந்தர விரதம், சூல விரதம்
9498) நவசந்தி தாளங்கள் எவை?
அரிதாளம், அருமதாளம், சமதாளம், சயதாளம், சித்திரதாளம், துருவதாளம், நிவர்த்தி தாளம், படிம தாளம், விடதாளம்
9499) அடியார்களின் நவபண்புகள் எவை?
எதிர்கொள்ளல், பணிதல், ஆசனம் (இருக்கை) தருதல், கால் கழுவுதல், அருட்சித்தல், தூபம் இடல், தீபம் காட்டல், புகழ்தல், அமுது அளித்தல்.
வியாழன், 11 அக்டோபர், 2012
இந்து முறைப்படி உணவு உட்கொள்ளல்)
9466) எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணலாமா? கூடாது
9467) வெண்கலம், அலுமினியம், செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யலாமா?
கூடாது
9468) புரச இலையில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மை என்ன? புத்தி வளரும்
9469) வெள்ளித்தட்டில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மை என்ன?
நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை
9470) இரவு உணவில் சேர்க்கக் கூடாதவை எவை?
இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய்
9471) உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் சாதத்தை பரிமாறலாமா?
கூடாது
9472) முதலில் என்ன பரிமாற வேண்டும்?
காய்கறிகளோ, அப்பளமோ, உப்போ பரிமாறலாம்
9473) அதேபோல முதலில் இலையில் வைக்கக் கூடாதவை எவை?
கீரை, வத்தல்
(சுவாமியை வலம் வருதல்)
474) விநாயகரை எத்தனை முறை வலம் வர வேண்டும்?
ஒருமுறை
9475) ஈஸ்வரனை எத்தனை முறை வலம் வர வேண்டும்?
மூன்று முறை
9476) அம்மனை எத்தனை முறை வலம் வர வேண்டும்?
மூன்று முறை
9477) அரச மரத்தை எத்தனை முறை வலம் வர வேண்டும்?
ஏழு முறை
9478) மகான்களின் சமாதியை எத்தனை முறை வலம் வர வேண்டும்?
நான்கு முறை
9479) நவக்கிரகங்களை எத்தனை முறை வலம் வர வேண்டும்?
ஒன்பது முறை
9480) சூரியனை எத்தனை முறை வலம் வர வேண்டும்?
இரண்டு முறை
திங்கள், 1 அக்டோபர், 2012
அறநெறி அறிவுநொடி
இந்துமுறைப்படி உணவு உட்கொள்ளல்
9448) அளவிற்கு அதிகமாக உண்டால் (உணவு) என்ன நடக்கும்?
நோய் வரும், ஆயுள் குறையும்
9449) உணவில் மிளகு சேர்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன?
உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.
9450) உணவில் சீரகம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன?
உடம்பை சீராக வைப்பது மற்றும் குளிர்ச்சியைத் தருகிறது.
9451) வெந்தயம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன?
உஷ்ணம் குறையும்
9452) வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் என்ன நடக்கும்?
உடம்பில் உள்ள உஷ்ணம் குறையும்.
9453) கடுகை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன?
உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவில் வைத்திருக்கும்.
9454) இஞ்சியை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன?
பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வராது.
9455) உணவு உண்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?
கை, கால், வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் நீர் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.
9456) உணவு உண்ணும்போது செய்யக்கூடாதவை எவை?
பேசக்கூடாது, வடிக்கக்கூடாது, இடது கையை கீழே ஊன்றக்கூடாது, தொலைக்காட்சி பார்க்கக்கூடாது.
9457) வீட்டில் கதவை திறந்து வைத்துக்கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணலாமா?
கூடாது
9458) காலணி அணிந்துகொண்டு உண்ணலாமா?
கூடாது
9459) சூரிய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணலாமா?
கூடாது
9460) இருட்டிலோ நிழல்படும் இடங்களிலோ உண்ணலாமா?
கூடாது
9461) சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணலாமா?
கூடாது
9462) தட்டை மடியில் வைத்துக்கொண்டும் படுத்துக்கொண்டும் உண்ணலாமா?
கூடாது
9463) இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதாலும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் நல்லதா?
இல்லை, தரித்திரத்தை வளர்க்கும்
9464) ஒரே நேரத்தில் பலவித பழங்களைச் சாப்பிடலாமா?
கூடாது
9465) புரட்டாசியில் திருமணம் செய்யக்கூடாதா?
புரட்டாசியில் திருமணம் செய்யலாம். சிலர் மட்டும் புரட்டாசியில் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அது பெருமாள் மாதம். கன்னி மாதம், கன்னி புதனுடையது. தீவிர வைணவ பக்தர்கள் சிலர், பெருமாளுக்கென்று உள்ள மாதம் அது. பெருமாள் வழிபாடு என்று இறைவனுக்கு ஒதுக்கப்பட்டது என்று ஒரு சிலர் அந்த மாதிரி கடைபிடிக்கிறார்கள். ஆனால், புரட்டாசியில் திருமணங்கள் செய்யலாம். அது நல்ல மாதம் தான். மலட்டு மாதம் இல்லை. எல்லா வகையிலும் நல்லது கொடுக்கும்.
திங்கள், 24 செப்டம்பர், 2012
கே. ஈஸ்வரலிங்கம்
9429) பஞ்ச சபைகள் எவை?
ரத்தின சபை, கனகசபை, ரஜிதசபை, தாமிரா சபை, சித்திரசபை
9430) ரத்தின சபை எங்குள்ளது?
திருவாலங்காடு
9431) கனகசபை எங்குள்ளது?
சிதம்பரம்
9432) ரஜிதசபை எங்குள்ளது?
மதுரை
9433) சித்திர சபை எங்குள்ளது?
திருக்குற்றாலம்
9434) வெள்ளிசபை என்று அழைப்பது எந்த சபையை?
ரஜித சபையை
9435) பஞ்ச தாண்டவங்களும் எவை?
ஆனந்த தாண்டவம், அஜபா, தாண்டவம் சுந்தரத் தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், பிரம்ம தாண்டவம்
9436) ஆனந்த தாண்டவ தலம் எது?
சிதம்பரம் பேரூர்
9437) அஜபா தாண்டவ தலம் எது?
திருவாரூர்
9438) சுந்தரத் தாண்டவம் தலம் எது?
மதுரை
9439) ஊர்த்துவ தாண்டவ தலம் எது?
அவிநாசி
9440) பிரம்ம தாண்டவ தலம் எது?
திருமுருகன்பூண்.
9441) தில்லையில் உள்ள ஐந்து சபைகளும் எவை?
சித்சபை, கனகசபை, தேவசபை, திருத்த சபை, ராஜசபை
9442) அருவம் என்பது என்ன?
உருவமற்ற நிலை
9443) உருவம் என்பது என்ன?
கண்ணுக்குத் தெரியும் வடிவநிலை
9444) அருவுருவம் என்பது என்ன?
உருவமும் அருவமும் கலந்த நிலை
9445) அருவம், உருவம், அருவுருவம் மூன்று நிலைகளும் உள்ள தலமாக விளங்குவது எது?
சிதம்பரம்
9446) உதயத்திற்கு முன் தினமும் நடைபெறும் பூஜை எது?
நித்தியபூஜை
9447) விசேட கால பூஜை எது?
நைமித்தி பூஜை
திங்கள், 17 செப்டம்பர், 2012

வெள்ளி, 7 செப்டம்பர், 2012
அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளி வழங்குபவள் அன்னை மகாலட்சுமி
குபேரனுடன் தொடர்புகொண்ட எட்டு செல்வக் கருவூலங்களுக்கும் தலைமைத் தெய்வமாகத் திகழ்பவள் அன்னை மகா லட்சுமி. இதனை மார்க்கண்டேய புராணம் தெளிவுற விளக்குகிறது.
லட்சுமிகள் எட்டு, அதனையே ‘அஷ்ட லட்சுமிகள்’ எனறு அழைக்கின்றோம். செல்வம், ஞானம், உணவு, மனவுறுதி, புகழ், வீரம், நல்ல புதல்வர்கள், விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் இவையே அந்த அஷ்ட ஐஸ்வரியங்களாகும். இந்த அஷ்ட ஐஸ்வரியங்களையும் ஒருவனால் பெற முடியும். அதற்கு அந்தத் திருமகளின் அருட்கடாட்சம் இருக்க வேண்டும். அன்னை மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை ஒன்று மட்டுமே இதற்கு போதுமானது.
ஆலய வழிபாடும் அப்பழுக்கில்லாத அழகிய (உருவம் அல்ல) உள்ளம் கொண்ட எவரும் திருமகளின் திருவருளை எளிதில் பெற்றுவிடலாம்.
ஆலயங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை மகா லட்சுமியை ஆலயங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம். ஸ்ரீசூக்தம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்திரம் என துதிப்பாடல்களை பாடியும் தியானித்து அன்னை மகாலட்சுமியை வணங்கி வழிபடலாம்.
தேவியின் துதிப்பாடல்களுள் ஆதிசங்கரர் பாடிய கனகதாரா தோத்திரமும் பராசரப்பட்டர் இயற்றிய ஸ்ரீ குணரத்ன கோசமும் மகிமை பெற்றவை. இயலாதவர்கள் வீடுகளில் திருக்கேற்றி வைத்து தீபச் சுடரையே மகாலட்சுமியாகக் கருதி வழிபடலாம்.
லட்சுமி விரதங்கள்
மகாலட்சுமிக்கு உரிய விரதங்களுள் மிகவும் முக்கியமான விரதம் வரலட்சுமி நோன்பு விரதமாகும். இது போன்றே ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும் லட்சுமிக்கு உரிய நன்னாளாகும். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமியை ‘மகாலட்சுமி பஞ்சமி’ என்று அழைப்பர். அன்று முதல் நான்கு நாட்களுக்கு விரதம் இருப்பது சாலச் சிறந்தது.
இதேபோன்று கார்த்திகை மாதத்தில் வரும் பஞ்சமியை ‘ஸ்ரீ பஞ்சமி’ என்று அழைப்பார்கள். அன்றும் மகாலட்சுமியை மனமுருகி வணங்கி அம்பாளின் அருட்கடாட்சத்தைப் பெறலாம். வாசலில் மாக்கோலமிடுவது ஏன்?
மகாலட்சுமி என்றென்றும் நம்மோடு இருந்து நல்லருள் புரியவும் நம்மை விட்டு நீங்காதிருக்கவுமே ஆகும். தினமும் அதிகாலையில் எழுந்து நீராடி வாசலில் மாக்கோலமிட்டு மகாலட்சுமியை நம் இல்லங்களுக்கு வரவேற்க வேண்டும். அதேபோன்று வீட்டின் தலைவாயிலைத் துடைத்து படியில் கோலமிட்டு இரண்டு புறமும் பூக்களை வைத்து மகாலட்சுமியை நினைத்து போற்றி பூஜிக்க வேண்டும்.
மகா லட்சுமி வீட்டு வாயில்களில் ஐந்து வடிவங்களில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றாள். ஆகவே தினமும் வீட்டு வாயிலைத் துப்புரவு செய்து கோலமிடுவதாலும் மாவிலைத் தோரணம், மாலைகள், வாழைகள் கட்டுவதால் லட்சுமி தேவி மிகவும் மகிழ்ச்சியுறுவாள்.
சந்தனம், பன்னீர்
மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருகை தரும் அனைவரையும் பன்னீர் தெளித்து சந்தனத் திலகமிட்டு மலர்களை மனதார கொடுத்து முகத்தில் புன்னகை ததும்ப வரவேற்க வேண்டும். சந்தனம் திருமகளோடு அவதரித்து ஐந்து மரங்களில் ஒன்றாகும். அவரை யானை துதிக்கையால் நீராட்டுவதை பன்னீர் தெளிக்கும் நியதி குறிக்கிறது. இதனால் லட்சுமி தேவி அந்த சுப கைங்கரியத்தை வாழ்த்துவதாக ஐதீகம்.
குளத்தைக் காப்பது குல தெய்வங்களேயாகும். ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வங்களை வழிபட வேண்டும். இவ்வாறு வழிபட்டு வருவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் மேலோங்கும்.
பூஜிக்கத் தகுந்த மகா பாக்கியம் உள்ளவர்களாகவும் தூய்மை உள்ளவர்களாகவும் விளங்குபவர்கள் நம் இல்லப் பெண்மணிகள். இவர்கள் கிரக லட்சுமியாகத் திகழ்பவர்கள்.
ஆகவே இல்லப் பெண்மணிகளை தீயச் சொல் கூறி திட்டுவதோ அல்லது அப்பெண்கள் பிறரை திட்டுவதோ கூடாது. பக்தியுடன் தெய்வீகமாக பெண்கள் திகழும் இல்லத்தில் திருமகள் நிரந்தரமாக குடிகொண்டு வசிப்பாள். தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் விளக்கேற்றி வழிபடுவதால் நம் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கும். இல்லங்களில் செல்வம் பெருகும்.
குங்குமம்
குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்.
குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.
மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள். இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.
கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.
- ஈ. ஆகாஷ்
கே. ஈஸ்வரலிங்கம்
9386) சனிக்கிழமை எந்தெந்த நட்சத்திரங்கள் வந்தால் சுபகாரியங்கள் செய்ய ஏற்றதல்ல?
ரேவதி, புனர்பூசம், பூசம், உத்தராடம், அஸ்தம், ரேவதி.
9387) திதி என்பது எந்த மொழிச் சொல்?
வடமொழிச் சொல்
9388) திதி என்ற சொல்லுக்குரிய அர்த்தம் என்ன?
தொலைவு
9389) திதி என்பது என்ன?
வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயர்.
9390) மொத்தம் எத்தனை திதிகள் உள்ளன? 15
9391) பதினைந்து திதிகளையும் தருக?
பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, பெளர்ணமி.
9392) சுப அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும் திதிகள் எவை?
அமாவாசை, பெளர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளும்
9393) ஞாயிற்றுக்கிழமை எந்த திதி வந்தால் நற்பலன் தரும்?
அஷ்டமி
9394) திங்கட்கிழமை எந்த திதி வந்தால் நற்பலன் தரும்?
நவமி
9395) செவ்வாய்க்கிழமை எந்த திதி வந்தால் நற்பலன் தரும்? சஷ்டி.
9396) புதன்கிழமை எந்த திதி வந்தால் நற்பலன் தரும்?
திரிதியை
9397) வியாழக்கிழமை எந்த திதி வந்தால் நற்பலன் தரும்? ஏகாதசி
9398) வெள்ளிக்கிழமை எந்த திதி வந்தால் நற்பலன் தரும்?
திரயோதசி
9399) சனிக்கிழமை எந்த திதி வந்தால் நற்பலன் தரும்?
சதுர்த்தசி
9400) ஞாயிற்றுக்கிழமை எந்த திதி வந்தால் சுபகாரியங்கள் செய்யக்கூடாது?
சதுர்த்தசி
9401) திங்கட்கிழமை எந்த திதி வந்தால் சுப காரியங்கள் செய்யக்கூடாது
சஷ்டி
9402) செவ்வாய்க்கிழமை எந்த திதி வந்தால் சுப காரியங்கள் செய்யக்கூடாது?
சப்தமி
9403) புதன்கிழமை எந்த திதி வந்தால் சுபகாரியங்கள் செய்யக் கூடாது?
துவிதியை
9404) வியாழக்கிழமை எந்த திதி வந்தால் சுப காரியங்கள் செய்யக் கூடாது
அஷ்டமி
9405) வெள்ளிக்கிழமை எந்த திதி வந்தால் சுப காரியங்கள் செய்யக்கூடாது?
நவமி
9406) சனிக்கிழமை எந்த திதி வந்தால் சுபகாரியங்கள் செய்யக்கூடாது
சப்தமி
புதன், 29 ஆகஸ்ட், 2012
அறநெறி அறிவுநொடி
கே. ஈஸ்வரலிங்கம்
நல்ல நாள்
9371) வியாழக்கிழமை எந்த திசையில் பயணிக்கலாம்?
மேற்கு
9372) வியாழக்கிழமை செய்வதற்கு ஏற்ற நற்காரியங்கள் எவை?
புதிய பணியில் சேர்தல், வங்கிப் பணிகள் கவனித்தல், பெரிய மனிதர்களை சந்தித்தல், சீமந்தம், ருதுசாந்தி, காது குத்துதல், கிரஹப் பிரவேசம், விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகள்.
9373) வெள்ளிக்கிழமை எந்த திசை நோக்கி பயணம் செய்யலாம்?
வட திசை
9374) வெள்ளிக்கிழமை செய்வதற்கு ஏற்ற நற்காரியங்கள் எவை?
பெண் பார்க்க செல்லல், காது குத்துதல், சாந்தி முகூர் த்தம், புதிய வாகனங்களை வாங்குதல், நிலத்தினை உழுதல், உரமிடல்
9375) சனிக்கிழமை எந்த திசையை நோக்கி பயணம் செய்யலாம்?
தென்திசை.
9376) சனிக்கிழமை எந்த நற்காரியங்களை ஆற்ற உகந்த நாள்?
பூமி தொடர்பான விஷயங்கள், அதாவது வீடு, நிலம்,மனை வாங்குதல், விற்றல் செயல்களுக்கும் இயந்திரங்கள் வாங்குதல் போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும்.
9377) சிலர் எந்தெந்த நாட்களை சுப நாட்கள் என்று கூறுவர்?
திங்கள், புதன், வியாழன், வெள்ளி
9378) அசுப நாட்கள் என்று கூறுவது எந்த நாட்களை?
ஞாயிறு, செவ்வாய், சனி
9379) சுப நாட்களிலும் எந்தெந்த திதிகள் வருகின்ற நாட்களில் நற்காரியங்கள் ஆற்றாமல் தவிர்ப்பது நல்லது?
பிரதமை, அஷ்டமி, நவமி
9380) ஞாயிற்றுக்கிழமை எந்தெந்த நட்சத்திரங்கள் வந்தால் சுபகாரியம் செய்ய ஏற்றதல்ல?
பரணி, கார்த்திகை, மிருகசீரிடம், மகம், விசாகம், அனுஷம், கேட்டை, பூரட்டாதி
9381) திங்கட்கிழமை எந்தெந்த நட்சத்திரங்கள் வந்தால் சுபகாரியம் செய்ய ஏற்றதல்ல?
சித்திரை, கார்த்திகை, மகம், விசாகம், அனுஷம், பூரம், பூரட்டாதி
9382) செவ்வாய்க்கிழமை எந்தெந்த நட்சத்திரங்கள் வந்தால் சுபகாரியங்கள் செய்ய ஏற்றதல்ல?
உத்திராடம், திருவாதிரை, கேட்டை, திருவோணம், அவிட்டம், சதயம்
9383) புதன்கிழமை எந்தெந்த நட்சத்திரங்கள் வந்தால் சுபகாரியங்கள் செய்ய ஏற்றதல்ல?
அவிட்டம், அசுபதி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம்.
9384) வியாழக்கிழமை எந்தெந்த நட்சத்திரங்கள் வந்தால் சுபகாரியங்கள் செய்ய ஏற்றதல்ல?
கேட்டை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி
9385) வெள்ளிக்கிழமை எந்தெந்த நட்சத்திரங்கள் வந்தால் சுபகாரியங்கள் செய்ய ஏற்றதல்ல?
பூராடம், ரோகிணி, மிருகசீரிடம், பூசம், விசாகம், அஸ்தம், அனுஷம் அவிட்டம்
வியாழன், 23 ஆகஸ்ட், 2012
அறநெறி அறிவுநொடி
கே. ஈஸ்வரலிங்கம்
நல்ல நாள்
9352 பஞ்சாங்கத்தில் அடங்கியுள்ள ஐந்து அங்கங்களும் எவை?
நாள் (வாரம்), திதி, நட்சத்திரம், யோகம், கர்ணம்.
9353 பஞ்சாங்கத்தில் முதல் அங்கமாக வருவது எது?
வாரம் அதாவது கிழமை அல்லது நாட்கள்
9354 திருமணம், ஹோமம், சாந்திகள் போன்ற நற்காரியங்கள் செய்ய விசேஷமான நாட்கள் எவை?
ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
9355 நெருப்பு கிரகம் என்பது எது?
செவ்வாய்.
9356 அக்னி சம்பந்தமான செயல்களுக்குரிய நாள் எது?
செவ்வாய்க்கிழமை.
9357 இயந்திர சம்பந்தமான பணிகளுக்கு உரிய நாள் எது?
சனிக்கிழமை.
9358 ஞாயிற்றுக்கிழமைக்குரிய அதிபதி யார்?
சூரியன்.
9359 சூரியன் எத்தகைய தன்மை வாய்ந்தவர்?
ஆரோக்கியத்தை அளிப்பவர்.
9360 நீண்ட கால பிணிகளுக்கு டொக்டரின் ஆலோசனை பெற்று மருந்து குடிக்க ஆரம்பிக்கக் கூடிய நாள் எது?
ஞாயிற்றுக்கிழமை.
9361 ஞாயிற்றுக்கிழமை எந்த திசையை நோக்கி பயணம் செய்யலாம்?
வடக்கு.
9362 அரச பணி தொடர்பான பணிகளுக்கு உரிய அலுவலர்களை நேரில் சந்திக்கக் கூடிய நாள் எது?
ஞாயிற்றுக்கிழமை.
9363 திங்கட்கிழமை எந்த திசையை நோக்கி பயணம் செய்யலாம்?
தென்திசை நோக்கி.
9364 திங்கட்கிழமை செய்யக்கூடிய மதம் சம்பந்தமான விசேஷமான நற்காரியங்கள் எவை?
காது குத்துதல், பெண் பார்த்தல், ருது சாந்தி செய்தல், சாந்தி முகூர்த்தம், சீமந்தம் விருந்து உண்ணல்
9365 திங்கட்கிழமை செய்யக்கூடிய பொதுவான நல்ல காரியங்கள் எவை?
ஆடுமாடு வாங்குதல், விதையிடுதல், உரமிடல், வியாபாரம் தொடங்குதல்.
9366 செவ்வாய்க்கிழமை எந்த திசையை நோக்கி பயணம் செய்யலாம்?
கிழக்கு
9367 செவ்வாய்க்கிழமை எதற்கு ஏற்ற நாள்?
வாங்கிய கடனை அடைந்தல், வயலுக்கு உரமிடல், செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல்.
9368 செவ்வாய்க்கிழமைகளில் பொருள் வாங்கினால் என்ன நடக்கும்?
அது வருவாயை பெருக்கும் அதனால் வீட்டில் செல்வம் பெருகும்.
9369 புதன்கிழமை எந்த திசையை நோக்கி பயணம் செய்யலாம்?
மேற்கு திசையை நோக்கி.
9370 புதன்கிழமை ஆற்றக்கூடிய நற்பணிகள் எவை?
புதிய ஆராய்ச்சி, எழுத்துப் பணிகளை தொடங்கலாம், வழக்குகள் சம்பந்தமாக சட்டத்தரணிகளை சந்தித்தல், புதுமனை புகுதுதல், கிணறு வெட்டுதல், உழுதல், விதையிடுதல், அறுவடை செய்தல், கல்வி கலை போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல், காது குத்துதல், சீமந்தம், விருந்துண்ணல்.
கொம்பனித்தெருவை கோலாகலமாக்கி
பக்தி பரவசமூட்டிய தங்கத் தேர்விழா
இலங்கைத் திருநாட்டின் கொழும்பு மாநகரிலுள்ள கொம்பனித்தெரு ஆடிக் கிருத்திகை திருநாளான கடந்த 11 ஆம் திகதி சனிக்கிழமை பக்திபூர்வமான கோலகலமான நகரமாக காட்சி அளித்தது. வர்த்தக நிலையங்களும் தொழில் நிறுவனங்களும் நிறைந்து விளங்கும் நகரமாக கொம்பனித்தெரு திகழ்கிறது. அன்று இந்த நகரில் உள்ள வர்த்தக நிலையங்களிலும் கடைகளிலும் வாழைக்குலைகளுடன் வாழை மரங்கள் கட்டப்பட்டு மாவிலை தோரணங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. ஒன்று விடாது அனைத்து தமிழ் கடைகளிலும் வர்த்தக நிலையங்களிலும் நிறைகுடம் என பூரண கும்பங்களும் பூஜைத் தட்டுகளும் வைக்கப்பட்டிருந்தன.
ஆடிக் கிருத்திகையை வரவேற்று அன்று விடியக்காலையில் அடைமழை அவ்வப்போது பொழிந்து கொண்டிருந்ததால் அன்று காலை வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.
கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திலிருந்து ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராய் தங்கத் தேரில் ஆரோகணித்து பவனி வந்து அருள்பாலிக்க புறப்படத் தயாராகும் போது மப்பும் மந்தாரமுமாக இருந்த வானம் வருண பகவானின் கடைக்கண் பார்வை பட சூரிய பகவான் வான வீதியில் பவனி வந்து அருள்பாலிக்கத் தொடங்கினார்.
இந்தத் தேர் திருவிழாவையொட்டி ஆலயத்தின் இராஜ கோபுரமும் மணிக் கோபுரமும் ஆலய உள் வீதி கோபுரங்களும் ஆலய உள் வீதிகளும் வெளி வீதிகளும் 20 ஆயிரம் மின் குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வாழை மரங்களாலும் மாவிலை தோரணங்களாலும் நந்தி மற்றும் தேசிய கொடிகளாலும் ஆலயமும் ஆலயத்தின் வெளி வீதிகளும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.
ஐந்து கரங்களையுடைய விநாயகப் பெருமானை போன்று ஐந்து யானைகள் ஊர்வலத்தில் முன்னிலையில் செல்ல முருகப் பெருமானின் வாகனமாகிய மயில்களைப் போல் அலங்கரித்துக் கொண்ட சிறுமிகள் சிலர் மயில் நடனமாடிக் கொண்டு சென்றனர். இதேபோன்று சிங்கங்களைப் போன்று வேடந் தரித்துக்கொண்ட சிறுவர்கள் அவர்களைத் தொடர்ந்து நடனமாடிக்கொண்டு வந்தனர். ஒளவையார், முருகப் பெருமான் போன்ற ஆன்மீக வேடந் தரித்த சின்னஞ்சிறு பாலகர்கள் பாலமுருகனைப் போன்று அடி மேல் அடி வைத்து நடந்துவர, வீர அனுமான்களைப் போல் வேடமிட்ட சிறுவர்கள் ஆடிக் கொண்டு வந்தனர்.
இலங்கையிலேயே நிறைய இந்து அமைப்புகள் உள்ளன. அந்த எந்த அமைப்புக்கும் இல்லாத ஒரு சிறப்பு, கொம்பனித்தெருவில் உள்ள பழம் பெரும் அமைப்பான சைவ முன்னேற்றச் சங்கத்துக்கு உள்ளது. அந்தசிறப்பு என்னவென்றால், அதற்கென பேண்ட் இசைக் கருவிகள் இருப்பது தான். இந்தத் தங்கத் தேர்த் திருவிழாவில் சைவ முன்னேற்றச் சங்க நால்வர் அறநெறி பாடசாலை மாணவர்கள் பேண்ட் வாத்தியம் இசைத்துக் கொண்டு செல்வதையும் காணக்கூடியதாக இருந்தது.
முருகப் பெருமானுக்கே உரித்தான கரஹ ஆட்டம், கோலாட்டம், ஆகியனவும் பக்தர்களின் உள்ளங்களைக் கவர்ந்தன. கூந்தலில் மலர்களை சூடிய மங்கையர்கள் ஒன்றுகூடி ஒரு புறம் வடமிழுக்க, மறுபுறத்தில் வேஷ்டி அணிந்த மேலாடைகள் ஏதுமில்லா ஆண்கள் வடமிழுத்தனர்.
நாதஸ்வர வாத்திய கலைஞர்களின் நாதஸ்வர மேள இசையும் கொம்பனித்தெரு முழுவதையும் தமிழ் மற்றும் சைவ மணம் கமழச் செய்தன. இந்தத் தேர்த்திருவிழாவில் பெருமளவு பக்தர்கள் கலந்துகொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது. தங்கத் தேர் பவனி வந்த வீதிகளில் உள்ள வர்த்தகர்கள் பக்தர்களின் தாக சாந்திக்காக பால் பக்கெட்டுக்களையும் குளிர்பானங்களையும் கொடுத்தனர்.
இந்த தங்கத் தேர் சிற்பசாரியார் சரவணமுத்து ஜெயகாந்தன் தலைமையிலான சிற்பக் கலைஞர்களால் அமைக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி இதன் வெள்ளோட்ட விழா நடைபெற்றது. 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி தேர்த்திருவிழா நடைபெற்றது. அதன் போது வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி இந்த புதிய தங்கத் தேரில் ஆரோகணித்து பவனி வந்தது குறிப்பிடத்தக்கது. முருகப் பெருமான் மீது தீவிர பக்திகொண்ட அப்போதைய அறங்காவலர் சபை உறுப்பினரும் தற்போதைய ஆலய அறங்காவலர் சபை தலைவருமான திருக்குமார் நடேசன் தலைமையிலான தேர்த்திருப்பணிச் சபையினரால் இத்தேர் அமைக்கப்பட்டது.
தமிழ் சைவமும் தழைத்தோங்கி வளரும் யாழ்ப்பாணம் நல்லூரில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருபவர் ஸ்ரீ கந்தசுவாமிப் பெருமான். நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா வருடாந்தம் நடைபெறும் போது யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து கொழும்பில் வாழ்ந்த மக்களுக்கு அதில் கலந்துகொள்ள முடியாத நிலை இருந்தது.
இதனால் நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழாவை காண முடியாது கவலைப்பட்டனர். இவர்களது கவலையை போக்கும் வண்ணம் கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இந்த தேர்த் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த தங்கத் தேர் பவனியில் மெய்சிலிர்க்க வைக்கும் பக்திப் பரவசமுட்டும் பரவைக் காவடிகளும் இடம்பெற்றன. சைவ முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த பூமிநாதன் தலைமையிலான குழுவினர் பஜனை பாடிவந்தார்கள்.
பொதுவாக பக்தர்கள் ஆலய உள் வீதிகளில் அங்கப்பிரதட்சணம் செய்வார்கள். இந்தத் தேர்த் திருவிழாவில் பக்தர்கள் தேர் பவனி வந்த வீதிகளில் அங்கப்பிரட்சணம் செய்து வந்தனர். சில பக்தர்கள் நேர்த்திக்கடன் வைத்து அலகு குத்தி வேல்களை தமது முகங்களில் குத்தி தேருடன் வலம் வந்தனர். தேர்த்திருவிழாவைத் தொடர்ந்து மகேஸ்வர பூசை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி ஆலய அறங்காவலர் சபையினர், நல்லூர் தேர்த் திருவிழா நடைபெறும் அதே காலகட்டத்தில் இவ்வாலயத்திலும் தேர்த்திருவிழாவை நடத்தத் தலைப்பட்டனர்.
- லிஷாலி
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012
கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம்
இலங்கைத் திருநாட்டின் கொழும்புத் திருநகரில் கொம்பனித்தெரு எனும் பட்டினத்தில் அமைந்துள்ள ஆலயம், கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம்.
இந்த ஆலயம் 180 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. 1832 ஆம் ஆண்டளவில் கொழும்பு புறக்கோட்டை டாம் வீதியில் ஒரு சிறிய கட்டிடமொன்றில் இவ்வாலயம் ஸ்தாபிக்கப்பட்டது. பெரியதம்பி என்ற சைவப் பெரியாருக்குச் சொந்தமான காணியில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமான் இங்கு கோயில் கொண்டு அருள்பாலிக்கத் தொடங்கினார். அன்று கொழும்பு டாம் வீதியில் முதன் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானின் திருவுருவச் சிலை 180 ஆண்டுகள் கடந்த பின் இன்றும் கொழும்பு கொம்பனித்தெருவில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் பக்தர்களுக்கு அந்த ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானை வழிபட்டு அருள் பெறக் கூடியதாக இருக்கிறது. இது பக்தர்களுக்கு கிடைத்த அரிய அரும்பெரும் பாக்கியமாகும்.
அன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தியாவிலிருந்தும் கொழும்புக்கு வருகை தரும் பக்தர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து இந்த முருகப் பெருமானை வழிபட்டு அவன் அருளை பெற்றுச் செல்லத் தவறுவதில்லை. இதற்கேற்ற விதத்தில் இந்த ஆலயம் அமையப்பெற்றதே இதற்குரிய மூலகாரணமாகும்.
அக்காலத்தில் நடைபெற்ற யுத்தமொன்றில் கலந்துகொள்ளச் சென்ற இந்திய போர் வீரர்களும் தளபதி முதலானோரும் இவ்வாலயத்திற்கு வந்து பூசை வழிபாடு செய்து தாயகம் திரும்பியதாக கூறப்படுகிறது.
டாம் வீதியிலிருந்த ஆலயத்தை நாடி வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தமையாலும் அன்று ஆட்சிபுரிந்த அரசாங்கத்திற்கு இந்த ஆலயம் அமைந்திருந்த இடம் தேவைபட்டதாலும் ஆலயத்தை இடமாற்ற வேண்டிய நிலை தோன்றியது. அந்த காலகட்டத்தில் சைவத்தொண்டில் சிறப்புற்று விளங்கிய பெரியார் அருணாசலம் பொன்னம்பலத்திடம் இடத்தை தெரிவு செய்து ஆலயத்தை அமைக்கும்படி அரசாங்கம் கோரியது.
இதற்கமைய 1887 ஆம் ஆண்டு பெரியார் அருணாசலம் பொன்னம்பலத்தினால் தற்போது ஆலயம் அமைந்திருக்கின்ற கொம்பனித்தெரு கியூ வீதி வளவில் இந்த ஆலயம் கட்டுவிக்கப்பட்டதாக வரலாறுகள் சான்று பகிர்கின்றன.
சிறியதாக இருந்த இந்த ஆலயத்தை, சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் 1902 ஆம் ஆண்டு பெரியளவில் கட்டுவித்ததுடன் இவ்வாலயத்திற்கு ‘கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்’ என்ற திருநாமத்தையும் சூட்டினார். கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தோடு இவ்வாலய நிர்வாகப் பொறுப்பையும் ஏற்று கவனித்து வந்தார். இவருக்குப் பின் இ. இராஜேந்திரா இவ்வாலய நிர்வாகத்தை கவனித்து வந்தார். இவரை தொடர்ந்து பலரது தலைமையிலும் அறங்காவலர் சபை நிர்வாகத்திலும் இவ்வாலயம் மென்மேலும் வளர்ச்சி பெற்று வந்தது.
1975 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி இவ்வாலயத்தில் புனராவர்த்தன அனாவர்த்தன மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதன் பின் ஆலயத்திற்கு 81 அடி உயரமும் 7 தளங்களும் கொண்ட இராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி 1988 ஆகஸ்ட் 31 ஆம் திகதி ஆரம்பிக் கப்பட்டது. இராஜகோபுர திருப்பணியின் மற்றொரு அம்சமாக கோபுரத்தின் இரு மருங்கிலும் மணிக்கோபுரமும் மணிக் கோபுரமும் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. 1991 மார்ச் 10 ஆம் திகதி அதற்கான அடிக்கல் நடப்பட்டது. அதனுடன் இணைந்த வகையில் ஆலயத்தில் புனருத்தாரண வேலைகளும் செய்யப்பட்டு 1993 மார்ச் 29 ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திற்கு ஒரு தங்கத்தேர் அமைக்க வேண்டும் என்ற ஆலய திருப்பணிச் சபையினரின் விருப்பத்திற்கு அமைய சிற்பாசாரியார் சரவணமுத்து ஜெயகாந்தன் தலைமையிலான சிற்பக் கலைஞர்களால் தங்கத் தேரொன்று உருவாக்கப்பட்டது. இதன் வெள்ளோட்ட விழா 1998 ஆகஸ்ட் 9 ஆம் திகதியன்று நடைபெற்றது. அதே ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் திகதியன்று நடந்தேறிய தேர் திருவிழாவின்போது முருகப் பெருமான் புதிய தங்கத்தேரில் ஆரோகணித்து வீதியுலா வந்தார். சிறந்த முருக பக்தரும், மாமன்ற அறங்காவலர் சபை உறுப்பினருமான திருக்குமார் நடேசன் தலைமையிலான தேர்த் திருப்பணிச் சபையினரதும், க. பாலசுப்பிரமணியம் போன்ற செயல் வீரர்களின் உதவியுடனும் தேர்த் திருப்பணி வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறியது.
இந்த ஆலயத்தில் மீளவும் மேற்கொள்ளப்பட்ட திருப்பணி வேலைகளைத் தொடர்ந்து, மூலமூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான கோவில்கள் திருத்தியமைக்கப்பட்டு, இராஜ கோபுரமும் சிறப்பான வர்ணப் பூச்சுகளுடன் புதுப்பொலிவுகாணும் வகையில் அமைக்கப்பட்டு 2007 செப்டெம்பர் 16 ஆம் திகதியன்று சுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தானத்தின் பிரதம குரு முத்தமிழ் குருமணி சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களால் புனராவர்த்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா நடைபெறும் அதேகால கட்டடத்தில் அதற்கு இணையாக கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு, கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தின் இந்த மகோற்சவத்தையொட்டி ஆலய கோபுரம் முதல் ஆலய உள்வீதி மற்றும் வெளி வீதிகள் என்பன 20 ஆயிரம் மின் குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இதனால் ஆலயம் ஜெகஜோதியாக காட்சியளிக்கிறது.
ஆலயத்தின் தலைவர் திருக்குமார் நடேசன், செயலாளர் கந்தையா நீலகண்டன், பொருளாளர் வின்சேந்திர ராஜன், சொத்துரிமை செயலாளர் பீ. விமலேந்திரன், உப தலைவர் ஏ. எம். டி. தனநாயகம், அங்கத்துவ செயலாளர் கா. தில்லைநாதன் ஆகியோர் இந்த மகோற்சவத்தை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோவிலின் வருடாந்த பிரம்மோற்சவம் கடந்த 2ஆம் திகதி துவஜாரோகணத்துடன் (கொடியேற்றம்) ஆரம்பமாகியது. இவ்வாலயத்தில் தொடர்ந்து காலையும் மாலையும் விசேட பூஜைகள் நடைபெறுகின்றன. கடந்த முதலாம் திகதி காலை விநாயகர் வழிபாடு கணபதி ஹோமம், ஆகியவற்றுடன் இந்த பிரம்மோற்சவ கிரியைகள் ஆரம்பமாகின.
அன்று மாலை அனுக்ஞை, கிராமசாந்தி, பிரவேசபலி, வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரகணம் என்பன நடைபெற்றன.
கடந்த 2 ஆம் திகதி எல்லாம்வல்ல மூலமூர்த்திக்கு அபிஷேகம் பூஜை துவஜாரோஹண கிரியைகள், வசந்தமண்டப பூஜை ஆகியவற்றுடன் துவஜாரோஹணம் செய்யப்பட்டது. அன்று மாலை ஸ்நபனாபிஷேகம், ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை என்பவற்றுடன் சுவாமி வீதியுலா வருதல் இடம்பெற்றது.
இதேபோல் கடந்த 3 ஆம் திகதியும் காலையும் மாலையும் ஸ்நபனாபிஷேகமும், ஸ்தம்ப பூஜையும், வசந்த மண்டப பூஜையும், சுவாமி வலம் வருதலும் இடம்பெற்றது. இன்று 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை காலையில் 8 மணிக்கு ஸ்நபனாபிஷேகம், ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டப பூ¨சு, சுவாமி வீதிவலம் வருதல் என்பன இடம்பெறும்.
ஆடி வெள்ளிக்கிழமையாகிய இன்று மாலை 7 மணிக்கு சப்பறத் திருவிழா, பஞ்சமூர்த்தி உற்சவம் என்பன நடைபெறும். அத்துடன் சுவாமி வெளி வீதி உலா வருதலும் இடம்பெறும்.
நாளை 11 ஆம் திகதி காலை 4 மணிக்கு ஸ்நபனாபிஷேகம், ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை ஆகியன நடைபெற்று காலை 7 மணிக்கு எல்லாம்வல்ல அருள்மிகு ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி தங்க ரதத்தில் பவனி வந்து அருள்பாலிப்பார்.
இந்த தங்க ரத பவனி நாளை காலை 7 மணிக்கு ஆலயத்திலிருந்து புறப்பட்டு, கியூ ரோட், ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை, மலே வீதி, நியூஓல்ட் பெரி லேன், குமார ரத்னம் ரோட், கியூ வீதி வழியாக ஆலயத்தை வந்தடையும்.
11 ஆம் திகதி வழமைபோல் மாலை 4 மணிக்கு ஸ்நபனாபிஷேகம், ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை என்பன நடைபெற்று கார்த்திகை உற்சவம், பஞ்சமூர்த்தி உற்சவம் என்பன நடைபெறும்.
12 ஆம் திகதி காலை 10 மணிக்கு வழமையான பூஜைகளுடன் தீர்த்த உற்சவம், யாக கும்ப அபிஷேகம் நடைபெறும்.
12 ஆம் திகதி மாலை 6 மணிக்கு ஸ்தம்ப பூஜையும், அதனைத் தொடர்ந்து 7 மணிக்கு துவஜா அவரோஹணம் (கொடி இறக்கம்) நவகதி விசர்ஜ்ஜனம், சப்தாவாணம் உற்சவம், சண்டேஸ்வரர் உற்சவம் ஆசீர்வாதம் குரு உற்சவம் என்பன நடைபெறும்.
13 ஆம் திகதி காலை 8 மணிக்கு மஹோற்சவ பிராயச்சித்த அபிஷேகம் நடைபெறும். 13 ஆம் திகதி மாலை 7 மணிக்கு பூங்காவனம், திருவூஞ்சல் என்பன நடைபெறும்.
இவ்வாலயத்தில் மஹோற்சவம் நடைபெறுகின்ற நாட்களில் தினமும் நண்பகலில் அன்னதானம் வழங்கப்படுவதுடன், இரவில் திருவமுது பிரசாதமும் வழங்கப்படுகின்றது.
14 ஆம் திகதி மாலை 5 மணிக்கு அபிஷேகம், வைரவர் மடை உற்சவம் என்பன நடைபெறுவதுடன் அன்று இரவு 7 மணிக்கு வைரவர் பூஜை நடைபெறும். மஹோற்சவ குரு ஆகம கிரியா ரத்தினம் சிவஸ்ரீ மணிஸ்ரீனிவாச குருக்கள் (ஆலய பிரதம குரு) தலைமையில் மஹோற்சவ கிரியைகள் நடைபெறுகின்றன. சிவஸ்ரீ கோபாலகிருஷ்ணக்குருக்கள் (ஆலய குருக்கள்), சிவஸ்ரீ சிவாக் குருக்கள் ஆகியோர் உதவி குருமார்களாக இந்த மஹோற்சவ கிரியைகளை தினமும் நடத்தி வருகின்றார்கள். சர்வசாதகம் வேதாகம திலகம், பிரம்மஸ்ரீ க, ஆனந்தகுமார சர்மா, சர்வசாதகம் செய்ய பிரம்மஸ்ரீ தீ. கோடீஸ்வரசர்மா, பிரம்மஸ்ரீ இ. செந்தில்நாத சர்மா, பிரம்மஸ்ரீ கே. நவனீத சர்மா, பிரம்மஸ்ரீ இராகவன் சர்மா ஆகியோர் பரிசாரகர்களாக கிரியைகளை நடத்தி வருகின்றார்கள்.
இவ் உற்சவ காலங்களில் பிரம்மஸ்ரீ ஸ்ரீவெங்கடேச சர்மா நளபாகம் செய்ய வி. நாகேந்திரன் குழுவினர் மங்கள வாத்தியம் இசைக்க. கொழும்பு சைவ மங்கையர் சங்கம் பஜனை பாடி வருவது குறிப்பிட த்தக்கது.
கே.ஈஸ்வரலிங்கம்...




புதன், 8 ஆகஸ்ட், 2012
அறநெறி அறிவுநொடி
கே. ஈஸ்வரலிங்கம்
கல்யாண நாள்
9325) இரண்டு பெளர்ணமி அல்லது இரண்டு அமாவாசை ஒரே மாதத்தில் வருவது உண்டு. இந்த மாதத்தை என்ன மாதம் என்று அழைப்பார்கள்?
மல மாதம்
9326) மல மாதத்தில் திருமணம் செய்யலாமா?
கூடாது
9327) எந்தெந்த மாதங்களில் திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது?
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
9328) இயன்றவரை எந்த காலத்தில் திருமணம் செய்வது நல்லது?
சுக்கில பட்ச காலத்தில்
9329) திருமணம் செய்வதற்கு மிக மிக ஏற்ற கிழமைகள் எவை?
புதன், வியாழன், வெள்ளி
9330) எந்தெந்த லக்கின நாள்களில் திருமணம் நடத்த வேண்டும்?
ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுபலக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும்.
9331) எந்தெந்த திதிகளில் திருமணம் வைப்பது நல்லது?
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகள் தவிர்ப்பது நல்லது.
9332) எந்தெந்த காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது என்று கூறப்படுகிறது?
அக்னி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது
9333) திருமணத்தின் போது குரு சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கலாமா?
கூடாது
9334) திருமண நாள் மணமக்களின் சந்திராஷ்டம் தினமாக இருப்பது நல்லதா?
இல்லாமல் இருப்பது மிக மிக முக்கியம்.
9335) மணமக்களின் ஜனன நட்சத்திர நாளில் திருமணம் நடத்தலாமா?
கூடாது
9336) திருமணம் வேறு எந்தெந்த நட்சத்திர நாட்களில் நடத்தக்கூடாது?
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23 ஆவதாக வரும் நட்சத்திர நாட்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
9337) மணமக்களின் பிறந்த திகதி அல்லது கிழமைகளில் திருமணம் செய்யலாமா?
கூடாது
ஆடிக்கஞ்சி
9338) ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும் கூழ் ஊற்றுவதும் வழக்கம். இது ஏன் தெரியுமா?
ஆடி மாதம் வீசக் கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள்.
9339) இதனை என்னவென்று கூறுவார்கள்?
ஆடிக் கஞ்சி
திங்கள், 30 ஜூலை, 2012
அறநெறி அறிவுநொடி
கே. ஈஸ்வரலிங்கம்
( ஒன்பதின் சிறப்பு)
9316) நவசக்திகள் எவை?
வாமை, ஜேஷ்டை, ரவுத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூத்தமணி, மனோன்மணி
9317) நவதீர்த்தங்கள் எவை?
கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு, நர்மதை, காவிரி, பாலாறு, குமரி.
9318) நவவீரர்கள் யார்?
வீரவாகு தேவர், வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசன், வீரபுரந்திரன், வீரராஹசன், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன்
9319) நவ அபிஷேகங்களும் எவை?
மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், விபூதி,
9320) நவரசங்களும் எவை?
இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம்.
9321) நவகிரகங்கள் எவை?
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது.
9322) நவமணிகள் எவை?
கோமேதகம், நீலம், வைரம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம்
9323) நவதிரவியங்கள் எவை?
பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம்
9324) நவலோகங்கள் எவை?
பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, துத்தநாகம், ஈயம், வெண்கலம், இரும்பு, தரா
செவ்வாய், 10 ஜூலை, 2012
அறநெறி அறிவுநொடி
ஆடி அமாவாசை
9263) பிதுர் பூஜை செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?
எடுத்த காரியம் தடையின்றி நடைபெறும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும்.
9264) அமாவாசையன்று முன்னோர்களுக்குரிய வழிபாட்டினைப் பற்றி முதன் முதலில் கூறியவர் யார்?
பராசர முனிவர்
9265) பராசர முனிவர் யாருக்கு விளக்கிக் கூறியதாக புராணங்கள் கூறுகின்றன?
மைத்ரேய மகரிஷிக்கு
9266) அந்தத் தேரில் எத்தனை குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும்.
பத்து
9267) எந்த நிறத்திலான குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும்?
தண்ணீரில் பிறந்த முல்லைப் பூ நிறத்திலானது.
9268) அந்தத் தேரை செலுத்தும் போது என்ன நடக்கிறது?
சந்திரனிடமுள்ள அமுதத்தினை தேவர்கள் தினமும் அருந்துகின்றனர்.
9269) இவ்வாறு தேவர்கள் அமுதம் அருந்துவதால் சந்திரனுக்கு என்ன நடக்கிறது?
அது தேய்ந்து ஒரு கலையோடு காட்சி தரும்.
9270) அந்தக் குறையை ஒரு நாளைக்கு ஒரு கலையாக நிறைவு செய்பவன் யார்?
சூரியன்
9271) இதனை என்ன காலமென்று கூறுவர்?
வளர்பிறை
9272) பெளர்ணமிக்குப் பிறகு வரும் 15 நாட்களில் சந்திரனின் உடலிலிருந்து அமுதத்தை ஈர்த்துக் கொள்பவர்கள் யார்?
முப்பத்து முக்கோடி தேவர்கள்.
9273) தேய்ந்து ஒளி இழந்த சந்திரன் எங்கு வாசம் செய்யும்?
அமை என்ற ஒற்றைக் கிரணத்தில்
9274) சந்திரன் இவ்வாறு ஒற்றை கிரணத்தில் வாசம் செய்வதால் அந்த நாளை என்னவென்று அழைப்பர்?
அமாவாசை
9275) பித்ருக்களான முன்னோர்கள் எத்தனை பிரிவினர் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மூன்று
9276) அந்த மூன்று பிரிவினரையும் தருக.
செளமியர், பர்ஹிஷதர், அக்னிஷ் வர்த்தர்.
9277) பித்ருக்கள் வானவிளிம்பில் ஒன்று கூடி இருக்கும் போது அவர்களுக்குரிய நீர்க்கடனை அவர்களது வம்சத்தினர் செலுத்துவதால் ஏற்படும் நன்மை என்ன?
நல்வாழ்த்துகள் கிட்டும்.
9278) சந்திரனுடைய தேர் எத்தனை சக்கரங்களைக் கொண்டு திகழ்கிறது?
மூன்று
திங்கள், 2 ஜூலை, 2012
ஸ்ரீ சக்கரம்
9241. ஸ்ரீ சக்கரத்திற்கு எத்தனை முக்கோணம் உண்டு?
43
9242. ஸ்ரீ சக்கரத்தில் எத்தனை சிவகோணம் இருக்கு?
மூன்று
9243. சக்திகோணம் எத்தனை உள்ளது?
ஐந்து
9244. ஸ்ரீ சக்கரத்தில் வேறு என்னென்ன இருக்கும்?
அஷ்டதளம், ஷோடசதனம், மூன்று வலயங்கள், 4 சக்கரங்கள், பிந்துநாதம் கலை.
9245. ஸ்ரீ சக்கரத்தில் யோக சாஸ்திரங்களில் விளக்கி உள்ளபடி வேறு என்ன இருக்கும்? ஆதாரங்கள்.
9246. ஆதாரங்கள் எத்தனை இருக்கும்?
ஆறு
9247. ஆறு ஆதாரங்களையும் தருக?
மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை
9248. ஸ்ரீ சக்கரத்தில் மூலாதாரமாக விளங்குவது எது?
முக்கோணம்
9249. இதில் சுவாதிஷ்டானமாக விளங்குவது எது?
அஷ்டாரம்
9250. மணிபூரகமாக விளங்குவது எது?
தசாரம்
9251. அனாஹதமாக விளங்குவது எது?
பஹிர் தசாரம்
9252. விசுத்தியா விளங்குவது எது?
மன்வச்ரம்
9253. ஆக்ஞையாக விளங்குவது எது?
பிந்து
9254. அண்டத்திலே சுவாதிஷ்டான §க்ஷந்திரமாக விளங்குவது எது?
திரு ஆனைகள்
9255. சரீரத்திலே மூலாதாரத்திற்கு மேலே இரண்டு அங்குலத்தில் நான்கு தளங்களைக் கொண்டு இருப்பது என்ன?
ரத்னம்
9256. இந்த நான்கு தளங்களைக் கொண்டு விளங்குவது என்ன சக்கரம்?
சுவாதிஷ்டானம்
9257. ஆறு இதழ்களோடு ஆறு ஆக்ஷரங்களோடு செந்நிற பொலிவுடன் விளங்கும் அத்தாமரையை என்னவென்று அழைப்பர்?
சுவாதிஷ்டானம்
9258. அவ்விடத்தில் யார் வசிக்கின்றார்கள்?
பாலன் என்ற சித்தனும் ராகினி என்ற தேவியும்
9259. ஆறு இதழ்களில்யார் வசிக்கின்றனர்?
பந்தினி, பத்ரகாளி, மஹாமாயா, யசஸ்வினி, ரமாசம், பேஷ்டி ஆகிய ஆறு தேவிகளும்.
9260. இந்த ஆதாரமானது எதனுடன் இணைந்து விளங்குகிறது.
அக்னி தத்துவத்துடன்
9261. இவ்விடத்திலே அதிஷ்டானமாகி கிரந்திகளைச் செய்து கொண்டிருப்பது யார்?
குண்டலினி
9262. குண்டலினி நானே அதிர்ஷ்டானமாகி கிரந்தினைச் செய்து கொண்டிருக்கும் என சாஸ்திரங்கள் கூறுவதால், அந்த ஆதாரத்திற்கு என்ன பெயர்?
சுவாதிஷ்டானம்
அறநெறி அறிவுநொடி
கே. ஈஸ்வரலிங்கம்
திருமணம்
9236) திருமணத்தில் மாங்கல்யம் சூட்டும் போது ஏன் கெட்டி மேளம் கொட்டுகிறார்கள்?
ஏதாவது ஒரு மூலையில் யாரோ யாரையோ, ‘நீ நாசமாய்ப் போக’ என்றோ, ‘உன் தலையில் இடி விழ’ என்றோ அமங்கலமாய்த் திட்டிக் கொண்டிருக்கக் கூடும். அத்தகைய வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழக்கூடாது என்பதற்காகவே.
9237) மணமக்கள் வீட்டுக்குள் நுழையும் போது ஏன் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்லுகிறார்கள்?
மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்?
எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன? ஊர்வலம் வருகிறது என்று ஏன் சொல்லுகிறார்கள்?
பூமியே வலப்புறமாகச் சுழல்கிறது என்பதுதான். மனிதனின் இரண்டு கால்களில் இரண்டு கைகளில் இடது கை, கால்களைவிட வலது கை கால்கள் பலம் வாய்ந்தவை. சக்தியோடு வாழ, நிரந்தரமாக எதிலும் வலப்புறமாக வருவது நன்று என இந்துக்கள் நம்பினதாலாகும்.
தனது வலிமையின்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதற்கே வலது காலை முதலில் எடுத்து வைக்கச் சொன்னார்கள்.
9238) இந்துக்கள் சாதாரணமாக நண்பர்கள் வீட்டுக்கோ திருமணங்களுக்கோ போகிறவர்கள், திரும்பிச் செல்லும் போது ‘போய் வருகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு போவார்கள்.அதன் பொருள் என்ன?
இன்னும் பல திருமணங்கள், விழாக்கள் உன் வீட்டில் நடைபெறும். நாங்கள் மீண்டும் வருகிறோம் என்பதற்காகவே.
9239) மணமக்களை ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என்று ஏன் வாழ்த்துகிறார்கள்?
உலகத்திலுள்ள வாழ்க்கைப் பேறுகள் இந்துக்களால் பதினாறு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவை மக்கட் பேறு, செல்வப்பேறு, உடல் நலம் எனப் பதினாறு வகையாகும். மணமக்கள் அவ்வளவு சுகமும் பெற வேண்டும் என்பதையே இந்துக்கள் பதினாறும் பெற வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.
9240) கணவனின் பெயரை மனைவி சொன்னால் என்ன நடக்கும் என்று இந்துக்கள் நம்பினார்கள்?
மரியாதையும் மங்கலமும் குறையும் என்று.
செவ்வாய், 12 ஜூன், 2012
திங்கள், 4 ஜூன், 2012
அறநெறி அறிவுநொடி
கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
(பொட்டு)
9188) பெண்களின் முகத்திற்கு அழகும் வசீகரமும் சேர்ப்பது எது?
பொட்டு
9189) முகத்தின் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்தை என்னவென்பர்?
நெற்றிப் பொட்டு
9190) மருத்துவ ஆராய்ச்சிகளின்படி நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் எது?
நெற்றிப் பொட்டு
9191) யோகக் கலை இதனை எவ்வாறு அழைக்கிறது?
ஆக்ஞா சக்கரம்
9192) எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் எதனை வெளிப்படுத்தும்?
சக்தியை
9193) மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை எவை?
முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும்
9194) இதனை உணர்த்தக்கூடிய செயலொன்றை கூறலாமா?
நம் மனம் கவலையால் வாடும்போது தலைவலி அதிகமாவது அதனால்தான்.
9195) நெற்றியில் இடப்படும் திலகம் என்ன செய்கிறது?
அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது
9196) வேறு என்ன செய்கிறது?
நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது.
9197) வட்ட வடிவ முகத்துக்கு எந்த வடிவிலான பொட்டு பொருத்தமானது?
நீளமான பொட்டுகள்
9198) நீளமான பொட்டு எவ்வாறான அழகை தரும்?
இவர்களது உருண்டை முகத்தை சற்று நீளவாக்காக மாற்றியது போல் அழகு தரும்.
9199) இவர்கள் நெற்றி குறுகலாக இருந்தால் எந்த இடத்தில் பொட்டு வைக்க வேண்டும்?
புருவங்களுக்கு மத்தியில்
9200) இதய வடிவ முகம் கொண்டவர்கள் எந்த பொட்டை இட்டுக்கொண்டால் முகம் அழகாக இருக்கும்?
குங்கும பொட்டை
9201) இவர்களது முக வசீகரத்தை அதிகரித்துக் காட்டக் கூடியது எந்த வடிவிலான பொட்டு?
சிறிய அளவில் நீளமான ஸ்டிக்கர் பொட்டுக்கள்
9202) ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள் எந்தப் பகுதியில் எந்தப் பொட்டு வைத்தால் அழகு அதிகரித்து காட்டப்படும்?
புருவத்திற்கு மேலே நெற்றியில் வட்டப் பொட்டு வைத்தால்
9203) இவர்களுக்கு நீளமான ஸ்டிக்கர் பொட்டு வைத்தால் என்ன நடக்கும்?
வசீகரமாக இருக்கும்
9204) சதுர முகம் உள்ளவர்கள் எந்த வடிவமான பொட்டுகளை வைக்கலாம்?
அகலம் அதிகமுள்ள பொட்டுகளை
9205) வேறு எந்த வடிவமான பொட்டுகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்?
உருண்டை மற்றும் முட்டை
9206) வண்ணத்துப் பூச்சி வடிவ டிசைன் பொட்டுக்கள் இவர்களுக்கு எப்படி இருக்கும்?
எடுப்பாக இருக்கும்
9207) முக்கோண வடிவ முகம் உள்ளவர்களுக்கு எந்த பொட்டுகள் பொருந்தும்?
எல்லா வகை பொட்டுகளும்
9208) இவர்களது நெற்றி அகலமாக இருந்தால் எந்த வடிவ பொட்டு பொருந்தும்?
நீளமான, முக்கோண பொட்டுகள்
9209) அகலமான நெற்றியாக இருந்தால் இவர்கள் எங்கு பொட்டு வைக்க வேண்டும்?
புருவத்தில் இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல்.
ஆமர் வீதி, பரடைஸ் பிளேஸ்
ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிN~கம்;
கொழும்பு, ஆமர்வீதி, பரடைஸ் பிளேஸ் ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவிலின் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ்ஷ மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 10ம் திகதி காலை 7.15 மணிக்கு நடைபெறவுள்ளது. எதிர்வரும் 08ம் திகதி காலை 7 மணி முதல் மறுநாள் 9ஆம் திகதி பிற்பகல் 3 மணிவரை எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.
இன்று 4ம் திகதி கர்மாரம்பம், விநாயகர் வழிபாடு, மஹா கும்பாபிஷேகம் ஆச்சார்ய வர்ணம், தேவ பிராமண அனுஞ்ஞை, ஸ்ரீ மஹா காளி அனுஞ்ஞை, பரிவார மூர்த்திகள் அனுஞ்ஞை திரவிய சுத்தி திரவிய யாகம், தனிபூஜை, ஸ்தல விருட்ச பூஜை, யந்திர பூஜை, பேரீதாடணம், மஹா கணபதி ஹோமம், நூதன மூர்த்திகள் பூர்வாங்க கிரியை, நூதன மூர்த்திகள் கிரம பிரதட்சணம் என்பன நடைபெறும்.
நாளை 5ம் திகதி காலை 8 மணிக்கு குபேர சம்புடித தனகர்ச்சனை மஹா லட்சுமி ஹோமம், யந்திர பூஜை, தீபாராதனை என்பனவும் அன்று மாலை 5 மணிக்கு கிராம சாந்தி, பிரவேச பலி என்பனவும் இடம்பெறும்.
எதிர்வரும் 7ம் திகதி காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாடு, பூமிதேவி பூஜை, கங்கா பூஜை, கோ பூஜை, சூரிய அக்னி சங்கிரணம், மிருத் சங்கிரகணம் என்பனவும் 8ஆம் திகதி மாலை 3 மணிக்கு அங்குரார்ப்பணம், சிவாச்சார்ய இரட்சாபந்தனம் என்பனவும் நடைபெறும்.
எதிர்வரும் 10ம் திகதி நடைபெறும் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறும்.
பிரம்மஸ்ரீ வெங்கட சுப்பிரமணியக் குருக்கள் தலைமையில் திருக்கோவில் பிரதம குருக்கள் சிவஸ்ரீ கோ சுசீந்திர குமார குருக்கள், உதவி அர்ச்சகர் பிரம்மஸ்ரீ வை. திருக்குமர சர்மா, பால சண்முகக் குருக்கள், லட்சுமி காந்த கேதீஸ்வர குருக்கள், சுதாகரக் குருக்கள், விக்னேஸ்வர குரக்கள், பைரவமூர்த்தி குருக்கள், தியாகராஜ குருக்கள், சிவபாலக் குருக்கள், அந்தர்ராம் குருக்கள், பிரபாகர குருக்கள், கு.க. வைத்தீஸ்வர குருக்கள், ஆகியோர் கும்பாபிஷேக கிரியைகளை செய்வார்கள். எதிர்வரும் 10 ம் திகதி காலையில் நடைபெறும் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும்.
அன்றுமாலை 5 மணிக்கு சாயரட்சை, வசந்த மண்டப தீபாராதனை, திருமாங்கல்ய தாரணம் திருவூஞ்சல், நாட்டியாஞ்சலி, ஸ்வாமி வீதி, பிரதர்சனம் பிரசாதம் வழங்குதல் என்பன இடம்பெறும்.
செவ்வாய், 22 மே, 2012
கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
9166. ஒருவர் நம்மை பொறாமையோடு பார்ப்பதை என்ன வென்பர்?
கண்திருஷ்டி.
9167. ஒருவர் நம்மை பார்க்கும் போது நமக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?
அப்படி பார்க்கும்போது கண் களில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் நம் மனம் மற்றும் உடல் நிலையில் பாதிப்பு உண்டாக் குவதை விஞ்ஞானபூர்வமாக கண்டறிந்துள்ளனர்.
9168. இவ்வாறு கண்திருஷ்டியால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப் பாக இருக்க கூறப்பட்ட பழமொழி எது?
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது.
9169. கண் திருஷ்டி பட்டால் பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்த நம் முன்னோர்கள்
என்ன செய்து வைத்தார்கள்?
கண்ணூறு கழித்தல் என்ற பரிகாரத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
9170. சாஸ்திரங்களில் எத்தனை விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது?
ஒன்பது.
9171. அந்த ஒன்பது விஷயங்களும் எவை?
ஒருவரது வயது, பணம் கொடுக்கல் வாங்கல், வீட்டு சச்சரவு, மருந்துகளில்
சேர்க்கப்பட்ட பொருட்கள், கணவன்-மனைவி அனுபவங்கள், செய்த தானம்,
கிடைக்கும் புகழ், சந்தித்த அவமானம், பயன்படுத்திய மந்திரம்.
ஊறுகொடவத்தை
ஸ்ரீமஹா பத்திரகாளியம்மன் திருக்கோயிலின் தேர்த்திருவிழா
ஊறுகொடவத்தை சாத்தம்மா என்ற தோட்டத்தின் ஊர் எல்லையில் அந்நியர் இலங்கையை ஆண்ட காலத்திலிருந்து அரச மர நிழலில் கொட்டில் ஆலயம் போல் தொட்டிலிட்டு தோன்றிய ஆலயம் ஸ்ரீமுனீஸ்வரா ஆலயம் வெள்ளை நாகமொன்றும் கரும் நாகமொன்றும் காடு மண்டிக்கிடந்த இந்த ஆலயச் சூழலைச் சுற்றி அன்று வலம் வந்தன.
ஆரம்ப காலத்தில் கல்லொன்றை வைத்து வணங்கி வந்தவர்கள் காலப் போக்கில் திருவுருவப் படங்களையும் படிப்படி யாக திருவுருவச் சிலை களையும் வைத்து வழி படத் தலைப்பட்டனர்.
சின்னஞ்சிறு கொட்டி லாக மடாலயமாக இருந்த ஆலயத்தில் எஸ். ஆறுமுகம் குரு அம்மா தம்பதிகள் ஆரம்ப காலத்தில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தனர். இவர்கள் அம்மாளின் திருவடியை எய்தபின் இவர்களின் புதல்வியாகிய திருமதி நல்லம்மா இவர்களது பணியைத் தொடர்ந்து வந்தார்.
இந்த ஆலயம் ஊர் எல்லையில் ஓர் ஒதுக்குப்புறத்தில் இருந்ததால் இதன் மகிமை மங்கிப் போய் இருந்தது. இதை உணர்ந்த இறைவன் இதனை ஊரின் முன்புறத்திற்கு கொண்டு வர திருவுளம் கொண்டார். இதற்கமைய ஆலயத்தை சாத்தம்மா தோட்டம் ஆரம்பமாகும் இடத்திற்குக் கொண்டுவர திருமதி நல்லம்மா எண்ணங் கொண்டார்.
இதற்கமைய இவர், தான் வசித்து வந்த சாந்தம்மா தோட்டத்தில் உள்ள 55/2 ஆம் இலக்கத்தைக் கொண்ட வீட்டை மடாலயமாக அமைத்து வழிபட்டு வந்தார். அன்று முனீஸ்வரரர் ஆலயத்தைச் சுற்றி வந்த நாகம்மா அதன் பின் இங்கும் வலம் வரத் தொடங்கினாள். இவ்வாறு இவரது இல்லத்தில் ஆலயம் அமைத்து வழிபடத் தலைப்பட்ட பின் இவருக்கு அம்பாளின் அருள் வரத் தொடங்கியது. இவர் குறி சொல்லவும் தலைப்பட்டார்.
மடாலயமாக இருந்த இந்த ஆலயத்தை சிறுக, சிறுக ஆகம விதிகளுக்கேற்ப ஆலயமாக கட்டியெழுப்ப முனைந்த போது இவரை அறியாமலே ஸ்ரீமகா பத்திரகாளியம்மன் இங்கு வந்து குடிகொண்டு விட்டாள்.
இங்கு வருடாந்தம் நேர்த்தியாக திருவிழாக்கள் நடந்தேறின. 1998 ஆம் ஆண்டு தை மாதம் இங்கு முதன் முதலாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதனையடுத்து இவ்வாலயத்தை நாடிவரும் பக்தர் கூட்டமும் சிறுசிறுகப் பெருகியது. அயலில் உள்ளவர்கள் தங்கள் பொருள் ஏதாவது திருட்டு போனால் அல்லது காணாமல் போனால் இவ்வாலயத்தை நாடி வந்து இந்த நல்லம்மாளின் அருள் வாக்கு கேட்டு அறிந்து கொள்வதுண்டு. நல்லம்மாவின் இரண்டாவது மகனுக்கு முருகப்பெருமானின் திருவருள் கிட்டியுள்ளதால் அவருக்கும் அவ்வப்போது அருள்வாக்குக் கூறும் ஆற்றல் உண்டு என்று அவர் கூறுகிறார்.
மடாலயமாக இருந்த ஆலயம் இன்று ஆகம விதிகளுக்கேற்ப ஆலயமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
இங்கு 2004 ஜூனில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு ஜூன் 6ம் திகதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இவ்வாலயத்தின் முதலாவது வருஷாபிஷேகப் பெருவிழா கடந்த 16 ஆம் திகதி மாலை வாஸ்து சாந்தி மற்றும் கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகியது.
இங்கு தினமும் அருள்மிகு ஸ்ரீமகா பத்திரகாளியம்மனுக்கு விசேட அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு பேலியாகொடை ஸ்ரீபூபால விநாயகர் ஆலயத்திலிருந்து பால்குட பவனி இடம்பெறும்.
அன்று காலை 9.00 மணிக்கு பால்குட பவனி ஊறுகொடவத்தை அருள்மிகு ஸ்ரீமகா பத்திரகாளியம்மன் திருக்கோவிலை அடைந்தவுடன் அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம் நடத்தப்படுவதுடன் மகேஸ்வரபூஜை நடத்தப்பட்டு அன்னதானமும் வழங்கப்படும்.
எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 4 மணிக்கு முத்தேர் பவனி இடம்பெறும். ஆலயத்திலிருந்து புறப்படும் அலங்கார சித்திரத்தேர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஊறுகொடவத்தை மேம்பாலம் வழியாக திரும்பி ஊறுகொடவத்தை சந்தி, பேஸ்லைன் வீதி, வழியாக முதலாம் நவகம்புற ஸ்ரீமாரியம்மன் கோவிலுக்கு சென்று களனிதிஸ்ஸ மின் நிலையம் ஊடாக இரண்டாம் நவகம்புர ஸ்ரீமகா காளியம்மன் கோவிலுக்கு சென்று பேஸ்லைன் வழியாக ஆலயத்தை வந்தடையும்.
சிவஸ்ரீ சண்முகரட்ண குருக்கள், சிவஸ்ரீ ஸ்ரீகாந்த குருக்கள், பிரம்மஸ்ரீ சாந்தகுமார் சர்மா, கோவில் பூசகர் ஏ. செல்வநேசன் ஆகியோர் வருஷாபிஷேக கிரியைகளை செய்வார்கள். பம்பலப்பிட்டி பழைய கதிர்வேலாயுத சுவாமி கோயிலின் மங்கள வாத்திய குழுவினர் மங்கள வாத்தியம் இசைப்பர்.
எதிர்வரும் 27ம் திகதி தீர்த்தத் திருவிழா இடம்பெறும்.
செவ்வாய், 15 மே, 2012
அறநெறி அறிவுநொடி
கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்
வாழை
9148) முக்கனிகளும் எவை?
வாழை, மா, பலா
9149) முக்கனிகளுள் எல்லா காலங்களிலும் கிடைக்கும் கனி எது?
வாழை
9150) முக்கனிகளுள் அதிக பயன்தரக்கூடியது எது?
வாழை
9151) தன்னை அழித்துக் கொண்டு, பிறருக்கு கனி தரும் மரம் எது?
வாழை
9152) திருமணப் பந்தலில் மட்டுமல்லாது சுப காரியங்கள் நடக்கும் அனைத்து இடங்களிலும் கட்டப்படுவது எது?
வாழைமரம்
9153) திருமணப் பந்தலில் எதற்கு அடையாளமாக வாழை மரம் கட்டப்படுகின்றது?
வாழை, தன்னை அழித்துக்கொண்டு, பிறருக்கு கனி தருவது போல், தம்பதியர் ஒருவருக்கொருவர், தங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும்.
9154) திருமணப் பந்தலில் வாழை மரம் கட்டுவதற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா?
குடும்ப விருத்திக்காகவும்
9155) வாழையில் பயன்தரக்கூடியவை எவை?
இலை, காய், பூ, பட்டை, தண்டு, நார்
9156) ஒரு மரக்கன்றை நட்டால் அதன் குலம் தழைக்கும் வண்ணம் மிளிரக் கூடியது எந்த மரம்?
வாழையடி வாழையாக தழைக்கக்கூடியது வாழை
9157) சுப காரியங்களில் வாழை மரம் கட்டுவது ஏன்?
மனிதன் தலைமை பெற வேண்டும், தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கு பல வகைகளிலும் பயன்தர வேண்டும். அவன் குலம் வழி வழியாக தழைக்க வேண்டும் என்பதற்காக.
9158) ‘ஆல் போல தழைத்து அறுகு போல் வேரோட வேண்டும்’ என்று வாழ்த்துவது யாரை?
மணமக்களை
9159) வாழைமரம் கட்டுவதை எதன் புலப்பாடாக கருதலாம்?
மணமக்களை ஆல்போல தழைத்து அறுகு போல் வேரோட வேண்டும் என்று வாழ்த்தும் நெஞ்சத்தின் புலப்பாடாக வாழை மரம் கட்டுவதை கருத வேண்டும்.
9160) திருவிழா நாட்களில் வாழை மரம் கட்டுவதுடன் வேறு என்ன தொங்கவிடப்படும்?
மா விலை
9161) மாவிலைக்கும் வாழை இலைக்கும் விஞ்ஞான ரீதியாக உள்ள ஒற்றுமை என்ன?
மாவிலைக்கும் வாழை இலைக்கும் காய்ந்து போகும் வரை ஒட்சிசனை வெளியேற்றும் தன்மை உண்டு.
9162) விழாக் காலங்களில் வாழை மரமும் மாவிலை களும் தோரணங்களாக வாயிலிலும் மணப் பந்தலிலும் கட்டும் பழக்கம் எப்படி ஏற்பட்டது?
பண்டைய காலங்களில் இன்று போல் மின்சார வசதி கிடையாது அதனால் திருமணக் கூடங்களில் செயற்கைக் காற்றோட்டம் ஏற்படுத்திக் கொள்ளும் வசதி அற்ற நிலை. அனைவரும் கூடியுள்ள இடத்தில் சுவாசிக்க தேவையான அளவு காற்று வேண்டுமாதலால் ஒட்சிசன் குறைவு ஏற்பட்டுவிடக்கூடாதென்றே இவ்வாறு செய்யப்பட்டது.
9163) வாழை இலையை மட்டும் பறித்துக் கட்டினால் என்ன நடக்கும்?
விரைவில் வாடிவிடும்.
9164) வாழையை ஏன் மரத்தோடு கட்டுகிறார்கள்?
இலையை மட்டும் பறித்துக் கட்டினால் விரைவில் வாடிவிடும் என்பதால் ஆகும்.
9165) மரத்தோடு சேர்த்துக் கட்டும் போது என்ன நடக்கிறது?
தண்டிலுள்ள ஈரப்பதத்தால் வாழை இலை சில நாட்களுக்கு வாடாமல் இருக்கும்.
சரித்திரத்தில் இடம்பிடித்துள்ள கோலாலம்பூர் கண்ணாடிக் கோயில்
ணீலக சரித்திரத்தில் முதல் இடம் பெற்ற கண்ணாடிக் கோவில் கோலாலம்பூரில் ஜோகர் பாருவில் இருக்கிறது. சிங்கப்பூரையும் ஜோகர் பாரு நகரத்தையும் இணைப்பது கடலின் மீது கட்டப்பட்ட பாலம் தான். மலேசியாவில் ஜலன் டெப்ரா என்னும் இடத்தில் ஸ்ரீ ராஜ காளியம்மன் கோயிலை கட்டி முடித்திருக்கிறார்கள். உருண்டை வடிவ உலகில் கண்ணாடி பதிக்கப்பட்ட ஆலயம் மலரும் வண்ணம் அழகுற அமைத்து கண்களை உருளச் செய்தது அதிசயமாகும். இது உலக மக்கள் இந்துவாகப் பிறந்தவர்கள் அனைவரும் மகிழ்வுறும் விசயமாகும்.
தொடக்கத்தில் சிறிய குடிசையாக இருந்து, கால ஓட்டத்தில் ஜோகூர் பாருவில் அமைந்த மிகப் பெரிய ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட முதல் மலேசியக் கோவில் என்பது சிறப்பம்சம்.
இந்தக் கோயில் உருவாகியிருப்பது முழுக்க முழுக்க கண்ணாடியால் என்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயமே! கோயிலின் கூரை, சுவர்கள், கோபுரங்கள் என அனைத்தும் வண்ணக் கண்ணாடித் துண்டுகளைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கின்றன.
கோவில் கோபுரமும், நுழைவாயிலும் எங்கும் உள்ளது போல் சாதாரணமாகத் தான் தோன்றின.
ஆனால் உள்ளே சென்ற போது பிரமிப்பு ஏற்படுகிறது. எங்கும் கண்ணாடிகள் மயம் சிறு சிறு கண்ணாடிகள்! ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள்! தூண்களிலும், மேலே விதானம் முழுவதுமே கண்ணாடிக் கூரை தான். அத்தனை கண்ணாடிகளும் சேர்ந்து ஒளித் துண்டுகளைப் பிரதிபலிக்க எங்கேயோ ஒரு மாயபுரியில் இருப்பது போல் பிரமை. கீழே மழமழ தரை அவற்றில் அத்தனை கண்ணாடிகளும் பிரதிபலிக்கின்றன. இந்த மாயங்களை செய்த அதிசய மனிதர் பார்வைக்கு சாதாரண மனிதர் போல் இருந்தார்.
கோவிலுக்கு வந்தால் காவி ஆடை அணிகிறார். அவர் புறத்தோற்றம் எதுவுமில்லா முனிவர், உள்ளொளி உள்ளவர். காளியம்மன் கோவிலை மிகப் பெரிய தலமாக்க தன் வாழ்நாளையே அர்ப்பணம் செய்தவராவார். அவர் நிர்வாகத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு இந்து ஆகம விதிப்படி பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில் எனப் பெயரிடப்பட்டது. சுமார் 21 ஆண்டுகள் பலவித தடைகள், போராட்டங்கள் ஆகியவற்றைக் கடந்து காளியம்மன் அருளால் இங்கு காளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
பூஜையிலிருந்து தொடங்கி கோவிலுக்கு நிதி திரட்டும் வரை இவரே செய்கிறார். அவரது திருப்பெயர் தான் சின்னத்தம்பி சிவசுவாமி. 1967 இல் பிறந்தவர். மலேசியாவில் பட்டப் படிப்பு படித்து கல்வித் துறையில் சேர்ந்து 18 வருடங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரது 16 ஆவது வயதிலேயே ஓர் அதிசயத் திருப்பம் நடந்தது.
மனத்தில் உள்ள ஒரு விரதத்தை முடிப்பதற்கு அருள் மிகு இராஜகாளியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்தார். அவரது பெற்றோரும் அதைக் கண்டு மகிழ்ந்தார்கள். அப்போது தொடங்கியது தான் அவரது தவ யாத்திரை. இப்பொழுது எல்லாச் செயல்களிலுமே கடவுளின் நேர் பார்வையின் முன்பாகவே செய்வது போல் எல்லாம் செய்து வருகிறார். உரிய வயதில் அவர் திருமணம் செய்து கொண்டார். திருமதி வசந்தி அடிகள் என்பது மனைவியின் பெயர். மூன்று குழந்தைகள் திருமணத்திற்குப் பிறகும் அவர் கோவில் கடமைகளை எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த அதிசய சுவாமியின் மனத்துள் மகாகாளியைப் பற்றி தோத்திரங்கள் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். கோவில் கடமைகளைத் தவிர அவர் ஆசிரியர் தொழிலையும் செய்து வருகிறார். இந்தியாவில் சுற்றுப் பிரயாணம் செய்த போது தாஜ்மஹாலையும் இன்னும் பிரசித்தி பெற்ற பல கோவில்களைப் பார்த்திருக்கிறார்.
எல்லாமே அமைப்பிலும் அழகிலும் எல்லாரையும் கவர்ந்து இழுத்தன.
பின்னர் இவர் பர்மாவுக்கும் சென்றிருக்கிறார். அங்கே உள்ள கோவில்களில் இந்தக் கண்ணாடி அமைப்பைத் பார்த்திருக்கிறார். அதில் சிறிய அமைப்பாகத் தெரிந்தது.
சிவசுவாமிக்கு இது பெரிய கனவை உண்டாக்கியது.
அந்த வேலைப்பாடு செய்த பர்மிய
தொலாளிகளைச் சந்தித்தார்.
அவர்கள் குடும்பங்களை ஜோகர் பாருவுக்குக் கொண்டு வந்து எல்லா வசதிகளையும் செய்துகொடுத்தார். தகுந்த ஊதியமும் கொடுத்தார். பிரமாண்டமாக கோயிலை அமைத்தார். இவ்வாறு அமைந்த கண்ணாடிக் கோவில் உலகப் புகழ் பெற்றது.
10 இலட்சம் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோவில் கட்டுவதற்கான தொகை 30 இலட்சம் ரிங்கட் (இந்தியப் பண மதிப்பில் ரூ. 11.76 கோடி). கோவிலின் 95 சதவீதம் விதானம், ஸ்தூபிகள், தூண்கள், ஆகியவற்றுக்கான பத்து இலட்சம் வர்ணமயமான கண்ணாடித் துண்டுகள் தாய்லாந்து, ஜப்பான், பெல்ஜியம் ஆகிய நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டன.
ஜொகர் சுல்தான் 1922 இல் இதைக் கட்டுவதற்கான நிலத்தைக் கொடுத்தார். இந்தக் கோவில் 1996 இல் புனரமைக்கப்பட்டது. கோவில் முழுவதும் குளிர் சாதனம் செய்யப்பட்டது. ஒரே சமயத்தில் ஆயிரத்து ஐநூறு பக்தர்கள் தரிசிக்கலாம்.
ராஜ காளியம்மன் கோவிலில் சிவன், விஷ்ணு, பெரியாச்சி அம்மனுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. விநாயகர், முருகன், அம்பாள் என அனைத்து தெய்வங்களும் அமைக்கப்பட்டுள்ளன. எட்டு குருமார் துறவிகள் என சிலைகள் பல இரு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தமது மானசீக குருவாக யார் உளரோ, அவரையும் இங்கு தரிசிக்க ஏற்றவாறு அமைத்துள்ளார்கள். பகவான் இராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், சாயிபாபா, சுவாமி இராகவேந்திரர், இராமலிங்க அடிகள், இயேசு நாதர், புத்தர், நபிகள் மற்றும் துறவிகள் சிற்பங்களையும் கண்ணைக் கவரும் வடிவில் அமைத்திருப்பதாக ஆலய அறங்காவலர் குருஜி சின்னத்தம்பி குறிப்பிடுகிறார்.
பிரசித்தி பெற்ற ‘டைம்’ பத்திரிகை 2010 ஏப்ரல் 22 ஆம் திகதி இந்தக் கோவிலைப் பாராட்டி எழுதியுள்ளது. 1996 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகத்தில் திரளான மக்கள் கலந்துகொண்டு ஆதரவு அளித்தனர். ஆகம விதிப்படி தினசரி பூஜைகளும் திருவிழாக்களும் தவறாது நடைபெறுகின்றன. ஆஸ்தான குருவாக சின்னத்தம்பி விளங்குகிறார். இவர் நாள்தோறும் நடத்தும் ஆன்மீகப் பேச்சுக்களை ஏராளமான பக்தர்கள் வந்து கேட்டவண்ணம் உள்ளனர். தங்கள் சொந்தப் பிரச்சினைகளுக்கும் இவரிடம் தீர்வு பெற்றுச் செல்கின்றனர். 2001 ஆம் ஆண்டு ‘நயனயுதம் நல்வாழ்வுக் கழகம்’ என்னும் அமைப்பு நிறுவி கோவிலை நிர்வகித்து வருகிறார்.
ஆலயத்தை ஒட்டிய மூன்று மாடிக் கட்டடத்தில் இலவச சேவையாக சமயக் கல்வி, பாடசாலைக் கல்வி, கணனிக் கல்வியோடு தற்காப்புக் கலையும் சொல்லித் தருகிறார்.
இந்திய பாரம்பரியக் கலைகளான சங்கீதம், பரதம், தபேலா இவற்றோடு வேலைவாய்ப்பு மையம், தரும காரியங்கள், போட்டி நிகழ்ச்சிகள், பஜனை உலா ஆகியனவும் இங்கே இலவசமாக நடத்தப்படுகின்றன. கண்களுக்கு விருந்தாக வசீகரத் தன்மையுடன் கூடிய அருள் தரும் இராஜ காளி அம்மன் ஆலயம் கண்ணாடி பதிக்கப்பட்ட வேலைப்பாடுகளோடு அமைந்துள்ளது. இது மனதிற்கும் அமைதி தரவல்லதாக அமைந்திருப்பது வியப்புக்குரியது.
2008 ஆம் ஆண்டில் நேபாள அரசி இங்கு வருகை தந்தார். அவர் ஆலயத்தைக் கண்டு வியந்து சிவபெருமான் வீற்றிருக்கும் மண்டப விதானத்தில் பதிப்பதற்காக மிகவும் சக்தி வாய்ந்த மூன்று இலட்சம் உருத்திராட்ச மணிகளை நன்கொடையாக கொடுத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயமாகும்.
குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்புடையதாக ஆலயம் அமைந்திருத்தல் சாலச்சிறந்தது. அதன் சேவைகள் அறிவை, மனதை, உடலை வளப்படுத்துமானால் மனக்குறையின்றி மக்கள் வாழ்வது திண்ணம்.
இராஜகாளியம்மன் ஆலயத்தை அழகுற அமைத்த ஆலய விற்பன்னர்களுக்கும் ஆலயத்தை அமைக்கப் பாடுபட்டவர்க்கும் இராஜகாளியம்மன் அருளாசி என்றும் கிடைக்கும். நாமும் தரிசித்து அம்மன் அருள் பெறுவோம்.
திங்கள், 7 மே, 2012
அறநெறி அறிவுநொடி
9128) வித்தியாரம்பம் எப்போது செய்யலாம்?
விஜயதசமியில் அல்லது வேறு நல்ல நாளில்.
9129) வித்தியாரம்பம் செய்ய என்ன செய்ய வேண்டும்?
‘ஹாரி ஸ்ரீ கணபதியே. நம’ எனவும் குரு வாழ்க குருவே துணை’ எனவும் கூற செய்ய வேண்டும்.
9130) இவ்வாறு கூற செய்தபின் என்ன செய்ய வேண்டும்?
பின்னர் குருவை வணங்க செய்து, கணபதி, சரஸ்வதி தேவியை வணங்கி அரிசியில் அரி என்னும் எழுத்தை எழுத செய்ய வேண்டும்.
9131) காது குத்துதலை எவ்வாறு அழைப்பர்?
கர்ணபூஷணம்
9132) நல்ல விஷயங்களை செவியின் வழியே செலுத்த வேண்டும் தீய விஷயங்களை உள்ளே செலுத் தாமல் துளை வழியே வெளியே செலுத்த வேண் டும் இதனை உணர்த்துவதற்காக செய்யப்படும் சடங்கு என்ன?
காது குத்தல்
9134) பூணூல் என்னும் சடங்கு எத்தனை வயதில் நடத்தப்பட வேண்டும்?
ஏழு வயதில்
9135) பூணூல் அணிவிக்கும் சடங்கை என்னவென்று கூறுவார்கள்?
உபநயன கிரியை
9136) உபநயனகிரியை செய்யாதவர்களுக்கு என்ன செய்து வைக்க வேண்டும்?
தீட்சை
9137) குழந்தைகள் குருவுடன் இருந்து கல்வி பயிலும் காலம் எது?
குரு குலவாசம்
9138) குறிக்கோள் பகர்தலை என்னவென்று கூறுவர்?
சங்கற்பம்
9139) காலத்தையும் இடத்தையும் செயலையும் விளக்கி பிரார்த்திப்பதை என்னவென்பர்?
சங்கற்பம்
9140) உடம்பையும் உள்ளத்தையும் சுத்தி செய் வதன் பொருட்டு நடத்தப்படுகின்ற சடங்கு எது?
புண்யாவாசனம்
9141) புண்யாவாசனம் எவ்வாறு செய்யப்படும்?
தண்ணீரை (புனித நீராக சுத்தி செய்து) திருவருள் பெருக்காக கருதி மணமக்கள் மீது தெளிந்து அவர்களை புனிதமாக்க வேண்டும்.
9142) சிற்றின்ப வாழ்க்கையை வெறுத்து கடவுள் பணியை மேற்கொண்டு ஆன்மீக நெறியில் நிலை நிற்க வேண்டுமென தம்பதியினர் சங்கற்பம் ஏற்பதை குறிப்பது எது?
சஷ்டியப்த பூர்த்தி
9143) சஷ்டியப்த பூர்த்தியை வேறு எவ்வாறு அழைப்பர்?
அறுபதாம் ஆண்டு நிறைவு விழா
9143) எண்பது அல்லது எண்பத்து நான்காவது ஆண்டில் செய்யும் சடங்கு எது?
சதாபிஷேகம்
9144) எண்பது வயதிற்கு மேல் வாழ்ந்தவர்களை என்ன வென்று கூறுவார்கள்?
ஆயிரம் பிறை கண்டவர்கள்
9145) மனிதன் இறந்தபின் அவரது புத்திரர்கள் செய்யும் கிரியை எது?
அபரக்கிரியை
9146) அபரக் கிரியை எதற்காக செய்யப்படுகிறது?
ஆன்மா நலம் அடைதற்பொருட்டு
9147) புத்திரன் என்பதன் அர்த்தம் என்ன?
பத்தென்னும் நகரத்தில் தந்தை விழாமல் கரையேற்றுபவன்.
திங்கள், 30 ஏப்ரல், 2012
அறநெறி அறிவு நொடி
கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
சடங்குகள்
9113) மனித பிறவியில் எத்தனை கட்டமாக கிரியை செய்கின்றனர்?
மூன்று
9114) அந்த மூன்று கட்டங்களையும் தருக?
பிறப்பிற்கு முன், பிறந்த பின், இறந்த பின்
9115) பிறப்பிற்கு முன், பிறந்த பின், இறந்த பின் என நடத்தப்படும் சடங்குகளை என்னவென்பர்?
கிரியை
9116) பெண் கருவுற்ற மூன்று மாதத்தில் செய்யப்படும் சடங்கு என்ன?
பும்ஸவனம்
9117) கருவில் இருக்கும் சிசுக்கு எந்த ஊறும் உண்டாகாதவாறு இறைவனை பிரார்த்திக்கும் சடங்கு எது?
பும்ஸவனம்
9118) கருவுற்ற பெண்ணுக்கு நான்கு அல்லது எட்டாவது மாதத்தில் செய்யும் சடங்கு என்ன?
சீமந்தம்
9119) குழந்தையின் நலன் பொருட்டு சில தேவர்களை வேண்டி செய்யப்படும் சடங்கு என்ன?
சீமந்தம்
9120) இந்த சீமந்த சடங்கு தற்போது என்னவாக நடத்தப்படுகிறது?
வளைகாப்பு
9121) குழந்தை பிறந்தவுடன் செய்யப்படும் சடங்கு என்ன?
ஜாதகர்மம்
9122) இதன்போது என்ன செய்யப்படும்?
தேனும் நெய்யும் கலந்து தேவதைகளுக்கு நிவேதிப்பர்.
9123) குழந்தைக்கு நீண்ட ஆயுள், புத்தி கொடுக்க பிரார்த்திக்கும் கிரியை எது?
ஜாதிகாமம்
9124) குழந்தைக்கு தந்தை வழியிலோ அல்லது தாய் மரபிலோ இறைவன் திருநாமத்தையோ பெயராக சூட்டி மகிழும் நிகழ்ச்சியை என்னவென்பர்?
நாமகரணம்
9125 முதல் முறையாக குழந்தையை வீட்டை விட்டு வெளியில் கொண்டு வரும் பொருட்டு, குழந்தையின் யாத்திரைகள் அனைத்தும் மங்களமாக இருக்கச் செய்யும் கிரியை எது?
நிஷக்ராமணம்
9126) ஆறு மாதத்தில் சோறும் நெய்யும் தயிரும் தேனும் கொடுத்து குழந்தை நீண்டு வாழ பிரார்த்திப்பதை என்னவென்பர்?
அன்னப்பிராசனம்
9127) பள்ளியில் சேர்க்கும் நாளில் செய்யப்படும் சடங்கு என்ன?
வித்தியாரம்பம்
அறநெறி அறிவுநொடி
கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
சடங்குகள்
9113) மனித பிறவியில் எத்தனை கட்டமாக கிரியை செய்கின்றனர்?
மூன்று
9114) அந்த மூன்று கட்டங்களையும் தருக?
பிறப்பிற்கு முன், பிறந்த பின், இறந்த பின்
9115) பிறப்பிற்கு முன், பிறந்த பின், இறந்த பின் என நடத்தப்படும் சடங்குகளை என்னவென்பர்?
கிரியை
9116) பெண் கருவுற்ற மூன்று மாதத்தில் செய்யப்படும் சடங்கு என்ன?
பும்ஸவனம்
9117) கருவில் இருக்கும் சிசுக்கு எந்த ஊறும் உண்டாகாதவாறு இறைவனை பிரார்த்திக்கும் சடங்கு எது?
பும்ஸவனம்
9118) கருவுற்ற பெண்ணுக்கு நான்கு அல்லது எட்டாவது மாதத்தில் செய்யும் சடங்கு என்ன?
சீமந்தம்
9119) குழந்தையின் நலன் பொருட்டு சில தேவர்களை வேண்டி செய்யப்படும் சடங்கு என்ன?
சீமந்தம்
9120) இந்த சீமந்த சடங்கு தற்போது என்னவாக நடத்தப்படுகிறது?
வளைகாப்பு
9121) குழந்தை பிறந்தவுடன் செய்யப்படும் சடங்கு என்ன?
ஜாதகர்மம்
9122) இதன்போது என்ன செய்யப்படும்?
தேனும் நெய்யும் கலந்து தேவதைகளுக்கு நிவேதிப்பர்.
9123) குழந்தைக்கு நீண்ட ஆயுள், புத்தி கொடுக்க பிரார்த்திக்கும் கிரியை எது?
ஜாதிகாமம்
9124) குழந்தைக்கு தந்தை வழியிலோ அல்லது தாய் மரபிலோ இறைவன் திருநாமத்தையோ பெயராக சூட்டி மகிழும் நிகழ்ச்சியை என்னவென்பர்?
நாமகரணம்
9125 முதல் முறையாக குழந்தையை வீட்டை விட்டு வெளியில் கொண்டு வரும் பொருட்டு, குழந்தையின் யாத்திரைகள் அனைத்தும் மங்களமாக இருக்கச் செய்யும் கிரியை எது?
நிஷக்ராமணம்
9126) ஆறு மாதத்தில் சோறும் நெய்யும் தயிரும் தேனும் கொடுத்து குழந்தை நீண்டு வாழ பிரார்த்திப்பதை என்னவென்பர்?
அன்னப்பிராசனம்
9127) பள்ளியில் சேர்க்கும் நாளில் செய்யப்படும் சடங்கு என்ன?
வித்தியாரம்பம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...