திங்கள், 10 ஜூன், 2013

கே.ஈஸ்வரலிங்கம்

10093) சிவபெருமானின் பஞ்ச குமாரர்கள் யார்? யார்? கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார், பைரவர் 10094) பைரவர் என்பது எந்த மொழி சொல்? வடமொழிச் சொல் 10095) பைரவர் என்பதற்குரிய பொருள் என்ன? மிகவும் பயங்கரமானவர் 10096) பைரவருக்கு இந்த பெயர் எவ்வாறு ஏற்பட்டது? எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கு பைவர் என்பது பெயராயிற்று 10097) பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் எது? நள்ளிரவாகும் 10098) பைரவரின் வாகனம் எது? நாய் 10099) சனிபகவானுக்கு குரு யார்? பைரவர் 10100) கோயிலுக்குச் செல்வது ஏன்? கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். ஆத்திகமோ, நாத்திகமோ அவரவர் இஷ்டம். ஆனால் யாராயிருந்தாலும் கோயிலுக்குப் போனால் பலனுண்டு என்பதற்கு அறிவியல் காரணம் உண்டு. ஆகமவிதிப்படி கட்டிய கோயில்களில் ஓம் என்ற பிரணவ மந்திரம் காற்று மண்டலத்தில் அதிர்வுறும் விதத்தில் அமைந்திருக்கும் ஒவ்வொரு அணுவிலும் அந்த மந்திர ஒலி பெரிய அளவில் கலந்திருக்கும் கருவறையில் இருக்கும் விகரஹத்திற்கு ஆறுகால பூஜையும், அபிஷேகமும் நடத்தும் போது காற்று மண்டலத்தில் எதிர்மின்னோட்டம் அதிகரிப்பதோடு காற்றுமண்டலம் ஈரப்பதம் அடைகிறது. இந்த மின்னோட்டம் பிராணவாயுவுடன் கலக்கிறது. அதை சுவாசிக்கும் போது இதயத்துடிப்பு சீராகி ஆரோக்கியம் மேம்படுகிறது. இயற்கை வளம் மிக்க ஆறு, மலை, கடல், அருவி, வனம், சோலை ஆகிய பகுதிகளில் எதிர் மின்னோட்டம் அதிகமாக இருப்பதால்தான், அங்கு செல்லும் போது நமக்கு புத்துணர்வு உண்டாகிறது. அங்கு தரப்படும் பிரசாதம் மூலம், உடலுக்கு சக்தி கிடைக்கிறது. இதை அனுசரித்துத்தான் ஒளவைப்பாட்டி ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று அழகாகச் சொல்லி வைத்தாள். 10102) சுவாமிக்கு சாத்திய வஸ்திரத்தை பக்தர்கள் அணியலாமா? சுவாமிக்கு சாத்த வேண்டும் என பக்தர்கள் காணிக்கையாக வஸ்திரம் வாங்கிக் கொடுக்கிறார்கள். இதுவே கூடுதலாக சேர்ந்து விடுகிற பொழுது வீணடிக்காமல் இருக்க ஏலத்தில் விடுகிறார்கள். இதன் மூலம் மூன்று வழிகளில் பயன்கிடைக்கிறது. பக்தர்களின் வஸ்திர காணிக்கை நிறைவேறுகிறது. ஏலத்தின் மூலம் கோயில் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. வஸ்திரங்கள் வீணாகாமல் மற்றவர்கள் உபயோகிக்கவும் முடிகிறது. சுவாமிக்குப் படைக்கப்படும் நிவேதன பிரசாதத்தை உண்பது போல சுவாமிக்கென பக்தியோடு அணிவிக்கும் வஸ்திரங்களையும் உபயோகிக்கலாம். 10102) கோயிலில் செய்யக் கூடாதவை எவை? கோயிலில் இருக்கும் மரங்களிலிருந்து இலைகளையோ, பூக்களையோ வீட்டு வழிபாட்டிற்கோ, ஆத்மார்த்த பூஜைக்கோ பயன்படுத்தக் கூடாது, சுவாமிகளுக்கு அபிஷேகம், நிவேதனம் நடக்கும்போது வீழ்ந்து வணங்கக் கூடாது, பிறருடைய அன்னத்தைப் புசித்த தினத்தில் ஆலயத்தில் வந்து சேவிப்பது, முதல் அபச்சாரம் பிறர் பொருளைக் கொண்டு சுவாமிக்கு நிவேதனம் செய்யக் கூடாது, வீட்டில் செய்துவரும் நித்திய பூஜையை நிறுத்திவிட்டு ஆலயம் செல்லலாகாது, ஒருவரைக் கெடுப்பதற்காகக் கோயிலுக்குச் செல்வதோ, அர்ச்சனை, அபிஷேகம் நடத்துவதோ அபச்சாரமாகும், பூஜை செய்யும்பொழுது பிறருடன் பேசுவது தவறு, இருட்டில் பகவானை வணங்குதல் ஆகாது, இருட்டில் பூஜை செய்யவும் கூடாது, குளிக்காமலோ, கால் கழுவாமலோ, பாதுகையுடனோ ஆலயம் செல்வது குற்றம், ஏதேனும் பழம், தேங்காய், புஷ்பம் முதலியவை இல்லாமல் கோயிலுக்குச் செல்லக் கூடாது, சாஸ்திரம் கூறாத இடத்தில் நமஸ்காரம் செய்தால் மற்ற மூர்த்திகளுக்கு எதிரில் காலை நீட்டிய குற்றம் உண்டாகும், கோபத்துடன் ஆலயம் செல்வது கூடாது, முறைப்படி ஸ்நானம் செய்யாமலோ, முறைப்படி வஸ்திரம் அணியாமலோ, நெற்றிக்கு அணியாமலோ செல்வது குற்றமாகும். பொதுவாகவே வீட்டில் புசித்து விட்டு அதன் பிறகு ஆலயம் போகலாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812