திங்கள், 24 ஜூன், 2013
இஷ்ட தெய்வம் எதுவானாலும் நம் கஷ்டத்தைப் போக்கும் முதல் தெய்வம்
இஷ்ட தெய்வம் எதுவானாலும் நம் கஷ்டத்தைப் போக்கும் முதல் தெய்வம்
எதற்கெடுத்தாலும் டென்ஷன்-டென்ஷன் என்கிறோமே, எனக்கு தெரிந்து டென்ஷன் ஆகாத தெய்வம் விநாயகர் மட்டும்தான். அன்பே சிவம் என்றாலும் சிவபெருமான் கோபக்காரர்.
காக்கும் கடவுள் என்று மகா விஷ்ணுவை சொன்னாலும், அவதாரம் எடுத்து வந்து அழிப்பார். முருகப்பெருமான் யுத்த கடவுள் இப்படி எந்த கடவுளை நீங்கள் கவனித்தாலும் அவர்கள் ஒருவிதத்தில் கோபம்கொண்டவர்கள்தான்.
ஆனால் விநாயகப்பெருமான் ‘டேக் இட் ஈசி’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதுபோல, எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார். அவருக்கும் கோபம் வரும். ஆனால் அதை அவர் கோபமாக செய்யமாட்டார். வேடிக்கையாக செய்து முடிப்பார்.
எதை எப்படி செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். நமக்கெல்லாம் தெரிந்த ‘ஞானப் பழம்’ கதை சம்பவமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு இப்படி நிறைய இருக்கிறது.
ஔவையின் வாழ்க்கையில் இப்படித்தான் ஒரு சம்பவம் அது 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர். தம் பூலோக கடமை முடிந்து கைலாயம் புறப்படுகிறார்.
அவரின் நண்பரான சேரமான் பெருமானும் உடன் வர, சுந்தரர் இறைவன் அனுப்பிய வெள்ளை யானையிலும், சேரமான் பெருமான் குதிரையிலும் ஆகாய மார்க்கமாக புறப்பட்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த சமயம் விநாயகர் வழிப்பாட்டில் இருந்த ஔவைக்கு இந்த காட்சி தெரிகிறது.
உடனே சிவப்பெருமானை காண சுந்தரரையும், சேரமான் பெருமானையும் பின்தொடர்ந்து கைலாயம் அடைய வேண்டும் என்கிற விருப்பத்தால், விநாயகர் வழிப்பாட்டை அவசர அவசரமாக செய்கிறார். ஔவை. இதனை உணர்ந்த விநாயகப் பெருமான், ‘ஔவையே... பதறாதே. நான் இருக்கிறேன் அல்லவா நீ அமைதியாக பூஜை செய்’ என்றார்.
ஔவை தன் தவறை உணர்ந்து விநாயகரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் முறையாக வழிப்பாட்டை தொடங்கி செய்து நிறைவு செய்கிறார். விநாயகப் பெருமானும் ஔவைக்கு தந்த வாக்குக்கு ஏற்ப, கைலாயத்தை சுந்தரரும், சேரமான் பெருமானும் அடைவதற்கு முன்னதாகவே, சிவபெருமான் அன்னை பார்வதியின் முன்பாக ஔவையை அழைத்து வந்து சேர்க்கிறார் விநாயகப் பெருமான்.
ஔவை சிவபார்வதியை வணங்குகிறார் பிறகு சுந்தரரரையும் சேரமான் பெருமானையும் வரவேற்கிறார்.
ஔவை தங்களுக்கு முன்னதாகவே சிவகைலாயத்தில் ஔவை நிற்பதை கண்ட சுந்தரரும் - சேரமான் பெருமானும் இது விநாயகப் பெருமானின் திருவருள் என்று வியந்து போற்றுகிறார்கள்.
இப்படியாக நமக்கு இஷ்ட தெய்வம் எதுவானாலும் நம் கஷ்டத்தை தீர்க்கும் முதல் தெய்வம் விநாயகப் பெருமான்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக