திங்கள், 3 ஜூன், 2013
(ஆகாயம்)
கே.ஈஸ்வரலிங்கம்
10076) பஞ்ச பூதங்களும் எவை? நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
10077) இந்த ஐந்து இயற்கை பூதங்களையும் எவ்வாறு அழைப்பர்?
மஹா பூதங்கள்
10078) இந்த பஞ்ச பூதங்களில் வீட்டில் இருக்க §ண்டிய பூதங்கள் எவை?
பஞ்ச பூதங்களும்
10079) பஞ்ச பூதங்களும் வீட்டில் இருப்பதால் ஏற்படும் நன்மை என்ன?
நல்லவை செய்யும் சக்தி வீடெங்கும் பெருகி அதிர்வு அலைகள் அருளும்.
10080) நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கு பூதங்களும் தடையின்றி வழங்குவதற்கு உதவும் பூதம் எது? ஆகாயம்
10081) மனிதனின் கேட்கும் திறமை எதைப் பொறுத்து உள்ளது? ஆகாயத்தை
10082) வீடு எப்படிப்பட்ட இடமாக இருக்க வேண்டும்?
இனிய மென்மையாக ஒலிக்கின்ற அமைதியான இடமாக இருக்க வேண்டும்.
10083) வீட்டின் எந்த திசையில் ஆகாயம் ஆட்சி புரிகிறது? வடகிழக்கு
10084) நன்மைகளை ஊக்குவிக்கும் கொஸ்மிக் கதிர்கள் வீட்டில் ஊடுருவ வடகிழக்கு பாகம் எவ்வாறானதாக இருக்க வேண்டும்?
திறந்த நிலையில் விசாலமாக இருக்க வேண்டும்.
10085) நிம்மதியாக தன்னைத்தானே அறிந்துகொள்வதற்கு வீட்டின் எந்த திசை சிறந்தது?
வடக்கு
10086) தியானம், யோகா செய்வதற்கு வீட்டின் எந்தத் திசை சிறந்தது? வடகிழக்கு
10087) கல்வி, நற்காரியங்கள் செய்வதற்கும் வீட்டின் ஏற்ற திசை எது? வட கிழக்கு
(வாயு)
10088) வாயு அல்லது காற்று புருஷாவின் மூச்சு பஞ்சபூதங்களில் எந்த பூதத்துடன் கூட்டுறவு கொண்டது? அக்னியுடன்
10089) இவ்வாறு கூட்டுறவு கொண்டதற்கு காரணம் என்ன?
காற்று நெருப்பை ஊக்குவிக்கும் என்பதாலாகும்
10090) வாயு, அக்னி ஆகிய இரண்டு பூதங்களுடைய குணம் என்ன?
சதா அசைந்து கொண்டிருப்பது
10091) இது மனிதனால் எவ்வாறு அறியப்படுகிறது? தொடும் உணர்வினால்
10092) வீட்டின் வட மேற்கு பகுதியின் ஸ்தானதிபதி எது?
ஈரப்படாத காற்று அல்லது தண்ணீர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக