திங்கள், 16 டிசம்பர், 2013
திருநீறு
கே. ஈஸ்வரலிங்கம்
10473) திருநீறு என்பது என்ன?
திருநீறு சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம்.
10474) திருநீறு வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
விபூதி, ஐசுவரியம் என்றும் கூறப்படும்.
10475) திருநீறு உணர்த்தும் தத்துவம் என்ன?
எத்தகையினராக இருந்தாலும் மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவார் எனும் தத்துவத்தை இது உணர்த்துகிறது.
10476) மனித உடலில் மிக அதிகமாக சக்தி வெளிப்படும் பாகம் எது?
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கி யமான பாகம்.அதன் வழியாக மிக அதிகமாக சக்தி வெளிப்படும். அதேபோல் உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸ்தானம் ஆகும்.
10477) திருநீறு அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
திருநீறு அணிவதால் தடையற்ற இறை சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல் வாக்கு, நல்லோர் நட்பு போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலமும் இரத்த ஓட்டமும் சீர்படும்.
10478) நெற்றியில் திருநீறு பூசுவது ஏன்?
சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழி யாக கடத்தும் வேலையை திருநீறு செவ்வனே செய்யும். அதனால் தான் நெற்றியில் திருநீறு பூசு கிறார்கள். இதனால்தான் ‘நீறில்லா நெற்றி பாழ்’ என்பார்கள்.
10479) சைவ சமய மக்களுக்கு மிக முக்கியமான மூன்றும் எவை?
சைவ சமய பெருமக்களுக்கு திருநீறு, உருத் திராட்சம், ஐந்தெழுத்து ஆகிய மூன்றும் மிகவும் இன்றியமை யாதவையாகும்.
10480) விபூதி என்பது என்ன?
பசுவின் சாணத்தை எடுத்து அத னை சுட்டு சாம்பலாக்கிய பஸ்மமே சுத்தமான விபூதி ஆகும்.
10481 விபூதி தரிப்பதால் விளை யும் வேறு நன்மைகள் என்ன?
விபூதி தரிப்பதால ஆன்மீக
சம்பந்தமான நன்மைகள் விளை வதுடன், உடல் நலம் சார்ந்த நன்மைகளும் உண்டா கும் என்பது சான்றோர்களின் கருத்தாகும். திருநீறு கிருமிநாசினி யும் கூட. அதனை உடல் முழுவதிலும் பூசுவதால் உடலில் உள்ள துர்நாற்றம் மறையும் என இயற்கை மருத்துவம் கூறு கிறது. நெற்றியில் தரிப்பதனால் தலைக்குள் கோர் க்கும் நீரினை திருநீறு வெளியேற்றுகிறது.
10481) திருநீறின் பெருமையை பாடியவர் யார்?
திருஞானசம்பந்தர்
10482) திருநீறின் பெருமையை திருஞான சம்பந்தர் எந்த பதிகத்தில் பாடினார்?
தனது மந்திரமாவது நீறு எனத் தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.
10483) திருநீறு அணியும் போது கூற வேண்டிய மந்திரம் எது?
சிவாயநம, நமசிவாய, சிவ சிவ என்ற ஏதாவ தொரு பஞ்சாட்சர மந்திரம்
10484) திருநீறை எவ்வாறு அணிய வேண்டும்?
பஞ்சாட்சர மந்திரத்தை செபித்தபடி நெற்றி முழுவதும் அல்லது திரிபுண்டரிகமாக (3 கோடு களாக) திருநீற்றினை அணிதல் வேண்டும்.
10485) திரிபுண்டரிகமாக திருநீற்றினை அணிய பயன்படும் விரல்கள் மூன்றும் எவை?
ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய விரல்களை உபயோகிக்க வேண்டும்,
10486) திருநீறை எந்த திசையை நோக்கியபடி அணிதல் வேண்டும்.
முகமாக அல்லது வடக்கு முகமாக நோக்கியபடியே அணிதல் வேண்டும். உடலுக்கும் உயிரிற்கும் இம்மை யிற்கும் மறுமைக்கும் உயர்வளிக்கும் விபூதியினை தினமும் நாமும் அணிந்து உயர்வடைவோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக