செவ்வாய், 3 டிசம்பர், 2013

கே. ஈஸ்வரலிங்கம்

(10440) இரவில் உணவில் சேர்க்கக் கூடாதவை யாவை? இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் (10441) உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் சாதத்தைப் பரிமாறலாமா? கூடாது. (10442) முதலில் என்ன பரிமாற வேண்டும்? காய்கறிகளையோ, அப்பளத்தையோ அல்லது உப்பையோ பரிமாறலாம். மூக்குத்தி (10443) மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் ஏற்படும் நன்மைகள் எவை? உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. (10444) தங்கத்துக்கு உள்ள ஆற்றல்கள் என்ன? உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கக்கூடிய ஆற்றல் உண்டு. (10445) ஏன் பெண்கள் மட்டும் மூக்குக் குத்திக்கொள்கிறார்கள்? ஆண்களின் மூச்சுக் காற்றைவிட பெண்களின் மூச்சுக் காற்றுக்கே சக்தி அதிகம் என்பதால் (10446) மூக்குக் குத்துவதால் உண்டான வேறு நன்மைகள் யாவை? சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்த ரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத் தடுமாற்றம் போன்றவற் றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. பொது (10447) விளக்கேற்றிய பின் தலை வாரக்கூடாது என்பது ஏன்? மாலைநேரம் வழிபாட்டிற்குரிய நேரம். விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பாள் என்பது ஐதீகம். அந்தச் சமயத்தில் பெண்கள் விரித்த கூந்தலுடன் நிற்பது நல்லதல்ல. எனவே விளக்கு வைப்பதற்கு முன் மாலை 5.30 மணிக்குள் தலைவாரி, பூ வைத்து, நெற்றியில் திலகமிட்டுக் கொள் வது சிறப்பைத் தருமென்பது சான்றோர் வாக்கு. (10448) கோயில்களில் மணி அடிப்பது எதற்காக? மணிச் சத்தம் அதிம்ம் போது ‘ஓம்’ என்ற பிரணவம் எழுகிறது. ஆத்மார்த்த சிந்தனையுடன் இறைவனுடன் கருத் தொருமித்துக் கேட்டால் இந்த நாதத் தைக் கேட்கலாம். இதற்கு ‘எல்லாம் நானே’ என்பது பொருள். இருப்பவை யாவும் இறைவனே என்ற பொருளை உணர்த்து வதே மணியோசை. (10449) திருமணமான பெண்களை ‘திருமதி’ என அழைப்பது ஏன்? திருமணத்திற்கு முன் ஆண்கள் பொறுப்பற்றவர்களாக வீண் செலவுகள் செய்பவர்களாக இருப்பார்கள். திருமணத்தின் பின் அவள் அவர்களைத் திருத்திவிடுகிறாள். கணவனின் வரம்புமீறிய செலவுகளைக் குறைத்து வீட்டில் செல்வம் நிறைய முயற்சி செய்கிறாள். இல்லத்தில் லட்சுமிகடாட்சம் ஏற்படுகிறது. இவ்வாறு திருவையும் மதியையும் இணைத்து அவள் திருமதி என அறியப்படுகிறாள். (10450) கோயிலுக்குச் சென்றால் நேராக வீட்டுக்குத் தான் வரவேண்டுமென்பது ஏன்? நாம் கோயிலுக்குச் சென்று மனத்தின் மாசுக்களைப் போக்கி மாசற்றவராகத் திரும்பி வருவதால் நமது புனிதத் தன்மை பாதிப்பிற்குள்ளாகாத இடங்களுக்குச் செல்வது தவறில்லை. ஆலயத்திற்குச் செல்லும் முன் ஆண்ட வனுக்குப் படைக்கப்படுகின்றனவற்றை ஏந்திச் செல்வதால் அப்போதும் இதே ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதே நன்மை பயக்கும். (10451) புதுமனைகளின் திருஷ்டி பூசணிக்காய் தொங்க விடுவதன் நோக்கம் என்ன? கண்ணூறு கழித்தல் என்பது எமது பண்டைய மரபு. ஒருவர் நம்மைப் பொறாமையோடு பார்த்தால் நமது மனநலமும் உல்நலமும் பாதிக்கப்படுகின்றனவென்பது விஞ்ஞானபூர்வமான உண்மை. திருஷ்டிதோஷம் என்பது இதுவே, இவ்வளவு அழகாக வீடு கட்டியுள்ளார்களே என யாராவது பொறாமையோடு பார்த்தால் திருஷ்டிதோஷம் ஏற்படும். தொங்கவிடப்படும் பூசணிக்காயும் அதில் வரையப்பட்டிருக்கும் வடிவமும் பார்ப்போர் கவனத்தைத் திசைதிருப்பும் புது வீட்டை முழுமையாகப் பார்ப்பதிலி ருந்து அவரது கவனம் சிதறும். இதன் காரணமாக திருஷ்டி தோஷம் குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...