வியாழன், 18 டிசம்பர், 2014
சாஸ்திரங்கள்
கே. ஈஸ்வரலிங்கம்
111144) என்றால் என்ன?
சாஸ்திரங்கள் என்பது நெறிமுறைகள், மனித குலம் மட்டுமன்றி ஜீவனுள்ள மற்றும் ஜீவனற்ற காணப்படும் அனைத்து தத்துவங்களின் ஒழுங்கான செயல்பாடுகள் பற்றித் தெரிவிப்பது.
இவற்றில் ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது உயிரினம் இந்தந்த நிலையில் இவற்றை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதை பெரும்பாலும் நேரடியாகக் குறிப்பிட மாட்டா. பல எடுத்துக்காட்டுக்கள் மூலம் ஒழுங்கற்ற தன்மையும், ஒழுங்கான தன்மையும் காண்பிக்கப்படும்.
ஒழுக்கத்தின் மேன்மையும், ஒழுங்கற்ற தன்மையின் கீழ்மையும் உதாரணங்களால் விளக்கப்பட்டிருக்கும்.
தர்ம சாஸ்திரம் என்ற ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மனிதனுக்கான தர்ம நெறிமுறைகள் நேரிடையாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
111145 சாப்பிட்ட பின்பு குளிக்கலாமா?
காலையில் எழுந்ததும் காலைக்கடன்கள் முடித்து, குளித்த பின்பே சாப்பிட வேண்டும். எக்காரணத்திற்காகவும், சாப்பிட்ட பின்பு குளிக்க வே கூடாது. சாப்பிட்ட உணவு செரிப்பதற்கு வெப்பம் அவசியம் தேவை. சாப்பிட்ட பின்பு குளித்தால் உடலின் வெப்பம் குறைந்து விடும். எனவே செரிப்பதற்கு நேரமாகும். வயிற்றிலும் வீண் தொல்லை ஏற்படும். காலப்போக்கில் பசியும் எடுக்காது. இதனால் தான் குளிக்கும் முன்பு சாப்பிடக்கூடாது என்பர். இதையே பெரியோர் குளிக்கும் முன் சாப்பிட்டால் போஜனம் கிடைக்காது எனவும் சொல்லி வைத்தனர்.
111146) மரணப்படுக்கையில் தண்ணீர் கொடுப்பது ஏன்?
குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்த போது பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு வரமளித்தார். எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ அப்போது மரணமடைவார் என்பதே அது. பத்தாம் நாள் போர் அன்று பீஷ்மர் பாண்டவர் படைக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தினார். அப்போது அவருக்குத் தான் செய்யும் செயலில் சலிப்பு ஏற்பட்டது. உடன் தான் இறக்க நினைத்தார்.
அவரின் நிலையை அறிந்த அர்ச்சுணன் தேரின் முன்னால் சிகண்டியை நிறுத்தி விட்டு பீஷ்மர் மேல் அம்பெய்தினான். சிகண்டி முன் போர் புரிய விரும்பாத பீஷ்மர் அமைதியாயிருந்தார்.
அர்ச்சுணனின் அம்புகள் அவரது உடலைத் துளைத்தன. உத்திராயன காலத்தில் இறக்க விரும்பிய பீஷ்மர் அம்புப்படுக்கையில் இருந்தார்.
அவரைத் தரிசிக்கவும் ஆசி பெறவும் பல அரசர்களும் வீரர்களும் வந்தனர். உடலில் காயங்களுடன் படுத்த படுக்கையாக இருந்த பீஷ்மர் இதனால் மிகவும் களைப்படைந்தார். தாகம் ஏற்படவே அருந்தத் தண்ணீ கோட்டார். துரியோதனனும் கர்ணனும் நறுமணம் மிக்க இனிய பானங்களைக் கொண்டு வந்தும் அதை அருந்தவில்லை.
அர்ச்சுணனை நோக்கி, சாத்திரங்கள் கூறும் வழியில் எனக்கு தண்ணீர் தருவாயாக என்றார். அர்ச்சுணன் தன் காண்டீபத்தை நாணேற்றி பீஷ்மரின் தலைக்கருகே ஏவினான். உடனே பூமி பிளந்து பீஷ்மரின் தாயான கங்கை நீர் ஊற்றாகப் புறப்பட்டு நேராக பீஷ்மரின் வாயின் அருகில் பாய்ந்தது. பீஷ்மரும் அதைப் பருகித் தாகம் தணித்தார்.
மங்காத புகழ் பெற்ற பீஷ்மருக்கு மரணப் படுக்கையில் ஏற்பட்ட தாகம். கங்கையான அவளது தாயால் தணிந்தது. இதனால்தான் இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவருக்குக் கங்கை எனும் நீர் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக