ஞாயிறு, 28 டிசம்பர், 2014
சின்முத்திரை விளக்கம்!
அமர்ந்த நிலையில் இருக்கும் சுவாமி ஐயப்பனின் வலது கரத்தை கவனித்தால் ஓர் அடையாளம் காட்டி கொண்டிருப்பார். கட்டைவிரலோடு ஆள்காட்டி விரல் இணைந்து ஒரு வளையத்தை ஏற்படுத்த, மற்ற மூன்று விரல்களும் நிமிர்ந்து நிற்கும். கட்டை விரல் கடவுள். சுவாமி ஐயப்பன் ஆள்காட்டி விரல் ஆன்மா. அதாவது, ஆன்மாவை தாங்கி கொண்டிருக்கின்ற மனிதன், ஏதாவது ஒரு பிறவியில் ஆன்மாவாகிய ஆண்டவனை சென்று அடைய வேண்டும். ஆனால், ஆள்காட்டி விரல் குறிக்கும் ஆன்மா மற்ற மூன்று விரல்களோடு சேர்ந்து கொண்டு நிமிர்ந்து நிற்கிறது. நடுவிரல் மற்றும் மோதி விரல் விவரத்தை பார்ப்போம்.
ஆணவம் : நடுவிரல் என்று சொல்லக்கூடிய உயரமான விரல் ஆணவம் என்று அழைக்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் ஈகோ என்று சொல்லப்படுகிறது. இதுதான் ஆண்டவனை நாம் அடையவிடாமல் தடுப்பது மட்டுமல்ல, மற்ற எல்லா பிரச்னைகளுக்கும் காரணமாக அமைகிறது.
கன்மம் : மோதிரவிரல் கன்மம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, இந்த பிறவி தமது வாழ்க்கை, போன பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு தக்கபடி அமையும். அதுவே தலைவிதியாகவும் அமைகிறது. இதை மாற்ற வேண்டுமென்றால் இறைவன் அருள் வேண்டும்.
மாயை : பொய்யை உடனே நம்பி விடுகிறோம். உண்மையை நம்ப நிறைய யோசிக்க வேண்டும். மாயத்தோற்றங்கள் நம்மை மயக்கி ஏமாற்றிவிடும். போலி கம்பெனிகளும், போலி சாமியார்களும் உருவாவது இதனால்தான். நாம் இறைவனை அடைய வேண்டும் என்றால் இந்த மூன்று அழுக்குகளும் நீங்க வேண்டும். இதைத்தான் ஐயப்பனின் சின்முத்திரை காட்டுகிறது.
விரதம் இருப்பதன் நோக்கம்!
ஆணவம், கன்மம், மாயை ஆகிய அழுக்குகளை நீக்க வேண்டும் என்றால் விரதம் இருக்க வேண்டும். ஆடம்பர வாழ்க்கையை அகற்ற வேண்டும். எளிய உடை உடுத்த வேண்டும். எளிய உணவுகளை உண்ண வேண்டும். காலில் செருப்பு அணியாமல் நடக்க வேண்டும். தன்னை அழகுப்படுத்தி கொள்ள கூடாது. கோபம் கொள்ளக்கூடாது. யாரையும் மரியாதையாக நடத்த வேண்டும். ஆதலால்தான் மேல்அதிகாரி பியூனை பார்த்து சாமி என்றும், பியூன் மேல் அதிகாரியை சாமி என்றும் அழைக்கும் சமநிலை ஏற்படுவதை பார்க்கிறோம்.
துளசி மாலை ஏன்?
விரத காலத்தில் ஐம்புலன்களையும் அடக்கும் அனுபவத்தை பெற வேண்டும். இல்லறத்தில் இருந்தாலும் இல்லற வாழ்வில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். ருத்திராட்சை மாலை அல்லது துளசி மாலை அணிந்து கொள்வது அதற்காகத்தான். இவை துறவு உணர்வை ஏற்படுத்தி புலனடக்கத்திற்கு உதவி செய்யும்.
காவி ரகசியம்!
ஐயப்பருக்கு மாலை அணிவித்து விரதம் இருக்கும் காலத்தில் காவி உடை அல்லது கருப்பு உடை அணிவது வழக்கம். துறவு உணர்வு மேம்படுத்த இது உதவும். ஏழை, பணக்காரன் என்ற பேதத்தை போக்கி ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சமம் என்ற உணர்வை ஏற்படுத்தும். மற்றவர்கள் நம்மை எதிர்படும்போது நம்மை அடையாளம் கண்டு பக்தியோடு பழக வழி செய்யும். மலைப்பகுதியில் பயணம் செய்வதால் காட்டு விலங்குகள் இந்த உடையை கண்டு விலகி போகுமாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக