வியாழன், 18 டிசம்பர், 2014
கொடிமரம்
கே. ஈஸ்வரலிங்கம்
111112) கொடி மரம் யாரைக் குறிக்கும்?
சிவபெருமானை
111113) கொடிக்கயிறு யாரைக் குறிக்கும்?
திருவருட் சக்தியை
111114) கொடுத்துணி யாரைக் குறிக்கும்?
ஆன்மாவை
111115) தர்ப்பைக் கயிறு எதனைக் குறிக்கும்?
பாசத்தை
111116) கொடியேற்றம் நிகழ்வு எதனை உணர்த்துகிறது?
மும்மல வயப்படும் ஆன்மா, திருவருட் சக்தியினாலே பாசம் அற்று சிவஞான வடிவமாகிய பதியின் திருவடி என்னும் தத்துவத்தை
111117) பத்ரபீடம் என அழைப்பது எதனை?
கொடி மரத்தின் பீடத்தை
111118) கொடி மரத்தில் கயிறு சுற்றியிருப்பது எதனை நினைவூட்டும் வகையில்?
இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு மனதை பலியிட வேண்டும் என்பதற்காக ஆன்மாவைப் பாசக் கயிறு சுற்றி யுள்ளதை நினைவூட்டும் வகையில்
111119) திருவிழாவில் முதல்நாள் கொடியேற்றுவதன் நோக்கம் என்ன?
திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதமடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக
எழுந்தருளி அருள்பாலிக்கப் போகிறார் என்பதே
111120) சூக்கும் லிங்கமாக எதனை எண்ணி வணங்க வேண்டும்?
இறைவனை அடைந்ததவர் அழிவற்ற ஆனந்த வெள்ளத்தில் நிலைத்திருப்பார் என நினைத்து
111121) துவஜஸ்தம்பம் என்பது எதனை?
கொடிமரத்தை
111122) திருவிழாவின் முதல்நாள் கொடியேற்றுவதை என்னவென்று கூறுவர்?
துவஜாரோகணம்.
111123) கொடிமரத்தின் முன் ஆண்கள் செய்ய வேண்டியது என்ன நமஸ்காரம்?
அஷ்டாங்க நமஸ்காரம்
111124) கொடிமரத்தின் முன் பெண்கள் செய்ய வேண்டியது என்ன நமஸ்காரம்?
பஞ்சாங்க நமஸ்காரம்
111125) கொடிமரத்தைக் காக்கும் பொருட்டு என்ன அணிவகுக்கப்படும்?
கவசம்
111126) இந்த கவசம் எதனால் செய்யப்பட்டு இருக்கும்?
பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால்
111127) இவ்வாறு கவசம் அணிவிப்பதால் எவற்றில் இருந்து கொடிமரம் காக்கப்படுகிறது?
வெயில், மழை போன்ற இயற்கை மாற்றங்களிலிருந்து
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக