புதன், 24 டிசம்பர், 2014

ஆஞ்சநேயர்

கே. ஈஸ்வரலிங்கம் 11147) ஆஞ்சநேயருக்கு வடை மாலை சார்த்துவது ஏன்? நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்து வடை சாப்பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்து வடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடை செய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு. 11148) ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்துவது ஏன்? ராமர் வெற்றி பெற்றதை சீதைக்கு முதலில் தெரிவித்தவர் ஆஞ்சநேயர். இதனால் மகிழ்ந்த சீதை தன் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்த இலைகளை மாலையாக்கி அணிவித்தாள். அதன் அடிப்படையில் எண்ணிய செயல் வெற்றி பெற ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கும் வழக்கம் உண்டானது. 11149) மாலையை எப்படி கட்டுவது? இரு வெற்றிலை, ஒரு பாக்கு என வைத்துக் கொண்டு மாலை தொடுக்க வேண்டும். ஒரு மாலையில் 21 கண்ணிகள் அமைவது நல்லது. 48, 54, 108 எண்ணிக்கையிலும் வெற்றிலையைக் கட்டலாம். ஒற்றைப்படை எண்ணிக்கையில் 3, 5, 7 என சனிக்கிழமைகளில் மாலை சாத்துவது நல்லது. இதனால் சுபநிகழ்ச்சிகளில் ஏற்படும் தடை நீங்கி விரைவில் நல்லபடியாக நடந்தேறும். 11150) சங்காபிஷேகம் செய்வதன் சிறப்பு என்ன? அபிஷேகத்திற்குப் பயன்படும் பொருட்களில் மண்ணாலான கலசத்தை விட செம்பு உயர்ந்தது. செம்பை விட வெள்ளியும், அதை விட தங்கக் கலசமும் உயர்ந்தது. இவை அனைத்தையும் விட சங்கு உயர்ந்தது என சாஸ்திரம் கூறுகிறது. சங்காபிஷேகம் செய்தால் அது தேவாமிர்தத்தால் சுவாமியை அபிஷேகம் செய்வதற்கு ஒப்பானது. 11151) வாழ்வில் துன்பங்களும், கஷ்டங்களும் ஏற்படுவது ஏன்? தங்கத்தை புடம் போடுவதும், வைரத்தை பட்டை தீட்டுவதும் அப்பொருள் மென்மேலும் ஜொலிப்பதற்காகத் தானே தவிர, அதை அழிப்பதற்காக அல்ல. நம் வாழ்வில் நாம் அடையும் துன்பங்களும், கஷ்டங்களும் கூட நம் மனதை பக்குவப்படுத்த கடவுள் எனும் கொல்லனால் பட்டை தீட்டப்படும் செயல் தான் என்பதை உணர்ந்து விட்டால், மனமானது சாந்தம் அடையும். 11152) நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை என்பது ஏன்? நரசிம்மர் அருள்புரியும் தன்மையை, நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை என்று சொல்வார்கள். கேட்ட வரத்தை தட்டாமல் கொடுப்பவர் நரசிம்மர். நம்பிக்கையுடன் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்று ஜெபித்து வாருங்கள். உங்களின் விருப்பத்தை லட்சுமி நரசிம்மர் விரைவில் நிறைவேற்றி அருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 11153) கோயிலில் மந்திரம் சொல்லும் போது நமஹ என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் அர்த்தம் என்ன தெரியுமா? சமஸ்கிருதத்தில் மமஹ என்றால் என்னுடையது என்று பொருள். அதோடு ந என்பதைச் சேர்த்து ந மமஹ என்று சொன்னால் என்னுடையது இல்லை என்று அர்த்தம் உண்டாகும். ந மமஹ என்பதே நமஹ என்றானதாகச் சொல்வர். எல்லாம் கடவுளுக்கே சொந்தமானது என்று அறிவிப்பதற்காகவே அர்ச்சனையின் போது நமஹ என்று உச்சரிக்கின்றனர். கடவுளுக்கு அர்ச்சிக்கும் தேங்காய், பழம் மட்டுமில்லாமல், வழிபடும் நாமும் கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்பதைக் குறிக்கவே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812