“கீதை மூலம் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை” என்ற விசேட சொற்பொழிவை இந்தியாவின்
டெல்லியைச் சேர்ந்த சட்டத்தரணியும் பட்டய கணக்காளரும் எழுத்தாளரும்
நகைச்சுவை மூலம் அனைவரையும் ஈர்க்கவல்ல சிறந்த பேச்சாளருமான
பி.கே.பிரிஜ்மோகன் எதிர்வரும் 04 ஆம் திகதி மாலை 4.30 மணிமுதல் 7.00
மணிவரை கண்டி செல்வவிநாயகர் ஆலய மண்டபத்தில் சிறப்புரையாற்றவுள்ளார்.
இதற்கான ஏற்பாட்டை இணைப்பாளர் எஸ். வேலாயுதம் கண்டியில் நடைபெற்ற
ஊடகவியலாளர் மாநாட்டில் தொிவித்தார். அவர் மேலும் கருத்து கூறுகையில்,
அன்றைய தினம் பகல் 1.00 மணி முதல் 5.00 மணிவரை ஆலய மண்டபத்தில் ஆன்மீக
படவிளக்கக் கண்காட்சி நடத்தவும் ஒழுங்குகள் மேற்கொண்டுள்ளதாக தொிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக