கொழும்பு – 15, அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த ஐயப்ப தேவஸ்தானத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஸ்ரீ கருப்பண்ண சாமிக்கும் ஸ்ரீ கருத்த சாமிக்கும் விசேட அபிஷேக அலங்கார பூஜை ஆராதனைகள் யாவும் சிறப்பாக நடைபெற உள்ளன.
மாதாந்தம் இறுதி ஞாயிறு தினங்களில் இவ்விசேட பூஜை நடைபெறுவது வழக்கமாகும்.
ஸ்ரீ கருப்பண்ண சாமி ஸ்ரீ ஐயப்பனின் காவல் தெய்வமாக மாத்திரம் அன்றி அடியார்களைக் காக்கும் அரணாக விளங்குவதோடு அநேகரது குல தெய்வமாகவும் விளங்குவதால் அடியார்கள் இவர் பற்றி அதிக நம்பிக்கை விசுவாசம் கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக