கொழும்பு – 15, அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த ஐயப்ப தேவஸ்தானத்தில் நாளை திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஸ்ரீ நாகராஜ பிரபுவுக்கு விசேட அபிஷேக அலங்கார பூஜையும் ஆராதனைகளும் இடம்பெற உள்ளன.
தீராத நோய், தொழில் முடக்கம் ஆகியன நீங்கி நல்வாழ்வு பெற இப்பூஜை வழிவகுக்கும்.
இராகு, கேது, திசா புத்திகளின் கீழ் அடியார்கள் எதிர்நோக்கும் சொல்லொணா துயர் துன்பங்கள் நீங்கி சுப வாழ்வுக்கு இப்பூஜை வழிவகுக்கும் என்பது அடியார்களின் அசையாத நம்பிக்கையாகும்.
மாாங்கல்ய தோசம் நீங்கி குழந்தைப் பேற்றுடன் நல்வாழ்வு பெறவும் இப்பூஜை வழிவகுக்கும்.
மாதாந்தம் ஆயில்ய நட்சத்திரத்தில் இவ்விசேட பூஜை இங்கு நடைபெறுவது வழக்கமாகும். யாவும் கேரள முறைப்படி நடக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக