வியாழன், 5 மே, 2022

நற்செய்கை நிறைந்த "சுபகிருது" புத்தாண்டு பிறப்பு

தமிழ் வருடங்கள் 60ல் சுபகிருது 36வது ஆண்டாக அமைந்துள்ளது. சுபகிருது என்பதற்கு நற்செய்கை என்று தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அந்த அளவில் இந்த ஆண்டு பல்வேறு நற்செய்திகளைக் கொண்டுவரும் ஆண்டாக அமையும். சுபகிருது வருடத்தில் நாடெங்கும் நல்ல மழை பெய்யும் சுபிட்சமாக விளங்கும் என தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது. நல்ல விளைச்சல் உண்டாகும். கேடு எவருக்கும் வராது மக்கள் சுகமாக வாழ்வர் எனவும் தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டு காலமாக நோய்களின் பிடியில் சிக்கித்தவித்த மக்கள் இந்த ஆண்டு நிம்மதி பெருமூச்சு விடலாம் மங்கலகரமான 'சுபகிருது புத்தாண்டு, 14.4.22 வியாழக்கிழமை அன்று பிறக்கிறது. குரு வாரத்தில், குரு பகவான் தன் சொந்த வீடான மீன ராசியில் இருக்கும் நேரத்தில் பிறக்கும் இந்தப் புத்தாண்டு பல்வேறு நன்மைகள் தரப்போகிறது

பிரதோஷ விரதத்தை எந்த மாதத்தில் ஆரம்பிக்கலாம்

பிரதோஷ விரதம் இருக்க விரும்புகிறவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் ஒன்றில் வரும், சனிக்கிழமை பிரதோஷ நாளாக பார்த்து இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் நீராடி காலைக் கடன்களை முடிக்க வேண்டும். சிவன் கோவிலில் சுவாமிக்கு முன் உள்ள நந்திக்கு அருகம்புல் மாலை சாத்தி, சிவப்பு அரிசி நைவேத்தியம் செய்ய வேண்டும். நெய்விளக்கு வைத்து வழிபடுவது நல்லது. முதலில் சிவபெருமானையும், ரிஷப (நந்தி) தேவரையும் வணங்க வேண்டும். பின்னர் இடமாக (பிரதட்சணமாக) சென்று சண்டிகேசுவரரை வணங்கி விட்டு சென்ற வழியே திரும்பி வந்து மீண்டும் சிவன் நந்தியை தரிசிக்க வேண்டும். வழக்கம் போல் ஆலயத்தை வலமாக சுற்றிவரும்போது, நந்திதேவரிடம் வந்து நின்றபடி அவருடைய கொம்புகளுக்கு நடுவே சிவலிங்கத்துக்கு தீபாராதனை காட்டுவதை கண்டுவழிபட வேண்டும். இதுமாதிரி 3 முறை பிரதட்சணம் செய்ய வேண்டும். பின்னர் ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி வலம் வரும்போது, உடன்சென்று பிரதட்சணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும். விபூதியை நெற்றியில் அணிந்து கொண்டு, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்தப்பட்ட புனிதநீரை அருந்த வேண்டும். வீட்டுக்குச்சென்று யாராவது ஏழைக்கு அன்னதானம் வழங்குவதும் நன்மை அளிக்கும்.

கலைப்பயணத்திற்கு உறுதுணையாக இருந்து வருபவர் கணவர்

பரதநாட்டியக் கலைஞராக தன் திறமையை காட்டிவரும் திருமதி தர்ஷி சுகன் ஆன்மீகம், கலை, கலாசாரம் என பல் வேறு துறைகளில் அரும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இவரை அண்மையில் செந்துாரம் இதழுக்கு பேட்டி கண்ட போது அவர் அளித்த விபரங்கள் வருமாறு, உங்களைப் பற்றி கூறுங்களேன்......... நான் தென்கைலை எனப் பெயர் பெற்ற திருகோணமலை நகரில் பிரபல மருத்துவரான Dr. நடராஜகுரு ரவிச்சந்திரனுக்கும் திருமதி கருணைமணிக்கும் (மலர்) இரண்டு சகோதரர்களுடன் கனிஷ்ட புதல்வியாகப் பிறந்தேன். எனது மூத்த சகோதரர் துஷ்யந்தன். இளைய சகோதரர் ஹ்ரித்திக்ரோஷன். கல்வியில் கரைகண்ட விபரங்கள் பற்றி கூறுங்களேன்.... எனது ஆரம்பக் கல்வியினை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் (St. Mary's College) ஆரம்பித்து திருமலை புனித பிரான்சிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் (St. Francis Xavier TMV) நிறைவு செய்தேன். நடனத்தில் ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன? சிறுவயதில் இருந்தே எனக்கு நடனம் பயில வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எனது தந்தையாரும் சிறு வயதில் நடனம் கற்றுப் பின் மருத்துவக் கல்வி காரணமாகத் தொடரமுடியாமல் கைவிட்டார். அதனால் அவரது கனவும் என்னை நடனக்கலையில் சிறந்த தேர்ச்சி பெற்றவளாக்க வேண்டும் என்பதே. அவரது கனவுடன் எனது ஆர்வத்தினையும் புரிந்து கொண்ட எனது தந்தையார் நான் பரதநாட்டியக் கலையைப் பயில்வதற்குப் பலவழிகளிலும் ஊக்கமளித்தார். அதற்கு வித்திடும் வகையில் எனது ஆரம்ப நடனக்கல்வியை நடன ஆசிரியை திருமதி சசிகலா பிரபாகரனிடம் மிகவும் ஆரவத்துடன் பயில ஆரம்பித்தேன். அத்துடன் எனது பாடசாலை ஆசிரியை திருமதி கலைச்செல்வி ரவிச்சந்திரனிடமும் நடனம் பயின்றேன். பாடசாலையில் பல நடன நிகழ்ச்சிகளில் பங்குபற்றிப் பரிசில்களையும் பாராட்டினையும் பெற்றேன். அதன் பிறகு எனது தந்தையாரது தொழில் இடமாற்றம் காரணமாக தலைநகராம் கொழும்பிற்குக் குடிபெயர்ந்தோம். அங்கு கொழும்பு கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள ஹரே கிருஷ்ணா நாட்டியப்பள்ளியில் நடன ஆசிரியை திருமதி சுமதியிடம் நடனக் கல்வியைத் தொடர்ந்தேன். அதே போன்று இசைக் கலையையும் முறையாகப் பயில வேண்டும் என்ற நோக்கத்துடன் இலங்கை சங்கீத சபை நிறுவனரும் அதன் அதிபருமான திருமதி கௌரீஸ்வரி ராஜப்பனிடம் சங்கீதம் பயின்றேன். அத்துடன் நில்லாது திருமதி பரமேஸ்வரி மோகனவேலிடம் வயலின் கலையையும், திருமதி ராதிகா மற்றும் திருமதி அனுஷா மொறாயஸிடம் வீணைக் கலையையும் முறையாகப் பயின்றேன். அத்துடன் நில்லாது திருமதி துஷ்யந்தி பிரகலாதனிடமும் நடனம் பயிலத் தொடங்கினேன். அவர் எனது திறமையினைப் பட்டைதீட்டி நடனக் கலையில் தேர்ச்சி பெறப் பெரிதும் பாடுபட்டார். அருங்கலையைப் போதித்து அனுபவங்களைப் பகிர்ந்து ஆயகலைகள் கற்பித்து வாழ்விற்கு வழிகாட்டும் வாழ்வியல் புத்தகமே இவர் எனது தந்தையையும் தாயையும் போன்றும் ஒரு உற்ற நண்பனைப் போன்றும் என்னை வழி நடத்திய ஆசிரியர் என்றே கூறலாம். இவரது ஊக்கத்தின் காரணமாகவும் எனது தந்தையாரின் முயற்சியினாலும் என்னுடைய மேற்படிப்பினை இந்தியாவில் சர்வதேசப் புகழ் பெற்ற திருச்சி மாநகரில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியக் கல்வியைப் பயின்று முதல் வகுப்பில் தேறி பரதநாட்டியத்தில் இளங்கலைப் (BFA) பட்டம் பெற்றேன். இதற்குப் பலவழிகளிலும் எனது தந்தையுடன் இணைந்து எனது கணவர் சுகந்தன் உதவி புரிந்தார். எனக்கு அமைந்த கணவர் மிகவும் சிறந்தவர் என்பதுடன் அவர் ஒரு ஆன்மீகவாதியுமாவார். நான் எனது இலட்சியத்தினை அடைய அரும்பாடு பட்டவர்களில் அவரும் ஒருவராவார். இன்றுவரை எனது கலைப்பயணத்திற்கு உறுதுணையாக இருந்து வருகின்றார். கோணேஸ்வரா இசை நாட்டியப்பள்ளியை நிறுவிப் பல மாணவர்களுக்கு இசை, நடன வகுப்புகளை நடாத்தி வருகின்றேன். அத்துடன் ஹேகித்தை சபரிகிரீஷ ஐயப்பன் தேவஸ்தானத்தில் அறநெறி ஆசிரியையாகவும் வத்தளை ஹூணுப்பிட்டி அருண் மாணிக்கவாசகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றேன். இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் பயிற்சி வகுப்புகளில் பங்குபற்றிச் சான்றிதழ்களையும், வட இலங்கை சங்கீத சபையினால் நடாத்தப்பட்ட நடனம், இசை மற்றும் வீணைப் பரீட்சைகளில் சித்தியடைந்து சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டுள்ளேன். கே. ஈஸ்வரலிங்கம் எனது மகள்மார் ரம்யவர்ஷினி , சதுர்ஷா.

திருவருளும் குருவருளும் அருளும் விரதம்

வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில் நந்தி பகவானை வழிபடுவதன் மூலம் குருவருளையும் திருவருளையும் பெறலாம். வியாழக்கிழமைகள் குருபகவானுக்கு உரியவை. இந்த நாளில் பொதுவாகவே தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது சிறப்பு என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். அதிலும் பிரதோஷத்தோடு சேர்ந்து வந்தால் அந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. வியாழக் கிழமைகளில் இறைவழிபாட்டோடு மகான்களின் வழிபாட்டையும் செய்து வருவோம். காரணம் இந்த உலகில் குருவாகத் திகழ்கிறவர்கள் மூலம் அந்த இறைவனின் திருவடியை அடையலாம் என்பது நம்பிக்கை. அதனால்தான் அருணகிரிநாதரும் ‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’ என்று குருவாக வந்து அருளும்படி முருகக் கடவுளை வேண்டினார். நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். சிவனோடு இருப்பவர். சிவ என்பதற்கு மங்களம் என்று பொருள். நந்தி என்பதற்கும் ஆனந்ததையும் மகிழ்ச்சியையும் தருபவர் என்றே பொருள். தகுதியில்லாதவர்கள் சிவ தரிசனம் பெறுவதைத் தடை செய்பவர் நந்தி. நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன. தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும். நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். சிவனோடு இருப்பவர். சிவ என்பதற்கு மங்களம் என்று பொருள். நந்தி என்பதற்கும் ஆனந்ததையும் மகிழ்ச்சியையும் தருபவர் என்றே பொருள். தகுதியில்லாதவர்கள் சிவ தரிசனம் பெறுவதைத் தடை செய்பவர் நந்தி. நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன. தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும்.நந்திபகவான் பிரதோஷ நாளில் வேண்டும் வரம் தருபவராக விளங்குகிறார். இந்த நாளில் அவரை நினைத்து வழிபடுவது சிவ பெருமானின் பேரருளை நமக்குத் தரும். அதனால்தான் பிரதோஷ தினத்தில் நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. குரு கடாட்சம் மிளிரும் நாள், வியாழக்கிழமை. அன்றைய தினம் வரும் பிரதோஷத்தில் வழிபாடு செய்யும் தனுசு, மீனம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களும், குரு தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக ரீதியான தோஷம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வராக்கடன் வசூலாகும். மேலும் பலனை அதிகரிக்க, லட்டு தானம் செய்ய வேண்டும்.

அறநெறி அறிவு நொடி

19016) திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலயில் ஏற்றப்படுவது என்ன தீபம் ? அணையா தீபம் 19017) இந்த அணையா தீபத்தை என்ன பெயர் கொண்டு அழைப்பார்கள்? பரணிதீபம் 19018) ஆறாதாரங்களில் திருவண்ணாமலையில் ஆதாரமாகத் திகழ்வது எது? மணிபூரகத் தலம் 19019) திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர் என்ன? பக்தானுக்ரக சோமாஸ்கந்தர் 19020) “கார்த்திகை அகல் தீபம்” என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு எது? 1997 டிசம்பர் 12 19021) அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம் எது? திருவண்ணாமலை 19022) இதனால் திருவண்ணாமலைக்கு ஏற்பட்ட பெயர் என்ன? கிளி கோபுரம் 19023) கார்த்திகை நட்சத்திரம் எந்தெந்த தெய்வங்களுக்கு உரியது? சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன் 19024) அருணாசலம் என்பதன் பொருள் என்ன? அருணம்+ அசலம்- சிவந்த மலை19025) சிவாம்சமாகப் போற்றப்படும் ராம பக்தர் யார்? அனுமன் 19026) நமசிவாய’ என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது? திருவாசகத்தில் 19027) தர்ம தேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்? அறவிடை 19028) அறவிடை என்பதன் பொருள் என்ன? (அறம்-தர்மம், விடை-காளை வாகனம்) 19029) மனிதப் பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள் எவை? அறம், பொருள், இன்பம், வீடு (மோட்சம்) 19030) சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை? 108 (நூற்றி எட்டு) 19031) சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர் யார்? காரைக்காலம்மையார் 19032) "மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று நடராஜரிடம் வேண்டியவர் யார்? அப்பர் (திருநாவுக்கரசர்) 19033) நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்? ஆணவம் 19034) ஆணவம் அடங்கினால் என்ன நடக்கும்? ஆனந்தம் உண்டாகும் 19035) மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்.... மகாகவி காளிதாசர் 19036) பஞ்ச சபையில் சித்திரசபையாகத் திகழும் தலம் எது? குற்றாலம் 19037) நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம் எது? சங்கார தாண்டவம் 19038) இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்? வெள்ளியம்பலம் 19039) வெள்ளியம்பலம் எங்கு உள்ளது? மதுரையில் 19040) மாலை வேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம் எது? பிரதோஷ நடனம் 19041) பிரதோஷ நடனத்தை வேறு எவ்வாறு அழைப்பர்? புஜங்கலளிதம் 19042) நடராஜருக்குரிய விரத நாட்கள் எவை? திருவாதிரை, கார்த்திகை சோமவாரம் 19043) நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம் என்ன? களி. 19044) திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன் யார்? தாயுமான சுவாமி 19045) பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம் எது? காளஹஸ்தி 19046) வண்டு வடிவில் இறைவனை பூஜித்த முனிவர் யார்? பிருங்கி 19047) திருமூலர் எழுதிய திருமந்திரம் எத்தனையாம் திருமுறை? பத்தாம் திருமுறை 19048) திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்... திருக்கோலக்கா 19049) திருக்கோலக்கா திருத்தலத்தை வேறு எவ்வாறு அழைப்பார்கள்? தாளமுடையார் கோவில் 19050) தாளமுடையார் கோவில் எங்கு உள்ளது? சீர்காழிக்கு அருகில் உள்ளது 19051) விபூதி என்பதன் நேரடியான பொருள் என்ன? மேலான செல்வம் 19052) சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம் எது கஞ்சனூர் 19053) ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை? 12 (பன்னிரெண்டு) 19054) மதுரையில் உள்ள சித்தரின் பெயர் என்ன? சுந்தரானந்தர் 19055) திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம் எது? ஆச்சாள்புரம் (திருப்பெருமண நல்லூர்) 19056) நாவுக்கரசரின் உடன் பிறந்த சகோதரி யார்? திலகவதி 19057) சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார் யார்? சேரமான் பெருமாள் நாயனார் 19058) “அப்பா! நான் வேண்டுவன கேட்டருள்புரிய வேண்டும்’ என்ற அருளாளர் யார்? வள்ளலார் 19059) மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை யார்? மங்கையர்க்கரசியார் 19060) மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்? அரிமர்த்தன பாண்டியன் 19061) திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறியவர் யார்? பல்லவ மன்னன் 19062) இந்த பல்லவ மன்னனின் பெயர் என்ன? மகேந்திர பல்லவன் 19063) சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் எது? தத்புருஷ முகம் (கிழக்கு நோக்கிய முகம்) 19064) சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை? 8 (எட்டு) 19065) மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது? மாசி தேய்பிறை சதுர்த்தசி 19066) மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்? 4 கால அபிஷேகம் 19067) வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும் விதம் எது? நமசிவாய 19068) முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்? சிவாயநம 19069) சிவசின்னங்களாக போற்றப்படுபவை எவை? திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம) 19070) சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை? அருவுருவம் 19071) பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம் எது? இராமேஸ்வரம் 19072) சிவ வடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம் எது? தட்சிணாமூர்த்தி 19073) கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்? 12 (பன்னிரெண்டு) 19074) குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில் எது? குற்றாலம் குற்றாலநாதர் கோயில் 19075) ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம் எது? வில்வமரம் 19076) அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரியின் பெயர் என்ன? மானசரோவர் 19077)திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்? 81 (எண்பத்தி ஒன்று) 19078) பதிகம் என்பதன் பொருள் என்ன? பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு 19079) சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல் எது? சிவஞானபோதம் 19080) உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கையின் பெயர் என்ன? டமருகம் அல்லது துடி 19081) அனுபூதி என்பதன் பொருள் என்ன? இறைவனுடன் இரண்டறக் கலத்தல் 19082) உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை யார்? மதுரை மீனாட்சி 19083) மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர் யார்? மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை 19084) மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர் என்ன? தடாதகைப் பிராட்டி 19085) பழங்காலத்தில் மதுரை .எவ்வாறு அழைக்கப்பட்டது. நான்மாடக்கூடல், ஆலவாய் 19086) மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம் எது? கடம்ப மரம் 19087) மீனாட்சி எதுவாக இருப்பதாக ஐதீகம்? கடம்பவனக் குயில் 19088) மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள் யார்? திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்

குரு பகவானின் அருளைப் பெற உகந்த வியாழக்கிழமை விரதம்

குரு பகவானின் அருளை பெறுவதற்குரிய ஒரு சிறந்த விரதம் தான் வியாழக்கிழமை விரதம். இந்த விரதத்தின் மகிமை பற்றியும், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம். வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். ஒரு வருடத்தில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் இந்த வியாழ விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும். 3 ஆண்டு காலம் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.பிரகஸ்பதி எனும் குரு பகவானை குறித்து மேற்கொள்ளப்படும் இந்த வியாழக்கிழமை விரத தினத்தன்று அதிகாலையிலே எழுந்து தலைக்கு ஊற்றி குளித்து முடித்து விட வேண்டும். பிறகு மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு, எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அருகிலுள்ள கோயிலின் நவகிரக சந்நிதிக்கு சென்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகள் நைவேத்தியம் செய்து, சந்தனம், மஞ்சள் போன்றவற்றை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பின்பு குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.விரதம் இருக்கும் நாள் முழுவதும் உணவேதும் அருந்தாமல் இருப்பது விரதத்தின் முழுமையன பலன்களை தரும். அன்றைய தினம் குரு பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படிப்பது நல்லது. மாலையில் மஞ்சள் நிற இனிப்புகள், ஆடைகள் போன்றவற்றை ஏழ்மையில் இருப்பவர்களுக்கு தானமளிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.குரு பகவானுக்குரிய இந்த வியாழக்கிழமை விரதத்தை முறையாக மேற்கொள்பவர்களுக்கு வாழ்வில் பல யோகங்கள் ஏற்படும். சரியான காலத்தில் திருமணம் நடக்கும். ஜாதகத்தில் குரு கிரக தோஷம் இருப்பவர்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிப்பதால் அவை நீங்கும். தொழில், வியாபாரங்களில் சரியான வருமானம் இல்லாதவர்கள், குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக இல்லாதவர்கள் இந்த விரதம் மேற்கொள்வதால் குரு பகவானின் அருள் கிடைக்கப்பெற்று தொழில், வியாபாரங்களில் சிறந்து செல்வ வளம் பெருகும். மேலும் எதிர்பார்க்காத சிறந்த வாழ்க்கை உண்டாகும் என்பது நம்பிக்கை

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

ூலஸ்தானம் எனும் கருவறையின் பரம ரகசியம்

உடலுக்கு பிரதானமானது எது? தலை உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு எது பிரதானமாக இருக்க வேண்டும்? கருவறை கருவறையை வேறு எவ்வாறு அழைப்பார்கள்? மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் கருவறை எப்படி இருக்க வேண்டும்? நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். ஆலய அமைப்பு எப்படி இருக்கும்? மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது. அதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது. முன்னோர்கள் கருவறையை எப்படி அமைத்தனர்? பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக இதன் பின்னணியில் என்ன அடங்கியுள்ளன? சூட்சமங்களும், தேவ ரகசியமும் அடங்கியுள்ளன. நம் முன்னோர்கள் எவ்வாறு இருக்கும்படி அமைத்தனர்? வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கினர். பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் எவ்வகையானவை? ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் என்ன செய்யும்? கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும். அங்கிருந்து அந்த அலைகள் என்ன செய்யும்? ஆலயம் முழுக்க விரவி பரவும். இவ்வாறு இருப்பதால் என்ன நன்மை? நாம் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது. இதற்காகவே நம் முன்னோர்கள் கருவறை அமைக்கும்போது என்ன செய்தார்கள்? கருவறை அமைப்பதில் மட்டும் அளவு கடந்த நுட்பத்தை கடைபிடித்தனர். எல்லா ஆலயங்களிலும் கருவறையானது எப்படி இருக்கும்? வாசல் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டதாக இருக்கும். கருவறை அமைப்பை எத்தனை பகுதிகளாகப் பிரிக்கலாம்? ஆறு அந்த ஆறு வகை கருவறை அமைப்புகளையும் தருக அதிஷ்டானம், பாதம், மஞ்சம், கண்டம், பண்டிகை, ஸ்தூபி

ஆடி மாதம் போய் ஆவணி வந்தால் ஆயிரம் நன்மைகள் தேடி வரும்

ஆடி மாதம் போய் ஆவணி வந்தால் ஆயிரம் நன்மைகள் தேடி வரும் என்பார்கள். ஆவணியில் அத்தனை நாள்களும் மங்கல நாள்களே என்பது ஆன்றோர் வாக்கு. சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என்கின்றன ஜோதிட நூல்கள். சூரியன் சிம்மத்தில் வலுப்பெறும் இந்த மாதத்தில் எந்த காரியத்தை செய்தாலும் அது பலன் தரும் என்பது நம்பிக்கை. இதனாலேயே சிங்க மாதம் எனப்படும் ஆவணி வழிபாட்டுக்கும் கொண்டாட்டத்துக்கு பெயர் பெற்ற மாதமாகப் போற்றப்படுகிறது. 'சிங்கத்திற்கு இணையான மாதமும் இல்லை; சிவனுக்கு இணையான இறைவனும் இல்லை' என்கிறார் அகத்திய மாமுனி. தமிழ் மாதங்களில் ஆவணி ஐந்தாம் மாதமாக வருகின்றது. ஆவணி மூலம், ஆவணி ஞாயிறு, ஆவணி அவிட்டம், புத்ரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல விரத நாள்களும் இந்த மாதத்தில் வருகின்றன. மேலும் ஆவணி மாத செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளும் விரத முக்கியத்துவம் வாய்ந்த நாள்கள் என்கிறார்கள். புதிதாக திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெற ஆவணி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மங்கள கெளரி விரதம் அனுஷ்டிப்பார்கள். அதேபோல் ஆண்களும் தங்கள் விருப்பங்கள் நிறைவேற ஆவணி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கான நோன்பை கடைப்பிடிப்பார்கள். ஆவணி சோமவார விரதமும் முக்கியமானது. ஆவணி மாதம் சிவபெருமானை வழிபடுவதற்கு ஏற்ற மாதம் என்பதால் திங்களும் வியாழனும் சைவர்களுக்கு இன்றியமையாத நாள்கள் ஆகும். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாட்டுக்கு ஏற்ற நாள். அதேபோல் அன்றிலிருந்து சூரிய நமஸ்கார வழிபாட்டைத் தொடருவதும் நல்லது. சூரிய நமஸ்காரம், யோகப் பயிற்சிகள், வேதம் பயில என ஆன்மிக திருவகுப்புகள் செல்ல ஏற்ற மாதம் ஆவணி. இந்த மாதத்தில் புதுமனை புகுந்தால் அந்த வீட்டில் சிறப்பான வாழ்க்கை அமையும். இந்த மாதத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கை இன்பமாக அமையும் என்பதெல்லாம் நம்பிக்கை. அநேக தீமைகள் ஒழிந்து மங்கலங்கள் சூழும் இந்த மாதம் நம்பிக்கைக்கும் நன்மைகளுக்கும் ஏற்ற மாதம் என்று பெரியோர்களால் சொல்லப்படுகிறது. எனவே இந்த மாதத்தில் இறைவனை வழிபட்டு இன்பமுற்று வாழ்வோம்.

கருவறை

மூலஸ்தானத்தில் மூலவர் சிலை நிறுவப்படும் பகுதியை என்னவென்று அழைப்பார்கள்? அதிஷ்டானம் என்பார்கள் அதிஷ்டானத்தை வேறு எவ்வாறு அழைப்பதுண்டு? பீடம் என்றும் சொல்வதுண்டு. கருவறையின் வெளிப்புறச்சுவரை எவ்வாறு அழைப்பதுண்டு? கோஷ்டம் என்பார்கள். அவற்றில் என்ன இருக்கும்? கடவுளின் பல்வேறு உருவங்கள் இடம் பெற்றிருக்கும். அங்கு பிரதிஷ்டை எதனை பிரதிஷ்டை செய்திருப்பார்கள்? ஒரு கோவில் எந்த மூர்த்திக்கு உரியதோ, அந்த மூர்த்தியை அங்கு பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அந்த கருவறை எப்படிப்பட்டதாக இருக்கும்? எத்தனை ஆண்டுகளைக் கடந்தாலும் இறை அருளை அள்ளித்தரும் பொக்கிஷமாக இருக்கும். இந்த நடைமுறை எப்பொழுது தோன்றியது? 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடைமுறை ஆகம வழிபாட்டு முறைகளுக்கு பின்பா தோன்றியது? ஆகம வழிபாட்டு முறைகளுக்கும் முன்பே தோன்றி விட்டது. இவ்வாறு கருவறைகளைக் கட்டிவித்தவர்கள் யார்? அந்த காலக் கட்டத்தில் நாட்டை ஆண்ட மன்னர்கள். இவர்கள் இவற்றை இவ்வாறு கட்டுவித்ததற்கான காரணம் என்ன? தங்களது அரண்மனையை விட அருள் அலை தரும் கோவில்கள் எப்போதும் உறுதியாக நின்று நிலைப் பெற்று திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் கற்களால் ஆன கருவறையைக் கட்டினார்கள் இவர்கள் இவ்வாறு எத்தனை வகையான கோவில்களைக் கட்டுவித்தார்கள்? எட்டு வகையான கோவில்களை அந்த எட்டு வகையான கோவில்களும் எவை? மாடக்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடிக் கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில். இவ்வாறு அமைக்கப்படும் ஆலயங்களில் கருவறை பகுதி எப்படிப்பட்டதாக அமைக்கப்பட்டன? சதுரம், வட்டம், முக்கோணம் எனும் 3 வித அமைப்புகளில் அமைக்கப்பட்டன. இவ்வாறு அமைக்கப்படும் கருவறையில் சதுர அமைப்பு எதனுடன் தொடர்புடையதாக கருதப்படுகின்றது? தேவ உலகத்துடனும், வட்டம் எதனுடன் தொடர்புடையதாக கருதப்படுகின்றது? இறந்தவர்களுடன் முக்கோணம் எதனுடன் தொடர்புடையதாக கருதப்படுகின்றது? மண்ணுலகத்துடன். தமிழ்நாட்டில் எந்த அமைப்புடன் ஆலய கருவறை அமைப்பதில்லை? முக்கோண அமைப்புடன் வட்ட வடிவ கருவறைகளை எங்கு காணலாம்? புத்த ஸ்தூபிகளிலும் பள்ளிப்படை கோயில்களிலும் மட்டுமே காணமுடியும். கருவறை வட்ட வடிவில் அமைக்கப்பட்ட ஆலயம் எது? மதுரை அழகர்கோவிலில் உள்ள ஆலயக் கருவறை ஆலய கருவறை சுற்றுப்பகுதி ஒரே மாதிரியானதாகவா இருக்கும்? கருவறை சுற்றுப்பகுதி ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும். தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் கருவறை வெளிப்பகுதி எந்த வடிவில் இருக்கும்? கஜப்ருஷ்டம் வடிவில் இருக்கும். இதில் கஜம் என்றால் என்ன? யானை ப்ருஷ்டம் என்றால் என்ன? பின்பகுதி என்று பொருள். கருவறை வெளிப்புற சுவர் எப்படிபட்டதாக இருக்கும்? யானையின் பின் பகுதி போன்ற வடிவில் இருக்கும் என்று அர்த்தம். இத்தகைய அமைப்பை என்னவென்று கூறுவார்கள்? ‘‘தூங்கானை மாடக்கோவில்’’ என்பார்கள்.

வேலையே வேலனாக வணங்கும் ஊர் நல்லுார்

தமிழும் சைவமும் தழைத்தோங்கி வளர்ந்த ஊர் யாழ்ப்பாணம். இந்த யாழ் மண்ணில் உள்ள ஒரு நல்லுார். இந்த நல்லுாரிலே கோயில் கொண்டு அருள்பாலிப்பவன் கந்தப் பெருமான். இந்த ஆலயம் ஆரியச் சக்கரவர்த்தியின் முதலமைச்சராக விளங்கிய புவனேகபாகு என்பவனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னுமொரு சாரர் இவ்வாலயம் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய செண்பகப் பெருமாள் என்னும் புவனேக வாகுவினால் கட்டப்பட்டதென்பர். இவ்வாலயம் 1454ஆம் ஆண்டு கட்டப்பட்டள்ளதாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருப்பினும் புவனேகவாகு என்ற பெயர் மகோற்சவங்களில் ஆலயக் கட்டியத்தில் கூறப்பட்டு வரும் வழக்கம் இன்றும் உள்ளது. யாழ்ப்பாணம் 400 ஆண்டுகள் வரை சைவத் தமிழரசர்களால் ஆளப்பட்டுவந்தது. யாழ்ப்பாண அரசு -1621ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டது. நல்லுார் ஆலயம் அழிக்கப்பட்டது. போர்த்துக்கேயரிடமிருந்த யாழ்ப்பாணம் 1958ஆம் ஆண்டு ஜுன் மாதம் 21ஆம் திகதி ஒல்லாந்தர் கைக்கு மாறியது. ஒல்லாந்தர்கள் தங்கள் மத வணக்கத்திற்குரிய தேவாலயம் ஒன்றைப் இந்த கந்தசுவாமி கோவில் இருந்த இடத்தில் கட்டினார்கள். நல்லுார் கோயில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தைச் சுற்றி வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும் பெரிய கோபுரங்கள் காணப்படுகின்றன. இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரம் ஐந்து நிலைகளுடனும், தெற்கு மற்றும் வடக்கு கோபுரங்கள் ஏழு நிலைகளுடனும் காட்சியளிக்கின்றன. தெற்கு கோபுரத்தின் அருகில் திருக்குளம் அமைந்திருக்கிறது. கிழக்கு கோபுரத்தின் முன்பு, அழகிய வேலைப்பாடுகளைக்கொண்ட தோரண வளைவு ஒன்றும் உள்ளது. இந்தக் கோயிலில் வியப்புக்குரிய செய்தி ஒன்றும் உள்ளது. கந்தசுவாமி கோயிலின் கருவறையில் மூலவரான முருகப்பெருமானின் திருவுருவம் இல்லை. இவ்வாலயத்தின் கருவறையில் முருகப்பெருமானின் ஆயுதமான வேல்தான் மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க முருகப்பெருமான் வேலை வைத்து திருவுளம் செய்துள்ளான். இந்தக் கோயிலில் வழிபடு தெய்வமாக வேலைத் தான் எழுந்தருளச் செய்திருக்கிறார்கள். திருவிழாக்களின்போது இந்த 'வேல்' வடிவத்தையே அலங்கரித்து வாகனங்களில் எழுந்தருளச் செய்து வீதி வழியாக கொண்டு வருகின்றனர். ஆலய பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானை, குழந்தை கிருஷ்ணன், சூரியன், சூலம் ஆகிய சந்நிதிகளும் அமைந்துள்ளன. மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் உற்சவ மூர்த்திகள் உள்ளனர். ஆறுமுக சுவாமியின் உற்சவ மூர்த்தம் மிகவும் அழகாக அமைந்திருக்கிறது. வருடம்தோறும் ஆடி, ஆவணி மாதங்களில் 27 நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆடி மாதம் அமாவாசைக்கு அடுத்த 6-ம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா, ஆவணி மாதம் அமாவாசையன்று தீர்த்தவாரியுடன் நிறைவு பெறும். 24-ம் நாள் தேரோட்டம் நடைபெற்று, 25-ம் நாள் தீர்த்தத் திருவிழா நடைபெறும். வருடாந்தம் நடைபெறும் இவ்வாலய உற்சவக் காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுவார்கள். இன்று இவ் உற்சவத்தின் தீர்த்தத் திருவிழா நடைபெறுகிறது. இதற்கு நாட்டின் நாலா பாகங்களிலிருந்தும் வௌிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் படை எடுத்து வருவதுண்டு. கே. ஈஸ்வரலிங்கம்

வியாழன், 10 ஜூன், 2021

ுருகன்

முருகனின் திருவுருவங்கள் எத்தனை? 16 அந்த 16 திருவுருவங்களும் எவை? 1, சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர், 6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 16. கிரவுஞ்ச «பதனர், 16. சிகிவாகனர் எனப்படும். முருகன் அழித்த ஆறு பகைவர்கள் யார்? ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம். முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடங்கள் எத்தனை? மூன்றாகும். அந்த மூன்று இடங்களும் எவை? திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், போரூர் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்தது எங்கு? திருச்செந்தூர் தாரகாசுரனை வதம் செய்தது எங்கு? திருப்பரங்குன்றம், சூரபத்மன், தாரகாசுரன் ஆகிய இருவரின் சகோதரர் யார்? சிங்க முகாசுரன் சிங்க முகாசுரனை வதம் செய்தது இடம் எங்கு? போரூர் முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் உள்ளவை எவை? ஆயுதங்கள் முருகப்பெருமானின் வலப்புறத்தில் ஆயுதங்கள் எவை? அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் என்னென்ன இருக்கிறது? வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவை. முருகப் பெருமானை வணங்க உகந்த நாட்கள் எவை? திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், முருகன் யாரால் தாங்கப்பட்டான்? கங்கையால் கங்கையால் தாக்கப்பட்டதால் முருகனுக்கு ஏற்பட்ட பெயர் என்ன? காங்கேயன் சரவணப் பொய்கையில் உதித்ததால் வந்த பெயர் என்ன? சரவண பவன் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் வந்த பெயர் என்ன? கார்த்திகேயன் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் வந்த பெயர் என்ன? கந்தன் சண்முகப் பெருமானின் வாசஸ்தலம் எது? குமரக்கோட்டம் குமரக்கோட்டம் எங்கே உள்ளது? காஞ்சீபுரத்தில் கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூல் எது? திருப்புகழ் திருப்புகழ் நூலினை இயற்றியவர் யார்? அருண கிரிநாதர். முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று யார் பாடியுள்ளார் ? அருட்கவி அருணகிரி அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவை யார்? முருகன் ஆவான். முருகனைக் குறித்துக் குமார சம்பவம் என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் யார்? மகாகவி களிதாசர். யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் எங்கே செதுக்கப்பட்டுள்ளது? மாமல்லபுரத்துப் பாறைகளில் முருகனின் கையில் உள்ள வேல் என்னவென்று பெயர் பெறும்? இறைவனின் ஞானசக்தி என பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் யாரை காணலாம்? முருகனை பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு ஒன்று முருகப்பெருமானுக்கு உண்டு. அது எது.? பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். 23. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார். 24. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது. 25. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது. 26. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும். 27. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும். 28. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன. 29. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும். 30. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும். 31. முருகனைப் போன்று கருப்பைப வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர். 32. பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்த கோயில் (மலேசியா), கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம். 33. முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தா சலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இத னைக் கூறுவார்கள். 34. கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார். 35. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது. 36. கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது. 37. முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்துள்ள நெடியமலை ஆகும். 38. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது. 39. கந்தனுக்குரிய விரதங்கள்: 1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம். 40. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...