வியாழன், 12 ஜூன், 2014
வியாழ பகவான்
10857) வியாழபகவான் இந்திரனுக்கு என்ன சொன்னார்?
“தேவேந்திரா ஏன் அழுகிறாய்”
விவரம் அறிந்தவன் ,நீதி அறிந்தவன் இப்படிப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்ட காலத்திலும் பயப்படமாட்டான் செல்வங்களும் இப்போது உனக்கு நேர்த்ததைப் போன்ற பிரச்ச்னைகளும் நிரந்தரமானவை அல்ல அனைத்தும் முற்பிறப்புகளில் செய்யப்பட்ட செயல்களின் விளையவாகவே உண்டாகின்றன. வாழ்வில் மேடும் பள்ளமும் வரத்தான் செய்யும். வண்டிச்சக்கரம் உருளும் போது கீழே இருந்த பகுதி மேலே போவதும் மேலே இருந்த பகுதி கீழே வருவதுமாக இருக்கிறது அல்லவா அதைப் போல நன்மைகளால் உயர்வு அடைவதும் தீமைகளால் கீழ்நிலை அடைவதும் மாறி மாறி வரத்தான் செய்யும். அப்படி இப்படி இருக்கும் போது, ஏன் அழுகிறாய்? நல்லதோ கெட்டதோ எவ்வளவு காலமானாலும் சரி அவற்றை அனுபவிக்காமல் தப்ப முடியாது யாராக இருந்தாலும் தாங்கள் செய்த செயல்களின் பலனை அனுபவித்தே தீரவேண்டும் என்றார்.
10858) யாராக இருந்தாலும் நாங்கள் செய்த செயல்களின் பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்று வியாழ பகவான் யார் கூறியதாக கூறுகிறார்?
பரமாத்மா
10859) பரமாத்மா யாருக்கு இவ்வாறு உபதேசித்திருக்கிறார்?
பிரம்மனுக்கு
10860) பரமாத்மா பிரமனுக்கு எதில் இவ்வாறு உபதேசிக்கிறார்?
சாமவேதத்தில்
10861) வியாழ பகவான் இந்திரனுக்கு வேறு என்ன உபதேசம் செய்தார்?
தானம் செய்தவன் மகிமை அவற்றின் பலன்கள் அதிகரிக்கும் விதம் ஆகியவற்றை
10862) தானப் பலன்கள் எப்போது அதிகரிக்கும் என்று வியாழ பகவான் இந்திரனுக்கு கூறினார்.
இடத்திற்குத் தகுந்தபடி செய்யும் போது என்று
10863) இவ்வாறு உபதேசம் செய்த வியாழ பகவான் வேறு என்ன செய்தார்
துயரத்திலிருந்து விடுபட்டு பழைய நிலையை அடைய வழியும் காட்டினார்.
10864) குருபகவான் நவக்கிரகங்களில் எத்தனையாவது இடத்தில் உள்ளார்?
ஐந்தாவது
10865) குருபகவானுக்குரிய வேறு பெயர்கள் என்ன?
வியாழ பகவான், பிரகஸ்பதி
10866) தேவகுருவாக சித்திர சபையில் வீற்றிருக்கும் இவர் எதில் சிறந்தவர்?
கல்வியில்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக