திங்கள், 2 ஜூன், 2014
அருச்சுனன்
10829) ஜிஷ்ணு என்றால் என்ன?
எதிரிகளை வெல்பவன்
10830) ஜிஷ்ணு என்ற பெயர் யாருக்குரியது?
அருச்சுனனுக்கு
10831) அருச்சுனனுக்கு உரிய இன்னுமொரு பெயர் என்ன?
கீரிடி
10832) கீரிடி என்ற பெயர் எப்படி வந்தது?
கீரிடத்தை அணிந்ததால்
10833) அருச்சுனன் யார் அளித்த கீரிடத்தை அணிந்தார்?
இந்திரன் அளித்த
10834) அருச்சுனனுக்குரிய இன்னும் ஒரு பெயர் என்ன?
சுவேதவாகனன்
10835) சுவேதவாகனன் என்றால் பொருள் என்ன?
வெள்ளைக் குதிரைகளை பூட்டிய தேர் கொண்டவன்
10836) அருச்சுனனுக்குரிய மற்றுமொரு பெயர் என்ன?
விபாச்சு
10837) விபாச்சு என்ற பெயர் எப்படி வந்தது?
போர் விதிகளின்படி போரிடுபவன் என்பதால்
10838) அருச்சுனனுக்கு உரிய மற்றுமொரு பெயர் என்ன?
குடாகேசன்
10839) குடாகேசன் என்றால் பொருள் என்ன?
போரில் எதிரிகளை வெல்லும் வரை உறக்கத்தை உதறி தள்ளியவன்
10840) வாரணக் கொடியோன் என்ற பெயர் யாருக்குரியது?
அருச்சுனனுக்கு
10841) அருச்சுனனுக்கு வாரணக் கொடியோன் என்ற நாமம் ஏன் வந்தது?
அனுமானின் உருவம் தாங்கிய கொடியை உடையவன் என்பதால்
10842) அருச்சுனனுக்குரிய மற்றுமொரு பெயர் என்ன?
பராந்தகன்
10843) பராந்தகன் என்றால் பொருள் என்ன?
எதிரிகளை வெல்வதில் மனத்திடம் உள்ளவர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக