திங்கள், 30 ஜூன், 2014

விநாயகர்

கே. ஈஸ்வரலிங்கம் 10898) பிள்ளையாரின் மறு பெயர்கள் சில தருக? விநாயகர், கணநாதர், ஆணைமுகன், 10899) அதிகாலையில் துயிலெழுந்ததும் முதலில் செய்ய வேண்டியவைகள் யாவை? பொழுது விடிவதற்கு 5 மணிக்கு முன் துயிலெழ வேண்டும். படுக்கை அறையை விட்டு மற்றொரு இடத்திற்கு சென்று திருவெண்ணீற்றை நெற்றியிலும் உடம்பிலும் முறைப்படி பூசிக்கொள்ளவேண்டும். அது சமயம் ஆசானை மனதில் கொள்ளுதல் வேண்டும். பின்னர் நிலமாகிய பூமிதேவியை கண்களில் ஒற்றிக்கொண்டு தாயே எனது கால்கள் நின்மீது படுவதால் ஏற்படுகின்ற பெரும் பாவத்தினைப் பொறுத்தருள்வாயாக என்று பிரார்த்திக்கவேண்டும். பின்னர் வினைதீர்க்கும் விநாயகப் பெருமானையும்.சிவபெருமானையும். உமாதேவியையும் திருமாலையும் கதிரவனையும் மற்ற தேவர்களையும் முனிவர்களையும் முறையாக தியானிக்கவேண்டும். 10900) விநாயகப்பெருமானின் இராஜஸ குணத்தில் தோன்றியவர் யார்? பிரம்மா. 10901) விநாயகப்பெருமானின் தாமச குணத்தில் தோன்றியவர் யார்? ஸ்ரீ கிருஷ்ணர். 10902) விநாயகப்பெருமானின் சாத்வீக குணத்தில் தோன்றியவர் யார்? சிவபெருமான். 10903) விநாயகப்பெருமானின் திருவயிற்றுள் அடங்கியுள்ள எவை? அண்ட சராசங்களும் அனந்த கோடி ஜீவராசிகளும். 10904) விநாயகப்பெருமானின் பேரருளால், பிரம்மாவின் படைப்புத்தொழிலில் முதலில் தோன்றியவர்கள் யாவர்? கிரியா சக்தி, ஞான சக்தி என்ற இரு சக்திகளும் சித்தி புத்தி என்னும் திருப்பெயர் கொண்ட தெய்வ மகளிராய் பிரம்மாவின் முன்னே தோன்றினர். பிரம்மா இவர்களைப் பார்த்து நீங்கள் இருவரும் விநாயகப்பெருமானின் அருளால் அவதரித்தீர்கள், ஆதலால் எனது அருந்தவப்புதல்விகளாக என்னுடனேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ள, அதற்கு அவர்கள் இருவரும் உங்கள் புத்திரியர்களாக விளங்குவதால் மட்டில்லா மகிழ்ச்சி கொள்கின்றோம் என்று கூறி பிரம்மாவின் பாதங்களை பணிந்து பூரித்து நின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812