திங்கள், 30 ஜூன், 2014
ஆனி
10905) சூரியனின் வடதிசைப் பயண காலமான உத்தராயணத்தின் கடைசி மாதமாக வருவது எது?
ஆனி
10906) நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதை கொண்ட மாதம் எது?
ஆனி
10907) இந்த மாதத்தில் பகல் பொழுது எவ்வளவு நேரத்தைக் கொண்டது?
12 மணி நேரமும் 38 நிமிடமும் கொண்டது.
10908) தேவர்களின் மாலை நேரப் பொழுது எது?
ஆனி மாதம்
10909) ஆனி மாதத்தில் சூரியன் எந்த ராசியில் சஞ்சரிக்கும்?
மிதுன ராசியில்
11000) ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிப்பதால் இந்த என்ன மாதம் என்று அழைப்பர்?
மிதுன மாதம்
11001) இந்த மிதுன மாதத்தை வட மொழியில் என்னவென்று அழைப்பார்கள்?
ஜேஷ்ட மாதம்.
11002) ஜேஷ்டா என்றால் என்ன?
மூத்த அல்லது பெரிய
11003) தமிழ் மாதங்களில் பெரிய மாதம் எது?
ஆனி
11004) ஆனி மாதத்தை ஏன் பெரிய மாதம் என்று அழைக்கிறார்கள்?
பிற மாதங்களுக்கு இல்லாதபடி அதிக நாட்களை கொண்டதால்
11005) இந்த மாதம் எத்தனை நாட்களைக் கொண்டது?
32 நாட்கள்
11006) ராசிகளில் சற்று பெரிய ராசி எது?
மிதுன ராசி
11007) மிதுன ராசி பெரிய ராசி என்பதால் நடப்பது என்ன?
இதனை கடக்க சூரியனுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது.
11008) ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்பது என்ன?
ஒரு பழமொழி
11009) மூல நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அது அரசாளும் என்றும் பெண் குழந்தை பிறந்தால் அதனால் நிர்மூலம் உண்டாகும் என்று மேற்கூறப்பட்ட பழமொழிக்கு விளக்கம் கூறுவது சரியா?
தவறு
11010) ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் வரும் நாள் பொதுவாக எதனோடு இணைந்து வரும்?
பெளர்ணமியோடு
11011) பெளர்ணமியில் பிறக்கும் குழந்தைகள் எப்படி பட்டதாக இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது?
அரச யோகத்தினை ஒபற்றதாக இருக்கும் என்று
11012) ‘ஆனி மூலம் அரசாளும்’ என்று கூறுவது ஏன்?
ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் பொதுவாக பெளர்ணமியோடு இணைந்து வருவதால் ஆனி மூலத்தில் பிறக்கும் குழந்தைகள் அரசாளும் என்பதாலே ஆகும்.
11013) ‘ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்’ என்ற பழமொழி உண்மையில் எவ்வாறு வரவேண்டும்?
ஆனி மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்.
11014) ‘ஆனி மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்’ என்ற பழமொழியின் இங்கு பெண் என்பது எதனை குறிக்கிறது?
கன்னியை
11015) கன்னி மாதம் என்றழைக்கப்படுவது எந்த மாதம்?
புரட்டாதி
11016) புரட்டாதி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாள் எதனோடு இணைந்து வரும்?
அஷ்டமி அல்லது நவமியோடு
11017) இதனை இன்னும் விளக்கமாக கூறுவதாக இருந்தால்?
துர்காஷ்டமி அல்லது ஆயுத பூஜையோடு இணைந்து வருகிற நாள்
11018) இந்த நாட்களில் என்ன நடந்தது?
அம்பாள் அசுரர்களை நிர்மூலமாக்கினாள்.
11019) பெண் மூலம் நிர்மூலம் என்ற சொல்வழக்கு எவ்வாறு தோன்றியது?
புரட்டாதி மூலம் நட்சத்திர நாளன்று அம்பாள் அசுரர்களை நிர்மூலமாக்கியதால் ஆனி மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்பதற்குரிய உண்மையான பொருளை உணராமல் பொதுவாகவே மூல நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தால் ஆகாது என்று தவறாக புரிந்து கொண்டிருகிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக