திங்கள், 27 டிசம்பர், 2010
அறநெறி அறிவு நொடி
தலைவர் / ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
பஞ்சாங்கம்
8275) கிருஷ்ண பட்சத்தில் வரும் திதிகளின் பெயர்களை தருக?
பூரணை, பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அட்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி.
8276) சுக்கில பட்சத்தில் வருகின்ற 14 திதிப் பெயர்களுக்கும் கிருஷ்ண பட்சத்தில் வருகின்ற 14 திதிப் பெயர்களுக்கும் வித்தியாசம் உண்டா?
இல்லை. இரண்டும் ஒரே பெயர்களை கொண்டிருக்கின்றன
8277) ஒரு திதி எத்தனை காலத்தை கொண்டது?
இரண்டு
8278) ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவற்றை என்னவென்று கூறுவார்கள்?
கரணம்
8279) கரணம் என்பது என்ன?
திதியின் அரைப்பங்கு
8280) 30 திதிகளும் மொத்தமாக எத்தனை கரணங்களைக் கொண்டது?
60
8271) கரணத்துக்குரிய பெயர்களைத் தருக?
பவம், பாலவம், கெளலவம், சைதுளை, கரசை, வனசை, பத்திரை, சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிமிஸ்துக்கினம்.
செவ்வாய், 21 டிசம்பர், 2010
அறநெறி அறிவு நொடி
தலைவர் / ஸ்தாபகர்,
தமிழர் நற்பணி மன்றம்
பஞ்சாங்கம்
8261) இந்துக் கால கணிப்பு முறையின்படி கணிக்கப்படுகின்ற கால அட்டவணை என்று எதனை கூறுவார்கள்?
பஞ்சாங்கத்தை
8262) பஞ்சாங்கம் என்பது எந்த மொழிச் சொல்?
வட மொழிச் சொல்
8263) பஞ்சாங்கம் என்பதன் பொருள் என்ன?
(பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம்)
ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும்
8264) பஞ்சாங்கம் பெரிதும் பயன்படுவது எதற்கு?
சமய சம்பந்தமான விடயங்களுக்கும் சோதிடக் கணிப்புகளுக்கும்.
8265) பஞ்சாங்கம் கொண்டிருக்கும் ஐந்து உறுப்புகளும் எவை?
வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம்
8266) இந்த ஐந்து உறுப்புக்களும் எவற்றுடன் தொடர்புடைய அம்சங்களாகும்?
மரபு வழிக் கால அளவீடுகளுடன்
8267) வாரம் எனும் அம்சத்துக்குள் அடங்குபவை எவை?
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி கிழமைகள்.
8268) பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தை குறிப்பது எது?
திதி
8269) அமாவாசையில் இருந்து பூரணை வரையான காலத்தை என்ன காலம் என்று கூறுவார்கள்?
வளர்பிறை
8270) வளர்பிறை காலத்திற்குரிய திதிகள் எத்தனை?
14
8271) பூரணை தொடக்கம் அமாவாசை வரும் வரையான காலத்தில் எத்தனை திதிகள் வருகின்றன?
14
8272) வளர்பிறை காலத்தில் வரும் திதிகளை என்னவென்று அழைப்பர்?
சுக்கில பட்சத் திதிகள்
8273) மற்றைய தொகுதி திதிகளை என்னவென்று கூறுவர்?
கிருஷ்ண பட்சத் திதிகள்
8274) சுக்கில பட்சத்தில் வரும் திதிகளின் பெயர்களைத் தருக?
அமாவாசை, பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அட்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி
திங்கள், 13 டிசம்பர், 2010
அறநெறி அறிவு நொடி
தலைவர் / ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
8242) சூரியன் ஒரு ராசியைக் கடக்க எத்தனை நாட்களை எடுத்துக் கொள்ளும்?
30 நாட்கள்.
8243) மாதத்தின் தொடக்க நாளாக விளங்குவது எது?
சூரியன் எந்த ராசியில் பிரவேசிக்கிறானோ அதுவே
மாதத்தின் தொடக்க நாளாகும்.
8244) முன்பு மாதத்தின் பெயராக எது கொள்ளப்பட்டுள்ளது?
சூரியன் பிரவேசிக்கும் ராசி
8245) சித்திரை மாதத்திற்குரிய ராசி எது?
மேஷம்
8246) வைகாசி மாதத்திற்குரிய ராசி எது?
ரிஷபம்
8247) ஆனி மாதத்திற்குரிய ராசி எது?
மிதுனம்
8248) ஆடி மாதத்திற்குரிய ராசி எது?
கடகம்
8249) ஆவணி மாதத்திற்குரிய ராசி எது?
சிம்மம்
8250) கன்னி ராசிக்குரிய மாதம் எது?
புரட்டாதி
8251) துலா ராசிக்குரிய மாதம் எது?
ஐப்பசி
8252) கார்த்திகை மாதத்திற்குரிய ராசி எது?
விருச்சிகம்
8253) மார்கழி மாதத்திற்குரிய ராசி எது?
தனுர்
8254) மகரம் ராசிக்குரிய மாதம் எது?
தை
8255) கும்பம் ராசிக்குரிய மாதம் எது?
மாசி
8256) மீனம் ராசிக்குரிய மாதம் எது?
பங்குனி
8257) எந்த மாதத்தில் பூர்ணிமை, அமாவாசை இல்லையோ, அந்த மாதத்திற்குரிய பெயர் என்ன?
விஷமாசம்
8258) எந்த மாதத்தில் இரண்டு பூர்ணிமையோ இரண்டு அமாவாசையோ வந்தால், அந்த மாதத்தை என்னவென்று அழைப்பர்?
மலமாசம்
8259) விஷ மாதத்திலும் மல மாதத்திலும் சுபகாரியங்கள் செய்யலாமா?
கூடாது
8260) இவை இரண்டுக்கும் தோஷம் இல்லாத மாதங்கள் எவை?
சித்திரை, கைகாசி
திங்கள், 6 டிசம்பர், 2010
அறநெறி அறிவு நொடி
தலைவர் / ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
8211 வேதம் எத்தனை வகைப்படும்?
நான்கு
8212 வேதங்கள் நான்கையும் தருக?
இருக்கு, சாமம், யசுர், அதர்வம்
8213 வேதாங்கம் எத்தனை வகைப்படும்?
ஆறு
8214 ஆறு வகை வேதாங்கங்களையும் தருக?
சிக்ஷ, சந்தசு, சோதிடம், வியாகரணம், நிருந்தம், கற்பம்.
8215 உபாங்கம் எத்தனை வகைப்படும்?
நான்கு
8216 உபாங்கங்கள் நான்கையும் தருக?
மீமாஞ்சை, நியாயம், புராணம், ஸ்மிருதி.
8217 மீமாஞ்சை எத்தனை வகைப்படும்?
இரண்டு.
8218 இரண்டு மீமாஞ்சைகளையும் தருக?
பூருவமோமாஞ்சை, உந்தரமீ மாஞ்சை.
8219 நியாயம் எத்தனை வகைப்படும்?
இரண்டு.
8220 இரண்டு வகை நியாயங்களையும் தருக?
கெளதமசூத்திரம், காணத சூத்திரம்.
8221 புராணங்கள் எத்தனை வகைப்படும்?
18
8222 பதினெட்டு வகை புராணங்களையும் தருக?
பிரமபுராணம், பதும புராணம், வைணவ புராணம், சைவ புராணம், பாகவத புராணம், பவிடிய புராணம், நாரதிய புராணம், மார்க்கண்டேய புராணம், ஆக்கினேய புராணம், பிரமகைவர்த்த புராணம், இலிங்க புராணம், வராக புராணம், காந்த புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், மற்சிச புராணம், காருட புராணம், பிரமாண்ட புராணம்.
8223 ஸ்மிருதி எத்தனை வகைப்படும்?
18
8224 பதினெட்டு வகையான ஸ்மிஞதிகளையும் தருக?
மனு ஸ்மிருதி, பிரகஸ்பதி ஸ்மிருதி, தக்ஷ ஸ்மிருதி, யமஸ்மிருதி, கெளதம ஸ்மிருதி, அங்கிர ஸ்மிருதி, யாஞ்ஞ வல்கிய ஸ்மிருதி, பிரசேந் ஸ்மிருதி, சாதாதப ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி, சமவர்ந்த ஸ்மிருதி, உசன சங்க, விகித, அத்திரி, விஷ்ணு, ஆபத்தம்ப ஹாரித.
8225 சைவாகமம் எத்தனை வகைப்படும்? 28
8226 சைவாகமங்களைத் தருக? காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகக்சிரம, அஞ்சுமான, சுப்பிரபேதம், விஷயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்னேயம், வீரம், கெளரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோற்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோந்தம், பாரமேசுவரம், கிரணம், வாதுளம்.
8227 வைவர்ண வாகமம் எத்தனை வகைப்படும்?
இரண்டு.
8228 வைவர்ண வாகமங்களைத் தருக?
பாஞ்சராத்திரம், வைகானசம்,
8229 மேலுலகம் எத்தனை?
ஏழு
8230 ஏழு மேலுலகங்களையும் தருக?
பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், சனலோகம், தபோலோகம், சந்தியலோகம்.
8231 தூவீபம் எத்தனை?
ஏழு
8232 தூவீபங்களைத் தருக?
ஐம்பூந்துவீபம், பிலேஷத்துவீபம், சானமலித்துவீபம், குசத்துவீபம், கிரெளஞ்சித்துவீபம், சாகத்துவீபம், புஷ்கரத்து வீபம்.
8233 சமுத்திரங்கள் எத்தனை?
ஏழு
8234 ஏழு சமுத்திரங்களையும் தருக?
லவண சமுத்திரம், சிV சமுத்திரம், சுரா சமுத்திரம், சர்ப்பி சமுத்திரம், ததி, சமுத்திரம் lர சமுத்திரம், சுத்தோதக சமுத்திரம்.
8235 லவணவம் என்பது என்ன?
உப்பு
8236 இக்ஷ¤ என்பது என்ன?
கருப்பஞ்சாறு.
8237 சுரா என்பது என்ன?
கள்ளு
8238 சர்ப்பி என்பது என்ன?
நெய்.
8239 ததி என்பது என்ன?
தயிர்
8240 lரம் என்பது என்ன?
பால்
8241 சுத்தோகம் என்பது என்ன?
நல்ல நீர்.
திங்கள், 29 நவம்பர், 2010
அறநெறி அறிவு நொடி
தலைவர்/ ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
8197)கழுத்தை ஒட்டி அமையும் அணிகலன் எது?
கண்டமாலை
8198)கண்டமாலையை வேறு எவ்வாறு அழைப்பர்?
கண்டிகை
8199) கழுத்திலிருந்து மார்பு வரை தொங்கும் மாலையை என்னவென்று அழைப்பர்?
ஆரம்
8200) மேற்கையின் நடுவில் அணியும் அணி கலன் எது?
கேயூரம்
8201) பூணூல், இடது தோளிலிருந்து வலப்புற இடுப்புவரை காணப்படுவதை என்னவென்று கூறுவர்?
யக்ஞோபவிதம்
8202) மார்பிற்குக் கீழும் உந்திக்கு மேலும் அணியப்படும் பட்டையான அணிகலன் என்னவென்று கூறுவர்?
உதரபந்தம்
8203) ஒன்றையொன்று குறுக்கிட்டுச் செல்லும் இரு பூணூல்களைப் போன்ற அமைப்பை என்னவென்று கூறுவர்?
சன்னவீரம்
8204) சன்னவீரம் அணிவிக்கப்படுவது யாருக்கு?
ஆண், பெண் தெய்வங்களுக்கு
8205) சன்னவீரம் அணிவிக்கப்பட்டிருக்கும் சில தெய்வங்களைத் தருக.
சுப்ரமண்யர், இந்திரன், தடாதகைப்பிராட்டி
8206) ஒட்டியானம் போன்ற அமைப்பினை உடைய அணிகலன் எது?
கடி சூத்திரம்
8207) கடிசூத்திரத்தின் நடுவில் என்ன இருக்கும்?
சிங்கம் அல்லது யாளிமுகம்
8208 )சிலம்பு எனும் அணிகலன் யாருக்கு உரியது?
மகளிருக்கு
8209) ஆடவருக்கு உரிய அணிகலன் எது?
கழல்
8210) இறை உருவங்களுக்கு அணிவிக்கப்படும் அணிகலன்களின் வகைகளைத் தருக?
தலையணி வகை, கழுத்தணி வகை, காதணி வகை, மூக்கணி வகை, கையணி வகை, கைவிரலணி வகை, இடையணி வகை, துடையணி வகை, கால் விரலணி வகை
அறநெறி அறிவு நொடி
திங்கள், 22 நவம்பர், 2010
அறநெறி அறிவு நொடி
தலைவர்/ ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
இறை உருவங்களுக்கான அணிகலன்கள்
8180) இறை உருவங்களுக்கு அணிவிக்கப்படும் அணிகலன்கள் எவை?
மகுடம், குண்டலம், கண்டி, ஆரம், கேயூரம், யக்கோபவிதம், உதர பந்தம்,
சன்னவீரம், கடி சூத்திரம், ஊருமாலை, கண்டமாலை.
8182) இவற்றில் தலைக்கு மேல் அணியப்படுவது ஏது? மகுடம்
8183) கிரீடத்தின் வகைகளைத் தருக
கிரீட மகுடம், கரண்ட மகுடம், சடா மகுடம், ஜீவால மகுடம்
8184) திருமாலின் தலையில் இடம்பெறுவது என்ன?
கிரீட மகுடம்
8185) தேவியர் மற்றும் முருகன் கணபதி ஆகியோர்களுக்கு அமைக்கப்படுவது என்ன மகுடம்?
கரண்ட மகுடம்
8186) சடையையே மகுடம் போல அமைப்பதை என்னவென்று கூறுவர்?
சடா மகுடம்
8187) சிவனுக்கு அமைக்கப்படும் மகுடம் எது?
சடா மகுடம்
8188) மாரியம்மன், காளி முதலான இறை உருவகங்களுக்கு அணிவிக்கப்படும் மகுடம் எது? ஜீவால மகுடம்
8189) ஜீவால மகுடத்தை வேறு எவ்வாறு அழைப்பர்? தீக்கிரீடம்
8190) காதில் அணியப்படும் அணிகலன்களை என்னவென்பர்?
குண்டலம்
8191) குண்டலம் எத்தனை வகைப்படும்? இரண்டு
8192) இரண்டு வகையான குண்டலங்களையும் தருக?
பத்ர குண்டலம், மகர குண்டலம்
8193) விஷ்ணுவுக்குரிய குண்டலம் என்ன?
மகர குண்டலம்
8194) சிவபெருமானது காதணிகளாக வலது காதில் இடம்பெறும் குண்டலம் எது?
பத்ர குண்டலம்
8195) சிவனின் இடது காதில் என்ன இருக்கும்? தோடு
8196) சிவனின் இடது காதில் தோடு இருப்பதற்கு உரிய காரணம் என்ன?
சிவனின் இடது புறப் பாதி உடல் சக்தியின் அம்சமாக காட்டப்படுவதாலே.
செவ்வாய், 16 நவம்பர், 2010
கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர், ஸ்தாபகர்,
தமிழர் நற்பணி மன்றம்
திரெளபதை அம்மன்
8162) குழந்தை வரம் வேண்டி வேள்வி செய்தவர் யார்?
துருபத மன்னன்
8163) இந்த வேள்வித் தீயிலிருந்து வெளிப்பட்ட வள் யார்?
திரெளபதை
8164) திரெளபதைக்கு உரிய வேறு பெயர்கள் என்ன?
வைதேகி, பாஞ்சாலி, கிருஷ்ணி, யக்னசேனி, பரிஷதி.
8165) பாண்டவர்கள் ஐவரையும் மணம் முடித்தவள் யார்?
திரெளபதை
8166) மகாபாரதத்தின் கதாநாயகியாகத் திகழ்பவள் யார்?
திரெளபதை
8167) திரெளபதைக் கென்று நடத்தப்பட்ட சுயம்வர தினத்திலே அவளைக் காப்பாற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றது யார்?
அர்ச்சுன்னன்
8168) அவளை அழைத்து வந்து “அம்மா! இன்று நாங்கள் ஒரு சிறந்த பொருளைக் கொண்டு வந்துள்ளோம். வந்து பார்” என்று அர்ச்சுனன் யாரிடம் கூறினான்?
அவனது தாயான குந்தியிடம்
8169) குந்திதேவி அதற்கு என்ன கூறுகிறார்? “பார்க்க என்ன இருக்கின்றது?
எதுவானாலும் ஐவருமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்கிறார்.
8170) பிறகு அவளுக்கு என்ன தெரிகிறது?
வந்திருப்பது பெண் என்று
8171) அவள் பெண் என்று தெரிந்த பின் என்ன செய்கின்றாள்?
தன் வாக்கைப் பொய்யாக்காது ஐவரையும் அவளை மணக்கும் படி கூறுகின்றாள்.
8172) திரெளபதை மீது மக்கள் ஈடுபாடு கொள்வதற்கு காரணமாக அமைந்தது எது?
அவளுக்கு ஏற்பட்ட துன்பம்.
8173) இந்த ஈடுபாட்டின் காரணமாக திரெளபதை என்ன நிலைக்கு உயர்த்தப்பட்டார்?
தெய்வ நிலைக்கு
8174) பல்லவ மன்னனான முதலாம் பரமேஸ்வர வர்மன் ஆட்சிக்கு வந்தது எப்போது?
கி. பி. 670 ஆம் ஆண்டில்
8175) திரெளபதை அம்மன் வழிபாடு எப்போது தோற்றம் பெற்றது?
கி. பி. 670 ஆம் ஆண்டு
8176) யாருடைய ஆட்சி காலத்தில் தோற்றம் பெற்றது?
பல்லது மன்னனான முதலாம் பரமேஸ்வரவர்மன் காலத்தில்
8177) திரெளபதை அம்மன் வழிபாடு தோற்றம் பெற்றது எவ்வாறு? கோயில்களிலே மகாபாரதக் கதையை படிக்கச் செய்ததன் மூலம்.
8178) முதலாம் பரமேஸ்வரவர்மன், கோயில்களில் பாரதக் கதையை படிக்கச் செய்தது எதற்காக?
போருக்கு ஏராளமான வீரர்கள் தேவைப்பட்டதால் மக்களுக்கு உணர்ச் சியை ஊட்டி அவர்களைப் போரிலே ஈடுபட வைப்பதற்காக!
8179) இலங்கையில் திரெளபதை அம்மன் ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களைத் தருக?
புத்தளம் மாவட்டத்தில் உள்ள உடப்பு, முந்தல், ஆகிய ஊர்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள மண்முனை, பாண்டி ருப்பு, புளியந்தீவு, போரதீவு ஆகிய ஊர்களிலும்.
திங்கள், 8 நவம்பர், 2010
கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர், ஸ்தாபகர்,
தமிழர் நற்பணி மன்றம்
8146 மகா விஷ்ணு எத்தனை முறை மோகினி ரூபம் எடுத்தார்?
மூன்று முறை.
8147 திருபாற்கடலை கடைந்து பெறப்பட்ட அமிர்தத்தை அசுரர்களிடமிருந்து தேவர்களுக்காக பெற்றுக் கொடுப்பதற்காக விஷ்ணு பகவான் என்ன வடிவம் எடுத்தார்?
மோகினி.
8148 பஸ்மா சூரனின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் வரம் தந்து அருள, அந்த வரத்தாலேயே சிவபெருமானை அந்த அசுரன் பஸ்மம் செய்ய முற்பட்ட பொழுது மோகினி ரூபம் எடுத்து அந்த அசுரனை அழித்தவர் யார்?
விஷ்ணு பகவான்.
8149 தன்னைக் காப்பாற்றிய மோகினியை காணும் ஆவலில் இருந்த சிவபெருமான், மோகினி யின் அழகில் மயக்கம் கொண்டதன் காரணமாக யாரின் வரலாறு நிகழ்ந்தது?
ஐயப்பனின்.
8150 ஞான மார்க்கத்தையும் பக்தி மார்க்கத்தையும் கைவிட்டு கர்ம மார்க்கத்தில் சென்ற வனதுர் ஷிகிளை நல்வழிப்படுத்த பிக்ஷ¡டன ரூபம் எடுத்தவர் யார்?
சிவபெருமான்.
8151 திருமால் என்ன ரூபம் எடுத்தார்?
மோகினி ரூபம்.
8152 ‘ஐயப்பன்’ என்ற பெயர் எதில் இருந்து வந்தது?
சூரியன் என்பதிலிருந்து.
8153 ‘சூரியன்’ என்பதற்கு என்ன பொருள்?
மதிக்கத்தக்கவர்.
8154 ‘தாதா’ என்பதன் அர்த்தம் என்ன?
தந்தை.
8155 ‘ஐயப்பன்’ என்றானது எது?
சூர்ய தாதா.
8156 தமிழ் நாட்டில் ‘சாத்தன் ஐயனார்’ என்ற பெயரில் நெடுங்காலமாக வணங்கி வருவது யாரை?
ஐயப்பனை.
8157 பரபிரம்மமாக திகழ்பவர் யார்?
ஐயப்பன்.
8158 ஐயப்பனை சரணடைவதற்கு காரணம் என்ன?
பக்தர்களது நிலைக்கு ஏற்ப ரூபியாகவும் அரூபியாகவும் சகுணராகவும் நிர்குணராகவும் காட்சி தருவதால்.
8159 ‘அஹம் பிரம்மாஸ்மி’ எனப்படும் அத்வைத் போதம் பெறுகின்றவர்கள் யார்?
ஐயப்ப பக்தர்கள்.
8160 பகவானை அடைய சிறந்த வழி எது?
சரணாகதி.
8161 ஸ்ரீ ‘தர்ம சாஸ்தா’ என்பதன் பொருன் என்ன?
தர்மத்தின் காவலன்.
திங்கள், 1 நவம்பர், 2010
கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர் ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
(தில்லையம்பலவாணனின் தாண்டவச் சிறப்பு)
8122. சந்தியா தாண்டவம் என்பது எதனை?
புஜங்க லளிதத்தை
8123. புஜங்க லளிதத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?
பிரதோஷ நடனம்
8124. பிரதோஷ நடனத்தில் முக்கிய இடத்தை வகிப்பது எது?
பாம்பு
8125. காத்தல் தாண்டவத்தின்போது சிவனின் கையில் கோடரி உண்டு. இது எதனை குறிக்கிறது?
கடவுளின் பேராற்றலையும் சத்தியத்தையும்.
8126. அழித்தல் தாண்டவமூர்த்தியின் சிறப்பு என்ன?
கைகளில் துடியும் தீச்சுடரும் மாறியிருப்பது தான்.
8127. தாண்டவ உருவங்களில் வலக்கையில் காணப்படுகின்ற துடி எந்தக் கையில் காணப்படும்? இடக்கையில்.
8128. இடக்கையில் காணப்படுகின்ற தீச்சுடர் எந்தக் கையில் காணப்படும்?
வலக்கையில்.
8129. அழித்தல் தாண்டவ மூர்த்தியில் எதற்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது?
தீச்சுடருக்கு.
8130. அழித்தல் செயலை அதாவது ஆன்மாக்களை இளைப்பாற்றும் செயலை குறிப்பது எந்தத் தாண்டவம்?
அழித்தல் தாண்டவம்.
8131. மறைத்தல் தாண்டவத்தில் பெருமானின் கைகளில் காணப்படுகின்றவை எவை?
துடி, சூலம், தீச்சுடர், பாம்பு, பாசம்.
8132. இதில் முதன்மை பெறுவது எது?
பாசக்கயிறு
8133. பாசக்கயிறு முதன்மை பெறுவதற்கு காரணம் என்ன?
இடக்கை வலக்கை இரண்டினாலும் பாசக்கயிற்றை பிடித்துக் கொண்டு அதை தலைக்கு மேல் தூக்கியிருப்பதே முதன்மை பெறக் காரணம்.
8134. உயிர்களை மென்மேலும் வினை செய்வதில் அழுத்தி அதன் மூலமாக உயிர்களுக்கு இருவினை செய்யும் மலபரிபாகமும் ஏற்படச் செய்வதற்காக மணத்தல் செயலை இறைவன் செய்கிறார் எனும் சாத்திரக் கருத்தை விளக்குவது எந்தத் தாண்டவம்?
மறைத்தல் தாண்டவம்.
8135. அருளல் தாண்டவத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?
காளி தாண்டவம், சண்ட தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், அனுக்கிரக தாண்டவம்.
8136. அருளல் தாண்டவத்தில் உள்ள தனிச் சிறப்பு என்ன?
குஞ்சிதபாதமாகிய தூக்கிய திருவடியும் கஜஹஸ்தமாகிய நீட்டிய கையும் தாண்டவ பெருமானின் தலைக்கு மேல் இருத்தலாகும்.
8137. ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களுடன் இருந்த ஆன்மாவை அவற்றினின்று பிரித்தெடுத்து அதனைத் தூய்மையும் ஒளியும் உடையதாகச் செய்து உயர்ந்த பேரின்ப நிலையை அடையச் செய்வதை உணர்த்துவது எந்தத் தாண்டவம்?
அருளல்
8138. ஊன்றிய பாத்தின் கீழுள்ள முயலகன் எதைக் குறிக்கின்றது? மும்லங்களை
8139. தூக்கி திருவடி எதைக் குறிக்கிறது?
மலம் நீங்கித் தூய்மையடையப் பெற்ற ஆன்மாவைக் குறிக்கின்றது.
8140. ஐந்தொழில்களையும் ஒரே உருவத்தில் அமைத்துக் காட்டுவது எது?
ஆனந்தத் தாண்டவம்.
8141. ஆனந்தத்தாண்டவத்தில் துடி ஏந்திய கை எதைக்காட்டுகிறது?
படைத்தல்
8142. அபயகரம் எதைக் காட்டுகிறது?
காத்தல்
8143. ஊன்றிய திருவடி எதைக் காட்டுகிறது?
மறைத்தல்
8144. தூக்கிய திருவடி எதைக்காட்டுகிறது?
அருளல்
8145. தீச்சுடர் எதைக் காட்டுகிறது?
அழித்தல்
செவ்வாய், 26 அக்டோபர், 2010
கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர் / ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
(தில்லையம்பலவாணனின் தாண்டவச் சிறப்பு)
8105) முயலகனை என்னவென்று குறிப்பிடுவார்கள்?
கரு, அபஸ்பாரம்
8106) முயலகனின் உருவம் எதைக் குறிக்கும்?
ஆன்மாவில் படிந்துள்ள மலத்தை
8107) தாண்டவமூர்த்தியின் கைகளில் காணப்படுபவை எவை?
துடி, தீச்சுடர், சூலம், பாசம், பாம்பு
8108) பஞ்ச செயல்களுக்கும் எத்தனை தாண்டவங்கள் உள்ளன?
ஐந்து தாண்டவங்கள்
8109) பஞ்ச செயல்களில் காத்தல் எத் தனை வகைப்படும்?
இரண்டு வகைப்படும்.
8110) காத்தல் தாண்டவம் இரண்டு வகைப்படுவதால் ஐந்தொழில் தாண்டவங்களின் எண்ணிக்கை எத்தனையாகும்?
ஆறு
8111) 5 தொழில்களையும் தனித்தனியே காட்டுகின்ற தாண்டவங்கள் ஆறும் 5 தொழில்களையும் ஒருங்கே காட்டுகின்ற தாண்டவம் ஒன்றும் ஆக எல்லாமாக எத்தனை யாகும்?
ஏழு
8112) படைத்தல் தாண்டவத்தை என்ன வென்று கூறுவர்?
காளிகா தாண்டவம்
8113) முனி தாண்டவம் என்பது எதனை?
படைத்தல் தாண்டவத்தை
8114) படைத்தல் தாண்டவ மூர்த்திக்கு எத்தனை கைகள்?
எட்டு
8115) இந்த மூர்த்தியின் வலப்பக்க கைக ளில் உள்ள பொருட்கள் எத்தொழிலை குறிக்கின்றன?
படைத்தல்
8116) திரிசூலம் எதைக் குறிக்கின்றது?
ஆன்மாவின் முக்குணங்களையும்
8117) பாசக்கயிறு எதைக் குறிக்கிறது?
ஆணவம், கன்மம், மாயை
8118) துடி எதைக் குறிக்கின்றது?
படைத்தல் தொழிலை
8119) வலப்பக்க கைகளில் காணப்படும் பொருட்கள் எவை?
திருசூலம், பாசம், துடி
8120) மும்மலத்தினால் மறைப்புண்டு முக்குணவசப்பட்டு ஆன்மா வுக்கு தாண்டவப் பெருமான் தனு, கரண, புவன போகங்களை தருகிறார் எனும் தத்துவத்தை விளக்கும் மூர்த்தம் எது?
முனிதாண்டவ மூர்த்தம்
8121) காத்தல் தாண்டவத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?
புஜங்க லளிதம்
புதன், 20 அக்டோபர், 2010
கே. ஈஸ்வரலிங்கம்
தலைவர்/ஸ்தாபகர்,
தமிழர் நற்பணி மன்றம்
(தானங்களும் பலன்களும்)
8091) அன்னதானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன?
தரித்திரமும் கடனும் நீங்கும்
8092) வஸ்திரதானம் செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?
ஆயுள்விருத்தி
8093) பூமிதானம் செய்வதால் விளையும் நன்மை என்ன?
பிரமலோகத்தையும் ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும்
8094) கோதுமை தானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன?
ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் நீங்கும்
8095) தீப தானம் செய்தால் ஏற்படக் கூடிய நன்மை என்ன?
கண் பார்வை தீர்க்கமாகும்
8096) நெய், எண்ணெய் தானத்தால் ஏற்படும் நன்மை என்ன?
நோய் தீரும்
8097) தங்கம் தானம் செய்தால் ஏற்படும் பலன் என்ன?
குடும்ப தோஷம் நீங்கும்
8098) வெள்ளிதானம் செய்தால் ஏற்படும் பலன் என்ன?
மனக்கவலை நீங்கும்
8099) தேன் தானம் செய்தால் ஏற்படும் பலன் எது?
புத்திர பாக்கியம் உண்டாகும்.
8100) நெல்லிக்கனி தானம் செய்தால் விளையும் நன்மை என்ன?
ஞானம் உண்டாகும்
8101) அரிசி தானம் அளிக்கும் பலன் யாது?
பாவங்களைப் போக்கும்
8102) பால் தானம் எந்தப் பலனை அளிக்கும்?
துக்கம் நீங்கும்
8103) தேங்காய் தானம் செய்தால் விளையும் பலன் என்ன?
நினைத்த காரியம் நிறைவேறும்
8104) பழங்கள் தானம் செய்தால் விளையும் பலன் யாது?
புத்தியும் சித்தியும் கிட்டும்.
செவ்வாய், 12 அக்டோபர், 2010
கே. ஈஸ்வரலிங்கம்
தலைவர்/ஸ்தாபகர்,
தமிழர் நற்பணி மன்றம்
தில்லையம்பலவாணனின் தாண்டவ சிறப்பு
8067) சிவபெருமான் செய்தருளுகின்ற தாண்டவங்கள் எத்தனை?
108
8068) இந்த நூற்றி எட்டுக்குள் அடங்குகின்ற ஐந்தொழில்களும் எவை?
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
8069) ஐந்தொழில்களையும் இறைவன் இடைவிடாமல் செய்துகொண்டிருப்பது எதற்காக?
உயிர்கள் மலம் நீங்கி தூய்மையடைந்து பேரின்பம் அடைவதற்கு.
8070) இச் செயல்களை இறைவன் எவ்வாறு செய்வதாகக் கூறப்படுகிறது?
தாண்டவமாக
8071) கடவுள் இவ்வாறு செய்தருளுவதை எவ்வாறு அழைப்பர்? ஞானக்கூத்து
8072) பஞ்சசெயல் தத்துவத்தை பாமர மக்களும் விளங்கிக் கொள்ளும் வகையில் செய்திருப்பது என்ன?
தாண்டவ உருவத்தை உருவகம் செய்து காட்டியிருப்பது.
8073) தாண்டவ உருவத்தை உருவகம் செய்து காட்டியிருப்பவர்கள்?
சைவ சித்தார்ந்த சாத்திரம் அறிந்த அறிஞர்கள்.
8074) பரந்து விரிந்த ஆகாயம் எதைக் குறிக்கும்?
தாண்டவமூர்த்தியின் உடம்பை.
8075) இதனை திருமந்திரப் பாடலில் குறித்துக் காட்டியவர் யார்?
பட்டினத்தடிகள்
8076) பட்டினத்தடிகள் இதனை எவ்வாறு கூறியுள்ளார்.
ஆகாசமாம் உடல்
8077) பஞ்ச செயல்களில் தாண்டவமூர்த்தியின் இரு திருவடிகளும் எதைக் குறிக்கும்?
மறைத்தல், அருளல் செயல்களை
8078) உயிர்கள் வினைகளை அனுபவிக்கச் செய்து இருவினையொப்பும் மலபரிபாகம் எனும் பக்குவ நிலையை அடையச் செய்வது எது?
ஊன்றிய திருவடி.
8079) அதாவது இது ஐந்தொழில்களில் எந்தத் தொழிலைச் செய்கிறது?
மறைத்தல்
8080) தூக்கிய திருவடியை என்னவென்று அழைப்பர்?
குஞ்சிதபாதம்.
8081) இந்தத் திருவடி எதனைக் குறிக்கிறது?
பக்குவம் அடைந்த உயிருக்கு அனுக்கிரகம் என்னும் அருளைக் கொடுத்து வீடளிக்கின்றது.
8082) தாண்டவமூர்த்திக்கு எத்தனை கண்கள் என்று கூறப்பட்டுள்ளது?
மூன்று
8083) மூன்றாவது கண் எங்குள்ளது?
நெற்றியில்
8084) இந்த முக்கண்களும் எவற்றைக் குறிக்கின்றன?
இச்சா சக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்னும் மூன்று சக்திகளை
8085) இந்த முக்கண்களும் மூன்று சக்திகளை குறிப்பாக எதில் கூறப்பட்டுள்ளது!
காமிகா ஆகமத்தில்
8086) காதுகள் எதை குறிக்கின்றது?
ஓங்காரத்தை
8087) கடவுள் தமது திருக்கையில் உள்ள துடியை ஒலித்து உண்டாக்கும் ஓசை எந்த வடிவமுடையது?
ஓங்கார வடிவம்.
8088) சடைமுடி எதற்கு அடையாளம்? ஞானத்துக்கு
8089) நுன்சிகை ஞானம் என்பது எதனை?
திருமந்திர வாக்கை
8090) தாண்டவமூர்த்தியின் ஊன்றிய பாதத்தின் கீழே காணப்படுகின்ற உருவம் எது?
முயல்கள்.
திங்கள், 4 அக்டோபர், 2010
கே. ஈஸ்வரலிங்கம்
தலைவர் / ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
(விநாயக சஷ்டி)
8037) விரத காப்பை எப்போது கட்டிக்கொள்ள வேண்டும்?
விரத ஆரம்ப நாளில்
8038) எத்தனை இழையிலான விரத காப்பை கட்டிக் கொள்ள வேண்டும்?
21 இழையிலான
8039) பெண்கள் விரதக் காப்பை எந்தக் கையில் கட்டிக் கொள்ள வேண்டும்?
இடது கையில்
8040) ஆண்கள் எந்தக் கையில் கட்டிக் கொள்ள வேண்டும்?
வலது கையில்
8041) விரதாரம்பத்தில் பவித்ரம் அணிந்து சங்கல்பம் செய்யும் போது காப்பு கட்டுவது எந்தெந்த விரதங்களின் போது என்று கூற முடியுமா?
விநாயக சஷ்டி, கந்த சஷ்டி விரதங்களின் போது
8042) இந்தக் காப்பை எப்போது அவிழ்க்க வேண்டும்?
விரதம் முடிந்த மறுநாள் அதாவது பாரணையிலன்று காலை விதுர் ஜனத்துடன் அவிழ்க்கப்பட வேண்டும்.
8043) விநாயக சஷ்டி விரதத்தை அனுஷ்டித்து இடையிலே கைவிட்டு விரதக் காப்பையும் அவிழ்த்து வீசிய பெண் யார்?
இலக்கணசுந்தரி
8044) இலக்கண சுந்தரி யாருடைய மனைவி?
விக்கிரமாதித்த மன்னனின்
8045) விரதக் காப்பை வீசியதால் இலக்கண சுந்தரிக்கு நேர்ந்தது என்ன?
அன்றிலிருந்து அநேக கஷ்டங்களை அடைந்து மன்னனால் விலக்கப்பட்டு காட்டையடைந்தாள்.
8046) அவள் வீசிய காப்பு எதன் மீது விழுந்தது?
ஒரு அவரைக் கொடி மீது
8047) அந்த அவரைக் கொடிக்கு என்ன நேர்ந்தது?
அளவின்றிச் செழித்து வளர்ந்தது.
8048) அவரைக் கொடியிற் கிடந்த விரதக் காப்பைக் கண்டெடுத்து அணிந்து கொண்டது யார்?
பணிப்பெண்ணொருத்தி
8049) இவள் இந்த விரதக் காப்பை என்ன செய்தாள்?
தான் அதனைக் கையில் கட்டி விரதம் அனுஷ்டித்தாள்
8050) அவ்விரத பலனாக அவள் பெற்ற பெறுபேறு என்ன?
மன்னனை மணந்து அரண்மனை சேர்ந்தது.
8051) காட்டில் இருந்த இலக்கணசுந்தரி என்ன செய்தாள்?
அங்கொரு மூதாட்டியின் அறிவுரைப்படி விநாயக சஷ்டி விரதத்தை மறுபடி தொடங்கி முறைப்படி நோற்றாள்.
8052) அந்நாளில் காட்டுக்கு வேட்டையாட வந்தது யார்?
விக்கரமாதித்த மன்னன்
8053) வேட்டையாட வந்த விக்கிரமாதித்தனுக்கு என்ன நடந்தது? களைப்பால் தாகம் ஏற்பட்டது
8054) விக்கிரமாதித்தன் என்ன செய்தார்?
தண்ணீருக்காக இலக்கண சுந்தரி இருந்த குடிலை நாடினார்.
8055) இலக்கண சுந்தரியைக் கண்ட விக்கிரமாதித்தன் என்ன செய்தார்?
மறுபடி அவளை மணம் செய்து அழைத்துச்சென்றான்.
8056) ஒரு பொதுத் தெய்வமாக வணங்கப்படுபவர் யார்?
விநாயகர்
8057) இவர் ஏன் ‘பொதுத் தெய்வமமாக’ கருதப்படுகிறார்?
இந்துக்கள், பெளத்தர்கள், வைஷ்ணவர்கள் என அனைவரும் வணங்குவதால்.
8058) பெளத்தர்கள் கணபதியை என்ன சொல்லி போற்றி வணங்குகிறார்கள்?
‘சித்தி தாதா’ என்று
8059) ‘கணபதி ஹிருதயம்’ என்ற ஸ்தோத்திரம் யாரால் உபதேசிக்கப்பட்டது?
புத்தபகவானால்
8060) இது யாருக்கு உபதேசிக்கப்பட்டது?
ஆனந்தர் என்பவருக்கு
8061) கணபதி ஹிருதயத்தை புத்தர் உபதேசித்தார் என்று எதில் கூறுப்பட்டுள்ளது?
நேபாள புராணக் கதையில்
8062) இந்து மதத்திற்கு மூலாதாரமாக விளங்குவது எது?
அறுவகைச் சமய வழிபாடு
8063) இதனை அருளியது யார்?
ஸ்ரீ சங்கரர்
8064) அறுவகைச் சமய வழிபாட்டில் கணபதியை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடும் சமயம் எது?
காணபத்தியம்
8065) விநாயகரின் திருவுருவம் எத்தனை என போற்றி வணங்கப்படுகிறது?
32
8066) அந்த 32 நாமங்களையும் தருக?
பால கணபதி, பக்தி கணபதி, தருண கணபதி, வீர கணபதி, சக்தி கணபதி, த்விஜ கணபதி, சித்தி கணபதி உச்சிஷ்ட கணபதி, ஷிய்ர கணபதி, விக்ன கணபதி, ஹோரம்ப கணபதி, லக்ஷ்மி கணபதி, துர்க்கா கணபதி, சங்கடஹர கணபதி, மகா கணபதி, விஜய கணபதி, நிருத்த கணபதி, ஊருத்துவ கணபதி, ஏகாட்சர கணபதி, வர கணபதி, திரயாஷர கணபதி, ஷிப்ரபிரசாத கணபதி, ஹரித்திரா கணபதி, ஏகதந்த கணபதி, சிருஷ்டி கணபதி, உத்தண்ட கணபதி, ரணமோசண கணபதி, துண்டி கணபதி, துவிமுக கணபதி, மும்முக கணபதி, சிங்க கணபதி, யோக கணபதி.
திங்கள், 27 செப்டம்பர், 2010
கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்,
தமிழர் நற்பணி மன்றம்
(விநாயகப் பெருமான்)
8017) இறைவனை அவரது பல வித நாமங்களையும் சொல்லி ஓம்காரத்துடன் உச்சரித்து வணக்கம் செலுத்துவதை என்னவென்று கூறுவர்
அர்ச்சனை
8018) அர்ச்சனையில் ஒவ்வொரு நாமம் சொல்லும் போதும் என்ன செய்வார்கள்?
ஒவ்வொரு புஷ்பம் அல்லது பத்திரம் சமர்ப்பித்தல் மரபு.
8019) அர்ச்சனையின் பின் என்ன செய்யப்படும்?
வேதபாராயணம், தேவபாராயணம், விநாயகர் துதி பாராயணம் செய்யப்படும்.
8020) இவ்வாறு பாராயணம் செய்த பின் என்ன செய்யப்படும்?
அர்ச்சகருக்குரிய தாம்பூல தட்சிணைகளை வழங்கி விருந்தினர், அடியவர், ஏழைகள் ஆகியோருக்கு உணவிட்டு அதன்பின் உணவருந்துவது முறை.
8021) மாதந்தோறும் வருகின்ற பூர்வபட்சம் சதுர்த்தி நாட்கள் யாருக்குரியது?
விநாயகருக்குரியது
8022) இந்த நாட்களை எவ்வாறு அழைப்பர்?
மாத சதுர்த்தி
8023) மாதந்தோறும் விரதமிருக்க விரும் புவோர் என்ன செய்யலாம்?
ஆவணி சதுர்த்தியிலே பூஜை வழிபாடு களுடன் சங்கல்ப பூர்வமாக ஆரம்பித்து இந்த விரதத்தை கைக்கொள்ள வேண்டும்.
8024) சங்கல்ப பூர்வமாக என்பது என்ன?
இன்ன காரணத்துக்காக இந்த விரதத்தை நான் இத்தனை வருடம் கைக்கொள் வேன் என்று உறுதியாக நினைப்பது சங்கற்ப பூர்வமாக எனலாம்.
8025) இந்த சதுர்த்தி விரதத்தை எவ்வ ளவு காலம் அனுஷ்டிக்க வேண்டும்?
21 வருடம் விரதமிருப்பது நன்று.
8026) 21 வருடம் விரதமிருக்க இயலாத வர்கள் என்ன செய்யலாம்?
7 வருடங்கள் அனுஷ்டிக்கலாம். அல்லது 21 ற்கு குறையாமல் மாத சதுர்த்தி விரத மிருந்து, அதையடுத்து வரும் ஆவணி சதுர்த்தியில் நிறைவு செய்யலாம்.
விநாயக சஷ்டி
8027) கார்த்திகை மாதத் தேய் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறை சஷ்டி வரையிலான 21 நாள் அனு ஷ்டிக்கப்படும் விரதம் எது?
விநாயக சஷ்டி.
8028) மஹா விஷ்ணுவுக்கு சாபம் ஏற்பட் டது எதனால்?
முன்பொரு சமயம் பொய்ச் சாட்சி சொன்னதால்.
8029) விஷ்ணு யாரை வணங்கியதால் சாபம் நீங்கப் பெற்றார்?
விநாயகரை.
8030) இச்சாபம் நீங்கப் பெற்றது எப்போது?
மார்கழி மாத வளர்பிறை சஷ்டி நாளான விநாயக சஷ்டி அன்று ஆகும்.
8031) இந்நாளை இறுதியாகக் கொண்ட 21 நாள் விரதத்தை என்னவென்பர்?
பெருங்கதை விரதமென்பர்.
8032) இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் போது முதல் 20 நாளும் உணவு உண்ணலாமா?
ஒரு பொழுது மட்டும் போசனம் செய்யலாம். இரவு பால் பலம் அல்லது பலகாரம் உட்கொள்ளலாம்.
8033) தினமும் விநாயகருக்கு எவற்றை நிவேதனம் செய்யலாம்?
இளநீர், கரும்பு, அவல், மோதகம், எள்ளுருண்டை.
8034) இவற்றை நிவேதனம் செய்து என்ன செய்யலாம்?
பெருகதை, விநாயகர் புராணம் போன்றவற்றை படிக்கலாம். அல்லது கேட்கலாம். விநாயகர் அகவல், விநாயகர் கவசம் போன்றவற்றை பாராயணம் செய்து வழிபாடு செய்யலாம்.
8035) விநாயகரின் சரிதம் கூறும் நூல் எது?
பெருங்கதை
8036) இறுதி நாளில் என்ன செய்யலாம்?
விசேஷ பூசை வழிபாடுகள் செய்து உபவாசமிருந்து மறுநாள் பாரணை செய்ய வேண்டும்.
திங்கள், 20 செப்டம்பர், 2010

அறநெறி அறிவு நொடி
கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
ஆய கலைகள் 64
7982) நீரில் நடத்தலை என்னவென்பர்? ஜல ஸ்தம்பம்
7983) காற்றில் நடத்தலை என்னவென்பர்? வாயு ஸ்தம்பம்
7984) திட்டி ஸ்தம்பம் என்பது எதனை? கண் பயிற்சி
7985) வாக்கு ஸ்தம்பம் என்பது என்ன? வாய்ப் பயிற்சி
7986) சுக்கில ஸ்தம்பம் என்பது என்ன? இந்திரியக்கட்டு
7987) கன்ன ஸ்தம்பம் என்பது என்ன? மறைந்தவற்றைக் காணுதல்
7988) கடக ஸ்தம்பம் என்பது என்ன? யுத்த ஆயுதங்களை வசீகரித்தல்
7989) அவஸ்தைப் பிரயோகம் என்பது என்ன? ஆத்மாவை இயக்குதல்
விநாயகர் விரதம்
7990) மும்மணிகளைப் போல் விநாயகருக்குரிய மூன்று சிறப்பான விரதங்களைத் தருக? சுக்கிர வார விரதம், சதுர்த்தி விரதம், விநாயக ஷஷ்டி விரதம்.
7991) வாரந்தோறும் அனுஷ்டிக்கும் விரதம் எது? சுக்கிரவார விரதம்
7988) மாதந்தோறும் அனுஷ்டிக்கும் விரதம் எது? சதுர்த்தி
7992) வருடத்தில் ஒரு தடவை அனுஷ்டிக்கும் விரதம் எது? விநாயக ஷஷ்டி விரதம்
7993) சுக்கிரவார விரதம் எப்போது அனுஷ்டிக்கப் படுகிறது? வெள்ளிக்கிழமை தோறும்
7994) இந்த விரதத்தை எப்போது ஆரம்பிப்பது நல்லது? வைகாசி மாத வளர்பிறையில் வரும் முதலாவது வெள்ளிக்கிழமையில்
7995) இவ்விரதத்தை எவ்வாறு அனுஷ்டிக்கலாம்? இரவு ஒரு நேரம் பால் பழம் அல்லது பலகாரம் உட்கொள்வது நன்று. இயலாதவர்கள் ஒரு நேர உணவு உண்டு விரதமிருக்கலாம்.
7996) விநாயகப் பெருமான் உற்பவமானது எப்போது? விநாயக சதுர்த்தியன்று
7997) இந்த விரதத்தை எப்போது அனுஷ்டிக்க வேண்டும்? ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தித் திதியன்று
7998) அந்த நாளில் சதுர்த்தி எந்த வேளையில் நிற்க வேண்டும்? மத்தியானத்தில்
7999) ஆவணி சதுர்த்தி விரதம் பற்றி எந்த புராணத்தில் சிறப்பித்து கூறுப்பட்டுள்ளது? கந்தபுரணத்தில்
8000) இந்த விரதத்தைப் பற்றி பஞ்சபாண்டவர் களுக்கு உபதேசித்தது யார்? சூத முனிவர்
8001) பாண்டவர்களுக்கு வனவாசம் செல்ல நேர்ந்தது எதனால்? துரியோதனனாதி கெளரவர்களின் கொடுமையினால்
7999) பாண்டவர்கள் காட்டிலே மிகுந்த கஷ்டமும் மன வேதனையும் அடைந்திருக்கும் நிலையில் யாரை சந்திக்கிறார்கள்? சூத முனிவரை
8000) சூதமுனிவரிடம், தமது கஷ்டங்கள் நீங்கி சுகமாக வாழ வழி கேட்டவர் யார்? தருமர்
8001) அதற்கு வழியாக சூதமுனிவர் உபதேசித்தது எதனை? விநாயக சதுர்த்தி விரதத்தை
8002) சூதமுனிவர் தருமரிடம் வேறு என்ன கூறினார்? இந்த விரதத்தை அனுஷ்டித்து பயன் பெற்ற வர்களின் வரலாற்றை.
8003) இந்த விரதத்தை அனுஷ்டித்து தமயந்தி அடைந்த பலன் என்ன? நளனை அடைந்தது.
8004) கிருஷ்ணர் அடைந்த பயன் என்ன? ஜாம்பவதியையும் சியமந்தக மணியையும் பெற்றுக் கொண்டது.
8005) இராமன் அடைந்த நன்மை என்ன? சீதையை மீட்டது
8006) இந்திரன் அடைந்த பயன் யாது? சுரப் பகையை வென்றது
8007) பகீரதன் பெற்ற பலன் யாது? கங்கையை பூமிக்கு கொண்டு வந்தது.
8008) இந்த விரதத்தை பாண்டவர்கள் அனுஷ்டித்ததால் அடைந்த பயன் என்ன? உரிய காலத்தில் ஆட்சி அதிகாரத்தை பெற்றது.
8009) இஷ்டசித்திகளை பெற, நினைத்த காரிய சித்தியை விரும்புவோர் எந்த விரதத்தை கைக்கொள்ளலாம்? விநாயக சதுர்த்தி விரதத்தை
8010) விநாயக சதுர்த்தி அன்று முதன் முதலில் என்ன செய்ய வேண்டும்? அதிகாலையில் துயிலெழுந்து நீராடி நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்து பிரார்த்தனை வழிபாடுகள், ஆலய தரிசனம் முதலியவற்றில் ஈடு பட வேண்டும்.
8011) மத்தியானம் உணவு உண்ணலாமா? ஒரு பொழுது உண்ணளாம்
8012) இந்த உணவில் எந்த எண்ணெய் சேர்க்கக் கூடாது? நல்லெண்ணெய்
8013) இரவில் உணவு உண்ணலாமா? பட்டினி இருக்க முடியாதவர்கள் பால் பழம் அல்லது பலகாரம் உண்ணலாம்.
8014) விநாயக சதுர்த்தி பூஜையின் போது நிவேன தனங்களாக படைக்கக் கூடியவை எவை? அறுசுவை உணவும் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் என்பனவும் நாவற்பழம், விளாம்பழம், வாழைப்பழம், கரும்புத் துண்டு, வெள்ளரிப்பழம், அப்பம், மோதகம், கொழுக்கட்டை.
8015) இவை ஒவ்வொன்றும் எத்தனை எத்தனையாக நிவேதனம் செய்ய வேண்டும்? 21. (வெள்ளரிப் பழத்தை 21 துண்டுகளாக வெட்டி வைக்கலாம்)
8016) விநாயக சதுர்த்தி பூஜையில் இடம்பெறும் இன்னொரு முக்கிய அம்சம் என்ன? 21 பத்திரம், 21 புஷ்பம், 21 அறுகம்புல் என்பவற்றால் தனித்தனியாக அர்ச்சனை செய்தல்.
திங்கள், 13 செப்டம்பர், 2010
கே. ஈஸ்வரலிங்கம்
தலைவர்/ ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்
(ஆய கலைகள் அறுபத்து நான்கு)
7948) கவி புனையும் ஆற்றல் பெற எவற்றை படிக்க வேண்டும்?
காவியங்களை
7949) அலங்காரம் என்பது என்ன?
அலங்கரித்தல்
7950) மதுர பாடணம் என்பது என்ன?
மொழித் தேர்ச்சி
7951) நிருத்தம் என்பது என்ன?
நடனம்
7952) சத்தத்தைக் கொண்டு அறிதலை என்னவென்பர்?
சத்தப்பிரமம்
7953) வேணு என்பது என்ன கலை?
புல்லாங்குழல் ஊதும் கலை
7954) கால நிர்ணயப் பயிற்சி எது?
தாளம்.
7955) எறியும் அல்லது பாணப் பயிற்சி என்பது என்ன?
அஸ்திரப் பரீட்சை
7956) கனகப் பரீட்சை என்பது எதனை?
தங்கத்தை சோதிக்கும் அறிவு
7957) இருதப் பரீட்சை என்பது எதனை?
தேர் ஓட்டும் பயிற்சி
7958) கஜப் பரீட்சை என்பது என்ன?
யானை ஏற்றம்
7959) அகவப் பரீட்சை என்பது எதனை?
குதிரை ஏற்றம்
7960) இரத்தினப் பரீட்சை என்பது எதனை?
இரத்தினக் கல் சோதிக்கும் திறனை
7961) மண்ணை சோதிக்கும் திறனை என்னவென்பர்?
பூமிப் பரீட்சை
7962) சங்கார மவிலக்கணம் என்பது என்ன?
படைகளை வழிநடத்தும் திறன்
7963) ஆகருடணம் என்பது என்ன?
கவர்ச்சிக்கலை
7964) பேய்களை ஏவுதலை என்னவென்பர்?
உச்சாடணம்
7965) வித்தையின் மூலம் அதிர்ச்சியினை உண்டாக்கலை என்பன வென்பர்?
வித்து வேடணம்
7966) மதன சாஸ்திரம் என்பது என்ன?
காதல் கலை
7967) மோகனம் என்பது என்ன?
மயங்கச் செய்யும் கலை
7968) மற்றவர்களை வசீகரித்தலை
என்னவென்பர்?
வசீகரணம்
7969) ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றும் கலையை என்னவென்பர்?
இரசவாதம்
7970) காந்தருவ வாதம் என்பது என்ன?
குழுவாத்தியப் பயிற்சியை
7971) மிருகம், பறவை, ஊர்வன என்பவற்றை வசீகரிக்கும் ஆற்றலை என்னவென்பர்?
பைபீலவாதம்
7972) துக்கமுள்ள மனதை தேற்றும் பயிற்சியை என்னவென்பர்?
கவுத்துகவாதம்
7973) தாது வாதம் என்பது என்ன?
தாது பயிற்சியை
7974) விஷத்தை முறிக்கும் பயிற்சியை என்னவென்பர்?
காரூடம்
7975) முட்டி என்பது என்ன?
கைரேகை சாஸ்திரம்
7976) ஆகாயப் பிரவேசம் என்பது என்ன?
ஆகாயத்தில் மறைத்தலை
7977) ஆகாயத்தில் நடந்து செல்வதை என்னவென்பர்?
ஆகாய ஸ்தம்பம்
7978) பரகாயப் பிரவேசம் என்பது என்ன?
மறு உடம்பில் பிரவேசித்தல்
7979) அதிசயமானவற்றை வரவழைத்தலை என்னவென்பர்?
இந்திரஜாலம்
7980) மகேந்திரஜாலம் என்பது என்ன?
ஆகாயத்திலும் பூமியிலும் அதிசயம் செய்தல்
7981) அக்னி ஸ்தம்பம் என்பது என்ன?
நெருப்பில் நடத்தலை
திங்கள், 6 செப்டம்பர், 2010
கே. ஈஸ்வரலிங்கம் தலைவர் / ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்
ஆயகலைகள் அறுபத்து நான்கு
7229. ஆயகலைகள் அறுபத்து நான்கையும் அருளிச் செய்தவர் யார்?
கல்விக்கு அதிபதியான சரஸ்வதி.
7230. ஆயகலைகள் அறுபத்து நான்கையும் தருக.
அகர விலக்கணம், இலிதம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம், நீதி சாஸ்திரம், ஜோதி சாஸ்திரம், தரும சாஸ்திரம், யோக சாஸ்திரம், மந்திர சாஸ்திரம், சகுன சாஸ்திரம், சிற்ப சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், உருவ சாஸ்திரம், இதிகாசம், காவியம், அலங்காரம், மதுர பாடணம், நாடகம், நிருத்தம், சத்தப்பிரமம், வீணை, வேணு, மிருதங்கம், தாளம், அஸ்திரப்பரீட்சை, கனகப் பரீட்சை, இருதப் பரீட்சை, கஜப் பரீட்சை, அசுவப்பரீட்சை, இரத்தினப் பரீட்சை, பூமிப் பரீட்சை, சங்கார மவிலக்கணம், மல்யுத்தம், ஆகருடணம், உச்சாடணம், வித்து வேடணம், மதன சாஸ்திரம், மோகனம், வசீகரணம், இரவசாதம், காந்தருவ வாதம், பைபீலவாதம், கவுத்துகவாதம், தாதுவாதம், காரூடம், நட்டம், முட்டி, ஆகாயப் பிரவேசம், ஆகாயஸ் தம்பம், பரகாயப் பிரவேசம், அதிரிசியம், இந்திரஜாலம், மகேந்திர ஜாலம், அக்கினி ஸ்தம்பம், ஜல ஸ்தம்பம், வாயு ஸ்தம்பம், திட்டி ஸ்தம்பம், வாக்கு ஸ்தம்பம், சுக்கில ஸ்தம்பம், கன்ன ஸ்தம்பம், கடக ஸ்தபம், அவஸ்தைப் பிரயோகம்.
7231. அகரவிலக்கணம் என்பது என்ன?
எழுத்துக் கூட்டும் பயிற்சி.
7232. இலிதம் என்பது என்ன?
கையெழுத்துப் பயிற்சி
7233. கணிதம் என்பது என்ன?
எண் பயிற்சி
7234. வேதத்திற்கு பொருள் யாது?
இந்து நெறி.
7235. புராணத்தால் குறிப்பிடப்படுவது யாது?
இந்துக்கடவுளின் வரலாறு
7236. வியாகரணம் என்பது என்ன?
இலக்கணம்
7237. நீதி சாஸ்திரம் என்பது எதனை?
நீதி அறிவுத்திறனை.
7238. ஜோதிடத்திறனை என்னவென்று அழைப்பார்கள்?
ஜோதிட சாஸ்திரம்.
7239. தரும சாஸ்திரம் என்பது என்ன?
சட்டத்திறன்.
7240. யோக சாஸ்திரத்தின் மூலம் எதனை அறிந்துகொள்ளலாம்?
யோகப் பயிற்சிகளை.
7241. வேதத்தின் நடைமுறைப் பயிற்சிகளை எதன் மூலம் அறிந்துகொள்ளலாம்?
மந்திர சாஸ்திரம் மூலம்.
7242. சகுன நிமித்தம் பற்றி அறிய எதை கற்றுக்கொள்ள வேண்டும்?
சகுன சாஸ்திரத்தை
7243. சிலை அமைக்கும் பயிற்சிகளை பெற கற்றுக்கொள்ள வேண்டியது எதை?
சிற்ப சாஸ்திரம்
7244. வைத்திய சாஸ்திரம் எதனைக் கூறுகின்றது?
மருந்துகள், நோய் பற்றிய அறிவுகளை
7245. சாமுத்திரிகா இலட்சணம் பற்றி எதில் அறிந்துகொள்ளலாம்?
உருவ சாஸ்திரத்தில்
7246. உருவசாஸ்திரம் என்பதன் பொருளாக எதனைக் கொள்ளலாம்?
உருவத்தால் அறிதலை.
7247. சரித்திர அறிவுகளை பெற எதனை படிக்கலாம்?
இதிகாசங்களை.
திங்கள், 30 ஆகஸ்ட், 2010
கே. ஈஸ்வரலிங்கம் -
தலைவர்/ ஸ்தாபகர்,
தமிழர் நற்பணி மன்றம்
(கோலம்)
7203) விஷ்ணு பகவான் கோலம் இடுதலை என்னவென்று குறிப்பிடுகிறார்?
பிண்டி மாறுதல்
7204) விஷ்ணு பகவான் கோலத்தை இவ்வாறு கூறியது ஏன்?
அரிசி மாவினால் அதிகாலையில் வீட்டு வாசலில் கோலமிட அந்த மாவை எறும்புகளும் காகங்களும் பிற உயிரினங்களும் உண்பதிலிருந்து நம் தர்ம சிந்தனை தொடங்க வேண்டும் என்பதுதான் அவர் சொன்னதன் பொருளாகும்.
7205) இந்த அரிசி மாவை உண்ணும் எறும்புகள் என்ன செய்யுமாம்?
இப்படிப்பட்ட தர்மத்தைச் செய்தவர்களின் கண்பார்வை நன்கு விளங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுமாம்.
7206) வைகுண்டத்தில் யார் கோலம் போட்டதாக புராணங்கள் கூறுகின்றன?
மஹா லட்சுமி
7207) மாக்கோலம் இடும்போது செம்மண் கரை தீட்டுவார்கள் இது ஏன்?
அழகுக்காகவா? அழகுக்காக மட்டுமல்ல, வெள்ளையும் சிவப்புமாய் கோலம் போடுவது விஷ்ணுவிற்கே கோயில் கட்டுவது போலாகுமாம்!
(இராஜகோபுரம்)
7208 இராஜகோபுரத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?
தூலலிங்கம்
7209 தூலம் என்பதன் பொருள் என்ன?
கண்ணால் பார்க்கக்கூடியது
7210 யோகிகள் கோபுரத்தை என்னவென்று குறிப்பிடுவார்கள்?
பிரமந்திர மத்ய கபாலத்வாரம்.
7211 கோபுரம் எத்தனை அடுக்குகளைக் கொண்டு அமைக்கப்படும்?
3, 5, 7, 9.
7212 மூன்று அடுக்கு கோபுரம் எதனை குறிக்கும்?
ஐம்பொறிகளை
7213 ஐந்து அடுக்கு கோபுரம் எவற்றைக் குறிக்கும்?
ஐம்பொறிகளுடன் மனம், புத்தி
7214 ஒன்பது அடுக்கு கோபுரம் எவற்றைக் குறிக்கும்?
ஐம்பொறிகளுடன் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவற்றை
(தீபாராதனை)
7215 இறைவனுக்கு எத்தனை வகை உபசாரங்கள் செய்யப்படும்?
16 வகை
7216 16 வகை உபசாரங்களில் மிகச் சிறந்தது எது?
தீபாராதனை.
7217 முக்கோடி தேவர்களும் தீபங்களில் அமர்ந்து இறைவனை தரிசித்துச் செல்வது எப்போது? தீபாராதனையின்போது.
7218 தீபாராதனையின் போது தீபத்தை இறைவனுக்கு எத்தனை முறை காட்டுவார்கள்? மும்முறை.
7219 முதல் சுற்று எதற்காக காட்டப்படுகிறது?
அண்ட சராசரத்தை காக்க.
7220 இரண்டாம் சுற்று எதன் பொருட்டு காட்டப்படுகிறது?
அண்ட சராசரத்தில் உள்ள ஜீவராசிகளை காக்க.
7221 மூன்றாம் சுற்று எதற்காக காட்டப்படுகிறது?
பஞ்ச பூதங்களை காக்க.
7222 ஒன்பது தீபங்கள் எதைக்குறிக்கும்?
நவசக்தியை.
7223 ஏழு தீபங்கள் எதைக் குவிக்கும்?
சப்த கன்னியரை
7224 ஐந்து தீபங்கள் எதைக் குறிக்கும்?
ஐந்து கலைகளை.
7225 மூன்று தீபங்கள் எதைக் குறிக்கும்?
சூரிய, சந்திர, அக்கினியை.
7226 அகிலாண்டேஸ்வரி ஆதிபராசக்தியை குறிப்பது எந்த தீபம்?
ஒற்றைத்தீபம்.
7227 தீபாராதனையில் இறுதியாக காட்டப்படுவது எந்த தீபம்?
கும்ப தீபம்
7228 கும்பதீபம் எதை குறிக்கும்?
உலக தத்துவமான சதாசிவத் தத்துவத்தை.
செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010
கே. ஈஸ்வரலிங்கம் - தலைவர்/ ஸ்தாபகர்,
தமிழர் நற்பணி மன்றம்
(கோலங்கள்)
7184) அழகு மட்டுமன்றி நம்மை பக்தி பாதையிலும் அழைத்துச் செல்பவை எவை?
கோலங்கள்
7185) புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட இந்த கோலங்கள் எத்தன்மையை கொண்டவை?புனிதத் தன்மை
7186) கோலங்கள் போடுவதால் கிடைக்கும் பலன் என்ன?
புண்ணியம்
7187) ஆண்டவனின் அவதாரங்களையும் வடிவங்களையும் என்னவென்று கூறுவர்?
திருக்கோலம்
7188) கோலங்கள் வெறும் வடிவங்கள் மட்டும்தானா?
இல்லை, அது விஷயங்களை வெளிப்படுத்தம் உருவங்கள்
7189) ஒரு வீட்டில் நடைபெறும் விசேஷத்தை முற்றத்திலேயே சொல்லுவது எது
வாசலில் இடப்படும் கோலம்.
7190) ஒரு பூஜை முழுமையடைய முதல் காரணமாக அமைவது எது?
கோலம்
7191) கோலங்களுக்கு பூஜை செய்வது எப்போது?
(சித்திரமான கோலத்திற்கு) சித்திரா பெளர்ணமி அன்று.
7192) பூஜிப்பதற்குரிய வேறு கோலம் என்ன?நவக்கிரஹ கோலம்
7193) நவக்கிரஹ கோலங்கள் எவ்வாறு போடப்படும்?
அந்தந்த கிரகத்திற்கு உரிய தானியத்தை தாம்பாளத்தில் பரப்பி, அதில் வரைந்து பூஜிக்கப்படும்.
7194) கோலங்களை அரிசி மாவினால் போடுவதால் ஏற்படும் பலன் என்ன?
ஆயிரக் கணக்கான பேருக்கு அன்னமிட்ட புண்ணியம்.
7195) அரிசி மா கோலத்தில் இந்த அன்னமிட்ட புண்ணியம் எவ்வாறு கிடைக்கிறது?
எண்ணற்ற எறும்புகள் அதனை உண்பதால்
7196) வளைவுகளான கோடுகளாக இருந்தாலும் வாழ்க்கை நேராக இருக்க இறைவனின் ஆசியை பெற்றுத் தருபவை எவை?
கோலங்கள்
7197) புராண காலத்திலிருந்து புகழ்பெற்று விளங்குபவை எவை?
கோலங்கள்
7198) இராமன் முடிசூடப்போகின்றான் என்பதை அறிந்த மக்கள் தமது மகிழ்ச்சியை தெரிவித்தது எவ்வாறு?
வீடு வாசல், வீதி என எல்லா இடங்களிலும் குதூகலத்துடன் கோலம் போட்ட தன் மூலமேயாகும்.
7199) சந்தோஷத்தின் வெளிப்பாடாக மட்டுமல்லாது நல்லதையே நடத்தித் தரும் அச்சாரமாக விளங்குவது எது?
கோலம்
7200) மஹா லட்சுமிக்கு கோலத்தின் மகிமையை எடுத்துரைத்தவர் யார்?
மஹா விஷ்ணு
7201) மஹா விஷ்ணு இதனை எப்போது எடுத்துரைத்தார்?
வராக அவதாரம் எடுத்தபோது
7202) மஹா விஷ்ணு கூறியது என்ன?
கலியுகத்தில் மக்கள் மனக்குழப் பத்திலும் துன்பத்திலும் உழல்வார் கள் தர்மம் நலிவுறும் அப்போது அவரவர் இல்லங்களில் இடப் படும் கோலங்கள் மக்களின் மனதை நல்வழிக்குத் திருப்ப உதவும்
திங்கள், 9 ஆகஸ்ட், 2010
கே. ஈஸ்வரலிங்கம் தலைவர் / ஸ்தாபகர், தமிழர் நற்பணி மன்றம்
(வரலக்ஷ்மி விரதம்)
7154. இல்லந்தோறும் திருமகளை நோன்பிருந்து வரவேற்பது எப்போது? வரலட்சுமி விரதம் அன்று
7155. வரலட்சுமி விரதம் எப்போது வரும்?ஆடி அல்லது ஆவணி மாதம் வெள்ளிக்கிழமையில்
7156. வரலட்சுமி விரதம் குறிப்பாக எப்போது வரும்?குறிப்பாக ஆவணி மாதம் பெளர்ணமி நாளுக்கு முந்தையாக வரும் வெள்ளிக்கிழமையில்
7157. வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் என்றால் அம்மனை எப்போது அழைக்க வேண்டும்?முதல் நாளான வியாழனன்று
7158. பூஜை செய்யப் போகும் இடத்தில் என்ன செய்ய வேண்டும்? இழை கோலம் போட்டு காவியிட்டு ஒரு தட்டில் அட்சதை பரப்பி அம்மனை ஆவாஹனம் செய்யப்போகும் கலசத்தை அதன் மீது வைக்க வேண்டும். கலசத்தினுள் அட்சதையுடன் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், ஒரு வெள்ளிக்காசு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழம் என்பன வைத்து மாவிலையைக் கலசத்தின் மீது வைத்து அதன் மீது தேங்காயை வைக்க வேண்டும். அம்மனின் முகத்தைக் கலசத்தோடு இணைத்து வைத்து விளக்கேற்றி வெண்பொங்கல் நிவேதனம் செய்யலாம். அதன்பின் அம்மனை அழைப்பதாக உள்ள பாடல்கள் பாடி வரலட்சுமி அம்மனை வரவேற்கலாம்.
7159. வரலட்சுமி நோன்புக்கு முதல் அம்மனை அழைத்து மறுநாள் என்ன செய்ய வேண்டும்? நோன்பிருந்து பூஜை செய்து அம்மனை ஆராதனை செய்ய வேண்டும்.வெள்ளிக்கிழமையன்று விளக்கேற்றி வைத்து நல்ல நேரத்தில் பிள்ளையார் பூஜை செய்து கலசத்தில் அம்மனை ஆவாஹனம் செய்து கலச பூஜை செய்து பின் லக்ஷ்மி அஷ்டோத்திரம் முடித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.
7160. அட்சதை என்பது என்ன? அரிசி
7161. நிவேதனங்களாக எதை அளிக்க வேண்டும்? மஹா நிவேத்யத்தை
7162. மஹா நிவேத்யத்தில் அடங்கி இருப்பவை எவை? அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி, முதலியவற்றுடன் பழவகைகள்.
7163. மஹா நிவேத்யத்தை அளித்தபின் என்ன செய்ய வேண்டும்?நோன்பு சரடிற்கு தனியே பூஜை செய்ய வேண்டும்.
7164. நோன்பு சரடி என்பது எதனை? நோன்பு நூலை
7165. நோன்பு சரடிற்கு பூஜை செய்தபின் செய்ய வேண்டியது என்ன? நோன்பு நோற்றதன் அடையாளமாக மணிக்கட்டில் சரடைக் கட்டிக் கொள்ளலாம்.
7166. எந்த மணிக்கட்டில்? வலது மணிக்கட்டில்
7167. பூஜை முடிந்த பின் நாள் முழுவதும் விளக்கு எரிந்து கொண்டிருந்தால் நல்லதா? ஆம் நல்லது.
7168. மாலையில் என்ன செய்யலாம்? பால் பழம் நிவேதனம் செய்து இரவு தொடங்கும் நேரம் தீபத்தை சாந்தி செய்யலாம்.
7169. மறுநாள் சனிக்கிழமையன்று செய்யக்கூடியதைத் தருக? புனர் பூஜை என்கின்ற பூஜை செய்து சுமங்கலப் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம் நிவேதனம் செய்த சுண்டல் முதலியவற்றைக் கொடுப்பது வழக்கம்.
7170. அம்மனை மனம் குளிர பாட்டுக்கள் பாடி அரிசி வைக்கும் பாத்திரத்தை பூஜை செய்த இடத்திற்கு அருகில் வைத்து ஆரத்தி எடுத்தபின் அம்மனை மெதுவாக அந்த அரிசியுடன் கூடிய பாத்திரத்தில் வைப்பார்கள் இது ஏன்? நம் ஆராதனைகளை ஏற்ற திருமகள் நம்முடன் தங்குவதாக ஒரு ஐதீகம்.
திங்கள், 2 ஆகஸ்ட், 2010
கே. ஈஸ்வரலிங்கம்
தலைவர்/ஸ்தாபகர்
(தமிழர் நற்பணி மன்றம்)
முருகப் பெருமான்
7036) ‘முருகு’ என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன?
இளமை, மனம், அழகு, தெய்வம்
7037) சங்ககால மக்கள் மலையும் மலை சார்ந்த பகுதிக்குரிய கடவுளாக வழிபட்டது யாரை?
முருகன்
7038) முருகப் பெருமானின் அருட்திருட் நாமங்களை தருக.
முருகன், குமரன், குகன், சரவணபவன், சேனாதிபதி, சுவாமிநாதன், வேலன், கந்தன், கார்த்திகேயன், சண்முகன், தண்டாயுதபாணி, வடிவேலன், குருநாதன், சுப்பிரமணியன்
7039) முருகன் என்பதற்கு உரிய பொருள் என்ன?
அழகுடையவன்
7040) குமரன் என்பதற்குரிய பொருள் என்ன?
இறைவனாய் எழுந்தருளியிருப்பவன்
7041) குகன் என்பதன் பொருள் யாது?
கங்கையால் தாக்கப்பட்டவன்
7042) சரவணப் பொய்கையில் உதித்ததால் முருகனுக்கு ஏற்பட்ட பெயர் என்ன?
சரவணபவன்.
7043) முருகன் சேனைகளின் தலைவனாக விளங்கியதால் ஏற்பட்ட பெயர் என்ன?
சேனாதிபதி
7044) முருகனுக்கு சுவாமிநாதன் என்ற பெயர் வரக் காரணமென்ன?
தந்தைக்கு உபதேசித்ததால்
7045) வேலன் என்ற பெயர் வரக் காரணம் என்ன? வேலினை ஏந்தியதால்
7046) கந்தன் என்ற பெயரின் பொருள் என்ன?
ஒன்று சேர்க்கப்பட்டவன்
7047) கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் ஏற்பட்ட பெயர் என்ன?
கார்த்திகேயன்
7048) ஆறுமுகங்களை உடையவன் என்பதால் ஏற்பட்ட பெயர் என்ன?
ஆறுமுகன், சண்முகன்
7049) தண்டாயுதத்தை கையில் ஏந்தியதால் வந்த பெயர் என்ன?
தண்டாயுதபாணி
7050) அழகுடைய வேலை ஏந்தியதால் வந்த பெயர் என்ன?
வடிவேலன்
7051) தந்தைக்கு குருவாக இருந்து உபதேசித்ததால் வந்த பெயர் என்ன?
குருநாதன்
7052) சுப்பிரமணியன் என்ற பெயர் வரக் காரணமென்ன?
மேலான பிரம்மத்தின் பொருளாக இருப்பவன் என்பதால்
7053) முருகனுக்கு உரிய பழமொழிகள் சில தருக.
வேலை வணங்குவதே வேலை
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை;
சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை
வயலூர் இருக்க அயலூர் தேவையா?
காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி
அப்பனை பாடிய வாயால்-
ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;
மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.
(சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
கந்தபுராணத்தில் இல்லாதது
எந்த புராணத்திலும் இல்லை.
கந்தன் களவுக்கு கணபதி சாட்சியாம்
பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
சென்னிமலை சிவன்மலை சேர்ந்தோர் பழனிமலை.
செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
திருத்தனி முருகன் வழித்துணை
வருவான் வேலனுக்கு ஆனை சாட்சி
வேலிருக்க வினையுமில்லை;
மயிலிருக்கப் பயமுமில்லை.
செட்டிக் கப்பலுக்குச் செந்தூரன் துணை
திங்கள், 26 ஜூலை, 2010
கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்
(நவராத்திரி)
6999) எமனின் இரண்டு கோரைப் பற்கள் என ஞான நூல்கள் கூறுவது எந்த காலங்களை?
கோடை காலத்தையும் மழை காலத்தையும்
7000) இந்த கோடை, மழை காலங்களிலிருந்து நம்மை காப்பவள் யார்?
அம்பிகை
7001) அம்பிகைக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு கொண்டாடப்படும் விழா எது?
நவராத்திரி
7002) அகிலத்தில் இருக்கும் அத்தனை உயிர்களிலும் அம்பிகை இருக்கிறாள் அவள் கருணையில் தான் அனைத்தும் உயிர் வாழ்கின்றன என்ற தத்துவத்தை விளங்குவது எது? கொலு
7003) கொலுப் படிகள் எத்தனை அமைக்க வேண்டும்?
9, 7, 5 என ஒற்றைப் படையில்
7004) கீழிருந்து முதல் படியில் எவற்றை வைக்க வேண்டும்?
ஓரறிவு உள்ள உயிரினங்களின் பொம்மைகளை
7005) ஓரறிவுள்ள உயிரினங்கள் எவை?
செடி, கொடி, மரங்கள், பூங்கா, சிறிய அளவிலான தோட்டம்
7006) இரண்டாவது படியில் எவற்றை வைக்க வேண்டும?
இரண்டறிவுள்ள உயிரினங்களின் வடிவங்களை
7007) இரண்டறிவு உள்ள உயிரினங்கள் எவை?
அட்டை, நத்தை, சங்கு போன்ற ஊர்ந்து
செல்லும் உயிரினங்கள்
7008) மூன்றாவது படியில் வைக்க வேண்டிய எவை?
மூன்று அறிவு உயிரினங்கள்
7009) மூன்று அறிவு உயிரினங்களை எவை?
கரையான், எறும்பு
7010) நான்காவது படியில் வைக்க வேண்டிய நான்கு அறிவுள்ள உயிரினங்கள் எவை?
வண்டு, பறவை.
7011) ஐந்தாவது படியில் வைக்க வேண்டிய ஐந்து அறிவுள்ள உயிரினங்கள் எவை?
பசு முதலான விலங்கினங்கள்.
7012) ஆறாவது படியில் இருக்க வேண்டிய ஆறறிவுள்ள ஜீவராசிகள் எவை?
மனித வடிவங்கள், வாத்திய கோஷ்டி, பொம்மைகள்
7013) ஏழாவது படியை அலங்கரிக்க வேண்டியவை எவை?
மகான்கள், ஞானிகளின் உருவங்கள்
7014) எட்டாவது படியில் இடம்பெற வேண்டியவை எவை?
தெய்வ அவதாரங்கள், தசாவதாரம் முதலான தெய்வ வடிவங்கள்
7015) பூர்ண குடுபத்துடன் அம்பிகை திருவுருவம் மட்டும் இருக்க வேண்டியது எத்தனையாவது படியில்?
ஒன்பதாவது படி உச்சியில்
7016) கொலு மண்டப அமைப்பு முறை எதனை விளக்குகின்றன?
அம்பிகையின் அருளாட்சியின் கீழ் தான் அனைத்து ஜீவராசிகளும் வாழ்கின்றன என்பதுடன் அவை படிப்படியாக முன்னேறி வாழ்வில் உயர்ந்து மேன்மை அடைகின்றன என்பதை விளக்குகின்றன.
7017) நியமத்தோடு இருந்து நவராத்திரி பூஜை செய்ய முடியாதவர்கள் என்ன செய்யலாம்?
அஷ்டமி அன்று மட்டுமாவது அவசியம் பூஜை செய்ய வேண்டும்.
7018) இரண்டு வயதுள்ள ஒரு பெண்ணை குமாரி என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டியது எப்போது?
நவராத்திரியின் முதல் நாளன்று
7019) அந்தப் பெண்ணுக்குப் பெற்றோர் இட்ட பெயர் குமாரியாக இருக்க வேண்டுமா?
இல்லை. யாரோ ஒரு பெண்ணை குமாரியாக உருவகப்படுத்தி பூஜை செய்ய வேண்டும்.
7020) இவ்வாறு குமாரியை பூஜை செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?
ஏழ்மை நீங்கும், ஆயுள் பலப்படும், செல்வம் பெருகும்.
7021) நவராத்திரியின் இரண்டாவது நாளில் என்ன செய்ய வேண்டும்?
3 வயதுள்ள பெண்ணை திரி மூர்த்தி என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும்.
7022) திரிமூர்த்தியை பூஜை செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?
அறம், பொருள், இன்பம், நீண்ட ஆயுள் உண்டாகும்.
7023) மூன்றாவது நாளன்று என்ன செய்ய வேண்டும்?
4 வயது பெண்ணை கல்யாணி என்ற பெயரில் பூஜை செய்ய வேண்டும்.
7024) இதனால் ஏற்படும் பலன் என்ன?
கல்வி ஞானம் பெருகும்
7025) ஐந்து வயது பெண்ணை ரோகிணி என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டியது எப்போது?
நான்காவது நாளன்று
7026) ரோகிணி பூஜை தரும் நன்மை என்ன?
நோய்களைப் போக்கி ஆரோக்கிய வாழ்வு தரும்.
7027) ஐந்தாவது நாளன்று செய்ய வேண்டியது என்ன?
6 வயதுள்ள பெண்ணை காளிகா என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும்.
7028) காளிகா பூஜை தரும் பலன் என்ன?
பகைவர்களை வெல்லும்
7029) நவராத்திரியின் ஆறாவது நாளில் செய்யக் கூடியது என்ன?
7 வயது பெண்ணை சண்டிகா என்ற பெயரால் பூஜை செய்தல்.
7030) சண்டிகா பூஜை அளிக்கும் பலன் என்ன?
செல்வச் செழிப்பைத் தரும்.
7031) ஏழாவது நாளில் வழிபடக் கூடியது யாரை?
8 வயதுள்ள பெண்ணை சாம்பவி என்ற பெயரில்
7032) சாம்பவி பூஜையால் விளையும் நன்மை என்ன?
அரசாங்க பதவிகளை கொடுக்கும். பகைமையை வேரறுக்கும்.
7032) எட்டாவது நாளன்று வழிபடக் கூடியவள் யார்?
9 வயது பெண். துர்க்கை என்ற நாமத்தில்.
7033) துர்க்கை பூஜை அளிக்கும் திருவருள் என்ன?
கஷ்டமான காரியங்களை சிரமமின்றி செய்யும் சக்தியைக் கொடுக்கும்.
7034) ஒன்பதாவது நாளுக்குரியவள் யார்?
10 வயதுள்ள சுபத்ரா
7035) சுபத்ரா பூஜையால் ஏற்படும் பலன் என்ன?
புலனடக்கம் உண்டாகும்.
திங்கள், 19 ஜூலை, 2010
அறநெறி அறிவு நொடி
கே. ஈஸ்வரலிங்கம்
தலைவர்/ ஸ்தாபகர், தமிழர் நற்பணி மன்றம்
இறை உருவங்களுக்கு அணிகலன்கள்
6968) இந்து மத வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இறை உருவங்களுக்கு அணிக்கலன்களாகி இருப்பவை எவை?
மகுடம், குண்டலம், கண்டி, ஆரம், கேயூரம், யக்ஞோவிதம், உதரபந்தம், சன்னவீரம், கடிசூத்திரம், ஊருமாலை, கண்டமாலை.
6969) இந்த அணிகலன்களில் தலைக்கு மேல் அணியக் கூடியது எது?
மகுடம்
6970) மகுடங்களின் வகைகளைத் தருக.
கிரீட மகுடம், கரண்ட மகுடம், சடா மகுடம், ஜீவால மகுடம்.
6971) இந்த மகுடங்களில் திருமாலின் தலையில் இடம்பெறுவது எந்த மகுடம்?
கிரீட மகுடம்.
6972) தேவியர் மற்றும் முருகன், கணபதி ஆகியோர்களுக்கு அமைக்கப்படும் மகுடம் எது?
கரண்ட மகுடம்
6973) சடையையே மகுடம் போல் அமைப்பதை என்னவென்று கூறுவர்?
சடா மகுடம்
6974) சடா மகுடம் எந்த தெய்வத்துக்கு அமைக்கப்படும்?
சிவனுக்கு
6975) மாரியம்மன், காளி முதலான இறை உருவங்களுக்கு அமைக்கப்படும் மகுடம் எது?
ஜீவால மகுடம்
6976) ஜீவால மகுடத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?
தீக்கிரீடம்
6977) காதில் அணியப்படும் அணிகலனை என்னவென்பர்?
குண்டலம்
6978) குண்டலம் எத்தனை வகைப்படும்?
இரண்டு
6979) அந்த இரண்டு வகையான அணிகலன்களையும் தருக.
பத்ர குண்டலம், மகர குண்டலம்
6980) இதில் விஷ்ணுவுக்கு அணிவிக்கப்படும் காதணியை எவ்வாறு அழைப்பர்?
மகர குண்டலம்
6981) சிவபெருமானின் காதணிகளாக இடம்பெறுபவை எவை?
பத்ர குண்டலமும் தோடும்
6982) சிவபெருமானின் எந்த காதில் பத்ர குண்டலம் விளங்கும்?
வலது காதில்
6983) சிவனின் இடது காதில் தோடு இடம்பெறுவது ஏன்?
சிவனின் இடது புறம்பாதி உடல், சக்தியின் அம்சமாகக் காட்டப்படும் புராண மரபை ஒட்டிய இடது காதில் தோடு இடம்பெறுகிறது.
6984) அணிகலன்களில் கழுத்தை ஒட்டி அமையும் அணிகலனை என்னவென்பர்?
கண்டமாலை
6985) கண்டமாலையை வேறு எவ்வாறு அழைப்பர்?
கண்டிகை
6986) கழுத்திலிருந்து மார்பு வரை தொங்கும் மாலையை என்னவென்பர்?
ஆரம்
6987) இறைவனின் மேற்கையின் நடுவில் அணியப்படுவது எது?
கேயூரம்
6987) இடது தோளிலிருந்து வலப்புற இடுப்புவரை காணப்படுவது எது?
பூனூல்
6989) இந்த பூணூலை என்னவென்று அழைப்பர்?
யக்ஞோபவிதம்
6990) மார்பிற்குக் கீழும் உந்திக்கு மேலும் அணியப்படும் பட்டையான அணிகலன் எது?
உதிரபந்தம்
6991) ஒன்றையொன்று குறுக்கிட்டுச் செல்லும் இரு பூணூல்களைப் போன்ற அமைப்பு என்னவென்று கூறப்படும்?
சன்னவீரம்
6992) சன்னவீரம் எந்த தெய்வங்களுக்கு அணிவிக்கப்படும்?
வீரத்துடன் தொடர்புடைய ஆண், பெண் தெய்வங்களுக்கு
6993) இதற்கு உதாரணமாக சில தெய்வங்களின் பெயர்களைத் தருக.
சுப்ரமண்யர், இந்திரன், தடாதகைப் பிராட்டி.
6994) ஒட்டியானம் போன்ற அமைப்பினை உடையது எது?
கடிசூத்திரம்
6995) கடிசூத்திரத்தின் நடுவில் அமைக்கப்படுவது என்ன?
சிங்கம் அல்லது யாளி முகம்
6996) சிலம்பு எனும் அணிகலன் யாருக்கு உரியது?
மகளிருக்கு
6997) ஆடவருக்கு உரிய அணிகலன் எது?
கழல்
6998) இறையுருவங்களுக்கு அணிவிக்கப்படும் அணிகலன்கள் வேறு எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
தலையணி வகை, கைவிரலணி வகை, இடையணி வகை, துடையணி வகை, பாத அணி வகை.
ஞாயிறு, 11 ஜூலை, 2010
உடப்பு தீ மிதிப்பு
இவ்வாலயத்தில் 11 ஆம் திகதி 11 மணிக்கு உட் கொடியேற்றமும் 15 ஆம் திகதி காலை 9 மணிக்கு வெளிக் கொடியேற்றமும் நடைபெறும். அன்று இரவு 9 மணிக்கு மகாபாரதக் கதை ஆரம்பமாகும். எதிர்வரும் 21 ஆம் திகதி இரவு 11 மணிக்கு இங்கு ஸ்ரீ திரெளபதாதேவி சுயம்வரமும் 22 ஆம் திகதி இரவு 11 மணிக்கு ஸ்ரீ திரெளபதாதேவி திருக்கல்யாணமும் 23 ஆம் திகதி இரவு 11 மணிக்கு அர்ச்சுணன் தீர்த்த யாத்திரையும் 24 ஆம் திகதி இரவு 11 மணிக்கு ஸ்ரீ திரெளபதாதேவி துகிலுரிதலும் 25 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு பாண்டவர் வனம் புகுதலும் 26 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு அர்ச்சுணன் தவநிலையும் 27 ஆம் திகதி காலை 7 மணிக்கு வீரபத்திரர் அபிஷேகமும் விசேட பூஜையும் உள் வீதி வெளி வீதி உற்சவமும் அக்கினிக் குண்டக் காவலும் மாலை 4 மணிக்கு தேத்தரசன் கோட்டை பிடித்தலும் 28 ஆம் திகதி காலை 6 மணிக்கு செந்தழல் மூட்டும் திருமிகு காட்சியும் பிற்பகல் 3.00 மணிக்கு ஸ்ரீ திரெளபதா தேவி வாது முடிப்பும் விசேட வசந்த மண்டப பூஜையும் இரவு 7 மணிக்கு அனற் குளத்தில் அன்பர்கள் நடனமிடும் அதியற்புத பக்திப் பரவசம் மிக்க தீ மிதிப்பாகிய பூமிதிப்பு உற்சவமும் இடம்பெறும். 29 ஆம் திகதி இரவு 7 மணிக்கு அன்னை ஸ்ரீ திரெளபதாதேவி ஊர்வலமும் 11 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகமும் 12 மணிக்கு கொடி இறக்கமும் மாவிளக்கு பூஜையும் உற்சவமூர்த்திகள் அம்பாள் தத்தம் யதாஸ்தானம் எழுந்தருளலும் மங்களப் பிரசாதம் வழங்கலும் இடம்பெறும். ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ பத்மஜெயராம குருக்கள் தலைமையில் கிரியைகள் நடைபெறும், உடப்பு ஸ்ரீ வீரபத்திர காளியம்மன் தேவஸ்தானத்தின் பிரதம பூசகர் முத்தையா பரந்தாமன் பூசகர் கரகம் எடுப்பார். இவ்வாலயத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 7 மணிக்கு பாற் குடப் பவனியுடன் பிராயச்சித்த அபிஷேகம் நடைபெறும். விசேட உற்சவ தினங்களில் மாலை 5.30 மணிக்கு அருள்மிகு திரெளபதை அம்மன் கரக உற்சவம் ஆலயத்திலிருந்து மாரியம்மன் கோயிலுக்குச் சென்று அருள்கூடி வரும் அற்புதக் காட்சி இடம்பெறும். விசேட உற்சவ தினங்களில் காலை 9 மணிக்கு அபிஷேகமும் தொடர்ந்து பூஜையும் மாலை 7 மணிக்கு வசந்த மண்டப பூஜையும் விநாயகர், ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதி பெருமானின் அலங்கார பவனியும் மேள வாத்திய இன்னிசை விருந்துடன் ஊர்வலமும் நடைபெறும். விசேட தினங்களில் உடப்பூர் நாடக மன்றங்களின் பல் சுவை நாடகங்களும் இடம்பெறும். ஸ்ரீ பார்த்தசாரதி, ஸ்ரீ திரெளபதாதேவி தேவஸ்தானத்தின் 108 அடி தவதள இராஜ கோபுரத் திருப்பணியும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 28 ஆம் திகதி இரவு 7 மணிக்கு பூமிதிப்பாகிய தீ மிதிப்பு வைபவம் நடைபெறும். |
திங்கள், 5 ஜூலை, 2010
அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்
6933) பசு பாலாகக் கொடுப்பது எதனை? அதன் இரத்தத்தை
6934) பசுவின் தோல் எதற்கு உதவும்? மேளம் செய்ய
6935) தாய்ப்பாலுக்கு இணையான மருத்துவ குண மும் புரதங்களும் எதில் உள்ளது. பசும் பாலில்
6936) ஆட்டுப் பாலில் புரதங்கள் இல்லையா? ஆட்டுப் பாலில் கூடுதலான புரங்கள் இருப்பதாக கூறினாலும் அது ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் பசும்பால் உடனடியாக செரிக்கும்.
6937) இறைவனின் திருமேனி மீது தானாகவே பால் சுரக்கும் வகையைச் சேர்ந்த பசு எது? காராம் பசு
6938) சில ரகமான புற்களை மட்டும் சாப்பிடும் பசு எது? காராம் பசு
6939) காராம் பசு எந்தத் தன்மையுடைய புற்களை மட்டும் உண்ணும்? மூலிகைகளுக்கு ஒத்த தன்மையுடைய புற்களை மட்டும் அது உண்ணும். கடைகளில் விற்கப்படும் தீவனங்களை அது விரும்பாது உண்ணாது
6940) காராம் பசு தவிடு, புண்ணாக்கு உள்ளிட் டவை கலந்த புளித்த நீரை குடிக்குமா? அவற்றையும் குடிக்காது.
6941) கிரஹப் பிரவேசத்தின்போது வீட்டிற்குள் பசுவின் சிறுநீரை தெளிப்பார்களே இது ஏன்? அது மருத்துவ குணம் மிக்கதாக இருப்பதாலே
6942) பசுவின் சிறுநீரை என்னவென்று அழைப்பர்? கோமியம்
6943) கிரஹப் பிரவேசத்தின்போது பசுவை வீட்டைச் சுற்றி வலம் வர வைத்து அதனை வீட்டிலேயே சிறுநீர் கழிக்க வைப்பது ஏன்? அந்த வீட்டிற்கு இறைவன் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
6944) சந்திரனை நெருங்கக் கூடிய பாகையை என்னவென்று கூறுவர்? திதி
6945) குறிப்பிட்ட நீதி நட்சத்திரமும் அமையும் நாளில் குறிப்பிட்ட கிழமை வந்தால் அதனை என்னவாக கருதுவர்? கரி நாளாக
6946) கரி நாளன்று நல்ல காரியங்களை துவக்கினால் என்ன நடக்கும்? அது விருத்திக்கு வராது.
6947) சுப காரியங்களுக்கு கொள்முதல் செய்ய வேண்டிய பொருட்களின் பட்டியலைத் தயாரிக்கும் பொழுதும் புத்தாடை புனையும் பொழுதும் நிச்சயதார்த்தம் செய்து எழுதும் பத்திரத்திலும் ஒரு ஒரத்தில் அல்லது நான்கு ஓரங்களிலும் மஞ்சளைத் தடவுகின்றோம் இது ஏன்? மஞ்சள் மங்களமானது என்பதாலாகும்.
6948) திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் எனக் கூறுவதன் அர்த்தம் என்ன? நெல், கரும்பு போன்ற பயிர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அறுவடையை கொடுத்துவிடும். ஆனால் திருமணம் என்பது அனைத்து காலத்திலும் பிரச்சினைகளை சமாளித்து அறுவடை கொடுக்கும் பயிர் என்ற அர்த்தத்தில் முன்னோர்கள் கூறினர். பழங்கால மக்கள் எதையும் இயற்கையுடன் ஒப்பிட்டுப் பேசினர். அந்த வகையில் திருமணமும் காலம் காலமாக அறுவடை அளிக்கக்கூடிய ஒன்று. கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர்.
6949) திதிக்கு எதிரே உள்ள பாகையை என்ன வென்பர்? நட்சத்திரக் கணக்கு
செவ்வாய், 29 ஜூன், 2010
அறநெறி அறிவு நொடி
கே. ஈஸ்வரலிங்கம், தலைவர், ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம் 6919 ஆரத்தி எடுப்பதற்கு பயன்படுத்தும் பொருட்கள் எவை? மஞ்சள், குங்குமம், வெற்றிலை, கற்பூரம், நீர் 6920 ஆரத்தி எடுப்பதன் நோக்கம் என்ன? ஒருவரை தண்ணீரால் சுழற்றி திருஷ்டி கழிக்கும்போது அவர் மீதான அனைத்து வகை கண் திருஷ்டியும் அகன்று விடும் 6921 இதனை என்னவென்று கூறுவர்? நீர் வலம் நாடுதல் 6922 வாழை இலையில் சாப்பிடுவதற்கு முன்னதாக அந்த உணவை நீர் கொண்டு ஆராதித்து விட்டு அதன் பின்னரே சாப்பிடத் தொடங்குவர். இது ஏன்? இது போன்று செய்வதால் நாம் உண்ணும் உணவு புனிதப்படுவதாக நம்புவதால். 6923 புதுமணத் தம்பதிகள் திருமணம் முடிந்து மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வரும்போது திருஷ்டி கழிக்கப்படுவது ஏன்? இக்காலத்தில் காத்து, கருப்பு உள்ளிட்ட தீவினைகள் சில கெட்ட சக்திகள் கண் திருஷ்டி உள்ளிட்டவை பாதிப்பை ஏற்படுத்தும். எனவே புதுமணத் தம்பதிகள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பதாக அவர்களுடன் வந்திருக்கலாம் எனக் கருதப்படும் தீய சக்திகளை அகற்ற திருஷ்டி கழிக்கப்படுகிறது. 6924 குங்குமம் எவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது? மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றைக் கலந்து. 6926 மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் என்னவென்று கூறலாம்? கிருமிநாசினி 6927 மனித உடலில் தெய்வ சக்தி வாய் ந்த இடமாக கருதப்படுவது எது? நெற்றிக்கண் 6928 இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் உண்டாகும் பலன் என்ன? அமைதி கிடைக்கும். 6929 குங்குமத்துக்குரிய சக்தி என்ன? ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி உள்ளது. 6930 நெற்றியில் குங்குமம் வைப்பதால் உண்டாகும் வேறு பலன் என்ன? உஷணம் குறையும் 6931 உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துவது உடலின் எந்தப் பகுதி? நெற்றிப் பகுதி 6932 நெற்றியில் குங்குமம் வைப்பதால் உண்டாகும் வேறு பலன்கள் என்ன? குங்குமத்தின் மீது சூரிய ஒளிபடுவதால் அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் விட்டமின் டி உடலுக்குள் சென்று நன்மை உண்டாக்குகிறது. |
திங்கள், 21 ஜூன், 2010
அறநெறி அறிவு நொடி

6899) ஆலயத்தில் ‘ஆ’ என்பது என்ன?
ஆன்மா அல்லது ஆணவம்
6900) ‘லயம்’ என்பது என்ன?
லயிப்பதற்கு உரியது அல்லது அடங்குதல்
6901) ஆலயம் என்றால் என்ன?
ஆண்டவன் திருவடியில் ஆன்மா லயிப்பதற்குரிய இடம்
6902) ஆலயம் என்ற பதத்திற்கு வேறு எவ்வாறு பொருள் கூறலாம்?
ஆணவ மனம் அடங்கும் இடம்
6903) முக்திக்கு வழி எது?
பக்தி
6904) அப்பக்திக்கு தூண்டுகோலாக அமைந்தது எது?
ஆலயம்
6905) கோயிலுக்கு சென்று வழிபடுதற்குரிய சிறந்த நேரம் எது?
காலை, உச்சி, அந்திப் பொழுதுகள்
6906) காலை, உச்சி அந்திப் பொழுதுகளை என்ன வென்று கூறுவர்?
திரிசந்தி காலங்கள்
6907) ஆலயத்திற்கு செல்லும் போது எடுத்துச் செல்லக்கூடிய பழம், தேங்காய், வெற்றிலை இவற்றை என்னவென்று கூறுவர்?
நிவேதனப் பொருட்கள்
6908) தூபம், தீபம், பத்திர, புஷ்பம், பூமாலை முதலியன என்ன?
நிவேதனத்தின் அங்கங்கள்
இறைவன் திருமேணியை நீரால் நீராட்டுவது
6910) திருக்கோயில் பூசையில் முதன் முதலில் இடம்பெறும் அபிஷேகத்தை என்ன வென்று கூறுவர்?
திருமஞ்சம்
6911) இறைவன் திருமேனியை நீரால் நீராட்டிய பின் வேறு எவற்றால் அபிஷேகம் செய்வர்?
பால், பழம், இளநீர், நெய், தேன், பன்னீர், திருநீறு
6912) திருக்கோயில்களில் நடைபெறும் பூசைகளில் ஒன்று கூறவும்?
பரார்த்த பூசை
6913) பரார்த்த என்றால் என்ன?
பிற உயிர்களின் நன்மைக்காக என்று பொருள்
நாடு, மக்கள், நாட்டுத் தலைவர்கள் ஆகியோர் பொருட்டு.
6915) திருக்கோயில்களில் வழிபாடு செய்பவர்கள் வலமாக பிரதட்சணம் செய்வது எதற்காக?
உலக நன்மைகளை விரும்பி
6916) இடமாக பிரதட்சணம் செய்வது எதற்காக?
வீட்டுப் பேற்றை விரும்பி
6917) இந்த இரண்டையும் விரும்புபவர்கள் என்ன செய்யலாம்?
வலமிடமாக பிரதக்ஷணம் செய்யலாம்
6918) பிரதட்சணம் செய்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கூறப்படும் உதாரணம் எது?
பூரண கர்ப்பவதியான ஒரு பெண் காலில் ஒரு விலங்கு பூட்டப்பட்ட நிலையில் தலையில் எண்ணெய் நிறைந்த குடத்தை சுமந்து நடந்தால் எப்படி மெதுவாக நடப்பாளோ, அப்படி மெதுவாக நடந்து செல்ல வேண்டும். மனம் அவனது திருவடிகளை சிந்திக்க, வாய் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இரண்டு கைகளும் மார்ப்புக்கு சமமாக இருக்க வேண்டும்.
திங்கள், 14 ஜூன், 2010
அறநெறி அறிவுநொடிகே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம் (பிரதோஷத்தில் சிவ வழிபாடு) 6883) நிம்மதி இழந்து துன்பத்தால் துவள்கிற மனிதனுக்கு துன்பங்களில் இருந்து விடுபட எது சிறந்த மார்க்கம்? ஆலய வழிபாடு ஒன்றே 6884) எப்படிப்பட்ட துயரையும் துன்பத்தையும் நோயையும் தீர்க்கும் ஆற்றல் எதற்கு உண்டு? இறை வழிபாட்டுக்கு 6885) இறை வழிபாடுகள் பல இருந்தாலும் சிவபெருமானுக்கு சிறந்ததாக எது கருதப்படுகிறது? பிரதோஷ வழிபாடு 6886) பிரதோஷ காலம் என்பது என்ன? சூரியன் மறைவதற்கு முன்பு உள்ள 3 3/4 நாழிகையும் சூரியன் மறைந்த பின்பு உள்ள 3 3/4 நாழிகையும். 6887) இதற்கமைய சிவபெருமானை வழிபட சிறந்த நேரமாக எதனை வகுத்துள்ளனர்? மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை 6888) ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய் பிறைகளில் வரும் 13ஆம் நாளாகிய திரயோதசி திதியில் சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக நடைபெறுவது என்ன! பிரதோஷ வழிபாடு 6889) அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு அடுத்து வரும் 13 ஆம் நாளாகிய பிரயோதசி திதி சனிக்கிழமையன்று வருமானால் அது என்னவென்று கொண்டாடப்படுகிறது? மகா பிரதோஷம் 6890) வாரத்தில் எத்தனை முறை பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது? இரு முறை 6891) சனிக்கிழமை நடைபெறும் பிரதோஷத்தை என்னவென்று அழைப்பர்? சனிப்பிரதோஷம், மகாப் பிரதோஷம். 6892) ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு மூன்று நாளிகைகள் முன்பு நட்சத்திரங்கள் தோன்றும் வரை உள்ள நேரத்தை என்ன வென்று கூறுவர்? சந்தியாகாலம். 6893) இந்த சந்தியாகாலத்திற்குரிய பிரதோஷம் எது? நித்திய பிரதோஷம் 6894) வளர்பிறை சதுர்த்தி அன்று மாலைக் காலத்தில் வருவது என்ன பிரதோஷம்? பட்சப் பிரதோஷம் 6895) தேய்பிறை பிரயோதசி (23 ஆம் நாள்) அன்று வருவது என்ன பிரதோஷம்? மாதப் பிரதோஷம் 6896) தேய்பிறையில் சனிக்கிழமையன்று திரயோதசி திதி வந்தால் அதனை என்னவென்று கூறவர்? மகா பிரதோஷம் 6897) பிரளயம் ஏற்படுகின்ற காலத்தில் எல்லா உலகங்களும் ஈஸ்வரனிடம் ஒடுங்கும் நேரதத்தை என்னவென்று கூறுவர்? பிரளயப் பிரதோஷ காலம் 9898) பிரதோஷ வழிபாட்டினைத் தொடங்கும் முன்பு யாரை வழிபட வேண்டும்? நந்திதேவரை |
திங்கள், 7 ஜூன், 2010
அறநெறி அறிவு நொடிகே. ஈஸ்வரலிங்கம், தலைவர் / ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்
6863) ஹோமங்கள் மூலம் நிகழ்வது என்ன?இறைவன் ஹோமங்கள் மூலம் நமது கோரிக்கையை அறிந்து கொள்கிறான். 6864) அக் கோரிக்கைகள் எவ்வாறு இறைவனை சென்றடைகின்றன? அக்னி குண்டங்கள் மூலமாக 6865) ஹோமங்கள் சிலவற்றைத் தருக? கணபதி ஹோமம், அவஹந்தி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், மிருத்தியஞ்ச ஹோமம், லட்சுமி ஹோமம், வித்யா ஹோமம், கனகதார ஹோமம் 6866) புதிய தொழில்கள் தொடங்கும் போது செய்யப்படும் ஹோமம்? கணபதி ஹோமம் 6867) ஏனைய ஹோமங்களை துவக்கத்திற்கு முன்பு செய்யப்படும் ஹோமம் எது? கணபதி ஹோமம் 6868) கணபதி ஹோமம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன? உடல், மனம், ஆன்மீக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கும். 6869) விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெறவும், நாடு பசுமைப் புரட்சியில் சிறக்கவும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படவும் ஆன்மிக வளர்ச்சி ஏற்படவும் செய்யப்படும் ஹோமம் எது? அவஹந்தி ஹோமம் 6870) அவஹந்தி ஹோமம் செய்வதால் உண்டாகும் வேறு பலன்கள் எவை? பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிக வளர்ச்சி ஏற்படும். 6871) குழந்தை பிறந்த முதலாம் ஆண்டில் நீண்ட ஆயுளுக்காக செய்யப்படும் ஹோமம் எது? ஆயுஷ்ய ஹோமம். 6872) ஆயுஷ்ய ஹோமம் வேறு எந்தெந்த நாட்களில் செய்யலாம்? ஒவ்வொரு மாதமும் வரும் குழந்தையின் ஜென்ம நட்சத்திர நாளில் 6873) ஆயுஷ்ய ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன்கள் என்ன? குழந்தைக்கு தொடர் தேக உபாதைகள் இருந்தால் இந்த ஹோமத்தின் மூலம் சரிசெய்து விடலாம். மருந்தால் குணப்படுத்த முடியாத வியாதிகளைக் கூட குணப்படுத்தலாம். 6874) பிறந்த நாளன்று சிவபெருமானுக்காக செய்யப்படும் ஹோமம் எது? மிருத்தியஞ்ச 6875) மிருத்தியஞ்ச ஹோமம் எதற்காக செய்யப்படுகிறது?அகால மரணத்தை தவிர்ப்பதற்காக சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. 6876) இந்த ஹோமத்தை செய்வதால் ஏற்படும் வேறு நன்மைகள் என்ன? ஆயுள் விருத்தி அடையும், நீண்ட நாட்களாக தொடரும் வியாதிகள் நீங்கும். 6877) சர்வமங்களங்களையும் மேன்மையையும் 16 செல்வங்களையும் அடைய செய்யப்படும் ஹோமம் எது?லட்சுமி ஹோமம் 6878) லட்சுமி ஹோமம் செய்வதால் ஏற்படும் வேறு பலன்கள் என்ன? நீண்ட நாள் வராதிருந்த பொருள் வந்து சேரும் ஐஸ்வர்யம் அடைய தடையாக இருக்கும் எதிர்மறை சக்திகள் சாபங்கள் நீங்கி செல்வ விருத்திக்கு வழிவகுக்கும். 6879) மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறவும் புத்தி கூர்மை ஏற்படவும் ஞானம் விருத்தி அடையவும் படிப்பில் மட்டும் கவனம் செல்லவும் நினைவாற்றல் பெருகவும் செய்யப்படும் ஹோமம் எது? வித்யா ஹோமம். 6880) திருமணமாகி நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகள் நடத்த வேண்டிய ஹோமம் என்ன? மங்கள சமஸ்கரண ஹோமம் 6881) ஏழையைக் கூட செல்வந்தனாக்கி விடும் வகையில் அவனுக்குள் புதைந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வரும் சக்தி உடைய ஹோமம் எது?கனகதார ஹோமம் 6878) ஹோமங்களில் வளர்க்கப்படும் அக்னி என்னவாக கருதப்படுகிறது? அக்னிதேவன் மற்ற தெய்வங்களின் தூதர் போலவும் அவர்களது வாய் போலவும் செயல்படுகிறார். மனிதன் மற்ற தெய்வங்களுடன் பேச அக்னியை பயன்படுத்திக் கொள்கிறான். உணவும் அக்னி மூலமே கொடுக்கப்படுகிறது. |
திங்கள், 31 மே, 2010
நாகதோஷம்
அறநெறி அறிவு நொடி
|
திங்கள், 24 மே, 2010
அறநெறி அறிவு நொடி
கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
6839) மயிலின் முக்கியமான பண்பு எது?
அதன் அழகான தோற்றமும், ஒயிலாக ஆடும் நடனமும்தான்.
6840) மயில் கவர்ச்சியாக தோன்றுவதற்கு எது காரணமாக இருக்கிறது?
நீலமயமான வண்ணம்
6841) முருகனுக்கு மயிலை வாகனமாக வைத்திருப்பதற்குரிய தத்துவம் என்ன?
மயிலின் அழகான தோற்றமும் ஒயிலாக ஆடும் நடனமும் தான் தன் முக்கியமான பண்பாகும். அவை கவர்ச்சியாக தோன்றுவதற்கு நீலமயமான வண்ணம்தான் காரணமாக இருக்கிறது. மயில், தான் அழகாக ஆடுவதாக நினைக்கும் போது அந்தக் கர்வத்தை அடக்க ஒருவர் அதன் மீது அமர்ந்து கட்டுப்படுத்த வேண்டி இருக்கிறது.
மனிதன் எப்போதும் தன்னைப் பற்றியே எண்ணிக் கர்வப்படுகிறான். தனக்கு அழகான உடம்பு இருப்பதாக நினைக்கிறான். தன்னால் நினைத்து திட்டமிடக் கூடிய மனம் இருப்பதாக எண்ணுகிறான்.
கற்பனை சக்தி மிகுந்த சிந்தனையால் எதையும் திறமையுடன் சாதிக்க முடியும் என்று கருதுகிறான். இதில் ஊறிப்போகும் மனிதனால் தனக்குள் ஆண்டவன் இருப்பதை உணர முடிவதில்லை.
இந்த நிலையிலிருந்து அவன் மாற வேண்டும். அவனுள் இருக்கும் ஆத்மாவே அவனுடைய உண்மையான வடிவம் என்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டும். கடவுள் அந்த பண்பட்ட மனதை வாகனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இதையே கர்வத்துடன் ஆடும் மயிலின் மீது அமரும் சுப்பிரமணியர் நமக்கு உணர்த்துகிறார்.
6842) மயில் பாம்பை மிதிப்பது போல் வைத்திருப்பதன் தத்துவம் என்ன?
மயிலுக்கும் பாம்புக்கும் பகைமை உண்டு. மயில் பாம்பை கொல்லுவதில்லை. ஆனால் மிதித்து அடக்கி வைக்கிறது.
அதைப் போல உலக பந்தங்கள் ஆசைகள் எல்லாமே நமக்கு ஓரளவேனும் வாழ்க்கையில் கூடவே இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் நாம் ஆன்மீக முன்னேற்றம் அடைய வேண்டுமானால் இவற்றை முழுவதுமாக அழிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வைக்க வேண்டும்.
இதையே மயில் காலடியில் மிதித்து அடக்கி வைக்கும் பாம்பு நமக்கு உணர்த்துகிறது.
6843) தெய்வத்திற்கெல்லாம் தெய்வம் யார்?
பிள்ளையார்.
6844) பிள்ளையாருக்கு விநாயகர் என்ற பெயர் எதற்கு?
தெய்வத்திற்கெல்லாம் முதல்வன் பிள்ளையார். எனவேதான் விநாயகர் என்று புராணங்களும் சாஸ்திரங்களும் பிள்ளையாரை போன்றுகின்றன.
6845) விநாயகர் என்ற நாமத்தின் பொருள் என்ன?
தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் என்று பொருள்.
6846 )எல்லாம் விதிப் பயன் எனும் போது இறைபூஜைகளும் திருவிழாக்களும் எதற்காக?
இறைபூஜைகளும் திருவிழாக்களுமே விதிப் பயனால் தானே!
விதியின் அடிப்படையில்தான் நம் வாழ்க்கை என்றாலும் ஆன்மீக சாதனைகள் செய்யும் போது விதியின் வேதனை நம்மைத் தாக்குவதில்லை. மேலும் இப்பிறவியில் நாம் செய்யும் ஆன்மீக சாதனை மறுபிறவியில் நல்ல விதிப் பயனை கொடுக்கவல்லது.
விதியை மதியால் வெல்லலாம் என்பது கோட்பாடு. விதிப்பயன் தீயதாக இருந்தால் ஆத்மசாதனம் என்ற மதியால் விதியை வெல்லலாம். ஆத்ம சாதனை செய்ய வேண்டிய மதியைக் கொடுப்பதும் விதிதான்.
திங்கள், 17 மே, 2010
அறநெறி அறிவு நொடி
6802) பேரின்ப வடிவிளான இறைவனை அடைய அடிப்படையானது எது? அன்பு
6803) இல்லற தர்மம் எதை போதிக்கிறது?அன்பை மையமாகக் கொண்ட நெறிகளை
6804) இல்லற தர்மத்தின் கோட்பாடு எது?ஒருவர் மற்றவர்களிடம் அன்பு செலுத்தி அதற்கான களத்தை விரிவுபடுத்திக் கொள்வது.
6805) தம்பதியரில் ஆணுக்கு 60 வயது நிறைவ டை ந்து அறுபத்தொன்று தொடங்கும்போது கொண் டாடப்படும் விழா எது? மணி விழா
6806) எழுபத்தொன்று தொடங்கும் போது கொண்டாடப்படுவது என்ன விழா?பவள விழா
6807) எண்பத்தொன்று தொடங்கும் போது கொண்டாடும் விழா எது?முத்து விழா
6808) அன்பு செலுத்துவதற்கான எல்லை விரிவ டைவதற்கான தொடக்க விழா எனப்படு வது எது? மணி விழா
6809) இவ்வாறான இறை முயற்சியில் ஒருவருக்கு எத்தனை விதமான அருள் அனுபவங்கள் கிட்டுகின்றன? மூன்று
6810) அந்த மூன்று விதமான அருள் அனுபவங் களையும் தருக. பொன்னுடல், ஓங்கார உடல், அறிவுடல்
6811) பசு கரணங்கள் என்னவாகும்?பதி கரணங்களாக மாறும்
6812) பசு கரணங்கள் பதி கரணங்களாக மாறு வதால் உடல் என்னவாகும்?பொன்மயமாகும்.
6813) உடல் பொன்மயமாகி அதற்கடுத்த நிலை யில் உடல் என்னவாகும்?காற்று மயமாகும்
6814) உடல் காற்று மயமாகியபின் நடைபெறுவது என்ன?ஆன்ம நாதமே எல்லாமாய் மாறி ஓங்கார உடல் கிட்டும்.
6815) ஓங்கார உடல் கிட்டியபின் நடைபெறுவது என்ன?ஆன்மா ஞான மயமாய் விளங்கி அறிவுடல் கிட்டும்.
6816) பொன்னுடல் வாய்ப்பதை என்ன விழாவாக கருதுவர்? மணி விழா
6817) பிரணவ தேகமாகிய ஓங்கார உடல் வாய்ப்பதை என்ன விழாவாக கருதுவர்?பவள விழா
6818) முத்து விழாவாக கருதுவது எதனை?ஞான உடல் வாய்ப்பதை
6819) சஷ்டியப்த பூர்த்தி என்பது எதனை?ஒருவர் பிறந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்து அடுத்து வரும் நாளை.
6820) 360 பாகைகளின் வழியாக ஒரு வட்டப் பாதையை நிறைவுசெய்ய சூரியனுக்கு எவ் வளவு காலம் எடுக்கும்? ஒரு ஆண்டு
6821) செவ்வாய்க்கு எவ்வளவு காலம் எடுக்கும்?ஒன்றரை ஆண்டு
6822) சந்திரனுக்கு எவ்வளவு காலம் பிடிக்கும்?ஒரு மாதம்
6823) புதனுக்கு எடுக்கும் காலம் எவ்வளவு?ஒரு வருடம்
6824) வியாழனுக்கு பிடிக்கும் காலம் எவ்வளவு?12 வருடங்கள்
6825) வெள்ளிக்கு எவ்வளவு காலம் பிடிக்கும்?ஒரு வருடம்
6826) சனிக்கு எவ்வளவு காலம் எடுக்கும்?30 வருடங்கள்
6827) ராகுவிற்கு எடுக்கும் காலம் எவ்வளவு?ஒன்றரை வருடங்கள்
6828) கேதுவிற்கு பிடிக்கும் காலம் எவ்வளவு?ஒன்றரை வருடங்கள்
6829) ஒருவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் தமிழ் ஆண்டு, மாதம் ஆகியவை மாறாமல் அமைந்திருப்பது எப்போது?ஒருவர் பிறந்து 60 வருடங்கள் நிறைவடைந்த நாளிற்கு அடுத்த நாளில்
6830) பூமி எத்தனை பாகைகளாக கணிப்பிடப் பட்டுள்ளன? 360 பாகைகளாக
6831) அந்த 360 பாகைகளும் எத்தனை ராசி வீடுகளாக வகுக்கப்பட்டுள்ளன? 12 ராசி வீடுகளாக
6832) சஷ்டியப்த பூர்த்தியன்று என்ன செய்வர்?64 கலசங்களில் தூய நீர் நிரப்பி மந்திரங்களை ஜயிப்பதன் மூலம் நீரைப் புனிதப்படுத்தி அதைக் கொண்டு அபிஷேகமும் செய்வர்.
6833) 64 கலசங்களும் எதை குறிக்கும்?60 ஆண்டு தேவதைகளையும் அவற்றிற்கு அதிபதிகளாகிய அக்கினி, சூரியன், சந்திரன், வாயு ஆகியோரை குறிப்பதாக ஐதீகம்.
6334) பிரபது முதல் விரோதி கிருதி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு அதிபதி யார்?அக்கினி பகவான்
6835) ஆங்கிரச முதல் நள வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு அதிபதி யார்? சூரியன்
6836) ஈஸ்வர முதல்துன்மதி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு அதிபதி யார்? சந்திரன்
6837) இறைவனைத் தேடும் மனப் பக்குவம் ஏற்பட்டு அதற்கான முயற்சியில் இறங்கு வது எப்போது? மணிவிழாவின் போது
6838) சித்ரபானு முதல் அட்சய வரையிலுள்ள 15 ஆண்டுகளுக்கு அதிபதி யார்? வாயு பகவான்
திங்கள், 10 மே, 2010
அறநெறி அறிவு நொடி
ஈஸ்வரலிங்கம், தலைவர்/ ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம் 6782) அட்சய திருதியில் தங்கமா? கண்களை விற்று சித்திரம் வாங்கிய கதையாகிவிடக் கூடாது 6783) அட்சயம் என்றால் என்ன? வளருதல் 6784) கெளரி எனப்படும் பார்வதி தேவி தனது பிறந்த வீட்டுக்கு வந்தது எப்போது? அட்சய திருதியன்று 6785) அன்னைக்கு பாதுகாப்பாக மறுநாள் வந்தது யார்? விநாயகர் 6786) ஸ்ரீ பரசுராமர் அவதரித்தது எப்போது? அட்சய திருதியன்று 6787) அட்சயதிருதியன்று தோன்றிய யுகம் எது? கிருத யுகம் 6788) ஸ்ரீ பரசுராமர் விஷ்ணுவின் எத்தனையாவது அவதாரம்? ஆறாவது அவதாரம் 6789) அக்ஷயா எனும் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் கூறப்படும் பொருள் என்ன? எப்போதும் குறையாதது 6790) ஏழ்மையில் வாடிய ஸ்ரீ கிருஷ்ணரின் நண்பர் யார்? குசேலர் 6791) குசேலர் ஸ்ரீ கிருஷ்ணரை சந்திக்க வந்தது எப்படி? ஒரு படி அவலை எடுத்து தனது கிழிந்த மேலாடையில் முடிந்து கொண்டு 6792) அவரது அவலை சாப்பிட்டிபடி கண்ணன் என்ன கூறினார்? ‘அட்சயம்’ என்று 6793) கண்ணன் அட்சயம் என்று கூறியதும் என நடந்தது? குசேலரின் குடிசை மாளிகையானது. குசேலர் குபேர சம்பத் பெற்றார். 6794) குசேலருக்கு கண்ணன் அருள் புரிந்தது எப்போது? அட்சயத் திருதியை அன்று 6795) அட்சயதிருதியைப் பற்றி தருமருக்கு கதை கூறியவர் யார்? கண்ணபிரான் 6796) கண்ணன் தருமருக்கு கதை கூறியதாக எந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது? பவிஷ்யோத்ர புராணத்தில் 6797) அட்சயதிருதியை அன்று யாரை பூஜித்தால் சகல செளபாக்கியங்களும் கிட்டும்? சிவபார்வதி, ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீ லட்சமி. 6798) அட்சய திருதியன்று பித்ருக்களுக்கும் மறைந்த முன்னோருக்கும் சிரார்த்தம், பூஜை செய்தால் கிடைக்கும் நன்மை என்ன? பாவ விமோசனம் பெறலாம். 6799) அட்சய திருமணமான பெண்கள் என்ன செய்யலாம்? சுமங்கலி பூஜைசெய்து மற்றவர்களுக்கு ஆடை வழங்கலாம். 6880) அட்சய திருதியில் ஆடை தானம் அளித்தால் கிட்டும் நன்மை என்ன? மறுபிறவியில் ராஜவாழ்வு கிட்டும். 6801) அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கியேயாக வேண்டுமா? அட்சய திருதியை அன்று தானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புப் பண்டங்கள் தானம் செய்தால் திருமணத் தடை அகலும் உணவு தானியங்களை தானம் செய்தால் விபத்துகள், அகால மரணம் போன்றவை நடைபெறாது. கால்நடைகளுக்கு உணவு அளித்தால் வாழ்வு வளம் பெறும் என்று கூறப்படுகிறது. இவ்வளவு நன்மைகள் இருக்கும் போது அதை விடுத்து தங்கம் வாங்குவது மட்டுமே நல்லது என்று நினைப்பது எந்த விதத்தில் சரி? வசதி படைத்தவர்களால் நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்யமுடியும். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலையில் நடுத்தர குடும்பத்து மக்களால் நகை வாங்குவது என்பது முடியாத காரியம் தலையை அடகு வைத்தாவது அட்சய திருதியை அன்று நகை வாங்கியே தீருவேன் என்று அடம்பிடித்து குடும்பத்தில் குழப்பத்தை விளைவிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். அழியும் பொருளை வாங்க தம்மிடம் எஞ்சியுள்ள கொஞ்ச நஞ்ச அமைதியையும் தொலைக்கும் நேரத்தில் இறைவனைப் பற்றிய தியானங்களிலும் வழிபாடுகளிலும் மனதை செலுத்த முன்வர வேண்டும். கண்களை விற்று சித்திரம் வாங்கிய கதையாகிவிடக் கூடாது நம் வாழ்க்கை. |
அறநெறி அறிவு நொடி
கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம் வைகாசி 6762) வைகாசி மாதத்தை வைணவர்கள் என்ன வென்று போற்றுவார்கள்? மாதவமாதம்
6764) விகாஸம் என்றால் என்ன?மலர்ச்சி 6765) வைகாசி விசாகத்தில் உதித்தவர் யார்?முருகப் பெருமான் 6766) வைகாசி மாதத்தில் சிவபெருமானைப் போற்றி கடைப்பிடிக்கப்படும் விரதம் எது?ரிஷப விரதம் 6767) ரிஷப விரத நாளில் எந்த வடிவில் உள்ள சிவபெருமானை வணங்க வேண்டும்?ரிஷப வாகனத்தில் அமர்ந்திருக்கும் உமா மகேஸ்வரரான சிவபெருமானை 6768) ரிஷப விரதத்தை யார் கடைப் பிடித்தால் நல்ல பலன் கிட்டும்?வாகனங்கள் வைத்திருப்பவர்களும் புதிய வாகனங்கள் வாங்க விரும்புபவர்களும் 6769) ரிஷப விரதத்தைக் கடைப்பிடித்து ஐராவதத்தை பெற்றவர் யார்?இந்திரன் 6770) இந்த விரதத்தை கடைப்பிடித்து புஷ்பக விமானத்தை பெற்றவர் யார்?குபேரன் 6771) இந்த விரதத்தை எப்பொழுது கடைப்பிடிக்க வேண்டும்?வைகாசி மாத சுக்ல அஷ்டமி திதியில் 6772) புத்த பகவான் அவதரித்தது எப்பொழுது?வைகாசி பெளர்ணமியன்று
6774) அவர் இப்பூவுலகைத் துறந்து மோட்சம் பெற்றது எப்பொழுது?வைகாசிப் பெளர்ணமியில் 6775 தங்கத் தட்டில் அவதரித்தவர் யார்?வியாசர் 6776) வியாசர் தங்கத் தட்டில் அவதரித்த மாதம் எது?வைகாசி 6777) வைகாசி மாதத்தில் அவதரித்த நாயன்மார்கள் யார்?திருஞானசம்பந்தர், சோமாசி மாறனார், நமிநந்தியடிகள், கழற்சிங்கர் 6778) வைகாசி மாதத்தில் அவதரித்த வைணவப் பெரியவர்கள் யார்?நம்மாழ்வார், திருக்கோட்டியூர் நம்பிகள் 6779) காஞ்சிப் பெரியவர் பிறந்தது எந்த மாதத்தில்?வைகாசியில் 6780) குருவின் நட்சத்திரம் எது?விசாகம் 6781) விசாகம் எந்த வம்சத்துக்குரிய நட்சத்திரம்?இஷவாகு 6782) இராம - இராவண யுத்தம் எப்பொழுது நடந்ததாக ஸ்ரீமத் இராமாயணம் கூறுகிறது?விசாகம் அமைந்துள்ள கோள் நிலையில். |
புதன், 28 ஏப்ரல், 2010
அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர், ஸ்தாபகர்
- தமிழர் நற்பணி மன்றம்
6738 சூரியனை மூன்று வித அக்கினிகளில் ஒருவராக விவரிப்பது எது?
ரிக்வேதம்.
6739 சூரியனையே உலகம் அனைத்திற்கும் ஒளி தருபவர் என எதில் விவரிக்கப்பட்டுள்ளது?
சாம வேதத்தில்.
6740 கொடும் நோய்களிலிருந்து விடுவிப்பதற்குச் சூரிய வழிபாடுதான் சிறந்தது என எதில் குறிப்பிடப்பட்டுள்ளது? அதர்வண வேதத்தில்
6741 சூரியனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட மதம் எது?
செளரம்.
6742 சூரியனைப் பற்றிய செய்திகளைத் தெளிவுற கூறுவது எது?
சூரியபுராணம்.
6743 பூமிக்கு மேல் சூரிய மண்டலம் வரை உள்ளது எது? புவர்லோகம்.
6744 புவர்லோகத்திற்கு மேல் உள்ளது எது?
சுவர் லோகம்
6745 சுவர்லோகம் எது வரை உள்ளது?
மேல் துருவ மண்டலம் வரை
6746 மக்கள், வானவர், பிதிர்கள் ஆகியோரை வளர்ப்பது யார்?
சூரியன்
6747 மூச்சுடரால் உலகின் அகமும் புறமும் தழுவி சுடர்க் கொழுந்தாய் பேரொளியாய் சூரியன் விளங்குகின்றான் என்ற எவை முழங்குகின்றன?
வேதங்கள்.
6748 மேற்படி கூற்றின் உண்மையை கூறும் புராணம் எது? கூர்ம புராணம்
6749 எந்தெந்த பூசைகளின் போது சூரிய பூசைக்கு முன்னுரிமை வழங்கப்படும்?
சிவபூசை, ஆலய பூசை, யாக பூசை, சந்தியா வந்தனம்.
6750 சூரியன் யாரை மணந்தார்?
சஞ்சிகையை
6751 சஞ்சிகை யாருடைய புதல்வி?
துஷ்டாவின்
6752 சூரியன் யாருக்கு தந்தையானார்? வைவஸ்வதமனுயமன் அஸ்வினி தேவர்களுக்கு
6753 சூரியனுடைய வெம்மையைச் சகிக்க இயலாத சூரியனின் மனைவி சஞ்சிகை என்ன செய்தார்?
தனது நிழலைப் பெண்ணாக்கிவிட்டு சூரியனை விட்டு பிரிந்தாள்.
6754 அந்நிழல் யார்?
சாயாதேவி
6755 சாயாதேவியின் உறவால் சூரியனுக்கு பிறந்தவர்கள் யார்?
சாவர்னிமனு, சனிபத்திரை
6756 அதன்பின் சாயாதேவியின் சங்கதியை அறிந்த சூரியன் என்ன செய்தார்?
தவத்தில் தலை நின்ற தன் சஞ்சிகையை அழைத்து வந்தார்.
6757 அவர்கள் இருவரையும் சூரிய பகவான் எந்த சக்திகளாக்கிக் கொண்டார்?
உஷா, பிதத்யுஷா
6758 அருக்கன் சருஷினி என்னும் பெண்ணிடமிருந்து பெற்றுக்கொண்டது யாரை?
வால்மீகியை
6759 அகத்தியர், வசிட்டர் என்போருக்கு யார் மூலம் தந்தையானார்?
ஊர்வசி மூலம்
6760 பெண் குரங்கான இரு ஷவிரனுடன் கூடி பெற்றது யாரை?
சுக்கிரீவனை
6761 குந்திதேவியின் கூட்டத்தால் ஆதித்தன் யாரை மைந்தனாக்கிக் கொண்டார்?
கர்ணனை.
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...