திங்கள், 25 நவம்பர், 2013

இந்து முறைப்படியான உணவு

கே. ஈஸ்வரலிங்கம் (10423) அளவுக்கு அதிகமாக உண்டால் என்ன நடக்கும்? நோய் வரும், ஆயுள் குறையும். (10424) உணவில் மிளகு சேர்ப்பதால் ஏற்படும் நன்மை யாது? உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலிலுள்ள விஷமும் முறிகிறது. (10425) வெந்தயம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மை யாது? உஷ்ணம் குறையும். (10426) வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து, காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகிவந்தால் என்ன நடக்கும்? உடம்பிலுள்ள உஷ்ணம் குறையும். (10427 உணவில் கடுகு சேர்க்கப்படுவதால் உண்டாகும் நன்மை யாது? உடலிலுள்ள உஷ்ணத்தை ஒரேயளவில் வைத்திருக்கும். (10428) இஞ்சியை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன? பித்தம், தலைசுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வராது. (10429) உணவு உண்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்? கை, கால், வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் நீர் உலர்வதற்கு முன்பே உணவை உண்ணத் தொடங்க வேண்டும். (10430) உணவு உண்ணும்போது செய்யத் தகாதவை எவை? பேசக்கூடாது, கதை படிக்கக்கூடாது, இடது கையைக் கீழே ஊன்றக் கூடாது, தொலைக்காட்சி பார்க்கக் கூடாது. (10431) வீட்டில் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணலாமா? கூடாது. (10432) காலணி அணிந்துகொண்டு உண்ணலாமா? கூடாது (10433) சூரியோதயத்திலும் மறையும் போதும் உண்ணலாமா? கூடாது (10434) இருட்டிலோ நிழல்படும் இடங்களிலோ உண்ணலாமா? கூடாது (10435) சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக்கொண்டு உண்ணலாமா? கூடாது (10436) தட்டை மடியில் வைத்துக்கொண்டும், படுத்துக்கொண்டும் உண்ண லாமா? கூடாது (10437) எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணலாமா? கூடாது (10438) புரச இலையில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மை என்ன? புத்தி வளரும் (10439) வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மை யாவை? நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812