திங்கள், 11 நவம்பர், 2013

அமெரிக்காவிலுள்ள ஆலயம்

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணத்திலுள்ள போவாடு கன்ட்ரியில் 1996 ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த கணபதி ஸ்தபதி தலைமையில் திராவிட கலாசாரத்துடன் ஒரு கோயில் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இதற்காக 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முறையான அனுமதி பெறப்பட்டு 2000 ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்தியாவின் மாமல்ல புரத்திலிருந்து 12 சிற்பிகள் வரவழைக்கப்பட்டு இந்திய முறைப்படி திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இரண்டு புதிய கட்டடங்களுடன் கூடிய இக்கோயிலில், இரண்டு ராஜகோரங்களும் சிவன் மற்றும் விஷ்ணு கர்ப்பகிரங்களின் மேல் இரண்டு விமான கோபுரங்களும் உள்ளன. சுமார் 6200 சதுர அடி பரப்பளவில் அமைந்த இக்கோயிலில், சிவன்சன்னதி, சோழ மற்றும் பல்லவ பேரரசுகளின் கலாசாரப்படியும் விஷ்ணு சன்னதி, விஜயநகர பேரரசின் கலாசாரப்படியும் ஐயப்பன் சன்னதி, கேரள முறைப்படியும் அமைக்கப்பட்டுள்ளன. சமுதாயக்கூடத்தின் பின்புறமாக அமைந்துள்ள இரண்டாவது கட்டடத்தின் கும்பாபிஷேகம் 2001 ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. முன்னூறு இருக்கைகளைக் கொண்ட இக்கட்டடம் திருமணம் போன்ற வைபவங்களுக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுகிறது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் 2001 ஆம் ஆண்டு நவம்பர் 23 முதல் 25ம்திகதி வரை நடத்தப்பட்டது. தினமும் சிவ மந்திரமும் பஞ்சாட்சர மந்திரமும் நான்கு அர்ச்சகர்களைக் கொண்டு ஓதப்படுகிறது. சிவன், வெங்கடேஸ்வரர், ஐயப்பன், சரஸ்வதி, முருகன், லட்சுமி, ஆண்டாள், காமாட்சி, கிருஷ்ணன், ராமர், கணபதி, ஆஞ்சநேயர் மற்றும் நவகிரகங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812