திங்கள், 25 நவம்பர், 2013

அட்லாண்டா சுவாமி நாராயண மந்திர்

அமெரிக்காவில் ஜியார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டாவில் சுவாமி நாராயணனுக்கு புதிய கோயில் எழுப்பப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் கல்வேலைப்பாடு அமைந்த இந்துக் கோயில்கள் பத்தில் இதுவும் ஒன்று. கோயில் அமைப்பு 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோயில் இது. கட்டட அளவு 22 ஆயிரத்து 442 சதுர அடி கோயிலின் வெளிப்புறம் துருக்கி லிம்ரா சுண்ணாம்புக் கல்லால் ஆனது தரைத் தளம் இத்தாலிய கராரா மார்பிளால் உருவாக்கப்பட்டுள்ளது. அடித்தளம் இந்திய மணற் பாறைகளால் அமைந்தது. 15 கிலோ எடையுள்ள சிறிய கல்லில் இருந்து 5.2 தொன் எடையுள்ள பெரிய கல்வரை, 8430 தொன் எடையுள்ள கற்கள் இக்கோயில் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கோயிலில் 40 ஆயிரம் கற் துண்டுகள் உள்ளன. கோயிலின் நீளம் 213 அடி. அகலம் 122 அடி. விதானம் கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் பரிக்ரமா (வலம் வருதல்) செய்ய வசதியுள்ளது. ஐந்து பெரிய கலசங்களும், நான்கு சிறிய கலசங்களும், ஒரு பெரிய மாடமும், ஆறு சிறிய மாடங்களும், 129 வளைவுகளும், நான்கு பால்கனிகளும், 14 ஜன்னல்களும், 151 தூண்களும், 75 விதானங்களும் இக்கோயிலில் உள்ளன. 39 வகையான டிசைன்கள் கோயிலின் அழகுக்கு மேலும் மெருகூட்டுகிறது. கோயிலின் உள்ள மண்டபத்தில் கடைசல் வேலைப்பாடுடன் கூடிய தூண்களும், ஜன்னல்களும் அருமையாக உள்ளன. படிக்கற்கள் மார்பிளாலானவை. கீழ் தளம் முழுவதும் ஜெல் டியூபால். உஷ்ணமாக்கப்பட்டுள்ளது. பைபா ஒப்டிக் முறையில் ஒளியூட்டப்பட்டுள்ளது. கோயில் கட்ட 19 மில்லியன் டொலர் செலவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பம்சம்: தூண்களில், வேத, புராண நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் சித்திர வேலைப்பாடுகள் கண்களைக் கவரும் முழு கட்டமைப்பும் சிற்ப சாஸ்திர அடிப்படையிலேயே அமைந்துள்ளது. மார்பிள், சுண்ணாம்புக்கல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, குறுகலான கூம்பு அமைப்பு, ரோஜாமலர் சிற்பங்கள், இலை போன்ற 500 க்கு மேற்பட்ட சிற்பங்கள் செதுக்கப்பட்டன. அவை அட்லாண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆலய வரலாறு: 1980 களில் இப்பகுதியில் வாழ்ந்த சுவாமி நாராயண பக்தர்களால் இந்துக்கள் கூடும் இடமாக இக்கோயில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு பழைய பாழடைந்த மண்டபம் ஒன்று வாங்கப்பட்டு அதில் தற்காலிக கோயில் அமைக்கப்பட்டது. பின்னர் அந்த பாழடைந்த மண்டபம் சீரமைக்கப்பட்டு தற்போது உள்ள பிரம்மாண்ட கோயிலாக உருப்பெற துவங்கியது. 2000 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இக்கோயிலின் விரிவாக்கப் பணிகள் நடத்தப்பட்டன. 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோயிலுக்கென சொந்தமாக நிலம் வாங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சுவாமி நாராயண மந்திர் முழுமை பெற்ற ஆலயமாகவும், பக்தர்கள் கூடும் இடமாகவும் செயல்படத் தொடங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812