திங்கள், 4 நவம்பர், 2013

கே. ஈஸ்வரலிங்கம்

10385) நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் எதன் வடிவம்? ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவம் 10386)) இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு எதை குறிக்கும்? சாம வேதத்தை 10387) நடுவிரல் எதை குறிக்கும்? யஜுர் வேதத்தை 10388) மோதிர விரல் எதை குறிக்கும் சாம வேதத்தை 10389) நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் எதை குறிக்கும்? மூன்று வேதங்களை 10390) இந்த மூன்று பட்டைகளும் வேறு எவற்றை குறிக்கும்? பிரம்மா, விஷ்ணு, சிவன், சிவன், சக்தி, ஸ்கந்தர் அறம், பொருள், இன்பம் குரு, லிங்கம், சங்கமம் படைத்தல், காத்தல், அழித்தல் 10391) கோயில்களுக்கு சென்று இறைவனை வணங்கும் போது முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் எத்தனை உள்ளதாக ஆகமங்கள் கூறுகின்றன? மூன்று 10392) அந்த மூன்று வழிமுறைகளையும் தருக. உத்தம நமஸ்காரம், அஷ்டாங்க நமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம் 10393) மனிதனின் ஆத்ம இருப்பிடம் எது? இதயம் 10394) நமது இரண்டு கரங்களும் எத்தன்மை வாய்ந்தவை? லட்சுமி வாசம் செய்யும் வேதரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்தது. 10395) நமது இரண்டு கரங்களை இணைத்து இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேரே மையத்தில் வைத்து மனதில் மட்டுமே மந்திரங்களைக் கூறி இறைவனை ஒரு நொடியேனும் மனதார வணங்குவதை என்னவென்று கூறுவார்கள்? உத்தம நமஸ்காரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812