வியாழன், 18 ஜூலை, 2019

அறநெறி அறிவு நொடி


""மாங்கல்ய தந்துனா'' என்று திருமணத்தில் மந்திரம் சொல்லி தாலி கட்டப்படுகிறது. இதில் "தந்து' என்றால் என்ன?

"மஞ்சள் கயிறு' என்று பொருள்.

மஞ்சள் கயிற்றைவேறு எவ்வாறு அழைப்பர்?"திருமாங்கல்ய சரடு'

கணவன் இல்லாதவரை "விதந்து'என்று அழைப்பது யாரை\?

கணவர் இல்லாதரை குறிப்பிடுவார்கள்.

கடைகளில்விற்கும்பலகாரங்களைசுவாமிக்குநைவேத்யம்செய்யலாமா?

சுவாமிக்கு நைவேத்யம் என்பது தயாரிக்கப்படுவதிலிருந்து பூஜை செய்யப்படும் வரை மற்றவர்கள் பார்ப்பது கூட தவறு என்கிறது சாஸ்திரம். அதாவது தயாரிப்பவரையும் பூஜை செய்பவரையும் தவிர, வீட்டிற்கும் சரி, கோயிலுக்கும் சரி, ஒரே சட்டம் தான். கோயிலில் நைவேத்யம் செய்யும்போது திரை போட்டுவிட்டுச் செய்வதைக் காணலாம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. சுவாமிக்கு நிவேதனம் செய்யும் முன் வேறு யாரும் அதை சாப்பிடக்கூடாது. நைவேத்யத்தின் வாசனையை மற்றவர்கள் முகர்ந்து விடுவதால் ஏற்படும் தோஷத்திற்குக் கூட பரிகாரம் செய்யச் சொல்லப்பட்டுள்ளது. இவ்வளவு சட்டங்களும் கோயில் மடப்பள்ளிக்கு என்று இருக்கும் போது கடைகளில் வாங்கி நைவேத்யம் செய்வது எப்படிப் பொருந்தும்?

பின்னப்பட்ட (உடைந்த) விக்ரகங்களைபூஜிக்கலாமா?

தெய்வ விக்ரஹங்களின் அமைப்பை அங்கம் (உடல்), உபாங்கம் (உறுப்புகள்), பிரத்யங்கம் (அணிகலன்) என்று மூன்று விதமாக பிரிப்பார்கள். விக்ரஹங்களில் பின்னம் ஏற்படுவது காலத்தாலும் நிகழலாம். தவறுதலாகவும் நிகழலாம். உடலில் பெரிய அளவில் பிளவு ஏற்படுமே யானால் அதனை மாற்றி வேறு விக்ரஹம் பிரதிஷ்டை செய்ய வேண்டும். உடல் உறுப்புகளில் சரிசெய்யக்கூடிய அளவிற்கு பின்னப்பட்டால் அஷ்டபந்த மருந்தினால் ஒட்டவைப்பது போன்ற பணிகளை செய்து சரி செய்து கொள்ளலாம். கை, கால், தலை ஆகிய உறுப்புகள் உடைந்திருந்தால் அந்த விக்ரஹத்தை மாற்ற வேண்டும். அணிகலன்கள், அலங்காரங்கள் ஆகியவற்றில் பின்னம் ஏற்பட்டிருந்தால் சரிசெய்து பூஜிக்க வேண்டுமே தவிர, விக்ரஹத்தை மாற்றக்கூடாது.

காயசித்திஎன்றால்என்ன?

"காயம்' என்பது உடலையும், "சித்தி' என்பது வெற்றியையும் குறிக்கும். காயம் எனும் உடலைப் பேணி உயிரைப் பாதுகாத்து அறிவை வளர்த்து வாழ்க்கையில் வெற்றி பெறுவதையே "காயசித்தி' என்பர்."உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்று கூறும் திருமந்திர ஆசிரியர் திருமூலர், இம்மண்ணில் காயசித்தி மூலமே மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812