வியாழன், 18 ஜூலை, 2019

பெண்களுக்கே உரித்தான மாதம் ஆடி



* ஆடி மாதத்தின் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அனைத்தும் பெண்களுக்கான விரத நாள்கள்தான். இந்த நாளில் செய்யப்படும் விளக்கு பூஜைகள் சிறப்பானது. கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் பெண் தெய்வங்கள், குலதெய்வங்களாக இருக்கும் பெண் சக்திகளை இந்த மாதத்தில் வழிபடுவது சிறப்பானது. ஆடிப்பூரமும், நாக சதுர்த்தியும் பெண்களுக்கே உரித்தான திருநாளாகும்.

* ஆண்டாளும், பொறுமைக்கு இலக்கணமான பூமாதேவியும் பிறந்தது ஆடி மாதத்தில்தான். எனவே ஆடி மாத சுக்கிலபட்ச துவாதசி அன்று துளசியை வழிபட குடும்ப நலன் மேம்படும் என்பது பெண்களின் நம்பிக்கை.

* ஆடியில் வளர்பிறை நாளில் வரும் வெள்ளி, செவ்வாய்களில் அம்மன் பூஜை செய்தால் சிறப்பான பலன்களை தரும். கோலமிட்டு, குத்து விளக்கேற்றி, பூஜையின்போது ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் மற்றும் அம்மன் பாடல்களைப் பாடி சக்தியை வணங்குவது நல்லது. பால், பழங்கள், சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம் போன்றவற்றைப் படைத்து பூஜையை நிறைவு செய்யலாம். அப்போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக அலங்கரித்து உணவளித்து, மங்கலப் பொருள்களை அளித்து அவர்களிடம் ஆசியைப் பெறலாம். இதனால் பெண்கள் மாங்கல்ய பலம் பெறுவார்கள்.

* ஆடிப்பெருக்கு பெண்களுக்கே உண்டான திருநாள். பெண்களின் வடிவாகக் கொண்டாடப்படும் ஆற்றினை கொண்டாடி வழிபடுவதே ஆடிப்பெருக்கு. அன்றைய நாளில் புதுத் தாலியை பெருக்கிப் போடுவதும், முளைப்பாரி எடுப்பதும், கருகமணி, கருவளையல்களை ஆற்று நீரில் படையல் அளிப்பதும் பெண்களின் புனிதமான சம்பிரதாயங்கள். புதிய பணிகளைத் தொடங்குவதும், சொத்துகள் வாங்குவதும்கூட அந்த நாளின் விசேஷம்தான்.

* இதே மாதத்தில் வரும் வரலட்சுமி விரதம் மணமான பெண்களின் முக்கிய விரத நாள். வரலட்சுமியை வணங்கி வீட்டிற்கு வருமாறு பாடல் பாடுவது இந்த நாளில் வழக்கம். பலவித நைவேத்தியங்கள் படைத்து மற்ற சுமங்கலிப் பெண்களை அழைத்து, அவர்களுக்கு அன்னமிட்டு, ரவிக்கைத்துணி, மங்கலப்பொருள்கள் அளித்து அவர்களிடம் ஆசி பெறுவது வழக்கம்.

* ஆடிப் பௌர்ணமி தினத்தில்தான் ஹயக்கிரீவர் அவதரித்தார் என்பதால், அன்றைய நாளில் பெண்கள் அவரை வணங்கி தங்கள் பிள்ளைகளின் படிப்புக்காக விரதம் இருப்பார்கள். சங்கரன்கோவில் கோமதி அம்மன் ஆடிப் பௌர்ணமியன்று புன்னை வனத்தில் இருந்த கடும் தவம்தான் அவளுக்கு சங்கரநாராயணரை தரிசிக்க வாய்ப்பு பெற்றுத் தந்தது. எனவே ஆடிப் பௌர்ணமி விழா அங்கு சிறப்பானது.

* ஆடி மாதத்தின் இறுதியில் வர இருக்கும் ஆடிக் கிருத்திகைத் திருநாளில் முருகப்பெருமானை வணங்கி குடும்ப நலனுக்காக விரதமிருந்து ஆசி பெறுவார்கள்.

* ஓர் ஆண்டில் வரும் நான்கு நவராத்திரிகளில் வாராஹி நவராத்திரி ஆடி மாதத்தில் வருகிறது. ஆடி மாத வெள்ளிக்கிழமையில் வாராஹி இருக்கும் ஆலயங்களில் இது கொண்டாடப்படுகிறது. தருமபுரி கோட்டை ஸ்ரீகல்யாண காமாட்சி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் சூலினி துர்கையின் திவ்ய ரூபத்தை ஆடிமாத மூன்றாவது செவ்வாய்க் கிழமையன்று மாலை 4 மணி முதல் 9 மணி வரை மட்டுமே தரிசிக்க முடியும். ஆண்டின் மற்ற எல்லா நாள்களிலும் சூலினியின் முகதரிசனம் மட்டுமே கிடைக்கும் என்பதால் அன்று பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது. அகிலாண்டேஸ்வரி அன்னைக்கு இந்த மாதத்தின் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஸ்ரீ வித்யா பூஜை பெண்களுக்கானது.

* ஆடி மாதத்தில் ஈசனின் சக்தியை விட பராசக்தியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது நம்பிக்கை. இதனால் ஆடி மாதம் சுக்ல தசமி அன்று திக் தேவதா விரதம் இருக்கிறார்கள். திக் தேவதைகளை அந்தந்தத் திக்குகளில் வணங்கி அவர்களுக்கான துதியை ஜபித்து எல்லா தடைகளையும் நீக்க வேண்டிக்கொள்கிறார்கள்.

* ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றுவது நல்லது. இதனால் பயங்கள் நீங்கி செழிப்பு உண்டாகும். ஆனால், எலுமிச்சம் பழ விளக்குகளை ஒருபோதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...