வியாழன், 18 ஜூலை, 2019
ஆடி அமாவாசை விரதம்
சந்திரனுக்குரிய கடக ராசியில் சூரியன் பெயர்ச்சியாகும் ஆடி மாதத்தில் வரும் ஆடி அமாவாசை தினம் ஒரு சிறந்த தினமாகும். ஜோதிட ரீதியாக பார்க்கையில் சூரியன் ஒரு மனிதனின் தந்தைக்கு காரகனாகிறார். சந்திரன் தாய்க்கு காரகனாகிறார். இந்த இருகிரகங்களும் கூடி வருகிற இம்மாதத்தில் மறைந்த நம் பித்ருக்கள் அல்லது முன்னோர்களை வழிபடுவதற்கான தினம் ஆடி அமாவாசை ஆகும். ஆடி அமாவாசையன்று விரதம் மேற்கொள்ளும் முறைகளை இங்கு தெரிந்து கொள்வோம். இந்த ஆடி அமாவாசை தினத்தன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரமான 4 மணியளவில் துயிலெழுந்து குடும்பத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தலைக்கு ஊற்றி குளித்து விடவேண்டும். பின்பு உணவு மற்றும் வேறு பானங்கள் ஏதும் அருந்தாமல் வீட்டின் பெண்கள் மறைந்த முன்னோர்களுக்கு விருப்பமான உணவு பண்டங்களை தயாரிக்க வேண்டும். வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து அரிசி மாவு கோலமிடவேண்டும். பின்பு ஒரு மர பீடத்தை வைத்து அதன் மீது ஒரு வெள்ளை துணியை விரித்து, நமது முன்னோர்களில் ஆண் மற்றும் பெண்ணை குறிக்கும் வகையில் ஒரு வேட்டியையும் ஒரு புடவையையும் வைக்க வேண்டும். - - அந்த பீடத்திற்கு இரு புறமும் குத்துவிளக்கில் தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, பழங்கள் மற்றும் தயாரிக்க பட்ட உணவுகளை படையலாக வைத்து, முதலில் உங்கள் குலதெய்வத்தை வணங்கி பீடத்தில் வைக்கப்பட்ட துணிகளை நம் முன்னோர்களாக பாவித்து, கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்களின் முன்னோர்களை இம்முறையில் பூஜிக்க வேண்டும். இந்த பூஜையின் போது ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலை உணவை உட்கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும். அமாவாசை தா்ப்பணம் பூஜையை முடித்த பின்பு படையலில் சிறிதை எடுத்து நமது முன்னோர்களின் அம்சமாக கருதப்படும் காகங்களுக்கு உண்ண வைக்க வேண்டும். பின்பு நீங்கள் வணங்கும் இறைவனை குறித்த மந்திரங்கள், பாடல்களை பாடி. தியான நிலையில் இருக்க வேண்டும். மதியம் ஆன உடன் முன்னோர்களின் விருப்பமாக சமைக்கப்பட்ட உணவுகளை உண்டு உங்களின் விரதத்தை முடிக்க வேண்டும். இன்றைய தினத்தில் உணவு, ஆடை மற்றும் பிற எந்த வகையான தான தர்ம காரியங்களை செய்வது இறந்த முன்னோர்களது ஆசிகள் என்றென்றும் அக்குடும்பத்தின் சந்ததியினருக்கு பெற்று தரும். பரம்பரையில் ஏற்பட்டிருக்கும் தேவ மற்றும் பித்ரு சாபங்களை போக்கும். துர்மரணம் அடைந்து நற்கதி அடையாமல் இருக்கும் முன்னோர்களின் ஆன்மா சாந்தமடையும். குடும்பம் மற்றும் தொழிலில் உள்ள அனைத்து விதமான தடைகளும் நீங்கும். துயரங்கள் அனைத்தும் விலகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக