செவ்வாய், 24 ஜூலை, 2018

கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணியம் சுவாமி ஆலய வருடாந்த உற்சவம்

கொழும்பு, கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணியம் சுவாமி கோவிலின் வருடாந்த உற்சவம் எதிா்வரும் 26 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு நடைபெறும் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் ஆரம்பமாகவுள்ளது. அன்று மாலை 6 மணிக்கு அனுக்னை, கிராம சாந்தி, பிரவேசபலி, வாஸ்து சாந்தி, ஆகியவை நடைபெறும். எதிா்வரும் 27 ஆம் திகதி காலை 5 மணிக்கு மூலமூர்த்திக்கு அபிஷேகமும் பூஜையும் நடத்தப்பட்டு அன்று காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும்.



அன்று தொடக்கம் 12 நாட்களுக்கு இங்கு திருவிழா நடைபெறவுள்ளது. தினமும் காலையும் மாலையும் விசேட பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறும்.
எதிர்வரும் 29 ஆம் திகதி சிவனடியார் திருவிழாவும் 30 ஆம் திகதி கற்பூரத் திருவிழாவும் எதிர்வரும் முதலாம் திகதி தைலாப்பிய அபிஷேகமும் 2 ஆம் திகதி வேட்டைத் திருவிழாவும் 3 ஆம் திகதி மாம்பழத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 5 ஆம் திகதி காலை 4 மணிக்கு ஸ்நபன அபிஷேகம், ஸ்தம்ப பூஜை ஆகியவற்றுடன் வசந்த மண்டப பூஜை நடத்தப்பட்டு காலை 7 மணிக்கு தங்க ரத உற்சவம் நடைபெறும். எதிர்வரும் 6 ஆம் திகதி தீர்த்த உற்சவமும் மாலையில் கொடியிறக்கமும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து சண்டேஸ்வரர் உற்சவம் நடைபெறும். எதிர்வரும் 7 ஆம் திகதி காலை 8 மணிக்கு பாற்குட பவனி நடைபெறும். அன்று மாலை 7 மணிக்கு பூங்காவனமும் திருவூஞ்சல் திருவிழாவும் நடைபெறும்.எதிா்வரும் 10ஆம் திகதி இரவு 7 மணிக்கு வைரவர் மடை நடைபெறும்.

ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ வெங்கட்ராமன் குருக்கள், மஹோற்சவ குருக்களான ஸ்ரீகாந்தக் குருக்கள், சிவஸ்ரீ சாம்பசிவ குருக்கள் ஆகியோர் வருஷாபிஷேக கிரியைகளை நடாத்துவார்கள். சிவஸ்ரீ திருச்செல்வம் குருக்கள், சிவஸ்ரீ தர்ஷன் சர்மா, சிவஸ்ரீ ரகிதர சர்மா ஆகியோர் உதவி குருமார்களாக கிரியைகளைச் செய்ய உதவி வழங்குவார்கள்.
கொழும்பு சைவ முன்னேற்ற சங்க பஜனை குழுவினர் பஜனையை இசைக்க ஸ்ரீ நாகேந்திரன் குழுவினர் மங்கள வாத்தியம் இசைக்க சிவஸ்ரீ ராஜகோபால் சர்மா நளபாகம் இசைப்பார். திருவிழாக்காலங்களில் தினமும் அன்னதான பிரசாதம் வழங்கப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812