கண்டிக்கும் ஹற்றனுக்குமிடையில் மத்திய மாகாணத்தின் இதயமாக விளங்குகின்ற
நாவல் நகர் என தமிழில் போற்றப்படும் நாட்டுக்கோட்டை நகரத்தார்
நாவலப்பிட்டி திருவருள் மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில் ஆடிவேல்
தோர்த்திருவிழா கடந்த 19ஆம் திகதி ஆரம்பமாகியது. இவ்விழா தொடாந்து 12
நாட்களுக்கு நடைபெறும். இத் திருவிழா காலங்களில் அடியார்கள் காலை, மாலை
நடைபெறுகின்ற பூஜைகளில் கலந்துக்கொண்டு சுவாமியை தாிசித்து இஷ்டசித்திகளைப்
பெற்று இம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ அழைக்கப்படுகின்றனர்.
26.07.2018 காலை 8.30 மணிமுதல் ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி தேவஸ்தானத்திலிருந்து பாற்குட பவணி இடம்பெறும். மாலை 4.00 மணி முதல் ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி மண்டபத்திலிருந்து அலங்கார பட்டெடுத்தல் வைபவம் ஆரம்பமாகி ஆலயத்தை வந்தடைந்தவுடன் விசேட வசந்த மண்டப பூஜை என்பன இடம்பெறும். 27.07.2018. காலை 4.30 மணிமுதல் அஸ்டோத்திர சங்காபிஷேகம் (108) நித்திய பூஜை இடம்பெற்று காலை 7.00 மணிக்கு புதிய சித்திரத்தேர் வெள்ளோட்டம், விசேட வசந்த மண்டப பூஜை என்பன இடம்பெறும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக