செவ்வாய், 31 ஜூலை, 2018

பிதுர் தர்ப்பணம்




அமாவாசை என்பது இந்துக்கள் இறந்து போன முன்னோருக்கு (பித்ருக்களுக்கு) பூஜை செய்யும் நாளாகும். அமாவாசையன்று பித்ருக்களுக்கு செய்யும் பூஜை மூலமாக அவர்கள் குடிநீர் பெறுவதாக நம்பப்படுகிறது. பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதாகவும் அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுக்கப்படுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.

அமாவாசையில் ஆடி அமாவாசையும் தை அமாவாசையும் சிறப்பானதாக கருதப்படுகின்றன. ஆடி மாதமும் தை மாதமும் அம்மனுக்கு உகந்த மாதங்களாக கருதப்படுவதால் அப்போது பித்ருக்களுக்கு பூஜை செய்வதன் மூலம் அம்மன் அருளும் பித்ருக்கள் அருளும் கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாக ஆடி அமாவாசையும் தை அமாவாசையும் சிறப்பானவையாக கருதப்படுகின்றன.

ஆடி அமாவாசையன்று `பித்ரு' எனப்படும் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவை செய்யப்பட வேண்டும். ஆடி அமாவாசை அன்று தீர்த்தங்களில் எள்ளை விடுகின்றனர். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறி வகைகளைப் படைகின்றனர். விளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு படைத்து பூஜை செய்கின்றனர்.

காகங்களுக்கும் ஏழைகளுக்கும் உணவளிக்கின்றனர். நம் முன்னோர் தங்கியிருக்கும் இடம் `பிதுர் லோகம்' எனப்படும். அங்கே `பிதுர் தேவதைகள் இருக்கின்றனர்.



தர்ப்பணம் செய்வது எப்படி!

மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம்.

எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது. காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவை சிராத்தப் பண்டங்களாகும்

பாவம் நீங்கும்:

பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் மூதாதையர்களின் தோஷங்களில் இருந்து விடுதலை பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தரவல்லது.

ராமேசுவரத்தில் நீராடுவது?

ஆடி அமாவாசை அன்று ராமேஸ்வரம், ராமநாதசாமி கோவிலில் வழிபாடு செய்தால் முழு பலன் கிடைக்கும். ஆனால் அங்கு புனித நீராட சில ஐதீகங்கள் உள்ளன. ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மொத்தம் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன. பக்தர்கள் அந்த தீர்த்தங்களில் புனித நீராடிய பிறகு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இப்புனித தீர்த்தங்களில் ஒன்று அக்னி தீர்த்தம். இலங்கையில் ராவணன் பிடியிலிருந்து சீதை மீட்கப்பட்ட பின்பு தனது கற்பு திறனை நிரூபிக்க தீக்குளித்தாள். ராமேசுவரத்தில் கோவிலை ஒட்டியிருக்கும் கடற்கரை அருகேதான் சீதை தீக்குளித்தாள் என்றும் அந்த இடம் அக்னி என்று அழைக்கப்பட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

தீக்குளித்த பின்பு சீதை நீராடிய இடமே அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அக்னி தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே மற்ற புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

இன்று ஆடி அமாவாசை ஆகும். அமாவாசை என்பது இந்துக்கள் இறந்து போன முன்னோருக்கு (பித்ருக்களுக்கு) பூஜை செய்யும் நாளாகும். அமாவாசையன்று பித்ருக்களுக்கு செய்யும் பூஜை மூலமாக அவர்கள் குடிநீர் பெறுவதாக நம்பப்படுகிறது. பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதாகவும். அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுக்கப்படுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.

ஆடி அமாவாசை தினம் நம்மை விட்டு நீங்கியவர்களை நினைவு கூறும் நன்னாள். அறிந்தோ அறியாமலோ அவர்களுக்கு நாம் இழைத்திருக்கக்கூடிய பிழைகளுக்கு பேசியிருக்கக்கூடிய தீச்சொற்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் ஒரு வழியாகவும் நாம் இந்த நல்நிலைக்கு உயர்ந்ததற்கு நன்றி சொல்லும் வழியாகவும் அமாவாசையன்றும் நாம் முன்னோருக்கு வழிபாடு செய்கிறோம்.

பொதுவாகவே இத்தகைய வழிபாடு ஒவ்வொரு அமாவாசையன்றும் மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும் அப்போது எந்த காரணத்திலாவது அவ்வாறு மேற்கொள்ள இயலவில்லை என்றால் ஆடி அமாவாசையன்று தவறாமல் நிறைவேற்றிவிடுவது சிறந்தது என்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812