செவ்வாய், 24 ஜூலை, 2018

அளுத்மாவத்தை ஆனந்த ஐயப்ப தேவஸ்தான வருஷாபிஷேகம்

கொழும்பு – 15, அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த ஐயப்ப தேவஸ்தானத்தின் 15 ஆவது வருஷாபிஷேக கொடியேற்ற தீர்த்த தேர்த் திருவிழா எதிர்வரும் 27 ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 05 ஆம்திகதி வரை பத்து தினங்களுக்கு நடைபெறவிருக்கிறது.



ஞானமே உருவான பரமேஸ்வரன் சௌந்தர்யமே வடிவான ஸ்ரீ மஹாவிஷ்ணு, புண்ணிய மூர்த்திகளின் திரு அவதாரமாக இம்மண்ணில் தோன்றி ஹரிகரபுத்திரன், தர்மசாஸ்தா, சபரிநாதன், ஐயப்பன், மணிகண்டன் என்றும் கலியுகவரதன் என்றும் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறான். ஸ்ரீ ஐயப்பனின் வரலாறு பற்றி குறிப்பிட முனையும்போது பெரும் புதிரும் பிரமிப்பும் ஏற்படத் தொடங்குகிறது.
பெரும்பாலானவர்கள் ஐயப்பன் என்றே குறிப்பிடுவதன் கருத்தை யாவரும் தெரிந்துகொள்வதே சிறப்பும் பெருமைக்கும் உரியதொன்றாகும். ‘ஐயப்பன்’ என்பது ‘தலைவன், உயர்ந்தவன்’ என்ற பொருளைக் குறிக்கின்றது.
‘ஐ’ என்பது கடவுள் என்பதாகும். அப்பன் என்பது தந்தையைக் குறிக்கின்றது. தந்தையாக இருந்து காப்பவன் என்றே பொருள்படும்.



பேதம், பிரிவு, உயர்வு, தாழ்வு இப்படி பற்பல பிரச்சினைகள் மலிந்து காணப்படும் இவ்வையகத்தில் இவையனைத்தையும் களைந்து அனைவரையும் வாழ்வாங்கு வாழ்ந்திட வழிவகுப்பதே ஸ்ரீ ஐயப்பனின் திரு அவதாரத்தின் அதிமுக்கிய நோக்கமாகும்.
இந்த உன்னதமான உயர்வுமிக்க மேன்மையான திரு அவதாரம் பற்றி நினைக்கும் தோறும் உளம் பெரும் மகிழ்ச்சி பிரவாகத்தை வெளிப்படுத்தி நிற்கின்றமையை உணரலாம். கொழும்பு 15, அளுத்மாவத்தை 478/67 இலக்க புண்ணியா பூமியில் அகில இலங்கை ஆனந்த ஐயப்ப எழுந்தருளி அருள் கடாட்சம் புரிந்து வரும் அரிய வரத்தை நாம் பெற்றிருப்பது பெரும் பாக்கியமே!


ஆதி அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதியாம் சிவனுக்கு புருஷ சக்தியாக விளங்கும் திருமாலின் சக்தியுடன் யாவும் நிறைந்த பரம்பொருளாம் சிவபிரானின் சக்தியும் இணைந்து பேரருள் பாலித்து வரும் ஸ்ரீ ஐயப்பனின் பெருமை, மகிமை சொல்லில் அடங்காது.








கொழும்பு, அகில இலங்கை ஆனந்த ஐயப்ப தேவஸ்தானத்தின் வருஷாபிஷேகம் எதிா்வரும்




27 ஆம் திகதி காலை 6.00 மணிக்கு நடைபெறும் மஹா கணபதி அஷ்டாபிஷேகத்துடனும் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கொடியேற்றத்துடனும் ஆரம்பமாகவுள்ளது.



இவ்விழாவில் 28 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு மகா ஹோமம், கலசம் அபிஷேகம், 29 ஆம் திகதி காலை 9 மணிக்கு திருவிளக்கு பூஜை, இலட்சார்ச்சனை, தீபாராதனை, 30 ஆம் திகதி சுதர்ஷன ஹோமம், கலச அபிஷேகம் 31 ஆம் திகதி ஸ்ரீ மஞ்சமாதாவுக்கு விசேட சிறப்பு பூஜை. ஓகஸ்ட் 1 ஆம் திகதி ஸ்ரீ நாகராஜ பூஜை கலச அபிஷேகம். ஓகஸ்ட் 2 ஆம் திகதி விஷேட அஷ்ட திரவிய கலச அபிஷேகம், 3ஆம் திகதி ஸ்ரீ கருப்புசாமி, ஸ்ரீ கருத்தசாமி சிறப்பு பூஜை, 4 ஆம் திகதி கலச அபிஷேகம், பஞ்ச புண்ணிய யாகம் பள்ளிவேட்டை திருவிழா, 5 ஆம் திகதி காலை 8 மணிக்கு சுவாமி தேர் பவனி ஆராட்டு என்பன நடத்தப்பட்டு 3 மணிக்கு கொடி இறக்கத்துடன் வருடாந்த உற்சவம் நிறைவு பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812