ஞாயிறு, 22 ஜூலை, 2018

தனிஷ்டா பஞ்சமி



1. பிறக்கும் போது எதனை பார்த்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்?
நட்சத்திரத்தை

2. இறக்கும் போது எதனை பார்த்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்?
திதியை

3. இறக்கும் போது எது பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர்?
நட்சத்திரம்

4. ஏன் நட்சத்திரம் பார்ப்பது அவசியம் என்று சொல்லி இருக்கிறார்கள்?
சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுவதால் ஆகும்.

5. அது என்ன அடைப்பு என்று சொல்லப்படுவது?
அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள்.

6. சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பது எதனை?
13 நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.

7. தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் எத்தனை? 13

8. 13 தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களும் எவை?
அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, ரோஹிணி, கார்த்திகை, உத்திரம், மிருகசீருஷம்,
சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம்

9. அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு எத்தனை மாதங்கள் அடைப்பு?
ஆறு

10. ரோஹிணியில் இறந்தவர்களுக்கு எத்தனை மாதங்கள் அடைப்பு? நான்கு

11. கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு எத்தனை மாதங்கள் அடைப்பு?
மூன்று

12. மிருகசீருஷம், சித்திரை, புனர்பூசம், விசாகம்,
உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு எத்தனை மாதங்கள் அடைப்பு?
இரண்டு மாதங்கள்

13. தனிஷ்டா பஞ்சமி என்பது எதுவென்று சொல்லப்பட்டுள்ளது? ஒரு துர்தேவதையாக

14. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் என்ன நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது?
இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ,
பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி 6 மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.

15. முக்தி பெற்ற உயிர்களுக்கு என்ன நடக்கும்?
முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன.

16. முக்தி நிலையை எட்டாத உயிர்களுக்கு என்ன நடக்கும்?
முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.

17. ஒரு மனிதனானவன் எந்த வழியாக எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது?
எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது.

18. 27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள
14 நட்சத்திரங்களில் இறப்பவர்களுக்கு என்ன நடக்கும்?
விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைவார்கள்.

19. தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய என்ன வேண்டும்?
அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது.

20. இது பற்றி எந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது?
கருடபுராணத்தில்

21. இதற்கு பரிகாரமாக என்ன செய்யலாம்? அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி, தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ''இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் '' என்று வேண்டிக் கொண்டு,கற்பூர ஆராதனைக்குப் பின் தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பின் அதற்கான கிரியைகளை தகுந்த வேதப் பயிற்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812