திங்கள், 29 டிசம்பர், 2014

வாஸ்து சாஸ்திரம்

கே. ஈஸ்வரலிங்கம் 11154) வாஸ்து சாஸ்திரம் வீடு கட்டுவதற்கு மட்டும் தானா? வாஸ்து சாஸ்திரம் என்றால் வீடு கட்டுவதற்கு மட்டும் அல்ல. நாம் வசிக்கும் வீட்டின் அமைப்பு, உபயோகிக்கும் பொருளின் இடம், அவ்வளவு ஏன் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும் வாஸ்துதான். நல்ல காற்று, நல்ல வெளிச்சம், வீட்டில் வளர்ப்பதற்கேற்ற மரங்கள், செடிகள் போன்றவை ஓர் இல்லத்திற்கு வாஸ்து பலத்தை அதிகப்படுத்துகிறது. ஒரு வீடு எவ்வளவு சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கப்படுகிறதோ அந்த வீட்டில்தான் தெய்வம் குடியிருக்கும். சிலர் வீட்டின் வெளியில் பூச்செடிகள், கொடிகள் என அழகாக அலங்கரித்திருப்பர். ஆனால் வீட்டின் உட்பகுதி தூசியும், தும்புமாக இருக்கும். சிலர் சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் மட்டுமே வீட்டை பயன்படுத்துவர். சுத்தமாக இருக்கும் வீட்டில் மட்டும்தான் திருமகள் வாசம் செய்வாள். வீட்டில் தூசியும், தும்பும் அதிக அளவில் சேரவிடக்கூடாது. தூய்மையாக இருக்கும் வீட்டில் பணத்திற்கும். உணவுக்கும் பஞ்சம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக பணக்காரர்கள் தங்களின் வீடுகளை தூய்மையாக வைத்திருப்பர். அதுபோல, நம்மவர்களில் பணக்காரர்களின் வீடுகளிலும் தூசியும், தும்பும் இருப்பதில்லை. அதிக அளவில் தூசியும் தும்பும் சேர்ந்த வீடுகளில் வசிப்பவர்கள், திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் முன்னேற்றம் குறைந்து காணப்படுகிறது. சிலரின் வீடுகளில் ஒட்டடை தான் மேற்கூரையை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றதோ என எண்ணும் படியாக ஒட்டடை அதிகளவில் சேர்ந்திருக்கும். அப்படி இருப்பது நல்லதல்ல. அதனால், நல்ல வாஸ்து தன்மை உள்ள வீட்டுக்கு முக்கியமானது. வீட்டை தூய்மையாக வைத்திருப்பதும், தூசியும், தும்பும் சேர விடாமல் பார்த்துக்கொள்வதும் தான். 11155) வீடுகளில் அலங்காரத்திற்கு வைக்கவோ சுவர்களில் தொங்க விடவோ கூடாதவை எவை? ஆயுதங்கள், போரை சித்திரிக்கும் சிற்பங்கள், புகைப்படங்கள். பொம்மை பீரங்கி, பெருக்கல் குறி போல் வாள்கள், ஆகியவற்றை வைக்கக் கூடாது. 11156) வீடுகளில் அலங்கரிக்க வைக்கக் கூடியவை எவை? போர் வீரன், போர் விமானம் ஆகியவை வைக்கலாம். சீனர்களின் டிராகலை வைக்கலாம். இரண்டு கொக்கு, இரண்டு பறவைகளின் படங்களை வைக்கலாம். 11157) இரண்டு பறவைகளின் படங்கள் வைப்பதால் என்ன நடக்கும்? ஒற்றுமையை மேம்படுத்தும். 11158) மான் படத்தை மாட்டி வைக்கலாமா? வைக்கலாம். 11159) மான் படத்தை மாட்டி வைப்பதால் என்ன நடக்கும்? செல்வம் பெருகும். 11160) யானை எதனை குறிக்கும்? பலம், அறிவு, சக்தி ஆகியவற்றை குறிக்கும். 11161) யானையை எந்த திசையில் வைக்க வேண்டும்? கிழக்கில் 11162 இந்த யானையின் அமைப்பு எவ்வாறானதாக இருக்க வேண்டும்? யானையின் தும்பிக்கை மேல் நோக்கி இருப்பது போல் இருக்க வேண்டும். 11163) மிருகங்கள் வாயில் உணவை கவ்வி கொண்டிருக்கும் உருவப்படத்தை வீட்டில் வைக்கலாமா? வைக்கக்கூடாது.

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

சின்முத்திரை விளக்கம்!

அமர்ந்த நிலையில் இருக்கும் சுவாமி ஐயப்பனின் வலது கரத்தை கவனித்தால் ஓர் அடையாளம் காட்டி கொண்டிருப்பார். கட்டைவிரலோடு ஆள்காட்டி விரல் இணைந்து ஒரு வளையத்தை ஏற்படுத்த, மற்ற மூன்று விரல்களும் நிமிர்ந்து நிற்கும். கட்டை விரல் கடவுள். சுவாமி ஐயப்பன் ஆள்காட்டி விரல் ஆன்மா. அதாவது, ஆன்மாவை தாங்கி கொண்டிருக்கின்ற மனிதன், ஏதாவது ஒரு பிறவியில் ஆன்மாவாகிய ஆண்டவனை சென்று அடைய வேண்டும். ஆனால், ஆள்காட்டி விரல் குறிக்கும் ஆன்மா மற்ற மூன்று விரல்களோடு சேர்ந்து கொண்டு நிமிர்ந்து நிற்கிறது. நடுவிரல் மற்றும் மோதி விரல் விவரத்தை பார்ப்போம். ஆணவம் : நடுவிரல் என்று சொல்லக்கூடிய உயரமான விரல் ஆணவம் என்று அழைக்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் ஈகோ என்று சொல்லப்படுகிறது. இதுதான் ஆண்டவனை நாம் அடையவிடாமல் தடுப்பது மட்டுமல்ல, மற்ற எல்லா பிரச்னைகளுக்கும் காரணமாக அமைகிறது. கன்மம் : மோதிரவிரல் கன்மம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, இந்த பிறவி தமது வாழ்க்கை, போன பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு தக்கபடி அமையும். அதுவே தலைவிதியாகவும் அமைகிறது. இதை மாற்ற வேண்டுமென்றால் இறைவன் அருள் வேண்டும். மாயை : பொய்யை உடனே நம்பி விடுகிறோம். உண்மையை நம்ப நிறைய யோசிக்க வேண்டும். மாயத்தோற்றங்கள் நம்மை மயக்கி ஏமாற்றிவிடும். போலி கம்பெனிகளும், போலி சாமியார்களும் உருவாவது இதனால்தான். நாம் இறைவனை அடைய வேண்டும் என்றால் இந்த மூன்று அழுக்குகளும் நீங்க வேண்டும். இதைத்தான் ஐயப்பனின் சின்முத்திரை காட்டுகிறது. விரதம் இருப்பதன் நோக்கம்! ஆணவம், கன்மம், மாயை ஆகிய அழுக்குகளை நீக்க வேண்டும் என்றால் விரதம் இருக்க வேண்டும். ஆடம்பர வாழ்க்கையை அகற்ற வேண்டும். எளிய உடை உடுத்த வேண்டும். எளிய உணவுகளை உண்ண வேண்டும். காலில் செருப்பு அணியாமல் நடக்க வேண்டும். தன்னை அழகுப்படுத்தி கொள்ள கூடாது. கோபம் கொள்ளக்கூடாது. யாரையும் மரியாதையாக நடத்த வேண்டும். ஆதலால்தான் மேல்அதிகாரி பியூனை பார்த்து சாமி என்றும், பியூன் மேல் அதிகாரியை சாமி என்றும் அழைக்கும் சமநிலை ஏற்படுவதை பார்க்கிறோம். துளசி மாலை ஏன்? விரத காலத்தில் ஐம்புலன்களையும் அடக்கும் அனுபவத்தை பெற வேண்டும். இல்லறத்தில் இருந்தாலும் இல்லற வாழ்வில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். ருத்திராட்சை மாலை அல்லது துளசி மாலை அணிந்து கொள்வது அதற்காகத்தான். இவை துறவு உணர்வை ஏற்படுத்தி புலனடக்கத்திற்கு உதவி செய்யும். காவி ரகசியம்! ஐயப்பருக்கு மாலை அணிவித்து விரதம் இருக்கும் காலத்தில் காவி உடை அல்லது கருப்பு உடை அணிவது வழக்கம். துறவு உணர்வு மேம்படுத்த இது உதவும். ஏழை, பணக்காரன் என்ற பேதத்தை போக்கி ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சமம் என்ற உணர்வை ஏற்படுத்தும். மற்றவர்கள் நம்மை எதிர்படும்போது நம்மை அடையாளம் கண்டு பக்தியோடு பழக வழி செய்யும். மலைப்பகுதியில் பயணம் செய்வதால் காட்டு விலங்குகள் இந்த உடையை கண்டு விலகி போகுமாம்.

புதன், 24 டிசம்பர், 2014

ஆஞ்சநேயர்

கே. ஈஸ்வரலிங்கம் 11147) ஆஞ்சநேயருக்கு வடை மாலை சார்த்துவது ஏன்? நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்து வடை சாப்பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்து வடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடை செய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு. 11148) ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்துவது ஏன்? ராமர் வெற்றி பெற்றதை சீதைக்கு முதலில் தெரிவித்தவர் ஆஞ்சநேயர். இதனால் மகிழ்ந்த சீதை தன் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்த இலைகளை மாலையாக்கி அணிவித்தாள். அதன் அடிப்படையில் எண்ணிய செயல் வெற்றி பெற ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கும் வழக்கம் உண்டானது. 11149) மாலையை எப்படி கட்டுவது? இரு வெற்றிலை, ஒரு பாக்கு என வைத்துக் கொண்டு மாலை தொடுக்க வேண்டும். ஒரு மாலையில் 21 கண்ணிகள் அமைவது நல்லது. 48, 54, 108 எண்ணிக்கையிலும் வெற்றிலையைக் கட்டலாம். ஒற்றைப்படை எண்ணிக்கையில் 3, 5, 7 என சனிக்கிழமைகளில் மாலை சாத்துவது நல்லது. இதனால் சுபநிகழ்ச்சிகளில் ஏற்படும் தடை நீங்கி விரைவில் நல்லபடியாக நடந்தேறும். 11150) சங்காபிஷேகம் செய்வதன் சிறப்பு என்ன? அபிஷேகத்திற்குப் பயன்படும் பொருட்களில் மண்ணாலான கலசத்தை விட செம்பு உயர்ந்தது. செம்பை விட வெள்ளியும், அதை விட தங்கக் கலசமும் உயர்ந்தது. இவை அனைத்தையும் விட சங்கு உயர்ந்தது என சாஸ்திரம் கூறுகிறது. சங்காபிஷேகம் செய்தால் அது தேவாமிர்தத்தால் சுவாமியை அபிஷேகம் செய்வதற்கு ஒப்பானது. 11151) வாழ்வில் துன்பங்களும், கஷ்டங்களும் ஏற்படுவது ஏன்? தங்கத்தை புடம் போடுவதும், வைரத்தை பட்டை தீட்டுவதும் அப்பொருள் மென்மேலும் ஜொலிப்பதற்காகத் தானே தவிர, அதை அழிப்பதற்காக அல்ல. நம் வாழ்வில் நாம் அடையும் துன்பங்களும், கஷ்டங்களும் கூட நம் மனதை பக்குவப்படுத்த கடவுள் எனும் கொல்லனால் பட்டை தீட்டப்படும் செயல் தான் என்பதை உணர்ந்து விட்டால், மனமானது சாந்தம் அடையும். 11152) நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை என்பது ஏன்? நரசிம்மர் அருள்புரியும் தன்மையை, நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை என்று சொல்வார்கள். கேட்ட வரத்தை தட்டாமல் கொடுப்பவர் நரசிம்மர். நம்பிக்கையுடன் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்று ஜெபித்து வாருங்கள். உங்களின் விருப்பத்தை லட்சுமி நரசிம்மர் விரைவில் நிறைவேற்றி அருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 11153) கோயிலில் மந்திரம் சொல்லும் போது நமஹ என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் அர்த்தம் என்ன தெரியுமா? சமஸ்கிருதத்தில் மமஹ என்றால் என்னுடையது என்று பொருள். அதோடு ந என்பதைச் சேர்த்து ந மமஹ என்று சொன்னால் என்னுடையது இல்லை என்று அர்த்தம் உண்டாகும். ந மமஹ என்பதே நமஹ என்றானதாகச் சொல்வர். எல்லாம் கடவுளுக்கே சொந்தமானது என்று அறிவிப்பதற்காகவே அர்ச்சனையின் போது நமஹ என்று உச்சரிக்கின்றனர். கடவுளுக்கு அர்ச்சிக்கும் தேங்காய், பழம் மட்டுமில்லாமல், வழிபடும் நாமும் கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்பதைக் குறிக்கவே

வியாழன், 18 டிசம்பர், 2014

சாஸ்திரங்கள்

கே. ஈஸ்வரலிங்கம் 111144) என்றால் என்ன? சாஸ்திரங்கள் என்பது நெறிமுறைகள், மனித குலம் மட்டுமன்றி ஜீவனுள்ள மற்றும் ஜீவனற்ற காணப்படும் அனைத்து தத்துவங்களின் ஒழுங்கான செயல்பாடுகள் பற்றித் தெரிவிப்பது. இவற்றில் ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது உயிரினம் இந்தந்த நிலையில் இவற்றை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதை பெரும்பாலும் நேரடியாகக் குறிப்பிட மாட்டா. பல எடுத்துக்காட்டுக்கள் மூலம் ஒழுங்கற்ற தன்மையும், ஒழுங்கான தன்மையும் காண்பிக்கப்படும். ஒழுக்கத்தின் மேன்மையும், ஒழுங்கற்ற தன்மையின் கீழ்மையும் உதாரணங்களால் விளக்கப்பட்டிருக்கும். தர்ம சாஸ்திரம் என்ற ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மனிதனுக்கான தர்ம நெறிமுறைகள் நேரிடையாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். 111145 சாப்பிட்ட பின்பு குளிக்கலாமா? காலையில் எழுந்ததும் காலைக்கடன்கள் முடித்து, குளித்த பின்பே சாப்பிட வேண்டும். எக்காரணத்திற்காகவும், சாப்பிட்ட பின்பு குளிக்க வே கூடாது. சாப்பிட்ட உணவு செரிப்பதற்கு வெப்பம் அவசியம் தேவை. சாப்பிட்ட பின்பு குளித்தால் உடலின் வெப்பம் குறைந்து விடும். எனவே செரிப்பதற்கு நேரமாகும். வயிற்றிலும் வீண் தொல்லை ஏற்படும். காலப்போக்கில் பசியும் எடுக்காது. இதனால் தான் குளிக்கும் முன்பு சாப்பிடக்கூடாது என்பர். இதையே பெரியோர் குளிக்கும் முன் சாப்பிட்டால் போஜனம் கிடைக்காது எனவும் சொல்லி வைத்தனர். 111146) மரணப்படுக்கையில் தண்ணீர் கொடுப்பது ஏன்? குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்த போது பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு வரமளித்தார். எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ அப்போது மரணமடைவார் என்பதே அது. பத்தாம் நாள் போர் அன்று பீஷ்மர் பாண்டவர் படைக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தினார். அப்போது அவருக்குத் தான் செய்யும் செயலில் சலிப்பு ஏற்பட்டது. உடன் தான் இறக்க நினைத்தார். அவரின் நிலையை அறிந்த அர்ச்சுணன் தேரின் முன்னால் சிகண்டியை நிறுத்தி விட்டு பீஷ்மர் மேல் அம்பெய்தினான். சிகண்டி முன் போர் புரிய விரும்பாத பீஷ்மர் அமைதியாயிருந்தார். அர்ச்சுணனின் அம்புகள் அவரது உடலைத் துளைத்தன. உத்திராயன காலத்தில் இறக்க விரும்பிய பீஷ்மர் அம்புப்படுக்கையில் இருந்தார். அவரைத் தரிசிக்கவும் ஆசி பெறவும் பல அரசர்களும் வீரர்களும் வந்தனர். உடலில் காயங்களுடன் படுத்த படுக்கையாக இருந்த பீஷ்மர் இதனால் மிகவும் களைப்படைந்தார். தாகம் ஏற்படவே அருந்தத் தண்ணீ கோட்டார். துரியோதனனும் கர்ணனும் நறுமணம் மிக்க இனிய பானங்களைக் கொண்டு வந்தும் அதை அருந்தவில்லை. அர்ச்சுணனை நோக்கி, சாத்திரங்கள் கூறும் வழியில் எனக்கு தண்ணீர் தருவாயாக என்றார். அர்ச்சுணன் தன் காண்டீபத்தை நாணேற்றி பீஷ்மரின் தலைக்கருகே ஏவினான். உடனே பூமி பிளந்து பீஷ்மரின் தாயான கங்கை நீர் ஊற்றாகப் புறப்பட்டு நேராக பீஷ்மரின் வாயின் அருகில் பாய்ந்தது. பீஷ்மரும் அதைப் பருகித் தாகம் தணித்தார். மங்காத புகழ் பெற்ற பீஷ்மருக்கு மரணப் படுக்கையில் ஏற்பட்ட தாகம். கங்கையான அவளது தாயால் தணிந்தது. இதனால்தான் இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவருக்குக் கங்கை எனும் நீர் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.

செவ்வாய் கிரகம்

கே. ஈஸ்வரலிங்கம்
11128) நவக்கிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவன் யார்? முருகன் 11129) செவ்வாய்க்கிழமை விரதம் யாருக்கு மிகவும் உகந்தது? முருகனுக்கு 11130) செவ்வாய் விரதம் பற்றி வள்ளலார் கூறியிருப்பது என்ன? செவ்வாய்க்கிழமை சூரியன் உதிக்கும் முன்பு எழுந்து உடல் தூய்மை பெற நீராடி திருநீற்றை நீரில் குழைத்து முறைப்படி தலை உச்சி முதல் உடல் எங்கும் தரித்துக்கொண்டு விநாயகரை நினைத்து துதிசெய்து வணங்க வேண்டும். பின்பு ஸ்ரீ பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை ஜெயித்து சிவத்தியானம் செய்தல் வேண்டும். அதன்பின் சூரியனைப் பார்த்து “ஓம் சிவ சூரியாய நம” என்று கூறி நமஸ்காரம் செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து பரமசிவன், பார்வதி, முருகனை மனத்துக்குள் வணங்கி 108 அல்லது 1008 முறை ஜெபம் செய்து 100 கிராம் மிளகினை ஒரு புதுத்துணியில் முடிந்து “ஓம் வைத்தியலிங்கார்ப்பணம்” என்று கூறி ஓரிடத்தில் அதை வைத்து சிவனடியார் ஒருவரை வீட்டிற்கழைத்து உபசரித்தல் நல்லது. அமுது படைத்து தாம்பூரம் தட்சனை கொடுத்து பின்பு சுத்தமான பச்சரிசி, பாசிப்பருப்பு, நெய், மிளகு, சீரகம் சேர்ந்த உப்பில்லாப் பொங்கல் பொங்கி செய்து சுவாமிக்கு நிவேதனம் செய்து அப்பிரசாரத்தை அரைவயிறு மட்டும் உண்டு அன்று மாலை சிவாலய தரிசனம் செய்து சிவத்தியானத்துடன் திரும்பி வந்து சிவபுராணம் அல்லது கந்தபுராணம் படிக்கக் கேட்டு பின்பு ஏதும் உண்ணாமலே இரவு பாய் தலையணை இன்றி வெறும் தரையில் கம்பளம் விரித்து படுத்துறங்க வேண்டும். 11131) செவ்வாய் விரதம் அனுஷ்டிக்கும் போது தவிர்க்க வேண்டியவை எவை? வாசனாதி திரவியங்கள், தாம்பூலம், பெண் சுகம், பெருந்தூக்கம். 11132) அங்காரகன் என்பது யாரை? செவ்வாய் கிரகத்தை 11133) செவ்வாய்க்கு உரிய வேறு பெயர்கள் என்ன? அர்த்தன், அழல். அழலோன், அறிவன், ஆரல், உதிரன். குருதி, குஜன், சேய், செந்தீவண்ணன். மங்களன், வக்கிரன். 11134) கிரகங்களுக்கு எத்தனை தேவதைகள் இருக்கின்றன? இரண்டு 11135) கிரகங்களுக்கு இருக்கின்ற இரு தேவதைகளும் எவை? அதி தேவதை, பிரத்யதி தேவதை 11136) செவ்வாய்க்குரிய அதி தேவதை யார்? பூமாதேவி 11137) செவ்வாய்க்குரிய பிரத்யதி தேவதை யார்? முருகன் 11138) புராண கதைகளின் படி பூமியின் மகன் யார்? செவ்வாய் 11139) செவ்வாய் கிரகம் பற்றி அறிஞர்களின் கருத்து என்ன? பேரழிவுகள் ஏற்பட்ட சமயத்தில் பூமி உருண்டையின் செம்மண் நிலப்பரப்பிலிருந்து உடைந்து சிதறி விழுந்த உருண்டையே செவ்வாய் என்பதே ஆகும். 11140) பூமியிலிருந்து உடைந்து உருவான செவ்வாய்க்குரிய பெயர்கள் என்ன? பெளமன். பூமிபுத்ரன் 11141) செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் என்ற பெயர் எப்படி வந்தது? செம்மண் நிலப்பரப்புடைய கிரகம் என்பதால் 11142) ஆலய வழிபாட்டில் செவ்வாய்க்கு எந்த வர்ண துணி சமர்ப்பணம் செய்யப்படுகிறது? சிவப்பு 11143) எந்த நிற மலர்கள் சமர்ப்பணம் செய்யப்படுகிறது?. சிவப்பு

கொடிமரம்

கே. ஈஸ்வரலிங்கம்
111112) கொடி மரம் யாரைக் குறிக்கும்? சிவபெருமானை 111113) கொடிக்கயிறு யாரைக் குறிக்கும்? திருவருட் சக்தியை 111114) கொடுத்துணி யாரைக் குறிக்கும்? ஆன்மாவை 111115) தர்ப்பைக் கயிறு எதனைக் குறிக்கும்? பாசத்தை 111116) கொடியேற்றம் நிகழ்வு எதனை உணர்த்துகிறது? மும்மல வயப்படும் ஆன்மா, திருவருட் சக்தியினாலே பாசம் அற்று சிவஞான வடிவமாகிய பதியின் திருவடி என்னும் தத்துவத்தை 111117) பத்ரபீடம் என அழைப்பது எதனை? கொடி மரத்தின் பீடத்தை 111118) கொடி மரத்தில் கயிறு சுற்றியிருப்பது எதனை நினைவூட்டும் வகையில்? இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு மனதை பலியிட வேண்டும் என்பதற்காக ஆன்மாவைப் பாசக் கயிறு சுற்றி யுள்ளதை நினைவூட்டும் வகையில் 111119) திருவிழாவில் முதல்நாள் கொடியேற்றுவதன் நோக்கம் என்ன? திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதமடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள்பாலிக்கப் போகிறார் என்பதே 111120) சூக்கும் லிங்கமாக எதனை எண்ணி வணங்க வேண்டும்? இறைவனை அடைந்ததவர் அழிவற்ற ஆனந்த வெள்ளத்தில் நிலைத்திருப்பார் என நினைத்து 111121) துவஜஸ்தம்பம் என்பது எதனை? கொடிமரத்தை 111122) திருவிழாவின் முதல்நாள் கொடியேற்றுவதை என்னவென்று கூறுவர்? துவஜாரோகணம். 111123) கொடிமரத்தின் முன் ஆண்கள் செய்ய வேண்டியது என்ன நமஸ்காரம்? அஷ்டாங்க நமஸ்காரம் 111124) கொடிமரத்தின் முன் பெண்கள் செய்ய வேண்டியது என்ன நமஸ்காரம்? பஞ்சாங்க நமஸ்காரம் 111125) கொடிமரத்தைக் காக்கும் பொருட்டு என்ன அணிவகுக்கப்படும்? கவசம் 111126) இந்த கவசம் எதனால் செய்யப்பட்டு இருக்கும்? பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் 111127) இவ்வாறு கவசம் அணிவிப்பதால் எவற்றில் இருந்து கொடிமரம் காக்கப்படுகிறது? வெயில், மழை போன்ற இயற்கை மாற்றங்களிலிருந்து

உபநிஷதங்கள்

கே. ஈஸ்வரலிங்கம் 11173) பத்து உபநிஷதங்கள் என்னென்ன? ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டகோ, மாண்டூக்ய, தித்திரி, ஐதரேயம், சாந்தோக்யம். ப்ருஹதாரண்யம் ஆகியவையே பத்து உபநிஷதங்கள் ஆகும். 11174) இவை ஏன் வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது? வேதத்தின் அந்தமாக இவை விளக்குவதால் வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது. 11175) வேதாந்தத்தில் என்ன கூறப்பட்டுள்ளது? வேதங்கள் உலக சிருஷ்டி கிரமத்தைப் பற்றியும். இதில் தனி மனிதன் ஆற்ற வேண்டிய கர்மங்களைப் பற்றியும் கூறு கின்றது. 11176) வேதங்கள் எத்தனை வகைப்படும்? இரண்டு 11177) இரண்டு வகையான வேதங்களையும் தருக? கர்ம காண்டம். ஞான காண்டம் 11178) இதில் உபநிஷதங்கள் எந்த காண்டததில் வரும்? ஞான காண்டத்தில் 11179) உபநிஷதம் என்றால் என்ன பொருள்? குருவோடு இருத்தல், குருவுக்கு அருகே என்றெல்லாம் பொருள்படும். 11180) வேதாந்தங்களாக ஒளிர்கின்றவை எவை?
எல்லாமே வேதாந்தங்களாக ஒளிர்கின்றன. 11181) வேதத்தின் இலக்கு என்ன? வேதாந்தத்தை அறிந்து கொள்ளுதலே ஆகும். 11182) காசிக்குச் சென்றாலும் கர்மம் தீராது என்று புலம்புகிறார்களே, இதன் உண்மை என்ன? அவ்வளவு தூரம் இல்லறத்திலும், இந்த உலகத்தின் மீதும், உடல் மீதும் பற்றுக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். காசிக்குப் போனால் அங்கு எரியும் பிணங்களைப் பார்த்தவுடன் வைராக்கியம் வரவேண்டும். இந்த உடல் ஒன்றுமல்ல, நம் அகங்காரம் ஒன்றுமல்ல, என்கிற விவேகம் வரவேண்டும். இந்த உலகத்தில் அனுபவிக்கும் சுகங்களெல்லாம் வெறும் குப்பை, இறுதியில் இப்படித்தான் இறக்கப் போகிறோம். அதற்குள் கர்மாவை அழித்துக் கொள்ள வேண்டும். அல்லது இறைவனின் மீதுள்ள பக்தியால் கர்மாவை அழிக்க வேண்டும் என்றெல்லாம் விவேகச் சிந்தனை வரவேண்டும். அப்படி கூட வராத சிலரைப் பார்த்தே காசிக்குச் சென்றாலும் கர்மம் தீராது என்கிறார்கள். மேலும், அவ்வளவு பாவக் குவியலை சேர்த்துக் கொண்டுள்ளாரே என்கிற ஆதங்கத்தால் எழுந்த வாக்கியம்தான் இது.

சிவபெருமான்

கே. ஈஸ்வரலிங்கம் 11150) சிவபெருமானுடைய வடிவம் எத்தனை? மூன்று 11151) சிவபெருமானுடைய மூன்று வடிவங்களும் எவை? அருவம், அருவுருவம், உருவம் 11152) அருவத் திருமேனியையுடைய பொழுது சிவபெருமானை எவ்வாறு அழைப்பார்? சிவன் 11153) அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சிவபெருமானை எவ்வாறு அழைப்பார்? சதாசிவன் 11154) உருவத் திருமேனியையுடைய பொழுது சிவபெருமானை எவ்வாறு அழைப்பார்? மகேசுவரன் 11155) மகேசுவரன் எத்தனை 25 வடிவங்களில் அருள்புரிகிறான்? 25 வடிவங்களில் 11156) சரபேஸ்வரர், பைரவர், திரிபாதமூர்த்தி என்று பல்வேறு மூர்த்திகளாக விளங்குபவன் யார்? 11157) உருவமாக காணும் சிவன் எந்த நிலையில் அமர்ந்திருப்பாத காண்கிறோம்? பத்மாசனம் 11158) உருவமாக காணும் சிவனின் ஒளி மிகுந்த கண்கள் எவ்வாறு இருக்கும்? முக்கால் பாகம் மூடிய நிலையில் இருக்கும் 11159) சிவனின் இரு புருவங்களுக்கும் நடுவில் இருப்பது என்ன? நெற்றிக்கண் 11160) சிவனின் நெற்றியில் என்ன இருக்கும்? திருநீற்றினால் மூன்று கோடுகள் 11161) சிவன் எந்த நிற சடைமுடியான்? செம்மை நிற 11162) அவன் தலையில் யார் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறாள்? கங்கை 11163) தலையில் சூடி இருப்பது எதனை? பிறையை 11164) சிவனுக்கு பிடித்த மலர் எது? கொன்றை 11165) சிவன் தலையில் அணிந்திருப்பது எந்த மலரை? கொன்றை 11166) சிவனின் உடல் முழுவதும் என்ன காணப்படும்? திருநீற்று கோடுகள் 11167) சிவனின் கைகளிலும் கழுத்திலும் என்ன காணப்படும்? உருத்திராட்ச மாலை 11168) சிவனின் கழுத்தில் இருப்பது என்ன? பாம்பு 11169) சிவன் எதனை வைத்திருக்கிறார்? உடுக்கையும் சூலாயுதத்தையும் 11170) சிவன் எதனை வாகனமாக வைத்துள்ளான்? விடையாகிய காளை மாட்டை 11171) சிவன் இடையில் என்ன அணிந்துள்ளான்? புலித்தோலை 11172) சிவன் எதனை வீடாக வைத்துள்ளான்? கைலாய மலையை

திங்கள், 10 நவம்பர், 2014

தமிழர் நற்பணி மன்றத்தின் ஸ்தாபகரும் தலைவரும்

ஸ்ரீ கிருஷ்ண கலாலயம் அதன் 38 ஆவதுஆண்டுநிறைவையொட்டி 38 கலைஞர்களைகௌரவித்தது. கொழும்பு மாளிகாவத்தை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற பக்தி இசைக்குழுவின் அங்குரார்ப்பண விழாவில் கலைஞரும ;தமிழர் நற்பணி மன்றத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கே. ஈஸ்வரலிங்கம் பிரதி அமைச்சர் பிரபா கணேசனால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். அருகில் கலாலயத்தின் செயலாளர் கே. மோகன்குமாரும் காணப்படுகிறார்.

வேதங்கள்

11173) பத்து உபநிஷதங்கள் என்னென்ன? ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டகோ, மாண்டூக்ய, தித்திரி, ஐதரேயம், சாந்தோக்யம். ப்ருஹதாரண்யம் ஆகியவையே பத்து உபநிஷதங்கள் ஆகும். 11174) இவை ஏன் வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது? வேதத்தின் அந்தமாக இவை விளக்குவதால் வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது. 11175) வேதாந்தத்தில் என்ன கூறப்பட்டுள்ளது? வேதங்கள் உலக சிருஷ்டி கிரமத்தைப் பற்றியும். இதில் தனி மனிதன் ஆற்ற வேண்டிய கர்மங்களைப் பற்றியும் கூறு கின்றது. 11176) வேதங்கள் எத்தனை வகைப்படும்? இரண்டு 11177) இரண்டு வகையான வேதங்களையும் தருக? கர்ம காண்டம். ஞான காண்டம் 11178) இதில் உபநிஷதங்கள் எந்த காண்டததில் வரும்? ஞான காண்டத்தில் 11179) உபநிஷதம் என்றால் என்ன பொருள்? குருவோடு இருத்தல், குருவுக்கு அருகே என்றெல்லாம் பொருள்படும். 11180) வேதாந்தங்களாக ஒளிர்கின்றவை எவை? உபநிஷதங்கள் எல்லாமே வேதாந்தங்களாக ஒளிர்கின்றன. 11181) வேதத்தின் இலக்கு என்ன? வேதாந்தத்தை அறிந்து கொள்ளுதலே ஆகும். 11182) காசிக்குச் சென்றாலும் கர்மம் தீராது என்று புலம்புகிறார்களே, இதன் உண்மை என்ன? அவ்வளவு தூரம் இல்லறத்திலும், இந்த உலகத்தின் மீதும், உடல் மீதும் பற்றுக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். காசிக்குப் போனால் அங்கு எரியும் பிணங்களைப் பார்த்தவுடன் வைராக்கியம் வரவேண்டும். இந்த உடல் ஒன்றுமல்ல, நம் அகங்காரம் ஒன்றுமல்ல, என்கிற விவேகம் வரவேண்டும். இந்த உலகத்தில் அனுபவிக்கும் சுகங்களெல்லாம் வெறும் குப்பை, இறுதியில் இப்படித்தான் இறக்கப் போகிறோம். அதற்குள் கர்மாவை அழித்துக் கொள்ள வேண்டும். அல்லது இறைவனின் மீதுள்ள பக்தியால் கர்மாவை அழிக்க வேண்டும் என்றெல்லாம் விவேகச் சிந்தனை வரவேண்டும். அப்படி கூட வராத சிலரைப் பார்த்தே காசிக்குச் சென்றாலும் கர்மம் தீராது என்கிறார்கள். மேலும், அவ்வளவு பாவக் குவியலை சேர்த்துக் கொண்டுள்ளாரே என்கிற ஆதங்கத்தால் எழுந்த வாக்கியம்தான் இது.

திங்கள், 3 நவம்பர், 2014

சிவபெருமான்

11150) சிவபெருமானுடைய வடிவம் எத்தனை? மூன்று 11151) சிவபெருமானுடைய மூன்று வடிவங்களும் எவை? அருவம், அருவுருவம், உருவம் 11152) அருவத் திருமேனியையுடைய பொழுது சிவபெருமானை எவ்வாறு அழைப்பார்? சிவன் 11153) அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சிவபெருமானை எவ்வாறு அழைப்பார்? சதாசிவன் 11154) உருவத் திருமேனியையுடைய பொழுது சிவபெருமானை எவ்வாறு அழைப்பார்? மகேசுவரன் 11155) மகேசுவரன் எத்தனை 25 வடிவங்களில் அருள்புரிகிறான்? 25 வடிவங்களில் 11156) சரபேஸ்வரர், பைரவர், திரிபாதமூர்த்தி என்று பல்வேறு மூர்த்திகளாக விளங்குபவன் யார்? 11157) உருவமாக காணும் சிவன் எந்த நிலையில் அமர்ந்திருப்பாத காண்கிறோம்? பத்மாசனம் 11158) உருவமாக காணும் சிவனின் ஒளி மிகுந்த கண்கள் எவ்வாறு இருக்கும்? முக்கால் பாகம் மூடிய நிலையில் இருக்கும் 11159) சிவனின் இரு புருவங்களுக்கும் நடுவில் இருப்பது என்ன? நெற்றிக்கண் 11160) சிவனின் நெற்றியில் என்ன இருக்கும்? திருநீற்றினால் மூன்று கோடுகள் 11161) சிவன் எந்த நிற சடைமுடியான்? செம்மை நிற 11162) அவன் தலையில் யார் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறாள்? கங்கை 11163) தலையில் சூடி இருப்பது எதனை? பிறையை 11164) சிவனுக்கு பிடித்த மலர் எது? கொன்றை 11165) சிவன் தலையில் அணிந்திருப்பது எந்த மலரை? கொன்றை 11166) சிவனின் உடல் முழுவதும் என்ன காணப்படும்? திருநீற்று கோடுகள் 11167) சிவனின் கைகளிலும் கழுத்திலும் என்ன காணப்படும்? உருத்திராட்ச மாலை 11168) சிவனின் கழுத்தில் இருப்பது என்ன? பாம்பு 11169) சிவன் எதனை வைத்திருக்கிறார்? உடுக்கையும் சூலாயுதத்தையும் 11170) சிவன் எதனை வாகனமாக வைத்துள்ளான்? விடையாகிய காளை மாட்டை 11171) சிவன் இடையில் என்ன அணிந்துள்ளான்? புலித்தோலை 11172) சிவன் எதனை வீடாக வைத்துள்ளான்? கைலாய மலையை

வெள்ளி, 24 அக்டோபர், 2014

20/10/2014

கே. ஈஸ்வரலிங்கம் 11126) திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் இலையில் முதலில் வைப்பது என்ன? உப்பு 11127) உப்புக்கு அடுத்தபடியாக முதலில் வைப்பது என்ன? இனிப்பு 11128) உப்பில் யார் வாசம் செய்வதாக கூறப்படுகிறது லட்சுமி 11129) கிரகப்பிரவேச வீட்டிற்கு செல்பவர்கள் என்ன கொண்டு செல்வார்கள்? உப்பு 11130) கிரகப்பிரவேச வீட்டிற்கு உப்பு கொண்டு செல்வதன் காரணம் என்ன? உப்பில் லட்சுமி வாசம் செய்வதால் 11131) சுப நிகழ்ச்சிகளில் இனிப்பை முதலில் சாப்பிடுவது ஏன்? இனிப்புச் சுவை இரைப்பையையும் மண்ணீரலையும் அதற்குரிய வேலையைச் செய்யத் தூண்டுகிறது. இனிப்பை தொடர்ந்து சாப்பிடும் உணவு நன்றாக ஜீரணமாகும். 11132) ராமனுக்கு திருமணம் நடந்த போது என்ன வயது என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறது? 12 11133) சீதாவின் வயது என்ன? 6

திங்கள், 13 அக்டோபர், 2014

13/10/2014

கே. ஈஸ்வரலிங்கம் 11114) நாம் வெளியே செல்லும் போது விதவைப் பெண் எதிரே வந்தால் அபசகுனமா? அந்தக் காலத்தில் மனிதனின் சராசரி ஆயுள் ஐம்பதை ஒட்டித் தான் இருந்தது. அதிலும் ஆண் வயதில் மூத்தவராக (குறைந்தபட்சம் ஏழு வயது வித்தியாசம் இருந்தது) இருந்ததால், கணவனை இழந்த பெண்கள் பெரும்பாலும் இளம் வயதுக்காரர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் பூ. பொட்டு, வளையல். வண்ண உடைகள் எதுவுமே அணியக் கூடாது. வெள்ளைப் புடவை மட்டும்தான் உடுத்த வேண்டிய சமூகக்கட்டுப்பாடு இருந்தது. திருமணமான தம்பதிகளோ, அலங்காரம் செய்து கொண்ட திருமணமான பெண்ணோ வெளியே போகும்போது இவர்கள் எதிர்ப்பட்டால். இந்த இளம் விதவைகளின் மனம் தனக்கு இந்த பாக்கியம் பறிபோனதே என்று வேதனைப்படும். அது ஏதோவொரு வகையில் இப்படி சந்தோஷமாக வெளியேற கிளம்பும் பெண். தம்பதி பேரில் லேசான பொறாமையாகவும் பிரதிபலிக்கலாம். அந்த உணர்ச்சி இவர்களைப் பாதிக்கக் கூடாது என்பதற்காகவும் அந்த விதவைப் பெண்மனிக்கு வேதனையைத் தரக் கூடாது என்று நினைத்து கொண்டு வரப்பட்ட சம்பிரதாயம். ஆனால் வேதனையைத் தவிர்ப்பதற்காக வந்த சகுன சம்பிரதாயமே. அந்த விதவைகளுக்கு மேலும் வேதனையைத் தருகிறாற்போல் ஆகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் இந்த சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பதில் அர்த்தமுமில்லை அவசியமும் இல்லை. 11115) திருமாலுக்குரிய வைணவ ஆகமங்கள் எத்தனை? இரண்டு 11116) திருமாலுக்குரிய வைணவ ஆகமங்கள் இரண்டையும் தருக பாஞ்சராத்ரம், வைகானசம் 11117) மகாபாரதத்தை வியாசர் விருந்து என்னும் பெயரில் எழுதியவர் யார்? ராஜாஜி 11118) இந்தியில் துளசிதாசர் இழுதிய ராமாயணம் எது? ராமசரித மானஸ் 11119) ராமர் மீது பக்தி கொண்ட குலசேகராழ்வார் எழுதியது எது? பெருமாள் திருமொழி 11120) திருமாலுக்கு விரதம் இருக்க உகந்த நட்சத்திரங்கள் எவை? திருவோணம், ரோகிணி 11121) எத்திசை நோக்கி நின்று திருநீறு பூசவேண்டும்? கிழக்கு, வடக்கு 11122) ஞானசம்பந்தர் “மந்திரமாவது நீறு” என்று பாடிய தலம் எது? மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் 11123) விபூதி என்பதன் பொருள் என்ன? மேலான செல்வம் 11124) தாசமார்க்கம் என்னும் அடிமை நெறியில் சிவனை அடைந்தவர் யார்? திருநாவுக்கரசர் 11125) அக்னியைப் பற்றிக் கூறும் நூல் எது? ஆக்னேய புராணம்

செவ்வாய், 7 அக்டோபர், 2014

சகுனம்

கே. ஈஸ்வரலிங்கம் 11111) சகுனம் பார்ப்பது எதற்காக? இந்து மதத்தின் பல நெறிமுறைகளில் சகுனமும் நிமித்தமும் முக்கியமான வையாக இருந்தாலும் சில குறிப்பிட்ட சகுனத்தடை அல்லது நல்ல சகுனம் என்று பொதுவாகக் கருதப்படும் சில விஷயத்திற்கு விளக்கங்கள் : 11112) வீட்டிற்கு முன் காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்பது உண்மையா? இந்த விஷயம் சற்று சுவராசியமானது. அந்தக் காலத்தில் கிராமத்து வீடுகளில் சமையலறை என்று ஒன்று இருந்தாலும், விருந்தினர்கள் வந்தாலோ அதிகப்படி சமைக்க நேரிட்டாலோ, வீட்டின் கொல்லைப்புறத்தில் முதல் கட்டு, இரண்டாம் கட்டு என்று கொல்லைப்புறம் பிரிக்கப்பட்டிருக்கும். முதற் கட்டில் கிணறு இருக்கும். குளிக்க வெந்நீர் போடுவது, தேவைப்பட் டால் அங்கே சமைப்பது - இவை நடக்கும். இரண்டாம் கட்டில் கழிவறை, தோட்டம் இவை இடம்பெறும்) அதிகப்படி சமையலானால் அது முதற் கட்டில் (வெட்டவெளிதான்) நடக்கும். சாதம் தவலையில் வெந்து கொண்டி ருப்பதைப் பார்த்து. சுற்றியுள்ள மரங்களில் அமரும் காக்கைகள் முதற்கட் டைச் சுற்றிச் சுற்றிக் கரையும். சமையலறையில் சமைத்தாலும். விருந்தினர் சாப்பிட்ட பின் மிச்சத்தை முதற்கட்டில் (சிலர் வீட்டை முதற்கட்டு என்றும். இதை இரண்டாம் கட்டு என்றும் சொல்வார்கள்) கொட்டுவார்கள். எப்படியோ சாதம் இரைவதைக் கண்டு காக்கைகள் வட்டமிடும். அக்கம் பக்கத்துக் காரர்கள் காக்கைகள் கரைவதைப் பார்த்து விருந்தினர்கள் வந்திருப்பதைப் புரிந்து கொள்வர். இதுதான் நாளடைவில் தலைகீழாக மாற்றப்பட்டு. காக்கை கரைந்தால் விருந்தினர் வருவார் என்று சொல்லப்படுகிறது. 11113) வெளியே செல்லும்போது பூனை குறுக்கே வந்தால் அபசகுனம் என்று கூறுகிறார்களே இது உண்மையா? பூனை என்கிற பிராணி எப்போது எப்படிப் பாயும் என்று எதிர்பார்க்க முடியாத குணாதிசயம் உள்ளது. நாய் என்றால் அது தெரிந்தவர்களிடம் வாலை ஆட்டிப் பின்தொடரும். தெரியாதவர்களைப் பார்த்துக் குலைக்கும். வெகு சில நாய்களே தெரியாதவரைக் கடிக்க முற்படும். ஆனால் பூனை, எதிர்பாராத வகையில் மேலிருந்து கீழும் குறுக்கேயும் ஆள்மேலேயே கூட பாயும். பாய்வது அன்பினாலும் இருக்கலாம். விரோதத்தினாலும் இருக்கலாம். அப்படி எதுவும் காரணமே இல்லாமல்கூட சடாரென்று பாயும் சுபாவம் பூனைக்கு. நாம் வெளியே செல்ல எத்தனிக்கும் போது அப்படிப் பூனை பாய்ந்தால் நாம் பயந்து விடலாம் அல்லது நமது மனநிலை ஏதோவொரு வகையில் பாதிக்கப்படலாம். இதை மனதில் வைத்துத்தான் பூனை குறுக்கே போவதை அபசகுனம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

சகுனம்

கே. ஈஸ்வரலிங்கம் 11087) சகுனம் பார்ப்பது எதற்காக? இந்து மதத்தின் பல நெறிமுறைகளில் சகுணமும் நிமித்தமும் முக்கியமானவையாக இருந்தாலும், சில குறிப்பிட்ட சகுணத்தடை அல்லது நல்ல சகுனம் என்று பொதுவாகக் கருதப்படும் சில விஷயத்திற்கு விளக்கங்கள்: வீட்டிற்கு முன் காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்பது உண்மையா? இந்த விஷயம் சற்று சுவாரஷ்யமானது. அந்தக் காலத்தில் கிராமத்து வீடுகளில் சமையலறை என்று ஒன்று இருந்தாலும், விருந்தினர்கள் வந்தாலோ அதிகப்படி சமைக்க நேரிட்டாலோ, வீட்டின் கொல்லைப்புறத்தில் (முதல் கட்டு, இரண்டாம் கட்டு என்று கொல்லைப்புறம் பிரிக்கப்பட்டிருக்கும். முதற்கட்டில் கிணறு இருக்கும். குளிக்க வெந்நீர் போடுவது, தேவைப்பட்டால் அங்கே சமைப்பது இவை நடக்கும். இரண்டாம் கட்டில் கழிவறை, தோட்டம் இவை இடம்பெறும்), அதிகப்படி சமையலானால் அது முதற்கட்டில் (வெட்டவெளிதான்) நடக்கும். சாதம் தவலையில் வெந்து கொண்டிருப்பதைப் பார்த்து, சுற்றியுள்ள மரங்களில் அமரும் காகங்கள் முதற்கட்டைச் சுற்றிச் சுற்றிக் கரையும். சமையலறையில் சமைத்தாலும், விருந்தினர் சாப்பிட்டபின் மிச்சத்தை முதற்கட்டில் (சிலர் வீட்டை முதற்கட்டு என்றும், இதை இரண்டாம் கட்டு என்றும் சொல்வார்கள்) கொட்டுவார்கள். எப்படியோ சாதம் இரைவதைக் கண்டு காக்கைகள் வட்டமிடும். அக்கம் பக்கத்துக்காரர்கள் காக்கைகள் கரைவதைப் பார்த்து விருந்தினர்கள் வந்திருப்பதைப் புரிந்து கொள்வர். இதுதான் நாளடைவில் தலைகீழாக மாற்றப்பட்டு, காக்கை கரைந்தால் விருந்தினர் வருவார் என்று சொல்லப்படுகிறது. வெளியே செல்லும் போது பூனை குறுக்கே வந்தால் அபசகுணம் என்று கூறுகிறார்களே இது உண்மையா? பூனை என்கிற பிராணி எப்போது எப்படிப் பாயும் என்று எதிர்பார்க்க முடியாத குணாதிசயம் உள்ளது. நாய் என்றால் அது தெரிந்தவர்களிடம் வாலை ஆட்டிப் பின்தொடரும். தெரியாதவர்களைக் பார்த்துக் குலைக்கும். வெகு சில நாய்களே தெரியாதவர்களைக் கடிக்க முற்படும். ஆனால் பூனை, எதிர்பாராத வகையில் மேலிருந்து கீழும் குறுக்கேயும் ஆள்மேலேயே கூட பாயும். பாய்வது அன்பினாலும் இருக்கலாம். விரோதத்தினாலும் இருக்கலாம். அப்படி எதுவும் காரணமே இல்லாமல் கூட சடாரென்று பாயும் சுபாவம் பூனைக்கு. நாம் வெளியே செல்ல எத்தனிக்கும் போது அப்படிப் பூனை பாய்வதால் நாம் பயந்துவிடலாம் அல்லது நமது மனநிலை ஏதோவொரு வகையில் பாதிக்கப்படலாம். இதை மனதில் வைத்துத்தான் பூனை குறுக்கே போவதை அபசகுணம் என்று சொல்லியிருக்கிறார்கள். நாம் வெளியே செல்லும் போது விதவைப் பெண் எதிரே வந்தாள் அபசகுணமா? அந்தக் காலத்தில் இந்தியாவில் மனிதனின் சராசரி ஆயுள் ஐம்பதை ஒட்டித்தான் இருந்தது. அதிலும் ஆண், வயதில் மூத்தவராக (குறைந்த பட்சம் ஏழு வயது வித்தியாசம் இருந்தது) இருந்ததால், கணவனை இழந்த பெண்கள் பெரும்பாலும் இளம் வயதுக்காரர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் பூ, பொட்டு, வளையல், வண்ண உடைகள் எதுவுமே அணியக் கூடாது. வெள்ளைப் புடவை மட்டும்தான் உடுத்த வேண்டிய சமூகக் கட்டுப்பாடு. திருமணமான தம்பதிகளோ. அலங்காரம் செய்து கொண்ட திருமணமான பெண்ணோ வெளியே போகும் போது இவர்கள் எதிர்ப்பட்டால், இந்த இளம் விதவைகளின் மனம் தனக்கு இந்த பாக்கியம் பறிபோனதே என்று வேதனைப்படும். அது ஏதோவொரு வகையில் இப்படி சந்தோஷமாக வெளியே கிளம்பும் பெண், தம்பதி பேரில் லேசான பொறாமையாகவும் பிரதிபலிக்கலாம். அந்த உணர்ச்சி இவர்களைப் பாதிக்கக் கூடாது என்பதற்காகவும் அந்த விதவைப் பெண்மணிக்கு வேதனையைத் தரக் கூடாது என்று நினைத்து, கொண்டு வரப்பட்ட சம்பிரதாயம். ஆனால் வேதனையைத் தவிர்ப்பதற்காக வந்த சகுண சம்பிரதாயமே, அந்த விதவைகளுக்கு மேலும் வேதனையைத் தருகிறாற்போல் ஆகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் இந்த சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பதில் அர்த்தமில்லை அவசியமும் இல்லை. வீதியில் செல்லும் போது எதிரே பிணம் எடுத்துச் சென்றால் பார்க்கலாமா? இதன் அடிப்படையும் சுவாரஷ்யமானது. நமக்குத் தெரிந்தவர் யாரேனும் இறந்துவிட்டால், நாம் அந்த மனிதரின் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லும் போது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு நடந்து செல்வது வழக்கம், எதிரில் அப்படி ஒரு இறுதி ஊர்வலம் வந்தால், நல்லவேளை இறந்தவர் நமக்கு வேண்டியவர் இல்லை என்று சிறு நிம்மதியும் கொள்ளலாம். ஆக ஊர்வலத்தின் பின் செல்ல வேண்டி வந்தால் நாம் துக்கமாகவும், எதிரிலே வந்தால் சற்று நிம்மதியுடன் இருப்பதும் இயல்பு. இந்த மனிநிலையைத்தான் காலப்போக்கில் எதிரே பிணம் வந்தால் அதிஷ்டம் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

மாங்கல்யம்

கே. ஈஸ்வரலிங்கம் 11093) மாங்கல்யத்தை மஞ்சள் சரட்டில் தான் அணிய வேண்டும் என்பது ஏன் ? திருமணத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கும் போது "மாங்கல்ய தந்துனானேன" என்று மந்திரம் சொல்லுவார்கள். 'தந்து" என்றால் கயிறு. மஞ்சள் கயிறு தான் தந்து என குறிப்பிடப்படுகிறது. மஞ்சள் சரடில் தாலி இருந்தால் தான் 'மங்களம்". வறுமையில் வாடும் பெண்கள் கூட தங்கத்தாலியை அடகு வைத்து விட்டு, மஞ்சள் கயிறில் மஞ்சள் கிழங்கை கட்டி தாலியாக அணிந்து கொள்வார்கள். ஆக தாலி என்பது மஞ்சள் சரடில் தான் இணைந்து இருக்க வேண்டும். கன்னா பின்னாவென்று அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கும் இந்தக் காலத்தில் மஞ்சள் கயிறு அணிவதால் அலர்ஜp ஏற்படுகிறது என்று கூட சில பெண்கள் கூறுவது இதென்ன கலாச்சார சீரழிவு என்ற வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தரமான மஞ்சள் சரடில் தாலியை அணிந்தால் அலர்ஜp எல்லாம் வராது. இன்றும் கூட மிகப்பெரும் பணக்காரர்கள் கூட கழுத்தில் மஞ்சள் சரடில் தான் தாலியை அணிகிறார்கள். கழுத்தில் எத்தனை வகையான நகைகள் அணிந்தாலும், மஞ்சள் சரடினாலான தாலியை அணிந்தால் அதன் மகத்துவம் தனி தான். இதைத்தான் இறைவனும் விரும்புவான். கணவருக்கும் ஆயுள் நீடிக்கும் என்கின்றனர் மகான்கள். 11094) ஆலயங்களில் பெரிய மணி எந்தெந்த நேரங்களில் அடிக்க வேண்டும்? அபிN'கத்தில் ஆரம்பம், அபிN'கத்தில் முடிவு, அர்ச்சனையின் முடிவு, நைவேத்யத்தின் ஆரம்பம், உற்சவத்தில் ஆரம்பம், உற்சவத்தின் முடிவு, நர்த்தனத்தின் முடிவு - இக்காலங்களில் மட்டுமே பெரிய மணி அடிக்க வேண்டும். 11095) கை மணி எந்தெந்த நேரங்களில் அடிக்க வேண்டும்? கர்'ணம் முதலான கிரியைகளின் ஆரம்பம், விக்னேஸ்;வர பு+iஜ, புண்யாஹவாசன ஆரம்பம் ஆகிய காலங்களில் கை மணி அடிக்க வேண்டும்;. தூப - தீபம் காட்டும்போதும், பலி காலத்திலும் இடைவிடாமல் கைமணி ஒலிக்க வேண்டும்.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

கே. ஈஸ்வரலிங்கம்

11084) திருமணமானவர்களை திருமதி என்பது ஏன்? திருமணத்திற்கு முன் பொறுப்பில்லாமல் மற்றும் ஆண்கள் வீணாகச் செலவழித்துத் திரிவார்கள். திருமணத்துக்குப் பின் தறிகெட்டு அலையும் கணவனை மனைவி திருத்தி விடுகிறாள். அவள் கணவனின் வரம்பற்ற செலவுகளைக் குறைத்து வீட்டில் செல்வம் நிறைய முயற்சி செய்கிறாள். இதற்காக தனது மதிநுட்பத்தை (புத்திசாலித்தனம்) பயன்படுத்துகிறார்கள். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படுகிறது. திருவையும் மதியையும் இணைத்தே திருமணமான பெண்களுக்கு திருமதி என்ற பட்டம் தரப்பட்டது. திரு என்றால் லட்சுமி, மதி என்றால் அறிவு. 11086) வீட்டிற்கு முன் காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்பது உண்மையா? இந்த விஷயம் சற்று சுவாரஷ்யமானது. அந்தக் காலத்தில் கிராமத்து வீடுகளில் சமையலறை என்று ஒன்று இருந்தாலும், விருந்தினர்கள் வந்தாலோ அதிகப்படி சமைக்க நேரிட்டாலோ, வீட்டின் கொல்லைப்புறத்தில் (முதல் கட்டு, இரண்டாம் கட்டு என்று கொல்லைப்புறம் பிரிக்கப்பட்டிருக்கும். முதற்கட்டில் கிணறு இருக்கும். குளிக்க வெந்நீர் போடுவது, தேவைப்பட்டால் அங்கே சமைப்பது இவை நடக்கும். இரண்டாம் கட்டில் கழிவறை, தோட்டம் இவை இடம்பெறும்), அதிகப்படி சமையலானால் அது முதற்கட்டில் (வெட்டவெளிதான்) நடக்கும். சாதம் தவலையில் வெந்து கொண்டிருப்பதைப் பார்த்து, சுற்றியுள்ள மரங்களில் அமரும் காகங்கள் முதற்கட்டைச் சுற்றிச் சுற்றிக் கரையும். சமையலறையில் சமைத்தாலும், விருந்தினர் சாப்பிட்டபின் மிச்சத்தை முதற்கட்டில் (சிலர் வீட்டை முதற்கட்டு என்றும், இதை இரண்டாம் கட்டு என்றும் சொல்வார்கள்) கொட்டுவார்கள். எப்படியோ சாதம் இரைவதைக் கண்டு காக்கைகள் வட்டமிடும். அக்கம் பக்கத்துக்காரர்கள் காக்கைகள் கரைவதைப் பார்த்து விருந்தினர்கள் வந்திருப்பதைப் புரிந்து கொள்வர். இதுதான் நாளடைவில் தலைகீழாக மாற்றப்பட்டு, காக்கை கரைந்தால் விருந்தினர் வருவார் என்று சொல்லப்படுகிறது.

புதன், 13 ஆகஸ்ட், 2014

முருகனுக்குரிய பெயர்கள்

கே. ஈஸ்வரலிங்கம் 11080) முருகனுக்குரிய பெயர்கள் எத்தனை? 118 11081) அந்த 118 பெயர்களையும் தருக 1. அமரேசன் 2. அன்பழகன் 3. அழகப்பன் 4. பால முருகன் 5. பாலசுப்பிரமணியம் 6. சந்திரகாந்தன் 7. சந்திரமுகன் 8. தனபாலன் 9. தீனரீசன் 10. தீஷிதன் 11. கிரிராஜன் 12. கிரிசலன் 13. குக அமுதன் 14. குணாதரன் 15. குருமூர்த்தி 16. ஜெயபாலன் 17. ஜெயகுமார் 18. கந்தசாமி 19. கார்த்திக் 20. கார்த்திகேயன் 21. கருணாகரன் 22. கருணாலயம் 23. கிருபாகரன் 24.குலிசாயுதன் 25. குமரன் 26. குமரேசன் 27. லோகநாதன் 28. மனோதீதன் 29. மயில்பிரீதன் 30. மயில்வீரர் 31. மயூரகந்தன் 32. முருகவேல் 33. மயூரவாஹனன் 34. நாதரூபன் 35. நிமலன் 36. படையப்பன் 37. பழனிவேல் 38. பூபாலன் 39. பிரபாகரன் 40. ராஜசுப்பிரமணியம் 41. ரத்னதீபன் 42. சக்திபாலன் 43. சக்திதரன் 44. சக்கர்குமார் 45. சரவணபவன் 46. சரவணன் 47. சக்தியகுணசீலன் 48. சேனாதிபதி 49. செந்தில் குமார் 50. செந்தில்வேல் 51. சண்முகலிங்கம் 52. சண்முகம் 53. சிவகுமார் 54. சஷிவாகனன் 55. செளந்தரீகன் 56. சுப்ரமண்யன் 57. சுதாகரன் 58. சுகதீபன் 59. சுகிர்தன் 60. சுப்பய்யா 61. சுசிகரன் 62. சுவாமிநாதன் 63. தண்டபாணி 64. தணிகைவேலன் 65. தண்ணீர்மலயன் 66. தயாகரன் 67. உத்தமசீலன் 68. உதயகுமாரன் 69. வைரவேல் 70. வேல்முருகன் 71. விசாகன் 72. அழகன் 73. அமுதன் 74. ஆறுமுகவேலன் 75. பவன் 76. பவன்கந்தன் 77. ஞானவேல் 78. குகன் 79. குனானந்தன் 80. குருபரன் 81. குருநாதன் 82. குருசாமி 83. இந்திரமருகன் 84. ஸ்கந்தகுரு 85. கந்தவேல் 86. கதிர்காமன் 87. கதிர்வேல் 88. குமரகுரு 89. குஞ்சரிமணாளன் 90. மாலவன்மருகன் 91. மருதமலை 92. முத்தப்பன் 93. முத்துக்குமரன் 94. முத்துவேல் 95. பழனிநாதன் 96. பழனிச்சாமி 97. பரமகுரு 98. பரமபரன் 99. பேரழகன் 100. ராஜவேல் 101. சைவலோளிபவன் 102. செல்வவேல் 103. செங்கதிர்செல்வன் 104. செவ்வேல் 105. சிவகார்த்திக் 106. சித்தன் 107. சூரவேல் 108. தமிழ்ச்செல்வன் 109. தமிழ்வேல் 110. தங்கவேல் 111. தேவசேனாதிபதி 112. திருஆறுமுகம் 113. திருமுகம் 114. திரிபுரபவன் 115. திருச்செந்தில் 116. உமைபாலன் 117. வேலப்பன் 118. வெற்றிவேல்

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

ஆண்டாள்

வரலட்சுமி விரதம்: பு+iஜ முறை வரலட்சுமி நோன்பு கே. ஈஸ்வரலிங்கம் கே. ஈஸ்வரலிங்கம் 11080) ஆண்டாள் யாருடைய அம்சம்? பு+மிப்பிராட்டியின் அம்சம் 11081) ஆண்டாள் ஏன் இப் பு+வுலகில் அவதரித்தாள்? கிணற்றில் விழுந்த குழந்தையைக் காக்க எண்ணிய தாய், தானே கிணற்றுக்குள் குதிப்பதைப் போல, பாசம், ஆசை என்னும் கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கும் உயிர்களை காப்பாற்றி, பரந்தாமனிடம் சேர்க்க பு+வுலகில் அவதரித்தாள். 11082) ஆண்டாள் எங்கு பிறந்தாள்? ஸ்ரீPவில்லிபுத்தூரிலுள்ள நந்தவனத்தில், ஒரு துளசிச் செடியின் அடியில், 11083) ஆண்டாளுக்கு எத்தனை வயது? 5018 11084) ஆண்டாள் எப்போது பிறந்தால்? கலியுகம் பிறந்து 98வதாக நிகழ்ந்த நளவருடத்தில் ஆண்டாள் அவதரித்தாள். ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமி திதியும், பு+ரநட்சத்திரமும், செவ்வாய்க்கிழமையும் கூடிய நன்னாளில் பெரியாழ்வார் அவளைக் கண்டெடுத்தார். தற்போது கலியுகம் 5115 நடக்கிறது. இவ்வகையில் ஆண்டாளுக்கு இவ்வாண்டு 5018 வது பிறந்த நாள். 11085) இந்த குழந்தையை எடுத்துச் சென்றவர் யார்? வடபத்ரசாயி (ஸ்ரீPவில்லிபுத்தூர் மூலவர்) 11086) அந்த குழந்தைக்கு என்ன பெயரிடப்பட்டது? கோதை 11087) கோதை என்றால் என்ன? நல்வாக்கு அருள்பவள் எனப்பொருள். 11088) ஆண்டாள் பெருமாளிடம் கொண்ட பக்தி என்னவாக மாறியது? காதலாக 11089) ஆண்டாள் யாரை தன் கணவனாக நினைத்து வாழத் தொடங்கினாள்? பெருமாளை 11090) ஆண்டாள் தன்னை என்னவாக கருதிக் கொண்டாள்? கண்ணனோடு வாழ்ந்த கோபியர்களில் ஒருத்தியாக தன்னைக் கருதிக் கொண்டாள்.
கே. ஈஸ்வரலிங்கம் 11073) வெறும் ஒலியலைகளை மட்டும் கொண்டு மந்திரங்களை செயலாற்றச் செய்ய முடியுமா? முடியும் 11074) இந்த வகை மந்திரங்களை என்னவென்று கூறுவார்கள்? "துவனியாத்ம சப்தம்" என்று 11075) பஞ்ச பு+தங்களில் முதன்மையானதாக கருதப்படுவது எது? ஆகாயம் 11076) பஞ்ச பு+தங்களில் ஆகாயம் முதன்மையானதாக கருதப்படுவது ஏன்? ஆகாயத்திலிருந்தே மற்றைய நான்கு பு+தங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று தோன்றியதாக கருதப்படுவதாலாகும். 11077) மந்திர ஒலிக்கும் பஞ்ச பு+தங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? மந்திர ஒலியானது பஞ்ச பு+தங்களிலும் பாயக் கூடியது. 11078) நாம் எழுப்பும் மந்திர ஒலி என்ன செய்யும்? நாம் எழுப்பும் மந்திர ஒலியானது காற்றில் கலந்து, ஆகாயத்தில் பரவி மற்றைய பு+தங்களையும் தாக்கி செயல்படுகிறது. 11079) மந்திரங்களில் பயன்படும் எழுத்துக்கள் எத்தகைய சக்தி கொண்டவை? உயிர்ப்பு சக்தி கொண்டவை ஆகும். மந்திரங்களில் பயன்படும் ஒவ்வோர் எழுத்திற்கும் ஒலிக்கும் வலிமையும் அந்த ஒலிக்கேற்ற அதிரும் வலிமையும் கொண்டவை. பௌதீக விஞ்ஞானத்தில் ஒரு பொருள் தனது அதிர்வெண்ணிற்கு சமனான அதிர்வெண்ணில்; அருகில் உள்ள ஒரு பொருள் அதிர்ந்தால் தானா கவே இந்த பொருள் அதிரும் என்று நிருபி க்கப்பட்டுள்து. அந்த தத்துவமே மந்திரங்களிலும் கடைப்பிடிக் கப்படுகிறது. அதாவது நமது அண்டம் (ஆகாயம்) பலதரப்பட்ட சக்திகளால் நிறைந்தது என்பது விஞ்ஞானம் ஏற்றுக் கொண்ட உண்மை. இந்த அண்டத்திலிருக்கும் சக்திகளானது நாம் மந்திரங்களை உரிய அதிர்வுடன் nஜபிக்கும் போது பாதிக்கப்படுகின்றன. நாம் nஜபிக்கும் மந்திரத்தின் அதிர்விற்கு சமனான அதிர்வு கொண்ட சக்தி பாதிக்கப்பட்டு என்ன நோக் கத்திற்கு நாம் மந்திரம் nஜபிக் கிறோமோ அந்த செயலைச் செய்கிறது. மந்திரங்களைப் nஜபித்து அதன் சக்தியை யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்த முறைப்படி பு+சை செய்து வணங்கி வந்தால், நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெற முடியும்.

வியாழன், 10 ஜூலை, 2014

வலம் வரும் முறை

11020) விநாயகரை எத்தனை முறை வலம் வர வேண்டும்? ஒரு முறை 11021) ஈஸ்வரனையும் அம்பாளையும் எத்தனை முறை வலம் வர வேண்டும்? மூன்று முறை 11022) அரச மரத்தை எத்தனை முறை வலம் வர வேண்டும்? ஏழு முறை 11023) மகான்களின் சமாதியை (அமிஷ்டானம்) எத்தனை முறை வலம் வர வேண்டும்? நான்கு முறை 11024) நவக்கிரகங்களை எத்தனை முறை வலம் வர வேண்டும்? ஒன்பது முறை 11025) சூரியனை எத்தனை முறை வர வேண்டும்? இரு முறை 11026) தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும் தாயாரையும் எத்தனை முறை வலம் வர வேண்டும்? நான்கு முறை 11027) எங்கு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்? கோவிலுக்குள் ஆலய பலிபீடம், கொடிமரம் முன்பு

திங்கள், 30 ஜூன், 2014

கதிர்காமம்

இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம் கதிர்காமத்தில் உள்ளது. அங்கு அருள்பாலிக்கும் கந்தனை வழிபடச் செல்வதை கதிர்காம யாத்திரை என்பர். கிட்டதட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் மன்னனான எல்லாளனுடனான போரில், மன்னனான துட்டைகைமுனு இக்கோயிலில் நேர்த்திக்கடன் வைத்ததாகவும் போரில் வென்றப் பின்னர் இக்கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும் மகாவம்சம் நூலில் குறிப்புகள் உள்ளன. அதேவேளை இக்கோயிலின் வரலாறு அதற்கும் முன்னதான நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரம இரகசியமான புனிதத்துவம் மிக்க இடம். காற்றோ வெளிச்சமோ உட்புகாதமுறையில் சாளரமோ துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறு கதவுண்டு. யாரும் இங்கே செல்லமுடியாது. பு+சகர் மட்டும் பக்தி சிரத்தையுடன் செல்வார். பக்தர்கள் தத்தம் காணிக்கைகளை செலுத்துவதற்கு மத்திய அறைக்கு அப்பால் செல்ல முடியாது பிரசித்தி பெற்ற கதிர்காம வருடாந்த பெருவிழாவின் போது தாமிரத்திலோ தங்கத்தட்டிலோ எழுதப்பட்ட பரம இரகசியமான மந்திர சக்திவாய்ந்த இயந்திரத்தைக ;கொண்ட வெண் துகிலால் மூடிய பேழையை யானை சுமந்து ஊர்வலம் வரும். விவரிக்க முடியாத சு+ட்சுமசக்தி எங்கும் நிலவும். பக்திமேலீட்டினால் சிலர் விழி நீர்மல்கப்;பாடி ஆட இன்னும் சிலர் உருண்டும் புரண்டும் உடலை வாட்டி வதைத்துத் தம் பாவங்களுக்கெல்லாம் பரிகாரம்; தேடுவர். முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கோயில் சுற்றுமதில் 6 அடி உயரத்தில் செங்கட்டியால் கட்டப்பட்டுள்ளது. சதுரவடிவிலுள்ள கோயில் வீதியில் சிறிய கோயில்கள் உள்ளன. கதிர்காம கந்தனின் அண்ணன் கணபதிக்கும் மூத்த மனைவி தெய்வயானைக்கும் தனித்தனி கோயில்கள் உள்ளன. ஞான சொரூபியான பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்தில் அழகும் பொலிவும் கொண்ட அரசமரமுண்டு. இவ்வரசு புத்தருக்கும் விஷ்ணுவுக்கும் புனிதமானது. மகாதேவாலயத்திற்கு இருவாசல்கள் உள்ளன. தெற்கேயுள்ள பிரதான வாசல் வில்போன்று வளைந்த அலங்கார முகப்பைக் கொண்டது. பக்கத்தே சிறு கதவுண்டு. தேவாலயத்திற்கு எதிரே கந்தனின் இரண்டாவது மனைவி வள்ளியம்மாவின் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு இட்டுச்செல்லும் வழி 300 யார் நீளமும் 20 யார் அகலமும் உடையது ஏழுமலைகளில் ஒன்றின் மீது கதிர்காம கந்தனின் காட்சி கொடுத்ததன் ஞாபகார்த்தமாகவும் மாணிக்க கங்கையின் இடது கரையோரத்தில் வள்ளியை மணம் புணர்ந்ததைக் குறிக்கு முகமாகவும் கதிர்காமக்கோயில் அவன் பெயரில் கட்டப்பட்டது. கதிர்காம கந்தனின் பெயர் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் உள்ளன. அவையெல்லாம் அவனின் குணாதிசயங்கள், லீலைகள். வீரதீரச் செயல்களை வெளிப்படுத்தும் பெயர்களாகும். வருடாந்தப் பெருவிழா தீர்த்தத் திருவிழாவுடன் முடிவுறும். வுhன சாஸ்;திரத்தையொட்டி மிக நுண்ணிய முறையில் கணிக்கப்பட்ட பு+ரணையன்று கந்தன் தீர்த்தமாடுவான். மாணிக்கங்கையாற்றின் நீர் பரப்பில் பு+சையில் வைக்கப்பட்ட வாளினாலோ அல்லது களியினாலே வட்டமிட்டு தண்ணீரை வெட்டுவார்.

ஆனி

10905) சூரியனின் வடதிசைப் பயண காலமான உத்தராயணத்தின் கடைசி மாதமாக வருவது எது? ஆனி 10906) நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதை கொண்ட மாதம் எது? ஆனி 10907) இந்த மாதத்தில் பகல் பொழுது எவ்வளவு நேரத்தைக் கொண்டது? 12 மணி நேரமும் 38 நிமிடமும் கொண்டது. 10908) தேவர்களின் மாலை நேரப் பொழுது எது? ஆனி மாதம் 10909) ஆனி மாதத்தில் சூரியன் எந்த ராசியில் சஞ்சரிக்கும்? மிதுன ராசியில் 11000) ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிப்பதால் இந்த என்ன மாதம் என்று அழைப்பர்? மிதுன மாதம் 11001) இந்த மிதுன மாதத்தை வட மொழியில் என்னவென்று அழைப்பார்கள்? ஜேஷ்ட மாதம். 11002) ஜேஷ்டா என்றால் என்ன? மூத்த அல்லது பெரிய 11003) தமிழ் மாதங்களில் பெரிய மாதம் எது? ஆனி 11004) ஆனி மாதத்தை ஏன் பெரிய மாதம் என்று அழைக்கிறார்கள்? பிற மாதங்களுக்கு இல்லாதபடி அதிக நாட்களை கொண்டதால் 11005) இந்த மாதம் எத்தனை நாட்களைக் கொண்டது? 32 நாட்கள் 11006) ராசிகளில் சற்று பெரிய ராசி எது? மிதுன ராசி 11007) மிதுன ராசி பெரிய ராசி என்பதால் நடப்பது என்ன? இதனை கடக்க சூரியனுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. 11008) ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்பது என்ன? ஒரு பழமொழி 11009) மூல நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அது அரசாளும் என்றும் பெண் குழந்தை பிறந்தால் அதனால் நிர்மூலம் உண்டாகும் என்று மேற்கூறப்பட்ட பழமொழிக்கு விளக்கம் கூறுவது சரியா? தவறு 11010) ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் வரும் நாள் பொதுவாக எதனோடு இணைந்து வரும்? பெளர்ணமியோடு 11011) பெளர்ணமியில் பிறக்கும் குழந்தைகள் எப்படி பட்டதாக இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது? அரச யோகத்தினை ஒபற்றதாக இருக்கும் என்று 11012) ‘ஆனி மூலம் அரசாளும்’ என்று கூறுவது ஏன்? ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் பொதுவாக பெளர்ணமியோடு இணைந்து வருவதால் ஆனி மூலத்தில் பிறக்கும் குழந்தைகள் அரசாளும் என்பதாலே ஆகும். 11013) ‘ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்’ என்ற பழமொழி உண்மையில் எவ்வாறு வரவேண்டும்? ஆனி மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம். 11014) ‘ஆனி மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்’ என்ற பழமொழியின் இங்கு பெண் என்பது எதனை குறிக்கிறது? கன்னியை 11015) கன்னி மாதம் என்றழைக்கப்படுவது எந்த மாதம்? புரட்டாதி 11016) புரட்டாதி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாள் எதனோடு இணைந்து வரும்? அஷ்டமி அல்லது நவமியோடு 11017) இதனை இன்னும் விளக்கமாக கூறுவதாக இருந்தால்? துர்காஷ்டமி அல்லது ஆயுத பூஜையோடு இணைந்து வருகிற நாள் 11018) இந்த நாட்களில் என்ன நடந்தது? அம்பாள் அசுரர்களை நிர்மூலமாக்கினாள். 11019) பெண் மூலம் நிர்மூலம் என்ற சொல்வழக்கு எவ்வாறு தோன்றியது? புரட்டாதி மூலம் நட்சத்திர நாளன்று அம்பாள் அசுரர்களை நிர்மூலமாக்கியதால் ஆனி மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்பதற்குரிய உண்மையான பொருளை உணராமல் பொதுவாகவே மூல நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தால் ஆகாது என்று தவறாக புரிந்து கொண்டிருகிறோம்.

விநாயகர்

கே. ஈஸ்வரலிங்கம் 10898) பிள்ளையாரின் மறு பெயர்கள் சில தருக? விநாயகர், கணநாதர், ஆணைமுகன், 10899) அதிகாலையில் துயிலெழுந்ததும் முதலில் செய்ய வேண்டியவைகள் யாவை? பொழுது விடிவதற்கு 5 மணிக்கு முன் துயிலெழ வேண்டும். படுக்கை அறையை விட்டு மற்றொரு இடத்திற்கு சென்று திருவெண்ணீற்றை நெற்றியிலும் உடம்பிலும் முறைப்படி பூசிக்கொள்ளவேண்டும். அது சமயம் ஆசானை மனதில் கொள்ளுதல் வேண்டும். பின்னர் நிலமாகிய பூமிதேவியை கண்களில் ஒற்றிக்கொண்டு தாயே எனது கால்கள் நின்மீது படுவதால் ஏற்படுகின்ற பெரும் பாவத்தினைப் பொறுத்தருள்வாயாக என்று பிரார்த்திக்கவேண்டும். பின்னர் வினைதீர்க்கும் விநாயகப் பெருமானையும்.சிவபெருமானையும். உமாதேவியையும் திருமாலையும் கதிரவனையும் மற்ற தேவர்களையும் முனிவர்களையும் முறையாக தியானிக்கவேண்டும். 10900) விநாயகப்பெருமானின் இராஜஸ குணத்தில் தோன்றியவர் யார்? பிரம்மா. 10901) விநாயகப்பெருமானின் தாமச குணத்தில் தோன்றியவர் யார்? ஸ்ரீ கிருஷ்ணர். 10902) விநாயகப்பெருமானின் சாத்வீக குணத்தில் தோன்றியவர் யார்? சிவபெருமான். 10903) விநாயகப்பெருமானின் திருவயிற்றுள் அடங்கியுள்ள எவை? அண்ட சராசங்களும் அனந்த கோடி ஜீவராசிகளும். 10904) விநாயகப்பெருமானின் பேரருளால், பிரம்மாவின் படைப்புத்தொழிலில் முதலில் தோன்றியவர்கள் யாவர்? கிரியா சக்தி, ஞான சக்தி என்ற இரு சக்திகளும் சித்தி புத்தி என்னும் திருப்பெயர் கொண்ட தெய்வ மகளிராய் பிரம்மாவின் முன்னே தோன்றினர். பிரம்மா இவர்களைப் பார்த்து நீங்கள் இருவரும் விநாயகப்பெருமானின் அருளால் அவதரித்தீர்கள், ஆதலால் எனது அருந்தவப்புதல்விகளாக என்னுடனேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ள, அதற்கு அவர்கள் இருவரும் உங்கள் புத்திரியர்களாக விளங்குவதால் மட்டில்லா மகிழ்ச்சி கொள்கின்றோம் என்று கூறி பிரம்மாவின் பாதங்களை பணிந்து பூரித்து நின்றனர்.

செவ்வாய், 17 ஜூன், 2014

வியாழபகவான் அகிலாவதி

கே. ஈஸ்வரலிங்கம் 10867) பிரபஸ்பதியின் வேறு சிறப்புகள் என்ன நுண்ணறிவு மிகுந்தவர், சாத்வீக குணம் மிகுந்தவர், மங்கலமே வடிவானார். 10868) வியாழபகவானின் தந்தை யார்? ஆங்கிரச முனிவர் 10869) ஆங்கிரச முனிவர் யாருடைய புத்திரர்? பிரம்மதேவரின் 10870) வியாழபகவானின் தாயார் யார்? சிரத்தா தேவி 10871) வசிதா என்று யாரை சொல்வதுண்டு? வியாழபகவானின் தாயாரை 10872) அகிலாவதி யார்? நாககன்னி 10873) இந்த அகிலாவதியான நாககன்னி எதில் வருகிறாள்? மகாபாரதத்தில் 10874) அகிலாவதி யாரை மணந்தார்? கடோற்கஜனை 10875) கடோற்கஜன் யாருடைய மகன்? பீமனின் 10876) கடோற்கஜன் அகிலாவதியை எவ்வாறு மணம் புரிந்தான்? அகிலாவதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து 10877) அகிலாவதியின் மகன் யார்? பார்பரிகா 10878) பார்பரிகாவுக்கு அகிலாவதி என்ன பழக்கினாள்? போரிடப் பழக்கினாள் 10879) யாருடன் சேர்ந்து போரிடப் பழக்கினாள்? தோற்கும் பக்கத்துடன் சேர்ந்து 10880) பார்பரிகா பாரதப்போரில் எத்தனையாம் நாளில் போரிடத் தொடங்கினான்? பதினான்காம் நாளில் 10881) பதினான்காம் நாளில் யாருடன் இணைந்து போரிடத் தொடங்கினான்? கெளரவருடன் 10882) பார்பரிகா யாரையெல்லாம் வென்றான்? பீமன், கடோற்கஜன். அருச்சுனன் ஆகியோரை 10883) பார்பரிகா யாரால் கொல்லப்பட்டான்? கிருஷ்ணனால் 10884) அசுவத்தாமன் யார்? மகாபாரதக் கதை மாந்திர்களுள் ஒருவன் 10885) அசுவத்தாமன் யாருடைய மகன்? துரோணாச்சாரியாருடைய. 10886) அசுவத்தாமன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தவர் யார்? அவரது தந்தை துரோணாச்சாரியார் 10887) அசுவத்தாமன் இந்துக்களின் நம்பிக்கைப்படி எவ்வாறு கருத ப்படுகிறான்? ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவனாக 10888) குருசேத்திரப் போரில் அசுவத் தாமன் இறந்துவிட்டதாக யார் மூலம் கூறப்பட்டது? தருமர் 10889) இந்த வதந்தியை நம்பி கவலை அடைந்தவர் யார்? துரோணர் 10890) இவர், இவ்வாறு கவலையில் இருந்த போது இவரை கொன்றவர் யார்? திருஷ்டத்யும்னன் 10891) திருஷ்டத்யும்னன் யார்? இளவரசன் 10892) குருசேத்திரப் போரில் 18 ஆம் நாள் இரவில் கெளரவர் பக்கம் உயிர் பிழைத்திருந்தவர்கள் எத்தனை பேர்? மூவர் 10893) அந்த மூவரில் ஒருவர் யார்? பார்பரிகா 10894) பாண்டவர்கள் படைகளின் தலைமைப்படைத் தலைவர் யார்? திருஷ்டத்யும்னன் 10895) திருஷ்டத்யும்னனைக் கொன்றவர் யார்? பார்பரிகா 10896) பார்பரிகா திருஷ்டத்யும்னன் என்ன செய்து கொண்டிருக்கும்போது கொன்றான்? தூக்கத்தில் இருக்கும் போது 10897) பார்பரிகா இதேபோல் வேறு யாரையெல்லாம் அன்றிரவு கொன்றான்? பாண்டவர்களின் ஐந்து குலக் கொழுந்துகளையும் பாண்டவ படை வீரர்களையும்.

வியாழன், 12 ஜூன், 2014

வியாழ பகவான்

10857) வியாழபகவான் இந்திரனுக்கு என்ன சொன்னார்? “தேவேந்திரா ஏன் அழுகிறாய்” விவரம் அறிந்தவன் ,நீதி அறிந்தவன் இப்படிப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்ட காலத்திலும் பயப்படமாட்டான் செல்வங்களும் இப்போது உனக்கு நேர்த்ததைப் போன்ற பிரச்ச்னைகளும் நிரந்தரமானவை அல்ல அனைத்தும் முற்பிறப்புகளில் செய்யப்பட்ட செயல்களின் விளையவாகவே உண்டாகின்றன. வாழ்வில் மேடும் பள்ளமும் வரத்தான் செய்யும். வண்டிச்சக்கரம் உருளும் போது கீழே இருந்த பகுதி மேலே போவதும் மேலே இருந்த பகுதி கீழே வருவதுமாக இருக்கிறது அல்லவா அதைப் போல நன்மைகளால் உயர்வு அடைவதும் தீமைகளால் கீழ்நிலை அடைவதும் மாறி மாறி வரத்தான் செய்யும். அப்படி இப்படி இருக்கும் போது, ஏன் அழுகிறாய்? நல்லதோ கெட்டதோ எவ்வளவு காலமானாலும் சரி அவற்றை அனுபவிக்காமல் தப்ப முடியாது யாராக இருந்தாலும் தாங்கள் செய்த செயல்களின் பலனை அனுபவித்தே தீரவேண்டும் என்றார். 10858) யாராக இருந்தாலும் நாங்கள் செய்த செயல்களின் பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்று வியாழ பகவான் யார் கூறியதாக கூறுகிறார்? பரமாத்மா 10859) பரமாத்மா யாருக்கு இவ்வாறு உபதேசித்திருக்கிறார்? பிரம்மனுக்கு 10860) பரமாத்மா பிரமனுக்கு எதில் இவ்வாறு உபதேசிக்கிறார்? சாமவேதத்தில் 10861) வியாழ பகவான் இந்திரனுக்கு வேறு என்ன உபதேசம் செய்தார்? தானம் செய்தவன் மகிமை அவற்றின் பலன்கள் அதிகரிக்கும் விதம் ஆகியவற்றை 10862) தானப் பலன்கள் எப்போது அதிகரிக்கும் என்று வியாழ பகவான் இந்திரனுக்கு கூறினார். இடத்திற்குத் தகுந்தபடி செய்யும் போது என்று 10863) இவ்வாறு உபதேசம் செய்த வியாழ பகவான் வேறு என்ன செய்தார் துயரத்திலிருந்து விடுபட்டு பழைய நிலையை அடைய வழியும் காட்டினார். 10864) குருபகவான் நவக்கிரகங்களில் எத்தனையாவது இடத்தில் உள்ளார்? ஐந்தாவது 10865) குருபகவானுக்குரிய வேறு பெயர்கள் என்ன? வியாழ பகவான், பிரகஸ்பதி 10866) தேவகுருவாக சித்திர சபையில் வீற்றிருக்கும் இவர் எதில் சிறந்தவர்? கல்வியில்

திங்கள், 2 ஜூன், 2014

வியாழ பகவான்

10844) நவக்கிரகங்களிலேயே இதிகாச புராணங்களில் அதிக அளவில் இடம்பெற்றவர்கள் யார்? வியாழ பகவான்னும் சுக்கிராச்சாரியாரும் 10845) இவர்களில்தேவ குருவானவர் யார்? வியாழ பகவான் 10846) அசுரகுருவானவர் யார்? சுக்கிராச்சியார் 10847) குருவைப்பற்றி கூறப்படுகின்ற அருள் கூற்றுக்கள் எவை? குருஅருள் இன்றேல் திருவருள் இல்லை, குரு பார்க்ககோடி நன்மை 10848) சாபத்தால் அனைத்துச் செல்வங்களையும் இழந்தவர் யார்? இந்திரன் 10849) இந்திரன்யாருடைய சாபத்தால் அனைத்துச் செல்வங்களையும் இழந்தார்? துர்வாசரின் 10850) அனைத்துச் செல்வங்களையும் இழந்த இந்திரன் யாரைத் தேடி ஓடினான்? தேவ குருவான வியாழ பகவானை 10851) இந்திரன் வரும்போது வியாழ பகவான் என்ன செய்து கொண்டி ருந்தார்? ஜபம் செய்து கொண்டிருந்தார். 10852) வியாழ பகவான் யாரைப் பார்த்து ஜபம் செய்து கொண்டிருந்தார்? சூரியனைப் பார்த்து 10853) இந்திரன் எந்ததிசையை நோக்கி ஜபம்செய்துகொண்டிருந்தார்? கிழக்குநோக்கி 10854) வியாழபகவானைத்தேடிச் சென்ற இந்திரன் என்ன செய்தார் வியாழ பகவானின் திருவடிகளில் விழுந்து வணங்கி தன் துயரை எல்லாம் சொல்லி அழுதான் 10855) வியாழபகவான் என்னசெய்தார் இந்திரனுக்கு ஆறுதல் சொல்லி உபதேசம் செய்தார். 10856) வியாழபகவான் இந்திரனை எவ்வாறு அழைத்தார். தேவேந்திரா

அருச்சுனன்

10829) ஜிஷ்ணு என்றால் என்ன? எதிரிகளை வெல்பவன் 10830) ஜிஷ்ணு என்ற பெயர் யாருக்குரியது? அருச்சுனனுக்கு 10831) அருச்சுனனுக்கு உரிய இன்னுமொரு பெயர் என்ன? கீரிடி 10832) கீரிடி என்ற பெயர் எப்படி வந்தது? கீரிடத்தை அணிந்ததால் 10833) அருச்சுனன் யார் அளித்த கீரிடத்தை அணிந்தார்? இந்திரன் அளித்த 10834) அருச்சுனனுக்குரிய இன்னும் ஒரு பெயர் என்ன? சுவேதவாகனன் 10835) சுவேதவாகனன் என்றால் பொருள் என்ன? வெள்ளைக் குதிரைகளை பூட்டிய தேர் கொண்டவன் 10836) அருச்சுனனுக்குரிய மற்றுமொரு பெயர் என்ன? விபாச்சு 10837) விபாச்சு என்ற பெயர் எப்படி வந்தது? போர் விதிகளின்படி போரிடுபவன் என்பதால் 10838) அருச்சுனனுக்கு உரிய மற்றுமொரு பெயர் என்ன? குடாகேசன் 10839) குடாகேசன் என்றால் பொருள் என்ன? போரில் எதிரிகளை வெல்லும் வரை உறக்கத்தை உதறி தள்ளியவன் 10840) வாரணக் கொடியோன் என்ற பெயர் யாருக்குரியது? அருச்சுனனுக்கு 10841) அருச்சுனனுக்கு வாரணக் கொடியோன் என்ற நாமம் ஏன் வந்தது? அனுமானின் உருவம் தாங்கிய கொடியை உடையவன் என்பதால் 10842) அருச்சுனனுக்குரிய மற்றுமொரு பெயர் என்ன? பராந்தகன் 10843) பராந்தகன் என்றால் பொருள் என்ன? எதிரிகளை வெல்வதில் மனத்திடம் உள்ளவர்.

அருச்சுனன்

10809) அருச்சுனன் அல்லது அரஜுனன் என்பது யார்? மகாபாரத காப்பியத்தில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திர ங்களுள் ஒருவன். 10810) அருச்சுனன் பஞ்ச பாண்ட வர்களில் எத்தனையாதவன்? மூன்றாமவன் 10811) அருச்சுனன் கிருஷ்ணன் யார்? நண்பன் 10812) அருச்சுனனுக்கு எதில் சிறந்தவனாக விளங்குகிறான்? வில் வித்தையில் 10813) பாண்டவர் மற்றும் கெளரவர்களுக்கு குருவானவர் யார்? துரோணர் 10814) துரோணரின் முதன்மையான சீடன் யார்? அருச்சுனன் 10815) குரு சேத்திரப் போரின் முன் கிருஷ்ண ருக்கும் அருச்சுனனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக விளங்கும் நூல் எது? பகவத்கீதை 10816) அருச்சுனனுக்கு எத்தனை மனைவியர்கள்? நான்கு 10817) அருச்சுனனின் நான்கு மனைவியரதும் பெயர்களைத் தருக? திரெளபதி, சுபத்திரை, உலுப்பு, சித்திராங்கதை 10818) அருச்சுனனுக்கு எத்தனை பிள்ளைகள்? நான்கு 10819) நான்கு பேரும் ஆண்களா, பெண்களா? ஆண்கள். 10821) அருச்சுன னின் அடை மொழிப் பெய ர்கள் என்ன? கெளந்தேயன், விஜயன். தனஞ்செயன். காண்டீபன், பார்த்தன் 10822) குந்தியின் மகன் என்பதற்குரிய அடை மொழி என்ன? கெளந்தேயன் 10823) போரில் அதிக வெற்றிகளை குவித்த வீரன் என்பதால் எற்பட்ட அடைமொழி என்ன? விஜயன் 10824) அதிக செல்வங்களை போரில் கவர்ந்த தால் ஏற்பட்ட அடைமொழி என்ன? தனஞ்செயன், பார்த்தன், சவ்வியசாசி, பற்குணன். ஜிஷ்ணு, கீரிடி, சுவேத, வாகனன், விபாச்சு, குடாகேசன், வாரணக் கொடியோன், பராந்தகன் 10825) அருச்சுனனுக்கு காண்டீபம் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது? காண்டீபம் எனும் பெயர் கொண்ட வில்லை உடையவன் என்பதால் 10826) குந்தியின் இயற்பெயர் என்ன? பிருதை 10827) குந்தியின் இயற்பெயர் பிருதை என்ப தால் அருச்சுனனுக்கு ஏற்பட்ட பெயர் என்ன? பார்த்தன் 10828) ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் அம்பு களை வில்லில் இருந்து செலுத்தக் கூடிய ஆற்றல் படைத்தவன் என்பதால் அருச்சுனனுக்கு ஏற்பட்ட பெயர் என்ன? சவ்வியசாசி 10829) அருச்சுனனுக்கு ‘பற்குணன்’ என்ற பெயர் எதனால் ஏற்பட்டது? பங்குனி மாதத்தில் பிறந்தவன் என் பதால்.

திங்கள், 12 மே, 2014

கர்ணன்

(10797) கர்ணனின் சாவிற்கு முதல் மற்றும் முக்கிய காரணம் யார்? துர்வாசர் முனிவர் ஆவார். (10798) துர்வாசர் முனிவர் செய்தது என்ன? குந்தியை ஆசீர்வதிக்கையில் மந்திரத்துடன் அவரது விருப்பத்திற்கு எந்த கடவுளையும் அழைக்கலாம் என்று ஆசீர்வதித்த அவர் அந்த மந்திரத்தின் பின்விளைவை அவரிடம் சொல்லவில்லை. (10799) அந்த மந்திரத்தின் பின்அளவைப் பற்றி விழிப்பு ணர்வின்றி குந்திதேவி என்ன செய்தார்? தனது திருமணத்திற்கு முன்னதாக சூரியனை அழைத்தார். திடீர் பயத்தாலும் தொடர்ந்த தீய வழியினாலும் குழந்தை உருவானது. (10800) கர்ணணை ¨க்ஷத்ரியராக ஏற்றுக் கொள்ளல் மறுக்கப்பட்டது ஏன்? தேரோட்டின் அதிரதனினால் அவர் வளர்க்கப்பட்டதால் (10801) அத்தினபுரம் சிம்மாசனத்திற்குரிய உண்மையான நபர் யார்? கர்ணன் (10802) கர்ணன் அத்தினபுரம் சிம்மாசனத்திற்குரிய நபர் என்று அறியப்படாமல் இருந்ததற்கு காரணம் என்ன? கர்ணனின் பிறப்பு ரகசியமாக வைக்கப்பட்டதால் ஆகும். (10803) இராட்சத தேனீ வடிவத்தில் இருந்த பகவான் யார்? இந்திரன் (10804) இராட்சத தேனீ வடிவத்தில் இருந்த இந்திரன் என்ன செய்தார்? கர்ணனின் தொடையைக் குடைந்தார் (10805) இதனால் கோபம் அடைந்தவர் யார்? பரசுராமர் (10806) பரசுராமர் யாருக்கு சாபமிட்டார்? கர்ணனுக்கு (10807) இவர் கர்ணனுக்கு ஏன் சாபமிட்டார்? தனது சாதி பற்றி பொய்யுரைத்ததற்காக (10808) குருஷேத்திரத்தில் நடக்கவிருந்த படுகொலை பற்றி யாருக்கு தெரியும் என்று வெளி யிடப்பட்டது? பரசுராமருக்கு

புதன், 7 மே, 2014

கர்ணன்

(10768) குந்தி இளமையாக இருந்த போது அவரது தந்தையின் இடத்திற்கு வந்தவர் யார்? துர்வாச முனிவர். (10769) குந்திதேவி துர்வாச முனிவருக்கு எவ்வளவு காலம் பணிவிடை செய்தார்? ஒரு ஆண்டு முழுவதும் (10770) அவரது சேவை மற்றும் விருந்தோம்பலில் மகிழ்ந்த முனிவர் என்ன செய்தார்? அவரது எதிர்காலத்து துயரம் பற்றி கணித்து திருமணத்துக்குப் பின்னர் பாண்டு மூலம் அல்லாத குழந்தையால் ஏற்படும் சிக்கல் பற்றிக் கூறினார். (10771) குந்திதேவிக்கு இவ்வாறு கூறிய துர்வாச முனிவர் என்ன செய்தார்? அவரது துன்பத்தைத் தீர்க்க வரம் ஒன்றை அளித்தார் (10772) அவர் அளித்த வரம் என்ன? குந்திதேவி தனது விருப்பப்படி எந்தக் கடவுளையும் அழைத்து குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் (10773) குந்தி மணமாகாமல் இருக்கும் போது என்ன செய்தார்? குந்தியின் முன்னாள் தோன்றி அந்த வரத்தின் சக்தியை சோதிக்க முடிவு செய்தார் (10774) அவர் மந்திரத்தை உச்சரித்து யாரை அழைத்தார்? சூரிய பகவானை (10775) மந்திரத்தின் சக்தியால் கட்டுப்பட்டு சூரியன் என்ன செய்தார்? அவருக்கு மகனை அளித்தார். (10776) இந்த குழந்தை எப்படிப் பிறந்தது? கவசா, குண்டலா அணிந்தே பிறந்தது (10777) கவசா என்பது என்ன? போர்க்கவசம் (10778) குண்டலா என்பது என்ன? காது வளையங்கள் (10779) குழந்தை பிறந்ததும் குந்தி தேவி என்ன செய்தார்? மணமாகாத தாயாக உலகத்தை சந்திக்க விருப்பமின்றி இருந்தார். (10780) இதனால் குந்திதேவி என்ன செய்தாள்? அந்தக் குழந்தை கர்ணனை கூடையில் வைத்து புனித நதியான கங்கையில் மிதக்க விட்டால். (10781) குந்திதேவி இவ்வாறு செய்தது ஏன்? அக்குழந்தை வேறொரு குடும்பத்தால் எடு த்துக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் (10782) குந்திதேவி யாரது துணையுடன் குழந்தையை நதியில் மிதக்க விட்டார்? அவரது தோழியான தத்ரியின் துணையுடன் (10783) நதியில் மிதந்து வந்த குழந்தை கர்ணனை கண்டெடுத்தது யார்? அதிரதன் (10784) அதிரதன் யார்? தேரோட்டி (10785) யாருடைய தேரோட்டி? திரிதராடிராவின் (10786) திரிதராஷ்டிரா யார்? ஒரு அரசர் (10787) அதிரதனின் மனைவியின் பெயர் என்ன? ராதா (10788) அதிரதனும் ராதாவும் இந்தக் குழந்தையை எப்படி வளர்த்து வந்தார்கள்? தங்களின் சொந்த மகனாகவே வளர்ந்தனர் (10789) இவர்கள் கர்ணனுக்கு இட்ட பெயர் என்ன? வாசுசேனா (10790) கர்ணனை இவர்கள் வேறு எவ்வாறு அழைத்தனர்? ராதேயன் (10791) ராதேயன் என்பதன் பொருள் என்ன? ராதாவின் மகன் (10792) கர்ணன் என்பதன் பொருள் என்ன? காது (10793) கர்ணன் எந்த தேசத்தின் அரசனானான்? அங்க தேசத்தின் (10794) கர்ணனின் உண்மையான பிறப்பு பற்றிய ரகசியம் வெளிவந்தது எப்போது? அங்க தேசத்தின் அரசனான பின்பு (10795) அவரது உண்மையான பிறப்பு பற்றிய ரகசியம் வெளிவந்ததும் கர்ணனுக்கு அது மகிழ்வைத் தந்ததா? இல்லை. வெறுப்பை உண்டாக்கியது. (10796) அவரது மனைவியின் பெயர் என்ன? விருஷாலி

திங்கள், 28 ஏப்ரல், 2014

fu;zd;

fu;zd; fu;zd; ve;j ehl;bd; muruhf ,Ue;jhu;? mq;fh ehl;bd; fu;zdpd; jha; ahh;? Fe;jpNjtp fu;zdpd; je;ij ahh;? R+upaf; flTs; Fe;jpNjtp ahiu kzKbj;jhh;? ,sturh; ghz;Lit fu;zDf;F vj;jid kfd;fs; ,Ue;jdu;? gy kfd;fs; mtu;fspd; vj;jid kfd;fspd; ngau;fs; Fwpg;gplg;gl;Ls;sd? xd;gJ xd;gJ Ngupy; vj;jid Ngh; FUN\j;uh Nghupy; fye;J nfhz;lhu;? xUtu; kl;LNk me;j xd;gJ kfd;fspd; ngau;fs; vd;d? tPur;Nrdh;> Rjkh>; \j;UQ;[ah>; j;tpglh;> RN\dh>; rj;jpaNrdh;> rpj;uNrdh>; R\u;kh (gdNrdh); kw;Wk; tpup\NfJ. ,th;fspy; FUr;Nrj;jpug; Nghupy; ,wf;fhj kfd; ahh;? tpU\NfJ NghUf;Fg; gpd; ,td; ahUila mutizg;gpy; ,Ue;jhd;? mUr;Rddpd; jpnusgjpapd; Rak;tuj;ijj; njhlu;e;j iffyg;gpy; ,we;jth;; ahh;? Rjkh; mu;[_ddpd; iffspy; kbe;jth;fs; ahh;? \j;UQ;[ah kw;Wk; j;tpglh ,th;fs; ,UtUk; ahUila gilf;F jiyik jhq;fpdhh;fs;? JNuhzu; nfsutu;fspd; gilf;F ,th;fs; kbe;jJ vg;NghJ? ; FUfN\j;uh Nghupy; RN\dh; ahuhy; nfhy;yg;gl;lhu;? gPkuhy; eFydpd; iffshy; ,we;jth;fs; ahh;? rj;aNrdh> rpj;uNrdh kw;Wk; R\u;kh fu;zdpd; %j;j kfd; ahh;? tPuNrdh tPuNrdh vg;NghJ ,we;jhh;? Nghupd; filrp ehspy; fu;zd; Nghu;gilfSf;F jiyik Vw;wpUe;jNghJ ,we;jhu;. tPuNrdh ahuhy;; nfhy;yg;gl;lhu;? mu;[_duhy;

மலேசிய முயர்மலை நாகமலை அம்மன் ஆலயம்

kலேசியாவின் ஜோகூர் மாகாணத்தில் உள்ள முயர் மலை பகுதியில் உள்ள அடர்ந்த வனத்தில் ஸ்ரீ நாகமலை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. 1972 ஆம் ஆண்டு கோபால மேனன் என்பவரின் கனவில் ஸ்ரீசக்ர வடிவில் தோன்றிய நாக அம்மன் மலை அருகே உள்ள வனப் பகுதியில் நாக அம்மனுக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு உத்தரவிட்டாள். இந்த கனவைத் தொடர்ந்து அம்மன் கனவில் கூறிய இடத்திற்கு சென்ற கோபால மேனன் அவ்விடத்தை சுத்தம் செய்து பாதை அமைத்தார். அங்கு பல்வேறு பாம்பு புற்றுகளை கண்டார். இறுதியில் ஒரு பாம்பு புற்றிற்கு அடியில் வட்டவடிவ கருங்கல்லை கண்டார். அது பஞ்ச முகங்களைக் கொண்ட நாகத்தின் தோற்றத்தை ஒத்திருந்தது. இதனைக் கண்ட கோபால மேனன் அந்த இடத்திலேயே அமர்ந்து தியானத்தில் மூழ்கினார். அப்போது அவ்விடத்தில் மிகுந்த அமைதியையும். பேரானந்தத்தையும் கோபால மேனன் உணர்ந்தார். அப்போது ஒலித்த அசரீரியில் கோபால மேனன் நாக அம்மன் வழிபாடு செய்த பக்தர்களின் வம்சாவளியில் தோன்றியவர் எனவும், அவ்விடத்தில் நாக அம்மனுக்கு ஆலயம் அமைத்து பராமரிக்கும்படி தெரிவித்தது. மற்றொரு முறை ஏற்பட்ட அனுபவத்தின் போது மலை அடிவாரத்தில் கிணறு ஒன்று தோன்றுமாறு நாக அம்மன் உத்தரவிட்டுள்ளாள். அதன்படி கிணறு தோன்றிய கோபால மேனன், அங்கு சித்தர் ஒருவர் தேன் கூட்டில் தவம் செய்து வருவதை கண்டார். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இக்கிணற்றில் சுத்தம் செய்து கொண்ட பின்னரே ஆலயத்திற்கு வருகின்றனர். இக்கோயிலைச் சுற்றி ஏராளமான பாம்பு புற்றுகளும் அதில் 7 வகையான நாகங்களும் உலாவுவதை கோபால மேனன் மட்டுமின்றி பக்தர்கள் பலரும் கண்டுள்ளனர். மேலும் நாககன்னி ஒலி, நாகங்கள் புற்றை விட்டு வெளிவரும் உள்ளிட்ட அபூர்வ ஓசைகளையும் பக்தர்கள் கேட்டுள்ளனர். ஒருமுறை கோபால மேனன் பூஜைக்காக தேங்காய் உடைத்த போது அது யானை தந்தம் வடிவமாக காட்சி அளித்தது. அதன் பின்னர் நாக அம்மன்னின் உத்தரவின் பேரில் மலை அடிவாரத்தில் விநாயகர் சன்னதி ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த விநாயகரை வழிபட்ட பின்னரே பக்தர்கள் மலை ஏற துவங்குகின்றனர். கோபால மேனன் மூலம் இக்கோயிலுக்கு வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் நாக அம்மன் தெரிவித்துள்ளார். அதன்படி இரவு 7 மணிக்கு மேல் பக்தர்கள் யாரும் மலை ஏற அனுமதிக்கப்படுவதில்லை. அச்சமயத்தில் நாகங்கள் மனித வடிவில் உலா வருவதாக நம்பப்படுகிறது. மேலும் மது, மாமிசம், காலணிகள் ஆகியவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காலணிகள் இல்லாமல் தான் மலை ஏறி செல்கின்றனர். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற பசும்பால், மல்லிகை, பூ, பாயாசம் அல்லது சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

அட்சய திரிதியை

சீமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் நாளை திரிதியை திதி என்பர். சித்திரை மாதம் வரும் திரிதியை திதியை அட்சய திரிதியை என சிறப்பித்துக் கூறுவதுடன் விழாவாகவும் கொண்டாடுகிறோம். அட்சய என்றால் வளர்வது. குறையாதது என்று பொருள். அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும். அற்புதத் திருநாள் அட்சய திரிதியை அன்று செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் அதிக பலன்களைத் தரும் என்பர். இந்த நன்னாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. இந்நாளில் தங்கம் வாங்க ஆசைப்படுவார்கள். ஆனால் எல்லாராலும் வாங்க முடியாதே. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. உப்பு (கண்டிப்பாக), அரிசி மற்றும் ஓரிரு ஆடைகள், சிறிய பாத்திரம் வாங்கலாம். எப்படியும் மாதா மாதம் மளிகை வாங்கியே ஆகவேண்டும். சித்திரை மாத மளிகையை அட்சய திரிதியை அன்று வாங்கிப் பயனடையலாமே. ஏனெனில் குபேரன் தான் இழந்த சங்கநிதி, பதுமநிதிகளை திரும்பவும் அட்சய திரிதியையில்தான் பெற்றான். குசேலன் தன் பால்ய நண்பன் கண்ணனுக்கு சிறிது அவல் கொடுத்து தன் வறுமையைப் போக்கிய நாளும் இதுவே. பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாளும் இதுதான். மணிமேலையும் இப்பாத்திரம் பெற்றுள்ளாள். பிட்சாடனரான சிவன் தன் கையில் ஒட்டியிருந்த கபாலத்தில் காசி அன்னபூரணியிடமிருந்து உணவு பெற்று, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட நாளும் இதுதான். கெளரவர் சபையில் பாஞ்சாலி ஆடையை துச்சாதனன் உருவும் போது, ‘அட்சய’ என கண்ணன் கூற, பாஞ்சாலியின் புடவை வளர்ந்து அவள் மானம் காத்த நாள் இதுதான். பரசுராமர் அவதரித்த நாளும் இதுதான். மகாலட்சுமி திருமால் மார்பில் நீங்கா இடம்பிடித்த நாள். கேரள சொர்ணத்து மனையில் பாலசந்நியாசியான ஆதிசங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனி மழை பெய்வித்த உன்னதத் திருநாளும் இதுவே. ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், இந்திரனிடத்தில் சொர்க்க லட்சுமியாகவும், மன்னர்களிடத்தில் ராஜலட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும் விளங்குகிறாள். பசுக்களில் கோமாதா, யாகங்களில் தட்சிணை, தாமரையில் கமலை, அவிர்பாகத்தில் ஸ்வாகா தேவி என சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் நாராயணனின் இணை பிரியாத தேவியான லட்சுமியை நாம் அட்சய திரிதியை நாளில் சாஸ்திரப்படி பூஜித்தால் லட்சுமி கடாட்சம் கிட்டும். இதனை தானத் திருவிழா என்றும் கூறுவர். அட்சய திரிதியையில் செய்யும் எல்லா வகை தான தர்மங்களும் அளவில்லாத பயன்களைத் தரும். அன்னதானம் செய்தால் விபத்து நீக்கி உடல்நலம் தரும். கல்விக்கு உதவினால் நம் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாடு கிட்டும். அன்று குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கலாம். புத்தகம் வெளியிடலாம், வீடு, மனை, கிணறு புதுப்பிக்கலாம், எந்த ஒரு புதிய செயலையும், புண்ணிய செயலையும் செய்யலாம். ஆனால் கண்டிப்பாக கடன் மட்டும் வாங்கவே கூடாது. சங்கர அவதாரம் கேரளாவில் உள்ளது காலடி தலம். இங்கு சிவகுரு - ஆர்யாம்பாள் தம்பதிகளுக்குப் பிறந்தவர் ஆதிச்சங்கர். சிறுவயதில் குருகுலத்தில் சேர்ந்தார். குருகுல வழக்கப்படி சங்கரர் யாசகத்திற்குப் புறப்பட்டார். அவர் முதல் முதல் யாசித்த வீடு படு ஏழை வீடு. “பவதி பிட்சாந்தேஹி” என குரல் கொடுத்த பாலகனுக்கு கொடுக்க ஏதுமில்லையே என வருந்திய அவ்வீட்டிலிருந்த ஏழைப் பெண், தன்னிடமிருந்த காய்ந்த நெல்லிக்கனி ஒன்றைக் கொடுத்தாள். (அவள் இல்லத்தின் பின்புறம் நெல்லிமரம் ஒன்று இருந்தது) அவள் ஏழ்மையை உணர்ந்த பாலகன் அளவுக்கு உதவ விரும்பி, மகாலட்சுமியை நோக்கி மனம் உருகப் பாடினார். என்ன அதிசயம்! அவள் வீட்டு நெல்லிமரம் தங்கமழையைப் பெய்வித்தது. வீடு முழுவதும் தங்கக் கனிகள் குவிந்தன. அப்பாடல் தான் கனகதாரா ஸ்தோத்திரம். இது 8ம் ஆம் நூற்றாண்டில் நடந்த அதிசயமாகும். இச்சம்பவத்தையொட்டி ஆண்டுதோறும் காலடி கண்ணன் கோவிலில் கனக தாரா யாகம் செய்கின்றனர். சங்கரர் முக்தியடைந்தது 32ம் வயதில். எனவே அன்றைய தினம் 32 நம்பூதிரிகள் கனகதாரா சுலோகத்தை 1,008 முறை ஜெபித்து அர்ச்சனை செய்வார்கள். தங்க நெல்லிக்கனிகள், வெள்ளி நெல்லிக்கனிகள், ரட்சைகள் வைத்துப்பூஜை செய்வார்கள். முன்னதாகப் பணம் கட்டி பதிவு செய்த பக்தர்களுக்கு இவை தரப்படும். இதனை வீட்டு பூஜையறையில் வைத்துப் பூஜித்தால் நலமும் வளமும் பெற்று இன்பமாய் வாழலாம். திருக்காலடியப்பன் ஆலய மூலஸ்தானத்தில் கண்ணன் ஒரு கையில் வெண்ணெயுடனும், ஒரு கையை இடுப்பிலும் வைத்தபடி காட்சி தரும் அழகைக் காணலாம். ஆலயத்தின் பெயர் கிருஷ்ண அம்பலம் என்பதாகும். இவ்வாலயத்தின் உள்ளே வலப்புறம் சங்கரர் சந்நிதியும், இடப்புறம் சாரதாம்பாள் சந்நிதியும், சக்தி விநாயகர், கிருஷ்ணர் சந்திநிதிகளும் அமைந்துள்ளன. சங்கரரின் தாயார் ஆர்யாம்பாள் சமாதியும் சிறப்புடன் அமைத்துள்ளனர். இங்கு ஒரு கல் விளக்கு நிரந்தரமாக ஒளி வீசியபடி உள்ளது. இது ஒரு அணையா தீபம். ஆன்மிகத்தின் முதல் குருவான ஆதிசங்கரரின் தாய்க்கு இவ்வாலயத்தில் தரப்பட்டுள்ள சிறந்த புகழ் சரியானதுதானே. 1910ம் ஆண்டு ஆதிசங்கரர் அவதரித்த காலடியில் ஒரு கோவில் அமைத்துள்ளனர். இக்கோவிலில் சங்கரரின் உருவத்தை தட்சிணாமூர்த்தியாக வடிவமைத்து பிரதிஷ்டை செய்துள்ளனர். ஆலயத்தில் உள்ள பெரிய மண்டபத்தின் சுவர்களில் சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை வண்ண ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர். வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோவில் கேரளா மாநிலம் அடுவாஞ்சேரி கிராமத்தில் - வாசுதேவபுரத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த மகா விஷ்ணு கோவில் உள்ளது. பரசுராமன் பிரதிஷ்டை செய்யும் போது, லட்சுமி தேவியை திரிமால் தன் கையால் ஆலிங்கனம் செய்து கொண்டிருப்பது போல சங்கல்பம் செய்து கொண்டே பிரதிஷ்டை செய்தார். பின் இவ்வாலயத்தை அந்தணர்களிடம் ஒப்படைத்து பூஜை பொறுப்புகளைத் தந்தார். ஆலயப் பொறுப்புகளை பரசுராமரிடமிருந்து பெற்றுக் கொண்ட அந்தணர்கள் பணிகளைச் சிறப்புடன் செய்ததால் லட்சுமி கடாட்சம் பெற்று செல்வந்தர்களாக மிக உயர்ந்த நிலையில் இருந்தனர். பல தலைமுறைகளுக்குப் பின் வந்தவர்கள் கோவில் காரியங்களை உதாசீனப்படுத்தியதால் அனைத்தையும் இழந்து வறுமையில் வாடினர். கோவில் பூஜையும் சரிவர நடைபெறவில்லை. அதனால் ஆலயத்தில் மனித நடமாட்டம் இல்லை. விஷ்ணுவிற்கு பூஜைகள் நடைபெறாத நிலையில், அவருக்கு பணிவிடை செய்ய லட்சுமியே வந்தாள். சாலக்குடி ஆற்றில் பூஜைக்கு நீர் எடுக்க வந்தபோது, அங்கு வந்த வில்வமங்கள சுவாமிகள் லட்சுமி தேவியைக் கண்டு ஆச்சரிய மடைந்து விவரம் கேட்டார். லட்சுமியும் நடந்தவற்றைக் கூறினாள். அதற்கு வில்வமங்கள சுவாமிகள், “தாயே, உங்கள் கருணைப் பார்வையை அந்த பாவிகள் மீது செலுத்தி, அவர்களைத் திருத்தி ஆன்மீக வழியில் ஈடுபடுத்துங்கள்” என மனமுருகி கேட்டுக் கொண்டார். லட்சுமி தேவி, “அட்சய திரிதியை நாள் முதல் எட்டு நாட்களுக்கு நான் அருள்பாலிக்கிறேன்” என உறுதி கூறினாள். அதன்படி இந்த எட்டு நாட்களும் அஷ்ட லட்சுமிகளாக - ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு லட்சுமியாக அருள்பாலிப்பதை அடுவாஞ்சேரி கோவிலில் ஆண்டுதோறும் காணலாம். ஆலய மூலவரான விஷ்ணு பகவான் சதுர்புஜங்களுடன் காட்சி தருகிறார். இவருக்குப் பின் லட்சுமிதேவி விக்ரகம் உள்ளது. அதை தினசரி பார்க்க முடியாது. இந்த எட்டு நாட்களில் அவ்விக்கரகத்தை விஷ்ணுவின் இடபாகத்தில் எழுந்தருளச் செய்யும்போது பார்க்கலாம். முழையூர் காசி, விளங்குளம், திருப்பரங்குன்றம், திரிச் சோற்றுத்துறை, முழையூர் ஆகிய தலங்களுடன் மேலும் ஒருசில தலங்கள் அட்சய திரிதியை தலங்களாகும். இத்தலங்களில் மிக விசேஷமாகக் கருதப்படும் தலம் முழையூர் சிவத்தலமாகும். முழையூர் தலத்தில் வருடந்தோறும் அட்சய திரிதியை நாளன்று ஆயிரக்கணக்கானோர் கூடிக் கொண்டாடுகின்றனர். இத்தல இறைவன் பரசுநாதர்; இறைவி ஞானாம்பிகை இத்தலம் பட்டீஸ்வரம் அருகே அமைந்துள்ளது. திருக்கயிலாயத்தில் இசைக்கப்படும் முழை என்ற இசைக்கருவியின் ஒலி முதன்முதல் பூமியை அடைந்த தலம் இது. எனவே முழையூர் எனப் பெயர் பெற்றது. இந்த ஒலியைக் கேட்பதற்காகவே முப்பத்து முக்கோடி தேவர்கள் அட்சய திரிதியை நாளன்று இத்திருத்தலத்தில் கூடி இவ்வொலி கேட்டு ஆனந்திக்கின்றனர். அட்சய திரிதியை அன்று 3, 12, 21 என்ற எண்ணிக்கை கொண்ட ஜலமதுரம் என்ற இளநீரால் அபிஷேகம் செய்து, புடலங்காய் கலந்த உணவை தானமளி த்தால் அறிந்தோ, அறியாமலோசெய்த தீவினைகளில் இருந்து காக்கப்படுவார்கள். இவ்வாலய லிங்கம் பஞ்சாட்சர பீஜங்களாலான பரசுநாத லிங்கம். கோஷ்ட மூர்த்திகள் இங்கு இறைவன் அருகிலேயே அமைந்துள்ளனர். இங்கு குபேர பூஜை செய்வது சிறப்பு. காசி அன்னபூரணி தன் கையில் உள்ள அட்சய பாத்திரத்தில் இருந்த உணவை சர்வேஸ்வரனுக்கு தானமிட்டு, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட வைத்த நாள் அட்சய திரிதியை நாள்தான். எனவே காசியும் அட்சய திரிதியை தலமாகிறது. விளங்குளம் சனியின் துயரைத் தீர்க்க இறைவன் தோன்றிய தலம் விளங்குளம் என்ற கிராமத்தில் உள்ளது, ஈஸ்வரன் சனியின் ஊனத்தை நீக்கிய நாள் பூச நட்சத்திர சனிக்கிழமையுடன் கூடிய அட்சய திரிதியை நாளில்தான். இத்தலத்தில் அட்சய திரிதியை அன்று அட்சய புரீஸ்வரருக்கும், சனி பகவானுக்கும் சந்தனக்காப்பு செய்து வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும். இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பக் கஷ்டம், குழப்பம் விலகும். தஞ்சை மாவட்டம், பேராவூரணியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. குபேரலிங்கம் திருவானைக்கா கோவிலில் கிழக்கு வாசல் பகுதியில் உள்ளது குபேரலிங்கம். இந்த லிங்கத்தை அட்சய திரிதியை நாளன்று பால், தேன், சந்தன அபிஷேகம் செய்துவழிபாட்டால் செல்வச் செழிப்பு ஏற்பட்டு, வறுமை தொலைந்து வளமாக வாழலாம். இத்தலத்தில் ஆடை தானமும் அன்னதானமும் செய்வது சிறப்பு. திருக்கோளூர் நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகில் உள்ளது. இத்தல பெருமாள் மரக்கலாலால் குபேரனுக்கு செல்வம் கொடுத்தாராம். பின் அந்த மரக்காலை தலைக்கு அடியில் வைத்தபடி சயன கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு வைத்த மாநிதி என்றும், செல்வம் அளித்த பெருமாள் என்றும் பெயர். இவரை அட்சய திரிதியை நாளில் தரிசித்தால் வாழ்வில் வளம்சேரும். சுவர்ண கெளரி விரதம் கர்நாடக மாநிலப் பெண்கள் அட்சய திரிதியை அன்று சுவர்ண கெளரி விரதம் கடைப்பிடிப்பர். அன்று பார்வதி பிறந்த வீட்டுக்கு வருவதாகவும். மறுநாள் அன்னைக்குப் பாதுகாப்பாக விநாயகரும் வருவதாகவும் நம்பப்படுகிறது. சுமங்கலிப் பெண்கள் கோதுமையில் இனிப்புக்கள் செய்து படைத்து பிரசாதமாக அனைவருக்கும் கொடுத்து ஆடை தானமும் செய்வார்கள். அட்சய திரிதியை தான பலன்கள் தயிர்சாத தானம் : ஆயுள் கூடும், இனிப்புப் பண்ட தானம் - திருமணத் தடையை விலக்கும். உணவு தானிய தானம் - விபத்து, அகால மரணத்தை தடுக்கும். கால்நடை தீவன தானம் - வாழ்வை வளமாக்கும். முன்னோரிக்குத் தர்ப்பணம் செய்தால் பாபவிமோசனம் கிட்டும். லட்சுமி பூஜை செய்வதால் அஷ்ட ஐஸ்வர்யம் கிட்டும்

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

சங்காபிஷேகம்.

இறைவன் தன் அருளால் மனிதனை வயப்படுத்துகிறான்; மனிதனும் தன் பக்தியால் இறைவனைக் கட்டுப்படுத்துகிறான். அந்த பக்தி வகைகளில் ஒன்றுதான் சங்காபிஷேகம். சிவன் அபிஷேகப்பிரியர். அதிலும் சங்கினால் அவருக்கு அபிஷேகம் செய்தால், இந்த கங்கை சடைமுடியான், பக்தனுக்குப் பரமானந்தம் வழங்குவார். கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்கு, செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் இல்லறத்தாரும், இறைவனின் அருட் செல்வம் வேண்டும் துறவிகளும், இந்தப் பூஜையை மேற்கொள்கிறார்கள். வைணவத்தில் சங்கு வீரத்தின் சின்னமாகத் திகழ்கிறது. பகவான் கிருஷ்ணனின் பாஞ்சஜன்யம் என்ற சங்கொலி கேட்டு குரு§க்ஷத்ரமே நடுங்கியது. அபிஷேகத்திற்கு சங்கைப் பயன்படுத்துவானேன் என்று கேட்கலாம். சங்கு, இயற்கையாக கிடைக்கக் கூடியது. வெண்மையானது. சுட்டாலும் வெண்மை தருவது. மனித மனங்களும் சங்கைப்போல, நிலையான தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. சங்கினுள் பால், பன்னீர், பஞ்ச கவ்யம் போன்றவற்றை நிரப்பி அபிஷேகம் செய்தாலும். அதை கங்கையாகப் பாவித்தே அபிஷேகம் செய்ய வேண்டும். அவரவர் வசதிப்படி 108, 1008 என்ற எண்ணிக்கையில் சங்குகளைப் பயன்படுத்தலாம். சங்கிற்கென்றே தனி காயத்ரியும் உள்ளது. ஓம் பாஞ்சஜந்யாய வித்மஹே பவமாநாய தீமஹி தந்ந சங்க ப்ரேசோதயாத் கார்த்திகை மாத சோமவாரங்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் தோஷம் என்பர். இந்த தோஷத்தை நீக்கவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

இராமாயணம்

(10721) தன் மீது அணை கட்ட இராமனை அனுமதித்தவன் யார்? வருணன் (10722) வருணனை வேறு எவ்வாறு அழைப்பர்? சமுத்திரராஜன் (10723) கடலரசன் என்பது யாரை? சமுத்திரராஜனை (10724) இராமாயணத்தை எழுதியவர் யார்? வால்மீகி (10725) வால்மீகியின் இயற்பெயர் என்ன? ரத்னாகரன் (10726) ராமனின் மகன் யார்? குசன் (10727) ராமனின் மகன் குசனுக்கு இராமாயணம் போதித்தவர் யார்? வால்மீகி (10728) வால்மீகி யாராக இருந்தவர்? கொள்ளைக்காரனாக (10729) சீதைக்கு அடைக்கலம் அளித்தவர் யார்? வால்மீகி (10730) இந்திரனின் அருளால் பிறந்த வானர வேந்தன் யார்? வாலி (10731 இராமனுக்கு அஸ்திரத்தை போதித்தவர் யார்? விஸ்வாமித்ரர் (10732) இராமன் திருமணத்திற்கு காரணமானவர் யார்? விஸ்வாமித்ரர் (10733) தண்டகவனத்தில் வசித்த அரசிகன் யார்? விராதன் (10734) இராமனால் சாபம் தீர்ந்தவன் யார்? விராதன் (10735) இராவணனின் தம்பி யார்? விபீஷணன் (10736) இராமனிடம் அடைக்கலம் அடைந்தவன் யார்? அபீஷணன் (10737) கிழக்கு திசையில் சீதையை தேடிச் சென்றவன் யார்? வினதன் (10738) கழுகரசன் சம்பாதியின் தம்பி யார்? ஜடாயு (10739) தசரதனின் தோழன் யார்? ஜடாயு (10740 சீதைக்காக இராவணனுடன் போராடி உயிர் நீத்தவன் யார்? ஜடாயு (10741) சீதை ஊர்மிளாவின் தந்தை யார்? ஜனகர் (10742) இலட்சுமணனின் மனைவி யார்? ஊர்மிளா (10743 கரடிவேந்தர் யார்? ஜாம்பவான் (10744) பிரம்மாவின் அருள்பெற்று பிறந்தவர் யார்? ஜாம்பவான் (10745) பரதனின் மனைவி யார்? மாண்டவி (10746) சத்ருக்கனின் மனைவி யார்? மாண்டவி (10747) குகையில் வாழ்ந்த தபஸ்ஷனி யார்? ஸ்வயம்பிரபை (10748) குரங்கு படையினருக்கு உணவிட்டவர் யார்? ஸ்வயம்பிரபை

புதன், 26 மார்ச், 2014

கொட்டகலை ஸ்ரீ டிறைட்டன் பெரிய மண்வெட்டி தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வரலாறு

இயற்கை எழில்கொஞ்சும் மலையகத்தில் இதயம் என போற்றப்படும் கொட்டகலை மாநகரில் வளம் கொழிக்கும் பெரிய மண்வெட்டி தோட்டத்தில் இரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருந்து அன்னை ஆதிபராசக்தி அருள்பாலிக்கின்றாள். வேண்டுவோர் வேண்டியதை வாரி வழங்கி ஆட்சிபுரியும் சக்தியவள், இங்கு ஸ்ரீமுத்துமாரியம்மன் பெயரில் மிளிர்கின்றாள். கோயிலில்லா ஊரும் நீரில்லா குளமும் பாழ். என்பதற்கிணங்க பதினெட்டாம் நூற்றாண்டு கால எல்லையில் ஆங்கிலேய ஆட்சி காலத்தின் போது இலங்கையில் தேயிலைச் செய்கைக்கென இந்திய வம்சாவளியினர் இங்கு அழைத்து வரப்பட்டனர். அன்றைய இத்தோட்டத்தின் பெரிய கங்காணி மார்கள் செங்கன், கணேசன், குப்பன் ஆகியோர் தலைமையில் இங்கு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. தமிழக மாநிலத்தின் ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன், சமயபுரம் ஆகிய புண்ணிய ஸ்தலங்களி லிருந்து கருவறை வாயில் மண்ணெடுத்து பிரதிஷ்டை செய்து இவ்வாலயம் அமைக்கப் பட்டது. இவ்வாறான ஆலயங்களில் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட முதல் ஆலயம் எனும் பெருமையை இது பெற்றுள்ளது. ஆரம்பித்தல் சிறிய மண்ணாலான பீடமும் குடிலும் அமைக்கப்பட்டது. அப்போது ஊமை பேசியமை, குருடன் பார்வை பெற்றமை பல தீராத நோய்கள் தீர்த்தமை போன்ற பல அற்புதங்களும் அம்மன் அருளால் நடைபெற்றுள்ளன. அதன்பின் இவ்வாலயம் அன்னை ஆதிபராசக்தியவள் அருளால் செழித்தோங்கத் தொடங்கியது. இம் மண்ணாலான ஆலயம் சீமெந்தினால் சிற்ப வேலையுடன் கூடிய ஆலயமாக்கிடும் நடவடிக்கை அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. தோட்டத் தலைவர்களான சிங்காரம் சின்னையா, ஜெகநாதன், அசப்பன் ஆகியோர் தலைமையில் 1955 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் இவ்வாலயத் திருப்பணிகள் ஆரம்பமாகின. யாழ்ப்பாணம் தங்கவேல் ஆச்சாரியார் மூலமாக இந்தியாவில் இருந்து சிற்பத் துறை வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. மலையகத்தில் முதன் முதலில் இந்திய சிற்ப முறைப்படி சிற்பக் கலைஞர் ஸ்ரீ நாகலிங்க ஸ்தபதி குழுவினர் அமைத்த ஆலயம் இதுவாகும். இவ்வாலயக் கட்டுமானப் பணிகளின் பின்னர் அம்மன் ஆலயம் மேலும் ஒளிபெற்று விளங்கியது. மலையக வரலாற்றில் முதன் முதலாக இந்திய சிற்ப முறையில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வாலயம் ஏனைய மலையக ஆலயங்களுக்கு முன்னோடியானதாக உள்ளது. இவ்வாலயத்தினை முன்னோடியாகக் கொண்டே நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், டிக்கோயா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் என்பன அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஓர் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த சிறிய கோயிலாக வளமும் அபிவிருத்தியும் பெற்று விளங்கிய காலத்தில் இந்த ஆலயத்தை நிர்வகிப்பதற்காக 1962 ஆம் ஆண்டில் ஆலய பரிபாலன சபை அமைக்கப்பட்டது. முத்துவேல் தலைமையில் திருவாளர்கள் சுந்தரராஜ், நடராஜ், தர்மலிங்கம், சின்னசாமி, ராமசாமி ஆகியோரைக் கொண்ட குழுவினர் ஆலய பரிபாலன சபைக்கு நியமிக்கப்பட்டனர். இவர்கள் இவ்வாலய வளர்ச்சிக்காக பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தினர். அவற்றில் மிகவும் சிறந்ததோர் திட்டமாகக் கொள்ளப்படுவது ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டது. தனியாக அமைக்கப்பட்ட ஸ்ரீ விநாயகர் ஆலயம் இத்தோட்டத்திற்கு மேலும் பல நலன்களை வாரி வழங்கியது. ‘கோயிலில்லா ஊரும் நீரில்லா குளமும் பாழ்’ என்பதற்கு ஏற்ப ஒன்றிற்கு இரண்டு என்ற தர்க்கத்தில் இவ்விரு ஆலயங்களும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1982 ஆம் ஆண்டில் இத்தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் ரெங்கசாமியின் பெரும் உதவியுடன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டது. பிரதான வீதிக்கருகில் அமைந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தையும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தையும் இவ் ஆலய பரிபாலன சபையினரே பொறுப்பேற்றனர். இதன் வழியாக இன்று வரை பரிபாலன சபை மூலமாக ஸ்ரீ விநாயகர் ஆலய மீள புனருத்தாரனப் பணிகள், நித்திய பூஜை, வருடாந்த தேர்த் திருவிழா, மாதாந்த விரதங்கள் விசேட விரதங்கள் (விநாயக சதுர்த்தி, சஷ்டி விரதம் கார்த்திகை) ஆகியவற்றுடன் சிவராத்திரி சித்திரா பெளர்ணமி, திருவெம்பாவை, நவராத்திரி என்பனவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறான தெய்வீக செயற்பாடுகளைச் செய்து அடியார்களை அம்பாள் அருள் பெற வழிவகுக்கும் பரிபாலன சபையினரின் பணிகளும் அம்பாளின் அருளும் போற்றத் தக்கவையாக விளங்குகின்றன. ‘எழில் கொள் சீர்மலை நாட்டில் வளந்தருந் தேயிலை மணங்கமழ் நல் மண்வெட்டி தோட்டத்தில் வாழ் அங்காளித் திருகழல் போற்றி போற்றி’ அன்னையின் அருள் நிறைந்திருக்கும் பெரிய மண்வெட்டித் தோட்ட மத்தியில் அவள் குடிகொண்டுள்ளாள். இவ்வாலயம் ஓர் அமைதியான சூழலில் அமைந்துள்ளது. இவ்லாலயத்தை முத்துவேல் தலைவர் தலைமையில் வி. தர்மலிங்கம், வி. நடராஜ், சுந்தரராஜ் பி. சின்னசாமி, யு. ராமசாமி ஆகியோர் பரிபாலனம் செய்து வருகின்றனர். 1962ல் தொடங்கி இவ்வாலயம் சிறப்புற்று விளங்கி வருகிறது. ஒன்பதாவது பரிபாலன சபையாகும். தலைவர் : பீ. சண்முகம், செயலாளர் : வீ. சிவஞானம், பொருளாளர் : பீ. பாலசுப்பிரமணியம், உபபொருளாளர் : ஏ. இராஜரட்ணம். நிர்வாக சபை உறுப்பினர்கள் : எஸ். சிவானந்தன், எம். சத்தயசீலன், கே. பாலசுப்பிரமணியம். சபை ஆலோசகர்கள் : இராஜேந்திரன், வி. விஸ்வராஜ்.

தீட்டு

கே. ஈஸ்வரலிங்கம் 10681) பெண்களின் உடன்பிறந்த சகோதரன் இறந்தால் எத்தனை நாளுக்கு தீட்டு? மூன்று 10682) பெண்களின் உபநயனமான மருமகன் (சகோதரனின் பிள்ளை) இறந்தால் எத்தனை நாட்களுக்குத் தீட்டு? மூன்று 10683) பெண்களின் இளைய அல்லது மூத்த தாயார் (தந்தையின் வேறு மனைவிகள்) இறந்தால் எத்தனை நாள் தீட்டு ? மூன்று 10684) இரண்டு பகலும் ஓர் இரவும் கொண்டது எது? பஹிணீ 10685) இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம் எது? பஹிணீ 10686) பஹிணீ என்பது எத்தனை நாள்? ஒன்றரை நாள் 10687) பெண்களுக்கு தந்தையுடன் பிறந்த பெரியப்பா, சித்தப்பா இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10688) பெண்களுக்கு தாயுடன் பிறந்த சித்தி, பெரியம்மா இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10689) பெண்களுக்கு தாயின் சகோதரர்கள் (மாதுலன்) இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10690 பெண்களுக்கு தந்தையின் சகோதரர்கள் (அத்தைகள்) இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10691) ‘பிதாமஹன்’ என்று அழைப்பது யாரை? தந்தையின் தந்தை 10692 ‘பிதாமஹி’ என்று அழைப்பது யாரை? தந்தையின் தாயை 10683) ‘மாதாமஹன்’ என்று அழைப்பது யாரை தாயின் தந்தையை 10684) பெண்களுக்கு தாயின் சகோதரனின் மனைவி அல்லது பிள்ளைகள் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை 10685) பெண்களுக்கு உபநயனமான உடன் பிறந்த சகோதரனின் மனைவி அல்லது பிள்ளைகள் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10686 பெண்களுக்கு உபநயனமான மருமகனின் (சகோதரரின் பிள்ளை) மனைவி அல்லது பிள்ளைகள் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்ரறை நாள் 10687 பெண்களுக்கு தந்தையுடன் பிறந்த பெரியப்பா சித்தப்பாவின் மனைவி பிள்ளைகள் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10688) பெண்களுக்கு பிதாமஹன் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10689) பெண்களுக்கு பிதா மஹி இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10690) மாதாமஹன் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10691) ‘மாதாமஹி’ என்பது யாரை? தாயின் தாயை 10692) பெண்களுக்கு மாதாமஹி இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10693) பெண்களுக்கு உடன் பிறந்த சகோதரி இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10694) பெண்களுக்கு சகோதரியின் பெண் பிள்ளைகள் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10695) சகோதரரின் பெண் பிள்ளைகள் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள்

புதன், 19 மார்ச், 2014

தீட்டு

கே. ஈஸ்வரலிங்கம் தீட்டு 10662) ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகளை என்னவென்று அழைப்பார்கள்? ஸ்மானோதகர்கள் 10663) உபநயனமான பெண் வயிற்றுப் பேரனை என்னவென்று அழைப்பார்கள்? தெளஹித்ரன் 10664) சுவீகாரம் போனவனைப் பெற்ற வளை என்னவென்று அழைப்பார்கள்? ஜனனி 10665) சுவீகாரம் போனவனை ஈன்ற தந் தையை என்னவென்று அழைப்பார்கள்? ஜனக பிதா 10666) சுவீகாரம் போன மகனை என்னவென்று அழைப்பார்கள்? தத்புத்ரன் 10667) சகோதரியின் மகன் (உபநயன மானவன்) மருமகன் இழந்தால் எத்த னை நாள் தீட்டு? மூன்று நாள் 10668) ஏழு தலை முறைக்கு மேற்பட்ட பங்காளிகள் இறந்தால் எத்தனை நாளுக்கு தீட்டு? மூன்று நாளுக்கு 10669) கல்யாணமான சகோதரி இறந்தால் எத்தனை நாள் தீட்டு? மூன்று நாள் 10670) சுவீகரம் போனவனைப் பெற்ற வள் இறந்தால் எத்தனை நாளுக்கு தீட்டு? மூன்று நாளுக்கு 10671) சுவீகாரம் போனவனை ஈன்ற தந்தை இறந்தால்? மூன்று நாள் 10672) சுவீகாரம் போன மகன் இறந்தால்? மூன்று நாள் 10673) ஏழு வயதுக்கு மேற்பட்ட கல் யாண மாகாத பங்காளிகளின் பெண் இறந்தால்? மூன்று நாள் 10674) வயதுக்கு மேற்பட்ட ஆனால் உபநயனமாகாத பங்காளிகளின் ஆண் பிள்ளைகள் இறந்தால்? மூன்று நாள் 10675) ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள் இறந்தால்? மூன்று நாள் 10676) பெண்களுக்கு எதன் மூலம் கோத்திரம் வேறுபடும்? திருமணத்தின் மூலம் 10677) திருமணத்தின் பின் யாருடைய கோத்திரம் பெண்களுக்கு உரியதாகும்? கணவனின் கோத்திரத்தை சந்ததியைச் சேர்ந்தவர்களின் பிறப்பு இறப்பே அவர் களுக்கும் உரியதாகும். 10678) இதனால் பிறந்தகத்தைச் சேர்ந்த சிலரது மரணத்தினால் பெண்களுக்கு எத் தனை நாள் தீட்டு மூன்று நாள் 10679) இந்த தீட்டு அவர்களுடைய கணவனுக்கு உண்டா? கிடையாது 10680) இந்தத் தீட்டை பெண்கள் எப்படி காக்க வேண்டும்? தூரமான ஸ்த்ரீ தலைத்திருந்து தீட்டுக் காப்பது போல இதை அவள் மட்டும் காக்க வேண்டும்.

புதன், 5 மார்ச், 2014

தீட்டு

கே. ஈஸ்வரலிங்கம் 10638) பெண் குழந்தையைப் பெற்ற தாய்க்கு எத்தனை நாட்கள் தீட்டு? 40 நாட்கள் 10639) ஆண் குழந்தையைப் பெற்ற தாய்க்கு எத்தனை நாட்கள் தீட்டு? 30 நாட்கள் 10640) பிரசவத்தினால் ஏற்படும் தீட்டு எத்தனை நாட்கள்? 10 நாட்களுக்கு 10641) பிறந்தது பெண் குழந்தையானால் யார் யாருக்கெல்லாம் பத்து நாட்கள் தீட்டு? * குழந்தையின் உடன் பிறந்தோருக்கு * குழந்தையின் தகப்பனாரின் சகோதரர்களுக்கு, * குழந்தையின் தகப்பனாரின் தகப்பனாருக்கு, * அவரின் சகோதரர்களுக்கு, * மேற்குறிப்பிட்ட அனைவரும் திருமணமான ஆண்களானால் அவர்களது மனைவிகளுக்கும் அதே அளவு தீட்டு. 10642) குழந்தை ஈன்றவளின் பெற்றோருக்கு எத்தனை நாள் தீட்டு? மூன்று 10643) குழந்தை பெற்றவளின் சகோதரன், மாமா, பெரியப்பா, சித்தப்பா போன்றவர்களுக்கு தீட்டு உண்டா? தீட்டில்லை 10644) இவர்களின் செலவில் பிரசவம் எங்கு நடந்தாலும் செலவு செய்பவர்களுக்கு தீட்டு உண்டா? உண்டு. 10645) எத்தனை நாளைக்கு? ஒரு நாள் 10646) பங்காளிகளில் யாராவது இறந்தால் எத்தனை ஆண் தலைமுறைகளுக்கு தீட்டு? ஏழு தலைமுறைகளுக்கு 10647) இவர்களுக்கு எத்தனை நாள் தீட்டு? பத்து (10) 10648) இவர்களது மனைவிகளுக்கும் தீட்டு உண்டா? ஆம் 10649) எத்தனை நாட்களுக்கு? பத்து நாட்களுக்கு

சமூக தொண்டாற்றும் அமெரிக்க இந்து கோயில்

அமெரிக்காவின் நிபிரஸ்கா பகுதியில் அமைந்துள்ள இந்துக் கோயில் இந்திய மற்றும் நேபாளியர்களின் கூட்டு முயற்சியால் கட்டப்பட்டதாகும். 1970 களின் முற்பகுதியில் இந்தியா வம்சாவளியினரான பொறியியலாளர்கள் மற்றும் அவரது குடும்பங்கள் ஒமஹா பகுதியில் குடியேறினர். துவக்கத்தில் இவர்கள் தங்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்தி வந்தனர். 1970 களின் மத்தியில் இந்திய வம்சாவளியினரில் மேலும் பலர் லின்கோல் மற்றும் ஒமஹா பகுதிகளில் குடியேறினர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவர்களாக இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் இந்து மதத்தினர் இப்பகுதியில் அதிகளவில் வேலையில் இருந்ததுடன், அதிகளவில் குடியேறவும் துவங்கினர். 1990 களின் முன் பகுதியில் நகரின் மத்திய பகுதியில் இந்து சமுதாயத்தினருக்கென வழிபாட்டுத் தலம் அமைக்க தீர்மானிக்கபட்டது. 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தற்போதுள்ள வழிபாட்டுத்தல கட்டடம் வாங்கப்பட்டது. கடந்த பல வருடங்களாக கோயில் பணிக்கான நிதி சேகரிக்கப்பட்டு, ஒமஹா இந்து கோயில் 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் திகதி நிறைவு பெற்றது. இப்பகுதியில் வாழ்ந்த இந்திய சமுதாயத்தினரில் 98 சதவீதம் பேர் இந்தியர்களாகவும், மீதமுள்ள 2 சதவீதம் பேர் நேபாளிகளாகவும் இருந்தனர். இக்கோயிலின் வெளிப்புறம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியதாகும். ஒரு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாரம்பரிய முறையிலான இந்துக் கோயிலும், மற்றொரு புறம் கோயிலின் கலாசார மையம் மற்றும் நூலகம் ஆகியன கட்டப்பட்டுள்ளன. கலாசார மையத்திற்கு அருகில் மடப்பள்ளி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 1993 ஆம் ஆண்டு முதலில் வாங்கப்பட்ட கட்டடத்தில் பல்வேறு உணவு விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் சமூகக் கூடம் இப்பகுதியில் உள்ள இந்திய சங்கத்தினரால் பயன்படுத்தப்ப டுவதுடன், பொதுமக்களின் தனிப்பட்ட விசேஷங்களுக்காகவும் வாடகைக்கு விடப்படுகிறது. இக்கோயில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் 6 முதல் 12 வயதுடைய மாணவர்களுக்கான ஞாயிறு வகுப்புக்களும் நடத்தப்படுகின்றன. புதன்கிழமைகளில் மாலை 6.15 முதல் 7.45 வரை குண்டலினி யோக வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. இது தவிர சமூகக் கூடத்தில் பேச்சாளர்கள், இசை கலைஞர்கள் போன்றவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வுகளுடன் கூடுதலாக கோயில் சார்பில் தீபம் செய்தித்தாள் 4 முதல் 6 முறை வெளியிடப்படுகிறது. இந்து மத கலாசார நிகழ்வுகளுடன் பல்வேறு சமூக சேவைகளும் செய்யப்பட்டு வருகின்றன. சுகாதார கூட்டம், எய்ட்ஸ் பாதுகாப்புக் கழகம் போன்ற கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் நிகழ்ந்த பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிர்வாக உறுப்பினர்கள் ஒன்று கூடி 48 மணி நேரம் தொடர்ச்சியாக பிரார்த்தனை நடத்தினர். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்காக 35 ஆயிரம் டொலர் நிவாரண நிதி உதவியும் அளிக்கப்பட்டது.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

கருங்கல்லில் தெய்வச் சிலைகளை வடிப்பது ஏன்?

கே. ஈஸ்வரலிங்கம் 10624) தெய்வச் சிலைகளை கருங்கல்லில் வடிவமைப்பது ஏன்? நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில் நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வதால் ஆகும். 10625) பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் எவை? * இரண்டு கைகளாலும் தலையை சொறியக் கூடாது. * அடிக்கடி வீட்டில் அழக் கூடாது. இதுவே பீடையை ஏற்படுத்தும். இதனால் வீட்டில் செல்வம் தங்காத சூழ்நிலை ஏற்படும். * பூசணிக்காயைப் பெண்கள் உடைக்கக் கூடாது. * கர்ப்பிணிப் பெண்கள் தேங்காய் உடைக்கக் கூடாது. தேங்காய் உடைக்கும் இடத்திலும் இருக்கக் கூடாது. காரணம் உடைக்கும் அதிர்ச்சியால் ஏற்படும் நுண்ணலைகள் கர்ப்பத்தைத் தாக்கும் அபாயம் உள்ளது. அவர்கள் எலுமிச்சம் பழத்தை அறுத்து விளக்கேற்றக் கூடாது. 10626) கைகளால் அன்னத்தையோ, காய்கறிகளையோ பரிமாறக் கூடாது. * வீட்டில் ஒரு பொருள் இல்லாமல் இருந்தால் அதைக் கணவரிடம் தெரிவிக்கும் போது அது இல்லை என்ற வார்த்தையைக் கூறாமல் அந்தப் பொருள் வேண்டும் என்று கூறி வாங்கிவரச் செய்வது நல்லது. * சுமங்கலிப் பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக் கூடாது. 10627) கோயிலில் பிரசாதமாகப் பெறும் பூமாலையை வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு அணிவிக்கலாமா? சுவாமிக்குச் சாத்திய பிறகு எடுக்கப்படும் பூமாலை நிர்மால்யம் எனப்படும். இறைவனின் திருவருட் பிரசாதமாக நமக்குக் கிடைத்ததை மீண்டும் சுவாமி படங்களுக்கு சாத்தக்கூடாது. ஆனால், முன்னோர்களின் படங்களுக்குச் சாத்தலாம். இதில் தவறில்லை. வீட்டில் உள்ள எல்லோருக்கும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். பெண்கள் தலையில் சூடிக்கொள்ளலாம். 10628) கோவிலில் சாமி தரிசனம் எப்போது செய்யக் கூடாது? காலையில் கோவில் திறந்த உடனேயே சென்று சாமியை கும்பிட கூடாது. அர்ச்சகர் முதலில் தீபம் ஏற்றி ஆராதனை காட்டிய பிறகே நாம் சென்று தரிசிக்க வேண்டும். திரை போடப்பட்ட நேரங்களிலும் சன்னதியில் தீபம் இல்லாத போதும் சாமி தரிசனம் செய்யக் கூடாது. கோவிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பி வந்ததும் உடனே கால்களை கழுவக்கூடாது. சிறிது நேரம் கழித்த பின்னரே காலைக் கழுவ வேண்டும்.. 10629) அமாவாசையில் குழந்தை பிறக்கக்கூடாது என கூறுவது ஏன்? திங்கட்கிழமையன்று வரும் அமாவாசை நாளில் புத்திர பாக்யம் வேண்டுபவர்கள் காலை 6 லிருந்து 11 மணிக்குள் அரச மரத்தை சுற்றி வந்து வழிபட வேண்டும். தெய்வங்களை வழிபட உகந்தது என அமாவாசையை சாஸ்திரம் கூறுகிறது. நல்லடக்கம் செய்யப்பட்டவர்களுக்கும் பித்ருக்களும் தர்ப்பணம், திதி கொடுப்பதை இந்த நாளில்தான் செய்ய வேண்டும். அமாவாசையில் பிறந்த குழந்தைக்கு சாந்தி செய்ய வேண்டும். இல்லையெனில் வாழ்வினில் தவறான வழியை அந்தக் குழந்தை பின்பற்றக்கூடும் என ‘சாந்தி குஸ¤மாகரம்’ என்ற நூல் கூறுகின்றது. பிறப்பதை நாம் தடுக்க முடியாதே! ஆனால், பரிகாரம் செய்து நல்வாழ்வு வாழ முடியுமே! நாம் அனுபவிக்கும் சுகத்தில் சாஸ்திர விரோதமான காரியங்களை விலக்க வேண்டும் என ஆதிசங்கரர் கூறியுள்ளார். 10630) தலவிருட்சம் என கோவிலுக்கு கோவில் ஒரு மரம் காணப்படுகின்றதே ஏன்? விருட்சம் என்பது மரம். மரங்கள் அடர்ந்த பகுதியில் அந்த மரங்களிலும் கடவுள் தன்மை உண்டு என சொல்வதற்காகவும், அந்த மரத்தின் நலன்களை தலைமுறை தாண்டி கொண்டு செல்லவும் தலவிருட்சங்கள் அமைக்கப்பட்டன. ஆல், புளி, வேம்பு என ஒவ்வொரு மரத்திற்கும் உள்ள தனிப்பட்ட மருத்துவ குணநலன்களை மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு செய்யப்பட்டன. வன்னி மரம், வில்வ மரம் போன்றவை கோயில்களை தவிர மிக குறைவான இடங்களில் மட்டுமே இப்போது காணப்படுகின்ற. 10631) குரு பார்க்க கோடி நன்மை என்பது ஏன்? நவக்கிரகங்களில் முழுமையான சுபகிரகம் குரு. இவர் தேவர்களுக்கு பாடம் போதிக்கும் குருவுமாவார். எனவே, இவரது பார்வை எந்த ராசியின் மீது பட்டாலும் எல்லாத் தோஷங்களும் நீங்கிவிடும். ஒருவருடைய ராசிப்படி ஏழரைச் சனி நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ராசிக்கு குரு பார்வை இருந்தால் கெடுதல் விளையாது என்பதையே குரு பார்க்க கோடி நன்மை என்கிறார்கள். கோடி என்றால் அளவு கடந்த என்றும் பொருள் உண்டு.

வியாழன், 6 பிப்ரவரி, 2014

உலகுக்குக் கிடைத்த கொடைகளில் தண்ணீருக்கு நிகராக வேறெதுவுமில்லை

கே. ஈஸ்வரலிங்கம் மனிதன் தன்னையும் தனது குடும்பத்தையும் நேசிப்பது போல் இயற்கையையும் இயற்கை வளங்களையும் நேசிக்க பழகிக்கொள்ள வேண்டும். இந்துக்கள் இன்று நேற்று அல்ல, தொன்றுதொட்டே இயற்கையை மதித்து வழிபட்டு வருகின்றனர். இயற்கை வளங்களில் மிகவும் பெறுமதி மிக்கதாக தண்ணீர் விளங்குகின்றது. இயற்கையாக கிடைக்கும் இந்த தண்ணீரை நாம் எந்த விதத்திலும் செயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது எனவே தான் தண்ணீர் மிகவும் பெறுமதி மிக்கதாக விளங்குகின்றது. மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் அத்தியாவசியமாகின்றது. தண்ணீர் மனிதனுக்கு பல வழிகளிலும் உதவி புரிகின்றது. மனித உடலிலுள்ள அழுக்குகளை போக்குவதற்கு நீர் மிகவும் அவசியமாகின்றது. மனித உடலிலுள்ள அழுக்குகளை போக்கு வதற்கு தண்ணீருக்கு பதிலாக மாற்று ஈடான எதுவும் இல்லை. விஞ்ஞானம் படிப்படியாக வளர்ந்து பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் வருகின்ற போதும் தண்ணீருக்கு மாற்று ஈடாக எதனையும் எந்த ஒரு விஞ்ஞானியும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஏனெனில் அவ்வாறு எவராலும் எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்திலும் நீர் பிரதானமான இடத்தைக் கொண்டுள்ளது. மனிதனை எடுத்துக்கொண்டால் மனிதர்களால் உணவின்றி ஒரு மாதமேனும் வாழலாம் ஆனால் நீரின்றி நான்கு அல்லது ஐந்து நாட்கள் தான் வாழ முடியும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நீர் நமக்கு எங்கிருந்து கிடைக்கின்றது. குளங்கள், ஆறுகள், அருவிகள், நீர்த் தேக்கங்கள், நீரூற்றுக்கள், பாறைகள், ஆகியவற்றின் மூலம் கிடைக்கின்றன. உலகின் சில நாடுகளில் இது பனிக்கட்டிகளாகவும் உள்ளது. எனவே தண்ணீர் திண்மம், திரவம், வாயு ஆகிய மூன்று வடிவங்களிலும் காணப்படுகிறது. பூமியின் நிலத்தைவிட அதிகளவிலான பரப்பு அளவு நீரைக்கொண்டது. பூமியின் 75 சத வீதத்திற்கும் அதிகளவிலான மேற்பரப்பை நீர் மூடியுள்ளது. உலகிலுள்ள மொத்த நீரில் பெரும் பகுதி சமுத்திரங்களிலேயே உள்ளது. இவற்றில் மனிதனால் எளிதில் நேரடியாக பயன்படுத்தக் கூடிய நீரின் அளவு 0.6 சதவீதமே ஆகும். நீர் என்பது சி2லி என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு சேர்மம் ஆகும். நீர் மூலக்கூறு ஒன்று ஒரு ஒக்சிசன், மற்றும் இரண்டு ஐதரசன் அணுக்களை பிணைப்பு மூலம் கொண்டுள்ளது. எங் கும் நிறைந்த அது உலக உயிரினங்களின் உய்விற்கு மிக அவசியமான ஒன்றாகும். திட்ட வெப்ப அழுத்தத்தில் நீர் ஒரு திரவம் ஆக இருந்தாலும், இது புவியில் திட வடிவில் பனியாகவும், மற்றும் வளிம வடிவில் நீராவி ஆகவும் காணப்படுகிறது. புவிப் பரப்பின் 71% பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. புவியின் தண்ணீரில் பெரும்பகுதி சமுத்திரங்கள், ஏனைய பரந்த நீர் நிலைகளிலும், சுமார் 1.6% பகுதி நிலத்தடி நீர்கொள் படுகைகளிலும் காணப்படுகிறது. வளி மண்டல நீரின் 0.001% பகுதி வாயு வடிவிலும், காற்றில் மிதக்கும் திட மற்றும் திரவ துகள்களால் உருவாகும் மேகங்களிலும், காற்றின் நீராவி குளிர்ந்து சுருங்குவதால் ஏற்படும் நீர்க்கோர்வைகளிலும் காணப்படுகிறது. நில மேலோட்ட நீரின் 97% பகுதி உவர்நீர்ச் சமுத் திரங்களிலும், 2.4% பனி ஆறுகள் மற்றும் துருவ பனிக் கவிகைகளிலும், 0.6% பகுதி ஏனைய நிலமேலோட்ட நீர் நிலைகளான ஆறுகள், ஏரிகள், குளம் குட்டைகளிலும் காணப்படுகிறது. புவியின் தண்ணீரில் ஒரு சிறிய அளவு உயிர்களின் உடல்களிலும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களிலும் காணப்படுகிறது. ஏனைய நீர் துருவ பனிக் கவிகைகளிலும், பனி ஆறுகளிலும், நீர்கொள் படுகைகளிலும், ஏரிகளிலும் சிறைபட்டனவாகவும் சிலநேரம் புவியின் உயிரினங்களுக்கான நன்னீராதாரமாகவும் காணப்படுகின்றது. நீரானது ஆவியாதல், நீராவிப் போக்கு (ட்ரான்ஸ்பிரேஷன்), ஆவி ஊட்டளவு (இவாப்போட்ரான்ஸ் பிரேஷன்), குளிர்ந்து சுருங்கி நீர்க் கோர்வைகளாதல் (பிரெசிபிடேஷன்) மற்றும் தல ஓட்டம் (ரன் ஒஃப்) எனும் நிலைகளின் தொடர் சுழற்சிக்குப் பின் பெரும்பாலும் கடலை அடைகிறது. நிலத்திற்கு நீராவியேந்திச் செல்லும் காற்றின் அளவு கடலினுட் செல்லும் நீரின் தள ஓட்டத்தை ஒத்ததாய் இரு க்கிறது. நிலத்திற்கு மேலே நீராவியா தலும், நீராவிப் போக்கும், குளிர்ந்து சுருங்குவதால் நீர்க் கோர்வைகள் உருவாவதற்கு வழிவகுக்கின்றன. மனிதர்களுக்கும் ஏனைய உயிரி னங்களுக்கும் தூய்மையான குடிநீர் இன்றியமையாதது. கடந்த பத் தாண்டுகளில், உலகத்தின் பெரும் பாலான பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர் வசதி குறிப்பிடத்தக்க வகையில் சீரான முன்னேற்றம் கண்டுள்ளது. பாதுகாப்பான குடிநீர் வசதிக்கும் ஒரு நபருக்கான மொத்த நாட்டு உற்பத்திக்கும் (ஜிடிபி) இடையே பரஸ்பர சம்பந்தம் காணப்படுகிறது. 2035 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானோர் நீரை அடிப்படையாகக் கொண்ட பலவீனங்களுக்கு உட்படுத்தப்படுவர் என சில பார்வையாளர்கள் கணித் துள்ளனர். பல்வேறு வேதியற் பொருட்களின் கரைப்பானாகவும், தொழிற்சாலைகளில் குளிர்ப்பி மற்றும் கடத்தியாகப் பயன்படுத்தப்படுவதாலும், உலக வர்த்தகத்தில் நீர் முக்கிய பங்காற்றுகிறது. சுமார் 70 சதவீத நன்னீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. நம் உயிர்வாழத் தேவையான பொருட் களில் தண்ணீரின் பங்கு முக்கியமானது. உடலில் உள்ள தசைகள், தோல், முதலியவற்றின் வளர்ச்சியில் 70 சதவிகிதம் தண்ணீரின் பங்காகும். உடலில் நீர் சத்து குறை ந்தால் தோல் வறண்டு போவதோடு உடல் சோர்வடைந்து விடுகிறது. இதனால் அகத்தோற்றம் முற்றிலும் பாதிக் கப்படுகிறது. வயதாவதை முதலில் உணர்த்துவது தோல்தான். முகத்தில் சிறிது சுருக்கம் விழுந்தாலும் கவலை கொள்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். சருமத்தை பாதுகாப்பதற்காக எத்தனையோ கிரீம்களை உபயோகிக்கின்றனர். இன்றைய இளைஞர்கள், பளபளப் பாகவும், மிக அழகான தோல் வேண்டும் என்பதற்காகவும், அதனை பாதுகாக்கவும் என்னென்னவோ முயற்சி செய்கின்றனர். அதிக தண்ணீர் குடித்தால் தோல் சுருக்கம் காணாமல் போய்விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தண்ணீர் குடிப்பதன் மூலம் தோலுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. இதன் மூலம் இளமையான தோற்றம் ஏற்படுகிறதாம். இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற பெண்களை எட்டு வாரங்களுக்கு தினமும் தொடர்ந்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்துள்ளனர். இதில் ஒரு பிரிவு பெண்கள் குழாய் நீரையும், மற்றொரு பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர். வில்லோ நீர் என்பது இங்கிலாந்தில் அமைந்திருக்கும் லேக் மாவட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் தண்ணீராகும். இந்த தண்ணீரில் இருக்கும் சொலிசின் செரித்த பிறகு சொலிசிலிக் அமிலமாக மாறுகிறது. பெரும்பாலான சரும பராமரிப்பு கிரீம்களில் சொலிசிலிக் அசிட்டைத்தான் பயன்படுத்துகின்றனர். செயற்கையான சரும கிரீம்களில் பயன்படுத்தப்படும் சொலிசிலிக் அசிட்டை தண்ணீர் குடித்து இயற் கையாக நாம் பெறுவதால்தான் தோல் சுருக்கம் மறைந்து போகிறது. இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களை ஆராய்ச்சிக்கு முன்னரும், பின்னரும் புகைப்படம் எடுத்துள்ளனர். இதில் ஆய்விற்கு பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பெண்கள் இளமையாக தோன்றியுள்ளனர். சாதாரண தண்ணீர் குடித்தவர்களுக்கு தோல் சுருக்கம் 19 சதவிகிதமும், வில்லோ தண்ணீர் குடித்தவர்களுக்கு 24 சதவீகிதமும் சுருக்கம் மறைந் திருந்ததாம். உஷ்ண பிரதேசங்களில் தண்ணீரின் தேவை முக்கியமானது. தேவையான அளவிற்கு தண்ணீர் அருந்தாததன் காரணமாக அவர்கள் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்சினைக்கும் ஆளாகின்றனர். எனவே உடல் நலத்திற்கு சராசரியாக மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீரை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நோயாளிகள் 4 முதல் 5 லீட்டர் தண்ணீரும், தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 6 லீட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். நான்கு லீட்டர் தண்ணீரையும் ஒரே நேரத்தில் அருந்தக் கூடாது என்று கூறும் மருத்துவர்கள் காலையில் ஒன்றரை லீட்டர் தண்ணீரும், காலை மற்றும் மதிய உணவு இடைவேளைக்கு இடையே ஒரு லீட்டரும் குடிக்க வேண்டுமாம். மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு இடையே ஒரு லீட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத் தியுள்ளனர். சாதாரண உடல் நிலை கொண்டவர்கள் குளிர்ந்த நீர் அருந்துவது வயிற்றுக்கு நல்லது. ஒரு சிலர் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவார்கள் எப்போதாவது சுடுநீர் அருந்துவது தவறில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு நீண்ட நாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்க தண்ணீர் மிகவும் இன்றியமையாததாகும். எப்படியெனில், தண்ணீர் அதிகம் பருகினால் உடலின் அனைத்து பாகங் களுக்கும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துச் செல்லப்பட்டு உறுப்புகள் பாதுகாக் கப்பட்டு நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உடலின் வெப்பமும் சீராக இருக்கும். மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீராக உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது. எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஆகவே தான், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அனைத்து மருத்துவர்களும் தண்ணீரை அதிகம் பருக வேண்டும் என்று சொல்கின்றனர். அதுமட்டுமின்றி, பல ஆய்வுகளும், உடலின் செயல்பாடுகள் தங்கு தடையின்றி நடைபெற வேண்டுமெனில் ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீரை பருக வேண்டும் என்றும் சொல்கிறது. சரி, இப்போது உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைப் பார்ப்போம். * உடலில் தண்ணீர் குறைந்த அளவில் இருந்தால் அடிக்கடி தாகம் ஏற்படும் தாகம் என்பது உடலில் தண்ணீர் குறைபாட்டை வெளிப்படுத்தும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று. * வாயானது அடிக்கடி வறட்சியடைந்தால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும். * சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வந்தால் உடலில் சரியான அளவில் தண்ணீர் உள்ளது என்று அர்த்தம். அதுவே சிறுநீரானது நல்ல அடர் நிறத்தில் கடுமையான துர்நாற்றத்துடன் வெளிவந்தால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது என்று அர்த்தம். * அழும் போது, கண்களில் இருந்து போதிய தண்ணீர் வராவிட்டால் உடல் தண்ணீரின்றி வறட்சியுடன் உள்ளது என்றும் அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அர்த்தம். * உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் உடலானது நன்கு செயல்படுவதற்கு தேவையான சக்தியானது இல்லாமல் சோர்வுடன் இருக்கும். இவ்வாறு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது அதிகம் குடிக்க வேண்டும் என்று பொருள். * சிலருக்கு உடல் வறட்சி அதிகமாகி, தாகத்தையும் தாண்டி அதிகப்படியான பசியானது ஏற்படும். இவ்வாறு அடிக்கடி பசி உணர்வு ஏற்பட்டால் அது உணவு உண்பதற்கான அறிகுறி அல்ல. மாறாக அது உடலில் வறட்சி உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறது. ஆகவே இந்நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும். * உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு தான் சருமம். இந்த சருமத்திற்கு அதிகப்படியான தண்ணீரானது மிகவும் அவசியம். இல்லாவிட்டால், அது சருமத்தில் வறட்சி அல்லது செதில் செதிலான சருமத்தை ஏற்படுத்தி தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று சொல்லும். * உடலின் வியர்வையானது தண்ணீரால் உருவானது. ஆனால் உடலில் போதிய தண்ணீர் இல்லா விட்டால் வியர்வையானது வற்றிவிடும். இதனால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்படுவது தடைபட்டு சருமத்தை மட்டுமின்றி உடலையும் ஆரோக்கியமற்றதாக்கி விடும். * உடலில் வறட்சி இருந்தால் தலைவலியுடன் மயக்கமும் உருவாகும் எனவே தேவையில்லாமல் இத்தகைய உணர்வுகள் ஏற்பட்டால் தண்ணீரை அதிகம் பருக ஆரம்பியுங்கள். * 70 சதவிகிதம் தண்ணீரால் ஆன தசைகளில் தண்ணீர் குறைவாக இருந்தால் தசைப்பிடிப்பு, தசை வலிகள் போன்றவை உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது செய்த பின்னரோ ஏற்படும். * இதயம் கூட தண்ணீரால் ஆனது தான். இத்தகைய இதயத்திற்கு போதிய நீரான இரத்த ஓட்டத்தின் மூலம் கிடைக்கும். * ஆனால் இரத்தத்திற்கே போதிய தண்ணீரானது கிடைக்காவிட்டால், இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவும் குறைந்து அடிக்கடி படபடப்பை ஏற்படுத்திவிடும். எனவே அடிக்கடி இதய படபடப்பு ஏற்படுமாயின் உடலில் போதிய நீர் இல்லை என்று அர்த்தம். * உடலில் நீர் வறட்சி இருந்தால் சருமத்தின் நெகிழ்வுத் தன்மையானது குறைந்துவிடும். மேலும் இதனால் சருமம் முதுமை தோற்றத்தை அடைந்தவாறு வெளிப்படுத்தும் ஆகவே இந்த மாதிரியான நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும். * மலச் சிக்கல் ஏற்படுவதும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியே. ஏனெனில் உடலில் போதிய நீர் இல்லாவிட்டால் குடலானது செரிமானமடைந்த உணவை எளிதாக வெளியேற்ற முடியாமல் மலத்தை இறுக்கமடையச் செய்துவிடும். * உடலின் வெப்பநிலையானது போதிய அளவில் இல்லாமல் அதிகப்படியான வெப்பத்துடன் இருந்தால் அது உடலில் போதிய தண்ணீர் இல்லாததற்கான அறிகுறிகளில் ஒன்றாகும். ஆகவே உடலானது அதிகப்படியான வெப்பத்தில் இருந்தால் தண்ணீர் அதிகம் பருகினால் சரியாகிவிடும். * உடலில் நீர் வறட்சி இருந்தால் ஒற்றை தலைவலி ஏற்படும் எனவே அடிக்கடி ஒற்றை தலைவலி வந்தால் தண்ணீர் அதிகம் பருகுங்கள்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812