செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

வழிபாடு

கோயில்களுக்கு சென்று இறைவனை வணங்கும் போது முக்கியமான மூன்று வழிமுறைகள் உள்ளதாக ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன. 1. உத்தம நமஸ்காரம். லட்சுமி வாசம் செய்யும் வேதரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களை இணைத்து இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேரே மையத்தில் வைத்து மனதில் மட்டுமே மந்திரங்களைக் கூறி இறைவனை ஒரு நொடியேனும் மனதார வணங்க வேண்டும். மனிதனின் ஆத்ம இருப்பிடமான இதயத்தில் இருந்து வணங்குவதை இறைவன் செவிசாய்த்து கேட்பான் என்பது ஐதீகம். 2. அஷ்டாங்க நமஸ்காரம் : இவ்வகையான நமஸ்காரமுறை ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. இம்முறையில் அஷ்டாங்கமும் (அஷ்டம் எட்டு, அங்கம் உடற்பாகம்) தரையில் படும்படியாக வீழ்ந்து இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வணங்க வேண்டும். தலை, முகம், இரண்டு தோள்பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாதநுனி ஆகிய உடற்பாகங்களை தரையில் படும்படியாக படுத்துக்கொண்டு இறைவனின் திருப்பாதத்தை சரணடைந்தால் வாழ்வில் பாவங்கள் நீங்கி நற்கதி உண்டாகும். 3. பஞ்சாங்க நமஸ்காரம் : இந்த நமஸ்காரமுறை பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வகையான வணங்கல் முறையில் பெண்கள் தங்களது பஞ்சாங்கத்தையும் (பஞ்சம் ஐந்து, அங்கம் உடற்பாகம்) இறைவனிடம் முழுமையாக சமர்ப்பணம் செய்து வணங்க வேண்டும். இம்முறையில் தலை, இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாநுனிகளை பூமியில் வைத்து இறைவனை வணங்கிட நற்பலன்கள் கிட்டும்.

கைலேஸ்வரத்தில் மாசிமக மகோற்சவம்

கொழும்பு கப்பித்தாவத்தை ஸ்ரீ கைலேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ கருணாகடாட்சி அம்பிகை சமேத ஸ்ரீகைலாச நாதர் சுவாமி தேவஸ்தானத்தில மாசி மக மகோற்சவ விழா நேற்று கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகியது. இவ்வாலயத்தில் இன்று காலை 10.00 மணிக்கு கொடியேற்ற வைபவம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 22ம் திகதி வரை தினமும் காலையும் மாலையும் வசந்த மண்டப பூஜை நடைபெறும். எதிர்வரும் 03ம் திகதி மாலை 5.00 மணிக்கு தேர்த் திருவிழா ஆரம்பமாகும். இவ்வாலயத்தில் 04ம் திகதி தீர்த்த உற்சவமும். 10ம் திகதி வைரவர் மடை பூஜையும் நடைபெறும். இவ்வாலயத்தில் தினமும் காலை 8.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகும் திருவிழா பூஜை காலை 11.00 மணியளவில் அம்பாள் உள்வீதி வலம் வருதலுடன் நிறைவுபெறும். அதேபோன்று மாலை 4.30 மணிக்கு சாயரட்ச பூஜையுடன் ஆரம்பமாகும் மாலை திருவிழா இரவு 7.00 மணிக்கு அம்பாள் உள்வீதி மற்றும் வெளிவீதி வருதலுடன் நிறைவுபெறும். மகோற்சவ சிவாச்சாரியா முத்தமிழ் குருமணி சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர குருக்கள் தலைமையில் தேவஸ்தான குருமாகிய சிவஸ்ரீ க. மகேஸ்வரக் குருக்கள், சிவஸ்ரீ யோ. ரஞ்சிதக் குருக்கள், சிவஸ்ரீ பா. சாம்பசிவ குருக்கள், சிவஸ்ரீ ஸ்ரீகர குருக்கள், சிவஸ்ரீ ம. சுரேஷ் குருக்கள், சிவஸ்ரீ ப. புருஷோத்ம சர்மா, சிவஸ்ரீ ரிஷிகேச சர்மா ஆகியோர் மகோற்சவ கிரியைகளை நடத்தி வருகிறார்கள்.

நமசிவாய மந்திரம்

(11242) சிவயநம என்று உச்சரிக்க என்ன நடக்கும்? மோட்சத்திற்கு வழி வகுக்கும் (11243) அங்நங் சிவாய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? தேக வளம் ஏற்படும் (11244) அவ்வுஞ் சிவயநம என்று உச்சரிக்க என்ன நடக்கும்? சிவன் தரிசனம் காணலாம். (11245) ஓம் நமசிவாய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? காலனை வெல்லலாம். (11246) லங் ஸ்ரீறியுங் நமசிவாய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? தானிய விளைச்சல் மேம்படும். (11247) ஓம் நமசிவய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? வாணிபங்கள் மேன்மையுறும் (11248) ஓம் அங்உங்சிவயநம என்று உச்சரிக்க என்ன நடக்கும்? வாழ்வு உயரும், வளம் பெருகும் ஓம் ஸ்ரீறியும் சிவயநம என்று உச்சரிக்க - அரச போகம் பெறலாம். (11249) ஓம் நமசிவய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? சிரரோகம் நீங்கும். (11250) ஓங் அங்சிவாய நம என்று உச்சரிக்க என்ன நடக்கும்? அக்னி குளிர்ச்சியைத் தரும்

நமசிவாய மந்திரம்

(11232) கிலி நமசிவய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? வசிய சக்தி வந்தடையும் (11233) ஹிரீநமசிவய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? விரும்பியது நிறைவேறும் (11234) ஐயும் நமசிவய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? புத்தி வித்தை மேம்படும். (11235) நம சிவய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? பேரருள், அமுதம் கிட்டும். (11236) உங்யுநமசிவய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? வியாதிகள் விலகும் (11237) கிலியுநமசிவய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? நாடியது சித்திக்கும் (11238) சிங்வங்நமசிவய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? கடன்கள் தீரும். (11239) நமசிவயவங் என்று உச்சரிக்க என்ன நடக்கும்? பூமி கிடைக்கும். (11240) சவ்வுஞ் சிவாய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? சந்தான பாக்யம் ஏற்படும். (11241) சிங்aங் என்று உச்சரிக்க என்ன நடக்கும்? வேதானந்த ஞானியாவார் உங்aம்

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

சிவாய நம

கே. ஈஸ்வரலிங்கம் (11220) நரசிம்மர் கோயிலில் பிரதோஷ விழா நடப்பது ஏன்? பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம், நரசிம்மரை வழிபடுவதற்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. (11221)பிரதோஷம் என்றால் என்ன? அத்தருணத்தில் இறைவனை வழிபட்டால் என்ன பலம் உண்டாகும்? தோஷம் என்றால் குற்றம். ப்ர என்றால் பொறுத்துக் கொள்வது. இறைவன் நமது பாவத்தை எல்லாம் மன்னித்து அருள்தரும் காலமே பிரதோஷம். இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும். (11222) வீட்டிலிருந்து கிளம்பும் போது மூன்று பேராகச் செல்லக்கூடாது என்பது உண்மைதானா? சுபநிகழ்ச்சிகள் தொடர்பாக பேசச் செல்லும் போது மட்டும் மூன்று பேராகச் செல்லக்கூடாது. மற்ற நிகழ்ச்சிகளுக்கு பிரச்சினையில்லை. (11223) வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவபுண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா? முற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம். (11224) அசுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது விபூதி குங்குமம் அணிந்து செல்லக்கூடாது என்கிறார்களே, சரிதானா? எந்த இடத்திற்குச் சென்றாலும் விபூதி அணிந்து செல்லத் தடையில்லை. குங்குமம் கூடாது. நகை அணிந்து செல்லக்கூடாது. திருமணமான பெண்கள் மேற்படி இடத்திற்குச் செல்லும் பொழுது, ஒரு மஞ்சள் கிழக்கை முந்தானையில் முடிந்து செல்ல வேண்டும். (11225) செவ்வாய் தோஷ நிவர்த்திக்கான எளிய பரிகாரம் என்ன? செவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செவ்வாய் ஹோரை வேளையில் செவ்வாய் கிரகத்திற்கு தீபம் ஏற்றி, சிவப்பு மலர் சாத்தி வழிபடுங்கள். (11226) சுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்? நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனே நம் மனதை இயக்குபவர். வளர்பிறையில் சந்திரன் ஆற்றலோடு, திகழ்வார். அந்நாட்களில் நிலவின் அமுத கிரணங்கள் பூமியில் விழுவதால், மனம் உற்சாகத்துடன் இருக்கும். உற்சாகமாக இருக்கும்போது, சுபநிகழ்ச்சிகள் குறைவின்றி சிறப்பாக நடந்தேறும் என்பதற்காகவே வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கின்றனர். (11227) நங்சிவயநம என்று உச்சரிக்க என்ன நடக்கும்? திருமணம் நிறைவேறும் (11228) அங்சிவயநம என்று உச்சரிக்க என்ன நடக்கும்? தேக நோய் நீங்கும் (11229) வங்சிவயநம என்று உச்சரிக்க என்ன நடக்கும்? யோக சித்திகள் பெறலாம் (11230) அங்சிவயநம என்று உச்சரிக்க என்ன நடக்கும்? ஆயுள் வளரும், விருத்தியாகும் (11231)ஓம் அங்சிவாய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? எதற்கும் நிவாரணம் கிட்டும்.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

எண்பத்து நான்கு ஆண்டுகள் பழைமைச் சிறப்பு கொண்ட கொழும்பு பரடைஸ் பிளேஸ் மகாகாளியம்மன் ஆலய திருவிழா

கொழும்பில் தமிழர் கள் செறிந்து வாழுகின்ற ஒரு பகுதியான பரடைஸ் பிளேஸ் என்ற ஆங்கிலப் பதத்திற்கு உரிய தமிழ் வரைவிலக்கணம் ‘சொர்க்கபுரி’ என்பதாகும். அந்நியர் இலங்கையை ஆண்ட போது ஆங்கிலேயரால் இந்நாமம் சூட்டப்பட்டிருக்கலாம். உலகில் தல விருட்சங்கள் இரண்டு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து வளர்வது அபூர்வம். அரசும் பனையும் பின்னிப் பிணைந்த அபூர்வதலத்திலே 1931 ஆம் ஆண்டு இத்திருத்தலம் அமைந்தது. இத்தல விருட்சங்களில் அன்று நாகமாக நிலைகொண்டு நாகத்தம்பாளாக அருள்பாலித்து வந்தவள் ஸ்ரீ மகா காளியம்பாள். இதனை உணர்ந்த அம் பாள் அடியார்கள் இவ்விருட்சங்களைச் சுற்றி மாடம் அமைத்து அதில் சூலாயுத த்தை வைத்து வணங்கத் தலைப்பட்டனர். அன்று கொழும்பு நகரமாக இருந்த ¡லும் கூட இம்மக்கள் கிராமிய வழக் கப்படியே பூஜைகளை நடாத்தி வந்தனர். அம்பாளின் சக்தி படிப்படியாக வெளிப்பட காலத்தின் கோலத்திற்கேற்ப இவ்வாலயத்தை கட்டியெழுப்ப வாய்ப்புக் கிடைத்தது. அதற்கமைய கொழும்பு பரடைஸ் பிளேஸ் மக்கள் அனைவரும் அம்பாள் அருளால் அமரர் அ. குருசாமி தலைமையில் ஒன்றிணைந்து 1949 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் திகதி இவ்வாலயத்தை கட்டியெழுப்பத் திட்டமிட்டனர். அதற்கமைய தமிழகத்திலிரு ந்து சிற்ப சாஸ்திரி யான ஆர். நாகலிங்கம் அழைத்துவரப்பட்டார். ஆவணி 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அவரது கை வண்ணத்தில் மூலமூர்த்தியான சப்தசதி ஸ்ரீ மகாகாளியம்மனுக்கும். ஸ்ரீ முனீஸ் வரப் பெருமானுக்கும் ஸ்ரீ சூலாயுத மூர்த்திக்கும் கோபுரங்களுடன் கூடிய திருக்கோயில்கள் அமைக்கப்பட்டன. இக் கோயில்களின் இஷ்ட தெய் வங்களின் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு புரட்டாதி மாதம் 30 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருடா வருடம் திருவிழா வெகு விம ரிசையாகக் கொண்டாடப்பட்டது. பத்து நாட்கள் நடைபெறும் இத் திருவிழாவில் முதல் நாளன்று காப்புக் கட்டு வைபவம் இடம்பெறும். அதற்கடுத்த ஏழு நாட்களும் அம்பாளுக்கு விசேட அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறும். எட்டாம் நாள் கொழும்பு பரடைஸ் பிளேஸிலிருந்து அருள்பாலிக்கும் அம்பாளுக்கு முகத்துவாரம் சங்குமுகத்தில் கரகம் பாலித்தல் இடம்பெறும்.அதனைத் தொடர்ந்து கரகம், காவடி தீச்சட்டிகள் என பக்தர்கள் புடைசூழ அம்பாள் முகத்துவாரம் ஆலயத்திலிருந்து பாலத்துறை, சேதவத்தை, பலாமரச் சந்தி, பபாபுள்ளே தோட்டம், கிரா ண்ட்பாஸ் வீதியூடாக ஆலயத்தை வந் தடைவாள். ஒன்பதாம் நாள் காலை பாலாபிஷேக மும் மாலையில் மங்கல மங்கையரின் மாவிளக்கு பூஜையும், ஆலய முற்றத்தில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். பத்தாவது நாளன்று பக்த கோடிகள் மஞ்சள் நீராடி அம்மன் அருளைப் பெற்று சக்தி அடியார்களுக்கு அருள் வாக்குக் கூறுவார். அந்த அருளோடு சக்தி கரகமும் தீச்சட்டியும் ஏந்தி முகத் துவார சங்குமுகத்திற்குச் சென்று தீர்த் தமாடுவர். அதனைத் தொடர்ந்து பரடைஸ் பிளேஸ் ஸ்ரீ மகா காளியம்மன் சந்நிதானத்தில் மகேஸ்வர பூஜை நடா த்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். இத் திருக்கோவிலில் விஷேஷமாக முதலில் சூரியன், சந்திரனுக்கும் தலவிருட்ஷங்களான அரசும், பனையும் பின்னிப் பிணைந்து நிழலில் வீற்றிருக்கும் ஸ்ரீ விநாயகருக்கும் பூஜை செய்தபின் ஸ்ரீ விநாயகர், மூல மூர்த்தியும் சப்த சதி நாயகியாகிய ஸ்ரீ மகா காளியம்மனுக்கு, ஸ்ரீ முருகனுக்கும் பூஜை நடைபெற்று ஏனைய பரிவார மூர்ததிகளுக்கும் பூஜை நடைபெறும். தினந்தோறும் ஆறு காலப் பூஜைகள் நடைபெறும். காலை 5.30 மணிக்கு திருவனந்தல் பால் பூஜை காலை 6.30 மணிக்கு காலைச்சந்தி காலை 10.30 மணிக்கு உச்சிக்காலம் கோபூஜை மாலை 5.00 மணிக்கு சாயரட்சை மாலை 6.30 மணிக்கு இரண்டாம் காலம் மாலை 8.00 மணிக்கு அர்த்த சாமம் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் 12.00 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 9.00 மணிக்கு அர்த்த சாம பூஜையும் நடைபெறும். ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் வருடா வருடம் வரும் விசேட விழாக்களாவன: வருஷாபிஷேகம், முதல் பத்து நாட்களும் காலையும் மாலையும் இலட்சார்ச்சனை வெகு விமரிசையாக நடைபெறும். தை மாதம் பூர்வ பட்ச அத்த நட்சத்திரத்தில் வருஷாபிகேம் சகஸ்ட சத சங்காபிஷேகம் நடைபெறும். ஆதி காலந் தொட்டு கிராமிய முறையில் நடைபெற்றதுபோல் இன்றும் கொழும்பு முகத்துவாரம் சங்குமுகத்தில் அம்பாள் அருளோடு தீமிதிப்பும் இரதபவனி, பால்குட பவனியும் பாலாபிஷேகமும். மாவிளக்கு பூஜையும் நடாத்தப்பட்டு இறுதி நாளன்று மஞ்சள் நீராட்டத்துடன் கொழும்பு முகத்துவாரம் சங்கமத்தில் தீர்த்த உற்சவம் நடைபெறும். அதன்பின் மகேஸ்வர பூஜை நடாத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். மாலை ஸ்ரீ பைரவருக்கும். ஸ்ரீ பத்ராகாளியம் மனுக்கும் மடைபரவி பொங்கல் படைத்து பூஜை நடாத்தப்படும்.இத் திருக்கோவிலில் நான்கு நவராத்திரி விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.முதலாவதாக தை மாதம் சியாமளா நவராத்திரியும், சித்திரை மாதம் வசந்த நவராத்திரியும், ஆடி மாதம் ஆஷாட நவராத்திரியும், புரட்டாதி மாதம் சாரதா நவராத்திரியும் நடைபெறும். சாரதா நவராத்திரியுடன் விஜயதசமி நடைபெறுவது போல ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி ஆரம்பிக்கப்பட்ட பத்தாம் நாள் மஹா சண்டி ஹோமமும் நடாத்தப்படும். ஆவணி மாதம் திருக்குளிர்த்திப் பெருவிழா நடைபெறும். இவ்விழா வேறு எந்தவொரு ஆலயங்களிலும் நடைபெறுவதில்லை. இத்திருந்கோவிலில் இவ்விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.மாதா மாதம் வரும் பெளர்ணமி நாளன்று விஷேஷமாக 108 சங்காபிஷேகமும். ஸ்ரீ சக்கர பூஜையும், கோபூஜையும் அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜையும் நடைபெறும். பங்குனி மாதம் வரும் பங்குனித் திங்கள் நான்கிலும் இத்திருக்கோவில் முற்றத்தில் அடியார்கள் தங்கள் கரங்களாலே பொங்கல் வைத்து ஸ்ரீ பத்ராகாளியம்மனுக்குப் படைத்து பூஜை செய்வர். செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் இராகுகாலப் பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.ஏனைய விஷேஷங்களாவன: விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, ஸ்கந்த ஷஷ்டி, வரலட்சுமி நோன்பு, கெளரி நோன்பு இன்னும் விஷேஷ பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. வேண்டியவருக்கு வேண்டிய வர த்தை வாரி வழங்கி கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகாகாளியம்மனை நடி வரும் பக்த கோடிகளின் எண் ணிக்கையை நாளுக்கு நாள் பெருகி கொண்டிருப்பதன் மர்மம் அம்பாளின் மகிமையாகும்!

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

11229) இந்தியாவின் 280 பழமையான சிவன் கோவில்களில் எத்தனை கோவில்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன? 274 11230) இந்தியாவின் பழமையான 108 வைணவத் திருப்பதிகளில் எத்தனை திருப்பதிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன? 96 11231) சைவத்தை வளர்த்த நாயன்மார் எத்தனை பேர்? 63 பேர் 11232) வைணவத்தை வளர்த்த ஆழ்வார்கள் எத்தனை பேர்? 12 பேர் 11233) சைவத்தில் கோயில் என்று சொன்னாலே அது எதைக் குறிக்கும்? அது எங்கே இருக்கிறது? சிதம்பரத்தைக் குறிக்கும். அது தமிழ்நாட்டில் இருக்கிறது 11234) வைணவத்தில் என்றாலே அது எதைக் குறிக்கும்? அது எங்கே இருக்கிறது? திருவரங்கத்தைக் குறிக்கும். அது தமிழ்நாட்டில் உள்ளது. 11235) பொதுவாக. பெயர்களை எவ்வாறு பிரிக்கலாம்? இடுகுறிப் பெயர், காரணப் பெயர் 11236) மேசியா என்பதற்கு என்ன பொருள்? எண்ணெய் ஊற்றப்பட்டவர். 11237) அன்பு என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல் என்ன? சிவம் 11238) அன்பே உருவான கடவுளுக்குத் தமிழில் என்ன பெயர்? சிவன் 11239) நாம் அனைவரும் நீங்காத இன்பத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அன்பே உருவான கடவுள் மனிதனாகப் பிறந்ததைக் கூறும் சைவ சித்தாந்தப் பாடல் ஒன்றை எழுதவும். இறவா இன்பத்து எமை இருத்த வேண்டிப் பிறவா முதல்வன் பிறந்தான் 11240) மனிதனாக வந்த கடவுள் தீமையை வென்றார் என்கிற தன்மையை. சைவம் புராண நோக்கில் எந்தப் பெயரில் விளக்குகிறது? குமரக் கடவுள் 11241) சிவனுடைய வேறு பெயர்கள் யாவை? நீலகண்டன். மகேஸ்வரன். தட்சிணாமூர்த்தி. நடராசன் 11242) விஷ்ணுவின் வேறு பெயர்கள் யாவை? திருமால். பெருமாள். நாராயணன். வெங்கடேசன்.... 11243) வைணவத்தில். நீரின் மேல் அசையாடுபவர் எனும் பொருள் தரும் கடவுளின் பெயர் என்ன? நாராயணன் 11244) முருகனின் வேறு பெயர்கள் யாவை? குமரன். வேலன். கந்தன். கார்த்திகேயன் 11245) மனிதனாக வந்த கடவுள் இறந்து உயிர்பெற்றார் என்கிற தன்மையை. சைவம் புராண நோக்கில் எந்தப் பெயரில் விளக்குகிறது? பிள்ளையார் 11246) பிள்ளையாருடைய வேறு பெயர்கள் யாவை? விநாயகர். கணபதி. விக்னேஷ்வர் 11247) மனிதனாக வந்த கடவுள் சு+ரியனைப் போன்ற ஒளிமயமானவர் என்பது எந்தப் பெயரில் விளக்கப்படுகிறது? ஐயப்பன் 11248) மனிதனாக வந்த கடவுள் உலகப் படைப்புக்குக் காரணமானவர் என்பது எந்தப் பெயரில் விளக்கப்படுகிறது? பிரமன்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812