திங்கள், 27 ஜூன், 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8573 மிருத் சங்கிரணத்தில் ‘மிருத்’ என்றால் என்ன?

மண்

8574 சங்கிரணம் என்றால் என்ன?

எடுத்தல்

8575 அங்குரம் என்பது என்ன?

முளைக்கின்ற விதை

8576 அர்ப்பணம் என்றால் என்ன?

போடுதல்

8577 யாக பூஜைகள் நல்ல பலன்கள் அளிக்கும் பொருட்டு முளைப் பயிரை இட்டு இந்த யாக சாலையில் பூஜைகள் நன்கு செய்யப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு அறியலாம்?

பயிர்கள் வளர்வதைக் கொண்டு

8578 கும்பாபிஷேகத்தில் பங்கு பெறு கின்ற சிவாச்சார்யர்கள், பட்டாச்சார்யார்கள் இந்த வைபவம் நிறைவு பெறும் வரை வேறு செயல்களில் ஈடுபடாமல் இருக் கவும் இடையூறுகள் நேராத வண்ணம் தங்களைக் காத்துக் கொள்ளவும் என்ன செய் வார்கள்?

காப்பு கட்டிக் கொள்வார்கள்.

8579 இவ்வாறு கட்டிக் கொள்வதை என்னவென்று கூறுவார்கள்?

மந்திர வேலி

8580 மந்திர வேலி என்பதை வேறு எவ்வாறு அழைப்பர்?

ஆசார்ய ரட்சாபந்தனம்

8581 இறைவனுக்கு பூஜை செய்யும் முன்பு என்ன செய்ய வேண்டும்?

மந்திரார்த்தமாக இந்தப் பூத உடலை சுத்தம் செய்தல் வேண்டும்.


8582 இவ்வாறு சுத்தமாக்குவதற்குரிய மந்திரங்களைக் கூறி வழிபடுதலை என்னவென்பர்?

பூதசுத்தி

8583 இடத் தூய்மையை என்னவென்பர்?

ஸ்தான சுத்தி

8584 பொருட் தூய்மையை என்னவென்பர்?

பூஜா திரவிய சுத்தி

8585 எச்சில் வருகின்ற வாய் சொல் லும் மந்திரத்தை எண்ணத்தினால் தூய்மைப்படுத்துதலை என்னவென்பர்?

மந்திர சுத்தி

திங்கள், 20 ஜூன், 2011

அறநெறி அறிவுநொடி


கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


கும்பாபிஷேகம்

8561) ஸ்ரீசூக்த ஹோமம் யாரை குறித்து செய்யப்படுகின்றது?

மகாலக்ஷ்மியை

8562) ஸ்ரீ சூக்த ஹோமத்தால் ஏற்படும் பலன் என்ன?

கும்பாபிஷேகப் பணிகளில் ஈடுபட்டிருப்போரின் வீடுகளில் லக்ஷ்மி கடாட்சம் ஏற்படும் என்பது ஐதீகம்.

8563) ஸ்ரீ சூக்த ஹோமத்தின் போது எந்த மந்திரங்கள் சொல்லப்படும்?

ஸ்ரீ சூக்த மந்திரங்கள்

8564) ஸ்ரீ சூக்த மந்திரங்கள் எதில் உள்ளது?

ரிக்வேதத்தில்

8565) ஆலயக் கட்டுமானப் பணிகளில் குறைகள் ஏதும் இருப்பின் கும்பாபிஷேகத்தின் போது அவற்றிற்கு பரிகாரமாக செய்வது என்ன?

சாந்தி ஹோமம்

8566) சாந்தி ஹோமம் செய்யப்படும் போது யாக குண்டங்களில் என்ன மந்திரங்கள் சொல்லப்படும்?

பாசுபஸ்திர மந்திரங்கள்

8567) பாசுபஸ்திர மந்திரங்களைக் கூறி என்ன செய்வர்?

கலசத்தில் ஆவாகனம் செய்வர்

8568) கலசத்தில் ஆவாகனம் செய்த பின் என்ன செய்யப்படும்?

ஹோமம் செய்யப்படும்

8569) ஹோமம் செய்த கலச நீரை என்ன செய்வர்?

அஸ்தி தேவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

8570) கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக எழுந்தருளும் தெய்வ பிம்பங்களுக்கு சக்தியூட்டும் விதமாக செய்யப்படும் ஹோமத்தை என்னவென்று சொல்வர்?

மூர்த்தி ஹோமம்

8571) சிவபெருமானுக்குரிய பெருமைகளைக் கூறி நடத்தும் யக்ஞம் என்ன?

சம்ஹிதா ஹோமம்

8572) சம்ஹிதா ஹோம யக்ஞத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?

பரிகார யக்ஞம்

திங்கள், 13 ஜூன், 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


(கும்பாபிஷேகம்)


8553) கும்பாபிஷேக கிரியைகளை செய்யும் போது ரட்சோக்ண ஹோமம் செய்வார்கள். இதில் ‘ரட்சோ’ என்றால் என்ன?

அரக்கர்கள்


8554) இதில் க்ணம் என்றால் என்ன?

ஒடுக்குதல்


8555) ரட்சோக்ண ஹோமம் ஏன் செய்யப்படுகிறது?

அரக்கர்கள் தீங்கு செய்யாமல் இருக்க


8556) ரட்சோக்ண ஹோமம் எவ்வாறு செய்யப்படும்?

கலசங்கள் மேல் ஐந்து வகையான அஸ்திர மந்திரங்களையும் ஓதி அரிவாள், சுத்தி ஆகியவற்றில் ரட்சோக்ண தேவதைகளையும் தேங்காயில் ருத்ரனையும் ஆவாகணம் செய்து பூஜித்து ஆலயத்தை வலம் வரச் செய்து ஹோமம் முடிந்ததும் மங்கள வாழ்த்தியம் முழங்க வலம் வரவேண்டும்.


8557) எண் திசைக் காவலர்களும் யார்?

இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.


8558) பிரவேச பலியின் போது முதலில் என்ன செய்யப்பம்?

சுற்றி எட்டுத் திசைகளிலும் உள்ள துர்தேவதைகளும் பூஜிக்கப்படும்


8559) இவ்வாறு பூஜிக்கப்பட்ட பின் என்ன செய்யப்படும்?

எண் திசைக் காவலர்களை அவர்களுக்குரிய திசைகளில் வரவழைத்து வழிபாடு செய்யப்படும்

8560) பிரவேச பலி செய்யப்படுவது எதற்கு?

ஆலயத்தை காத்திடும்படி வேண்டுவதற்கு

திங்கள், 6 ஜூன், 2011

கொழும்பு ஊறுகொடவத்தை ஸ்ரீ மஹா பத்திரகாளி அம்மன் ஆலயம்




திருமூலரால் சிவபூமி எனப் போற் றப்பட்ட இலங்கைத் திருநாட்டின் தலைநகரமாக விளங்கும் கொழும்பு மாநகரின் நுழைவாயிலில் வெல்லம்பிட்டிக்கும் கிராண்ட்பாஸ¤க்கும் இடையில் உள்ளது 'ஊறுகொடவத்தை' என்னும் வர்த்தகமயமான ஊர். அந்நியர் ஆட்சிக் காலத்திலிருந்து மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலப்பரப்பில் உள்ள அவிசாவளைக்கு கொழும்பிலிருந்து செல்வதானால் இந்த ஊறுகொடவத்தையை ஊடறுத்துத்தான் செல்ல வேண்டும்.

குறிஞ்சி நிலப்பரப்புக்குரிய தெய்வம் குமரன். அம்பிகையின் இளைய மகனாகிய இந்த முருகப் பெருமானை காணச் செல்வதானால், இந்த அம்பிகையின் திருவருளை பெற்றுத்தான் செல்ல வேண்டும் என்பது போல் அமைந்துள்ளது ஊறுகொடவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பத்திரகாளியம்மன் ஆலயம்.

கிரேண்ட்பாஸ், தெமட்டகொடை, பேலியாகொடை, வெல்லம்பிட்டி என இந்த நான்கு நகரங்களையும் இணைக்கும் நாற்சந்தியில் அமைந்துள்ளது ஊறுகொடவத்தை எனும் சின்னஞ்சிறு நகரம்.

இது சின்னஞ் சிறு நகரமாக இருந்தாலும் தலைநகரை அண்டி இருப்பதால் தொழில் பேட்டைகளும் வர்த்தக நிலையங்களும் ஆங்காங்கே அருவியைப் போல் தோன்றி மருவி இருப்பதைக் காணலாம்.

இது வர்த்தக மயமான பகுதி என்பதால் எந்நேரமும் சுறுசுறுப்பாக சுழன்று கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இந்த நாற்புற சந்திக்கு அருகிலேயே வெல்லம்பிட்டிக்கு காலடி எடுத்து வைக்கும் தொலைவிலே அமைந்துள்ளது சாத்தம்மா எனும் தோட்டம்.

இந்தத் தோட்டத்தையும் தோட்டத்தை அண்டிய பகுதிகளையும் சுற்றி சுமார் 3000 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்கின்றார்கள். இதில் பெரும்பான்மையாக வாழ்பவர்கள் தமிழர்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களாக வாழ்ந்தாலும் இவர்களில் 50% சதவீதத்தினர் மதம் மாறிவிட்டனர். மேலும் மதம் மாறிவருகின்றனர். இப்பகுதிலேயே இதுவரை காலமும் இராஜ கோபுரத்துடன் கூடிய ஒரு ஆலயம் இல்லாதது இதற்கு ஒரு காரணமாகவும் இருந்திருக்கலாம்.

இந்தக் குறையை நிவர்த்திக்கும் முகமாக இந்த நாற்புறச் சந்தியிலிருந்து பார்க்கக்கூடிய வண்ணம் மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது வெல்லம்பிட்டி, ஊறுகொடவத்தை, சாத்தம்மா தோட்டத்தில் குடிகொண்டுள்ள ஸ்ரீ மஹா பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் 18 அடி உயர இராஜ கோபுரம்.

வேண்டியோருக்கு வேண்டுவதெல்லாம் அருளி வரும் ஸ்ரீ மஹா பத்திரகாளியம்பாள் இங்கு சாத்தம்மா தோட்டத்தில் வந்து குடி கொண்டது எப்படி?

சாத்தம்மா என்ற தோட்டத்தின் நாமமே தமிழ் கிராமத்தின் மண்வாசனையை கொண்டுள்ளதை உணரலாம்.

இந்தத் தோட்டத்தின் ஊர் எல்லையில் அந்நியர் இலங்கையை ஆண்ட காலத்திலிருந்து அரச மர நிழலில் கொட்டில் ஆலயம் போல் தொட்டிலிட்டு தோன்றிய ஆலயம் காவல் தெய்வமான ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம். வெள்ளை நாகமொன்றும் கரும் நாகமொன்றும் காடுமண்டிக்கிடந்த இந்த ஆலயச் சூழலைச் சுற்றி அன்று வலம் வந்தன. ஆரம்ப காலத்தில் கல்லொன்றை வைத்து வணங்கி வந்தவர்கள் காலப்போக்கில் திருவுருவப் படங்களையும் படிப்படியாக திருவுருவச் சிலைகளையும் வைத்து வழிபடத் தலைப்பட்டனர்.

சின்னஞ்சிறு கொட்டிலாக மடாலயமாக இருந்த ஆலயத்தில் எஸ். ஆறுமுகம் குரு அம்மா தம்பதிகள் ஆரம்ப காலத்தில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தனர். இவர்கள் அம்மாளின் திருவடியை எய்தபின் இவர்களின் புதல்வியாகிய திருமதி நல்லம்மா இவர்களது பணியைத் தொடர்ந்து வந்தார்.

இந்த ஆலயம் ஊர் எல்லையில் ஓர் ஒதுக்குப்புறத்தில் இருந்ததால் இதன் மகிமை மங்கிப்போய் இருந்ததை உணர்ந்த இறைவன் இதனை ஊரின் முன்புறத்திற்கு கொண்டுவர திருவுளம் கொண்டார். இதற்கமைய ஆலயத்தை சாத்தம்மா தோட்டம் ஆரம்பிக்கும் இடத்திற்கு கொண்டுவர திருமதி நல்லம்மா எண்ணங்கொண்டார்.

இதற்கமைய இவர், தான் வசித்து வந்த சாத்தம்மா தோட்டத்தில் உள்ள 55/2 ஆம் இலக்கத்தைக் கொண்ட வீட்டை மடலாயமாக அமைத்து வழிபட்டு வந்தார். அன்று முனீஸ்வரர் ஆலயத்தைச் சுற்றி வந்த நாகம்மா அதன்பின் இங்கும் வலம் வரத் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து அயலில் உள்ளவர்கள் தமக்கு ஏதாவது நோய் நொடி ஏற்பட்டால் இங்கு வந்து நேர்த்தி வைத்து குணமடைந்தபின் நேர்த்திக்கடனை செலுத்திவிட்டுச் செல்வது வழமையாக இருந்தது.

'சக்தி இல்லையேல் சிவம் இல்லை' என்பார்கள். இந்த கூற்றுக்கமைய இங்கு அம்பாள் வந்து குடிகொள்ளும் வண்ணம் அவ்வப்போது அம்பாள் அசரீரீயாக வரத் தலைப்பட்டாள்.

இவ்வாறு இவரது இல்லத்தில் ஆலயம் அமைத்து வழிபடத் தலைப்பட்ட பின் இவருக்கு அம்பாளின் அருள் வரத் தொடங்கியது.

இவர் குறி சொல்லவும் தலைப்பாட்டார்.

எனவே மடாலயமாக இருந்த இந்த ஆலயத்தை சிறுக, சிறுக ஆகம விதிகளுக்கேற்ப ஆலயமாக கட்டியெழுப்ப முனைந்தபோது இவரை அறியாமலே ஸ்ரீ மகா பத்திரகாளியம்மன் இங்கு வந்து குடிகொண்டு விட்டாள்.

இங்கு வருடாந்தம் நேர்த்தியாக திருவிழாக்கள் நடந்தேறின. 1998 ஆம் ஆண்டு தை மாதம் இங்கு முதன் முதலாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனையடுத்து இவ்வாலயத்தை நாடிவரும் பக்தர் கூட்டமும் சிறு சிறுகப் பெருகியது. அயலில் உள்ளவர்கள் தங்கள் பொருள் ஏதாவது திருட்டு போனால் அல்லது காணாமல் போனால் இவ்வாலயத்தை நாடி வந்து இந்த நல்லம்மாளின் அருள் வாக்கு கேட்டு அறிந்து கொள்வதுண்டு. நல்லம்மாவின் இரண்டாவது மகனுக்கு முருகப்பெருமானின் திருவருள் கிட்டியுள்ளதால் அவருக்கும் அவ்வப்போது அருள்வாக்குக் கூறும் ஆற்றல் உண்டு என்று அவர் கூறுகிறார்.

மடாலயமாக இருந்த ஆலயம் இன்று ஆகம விதிகளுக்கேற்ப ஆலயமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

2004 ஜுனில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டதுடன் இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் இந்தாண்டு ஜூன் 06 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

18 அடி உயரம் கொண்ட இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக கருவறையிலே குடிகொண்டு அருள்பாலித்து வருபவள் ஸ்ரீ மகா பத்திரகாளியம்மன். இந்த அம்பாளுக்கு வலப் பக்கத்தில் முழு முதற் கடவுளாகிய விநாயகப் பெருமானும் இடப் பக்கத்தில் முத்தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானும் எழுத்தருளி அருள்பாலித்து வர ஆலய கருவறையைச் சுற்றி ஸ்ரீ திரெளபதை அம்பாளும் ஸ்ரீ சமயப் புரத்து அம்பாளும் ஸ்ரீ துர்க்கை அம்பாளும் எழுந்தருளி அருள்பாலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உடப்பு, பாண்டிருப்பு என நீலக்கடலின் ஓரத்திலே அருள் பாலித்து வருபவள் ஸ்ரீ திரெளபதை அம்மன்.

அதுபோல் இந்த ஆலய கருவறையைச் சுற்றி வலம் வரும் போது முதலில் வருபவள் ஸ்ரீ திரெளபதை அம்மன்.

தமிழகத்தின் கிராமத்து தேவதையாக திகழ்பவள் மாரியம்மன். மழையை வாரி வழங்கும் இந்த மாரியம்மனை நெஞ்சில் நிறுத்தும் வண்ணம் இந்த ஆலய கருவறையை சுற்றி வலம் வரும்போது திரெளபதை அம்மனுக்கு அடுத்தபடியாக வீற்றிருந்து அருள் பாலிப்பவள் சமய புரத்தாள்.

தமிழும் சைவமும் தழைத்தோங்கி விளங்கும் யாழ் மண்ணின் தெல்லிப்பழையில் குடி கொண்டு அருள் பாலித்து வருபவள் வீரத்துக்கு அதிபதியான ஸ்ரீ துர்க்கை அம்பாள். இந்த ஆலய கருவறையை வலம் வரும்போது இறுதியாக இருந்து அருள்பாலிப்பவள் ஸ்ரீ துர்க்கை அம்பாள்.

நாற்கடலால் சூழப்பட்ட நயினை தீவில் குடி கொணடு நல்லருள் புரிந்து வருபவள் நவருபவள் நயினை நாகபூஷணி அம்மன். இந்த அம்மனின் அருளை வேண்டுவதற்காக ஆலய கருவறைக்கு எதிராக ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கருவறை அம்மன்னுக்கு எதிராக திரிசூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சிற்பியின் கைவண்ணத்தில் இவ்வாலயம் புதுப்பொலிவு பெற்றது. சுமார் 40 லட்சம் ரூபாஇந்த ஆலயத்தின் திருப்பணி வேலைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. திருமதி நல்லம்மா தான் வசித்து வந்த இல்லத்தில் அம்பாளுக்கு வளம் மிக்க சிறப்பான ஆலயமொன்றை அமைத்து விட்டு அவர் ஆலயத்திற்கு அருகிலேயே 2 1/2 லட்சம் ரூபா முற்பணம் செலுத்தி 8500 ரூபா மாதாந்த வாடகையை செலுத்தி வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

திருமதி நல்லம்மாவுடன் இந்த ஆலயத்தை ஆகம முறைப்படி புதுப்பொலிவுடன் கட்டியெழுப்புவதற்கு அரும்பாடுபட்டவர் ஆறுமுகம் செல்வராஜ் சாமி.

இவ்வாலய மஹா கும்பாபிஷேகத்தை நடத்த 5 இலட்சம் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஸ்ரீ மஹா பத்திரகாளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நாளை 06 ஆம் திகதி காலை 6.35 முதல் 7.16 வரையுள்ள சுபவேளையில் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும்.

இன்று 05ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.

இன்று காலை 8.00 மணி முதல் கும்ப பூஜை, விசேட திரவிய ஹோமம், திரிசதி ஹோமம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல் என்பனவும் இன்று மாலை 5 மணி முதல் பிம்பசுத்தி, பூர்வ சந்தாம் கும்பபூஜை, ஹோமம் பாய்சிம சந்தானம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல் என்பனவும் நடைபெறும். 6ம் திகதி காலை 5.30 மணியளவில் கும்பபூஜை, ஹோமம், விசேட தீபராதனையும் நடத்தப்பட்டு காலை 6.35 மணி முதல் ஸ்தூபி அபிஷேகம், பிரதான கும்பம் வீதி வலம் வருதல், மஹா கும்பாபிஷேகம், தச சதர்சனம், எஜமானபிஷேகமும் திர, மஹா அபிஷேகம், தீபாரதனை, பிரசாதம் வழங்கல், மஹா ஆசிர்வாதம் என்பன நடைபெறும்.

கும்பாபிஷேக கிரியைகள் யாவும் சிவஸ்ரீ பா. ஷண்முகேஸ்வர குருக்கள் தலைமையில் நடைபெற உள்ளது. சிவஸ்ரீ சி. பாலசுப்பிரமணியக் குருக்கள், உதவி குருக்களாக கிரியைகளை செய்ய, முன்னேஸ்வரம் சிவஸ்ரீ இ. தேவசிகாமணிக் குருக்கள் சாதகாச்சாரியம் செய்வார்.

அறநெறி அறிவு நொடி



கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்



8546) கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்?

தேங்காய் உள்ளே பரிசுத்தமாக இருப்பது போல் மனதையும் பரிசுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் காட்டவே.

8547) வீட்டை விட்டு புறப்படும் போது சுமங்கலிப் பெண்கள் மங்கலப் பொருட்கள் போன்றவை எதிரில் வந்தால்என்ன நடக்கும்?

காரியம் ஜெயமாகும்.

8548) எண்ணெய், இரும்பு, ஆயுதங்கள் போன்ற பொருட்களை எடுத்து யாராவது எதிரில் வந்தால் என்ன நடக்கும் என கூறப்படுகிறது?

செல்லும் காரியம் ஜெயமாகாது. இரத்தக் காயங்கள் ஏற்படலாம் என சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன.

8549) ஸ்ரீராம ஜெயத்தை யார் எங்கு யாரிடம் எழுதிக் காண்பித்தார்?

அனுமன் அசோகவன சீதையிடம் ராமன் பெற்ற வெற்றியைக் குறிப்பிட்டு மணலில் எழுதினார்.

8550) அர்ஜுனனின் தேரில் இருக்கும் கொடி?

அனுமன் கொடி

8551) ஹோமம் நடக்கும்போது கர்ப்ப ஸ்திரீகள் அருகில் இருக்கலாமா?

இருக்க வேண்டியது மிகவும் அவசியம். கர்ப்ப ஸ்திரீகளுக்கு நல்ல முறையில் குழந்தை பிறக்கவும் தொடர்ந்து அவர்களது வம்சம் விருத்தி அடையவும் பலவிதமான சடங்குகளைச் செய்யச் சொல்லி சாத்திரங்கள் கூறியுள்ளன.

இவற்றில் முக்கியமான சடங்காகிய சீமந்தத்தையும் (வளைகாப்பு) ஹோமத்துடன் செய்ய வேண்டும்.

எனவே ஹோமம் நடைபெறும் இடங்களில் கர்ப்பஸ்திரீகள் அவசியம் இருக்க வேண்டும். இது அவர்களுக்கும் வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கும் மிக மிக நல்லது என சாத்திரங்கள் கூறுகின்றன.


8552) சிதறுகாய் உடைக்கும் வழக்கம் எவ்வாறு உருவானது?


மகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர், காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். ஒருமுறை அவர்கள் ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது அசுரன் ஒருவன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான்.

விநாயகர் யாகத்திற்காகக் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார்.

இதன் மூலம் தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்து தகர்த்தார் விநாயகர். அதன் தொடர்ச்சியாக 'விக்கினங்களை தகர்த்த விக்னேஸ்வரர்' என்ற பெயரும் அவருக்கு ஏற்பட்டது. சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.

இப்போது எந்த செயலுக்கு நாம் புறப்பட்டாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கத்தை பின்பற்றி வருகிறோம்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812