திங்கள், 30 மே, 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


(கும்பாபிஷேகம் - வாஸ்து சாந்தி)


8536) வாஸ்து என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

வசிக்கும் இடம், பூமி, நிலம்

8537) அந்தகன் என்கிற அரசுடன் சம்காரம் செய்யப்பட்ட காலத்தில் சிவபெருமானின் நெற்றியிலிருந்து விழுந்தது என்ன?

வியர்வைத் துளி

8538) இந்த வியர்வைத் துளி பூமியில் என்னவாக மாறியது?

ஓர் அசுரனாக

8539) இந்த அசுரன் என்ன செய்ய முற்பட்டான்?

பூமியை விழுங்க முற்பட்டான்

8540) அந்த அசுரனை கீழே விழ வைக்க சிவபெருமான் என்ன செய்தார்?

வீரபத்திரரை அனுப்பி வைத்தார்

8541) அவனை தள்ளச் செய்து அவன்மீது பிரம்மன் முதலான ஐம்பத்து மூன்று தேவதைகளை வசிக்கும்படி பணித்தவர் யார்?

சிவபெருமான்

8542) அசுரனின் கோரப் பசி தீர்வதற்காக சிவபெருமான் என்ன கொடுத்தார்?

உலக வடிவமான பூசணிக்காயை உணவாகக் கொடுத்தார்

8543) அந்த அரக்கன் யார்?

வாஸ்து புருஷன்

8544) கும்பாபிஷேகத்தின்போது வாஸ்துவுக்கு செய்யப்படும் பூஜையை என்னவென்பார்கள்?

வாஸ்து சாந்தி

8545)வாஸ்து சாந்தியின் போது என்ன செய்வார்கள்?

வாஸ்து புருஷனை எழுப்பி பூஜை செய்து அவருக்கு விருப்பமான பூசணிக்காயை பலியிடுவார்கள்.

திங்கள், 23 மே, 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

கும்பாபிஷேகம்


8527) கிரகங்கள் நன்மையே செய்ய வேண்டி ஒன்பது கிரகங்களுக்குமுரிய ரத்தினம், வஸ்திரம் தான்யம் ஆகியவற்றை அதற்குரிய திசைகளில் வைத்து மூல மந்திரங்களைச் சொல்லி ஹோமம் செய்தலை என்னவென்று கூறுவர்?

நவக்கிரஹ ஹோமம்

8528) கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும். அதற்கு இறைவனுடைய திருவருள் துணை புரியட்டும் என்று நல்வாக்கியம் சொல்வதை என்ன வென்பர்?

மகாசல்பம்

8529) கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக செலவிடப்படுகின்ற பணத்தினை சுத்தமான இடத்தில் வைத்து மகாலட்சுமியை நினைத்து செயப்படும் பூஜை என்ன?

தனபூஜை

8530) தனபூஜை பார்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன?

வீட்டில் தனம் சேரும்

8531) பிராணிகளில் சகல தெய்வங்களும் உறைவதாக கொள்ளப்படுகின்ற பிராணி எது?

கோமாதா

8532) கும்பாபிஷேக கிரியையின் போது பசுவை அலங்கரித்து செய்யப்படுகின்ற பூசை என்னவென்பர்?

கோபூஜை

8533) கோபூஜை செய்வதால் கிடைக்கும் பலன் என்ன?

தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும்.

8534) புனரமைக்கப்பட்ட கோயிலின் கதவை எப்போது, திறக்க வேண்டும்?

நல்ல முகூர்த்தவேளையில் திறக்க வேண்டும்.

8535) எந்த பூஜைகளை செய்து திறக்க வேண்டும்?

கணபதி பூஜை, நவக்கிரக பூஜை செய்த பிறகு மங்கல வாத்தியம் வேத கோஷங்கள் முழங்கிட பக்தர்கள் இறைவன் திருநாமத்தை சொல்லிக் கொண்டு இருக்க திறக்கப்பட வேண்டும்

புதன், 18 மே, 2011

ஊறுகொடவத்தை ஸ்ரீ பத்திரகாளி அம்மன்
ஆலய கும்பாபிஷேகம்

வெல்லம்பிட்டி, ஊறுகொடவத்தை, ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 2011.06.04ம் திகதி 5.30 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ’;து சாந்தி என்பனவும் 04ம் திகதி மாலை 5.00 மணிக்கு கடஸ்தாபனம், பிசன்னாபிஷேகம், பிரசன ப+ஜை, கலாகம்ஷணம், கும்பகஸ்தாபனம், போசலனம் ஸ’;தூபி ஸ்தாபனம், தீப, யந்’தி, பிம்பஸ்தாபனம், அடியந்தனம். கும்பபூஜை, ஹோமம், தீபாரதனை, பிரசாதம் வழங்கல் என்பனவும் நடைபெறும்.

ஏதிர்வரும் 5ம் திகதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும். அன்று காலை 8.00 மணி முதல் கும்ப பூஜை, விசேட திரவிய ஹோமம், திரிசதி ஹோமம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல் என்பனவும் அன்று மாலை 5 மணி முதல் பிம்பசுத்தி, ப+ர்வ சந்தம் கும்பப+ஜை, ஹோமம், பாய்சிம சந்தானம், தீபராதனை, பிரசாதம் வழங்கல் என்பனவும் நடைபெறும். 06ம் திகதி காலை 5.30 மணியளவில் கும்பப+ஜை, ஹோமம், விசேட தீபாராதனை நடத்தப்பட்டு காலை 6.35 மணி முதல் ஸ்தூபி அபிஷேகம், பிரதான கும்பம் வீதி வலம் வருதல், மஹா கும்பாபிஷேகம், தச சதர்சனம், எஜமானபிஷேகமும் திரவியபிஷேகம், மஹா அபிஷேகம், தீபராதனை, பிரசாதம் வழங்கல், மஹா ஆசிர்வாதம் என்பன நடைபெறும்.

கும்பாபிஷேக கிரியைகள் யாவும் சிவஸ்ரீ பா. ஷண்முகேஸ்வர குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. சிவஸ்ரீ சி. பாலசுப்பிரமணியக் குருக்கள். உதவி குருக்களாக கிரியைகளை செய்ய, முன்னேஸ்வர சிவஸ்ரீ இ. தேவசிகாமணிக் குருக்கள் சாதகாச்சசாரியம் செய்வார்.

திங்கள், 16 மே, 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

கும்பாபிஷேகம்

8517) மந்திரம் என்பதற்கு என்ன பொருள்?

சொல்பவனைக் காப்பது என்று பொருள்

8518) மந்திரங்களை ஒருங்கிணையைச் செய்து ஒன்றாக குவியச் செய்து இறைவனின் கருவறையில் அதன் சக்தியை நிலைபெறச் செய்வதற்கு என்ன பெயர்?

குடமுழக்கு

8519) வைணவத்தில் குடமுழக்கை என்னவென்று அழைப்பர்?

சம்ப்ரோட்சணம்

8520) கும்பாபிஷேக நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுவதிலிருந்து பூர்த்தியாகும் வரையில் எந்தவிதமான இடர்களும் வராமல் இருக்க செய்யப்படுவது என்ன பூஜை?

விக்னேஸ்வர பூஜை

8521) இடம் சுத்தமடைய வருணபகவானை வேண்டுவதை என்னவென்பர்?

புண்யாக வாசனம்

8522) புண்யாகம் என்றால் என்ன?

புனிதம்

8523) வாசனம் என்றால் என்ன?

மங்களகரமான வாக்கியங்கள்

8524) பசுவிடமிருந்து கிடைக்கும் ஐவகைப் பொருட்களையும் தருக?

சாணம், கோமியம், பால், தயிர், நெய்.

8525) பசுவிடமிருந்து கிடைக்கும் ஐவகைப் பொருட்களையும் தனித்தனியாக பூஜித்து மந்திரார்த்தமாக ஒன்றாய்க் கலந்து பஞ்சகவீயமாக்கி யக்ஞத்தில் கலந்துவிடும் பூஜையை என்ன பூஜை என்று கூறுவர்?

பஞ்சகவ்ய பூஜை

8526) பூதகணங்களால் இடையூறுகள், தாக்குதல்கள் ஏற்படாதவாறு கணங்களின் தலைவனாகிய மகா கணபதியை நினைத்து அவருக்குப் பிரியமான பொருளை அக்னியில் சமர்ப்பிக்கும் வேள்வியை என்னவென்பர்?

கணபதி ஹோமம்.

திங்கள், 9 மே, 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

(மேற்பிரிவு)


8499) சைவ சமயத்தின் பொதுப்பிராமண நூல் எது?

வேதம்

8500) சிறப்புப் பிராமண நூல் எது?

சிவாகமம்

8501) சிவாகம நூல்கள் கூறும் சாரமான உண் மையைப் பிழிந்தெடுத்துக் கூறும் நூல்கள் எவை?

சித்தாந்த சாத்திரங்கள்.

8502) சித்தாந்த சாத்திரங்களை வேறு எவ்வாறு அழைப்பர்?

மெய் கண்ட சாத்திரங்கள்

8503) சிவ தத்துவம் எத்தனை?

ஐந்து

8504) ஐந்து சிவ தத்துவங்களையும் தருக?

நாதம், விந்து, சாதாக்கியம்,

ஈசுவரம், சுத்தவித்தை.

8505) வித்தியாதத்துவம் எத்தனை?

ஏழு

8506) ஏழு வித்தியாதத்துவங்களையும் தருக?

காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை

8507) அந்தக் கரணம் எத்தனை?

நான்கு

8508) நான்கு அந்தக் கரணங்களையும் தருக.

மனம், புத்தி, சித்தம், அகங்காரம்

8509) தன்மாத்திரை (புலன்) எத்தனை?

ஐந்து

8510) தன் மாத்திரை ஐந்தையும் தருக.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.

8511) பொறி (ஞானேந்திரியம்) எத்தனை?

ஐந்து

8512) ஐந்து பொறிகளையும் தருக.

மெய், வாய், கண், மூக்கு, செவி

8513) கார்மேந்திரியங்கள் எத்தனை?

ஐந்து

8514) ஐந்து கார்மேந்திரியங்களையும் தருக.

நா, கை, கால், குதம், குறி

8515) பூதங்கள் எத்தனை?

ஐந்து

8516) ஐந்து பூதங்களையும் தருக.

நிலம், நீர், தீ, வளி, வான்.

திங்கள், 2 மே, 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்


(திருக்கோணேஸ்வரம்) (மத்திய பிரிவு)


8483) இலங்கையின் வடகிழக்குப் பாகத்திலே கடற்கரையில் உள்ள ஆலயம் எது?

திருகோணசுவரம்

8484) வட கைலையிலிருந்து பெயர்த்துத் தென்கடலில் இடப்பட்ட சிகரம் என போற்றப்படுவது எது?

திருகோணமலை

8485) இது வட கைலையின் சிகரமாய் பரத கண்டத்தின் தென் பாகத்தில் இருப்பதால் எவ்வாறு அழைக்கப்படும்?

தட்சிண கைலாசம்

8486) இந்த தட்சிணா கைலாசத்துக்குரிய வேறு பெயர்கள் என்ன?

திரிகோணமலை, சுவாமிமலை

8487) இதற்கு ‘திருகோணமலை’ என பெயர் வரக் காரணம் என்ன?

பழைய ஆலயமிருந்த மலைப்பிரதேசம் முக்கோண வடிவான விசாலமுடையதாலும் மூன்று மலைகள் முக்கோண வடிவிற் சூழ்ந்தமையாலும் ஆகும்.

8488) திருகோணமலை தலத்தின் மீது பதிகம் பாடியவர் யார்?

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்.

8489) இலங்காபுரியிலிருந்து வந்து நாள் தோறும் கோணேசுவரரை வழிபட்டு வந்தவர் யார்?

இராவணனுடைய தாய்

8490) இராவணன் தனது தாய்க்காக திருகோணமலையை என்ன செய்ய முயற்சித்தார்?

பெயர்த்து தலைநகருக்கு தூக்கிச் செல்ல முயற்சித்தார்.


8491) இராவணன் என்ன பாடி ஈசனருளைப் பெற்றார்?

சாமகானம்

8492) இராவணன் தன் தாய்க்கு அந்திமக் கடன் செய்த இடம் எது?

கன்னியா ஊற்று

8493) கோணேசர் கோயிலைக் கட்டியவர் யார்?

வரராம தேவன் என்ற மன்னன்

8494) இவர் எந்த நாட்டை ஆண்டவர்?

சோழ நாட்டை.

8495) வரராமதேவன் இறந்தபின் கோணேசர் ஆலய திருப்பணியை நிறைவு செய்தவன் யார்?

வரராம தேவனின் மகன் குளக்கோட்ட மகாராசன்

8496) வரராம தேவனின் மகனுக்கு குளக்கோட்டன் என பெயர் வரக் காரணம் என்ன?

கோணேசர் குளத்தையும் கோட்டத்தையும் கட்டுவித்ததால்

8497) இங்கு கோட்டம் என்று எதனை குறிப்பிடுகின்றனர்?

கோணேசர் கோயிலை

8498) குளக்கோட்டன் கட்டுவித்த குளம் எது?

கந்தளாய் குளம்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812