வியாழன், 23 ஜூலை, 2015

கொழும்பில் ஆடி வேல் விழா

கொ ழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் ஆடிவேல் விழா எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இவ் ஆடிவேல் விழா எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 7 மணிக்கு மகேஸ்வரன் பூஜையுடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தில் மூலவருக்கும் உற்சவர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்து குமாரசுவாமிக்கும் விஷேட பூஜைகள் நடத்தப்பட்டு உள்வீதி உலாவுடன் சுவாமி காலை 7.30 மணிக்கு சித்திரத் தேரில் எழுந்தருளி நகர் பவனி வந்து அருள் பாலிப் பார்.
முதலாம் குறுக்குத் தெரு தேவஸ்தானத்தி லிருந்து மூத்த மன்னடியார் கார்த்திக் குழுவினரின் கேரளா பாலக்காட்டு கொச்சி மேளத்துடன் தேர் நகர் பவனி ஆரம்பமாகி பிரதான வீதி, கோட்டை யோர்க் வீதி, ஜனாதிபதி மாவத்தையூடாக காலிமுகத்திடலை அடையும். காலி முகத்திடலில் பக்தர்களுக்கு திருவமுது ஜேராஜனம் வழங்கப்பட்டு பிற்பகல் 1.30 மணிக்கு காலி முகத்திடலில் இருந்து மீண்டும் தேர்பவனி ஆரம்பமாகும்.
இத்தேர் பவனி காலி வீதியூடாக கொள்ளுப்பிட்டி சந்தி, பம்பலப்பிட்டி சந்தி வழியாக சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தை வந்தடையும். அதன் பின் பக்தர்களுக்கு திருவமுது அளிக்கப்படும்.
பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இருந்து அருள்பலிக்கும் சுவாமிக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 5 மணிக்கு வழமையான பூஜையுடன் ஆடிவேல் அர்ச்சனை நடத்தப்படும். அன்று காலை 11.30 மணிக்கு வேல விழா விஷேட பூஜையுடன் கதிர்காமக் கந்தனின் திருவருட் பிரசாதத்துடன் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்.
அன்று மாலை 5 மணிக்கு வழமையான பூஜையைத் தொடர்ந்து வேல் விழா அர்ச்சனை நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்துவான் கலை மாமணி ராஜேஷ் வைத்தியா குழுவினரின் வீணை இசைக் கச்சேரி நடைபெறும். எதிர்வரும் 31 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு வழமையான பூஜையுடன் வெள்ளவத்தை மாணிக்க கங்கை சங்கமத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும் அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் சவாமியின் மயில்வாகனக் காட்சியும் ஆடிவேல் அச்சர்னையும் நடைபெறும். அன்று காலை 11.30 மணிக்கு விஷேட பூஜையுடன் கதிர்காமக் கந்தனின் விபூதிப் பிரசாதத் துடன் நண்பகல் 12 மணிக்கு அன்னதா னம் வழங்கப்படும் அதனைத் தொடர்ந்து வேல் அர்ச்சனை நடைபெறும்.
எதிர்வரும் 31 ஆம் திகதி மாலை 5 மணிக்கு பெளர்ணமி தினம் என்பதா ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு நவகலசாபிஷேகம் அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு தென் இந்திய திரைப்பட புகழ் பின்னணி பாடகர் குருமண்டலம் வீரமணிதாசனம் தென் இந்திய திரைப்பட புகழ் பின்னணி பாடகி மாலதி ஆகியோர் இணைந்து வழங்கும் பக்தி இன்னிசைக் கச்சேரி இடம்பெறும். யாரோ ராஜா இசைக்குழுவின் இந்த இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர்.
எதிர்வரும் 2015.08.01 ஆம் திகதி காலை 7 மணிக்குவழமையான பூஜையுடன் ஆடிவேல் அர்ச்சனை இடம்பெறும். அன்று முற்பகல் 11.30 மணிக்கு நடைபெறும்விசேட பூஜையுடன் 12 மணிக்கு திருவமுது போஜனம் வழங்கப்படும்.

சைவ முன்னேற்றச் சங்க கதிர்காம வேல்பூஜை

கொழும்பு 02, கியூ விதி, 101/ 70 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் 13வது ஆண்டாக நடத்தும் புனித கதிர்காம வேல்பூஜை திருவிழா கடந்த (17) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஆரம்பமாகியது.
இந்த பூஜை வழிபாடுகள் தினமும் மாலை 6 மணி முதல் 8 மணிவரை எதிர்வரும் 29 ஆம் திகதி தொடர்ந்து நடைபெறும். மாலை அணிந்து விரதமிருக்கும் அடியார்களின் அபிஷேகம் ஆராதனைகள் அருள்மிகு பஜனை, சிறப்புச் சொற்பொழிவு என்பன இங்கு இடம்பெறுகின்றன.
எதிர்வரும் 29ஆம் திகதி இரவு 9 மணிக்கு புனித கதிர்காம யாத்திரை ஆரம்பமாகும். எதிர்வரும் 30ஆம் திகதி திஸ்ஸமஹாராம வழிப்பிள்ளையாரை வழிபட்டு செல்வக்கதிகாமம் நேர்த்தி பாதயாத்திரை இடம்பெறும். அன்று பகல் செல்லத்துப் பிள்ளையார் சந்நிதானத்தில் பொங்கல் வைக்கப்படும்.
31ம் திகதி காலை இடம் பெறும் கதிரைமலை தரிசனத்தைத் தொடர்ந்து அன்று மாலை பெரிய கோயில் முன்னால் ஆனந்த மிக பஜனை இடம்பெறும். எதிர்வரும் 2015-08-01 ஆம் திகதி காலை மாணிக்ககங்கையில் வெற்றி வேலுடன் புனித தீர்த்தமாடல் இடம்பெறும். அன்று மாலை சங்கு மண்டபத்தில் இடும்பன் பூஜை இடம்பெறும் என பெருமாள் பூமிநாதன் குருசாமி தெரிவித்தார்.

சைவ வைணவ சிற்பங்கள்



கே. ஈஸ்வரலிங்கம்

11443) சிந்தனையின் வெளிப்பாட்டு வடிவங்களின் ஆறு நிலைகளைக் குறிப்பிடவும்.
சிந்தனை வடிவம்,
சொல் வடிவம்,
எழுத்து வடிவம்,
ஓவிய வடிவம்,
புடைசிற்ப வடிவம்,
சிற்ப வடிவம்.
11444) சைவ வைணவ சிற்பங்கள் வழி விளக்க முற்பட்ட பொதுவான கருத்து என்ன?
கடவுள் மனித உருவெடுத்து இவ்வுலகிற்கு வந்து தன்னையே பலியாகக் கொடுத்தார் என்னும் கருத்தை சாதாரண பொது மக்கள் விளங்கிக் கொள்வதற்காக சிற்பங்கள் வழி விளக்க முயன்றன.
11445) சைவத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய மூவரை இணைத்துக் காட்டும் உருவத்திற்கு என்ன பெயர்?
சோமாஸ்கந்தர்
11446) வைணவ நோக்கில் சிவன், விஷ்ணு, பிரம்மா இணைந்திருக்கும் உருவத்திற்கு என்ன பெயர்?
மும்மூர்த்தி
11447) கடவுள் ஒருவரே ஆனால் இரண்டு நிலைகளில் செயல்படுகின்றார் என்பதைக் காட்டும் உருவங்களின் பெயர்கள் என்னென்ன?
அர்த்தநாரீஸ்வரர்- ஹரிஹரா
11448) அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரர் ஆகிய இவை இரண்டும் எதை விளக்குகின்றன?
அர்த்தநாரீஸ்வரர். ஹரிஹரர் ஆகிய இரண்டு உருவங்களில் சிவனுக்கு இடப்பகுதியில் உள்ள இருவரும் (சக்தியும், விஷ்ணுவும்) பரிசுத்த ஆவியானவரின் பெண், ஆண் உருவகங்களே என்பதை விளக்குகின்றன.
11449) சிவனின் உடம்பின் இடப்பாகம் பெண் வடிவாக (சக்தி) விவரிக்கப்பட்டால் அது எவ்வாறு குறிக்கப்படுகிறது.
அர்த்த நாரீஸ்வரர்
11450) சிவனின் உடம்பின் இடப்பாகம் ஆண் வடிவாக (விஷ்ணு) விவரிக்கப்பட்டால் அது எவ்வாறு குறிக்கப்படுகிறது?
அரிஅரன் எனப்படும்
114451) சிவனுடைய உடம்பின் இடதுபாதி ஆண்வடிவமாகவும் மறுபாதி பெண் வடிவமாகவும் சித்தரிக்கப்படுவது எதை விளக்குகிறது?
அன்பே உருவான பிதாவாகிய கடவுளாம் சிவனின் உடம்பின் இடப்பாகம் பரிசுத்த ஆவியை இரண்டு நோக்கில் சித்தரிக்கும் உருவக நிலையைக் காட்டுகிறது.
அதாவது பிதாவாகிய கடவுள், பரிசுத்த ஆவியாகிய கடவுள் (பெண் நிலை) முதலியவை சைவ நோக்கில் அர்த்தநாரீஸ்வரராக விளக்கப்பட்டுள்ளது.
பிதாவாகிய கடவுள், பரிசுத்த ஆவியாகிய கடவுள் (ஆண் நிலை) ஆகியவை வைணவ நோக்கில் அரிஅரனாக விளக்கப்பட்டுள்ளது.
11452) மூன்று தலைகள் - ஒரே உடல் உள்ள சிவன் உருவம் மூலம் விளக்கப்படுகின்ற கருத்து என்ன?
சிவன், சக்தி. குமரக்கடவுள் - சிவன், விஷ்ணு, பிரமன் எனப் பல்வேறு முறைகளில் கடவுள் மூன்று வித்தியாசமான ஆள தத்துவமாகக் காணப்பட்ட போதிலும். அவர் மூவரல்லர்- மூன்று ஆள்தத்துவமுடைய ஒரே கடவுளே ஆவார். என்பதையே மேற்கண்டவை காட்டுகின்றன.

திங்கள், 6 ஜூலை, 2015

பஞ்ச கிருத்தியங்கள்

11404) பஞ்ச உற்சவம் எவை?
நித்ய உற்சவம், வார உற்சவம், பட்ச (மாதம் இருமுறை) உற்சவம், மாதாந்த உற்சவம், வருடாந்த உற்சவம்

11405) பஞ்ச பருவ உற்சவம் எவை?
அமாவாசை, பெளர்ணமி, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, மாதப் பிறப்பு.

11406) பஞ்ச சபைகள் எவை?
இரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை,

11407) பஞ்ச ஆரண்யம் எவை?
உஷத் காலம், கால சாந்தி, உச்சி காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

11408) பஞ்ச முகங்கள் (சிவன்) எவை?
தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம்

11409) பஞ்ச முகங்கள் (காயத்திரி) எவை?
பிரம்மன், விஷ்ணு, சதாசிவன். ருத்ரன். ஈஸ்வரன்

11410) பஞ்ச மாலைகள் எவை?
இண்டை, தொடை, தொங்கல், கண்ணி, தாமம்

11411) பஞ்சமா யக்ஞம் எவை?
பிரம்ம யக்ஞம். பிதுர் யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம், மானுஷ்ய யக்ஞம்
.
11412) பஞ்ச ரத்தினங்கள் எவை?
வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்

11413) பஞ்ச தந்திரங்கள் எவை?
மித்ரபேதம். சுகிர்லாபம். சந்திரவிக்ரஹம், லப்தகானி. அசம்ரேசிய காரித்வலம்.

11414) பஞ்ச வர்ணங்கள் எவை?
வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.

11415) பஞ்ச ஈஸ்வரர்கள் யார்?
பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன்

11416) பஞ்ச கன்னியர்கள் யார்?
அகலிகை, திரெளபதி, சீதை, மண்டோதரி, தாரை

11417) பஞ்ச பாண்டவர்கள் யார்?
தர்மன். அர்ச்சுனன். பீமன், சகாதேவன், நகுலன்

11418) பஞ்ச ஹோமங்கள் எவை?
கணபதி ஹோமம், சண்டி ஹோமம், நவக்ரஹ ஹோமம், மகா சுதர்சன ஹோமம், ருத்ர ஏகாதச ஹோமம்

11419) பஞ்ச சுத்திகள் எவை?
ஆத்ம சுத்தி, ஞ்தாபன சுத்தி, திரவிய சுத்தி, மந்த்ர சுத்தி, லிங்க சுத்தி.

11420) பஞ்ச கோசம் எவை?
அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்.

11421) பஞ்ச காவ்யம் (பசு) எவை?
பால், தயிர், நெய், கோமயம், சாணம்

11422) பஞ்ச ஜீவநதிகள் எவை?
ஜீலம், ரவி, சட்லெட்ஜ். பீஸ் (பீயாஸ்), இரசனாப்.

புதன், 1 ஜூலை, 2015

பஞ்ச கிருத்தியங்கள்

11393) பஞ்சலிங்கத் தலம் எவை?
அர்கேசுவரர் லிங்கத் தலம், பாதாளேஸ்வரர் லிங்கத் தலம், மரனேஸ்வரர் லிங்கத் தலம், மல்லிகார்ச்சுனர் லிங்கத் தலம், வைத்திய நாதேஸ்வரர் லிங்கத் தலம்.
11394) பஞ்சபட்ஷிகள் எவை?
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்
11395) பஞ்ச கங்கை எவை?
ரத்தின கங்கை, தேவ கங்கை, கையிலாய கங்கை, உத்திர கங்கை, பிரம்ம கங்கை
11396) பஞ்சாங்கம் எவை?
திதி, வாரம், நட்சத்திரம், யோகம். கரணம்
11397) பஞ்சர ரிஷிகள் எவை?
அகத்தியர். புலஸ்தியர். துர்வாசர், ததீசி, வசிஷ்டர்
11398) பஞ்ச குமாரர்கள் எவை?
விநாயகர், முருகர். வீரபத்திரர், பைரவர், சாஸ்தா
11399) பஞ்ச நந்திகள் எவை?
போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி, மகா நந்தி, தர்ம நந்தி
11400) பஞ்ச மூர்த்திகள் எவை?
விநாயகர், முருகன், சிவன், அம்பாள், விஷ்ணு
11401) பஞ்சாபிஷேகம் எவை?
வில்வ இலை கலந்த நீர், இரத்தினங்கள் போடப்பட்ட நீர், பச்சை கற்பூரம், குங்குமப்பூ கலந்த நீர், கிராம்பு, கொரேசனம் கலந்த நீர், விளாமிச்சை வேர், சந்தனாதி தைலம் ஆகிய வாசனை பொருட்கள் கலந்த கந்த தோதகம்.
11402) பஞ்ச பல்லவம் எவை?
அரசு, அத்தி, வில்வம், மா, நெல்லி
11403) பஞ்ச இலைகள் எவை?
வில்வம், நொச்சி, விளா. துளசி, கிளுகை

பனை

தொல்காப்பியத்தில் ஒரு பொருளை பெரிதாக சொல்வதற்கு 'பனையளவு' என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர். சிறிய பொருளை தினையளவு என்றும் பெரிய பொருளை பனையளவு என்றும் ஒப்பிட்டனர்.
திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் முப்பாலிலும் பனை வருகிறது. அறத்துப்பாலில் 104வது குறள், பொருட்பாலில் 433வது குறள், இன்பத்துபாலில் 1282வது குறள்களில் பனை என்று வருகிறது. 'கள் உண்ணாமை' என்றொரு அதிகாரமே எழுதியுள்ளார். திருக்குறள் எழுதப்பட்டதும் பனைஓலையில் தான். மூவேந்தர்களில் சேரமன்னனின் நாணயத்தில் பனைமரம் பொறிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் அரசு மரம் பனைமரம். தொல்காப்பியத்தில் பனையை பனம்புல் என்றும் தென்னையை தென்னம்புல் என்றும் கூறியுள்ளனர். வெளியே காழ்த்து (கெட்டியாகி) உள்ளே சோறு போல மென்மையாக இருந்தால் அது புல். அதனால் பனம்புல். வெளியே மென்மையாகவும், உள்ளே வைரம் போல உறுதியாகவும் இருந்தால் அது மரம். அதனால் வேம்புவை மரம் என்கிறோம்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812