வியாழன், 3 நவம்பர், 2016

வியாழன், 13 அக்டோபர், 2016

அறநெறி அறிவு நொடி

புதுமனைப் புகுவிழா போன்ற பல நேரங்களில், வீட்டின் முன் சாம்பல் பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிடும் பழக்கம் நமது கலாசாரத்தில் இருக்கிறது. பூசணிக்காயை ஏன் கட்டுகிறார்கள், அந்தக் காய்க்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு?
(14345) உணவுகளில் மிகவும் அதிக பிராண சக்திகொண்ட சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகளிலும் மஹா பிராண சக்தி கொண்டது சாம்பல் பூசணி. அந்தக் காய் மிக அதிகமான நேர்மறை பிராண சக்திகொண்டது. எனவேதான் அதை வீட்டு முன் கட்டித் தொங்கவிடுகிறோம். புதிய வீட்டில் குடியேறும்போது, சில தீய சக்திகள் அங்கே இருக்கலாம். எனவே, ஒரு பூசணிக் காயை நம் வீட்டின் முன் கட்டும்போதே, அந்த இடத்தில் உண்டாகும் நேர்மறை அதிர்வுகள் அந்த இடத்தில் உள்ள எதிர்மறைச் சக்திகளை அகற்றிவிடுகின்றன.
நாம் அதைச் சாப்பிடும்போது, அது நமக்கு மிகவும் நல்லது செய்கிறது. ஆனால், நம் கலாசாரத்தில் ஒரு வழக்கம் இருந்தது. நம் வீட்டிலேயே ஒரு பூசணிக்காயை வளர்த்தாலும் அதை அந்தணருக்குத் தானமாகக் கொடுத்துவிடும் பழக்கம் இருந்தது. நீங்கள் அதைத் தானமாகக் கொடுக்கும்போது உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். வாங்குபவருக்கோ இங்கேயே நல்ல உணவு கிடைத்துவிடுகிறது.
பூசணிக்காயைத் தொடர்ந்து சாப்பிடும்போது நம் மனம் மிகுந்த விழிப்புணர்வை அடைகிறது. புத்தி கூர்மையும் புத்துணர்வும் சமநிலையும் அதிகரிக்கிறது.
இவ்வளவு பிராண சக்தியுடன் இருப்பதால்தான் வீடு கட்டி புதிதாகக் குடியேறும்போது அனைத்து எதிர்மறைச் சக்திகளையும் களைவதற்கான ஒரு வாய்ப்பாக பூசணிக்காயைப் பயன்படுத்துகிறார்கள்!
பூஜைக்கு எது அவசியம்.?
(14346) மகா பாரதத்தில் ஒரு கதை வரும்.
அர்ஜுனனுக்கு தான்தான் பெரிய சிவ பக்தன் என்ற கர்வம்.
ஒருநாள் அவன் கண்ணனுடன் கைலாயத்தை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தபோது சிவ கணங்கள் மலை மலையாய் பூக்களை அள்ளிக் கொண்டு ஒரு இடத்தில கொட்டிக்கொண்டிருந்ததை கண்டான்.
அதைக் கண்ட அர்ஜுனன் யார் இவ்வளவு மலர்களை சிவபெருமானுக்கு அர்ச்சிக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்டான்.
யாரோ பூலோகத்தில் பீமனாம் அவன் செய்யும் பூஜையில்தான் இவ்வளவு மலர்கள் குவிகின்றன , இன்னும் நிறைய குவிந்துள்ளதை அப்புறப்படுத்தவேண்டும் , உங்களிடம் பேசக்கூட நேரமில்லை நாங்கள் வருகிறோம். என்று அவன் பதிலுக்குக் கூட காத்திராமல் சென்றுவிட்டனர். அவனுக்கு தெரிந்து பீமன் என்றும் சிவ பூஜை செய்து பார்த்ததே கிடையாது.
வயிறு முட்டத் தின்றுவிட்டு உறங்குவதைத்தான் பார்த்திருக்கிறான். அர்ஜுனன்.
உடனே அவன் கண்ணனை இது எப்படி சாத்தியம் என்று கேட்டான்.
அது மிக எளிது. பீமன் மனதினாலேயே இந்த அகிலத்தில் பூக்கும் அத்தனை மலர்களையும் சிவனுக்கு அர்ப்பணித்துவிடுகிறான்.
அவை முழுவதும் சிவனின் திருவடிகளில் போய் விழுந்துவிடுகின்றன என்றான்
அத்துடன் அர்ஜுனன் கர்வம் அகன்றது.
இறைவனை பூஜிக்கும்போது அர்ப்பணிப்புத்தான் முக்கியமே அன்றி.
கர்வம் கொள்ளுதல் கூடாது என்பதை உணர்ந்தான்..
சூலாயுதங்களில் எலுமிச்சை ஏன் குத்தப்படுகிறது?
(14347)குத்தப்படுவதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும்.
முக்கனிகளான மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ...
ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை.
மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.அதனால்தான் சூலாயுதத்தில் எலுமிச்சை குத்தப்படுகிறது .
திருமண அழைப்பிதழில் மஞ்சள் பூசுவது ஏன் ?
(14348)மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம். சுப நிகழ்ச்சிகள் துவங்கும் போது பிள்ளையார் பிடிப்பதிலிருந்தே மஞ்சளின் உபயோகம் ஆரம்பித்து விடுகிறது. மஞ்சள் பயன்பாடு இவைகளுக்காக மட்டுமில்லை. மஞ்சள் நல்ல கிருமி நாசினி. அது இருக்கும் இடத்தில் பூச்சி பொட்டுகள் அவ்வளவு சீக்கிரம் அண்டாது.
அதனால் தான் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு வைக்கப்படும் அழைப்பிதழ்களின் ஓரங்களில் மஞ்சள் பூசப்படும். திருமண பத்திரிக்கைகள் சம்பிரதாயங்களுக்காக உள்ளது மட்டுமல்ல. அதில் மனிதனின் நிகழ்வுகளும் மறைந்து கிடக்கிறது. ஐம்பது வருடத்திற்கு முன்பு நடந்த திருமணத்தை அன்று அச்சடித்த அழைப்பிதழ்களை தொட்டு பார்த்தவுடனே நேராக அனுபவிப்பது போன்ற சுகம் கிடைக்கும்.
கறுப்பு இருட்டு அண்டிய இடங்கள் விரைவில் அழிந்து விடும். ஒரு அறையை வெகுநாட்களாக பயன்படுத்தாமல் வைத்திருந்தோமேயானால் அங்கே இருள் இருபத்தி நான்கு மணி நேரமும் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கும். சிறிது சிறிதாக சுவர்கள் ஈரமாகி கரையான்கள் அரித்து அறை யாருக்கும் பயன்படாதவாறு ஆகிவிடும்.
மரணம் என்பது மறக்கபட வேண்டிய நிகழ்வு. இறந்து போனவனையே நினைத்து கொண்டிருந்தால் வாழ்பவன் பிணமாகிவிடுவான். உயிர்கள் அணைத்து வாழ்விலும் சாவு என்பது தவிர்க்க முடியாதது என்றால் அதை எப்போதுமே நினைத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் தான் மரணம் சம்மந்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் விரைவில் அழிந்து போகுமாறு உருவாக்குகிறோம். கருமாதி பத்திரிக்கையில் பூசப்படுகின்ற கறுப்பும் அந்த காகிதத்தை விரைவில் செல்லரிக்க வைத்துவிடும்.
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்.?
(14349)முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது உணவு உண்ணும் மேசை (dining table)....இது சரியா தவறா ?!! முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?
சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.
எனவே செரிமானம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு செரிமானமாகிவிடும்.
ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு செரிமானம் நன்றாக நடைபெறுகிறது.
எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.

புதன், 23 மார்ச், 2016

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்?

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

(14321) கோயிலின் நுழைவாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே ..ஏன் தெரியுமா?
ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும்.
பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும்.
பின்னர் வாயிற்காப்போர்களான துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும்
உள்ளே செல்லும் முன் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும்.
அந்த படியை தாண்டும் போது, நான் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டு உள்ளே செல்கின்றேன்.
இனி ஆண்டவனின் கருணையுடன் கூடிய ஆசிர்வாதமும் நேர்மறை (நல்ல) வினைகளுமே எனக்கு கிடைக்க வேண்டும் ஆண்டவா என்று கும்பிட்டவாறே அந்த படியை தாண்ட வேண்டும்.
அந்த படியின் மேல் நின்று கடந்தால் நாம் அவற்றை கூடவே உள்ளே எடுத்து செல்வதாக அர்த்தம்.
ஒரு கோயில் என்பது நாள் முழுவதும் கூறப்படும் மந்திரங்களாலும் நாதஸ்வரம், கெட்டி மேள சத்தங்களாலும் பேசப்படும் மங்களகரமான வார்த்தைகளாலும் முழுவதும் நேர்மறை எண்ணங்களாலேயே நிரம்பியிருக்கும்.
எனவேதான் கோயிலுக்கு சென்று அந்த நேர்மறை எண்ணங்களை பெற்று உயர்வுடன் வாழுங்கள் என்று வாழ்த்துகிறோம்.

செவ்வாய், 19 ஜனவரி, 2016

(14311) கோயில்களில் தரும் கயிறு எத்தனை நாள் கையில் இருக்கலாம்?

சில கோயில்களில் சிவப்பு, மஞ்சள் கயிறுகையில் கட்டப்படுகிறது. இதை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும்.
இந்தக் கயிறுகளை பெரும்பாலானவர்கள் ஒரு வருடம் வரையிலும் கட்டிக் கொள்கிறார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே. அதன்பின் இதைக் கழற்றி ஆற்றிலோ பிற நீர்நிலைகளிலோ போட்டு விட வேண்டும்.
(14312) ராகு வேளையில் துர்க்கை, காளியை வழிபடுவது ஏன்?
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. அதன்படி ராகுவிற்கு துர்க்கை அதிதேவதை. ராகுதோஷம், திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்க காளி, துர்க்கை வழிபாட்டை ராகுகாலத்தில் மேற்கொள்வது நல்லது.
(14313) சுவாமிக்கு சாத்திய வஸ்திரத்தை பக்தர்கள் அணியலாமா?
சுவாமிக்கு சாத்த வேண்டும் என பக்தர்கள் காணிக்கையாக வஸ்திரம் வாங்கிக் கொடுக்கிறார்கள். இதுவே கூடுதலாக சேர்ந்து விடுகிற பொழுது வீணடிக்காமல் இருக்க ஏலத்தில் விடுகிறார்கள். இதன் மூலம் மூன்று வழிகளில் பயன் கிடைக்கிறது.
பக்தர்களின் வஸ்திர காணிக்கை நிறைவேறுகிறது. ஏலத்தின் மூலம் கோயில் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. வஸ்திரங்கள் வீணாகாமல் மற்றவர்கள் உபயோகிக்கவும் முடிகிறது. சுவாமிக்குப் படைக்கப்படும் நிவேதன பிரசாதத்தை உண்பது போல, சுவாமிக்கென பக்தியோடு அணிவிக்கும் வஸ்திரங்களையும் உபயோகிக்கலாம்.
(14314) வியாழக்கிழமைகளில் மெளனவிரதம் இருப்பது ஏன்?
மெளனமாக இருந்து பழகினால் மனசாட்சியின் மெல்லிய குரலை நம்மால் கேட்க முடியும் என்பர். மோனம் (மெளனம்) என்பது ஞானவரம்பு என்று ஒளவையார் குறிப்பிடுகிறார். சிவாலயங்களில் கல்லால மரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி சீடர்களுடன் தெற்கு நோக்கி வீற்றிருப்பார். இவர் பேசும் மொழி மெளன மொழி. இவர் பேசுவதில்லை. சைகை மூலம் உலகத்துக்கு பெரும் தத்துவத்தைச் சொல்கிறார்.
(14315) தட்சிணாமூர்த்திக்குரிய வேறு பெயா்கள் என்ன?
ஊமைத்துரை, மெளனச்சாமி
வத்தளை- ஹேகித்தை ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி

தேவஸ்தான முத்தேர்    விழா

வத்தளை- ஹேகித்தை அருள்மிகு ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் இன்று தலைநகரை அடுத்ததாக அமைந்துள்ள சிறந்த கோவில்களில் முதலிடத்தை பெற்றுள்ளது வத்தளை பிரதேச வாழ் இந்து மக்களின் தாய் கோவிலாக சகல அம்சங்களை கொண்டு விளங்கி வருவது பெருமைக்குரியதாகும்.
1960
களில் தொழு நோயளர்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த அரச வைத்தியசாலை இப்பகுதியில் அமைந்திருக்கின்றது. இங்கு தங்கியிருந்து சிகிச்சைபெற்ற அனைத்து இன மக்களினதும் மத வழிபாடுகளுக்கென ஒரு பன்சலை, ஒரு கிறிஸ்தவ தேவஸ்தானம் சிறியதாக ஒரு கோவில் அமைய பெற்றிருந்தன.
இங்கு அமையபெற்றிருந்த கோவிலை விவேகானந்த சபையினரால் நிறுவப்பட்டு 1960 களில் ஒரு கும்பாபிஷேகமும் அதனை தொடர்ந்து 1980 வரையிலான காலப் பகுதியில் சிறியளவிலான இரண்டு கும்பாபிஷேகங்கள் நடந்ததாக வரலாறு உண்டு.
1983
களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் நிமித்தம் இந்து தொழு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில் ஆலயம் கவனிப்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
1980
களில் பிற்பகுதியில் கவனிப்பாரற்று இருந்த இவ்வாலயத்தை விவேகானந்த சபையினரின் அனுமதியுடன் பொறுப்பேற்ற வத்தளை இந்து நற்பணி மன்றத்தினர் ஆலயத்தை புனரமைத்து பல இடையூறுகளுக்கு முகம் கொடுத்த நிலையிலும் தொடர்ந்து இயங்கி வந்தனர். பல இளைஞர்களின் அர்ப்பணிப்பால் சிறிய ஆலயமாக புனர் நிர்மாணித்து அன்றாட நித்திய பூஜைகளை செய்து வந்தனர். இப்பிரதேசத்தில் வாழ்ந்த ஏனைய மத குழுக்களால் பல்வேறுபட்ட வழியில் இடையூறுகள் தொடர்ந்த நிலையில் மீண்டும் சில காலம் கோவிலை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது.
அவ்வப்போது ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் பிரதிபலனாக 1990 களில் ஆலய திருத்த வேலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு இயங்கத் தொடங்கியது. இப்பகுதி வாழ் இந்து மக்களின் பெரும் வரவேற்புடன் அத்தனை இடையூறுகளையும் களைந்து 1996 ஆம் ஆண்டு ஒரு பரிபூரண ஆலயமாக உருப்பெற்று முதலாவது மஹா கும்பாபிஷேகம் 1996 நவம்பர் 29 ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது. இது வத்தளை சரித்திரத்தில பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாக அமைந்தது.
மூலவராக வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமியை பிரதிஷ்டை செய்து அனைத்து பரிவார மூர்த்திகளை கொண்ட உயர்ந்த வாசல்கோபுரத்துடன் அமைந்த இவ்வாலயம் ஸ்ரீ சிவசுப்பிரமணி சுவாமி தேவஸ்தானமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு வத்தளையில் அமைந்த முதல் கோவிலாக சிறப்பு பெற்று விளங்கியது.
இப்பிரதேசத்தில் வாழும் இந்து மக்களின் தொகை அதிகரித்து கொழும்பை அண்டிய பிரதான கோவிலாக பெயர்பெறத் தொடங்கினர்.
1996
ல் முதல் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் சிறப்பாக தேர் பவனி இடம்பெற்றது. ஒரு தேரில் வலம் வந்த முருகன் இரண்டாவது தேராக விநாயகருடனும் அடுத்த வருடத்திலேயே அம்மனையும் சேர்த்து 1998 ஆண்டிலிருந்து முத்தோர் பவனியாக பரிணமித்து இன்று வத்தளையில் சிறப்பானதொரு தேர்த்திருவிழாவாக மட்டுமன்றி பிரதேச வாழ் அனைத்து இன மத மக்களையும் கவர்ந்த ஒன்றாக நடைபெற்று வந்துள்ளதை இங்கு கூறவேண்டும்.
சகல வழிகளில் முன்னேற்றமடைந்த ஆலயம் மீண்டும் 2013 ஆம் ஆண்டு தைத்தினத்தன்று தமது இரண்டாவது மகா கும்பாபிஷேகத்தை வெகு சிறப்பாக செய்து முடித்தது. ஆலயத்தை புனர் நிர்மாணம் செய்து பணியுடன் மூன்று மாடிகளை கொண்ட கட்டிடத்தை நிறுவி அறநெறி பாடசாலை வசதிகளை செய்து மூன்றாம் மாடியில் சுவாமி விவேகானந்தரின் பெயரில் தியான மண்டபம் ஒன்றையும் அமைத்ததுடன் 33 அடி உயரமான ஒரு முருகன் சிலையை ஆலய மூலஸ்தானத்திற்கு மேல் மூலையில் அமைத்தமையும் சிறப்பாக அமைந்தது. கொடி மரமும் ஸ்தாபிக்கப்பட்டது.
இவ்வாறு அமைய பெற்ற ஆலயம் கடந்த இரண்டு வருடங்கள் முத்தேர் பவனியுடன் வருஷாபிஷேக மகோற்சவ திருவிழாவாக சிறப்புடன் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விஷேட நிகழ்வாகும்.
எமது ஆலயத்தின் மூன்றாவது வருஷாபிஷேக மகோற்சவ தேர்த்திருவிழா 15/01/2016 அன்று வெகு சிறப்புடன் கொடியேற்றம் செய்யப்பட்டு 26.01.2016 வரை தொடர்ந்து நடைபெற சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
23.01.2016
அன்று முத்தேர் பவனி சிறப்பாக நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த மூன்று வருடங்களாக முத்தேர் வணியுடன் விஷேட பூஜைகளாக வேட்டைத் திருவிழா பால்குட பவனி தீர்த்தோற்சவத்தை தொடர்ந்து வெகு சிறப்பாக தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.
மூன்றாவது தடவையாக நடைபெறும் இத்தெப்பத்திருவிழா நிகழ்வுகள் இம்முறை 25.01.2016 அன்று களனி கங்கை நடுவில் மாலை 7 மணியளவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இவ்வனைத்து நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812