செவ்வாய், 29 ஜனவரி, 2013

டி. எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய திருப்பணிக்கு உதவ கோரல்

கொழும்பு டி எஸ் சேனநாயக்க கல்லூரியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் திருப்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் பங்குனிமாதம் நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும். இவ்வாலய திருப்பணிக்கு பொருள் உதவியோ நிதியுதவியோ வழங்க விருப்பும் பக்தர்கள் இருப்பின் அவற்றை பாடசாலைக்கு நேரில் வந்து வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
9745) திதியன்றும் அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடலாமா? கூடாது 9746) பிதுர்க்கடன் நாளன்று வாசலில் கோலமிடக் கூடாது என்பது ஏன்? முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலாகும். 9747) முன்னோரது ஆசி பெற உகந்த நாட்கள் எவை? அமாவாசை, வருஷ திதி, மகாளயபட்ச நாட்கள் 9748) சனீஸ்வரருக்குரிய வாகனம் எது? காகம் 9749) எமலோகத்தின் வாசலில் எது இருப்பதாக கூறப்படுகிறது? காகம் 9750) எமனின் தூதுவன் என்று எதனை சொல்வார்கள்? காகத்தை 9751) காகத்திற்கு சாதம் வைப்பது எதற்காக? எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பர் என்ற நம்பிக்கையில் ஆகும். 9752) நாம் வைத்த உணவை காகம் தீண்டா விட்டால் என்னவென்று நினைப்பார்கள்? இறந்துபோன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவார்கள். 9753) வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் எது? அமாவாசை 9754) காலையில் கோவில் திறந்த உடனேயே சென்று சாமி கும்பிடலாமா? கூடாது 9755) எப்போது கும்பிட வேண்டும்? சிவாச்சாரியார் முதலில் தீபம் ஏற்றி ஆராதனை காட்டிய பிறகே நாம் சென்று தரிசிக்க வேண்டும். 9756) திரை போடப்பட்ட நேரங்களிலும் சன்னதியில் தீபம் இல்லாத போதும் சாமி தரிசனம் செய்யலாமா? கூடாது 9757) கோவிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பி வந்ததும் உடனே கால்களை கழுவலாமா? கூடாது 9758) எப்போது காலை கழுவலாம்? சிறிது நேரம் கழித்த பின்னரே காலைக் கழுவ வேண்டும். 9759) மந்திரம் என்பது என்ன? மனதின் திரம் மந்திரம் எனப்படும். இவை அர்த்தமுள்ள அல்லது அர்த்தமற்ற வார்த்தைகளின் தொகுப்பாகும். இவை ஒவ்வொன்றும் ஒரு கடவுளிடமோ அல்லது தேவதையிடமோ தொடர்பு கொண்டது. மனிதனுக்கு உள்ள ஆறாம் அறிவைக் கொண்டு அடுத்த நிலையை அறிந்து உணர்வதில் - ஒரு சீரான சப்த அதிர்வுகளுக்கு பெரும் பங்கு உண்டு. இவை தேவதை வசிய சக்தியை உடையவை. 9760) மந்திரங்கள் எவ்வாறு பெறப்பட்டன? வேத சாத்திரங்களிடமிருந்தும், முனிவர்கள், மகான்கள் மற்றும் சாதுக்களிடமிருந்தும் பெறப்பட்டவை.

வியாழன், 24 ஜனவரி, 2013

(சங்கு)

கே. ஈஸ்வரலிங்கம் 9719) பிறப்பு, இறப்பு என அனைத்திலும் முக்கிய இடத்தை பெறுவது எது? சங்கு 9720) சங்கின் ஒலியில் ஏற்படும் நன்மை என்ன? தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. 9721) ஆலயங்களில் எப்போது சங்கு முழங்கும்? பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது 9722) பழங்காலங்களில் எப்போது சங்கு முழங்கும்? அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும் போருக்கு தயாராகும் போதும். 9723) இவ்வாறு ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக பயன்பட்டது எவ்வாறு? குழந்தைகளுக்கு பால் பருக்குவதற்கு பயன்படுத்தும் போது 9724) சங்கு எந்த தெய்வத்துக்கு ஒப்பானது? மகாலட்சுமிக்கு 9725) சங்கு எங்கெல்லாம் உள்ளதோ அங்கு யார் வசிப்பதாக ஐதீகம்? லட்சுமி 9726) ஆலயங்களில் பிரதான சங்காக இடம்பெறுவது எது? வலம்புரிச் சங்கு 9727) சங்கின் அமைப்பு எதை உணர்த்துகிறது? அந்தப் பிரணவத்தை 9728) கணபதியின் தும்பிக்கையைப் போல தோற்றம் பெற்றது எது? வலம்புரி 9729) பாற் கடலைக் கடைந்த போது கிடைத்த மங்கலப் பொருட்களில் ஒன்று எது? சங்கு 9730) இந்த சங்கு உதயமானதும் அதனை தன் கரத்தில் வைத்துக் கொண்டவர் யார்? மஹா விஷ்ணு 9731) மஹா விஷ்ணு இந்த சங்கை வைத்துக் கொண்டதும் என்னவானார்? சங்கு சக்ரதாரி ஆனார். 9732) சங்கு எவற்றை பிரதிபலிக்கும்? ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் 9733) வலம்புரிச் சங்கில் எந்தெந்த தெய்வங்கள் வாசம் செய்கின்றன? லட்சுமி, குபேரன் 9734) வலம்புரிச் சங்கை வைத்து பூஜை செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன? சுபீட்சம் பெருகும், வியாதிகள் நீங்கும் 9735) ஒரு வலம்புரி சங்கு எத்தனை இடம்புரி சங்குகளுக்கு சமம்? கோடி 9736) கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமான சங்கை வேறு எவ்வாறு அழைப்பர்? கோமடி சங்கு 9737) எந்த சங்கினால் அபிஷேகம் செய்வது விசேஷம்? கோமடி சங்கினால் 9738) அம்பிகையின் வடிவமாக கருதப்படுவது எது? பசு 9739) கோமடி சங்கில் அபிஷேகம் செய்வதை என்ன வென்று சொல்வார்கள்? அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர். 9740) சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருவது எந்த மாதத்தில்? கார்த்திகையில் 9741) கார்த்திகை மாதத்தில் எப்போது அக்னி பிழம்பாக காட்சி தருவார்? பெளர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில். 9742) கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் வருவது என்ன? சோமவாரம் 9743) அன்று சிவன் கோவில்களில் என்ன செய்யப்படும்? சங்காபிஷேகம் 9744) சங்காபிஷேகம் நடத்தப்படுவது ஏன்? இறைவனை குளிர்விக்க.

செவ்வாய், 15 ஜனவரி, 2013

கும்பாபிஷேகம்

கே. ஈஸ்வரலிங்கம் 9701) கும்பத்தை எத்தனை இழை நூலால் சுற்றி இருப்பார்கள்? மூன்று 9702) அந்த மூன்று இழை நூலும் எதை குறிக்கிறது? சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி தேவியை 9703) யாகசாலையின் முக்கியமான சடங்கு என்ன? புனிதமான நீரை சேகரித்து கும்பத்தில் நிறைத்து பூஜிப்பதே. 9704) கும்பத்தின் கீழ் என்ன பரப்பி போடப்பட்டிருக்கும்? தானியங்கள் 9705) அரிசியின் மேல் உள்ள கும்பத்தில் இருப்பது யார்? முருகன் 9706) ரிஷபதேவர் எந்த தானியத்தின் மேல் இருப்பார்? நெல்லில் 9707) அக்னிதேவர் எந்த தானியத்தின் மேல் இருப்பார்? உளுந்தில் 9708) கோதுமையில் இருப்பது யார்? சந்திரன் 9709) துவரையில் இருப்பது யார்? குபேரன் 9710) வருணன் இருப்பது எதன் மேல்? பயறு 9711) எள்ளில் இருப்பது யார்? தேவி 9712) அபிஷேகம் செய்வதற்கு முன் என்ன செய்வார்கள்? தர்ப்பையின் உதவியால் கும்பத்துக்கும் பகவானுடைய மூர்த்திக்கும் தொடர்பு செய்யச் செய்வது 9713) இந்த முக்கிய நிகழ்ச்சியை என்னவென்று கூறுவார்கள்? நாடி சந்தனம் 9714) கலசங்கள் எவற்றில் காணப்படும்? ராஜகோபுரம், விமானம் 9715) மகா கும்பாபிஷேகம் என்பது என்ன? ராஜகோபுரம், விமானம் இவற்றில் உள்ள கலசங்களில் அபிஷேகம் செய்வதே மகா கும்பாபிஷேகமாகும். 9716) கும்பாபிஷேகம் ஆனபின் எத்தனை நாட்களுக்கு சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படும்? நாற்பது நாட்களுக்கு 9717) இதனை என்னவென்று சொல்லுவார்கள்? மண்டலாபிஷேகம் 9718) யாகம் முடிந்த அன்று என்ன செய்வார்கள்? யாத்ரா தானம், கல சோத்தாபனம்.

திங்கள், 7 ஜனவரி, 2013

கும்பாபிஷேகம்

கே. ஈஸ்வரலிங்கம் 9686. அக்கினி கலசத்துக்கு வடக்கு பாகத்தில் என்ன கலசங்கள் வைக்க வேண்டும்? சிவ, சூரியன் 9687. கிழக்கு பாகத்தில் என்ன கலசம் வைக்க வேண்டும். வாஸ்துரபன் 9688. வாயு கலசத்திற்கு தெற்கில் என்ன கலசம் வைக்க வேண்டும்? மகாலக்ஷ்மி கலசம் 9689. வாயு கலசத்திற்கு கிழக்கு பாகத்தில் என்ன கலசம் வைக்க வேண்டும்? விக்ன விநாயக கலசம் 9690. மேற்கு பாகத்தில் என்ன கலசம் வைக்க வேண்டும்? ஸப்த குருமூர்த்தி 9691. மொத்தமாக எத்தனை பரிவாரங்கள் இருக்கும்? இருபத்தேழு 9692. மேற்கூறிய கலசங்களை விட வேறு கலசங்கள் இருக்கும்? யாகேஸ்வரர், அஸ்திரவர்த்தினி, என்ற இரு கலசங்களும் பிரதானமான மூர்த்தியின் கலசமும் இருக்கும். 9693. மிகவும் முக்கியமான கலசம் எது? பீட சக்தியின் கலசம் 9694. அஷ்ட மூர்த்திகளுக்கு எத்தனை கலசங்கள் வைக்கப்படும்? எட்டு 9695. அந்த எட்டு கலசங்களுக்கும் உரிய மூர்த்திகள் யார்? அனந்தன், சூக்ஷ்மன், சிவோத்தமன், ஏகநேத்ரன், ஏகருத்ரன், த்ரிமூர்த்தி, ஸ்ரீகண்டன சிகண்டி 9696. அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் என்றால் என்ன? சுவாமி விக்ரகம் வைத்த இடத்தில் அசையாமல் இருக்க பீடத்தின் அடியில் சாத்தும் பொருட்கள் ஆகும். 9697. பீடத்தின் அடியில் சாத்தப்படும் பொருள்கள் எவை? கல் (காவிப்பொடி) சுக்கான் பொடி, குங்கிலியம், செம்பஞ்சு, கொம்பரக்கு ஜாதிலிங்கம், வெள்ளை மெருகு எருமை வெண்ணெய் 9698. கும்பாபிஷேகத்தின் போது எவற்றுக்கெல்லாம் அபிஷேகம் செய்வார்கள்? கர்ப்பகிரஹத்துக்கு மேலே உள்ள தாமிர கலசத்திற்கும் வெளியே ராஜ கோபுரம் போன்ற கலசகங்களும் 9699. இந்த கலசங்களுக்குள் என்ன இருக்கும்? நெல், கேழ்வரகு போன்ற தானியம் நிரப்பிவைக்கப்பட்டு இருக்கும் 9700. கோபுரத்தின் மேல் இருக்கும் கலசத்தில் கேழ்வரகு, நெல் போன்ற தானியம் வைத்திருப்பதர்குரிய காரணம் என்ன? இடியை தாங்கும் சக்தி உடையது என்பதால் ஆகும்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812