புதன், 5 டிசம்பர், 2018

ஆன்மீகம் என்பது கோயிலுக்கு நன்கொடை செய்வது மட்டுமல்ல **** நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது



மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல் அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.

ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டு, பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும் அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வதும் மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல் அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.

அடுத்ததாக பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல் இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது. உன்னை தவிர வேறு யாரும் கிடையாது. அனைத்தும் நீயாக இருக்கிறாய். இந்த உடலை நீயே வழிநடத்தி செல் என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

நான் தினமும் நான்கு முறை குளிக்கிறேன். ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன். ஆனால் இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக் கொள்கின்றனர். ஆனால் நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் நாமே பொறுப்பு.

அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து படையலிட்டு மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து சதா சர்வ காலமும் அவனை நினைத்து எந்த செயல் செய்தாலும் அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.

கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து அதற்கான பலனை எதிர்பார்க்காமல் வாழ்ந்து வந்தால் மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உணவில் உள்ள தோஷங்கள்



நம்முடைய உயிரைத் தாங்குவது எது?
அன்னம்
உணவு சமைப்பதிலும் பரிமாறுவதிலும் உண்பதிலும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா?
ஆம்
உணவு சமைப்பதிலும் பரிமாறுவதிலும் உண்பதிலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்காக சான்றோர்கள் என்ன சொல்லி வைத்திருக்கின்றனர்?
‘உணவில் ஆசாரத்தை கடைப்பிடி’ என்று

ஆசாரம் என்பதற்கு என்ன பொருள்? சுத்தம்

நாம் உண்ணும் உணவில் எத்தனை வகையான தோஷங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது?
ஐந்து
அந்த ஐந்து வகையான தோஷங்களும் எவை?அர்த்த தோஷம், நிமித்த தோஷம், ஸ்தான தோஷம், குண தோஷம், சம்ஸ்கார தோஷம்

‘அர்த்த தோஷம்’ எதனால் வருகிறது?
நேர்மையற்ற வழியில் சம்பாதிக்கும் பணத்தினால் வாங்கப்படும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை உண்பதால் வருவதே ‘அர்த்த தோஷம்.’

இங்கே ‘அர்த்தம்’ என்பதற்கு என்ன பொருள்?
‘பொருள்’

நிமித்த தோஷம் எதனால் ஏற்படுகிறது?
நாம் சாப்பிடும் உணவைச் சமைக்கும் நபர் நல்ல மனதுடன் இருக்க வேண்டியது அவசியம். அவர் நேர்மையானவராகவும் அன்பானவராகவும் நல்ல சுபாவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் சமைக்கப்பட்ட உணவானது, நாய், எறும்பு, பல்லி, காகம் போன்றவற்றால் தீண்டப்படாமல் இருப்பதும் முக்கியம். உணவில் தூசி, தலை முடி, புழுக்கள் போன்றவையும் இருக்கக்கூடாது. மேற்கூறிய ஏதேனும் ஒரு குற்றம் இருந்தாலும் அந்த உணவை சாப்பிடுபவர்களுக்கு ‘நிமித்த தோஷம்’ ஏற்படும்.

அசுத்தமான உணவு என்ன செய்யும்?
மன அசுத்தத்தை விளைவிக்கும்.

தீயவன் சமைத்த உணவு என்ன செய்யும்?
தீமையான எண்ணங்களையே உண்டாக்கும்.

மனதில் நற்சிந்தனைகள் எழுவது யார் சமைத்த உணவால்?
நல்லவன் சமைத்த உணவால்

ஸ்தான தோஷம் எதனால் ஏற்படுகிறது?
எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருக்க வேண்டும். சமைக்கும் போது தேவையற்ற பிரச்சினைகள், அற்ப காரியங்களுக்காக விவாதங்கள் போன்றவை நடந்தால் அதனால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். அதே போல் கழிப்பறை, மருத்துவமனை, யுத்த களம், வழக்கு மன்றம் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல.

குண தோஷம் எதனால் ஏற்படுகிறது?
சமைக்கும் உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருட்களினால்

நாம் சமைக்கும் உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருட்கள் எப்படிபட்டதாக இருக்க வேண்டும்?
சாத்வீக குணமுடையதாக

சாத்வீகமான உணவுப் பொருட்கள் எவை?
பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை

புளிப்பு, உரைப்பு, உப்பு உள்ளிட்டவை எப்படிபட்ட பொருட்கள்?
ராஜஸிகமானவை.

பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை எப்படிபட்ட பொருட்கள்?
தாமஸிகமானவை.

சாத்வீக உணவு எதைத் தருகிறது? ஆன்மிக முன்னேற்றத்தை

ராஜஸிக உணவு என்ன செய்கிறது?
உலக மாயையில் சிக்கும் உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது.

தாமஸிக உணவு தீய எதைத் தருகிறது?
தீய எண்ணங்களை வளர்க்கிறது.

சம்ஸ்கார தோஷம் என்பது எதனை?
உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிக்கும் உணவு வகைகள்.

உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிக்கும் உணவு வகைகள் எவை?
தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருக்கக் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. இவைதான் உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை.

இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும் என்பதற்காக முன்னோர்கள் என்ன சொல்லி வைத்தார்கள்?
அன்னை அல்லது மனைவியால் இல்லத்தில் சமைத்து பரிமாறப்படும் உணவை ஏற்பது நல்லது என்று முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

முன்னோர்களின் சாபம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்



நமது கணக்குப்படி வருடத்துக்கு ஒரு முறை முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களை அவர்களை இறந்த திதியில் ஒரு புரோக்கிதரை வைத்து முன்னோர்களுக்கு பிண்டம்(உணவு) அளிக்க வேண்டும்.

நமது பெற்றோர்கள் உயிரேடு இரு
க்கும் போதே நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஏராளமாக இருந்தாலும், அவற்றில் சிறிதளவாவது அவர்கள் மனம் குளிரும்படி செய்திருக்கிறோமா என்று எண்ணிக் பார்க்க வேண்டும். அதில் நாம் ஏதாவது குறையோ அல்லது தவறோ செய்து அதற்குள் அவர்கள் அமராகி விட்டால் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய பித்ரு கடன்களை வருடா வருடம் நாம் தவறாமல் செய்ய வேண்டியது நமது தலையாக கடமையாகும்.

நமக்கு 365 நாள்கள் என்பது நமது பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். எனவே அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் நாம் உணவளிக்க வேண்டும்.

அதாவது நமது கணக்குப்படி வருடத்துக்கு ஒரு முறை அவர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களை அவர்களை இறந்த திதியில் ஒரு புரோக்கிதரை அழைத்துமுறைப்பிடி செய்து நம் முன்னோர்களுக்கு பிண்டம்(உணவு) அளிக்க வேண்டும்.

அப்படி செய்ய தவறிவிட்டால் நம் பித்ருக்களின் மனம் வருத்தம் அடையும். அந்த வருத்தமே நமக்கு பித்ரு தோஷத்தை ஏற்படுத்துகிறது. பித்ரு தோஷம் நமக்கு மட்டுமல்லாமல் நம் சந்ததியினருக்கு ஏற்பட்டு விடுகிறது. நமக்கு பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் மூலமாக பித்ரு தோஷம் இருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்யும் பரிகாரங்கள் இதோ...

அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால் அன்றைய தினம் சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும். மஹாளய பக்ஷத்ல் வரும் பரணி நட்சத்திரத்தில் திதி கொடுத்தால் மிகவும் விசேஷமாகும். ஏனொனில் இந்த பரணி மஹா பரணி எனப்படும். அட்சய திரிதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

மேற்கூறிய நாள்களில் சிராத்தம் செய்தாலோ, அல்லது காளஹஸ்தி சென்று அங்கு பித்ரு பூஜை செய்தாலோ பித்ரு தோஷம் நிவர்த்தி ஆகி சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் என்று தெரிவித்தார்.

சிவனுக்கு ஆகாத பாவங்கள்

சிவனுக்கு ஆகாத பாவங்கள்

நாம் செய்யும் பாவங்களுக்கான பலன்களை அவசியம் சிவபெருமான் நமக்கு அளிப்பார் என்று சிவப்புராணம் கூறுகிறது. அப்படி சிவனுக்குப் பிடிக்காத, அவர் சகித்துக் கொள்ளாத பாவங்கள் எவை என்று பார்க்கலாம்.
மும்மூர்த்திகளில் சிவ பெருமான் சம்ஹார மூர்த்தியாக அறியப்படுகிறார். சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். பொதுவாகவே ஈசன் தவறுகளை பொறுத்துக் கொள்ள மாட்டார் என்றும், அவருக்கு கோபம் வந்தால் பிரளயம் ஏற்படும் என்றும் காலங்காலமாக நமக்கு சொல்லப்பட்டு வரும் செய்தியாகும்.ஆனால் உண்மையில் ஈசன் அன்பே உருவானவர். தன்னை யார் சிரத்தையுடன் வணங்கினாலும் அவர்களுக்கு அவரின் பரிபூரண ஆசி கிடைக்கும்.உண்மையான பக்தியுடன் சிவனை தொழுதால் சகல பிரச்சனைகளிலிருந்தும் நம்மை விடுவிப்பார்.

நாம் செய்யும் பாவங்களுக்கான பலன்களை அவசியம் சிவபெருமான் நமக்கு அளிப்பார் என்று சிவப்புராணம் கூறுகிறது. அப்படி சிவனுக்குப் பிடிக்காத, அவர் சகித்துக் கொள்ளாத பாவங்கள் எவை தெரியுமா?

பிறன் மனை நோக்குவது ஆண்மையற்றது மட்டுமின்றி அது பாவச் செயலாகும். அடுத்தவரின் மனைவியை அல்லது கணவன் மீது ஆசைப்படுவது நமது இந்து மத சாஸ்திரப்படி பாவமாகும்.

அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்படுவதும் அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது கூட மகா பாவத்தில் அடங்கும்.

சுய நலத்திற்காக எளியவர்களின் வாழ்வை அழிப்பதும் அவர்களின் மீது வீண் பழியை சுமத்துவதும் சிவனின் மூன்றாவது கண் எனப்படும் நெற்றிக் கண்ணில் இருந்து தப்பிக்க முடியாத பாவம்.

ஒருவன் தன் வாழ்நாளில் தொடர்ந்து தீய வழியிலே செல்வது அல்லது சிறிதும் நன்மைகூட அடுத்தவர்களுக்கு செய்யாமலிருப்பது இரண்டுமே சிவனின் கோபத்திற்கு ஆளாகும் பாவங்கள்.

கர்ப்பிணிகளிடம் மிக மோசமான நடந்துகொள்வதும் அவர்களை தீய வார்த்தைகளால் திட்டுவதும், அதேபோல் மாதவிலக்கின் போது பெண்களை திட்டுவதும் பாவத்திற்கான வழிகளாகும்.

தனக்கு சம்பந்தம் இல்லாத இன்னொருவரைப் பற்றி அப்பட்டமான பொய் கூறி அவரை சீர்குலைய வைப்பதும் சிவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

வதந்திகளையும் தேவையில்லாத விஷயங்களையும் எல்லாரிடம் பரப்புவது அதனால் மற்றவர்களின் மனதை காயப்படுத்துவதும் மோசமான செய்கையாகும். இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

நமது இந்து சமயத்தில் சில உணவுகளை தவிர்க்க சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு நாம் தெய்வமாக மதிக்கும் கோமாதா என்று போற்றப்படும் பசு. அவற்றை உண்பது பாவச் செயல்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அனைத்தும் மன்னிக்கமுடியாத பாவமாக கருதப்படுகிறது.

மாதா, பிதா, குரு மற்றும் வயதானவர்களை மரியாதைக் குறைவாக நடத்துவது மற்றும் அவர்களை அடித்து துன்புறுத்துவது போன்றவை சிவனின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கும்.

மொத்தத்தில் நம்முடன் வாழும் நம் சக உயிருக்கு தீங்கு இழைக்காத ஒரு வாழ்வே நம்மை இறை தன்மைக்கு உயர்த்தக் கூடியது.

கலைஞர் ஈஸ்வரலிங்கத்திற்கு கௌரவம்



மேல் மாகாண கலைஞர்களை கௌரவிக்கும் விஷ்வாபிநந்தன 2018 விருதுக்காக கலைஞரும் இலங்கை தமிழ் கலைஞர் சங்கத்தின் பொருளாளரும் தமிழர் நற்பணி மன்றத்தின் ஸ்தாபகருமாகிய கே. ஈஸ்வரலிங்கம் தெரிவு செய்யப்பட்டார். இவருக்கான விருதை அதிதிகளாக கலந்து கொண்ட மேல் மாகாண கல்வி, கலாசார, கலை விவகார, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச, மேல்மாகாண சபை உறுப்பினர் கே. டீ. குருசாமி ஆகியோர் வழங்குவதை காணலாம். இந்நிகழ்வு மேல் மாகாண அழகியல் கலை கலாசார மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812