திங்கள், 28 செப்டம்பர், 2015

(14510) அகங்காரம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? செருக்கு

(14511) அக்கிரமம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? முறைகேடு

(14512) அசலம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? உறுப்பு

(14513) அசு+யை என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? பொறாமை

(14514) அதிபர் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? தலைவர்

(14515) அதிருப்தி என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? மனக்குறை

(14516) அதிருஷ்டம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொற்கள் எவை? ஆகூழ், தற்போது

(14517) அத்தியாவசியம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? இன்றியமையாதது

(14518) அநாவசியம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? வேண்டாதது

(14519) அநேகம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? பல

(14520) அந்தரங்கம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? மறைபொருள்

(14521) அபகரி என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொற்கள் எவை? பறி, கைப்பற்று

(14522)அபாயம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? இடர்
(14523) அபிப்ராயம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? கருத்து

(14524) அபிN'கம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? திருமுழுக்கு

(14525) அபு+ர்வம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? புதுமை

(14526) அமிசம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? கூறுபாடு

(14527) அயோக்கியன் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? நேர்மையற்றவன்

(14528) அர்த்தநாரி என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? உமைபாகன்

(14529) அர்த்த புஷ்டியுள்ள என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? பொருள் செறிந்த

(14530) அர்த்தம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? பொருள்

(14531) அர்த்த ஜhமம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? நள்ளிரவு

(14532) அர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? படையல்

(14533) அலங்காரம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? ஒப்பனை

(14534) அலட்சியம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? புறக்கணிப்பு

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

(14498) வீட்டில் விளக்கேற்றும் போது சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம் போட வேண்டுமா?
காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.
(14499) செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?
செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால் இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.
(14500) கண்ணை மூடிக்கொண்டு கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே உண்மையா?
கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும் போது கண்ணாரக் கண்டு வழிபடவேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில் கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.
(14501) சஞ்சீவி மலையைத் தூக்கிவரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே ஏன்?
சஞ்சீவி என்பது உயிர்காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.
(14502) மாலை நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வதன் காரணம் என்ன?
சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய இரு வேளைகளும் சந்தியா காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரு வேளைகளிலும் தெய்வ வழிபாட்டை தவிர மேற்படி விஷயங்களை செய்யக்கூடாது. மகாலட்சுமி நம் வீட்டிற்கு வரும் வேளையில் விளக்கேற்றி வரவேற்க வேண்டுமே தவிர மாற்றத்தை செய்யக்கூடாது.
(14503) திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது?
சாம்பிராணி புகைபோட்டும், தேங்காயில் சூடம் கொளுத்தி வைத்தும், மிளகாய் வத்தல், காலடி மண்ணைச் சுற்றி நெருப்பில் போட்டும் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து திருஷ்டி கழிக்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஏற்ற நாட்கள்.
(14504) கோயில் நவக்ரஹ வழிபாட்டை கடைசியாகத்தான் செய்ய வேண்டுமா?
முதலில் பிரதான மூலவரை தரிசித்து வலம் வரவேண்டும். அடுத்து அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும். மூன்றாவது நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும்.

திங்கள், 14 செப்டம்பர், 2015

14496) வீடுகளிலும் கடைகளிலும் அர்ஜுனனுக்காக கிருஷ்ண பகவான் தேரோட்டும் படத்தை வைக்கக்கூடாது என சிலர் கூறுகிறார்களே சரியா?
மனிதப் பிறவியே இறைவனோடு இரண்டற கலக்கவே ஏற்பட்டதாகும். அந்த முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணர் நம்முடைய உள்ளத்தில் உறைகிறார்.
பாரதப்போர் துவங்கும்போது உறவினர்களை அழிக்கத் தயங்கிய அர்ஜுனனுக்கு அரிய பெரிய வேதாந்த கருத்துகளை ஸ்ரீபகவத் கீதை என்று வெளிப்படுத்துகிறார்.
இந்தப் படத்தை மாட்டினால் துறவறம் கிடைத்து விடுமோ என்று பயப்பட வேண்டாம். துறவும், ஞானமும் நம் கைகளில் இல்லை.
இந்தப் படம் வாழ்க்கை, ஆன்மீகம் என்று சகல விஷயங்களைப் பற்றியும் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் பேசுவதாக உள்ளது. ஆகையால், இந்தப் படத்தை எங்கு வேண்டுமானாலும் மாட்டலாம். இந்தப் படத்தை ஒரு ஜென்மம் முழுவதும் பார்த்தாலே அது தியானமாகி ஞான பரியந்தம் வரை கொண்டுபோய் சேர்க்கும்.

14497) நெற்றியில் திருநீறு அணிவது ஏன்?
நெற்றியில் திருநீறு தரித்துக் கொள்வது உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது. நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம்.
இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. பிறக்கும்போதும் மண்ணிலே பிறந்தோம். சாகும்போது மண்ணிலே தான் சாகப் போகிறோம்.
மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத் தான் போகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான். இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம்.
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும்.
இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

சுவாமி முருகேசு மஹரிஷியின் சமாதி தின நிகழ்வு

காயத்திரி சித்தர் சுவாமி முரு கேசு மஹரிஷி அவர் களின் 8 ஆவது சமாதி தின விசேட பிரார் த்தனை நிகழ்வுகள் அவரது சீடர் ஜோதிஷ ஆச்சாரிய குருதாசமணி சுவாமி சங்கரானந்தா மஹ ராஜ்ஜி தலைமையில் எதிர்வரும் 24ம் திகதி வியாழன் அன்று காலை 10.00 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ் வதி மண்டபத்தில் நடத்தப்படுவதற்கு குருவருளும் திருவரு
ளும் கூடியுள்ளது.
சுவாமி முருகேசு மஹரிஷியின் அருளாசியை வேண்டி விசேட யாகபூசையும் பஜனை வழிபாடுகளும் சுவாமி சங்கரானந்தா மஹராஜ்ஜியின் அருளுரையும் பேராசிரியர் டாக்டர் கருணாநிதியின் விசேட சொற்பொழிவும் இடம்பெறவுள்ளன. அதனையடுத்து மஹேஸ்வர பூசை என்று அழைக்கப்படும் அன்னதானமும் இடம்பெறும்.
அனைவரும் வருகை தந்து மஹரிஷிகளினதும் காயத்திரி அன்னையினதும் அருளாசிகளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர். காயத்திரி சித்தர் சுவாமி முருகேசு மஹரிஷி ஆத்மயோக ஞான சபாவினர்.
(14498) வீட்டில் விளக்கேற்றும் போது சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம் போட வேண்டுமா?
காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.

(14499) செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?
செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால் இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.

(14500) கண்ணை மூடிக்கொண்டு கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே உண்மையா?
கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும் போது கண்ணாரக் கண்டு வழிபடவேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில் கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.

(14501) சஞ்சீவி மலையைத் தூக்கிவரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே ஏன்?
சஞ்சீவி என்பது உயிர்காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.

(14502) மாலை நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வதன் காரணம் என்ன?
சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய இரு வேளைகளும் சந்தியா காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரு வேளைகளிலும் தெய்வ வழிபாட்டை தவிர மேற்படி விஷயங்களை செய்யக்கூடாது. மகாலட்சுமி நம் வீட்டிற்கு வரும் வேளையில் விளக்கேற்றி வரவேற்க வேண்டுமே தவிர மாற்றத்தை செய்யக்கூடாது.

(14503) திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது?
சாம்பிராணி புகைபோட்டும், தேங்காயில் சூடம் கொளுத்தி வைத்தும், மிளகாய் வத்தல், காலடி மண்ணைச் சுற்றி நெருப்பில் போட்டும் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து திருஷ்டி கழிக்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஏற்ற நாட்கள்.

(14504) கோயில் நவக்ரஹ வழிபாட்டை கடைசியாகத்தான் செய்ய வேண்டுமா?
முதலில் பிரதான மூலவரை தரிசித்து வலம் வரவேண்டும். அடுத்து அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும். மூன்றாவது நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812