செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011


கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர்/ ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8643) இறைவனுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

நீடிய வாழ்வு

8644) இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

ஆயுள் விருத்தி

8645) இறைவனுக்கு மாம்பழ அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

சந்தான பாக்யம்

8646) இறைவனுக்கு சந்தன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

ஐஸ்வர்யம்/ இலட்சுமி கடாக்ஷம்

8647) இறைவனுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

வாழ்வில் ஒளி/ நன்மை ஏற்படும்.

8648) இறைவனுக்கு வெண்தாமரை பூவால் அர்ச்சனை செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

மனசஞ்சலம் தீரும், கல்வி கேள்வி பெருகும்.

8649) இறைவனுக்கு அரலிப் பூவால் அர்ச்சனை செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

திருமணம் நடைபெறும்

8650) இறைவனுக்கு மருக்கொழுந்து பூவால் அர்ச்சனை செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

சுகபோகம் தரும், கல்வி, செல்வம் பெருகும்

8651) விபூதி எத்தனை வகைப்படும்?

விபூதி 4 வகைப்படும்

8652) அவை என்னென்ன?

கற்பம், அநுகற்பம், உபகற்பம், அகற்பம்

தெமட்டகொடை மாவில ஒழுங்கை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்


இந்து சமுத்திரத்தின் முத்தென விளங்குவதும் சகல வளங்களையும் தன்னகத்தே கொண்டதுமான ஸ்ரீலங்காபுரியின் தலைநகரமாக விளங்கும் கொழும்பு மாநகரின் தெமட்டகொடை பேஸ் லைன் வீதியில் மஹாவெல ஒழுங்கையில் 150 ம் இலக்கத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் சுமார் 20 வருடங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது.

இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஆரம்பத்தில் ஒரு பெரிய மரநிழலின் அடியில் கல்லை நாட்டி வணங்கி வந்தனர். காலப்போக்கில் அவ்விடம் பலகைக் கொட்டகையாக மாறியது.

காலங்கள் செல்லச் செல்ல 1990 இல் இக் கொட்டகை மடாலயமாக மாற்றி அமைக்கப்பட்டது. அங்கு விநாயகர், சிவலிங்கம், அம்பாள், வைரவர் ஆகிய தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நித்திய, நைமித்திய பூஜைகளும் விரதங்களும் விழாக்களும் சீராக நடந்து வந்தன.

இவ்வாலயத்தில் 2000 ம் ஆண்டு “வாணி வித்தியா” என்னும் பெயரில் அறநெறி பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அறநெறி பாடசாலையில் தற்போது 75 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். ஒரே ஒரு பொறுப்பாசிரியருடனும் ஒரே ஒரு ஆசிரியருடனும் இப்பாடசாலை சிறப்பாக இயங்குகிறது.

2005 ஆம் ஆண்டு இப்பகுதியின் சுற்றுப் புறச் சூழல் அபிவிருத்தி செய்யப்பட்டது. குறிப்பாக வீதி அபிவிருத்தி, மேம்பாலம் அமைப்பு, மாடி வீடமைப்பு திட்டங்கள் ஆகியன ஆரம்பிக்கப்பட்டன. இதனால், சேரிப்புற நிலங்கள் சதுப்பு நிலங்களாக மாறின. குடியேற்றங்கள் அதிகரிக்கப்பட்டன. இதனால் ஆலய அமைவிடம் பள்ளத்தாக்கானது.

கூரைகள், கட்டிட மதில்கள் வழியாக மழைநீர் ஒழுகும் அவல நிலை காணப்பட்டது. இந்த அவல நிலையைக் கண்டு இப்பகுதியில் வாழ்ந்த மக்களும் ஆலய பரிபாலன சபையினரும் ஒன்றுகூடி இவ்விடயத்தி இவ் ஆகம நியதிகளுக்கு ஏற்ப இராஜகோபுரத்துடன் விஸ்தீரமான ஆலயம் அமைக்க முடிவு செய்தனர். சுமார் 75 இலட்சம் ரூபா செலவில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

2006-2-3 ம் திகதி பாலஸ்தாபன கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலயம் அமைக்கப்பட்டிருந்த இடம் முழுமையாக உடைக்கப்பட்டு இடத்தை விஸ்திரமாக்கப்பட்ட 2006-2-11 ம் திகதி தைப்பூசத் திருநாளில் அத்திபாரக் கல் நடப்பட்டது. ஆஞ்சநேயர் ஆலய ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமி பிரதான கல்லை வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மூலஸ்தானம், அர்த்தமண்டபம், கட்டுமானப்பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. அதனோடு சுற்று புற சுவரும் கட்டப்பட்டதுடன் பொருளாதார பற்றாக்குறையால் வேலைகள் காலதாமதமாகின. 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் திகதி வாயிற்கோபுரம் அமைக்க அடிக்கல் நடப்பட்டது.

இவ் விழாவில் கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷணன் பிரதான கல்லை நாட்டி வைத்தார்.

இவ்விழாவில் கலந்து சிறப்பித்த அன்பர் ஒருவர் முழு கோவிலுக்கும் மேல் கொங்கிரீட் சிலப் செய்வதற்கு நிதி உதவி வழங்கினார்.

கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், முன்னாள் பிரதியமைச்சர் எம். எஸ். செல்லச்சாமி, மேல் மாகாண சபை உறுப்பினரும் கொழும்பு கிழக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் தயாகாந்த பெரேரா ஆகியோரின் சிபாரிசுகளின்படி இப்பாரிய திருப்பணியை சகோதர மொழி சகோதரர்கள், ஆலய அறங்காவலர்கள், நலன்விரும்புகள் ஆகியோரின் உண்டியல், டிக்கட் விற்பனை, நிதி வசூல் மூலமும் பொருள் உதவி மூலமும் திருப்பணி வேலைகள் நடைபெற்றுவந்தன.

இவ்வாலய பரிபாலன சபையினருக்கு நல் வழிகாட்டியாக இருந்த கிராண்ட்பாஸ், ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சிவாசாரியார் சிவஸ்ரீ பாலரவி சங்கரின் (ஜனாதிபதியின் இந்து மத அமைப்பாளர்) நல்லாசியுடன் நடைபெற்று வந்தன. இராஜகோபுரம் இல்லாமல் சிறு சிறு வேலைகள் பொருளாதார பிரச்சினையால் செய்ய முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 5 வருட இடை வெளியில் சுற்றுப்புற சூழல் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டது. இங்கு புதிய மாடி மனை வீடுகள், எஸ்கோன் ரெசிடன்ஸ், கனிய வள பெற்றோலிய அமைச்சு, உயரமான கட்டிடங்கள், மேம்பாலம் என பல கட்டிடங்கள் தோற்றம் பெற்றன. மஹாவெல ஒழுங்கையில் சுமார் 200 அடி தூரத்தில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் பரப்பளவு 1300 சதுர அடியாகும்.

இவ்வாலய திருப்பணி வேலைகளை தமிழ் நாட்டைச் சேர்ந்த சிற்பாசிரியரான விஸ்வஸ்ரீ செ. ச. சந்திரகுமார் தலைமையிலான குழுவினர் திருப்பணி வேலைகளை செய்தனர். இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக ஸ்ரீ சித்தி விநாயகர் மூலஸ்தானத்தை அலங்கரித்துக் கொண்டு இருந்த அம்பாள், விஷ்ணு, துர்க்கை, நவக்கிரகம், வைரவர், காளியம்மன் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கும் இங்கு திருக்கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாலயத்தின் கும்பாபிஷேக கிரியைகள் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகிறது. 25 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும். 26 ஆம் திகதி காலை 7.15 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் இடம்பெறும். கும்பாபிஷேக கிரியைகள் யாவும் பிரதிஷ்டா பிரதம குரு சிவஸ்ரீ பா. ஷண்முககேஸ்வர குருக்கள் தலைமையில் நடைபெறும்.

கே. ஈஸ்வரலிங்கம்

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர் ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

தேங்காய்


8634) ஆலயத்தினுள் அர்ச்சனை செய்தபின் உடைக்கும் தேங்காய்க்கு சகுனம் பார்க்கலாமா?

பார்க்க வேண்டாம்

8635) பூஜைக்கு கொடுக்கும் தேங்காய், பழம் மாறி வந்தால் அபசகுனமாக எடுக்கலாமா?

அபசகுனமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

8636) சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது அதில் சகுனம் பார்க்கலாமா?

வேண்டியதில்லை

8637) சகுனத்திற்காக தேங்காய் உடைக்கும் பொழுது தேங்காய் சரிபாதியாக இரண்டாக உடைந்தால் விளையும் பலன் என்ன?

இதுவரை குடும்பத்தில் இருந்த மனக் கசப்புகள் நீங்கி குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

8638) தேங்காயின் மேல் பகுதி (கண் உள்ள பாகம்) பெரியதாகவும் அடிப்பகுதி சிறியதாகவும் உடைந்தால் விளையும் பலன் என்ன?

அதிஷ்டம் செல்வம் பெருகும்.

8639) தேங்காயின் கண் பாகம் சிறியதாகவும் கீழ்ப் பகுதி பெரியதாகவும் உடைந்தால் விளையும் பலன் என்ன?

பிரச்சினைக்குரிய விஷயங்கள் தீர்ந்து குடும்ப அமைதி பெருகும்

8640) தேங்காய் உடைக்கும் பொழுது அதில் ஒரு சிறு பகுதி தானாகவே விழுந்தால்

விளையும் பலன் என்ன?

அதிஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்

8641) தேங்காய் நீளவாக்கில் இரண்டாக உடைந்தால் விளையும் பலன் என்ன?

பிரச்சினைகள் உருவாகும்.

8642) தேங்காய் அழுகிச் இருந்தால் என்ன?

நினைத்த காரியங்கள் தள்ளிப் போகும்

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

ஆடிவேல் ரதம் இன்று புறக்கோட்டையை வலம் வரும்



நகரம் என்பது வான் உயர்ந்த கட்டிடங்களையும் வண்ணமயமான வர்த்தக நிலையங்களையும் அனைத்து வசதிகளையும், வளங்களையும் கொண்ட ஒரு சுறுசுறுப்பான இடமாகும். எமக்குத் தேவையான அனைத்தையும் தேவையான நேரங்களில் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் நகர வாழ்க்கை என்பது நரக வாழ்க்கையாகத் தான் இருக்கும். இது ஓர் இயந்திரமயமான வாழ்க்கையாகத் தான் இருக்கும்.

இந்த இறுக்கமான வாழ்வுக்குள்ளும் இதயத்துக்கு இதமூட்டக் கூடியவையாக விளங்குபவை ஆலய திருவிழாக்கள். அதுவும் கடந்த 137 ஆண்டுகளாக ஆடி மாதத்தில் கொழும்பு நகரை மண்வாசனை கமழும் அழகிய கிராமமாக மாற்றி வந்தது ஆடிவேல் விழா. கடந்த 30ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஆடி மாதத்தில் கொழும்பில் ஆடிவேல் விழா என்றால் ஒரே ஊர்த்திருவிழா வாகத்தான் இருக்கும்.

கொழும்பு முதலாம் குறுக்குத்தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து அல்லது செட்டியார் தெரு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்திலிருந்து பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்திற்கு ஸ்ரீ முருகப் பெருமானின் வேல் திருவிழாவின் தேர்த்திருவிழா சென்றடைந்து அவ் வாலயத்தில் இருக்கும் வரை ஆடிவேல் விழா பூசைகள் நடைபெறும்.

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்திலிருந்து ஆடிவேலின் தேர்த்திருவிழா இரவில் புறப்பட்டு ஆலயத்திற்கு திரும்பும் தினத்தன்று கொழும்பில் ஆங்காங்கே வாழ்கின்ற இந்துக்கள் மாட்டு வண்டிகளில் குடும்பம் குடும்பமாக ஏறி ஜல் ஜல் என்று சவாரியாக பம்பலப்பிட்டி ஆலயத்திற்கு வந்து ஆடி வேல் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டு மீண்டும் மாட்டு வண்டிகளில் ஏறி கொழும்பு காலிமுகத்திடலுக்கு (மிallலீ பிaணீலீ) சவாரியாக வந்து சேருவார்கள். அன்று காலி முகத்திடல் முழுவதும் மாட்டு வண்டிகளால் மட்டுமல்ல பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி இருக்கும். காலிமுகத்திடலே ஒரு கிராமமாக உருமாறி இருக்கும்.

வேல் விழாவின் ரதபவனி மறுநாள் விடியற் காலை காலி முகத்திடலை வந்தடையும். அந்த ரத பவனி வரும் வரை மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் வந்தவர்கள் முருகப் பெருமானை கண்டு திருவருளைப் பெற காத்திருப்பார்கள். அந்த ரதபவனியைக் கண்டபின் தான் வீடுகளுக்கு திரும்புவார்கள்.

அதன் பின் திருமுருகப் பெருமானின் ரதம் கொழும்பு புறக்கோட்டை எங்கும் பவனி வந்து புறப்பட்ட ஆலயத்தை சென்றடையும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை போன்று கொழும்பில் மீண்டும் ஆடிவேல் விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அன்று இருந்த மாட்டு வண்டிகளை தவிர அனைத்தும் வழமை போல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று நேற்று மாலை ஆடிவேல் விழா ரதம் பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12 மணியளவில் காலிமுகத்திடலை வந்தடைந்தது. அங்கிருந்து இன்று அதிகாலை புறப்பட்ட ரத பவனி இன்று காலை முழுவதும் புறக்கோட்டை எங்கும் வலம் வந்து ஆலயத்தை அடையும்.

இன்று காலை 6 மணிக்கு காலிமுகத்திடலிலிருந்து ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அலங்கார புருஷராக சித்திரத் தேரில் ஆரோகணித்து ஜனாதிபதி மாவத்தை, கோட்டை, கான் மாணிக்கூட்டு கோபுர சுறுற்றுவட்டம், மெயின் வீதி, சைனா வீதி, ரெக்ளமேஷன் வீதி, காளிகோவில் சுற்றுவட்டம், செட்டியார் தெரு, ஐந்து லாம்பு சந்தி, மெயின் வீதி, நான்காம் குறுக்குத் தெரு, குமார வீதி, மூன்றாம் குறுக்குத் தெரு, நான்காம் குறுக்குத் தெரு, கெயிசர் வீதி, இரண்டாம் குறுக்குத் தெரு, ஒல்கொட் மாவத்தை, முதலாம் குறுக்குத் தெரு, பேங்ஷால் வீதி வழியாக தேவஸ்தானத்தை வந்தடைவார்.


கே. ஈஸ்வரலிங்கம்



ஆடிவேல் விழாவில் இன்று தீர்த்தோற்சவம் எல். ஆர். ஈஸ்வரியின் இன்னிசை கச்சேரி




ஆறுமுகனின் பன்னிரு திருக்கரங்களில் எத்தனையோ ஆயுதங்கள் இருந்தாலும் தனிச் சிறப்பு மிக்கது வேல் மட்டுமே. இறைவனது ஆயுதங்களில் தனியே வைத்து வழிபடும் முறை வேலுக்கு மட்டும் தான் உள்ளது. பழங்காலத்தில் இருந்தே வேல் வழிபாடு நடந்து வருவது சிலப்பதிகாரத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. வேல் ஞானத்தின் அம்சம். அந்த வேலைத் தாங்கி இருக்கின்ற முருகப்பெருமானை ஞானவேல் முருகன் என போற்றுகின்றனர். வேலை வழிபட்டால் ஞானம் உண்டாகும். குமரகுருபர சுவாமிகள் நீண்ட காலம் வாய் பேச முடியாத நிலையில் இருந்தார். திருச்செந்தூர் முருகனை மனதார வேண்டி அவனே கதி என இருந்தார். ஒருநாள் தன் பக்தனின் வேண்டுதலை ஏற்று குமர குருபரனின் முன் தோன்றி குருபரா உனக்கு பேசுகின்ற திறனோடு என்னைப் பாடுகின்ற புலமையினையும் வழங்கியுள்ளோம் எனக் கூறி அவரது நாவில் ஞானவேல் கொண்டு எழுதினார். முருகனின் பேராற்றலால் குருபரன் கந்தர் கலிவெண்பாவை பாடினார்.

வேல் பூஜைக்கு மேல் சிறந்த பூஜை எதுவும் இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த வேலுக்கு விழா எடுப்பது வருடாந்தம் கொழும்பில் நடந்து வரும் ஒரு கைங்கரியமாகும்.

இது இன்று, நேற்று ஒன்று ஆரம்பித்தது இல்லை. 137 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து நடந்து வரும் ஒரு விழாவாகும். வருடாந்தம் ஆடி மாதத்தில் நடைபெறும் கதிர்காம உற்சவத்துடன் ஒட்டியதாக இவ்விழா நடந்து வருவது குறிப்பிடத் தக்கது. இலங்கைத் திருநாட்டின் தலை நகராம் கொழும்பு மாநகரிலே செல்வம் தழைத்தோங்கும் வர்த்தகர்கள் நிறைமிகு புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ளது சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானம். இந்த தேவஸ்தானத்தின் ஆடிவேல் விழா இவ்வாண்டு கடந்த 10 ஆம் திகதி காலை 7 மணியளவில் ஆரம்பமானது.

இவ்வாலயத்தில் கடந்த 11 ஆம் திகதி காலை 8.05 மணியளவில் மூலவருக்கும் உற்சவர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்துகுமார சுவாமிக்கும் விசேட பூஜைகள் நடத்தப்பட்டபின் உள்வீதி வலம் வருதல் இடம்பெற்றது.

அதன்பின் முதலாம் குறுக்குத்தெரு தேவஸ்தானத்திலிருந்து சித்திரத் தேர் ரத பவனி ஆரம்பமாகியது. ஆலயத்தில் இருந்து புறப்பட்ட முருகப் பெருமான் மெயின் வீதி, கோட்டை, ஜனாதிபதி மாவத்தை, காலி முகத்திடல், கொள்ளுப்பிட்டி சந்தி, பம்பலப்பிட்டி சந்தி வழியாக சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தார்.

நேற்று (12.08.2011) பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் வேல் விழா சுவாமி வீற்றிருக்க ஸ்ரீ துர்க்கை அம்பாளுக்கு நவகலச அபிஷேகம் நடத்தப்பட்டதுடன் நேற்று மு. ப. 11.30 மணிக்கு வேல் விழாவுக்கு விசேட பூஜை நடத்தப்பட்டது. நேற்று மாலை விசேட நாதஸ்வர தவில் கச்சேரியும் விசேட சமய சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டன.

இன்று (13.08.2011) காலை 7 மணிக்கு வழமையான பூஜையுடன் கதிர்காம பதியின் மாணிக்க கங்கை யில் இருந்து எடுத்துவரப்பட்ட புண்ணிய நீரினால் தீர்த்தோற்சவம் நடத்தப்படும். இதன்போது ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் சுவாமி மயில் வாகனக் காட்சி, ஆடிவேல் அர்ச்சனை என்பன நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். இன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு நவகலசாபிஷேகமும் சாயரட்சை பூஜையும் வேல் விழா அர்ச்சனையும் விசேட நாதஸ்வர தவில் கச்சேரியும் இடம்பெறும். இன்று மாலை 7 மணி முதல் திரைப்படப் புகழ் கலைஞர்கள் கலைமாமணி டாக்டர் எல். ஆர். ஈஸ்வரி, இளைய குன்னக்குடி வயலின் மணிபாரதி, டிரம்ஸ் ராஜா கலந்துகொள்ளும் இன்னிசைக் கச்சேரி இடம்பெறும்.

இலங்கைக் கலை வல்லுனர், மிருதங்க வித்துவான், லயஞானபூபதி க. சுவாமிநாதனுடன் இன்னிசை நாயகன் எம். மோஹன்ராஜின் அப்சராஸ் இசைக் கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சியும் இதில் இடம்பெறவுள்ளது.

இவ்வாலயத்தில் நாளை 14 ஆம் திகதி காலை முதல் வழமையான பூஜையுடன் ஆடிவேல் விழா அர்ச்சனை இடம்பெறும். அதனைத் தொடர்ந்து திருவமுது போஜனம் வழங்கப்படும்.

நாளை மாலை 6.30 மணிக்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேரில் எழுந்தருளி பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு காலி வீதி ஊடாக பம்பலப்பிட்டி சந்தி கொள்ளுப்பிட்டி சந்தி வழியாக பின்னிரவு 12 மணிக்கு காலி முகத்திடலை அடைந்து பக்தர்களுக்கு அருட்காட்சி புரிவார்.

15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அலங்கார புருஷராக சித்திரத் தேரில் ஆரோகணித்து ஜனாதிபதி மாவத்தை, கோட்டை, கான் மாணிக்கூட்டு கோபுர சுறுற்றுவட்டம் , மெயின் வீதி, சைனா வீதி, ரெக்ளமேஷன் வீதி, காளிகோவில் சுற்றுவட்டம், செட்டியார் தெரு, ஐந்து லாம்பு சந்தி, மெயின் வீதி, நான்காம் குறுக்குத் தெரு, குமார வீதி, மூன்றாம் குறுக்குத் தெரு, நான்காம் குறுக்குத் தெரு, கெயிசர் வீதி, இரண்டாம் குறுக்குத் தெரு, ஒல்கொட் மாவத்தை, முதலாம் குறுக்குத் தெரு, பேங்ஷால் வீதி வழியாக தேவஸ்தானத்தை வந்தடைவார்.



கே. ஈஸ்வரலிங்கம்


அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

8626) ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கோயில்கள் எவற்றால் கட்டப்பட்டன?

செங்கல், மரத்தால்


8627) முதல் கற்கோயிலை எடுத்தவர் யார்?

மகேந்திரவர்ம பல்லவர்


8628) மகேந்திரவர்ம பல்லவர் எவ்வாறு கோயில்களைக் கட்டினார்?

மலையைக் குடைந்து செதுக்கி கோயிலாக்கினார்


8629) பாறைகளை துண்டுகளாக்கி கோயில் கட்டியவர் யார்?

இரண்டாம் நரசிம்மவர்மனான ராஜசிம்ம பல்லவன்.


8630) பாறைகளை துண்டுகளாக்க்கி எழுப்பப்பட்ட முதல் கோயில் எது?

காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோயில்


8631) குன்றுகளைக் குடைந்து எழுப்பப்படும் கோயில்களை எவ்வாறு அழைப்பர்?

குடைவரைக் கோயில்


8632) பாறைகளை துண்டுகளாக்கி எழுப்பப்படும் கோயில்களை எவ்வாறு அழைப்பர்?

கட்டடக் கோயில்

8633) கட்டடக் கோயிலை வேறு எவ்வாறு அழைப்பர்?

கல்தளி, கற்றளி

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

தெமட்டகொடை பேஸ்லைன் வீதி, மாவில ஒழுங்கை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்


கொழும்பு -9 தெமட்டகொடை பேஸ்லைன் வீதி, மாவில ஒழுங்கை, 150ம் இலக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் 2011-08-26ம் திகதி காலை 6.15 மணிக்கு நடாத்த திருவருள்; கூடியுள்ளது.

எதிர்வரும் 2011.08.23ம் திகதி நடைபெறும் கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக கிரியைகள் ஆம்பமாகும். எதிர்வரும் 2011.08.25ம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.

சிவஸ்ரீ பா. சண்முகேஸ்வர குருக்கள் தலைமையில் கும்பாபிஷேக கிரியைகள் இடம்பெறும். கும்பாபிஷேக நிகழ்வுகளை தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும். கும்பாபிஷேகத்தன்று அன்னதானமும் வழங்கப்படும். விஷ்வஸ்ரீ சே.ச. சந்தணகுமார் ஸ்தபதி தலைமையில் ஆலயத் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாலயத்தில் சித்தி விநாயகர் பெருமானுடன் சிவன், அம்மன், முருகன், மகா விஷ்ணு, தட்சணாமூர்த்தி, நவக்கிரகங்கள் ஆகிய பரிவார மூர்த்திகளின் திருவுருவட் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

திங்கள், 8 ஆகஸ்ட், 2011


கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8619) ‘மங்கல விளக்கேற்றல்’ என்னும் சொற்தொடரில் மங்கலம் என்பதன் பொருள் என்ன?

நன்மை, நலம், காரியசித்தி, பொலிவு, அறம்.

8620) மங்கல விளக்கேற்றல் என்பதன் பொருள் என்ன?

மங்கலத்தைத் தரும் விளக்கை ஏற்றி வணங்குதல்.

8621) மங்கல விளக்கு ஏற்றுவதற்கு வைக்கப்படும் குத்துவிளக்கை எந்தப் புறமாக வைக்க வேண்டும்?

கிழக்குப் புறமாக

8622) விளக்கின் சுடர் ஒளியில் தென்படுவது யாருடைய வடிவம்?

சிவத்தின் வடிவம்

8623) மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைத்து பின் உலர வைத்து தூள் செய்தால் கிடைப்பது என்ன?

குங்குமம்.

8624) மஞ்சள் தூளை தண்ணீரில் கரைத்து அந்த மஞ்சள் கரைசலில் கொஞ்சம் சுண்ணாம்பைக் கலந்தால் அது என்ன நிறமாக மாறும்?

சிவப்பு

இதனை என்னவென்பார்கள்?

ஆர்த்தி

8625) இவ்வாறு கரைத்த ஆர்த்தியை என்ன செய்வார்கள்?

அகன்ற தாம்பாளத்தில் ஊற்றி அதனை புதுமணமக்களின் முகத்துக்கெதிரே அல்லது புது வீட்டின் முன்பு அல்லது மங்கல நிகழ்ச்சியின் முக்கிய நபரின் முன்பு காட்டி தட்டை மூன்று முறை சுற்றியபின் ஆரத்தி நீரை வீட்டுக்கு வெளியே ஊற்றி விடுவார்கள்.



திங்கள், 1 ஆகஸ்ட், 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8615) பூஜை ஆரம்பிப்பதற்கு முன் மணி அடிப்பது ஏன்?

அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டிலுள்ள துர்தேவதைகள் போன்றவை வெளியே ஓடிவிடும். துர்தேவதை, பேய், பிசாசு போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம். எனவே ஓடி விடும். அதனால், மணியடித்து அவைகளை விரட்டிவிட்டு பூஜையை ஆரம்பிப்பர்.

8616) ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி மணி அடிக்க வேண்டும்?

ஓடிப்போன துர் தேவதைகள் இருட்டிய பின் மீண்டும் வந்து விடும். மறு நாள் மறுபடியும் மணியடித்து விரட்ட வேண்டும்.


8617) துர்தேவதைகள் இருந்தால் இருந்து விட்டுப் போகட்டுமே என்று இருந்தால் என்ன?

அவை இருக்குமிடத்தில் தேவதைகள் இருக்க மாட்டார்கள்.


8618) கிராமங்களில் மார்கழி மாதம் அதிகாலையில் மணி அடித்து சங்கு ஊதி செல்வதால் ஏற்படும் நன்மை என்ன?

கிராமத்தில் உள்ள துர்தேவதைகள் ஓடிவிடும்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812