புதன், 26 மார்ச், 2014

கொட்டகலை ஸ்ரீ டிறைட்டன் பெரிய மண்வெட்டி தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வரலாறு

இயற்கை எழில்கொஞ்சும் மலையகத்தில் இதயம் என போற்றப்படும் கொட்டகலை மாநகரில் வளம் கொழிக்கும் பெரிய மண்வெட்டி தோட்டத்தில் இரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருந்து அன்னை ஆதிபராசக்தி அருள்பாலிக்கின்றாள். வேண்டுவோர் வேண்டியதை வாரி வழங்கி ஆட்சிபுரியும் சக்தியவள், இங்கு ஸ்ரீமுத்துமாரியம்மன் பெயரில் மிளிர்கின்றாள். கோயிலில்லா ஊரும் நீரில்லா குளமும் பாழ். என்பதற்கிணங்க பதினெட்டாம் நூற்றாண்டு கால எல்லையில் ஆங்கிலேய ஆட்சி காலத்தின் போது இலங்கையில் தேயிலைச் செய்கைக்கென இந்திய வம்சாவளியினர் இங்கு அழைத்து வரப்பட்டனர். அன்றைய இத்தோட்டத்தின் பெரிய கங்காணி மார்கள் செங்கன், கணேசன், குப்பன் ஆகியோர் தலைமையில் இங்கு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. தமிழக மாநிலத்தின் ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன், சமயபுரம் ஆகிய புண்ணிய ஸ்தலங்களி லிருந்து கருவறை வாயில் மண்ணெடுத்து பிரதிஷ்டை செய்து இவ்வாலயம் அமைக்கப் பட்டது. இவ்வாறான ஆலயங்களில் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட முதல் ஆலயம் எனும் பெருமையை இது பெற்றுள்ளது. ஆரம்பித்தல் சிறிய மண்ணாலான பீடமும் குடிலும் அமைக்கப்பட்டது. அப்போது ஊமை பேசியமை, குருடன் பார்வை பெற்றமை பல தீராத நோய்கள் தீர்த்தமை போன்ற பல அற்புதங்களும் அம்மன் அருளால் நடைபெற்றுள்ளன. அதன்பின் இவ்வாலயம் அன்னை ஆதிபராசக்தியவள் அருளால் செழித்தோங்கத் தொடங்கியது. இம் மண்ணாலான ஆலயம் சீமெந்தினால் சிற்ப வேலையுடன் கூடிய ஆலயமாக்கிடும் நடவடிக்கை அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. தோட்டத் தலைவர்களான சிங்காரம் சின்னையா, ஜெகநாதன், அசப்பன் ஆகியோர் தலைமையில் 1955 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் இவ்வாலயத் திருப்பணிகள் ஆரம்பமாகின. யாழ்ப்பாணம் தங்கவேல் ஆச்சாரியார் மூலமாக இந்தியாவில் இருந்து சிற்பத் துறை வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. மலையகத்தில் முதன் முதலில் இந்திய சிற்ப முறைப்படி சிற்பக் கலைஞர் ஸ்ரீ நாகலிங்க ஸ்தபதி குழுவினர் அமைத்த ஆலயம் இதுவாகும். இவ்வாலயக் கட்டுமானப் பணிகளின் பின்னர் அம்மன் ஆலயம் மேலும் ஒளிபெற்று விளங்கியது. மலையக வரலாற்றில் முதன் முதலாக இந்திய சிற்ப முறையில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வாலயம் ஏனைய மலையக ஆலயங்களுக்கு முன்னோடியானதாக உள்ளது. இவ்வாலயத்தினை முன்னோடியாகக் கொண்டே நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், டிக்கோயா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் என்பன அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஓர் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த சிறிய கோயிலாக வளமும் அபிவிருத்தியும் பெற்று விளங்கிய காலத்தில் இந்த ஆலயத்தை நிர்வகிப்பதற்காக 1962 ஆம் ஆண்டில் ஆலய பரிபாலன சபை அமைக்கப்பட்டது. முத்துவேல் தலைமையில் திருவாளர்கள் சுந்தரராஜ், நடராஜ், தர்மலிங்கம், சின்னசாமி, ராமசாமி ஆகியோரைக் கொண்ட குழுவினர் ஆலய பரிபாலன சபைக்கு நியமிக்கப்பட்டனர். இவர்கள் இவ்வாலய வளர்ச்சிக்காக பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தினர். அவற்றில் மிகவும் சிறந்ததோர் திட்டமாகக் கொள்ளப்படுவது ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டது. தனியாக அமைக்கப்பட்ட ஸ்ரீ விநாயகர் ஆலயம் இத்தோட்டத்திற்கு மேலும் பல நலன்களை வாரி வழங்கியது. ‘கோயிலில்லா ஊரும் நீரில்லா குளமும் பாழ்’ என்பதற்கு ஏற்ப ஒன்றிற்கு இரண்டு என்ற தர்க்கத்தில் இவ்விரு ஆலயங்களும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1982 ஆம் ஆண்டில் இத்தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் ரெங்கசாமியின் பெரும் உதவியுடன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டது. பிரதான வீதிக்கருகில் அமைந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தையும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தையும் இவ் ஆலய பரிபாலன சபையினரே பொறுப்பேற்றனர். இதன் வழியாக இன்று வரை பரிபாலன சபை மூலமாக ஸ்ரீ விநாயகர் ஆலய மீள புனருத்தாரனப் பணிகள், நித்திய பூஜை, வருடாந்த தேர்த் திருவிழா, மாதாந்த விரதங்கள் விசேட விரதங்கள் (விநாயக சதுர்த்தி, சஷ்டி விரதம் கார்த்திகை) ஆகியவற்றுடன் சிவராத்திரி சித்திரா பெளர்ணமி, திருவெம்பாவை, நவராத்திரி என்பனவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறான தெய்வீக செயற்பாடுகளைச் செய்து அடியார்களை அம்பாள் அருள் பெற வழிவகுக்கும் பரிபாலன சபையினரின் பணிகளும் அம்பாளின் அருளும் போற்றத் தக்கவையாக விளங்குகின்றன. ‘எழில் கொள் சீர்மலை நாட்டில் வளந்தருந் தேயிலை மணங்கமழ் நல் மண்வெட்டி தோட்டத்தில் வாழ் அங்காளித் திருகழல் போற்றி போற்றி’ அன்னையின் அருள் நிறைந்திருக்கும் பெரிய மண்வெட்டித் தோட்ட மத்தியில் அவள் குடிகொண்டுள்ளாள். இவ்வாலயம் ஓர் அமைதியான சூழலில் அமைந்துள்ளது. இவ்லாலயத்தை முத்துவேல் தலைவர் தலைமையில் வி. தர்மலிங்கம், வி. நடராஜ், சுந்தரராஜ் பி. சின்னசாமி, யு. ராமசாமி ஆகியோர் பரிபாலனம் செய்து வருகின்றனர். 1962ல் தொடங்கி இவ்வாலயம் சிறப்புற்று விளங்கி வருகிறது. ஒன்பதாவது பரிபாலன சபையாகும். தலைவர் : பீ. சண்முகம், செயலாளர் : வீ. சிவஞானம், பொருளாளர் : பீ. பாலசுப்பிரமணியம், உபபொருளாளர் : ஏ. இராஜரட்ணம். நிர்வாக சபை உறுப்பினர்கள் : எஸ். சிவானந்தன், எம். சத்தயசீலன், கே. பாலசுப்பிரமணியம். சபை ஆலோசகர்கள் : இராஜேந்திரன், வி. விஸ்வராஜ்.

தீட்டு

கே. ஈஸ்வரலிங்கம் 10681) பெண்களின் உடன்பிறந்த சகோதரன் இறந்தால் எத்தனை நாளுக்கு தீட்டு? மூன்று 10682) பெண்களின் உபநயனமான மருமகன் (சகோதரனின் பிள்ளை) இறந்தால் எத்தனை நாட்களுக்குத் தீட்டு? மூன்று 10683) பெண்களின் இளைய அல்லது மூத்த தாயார் (தந்தையின் வேறு மனைவிகள்) இறந்தால் எத்தனை நாள் தீட்டு ? மூன்று 10684) இரண்டு பகலும் ஓர் இரவும் கொண்டது எது? பஹிணீ 10685) இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம் எது? பஹிணீ 10686) பஹிணீ என்பது எத்தனை நாள்? ஒன்றரை நாள் 10687) பெண்களுக்கு தந்தையுடன் பிறந்த பெரியப்பா, சித்தப்பா இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10688) பெண்களுக்கு தாயுடன் பிறந்த சித்தி, பெரியம்மா இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10689) பெண்களுக்கு தாயின் சகோதரர்கள் (மாதுலன்) இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10690 பெண்களுக்கு தந்தையின் சகோதரர்கள் (அத்தைகள்) இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10691) ‘பிதாமஹன்’ என்று அழைப்பது யாரை? தந்தையின் தந்தை 10692 ‘பிதாமஹி’ என்று அழைப்பது யாரை? தந்தையின் தாயை 10683) ‘மாதாமஹன்’ என்று அழைப்பது யாரை தாயின் தந்தையை 10684) பெண்களுக்கு தாயின் சகோதரனின் மனைவி அல்லது பிள்ளைகள் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை 10685) பெண்களுக்கு உபநயனமான உடன் பிறந்த சகோதரனின் மனைவி அல்லது பிள்ளைகள் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10686 பெண்களுக்கு உபநயனமான மருமகனின் (சகோதரரின் பிள்ளை) மனைவி அல்லது பிள்ளைகள் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்ரறை நாள் 10687 பெண்களுக்கு தந்தையுடன் பிறந்த பெரியப்பா சித்தப்பாவின் மனைவி பிள்ளைகள் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10688) பெண்களுக்கு பிதாமஹன் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10689) பெண்களுக்கு பிதா மஹி இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10690) மாதாமஹன் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10691) ‘மாதாமஹி’ என்பது யாரை? தாயின் தாயை 10692) பெண்களுக்கு மாதாமஹி இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10693) பெண்களுக்கு உடன் பிறந்த சகோதரி இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10694) பெண்களுக்கு சகோதரியின் பெண் பிள்ளைகள் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10695) சகோதரரின் பெண் பிள்ளைகள் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள்

புதன், 19 மார்ச், 2014

தீட்டு

கே. ஈஸ்வரலிங்கம் தீட்டு 10662) ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகளை என்னவென்று அழைப்பார்கள்? ஸ்மானோதகர்கள் 10663) உபநயனமான பெண் வயிற்றுப் பேரனை என்னவென்று அழைப்பார்கள்? தெளஹித்ரன் 10664) சுவீகாரம் போனவனைப் பெற்ற வளை என்னவென்று அழைப்பார்கள்? ஜனனி 10665) சுவீகாரம் போனவனை ஈன்ற தந் தையை என்னவென்று அழைப்பார்கள்? ஜனக பிதா 10666) சுவீகாரம் போன மகனை என்னவென்று அழைப்பார்கள்? தத்புத்ரன் 10667) சகோதரியின் மகன் (உபநயன மானவன்) மருமகன் இழந்தால் எத்த னை நாள் தீட்டு? மூன்று நாள் 10668) ஏழு தலை முறைக்கு மேற்பட்ட பங்காளிகள் இறந்தால் எத்தனை நாளுக்கு தீட்டு? மூன்று நாளுக்கு 10669) கல்யாணமான சகோதரி இறந்தால் எத்தனை நாள் தீட்டு? மூன்று நாள் 10670) சுவீகரம் போனவனைப் பெற்ற வள் இறந்தால் எத்தனை நாளுக்கு தீட்டு? மூன்று நாளுக்கு 10671) சுவீகாரம் போனவனை ஈன்ற தந்தை இறந்தால்? மூன்று நாள் 10672) சுவீகாரம் போன மகன் இறந்தால்? மூன்று நாள் 10673) ஏழு வயதுக்கு மேற்பட்ட கல் யாண மாகாத பங்காளிகளின் பெண் இறந்தால்? மூன்று நாள் 10674) வயதுக்கு மேற்பட்ட ஆனால் உபநயனமாகாத பங்காளிகளின் ஆண் பிள்ளைகள் இறந்தால்? மூன்று நாள் 10675) ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள் இறந்தால்? மூன்று நாள் 10676) பெண்களுக்கு எதன் மூலம் கோத்திரம் வேறுபடும்? திருமணத்தின் மூலம் 10677) திருமணத்தின் பின் யாருடைய கோத்திரம் பெண்களுக்கு உரியதாகும்? கணவனின் கோத்திரத்தை சந்ததியைச் சேர்ந்தவர்களின் பிறப்பு இறப்பே அவர் களுக்கும் உரியதாகும். 10678) இதனால் பிறந்தகத்தைச் சேர்ந்த சிலரது மரணத்தினால் பெண்களுக்கு எத் தனை நாள் தீட்டு மூன்று நாள் 10679) இந்த தீட்டு அவர்களுடைய கணவனுக்கு உண்டா? கிடையாது 10680) இந்தத் தீட்டை பெண்கள் எப்படி காக்க வேண்டும்? தூரமான ஸ்த்ரீ தலைத்திருந்து தீட்டுக் காப்பது போல இதை அவள் மட்டும் காக்க வேண்டும்.

புதன், 5 மார்ச், 2014

தீட்டு

கே. ஈஸ்வரலிங்கம் 10638) பெண் குழந்தையைப் பெற்ற தாய்க்கு எத்தனை நாட்கள் தீட்டு? 40 நாட்கள் 10639) ஆண் குழந்தையைப் பெற்ற தாய்க்கு எத்தனை நாட்கள் தீட்டு? 30 நாட்கள் 10640) பிரசவத்தினால் ஏற்படும் தீட்டு எத்தனை நாட்கள்? 10 நாட்களுக்கு 10641) பிறந்தது பெண் குழந்தையானால் யார் யாருக்கெல்லாம் பத்து நாட்கள் தீட்டு? * குழந்தையின் உடன் பிறந்தோருக்கு * குழந்தையின் தகப்பனாரின் சகோதரர்களுக்கு, * குழந்தையின் தகப்பனாரின் தகப்பனாருக்கு, * அவரின் சகோதரர்களுக்கு, * மேற்குறிப்பிட்ட அனைவரும் திருமணமான ஆண்களானால் அவர்களது மனைவிகளுக்கும் அதே அளவு தீட்டு. 10642) குழந்தை ஈன்றவளின் பெற்றோருக்கு எத்தனை நாள் தீட்டு? மூன்று 10643) குழந்தை பெற்றவளின் சகோதரன், மாமா, பெரியப்பா, சித்தப்பா போன்றவர்களுக்கு தீட்டு உண்டா? தீட்டில்லை 10644) இவர்களின் செலவில் பிரசவம் எங்கு நடந்தாலும் செலவு செய்பவர்களுக்கு தீட்டு உண்டா? உண்டு. 10645) எத்தனை நாளைக்கு? ஒரு நாள் 10646) பங்காளிகளில் யாராவது இறந்தால் எத்தனை ஆண் தலைமுறைகளுக்கு தீட்டு? ஏழு தலைமுறைகளுக்கு 10647) இவர்களுக்கு எத்தனை நாள் தீட்டு? பத்து (10) 10648) இவர்களது மனைவிகளுக்கும் தீட்டு உண்டா? ஆம் 10649) எத்தனை நாட்களுக்கு? பத்து நாட்களுக்கு

சமூக தொண்டாற்றும் அமெரிக்க இந்து கோயில்

அமெரிக்காவின் நிபிரஸ்கா பகுதியில் அமைந்துள்ள இந்துக் கோயில் இந்திய மற்றும் நேபாளியர்களின் கூட்டு முயற்சியால் கட்டப்பட்டதாகும். 1970 களின் முற்பகுதியில் இந்தியா வம்சாவளியினரான பொறியியலாளர்கள் மற்றும் அவரது குடும்பங்கள் ஒமஹா பகுதியில் குடியேறினர். துவக்கத்தில் இவர்கள் தங்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்தி வந்தனர். 1970 களின் மத்தியில் இந்திய வம்சாவளியினரில் மேலும் பலர் லின்கோல் மற்றும் ஒமஹா பகுதிகளில் குடியேறினர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவர்களாக இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் இந்து மதத்தினர் இப்பகுதியில் அதிகளவில் வேலையில் இருந்ததுடன், அதிகளவில் குடியேறவும் துவங்கினர். 1990 களின் முன் பகுதியில் நகரின் மத்திய பகுதியில் இந்து சமுதாயத்தினருக்கென வழிபாட்டுத் தலம் அமைக்க தீர்மானிக்கபட்டது. 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தற்போதுள்ள வழிபாட்டுத்தல கட்டடம் வாங்கப்பட்டது. கடந்த பல வருடங்களாக கோயில் பணிக்கான நிதி சேகரிக்கப்பட்டு, ஒமஹா இந்து கோயில் 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் திகதி நிறைவு பெற்றது. இப்பகுதியில் வாழ்ந்த இந்திய சமுதாயத்தினரில் 98 சதவீதம் பேர் இந்தியர்களாகவும், மீதமுள்ள 2 சதவீதம் பேர் நேபாளிகளாகவும் இருந்தனர். இக்கோயிலின் வெளிப்புறம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியதாகும். ஒரு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாரம்பரிய முறையிலான இந்துக் கோயிலும், மற்றொரு புறம் கோயிலின் கலாசார மையம் மற்றும் நூலகம் ஆகியன கட்டப்பட்டுள்ளன. கலாசார மையத்திற்கு அருகில் மடப்பள்ளி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 1993 ஆம் ஆண்டு முதலில் வாங்கப்பட்ட கட்டடத்தில் பல்வேறு உணவு விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் சமூகக் கூடம் இப்பகுதியில் உள்ள இந்திய சங்கத்தினரால் பயன்படுத்தப்ப டுவதுடன், பொதுமக்களின் தனிப்பட்ட விசேஷங்களுக்காகவும் வாடகைக்கு விடப்படுகிறது. இக்கோயில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் 6 முதல் 12 வயதுடைய மாணவர்களுக்கான ஞாயிறு வகுப்புக்களும் நடத்தப்படுகின்றன. புதன்கிழமைகளில் மாலை 6.15 முதல் 7.45 வரை குண்டலினி யோக வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. இது தவிர சமூகக் கூடத்தில் பேச்சாளர்கள், இசை கலைஞர்கள் போன்றவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வுகளுடன் கூடுதலாக கோயில் சார்பில் தீபம் செய்தித்தாள் 4 முதல் 6 முறை வெளியிடப்படுகிறது. இந்து மத கலாசார நிகழ்வுகளுடன் பல்வேறு சமூக சேவைகளும் செய்யப்பட்டு வருகின்றன. சுகாதார கூட்டம், எய்ட்ஸ் பாதுகாப்புக் கழகம் போன்ற கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் நிகழ்ந்த பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிர்வாக உறுப்பினர்கள் ஒன்று கூடி 48 மணி நேரம் தொடர்ச்சியாக பிரார்த்தனை நடத்தினர். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்காக 35 ஆயிரம் டொலர் நிவாரண நிதி உதவியும் அளிக்கப்பட்டது.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812