திங்கள், 29 டிசம்பர், 2014

வாஸ்து சாஸ்திரம்

கே. ஈஸ்வரலிங்கம் 11154) வாஸ்து சாஸ்திரம் வீடு கட்டுவதற்கு மட்டும் தானா? வாஸ்து சாஸ்திரம் என்றால் வீடு கட்டுவதற்கு மட்டும் அல்ல. நாம் வசிக்கும் வீட்டின் அமைப்பு, உபயோகிக்கும் பொருளின் இடம், அவ்வளவு ஏன் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும் வாஸ்துதான். நல்ல காற்று, நல்ல வெளிச்சம், வீட்டில் வளர்ப்பதற்கேற்ற மரங்கள், செடிகள் போன்றவை ஓர் இல்லத்திற்கு வாஸ்து பலத்தை அதிகப்படுத்துகிறது. ஒரு வீடு எவ்வளவு சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கப்படுகிறதோ அந்த வீட்டில்தான் தெய்வம் குடியிருக்கும். சிலர் வீட்டின் வெளியில் பூச்செடிகள், கொடிகள் என அழகாக அலங்கரித்திருப்பர். ஆனால் வீட்டின் உட்பகுதி தூசியும், தும்புமாக இருக்கும். சிலர் சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் மட்டுமே வீட்டை பயன்படுத்துவர். சுத்தமாக இருக்கும் வீட்டில் மட்டும்தான் திருமகள் வாசம் செய்வாள். வீட்டில் தூசியும், தும்பும் அதிக அளவில் சேரவிடக்கூடாது. தூய்மையாக இருக்கும் வீட்டில் பணத்திற்கும். உணவுக்கும் பஞ்சம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக பணக்காரர்கள் தங்களின் வீடுகளை தூய்மையாக வைத்திருப்பர். அதுபோல, நம்மவர்களில் பணக்காரர்களின் வீடுகளிலும் தூசியும், தும்பும் இருப்பதில்லை. அதிக அளவில் தூசியும் தும்பும் சேர்ந்த வீடுகளில் வசிப்பவர்கள், திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் முன்னேற்றம் குறைந்து காணப்படுகிறது. சிலரின் வீடுகளில் ஒட்டடை தான் மேற்கூரையை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றதோ என எண்ணும் படியாக ஒட்டடை அதிகளவில் சேர்ந்திருக்கும். அப்படி இருப்பது நல்லதல்ல. அதனால், நல்ல வாஸ்து தன்மை உள்ள வீட்டுக்கு முக்கியமானது. வீட்டை தூய்மையாக வைத்திருப்பதும், தூசியும், தும்பும் சேர விடாமல் பார்த்துக்கொள்வதும் தான். 11155) வீடுகளில் அலங்காரத்திற்கு வைக்கவோ சுவர்களில் தொங்க விடவோ கூடாதவை எவை? ஆயுதங்கள், போரை சித்திரிக்கும் சிற்பங்கள், புகைப்படங்கள். பொம்மை பீரங்கி, பெருக்கல் குறி போல் வாள்கள், ஆகியவற்றை வைக்கக் கூடாது. 11156) வீடுகளில் அலங்கரிக்க வைக்கக் கூடியவை எவை? போர் வீரன், போர் விமானம் ஆகியவை வைக்கலாம். சீனர்களின் டிராகலை வைக்கலாம். இரண்டு கொக்கு, இரண்டு பறவைகளின் படங்களை வைக்கலாம். 11157) இரண்டு பறவைகளின் படங்கள் வைப்பதால் என்ன நடக்கும்? ஒற்றுமையை மேம்படுத்தும். 11158) மான் படத்தை மாட்டி வைக்கலாமா? வைக்கலாம். 11159) மான் படத்தை மாட்டி வைப்பதால் என்ன நடக்கும்? செல்வம் பெருகும். 11160) யானை எதனை குறிக்கும்? பலம், அறிவு, சக்தி ஆகியவற்றை குறிக்கும். 11161) யானையை எந்த திசையில் வைக்க வேண்டும்? கிழக்கில் 11162 இந்த யானையின் அமைப்பு எவ்வாறானதாக இருக்க வேண்டும்? யானையின் தும்பிக்கை மேல் நோக்கி இருப்பது போல் இருக்க வேண்டும். 11163) மிருகங்கள் வாயில் உணவை கவ்வி கொண்டிருக்கும் உருவப்படத்தை வீட்டில் வைக்கலாமா? வைக்கக்கூடாது.

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

சின்முத்திரை விளக்கம்!

அமர்ந்த நிலையில் இருக்கும் சுவாமி ஐயப்பனின் வலது கரத்தை கவனித்தால் ஓர் அடையாளம் காட்டி கொண்டிருப்பார். கட்டைவிரலோடு ஆள்காட்டி விரல் இணைந்து ஒரு வளையத்தை ஏற்படுத்த, மற்ற மூன்று விரல்களும் நிமிர்ந்து நிற்கும். கட்டை விரல் கடவுள். சுவாமி ஐயப்பன் ஆள்காட்டி விரல் ஆன்மா. அதாவது, ஆன்மாவை தாங்கி கொண்டிருக்கின்ற மனிதன், ஏதாவது ஒரு பிறவியில் ஆன்மாவாகிய ஆண்டவனை சென்று அடைய வேண்டும். ஆனால், ஆள்காட்டி விரல் குறிக்கும் ஆன்மா மற்ற மூன்று விரல்களோடு சேர்ந்து கொண்டு நிமிர்ந்து நிற்கிறது. நடுவிரல் மற்றும் மோதி விரல் விவரத்தை பார்ப்போம். ஆணவம் : நடுவிரல் என்று சொல்லக்கூடிய உயரமான விரல் ஆணவம் என்று அழைக்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் ஈகோ என்று சொல்லப்படுகிறது. இதுதான் ஆண்டவனை நாம் அடையவிடாமல் தடுப்பது மட்டுமல்ல, மற்ற எல்லா பிரச்னைகளுக்கும் காரணமாக அமைகிறது. கன்மம் : மோதிரவிரல் கன்மம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, இந்த பிறவி தமது வாழ்க்கை, போன பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு தக்கபடி அமையும். அதுவே தலைவிதியாகவும் அமைகிறது. இதை மாற்ற வேண்டுமென்றால் இறைவன் அருள் வேண்டும். மாயை : பொய்யை உடனே நம்பி விடுகிறோம். உண்மையை நம்ப நிறைய யோசிக்க வேண்டும். மாயத்தோற்றங்கள் நம்மை மயக்கி ஏமாற்றிவிடும். போலி கம்பெனிகளும், போலி சாமியார்களும் உருவாவது இதனால்தான். நாம் இறைவனை அடைய வேண்டும் என்றால் இந்த மூன்று அழுக்குகளும் நீங்க வேண்டும். இதைத்தான் ஐயப்பனின் சின்முத்திரை காட்டுகிறது. விரதம் இருப்பதன் நோக்கம்! ஆணவம், கன்மம், மாயை ஆகிய அழுக்குகளை நீக்க வேண்டும் என்றால் விரதம் இருக்க வேண்டும். ஆடம்பர வாழ்க்கையை அகற்ற வேண்டும். எளிய உடை உடுத்த வேண்டும். எளிய உணவுகளை உண்ண வேண்டும். காலில் செருப்பு அணியாமல் நடக்க வேண்டும். தன்னை அழகுப்படுத்தி கொள்ள கூடாது. கோபம் கொள்ளக்கூடாது. யாரையும் மரியாதையாக நடத்த வேண்டும். ஆதலால்தான் மேல்அதிகாரி பியூனை பார்த்து சாமி என்றும், பியூன் மேல் அதிகாரியை சாமி என்றும் அழைக்கும் சமநிலை ஏற்படுவதை பார்க்கிறோம். துளசி மாலை ஏன்? விரத காலத்தில் ஐம்புலன்களையும் அடக்கும் அனுபவத்தை பெற வேண்டும். இல்லறத்தில் இருந்தாலும் இல்லற வாழ்வில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். ருத்திராட்சை மாலை அல்லது துளசி மாலை அணிந்து கொள்வது அதற்காகத்தான். இவை துறவு உணர்வை ஏற்படுத்தி புலனடக்கத்திற்கு உதவி செய்யும். காவி ரகசியம்! ஐயப்பருக்கு மாலை அணிவித்து விரதம் இருக்கும் காலத்தில் காவி உடை அல்லது கருப்பு உடை அணிவது வழக்கம். துறவு உணர்வு மேம்படுத்த இது உதவும். ஏழை, பணக்காரன் என்ற பேதத்தை போக்கி ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சமம் என்ற உணர்வை ஏற்படுத்தும். மற்றவர்கள் நம்மை எதிர்படும்போது நம்மை அடையாளம் கண்டு பக்தியோடு பழக வழி செய்யும். மலைப்பகுதியில் பயணம் செய்வதால் காட்டு விலங்குகள் இந்த உடையை கண்டு விலகி போகுமாம்.

புதன், 24 டிசம்பர், 2014

ஆஞ்சநேயர்

கே. ஈஸ்வரலிங்கம் 11147) ஆஞ்சநேயருக்கு வடை மாலை சார்த்துவது ஏன்? நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்து வடை சாப்பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்து வடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடை செய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு. 11148) ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்துவது ஏன்? ராமர் வெற்றி பெற்றதை சீதைக்கு முதலில் தெரிவித்தவர் ஆஞ்சநேயர். இதனால் மகிழ்ந்த சீதை தன் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்த இலைகளை மாலையாக்கி அணிவித்தாள். அதன் அடிப்படையில் எண்ணிய செயல் வெற்றி பெற ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கும் வழக்கம் உண்டானது. 11149) மாலையை எப்படி கட்டுவது? இரு வெற்றிலை, ஒரு பாக்கு என வைத்துக் கொண்டு மாலை தொடுக்க வேண்டும். ஒரு மாலையில் 21 கண்ணிகள் அமைவது நல்லது. 48, 54, 108 எண்ணிக்கையிலும் வெற்றிலையைக் கட்டலாம். ஒற்றைப்படை எண்ணிக்கையில் 3, 5, 7 என சனிக்கிழமைகளில் மாலை சாத்துவது நல்லது. இதனால் சுபநிகழ்ச்சிகளில் ஏற்படும் தடை நீங்கி விரைவில் நல்லபடியாக நடந்தேறும். 11150) சங்காபிஷேகம் செய்வதன் சிறப்பு என்ன? அபிஷேகத்திற்குப் பயன்படும் பொருட்களில் மண்ணாலான கலசத்தை விட செம்பு உயர்ந்தது. செம்பை விட வெள்ளியும், அதை விட தங்கக் கலசமும் உயர்ந்தது. இவை அனைத்தையும் விட சங்கு உயர்ந்தது என சாஸ்திரம் கூறுகிறது. சங்காபிஷேகம் செய்தால் அது தேவாமிர்தத்தால் சுவாமியை அபிஷேகம் செய்வதற்கு ஒப்பானது. 11151) வாழ்வில் துன்பங்களும், கஷ்டங்களும் ஏற்படுவது ஏன்? தங்கத்தை புடம் போடுவதும், வைரத்தை பட்டை தீட்டுவதும் அப்பொருள் மென்மேலும் ஜொலிப்பதற்காகத் தானே தவிர, அதை அழிப்பதற்காக அல்ல. நம் வாழ்வில் நாம் அடையும் துன்பங்களும், கஷ்டங்களும் கூட நம் மனதை பக்குவப்படுத்த கடவுள் எனும் கொல்லனால் பட்டை தீட்டப்படும் செயல் தான் என்பதை உணர்ந்து விட்டால், மனமானது சாந்தம் அடையும். 11152) நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை என்பது ஏன்? நரசிம்மர் அருள்புரியும் தன்மையை, நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை என்று சொல்வார்கள். கேட்ட வரத்தை தட்டாமல் கொடுப்பவர் நரசிம்மர். நம்பிக்கையுடன் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்று ஜெபித்து வாருங்கள். உங்களின் விருப்பத்தை லட்சுமி நரசிம்மர் விரைவில் நிறைவேற்றி அருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 11153) கோயிலில் மந்திரம் சொல்லும் போது நமஹ என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் அர்த்தம் என்ன தெரியுமா? சமஸ்கிருதத்தில் மமஹ என்றால் என்னுடையது என்று பொருள். அதோடு ந என்பதைச் சேர்த்து ந மமஹ என்று சொன்னால் என்னுடையது இல்லை என்று அர்த்தம் உண்டாகும். ந மமஹ என்பதே நமஹ என்றானதாகச் சொல்வர். எல்லாம் கடவுளுக்கே சொந்தமானது என்று அறிவிப்பதற்காகவே அர்ச்சனையின் போது நமஹ என்று உச்சரிக்கின்றனர். கடவுளுக்கு அர்ச்சிக்கும் தேங்காய், பழம் மட்டுமில்லாமல், வழிபடும் நாமும் கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்பதைக் குறிக்கவே

வியாழன், 18 டிசம்பர், 2014

சாஸ்திரங்கள்

கே. ஈஸ்வரலிங்கம் 111144) என்றால் என்ன? சாஸ்திரங்கள் என்பது நெறிமுறைகள், மனித குலம் மட்டுமன்றி ஜீவனுள்ள மற்றும் ஜீவனற்ற காணப்படும் அனைத்து தத்துவங்களின் ஒழுங்கான செயல்பாடுகள் பற்றித் தெரிவிப்பது. இவற்றில் ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது உயிரினம் இந்தந்த நிலையில் இவற்றை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதை பெரும்பாலும் நேரடியாகக் குறிப்பிட மாட்டா. பல எடுத்துக்காட்டுக்கள் மூலம் ஒழுங்கற்ற தன்மையும், ஒழுங்கான தன்மையும் காண்பிக்கப்படும். ஒழுக்கத்தின் மேன்மையும், ஒழுங்கற்ற தன்மையின் கீழ்மையும் உதாரணங்களால் விளக்கப்பட்டிருக்கும். தர்ம சாஸ்திரம் என்ற ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மனிதனுக்கான தர்ம நெறிமுறைகள் நேரிடையாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். 111145 சாப்பிட்ட பின்பு குளிக்கலாமா? காலையில் எழுந்ததும் காலைக்கடன்கள் முடித்து, குளித்த பின்பே சாப்பிட வேண்டும். எக்காரணத்திற்காகவும், சாப்பிட்ட பின்பு குளிக்க வே கூடாது. சாப்பிட்ட உணவு செரிப்பதற்கு வெப்பம் அவசியம் தேவை. சாப்பிட்ட பின்பு குளித்தால் உடலின் வெப்பம் குறைந்து விடும். எனவே செரிப்பதற்கு நேரமாகும். வயிற்றிலும் வீண் தொல்லை ஏற்படும். காலப்போக்கில் பசியும் எடுக்காது. இதனால் தான் குளிக்கும் முன்பு சாப்பிடக்கூடாது என்பர். இதையே பெரியோர் குளிக்கும் முன் சாப்பிட்டால் போஜனம் கிடைக்காது எனவும் சொல்லி வைத்தனர். 111146) மரணப்படுக்கையில் தண்ணீர் கொடுப்பது ஏன்? குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்த போது பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு வரமளித்தார். எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ அப்போது மரணமடைவார் என்பதே அது. பத்தாம் நாள் போர் அன்று பீஷ்மர் பாண்டவர் படைக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தினார். அப்போது அவருக்குத் தான் செய்யும் செயலில் சலிப்பு ஏற்பட்டது. உடன் தான் இறக்க நினைத்தார். அவரின் நிலையை அறிந்த அர்ச்சுணன் தேரின் முன்னால் சிகண்டியை நிறுத்தி விட்டு பீஷ்மர் மேல் அம்பெய்தினான். சிகண்டி முன் போர் புரிய விரும்பாத பீஷ்மர் அமைதியாயிருந்தார். அர்ச்சுணனின் அம்புகள் அவரது உடலைத் துளைத்தன. உத்திராயன காலத்தில் இறக்க விரும்பிய பீஷ்மர் அம்புப்படுக்கையில் இருந்தார். அவரைத் தரிசிக்கவும் ஆசி பெறவும் பல அரசர்களும் வீரர்களும் வந்தனர். உடலில் காயங்களுடன் படுத்த படுக்கையாக இருந்த பீஷ்மர் இதனால் மிகவும் களைப்படைந்தார். தாகம் ஏற்படவே அருந்தத் தண்ணீ கோட்டார். துரியோதனனும் கர்ணனும் நறுமணம் மிக்க இனிய பானங்களைக் கொண்டு வந்தும் அதை அருந்தவில்லை. அர்ச்சுணனை நோக்கி, சாத்திரங்கள் கூறும் வழியில் எனக்கு தண்ணீர் தருவாயாக என்றார். அர்ச்சுணன் தன் காண்டீபத்தை நாணேற்றி பீஷ்மரின் தலைக்கருகே ஏவினான். உடனே பூமி பிளந்து பீஷ்மரின் தாயான கங்கை நீர் ஊற்றாகப் புறப்பட்டு நேராக பீஷ்மரின் வாயின் அருகில் பாய்ந்தது. பீஷ்மரும் அதைப் பருகித் தாகம் தணித்தார். மங்காத புகழ் பெற்ற பீஷ்மருக்கு மரணப் படுக்கையில் ஏற்பட்ட தாகம். கங்கையான அவளது தாயால் தணிந்தது. இதனால்தான் இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவருக்குக் கங்கை எனும் நீர் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.

செவ்வாய் கிரகம்

கே. ஈஸ்வரலிங்கம்
11128) நவக்கிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவன் யார்? முருகன் 11129) செவ்வாய்க்கிழமை விரதம் யாருக்கு மிகவும் உகந்தது? முருகனுக்கு 11130) செவ்வாய் விரதம் பற்றி வள்ளலார் கூறியிருப்பது என்ன? செவ்வாய்க்கிழமை சூரியன் உதிக்கும் முன்பு எழுந்து உடல் தூய்மை பெற நீராடி திருநீற்றை நீரில் குழைத்து முறைப்படி தலை உச்சி முதல் உடல் எங்கும் தரித்துக்கொண்டு விநாயகரை நினைத்து துதிசெய்து வணங்க வேண்டும். பின்பு ஸ்ரீ பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை ஜெயித்து சிவத்தியானம் செய்தல் வேண்டும். அதன்பின் சூரியனைப் பார்த்து “ஓம் சிவ சூரியாய நம” என்று கூறி நமஸ்காரம் செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து பரமசிவன், பார்வதி, முருகனை மனத்துக்குள் வணங்கி 108 அல்லது 1008 முறை ஜெபம் செய்து 100 கிராம் மிளகினை ஒரு புதுத்துணியில் முடிந்து “ஓம் வைத்தியலிங்கார்ப்பணம்” என்று கூறி ஓரிடத்தில் அதை வைத்து சிவனடியார் ஒருவரை வீட்டிற்கழைத்து உபசரித்தல் நல்லது. அமுது படைத்து தாம்பூரம் தட்சனை கொடுத்து பின்பு சுத்தமான பச்சரிசி, பாசிப்பருப்பு, நெய், மிளகு, சீரகம் சேர்ந்த உப்பில்லாப் பொங்கல் பொங்கி செய்து சுவாமிக்கு நிவேதனம் செய்து அப்பிரசாரத்தை அரைவயிறு மட்டும் உண்டு அன்று மாலை சிவாலய தரிசனம் செய்து சிவத்தியானத்துடன் திரும்பி வந்து சிவபுராணம் அல்லது கந்தபுராணம் படிக்கக் கேட்டு பின்பு ஏதும் உண்ணாமலே இரவு பாய் தலையணை இன்றி வெறும் தரையில் கம்பளம் விரித்து படுத்துறங்க வேண்டும். 11131) செவ்வாய் விரதம் அனுஷ்டிக்கும் போது தவிர்க்க வேண்டியவை எவை? வாசனாதி திரவியங்கள், தாம்பூலம், பெண் சுகம், பெருந்தூக்கம். 11132) அங்காரகன் என்பது யாரை? செவ்வாய் கிரகத்தை 11133) செவ்வாய்க்கு உரிய வேறு பெயர்கள் என்ன? அர்த்தன், அழல். அழலோன், அறிவன், ஆரல், உதிரன். குருதி, குஜன், சேய், செந்தீவண்ணன். மங்களன், வக்கிரன். 11134) கிரகங்களுக்கு எத்தனை தேவதைகள் இருக்கின்றன? இரண்டு 11135) கிரகங்களுக்கு இருக்கின்ற இரு தேவதைகளும் எவை? அதி தேவதை, பிரத்யதி தேவதை 11136) செவ்வாய்க்குரிய அதி தேவதை யார்? பூமாதேவி 11137) செவ்வாய்க்குரிய பிரத்யதி தேவதை யார்? முருகன் 11138) புராண கதைகளின் படி பூமியின் மகன் யார்? செவ்வாய் 11139) செவ்வாய் கிரகம் பற்றி அறிஞர்களின் கருத்து என்ன? பேரழிவுகள் ஏற்பட்ட சமயத்தில் பூமி உருண்டையின் செம்மண் நிலப்பரப்பிலிருந்து உடைந்து சிதறி விழுந்த உருண்டையே செவ்வாய் என்பதே ஆகும். 11140) பூமியிலிருந்து உடைந்து உருவான செவ்வாய்க்குரிய பெயர்கள் என்ன? பெளமன். பூமிபுத்ரன் 11141) செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் என்ற பெயர் எப்படி வந்தது? செம்மண் நிலப்பரப்புடைய கிரகம் என்பதால் 11142) ஆலய வழிபாட்டில் செவ்வாய்க்கு எந்த வர்ண துணி சமர்ப்பணம் செய்யப்படுகிறது? சிவப்பு 11143) எந்த நிற மலர்கள் சமர்ப்பணம் செய்யப்படுகிறது?. சிவப்பு

கொடிமரம்

கே. ஈஸ்வரலிங்கம்
111112) கொடி மரம் யாரைக் குறிக்கும்? சிவபெருமானை 111113) கொடிக்கயிறு யாரைக் குறிக்கும்? திருவருட் சக்தியை 111114) கொடுத்துணி யாரைக் குறிக்கும்? ஆன்மாவை 111115) தர்ப்பைக் கயிறு எதனைக் குறிக்கும்? பாசத்தை 111116) கொடியேற்றம் நிகழ்வு எதனை உணர்த்துகிறது? மும்மல வயப்படும் ஆன்மா, திருவருட் சக்தியினாலே பாசம் அற்று சிவஞான வடிவமாகிய பதியின் திருவடி என்னும் தத்துவத்தை 111117) பத்ரபீடம் என அழைப்பது எதனை? கொடி மரத்தின் பீடத்தை 111118) கொடி மரத்தில் கயிறு சுற்றியிருப்பது எதனை நினைவூட்டும் வகையில்? இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு மனதை பலியிட வேண்டும் என்பதற்காக ஆன்மாவைப் பாசக் கயிறு சுற்றி யுள்ளதை நினைவூட்டும் வகையில் 111119) திருவிழாவில் முதல்நாள் கொடியேற்றுவதன் நோக்கம் என்ன? திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதமடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள்பாலிக்கப் போகிறார் என்பதே 111120) சூக்கும் லிங்கமாக எதனை எண்ணி வணங்க வேண்டும்? இறைவனை அடைந்ததவர் அழிவற்ற ஆனந்த வெள்ளத்தில் நிலைத்திருப்பார் என நினைத்து 111121) துவஜஸ்தம்பம் என்பது எதனை? கொடிமரத்தை 111122) திருவிழாவின் முதல்நாள் கொடியேற்றுவதை என்னவென்று கூறுவர்? துவஜாரோகணம். 111123) கொடிமரத்தின் முன் ஆண்கள் செய்ய வேண்டியது என்ன நமஸ்காரம்? அஷ்டாங்க நமஸ்காரம் 111124) கொடிமரத்தின் முன் பெண்கள் செய்ய வேண்டியது என்ன நமஸ்காரம்? பஞ்சாங்க நமஸ்காரம் 111125) கொடிமரத்தைக் காக்கும் பொருட்டு என்ன அணிவகுக்கப்படும்? கவசம் 111126) இந்த கவசம் எதனால் செய்யப்பட்டு இருக்கும்? பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் 111127) இவ்வாறு கவசம் அணிவிப்பதால் எவற்றில் இருந்து கொடிமரம் காக்கப்படுகிறது? வெயில், மழை போன்ற இயற்கை மாற்றங்களிலிருந்து

உபநிஷதங்கள்

கே. ஈஸ்வரலிங்கம் 11173) பத்து உபநிஷதங்கள் என்னென்ன? ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டகோ, மாண்டூக்ய, தித்திரி, ஐதரேயம், சாந்தோக்யம். ப்ருஹதாரண்யம் ஆகியவையே பத்து உபநிஷதங்கள் ஆகும். 11174) இவை ஏன் வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது? வேதத்தின் அந்தமாக இவை விளக்குவதால் வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது. 11175) வேதாந்தத்தில் என்ன கூறப்பட்டுள்ளது? வேதங்கள் உலக சிருஷ்டி கிரமத்தைப் பற்றியும். இதில் தனி மனிதன் ஆற்ற வேண்டிய கர்மங்களைப் பற்றியும் கூறு கின்றது. 11176) வேதங்கள் எத்தனை வகைப்படும்? இரண்டு 11177) இரண்டு வகையான வேதங்களையும் தருக? கர்ம காண்டம். ஞான காண்டம் 11178) இதில் உபநிஷதங்கள் எந்த காண்டததில் வரும்? ஞான காண்டத்தில் 11179) உபநிஷதம் என்றால் என்ன பொருள்? குருவோடு இருத்தல், குருவுக்கு அருகே என்றெல்லாம் பொருள்படும். 11180) வேதாந்தங்களாக ஒளிர்கின்றவை எவை?
எல்லாமே வேதாந்தங்களாக ஒளிர்கின்றன. 11181) வேதத்தின் இலக்கு என்ன? வேதாந்தத்தை அறிந்து கொள்ளுதலே ஆகும். 11182) காசிக்குச் சென்றாலும் கர்மம் தீராது என்று புலம்புகிறார்களே, இதன் உண்மை என்ன? அவ்வளவு தூரம் இல்லறத்திலும், இந்த உலகத்தின் மீதும், உடல் மீதும் பற்றுக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். காசிக்குப் போனால் அங்கு எரியும் பிணங்களைப் பார்த்தவுடன் வைராக்கியம் வரவேண்டும். இந்த உடல் ஒன்றுமல்ல, நம் அகங்காரம் ஒன்றுமல்ல, என்கிற விவேகம் வரவேண்டும். இந்த உலகத்தில் அனுபவிக்கும் சுகங்களெல்லாம் வெறும் குப்பை, இறுதியில் இப்படித்தான் இறக்கப் போகிறோம். அதற்குள் கர்மாவை அழித்துக் கொள்ள வேண்டும். அல்லது இறைவனின் மீதுள்ள பக்தியால் கர்மாவை அழிக்க வேண்டும் என்றெல்லாம் விவேகச் சிந்தனை வரவேண்டும். அப்படி கூட வராத சிலரைப் பார்த்தே காசிக்குச் சென்றாலும் கர்மம் தீராது என்கிறார்கள். மேலும், அவ்வளவு பாவக் குவியலை சேர்த்துக் கொண்டுள்ளாரே என்கிற ஆதங்கத்தால் எழுந்த வாக்கியம்தான் இது.

சிவபெருமான்

கே. ஈஸ்வரலிங்கம் 11150) சிவபெருமானுடைய வடிவம் எத்தனை? மூன்று 11151) சிவபெருமானுடைய மூன்று வடிவங்களும் எவை? அருவம், அருவுருவம், உருவம் 11152) அருவத் திருமேனியையுடைய பொழுது சிவபெருமானை எவ்வாறு அழைப்பார்? சிவன் 11153) அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சிவபெருமானை எவ்வாறு அழைப்பார்? சதாசிவன் 11154) உருவத் திருமேனியையுடைய பொழுது சிவபெருமானை எவ்வாறு அழைப்பார்? மகேசுவரன் 11155) மகேசுவரன் எத்தனை 25 வடிவங்களில் அருள்புரிகிறான்? 25 வடிவங்களில் 11156) சரபேஸ்வரர், பைரவர், திரிபாதமூர்த்தி என்று பல்வேறு மூர்த்திகளாக விளங்குபவன் யார்? 11157) உருவமாக காணும் சிவன் எந்த நிலையில் அமர்ந்திருப்பாத காண்கிறோம்? பத்மாசனம் 11158) உருவமாக காணும் சிவனின் ஒளி மிகுந்த கண்கள் எவ்வாறு இருக்கும்? முக்கால் பாகம் மூடிய நிலையில் இருக்கும் 11159) சிவனின் இரு புருவங்களுக்கும் நடுவில் இருப்பது என்ன? நெற்றிக்கண் 11160) சிவனின் நெற்றியில் என்ன இருக்கும்? திருநீற்றினால் மூன்று கோடுகள் 11161) சிவன் எந்த நிற சடைமுடியான்? செம்மை நிற 11162) அவன் தலையில் யார் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறாள்? கங்கை 11163) தலையில் சூடி இருப்பது எதனை? பிறையை 11164) சிவனுக்கு பிடித்த மலர் எது? கொன்றை 11165) சிவன் தலையில் அணிந்திருப்பது எந்த மலரை? கொன்றை 11166) சிவனின் உடல் முழுவதும் என்ன காணப்படும்? திருநீற்று கோடுகள் 11167) சிவனின் கைகளிலும் கழுத்திலும் என்ன காணப்படும்? உருத்திராட்ச மாலை 11168) சிவனின் கழுத்தில் இருப்பது என்ன? பாம்பு 11169) சிவன் எதனை வைத்திருக்கிறார்? உடுக்கையும் சூலாயுதத்தையும் 11170) சிவன் எதனை வாகனமாக வைத்துள்ளான்? விடையாகிய காளை மாட்டை 11171) சிவன் இடையில் என்ன அணிந்துள்ளான்? புலித்தோலை 11172) சிவன் எதனை வீடாக வைத்துள்ளான்? கைலாய மலையை

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812