செவ்வாய், 15 டிசம்பர், 2015

ஈமச் சடங்குக்குச் சென்று வந்த பின் குளிப்பது ஏன்?

ஈமச் சடங்குக்குச் சென்று வந்த பின் குளிப்பது ஏன்?
ஈமச்சடங்கு முடிந்த பின் குளித்தல் பிரேத ஆத்மாக்கள் உங்களை பிடித்து விடும் என்தைத் தான் இதற்கு காரணமாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், அது நுண்ணுயிர்கள் சம்பந்தப்பட்டவையாகும்.
ஒருவர் இறந்த பின் அவர் உடல் கொஞ்சம் கொஞ்சமாக அழுகத் தொடங்கும். ஈமச்சடங்கில் கலந்து கொள்பவர்கள் இறந்த நபருக்கு அருகில் தான் இருக்க வேண்டி வரும். இதனால் அழுகிக் கொண்டிருக்கும் இறந்த உடலில் இருந்து வரும் பக்டீரியாக்களால் நீங்கள் பாதிக்கப்படலாம். அதனால் தான் ஈமச்சடங்கை முடித்த கையோடு பிற வேலைகளை செய்வதற்கு முன் குளிக்க வேண்டும்.

 இறைவனிடம் வேண்டுதல் வைப்பது சரியா?
இறைவன் கருணையாளராக இருக்கும் போது வேண்டுதல் வைப்பது தவறு தான். இதையே மாணிக்கவாசகர், வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ என்று குறிப்பிடுகிறார். இதை உணர்ந்தவர்கள் வேண்டுதல் எதுவும் வைக்க மாட்டார்கள். குழந்தை அழுவதற்கு முன் பாலூட்டும் தாயின் கருணையை, பால் நினைந்து ஊட்டும் தாயினும் என தாயையே இறைவனுக்கு உதாரணப்படுத்துகின்ற அளவுக்கு அவர் பெருமைப்படுகிறார். ஆனால் குழந்தைகள் இது புரியாமல் அழுகின்றன. அழத்தேவையில்லை. நாம் கேட்காமலேயே இறைவன் தருவான் என்ற உணர்வு வரும் வரை வேண்டுதல் என்பது இருக்கும். இறையருளால் மனம் பக்குவப்படும் போது மாணிக்கவாசகரின் திருவாசகம் சாத்தியமாகி விடும்.


 மாங்கல்யம் தந்துனானேன யார் சொல்ல வேண்டிய மந்திரம?
இந்துக்களின் திருமணங்களின் முக்கிய நிகழ்வான தாலி கட்டுதலின் போது புரோகிதர்களால்,
மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபகே தீவம் ஜீவ சரதச்சதம் என்ற மந்திரம் உச்சரிக்கப்படும்.
இந்த மந்திரத்தின் பொருள்,
எனது வாழ்வுக்குக் காரணமான மங்கல நூலை உனது கழுத்தில் அணிவிக்கின்றேன். நீயும் என்னுடன் நூறாண்டு வாழவேண்டும் என்பதாகும்.
ஆரம்பத்தில் இந்த மந்திரத்தை மணமகன் உச்சரிப்பது தான் வழக்கம். ஆனால் காலப்போக்கில் புரோகிதரே கூறும் படி மாறிவிட்டது. எனவே இந்த மந்திரத்தை மணமகன் உச்சரிப்பது தான் சரி.


வீட்டில் விளக்கு எரியும்போது வாசலை மூடலாமா?
தலை வாசலைத் திறந்து வைப்பதோடு கொல்லைப்புறத்தைப் பூட்டிய பின்பே விளக்கேற்ற வேண்டும். அப்போது திருமகள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அவள் வீட்டில் தங்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள்.


ஏன் ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்ய வேண்டும்…?
எந்த ஒரு விசேஷத்திற்க்கு சென்றாலும் மொய்  என்று ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பது நமக்கு வழக்கம். இவ்வாறு வைக்கும் போது முழு தொகையுடன் ஒரே ஒரு ரூபாய் சேர்த்து கொடுப்போம். ஏன் நம் முன்னோர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை சேர்த்துக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கியுள்ளனர் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..மிகவும் சிறிய விஷயமானலும், இதிலும் நம் முன்னோர்களின் பண்பாடு சார்ந்த மேன்மை வெளிப்பட்டிருக்கிறது.
பொதுவாக மொய்பணம் கொடுப்பது என்பது நம் பண்பாட்டில் நீண்ட நாட்;களாக இருந்து வரும் மரபே. அந்தக்காலத்தில் பணம் என்பது பொன், மற்றும் வெள்ளி போன்ற மதிப்பு மிக்க உலோகத்தில் உருவாக்கப்பட்ட நாணயங்கள் வடிவத்தில் தான் புழக்கத்தில் இருந்து வந்தன. இந்த மொய்ப்பணமும் அந்தக் காலத்தில் மதிப்பு மிக்க உலோக நாணயங்களாக இருந்தன.
அதனால் மொய் செய்பவருக்கும் தான் ஒரு மதிப்பு மிக்க பொருளை அன்பளிப்பாக கொடுத்ததான ஒரு மன நிறைவு இருந்தது. ஆனால் நோட்டுக்கள் என்கிற ருபாய் தாள்கள் புழக்கத்தில் வந்து நாணயத்தின் இடத்தைப் பிடித்துக் கொண்டன. நோட்டுத் தாள்கள் உலோக நாணயங்களை போல் உண்மை மதிப்பு கொண்டவை அல்ல.
எனவே ரூபாய் தாளை மொயப்;பணமாக கொடுப்பவர் மனதில் தான் ஓர் உண்மை மதிப்பு கொண்ட பணத்தை மொய்யாக செய்யவில்லை என்ற மனக்குறை இருந்தது. எனவே மொய்ப்பணமாக வைக்கும் ரூபாய் தாளுடன் உண்மை மதிப்பு கொண்ட வெள்ளி ஒரு ரூபாய் நாணயத்தையும் சேர்த்துக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கி மனக்குறையை போக்கிக் கொண்டனர்.
அந்தக் காலத்தில் மதிப்புமிக்க வெள்ளியில் தான்நாணயங்கள் உருவாக்கப்பட்டன. அவையே பணமாக புழக்கத்தில் இருந்த வந்தன. எனவே தான் நம் மொய்ப்பணம் வைக்கும் பழக்கத்தில் பதினொன்று, ஐம்பத்தியொன்று, நூற்றியொன்று, ஐநூற்றியொன்று, ஆயிரத்தியொன்று என்று ஒரு ரூபாய் சேர்த்து வைக்கும் பழக்கம் மரபானது.
அது போலவே கூடுதலாக சேர்த்துக் கொடுக்கப்படும் ஒரு ரூபாய் நோட்டு தாளாக இல்லாமல் ஒரு ரூபாய் நாணயமாக தான் இருக்க வேண்டும் என்பதும் கண்டிப்பான மரபாகவும் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அது போல் ஒரு ரூபாய் தட்சணையாக கொடுக்கப்பட வேண்டிய இடத்தில் ஒரு ரூபாய் தாளுடன் வெள்ளியிலான கால் ரூபாயும் சேர்த்துக் கொடுக்கும் வழக்கமும் இருந்து வந்தது.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812