திங்கள், 30 ஆகஸ்ட், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம் -
தலைவர்/ ஸ்தாபகர்,
தமிழர் நற்பணி மன்றம்

(கோலம்)

7203) விஷ்ணு பகவான் கோலம் இடுதலை என்னவென்று குறிப்பிடுகிறார்?
பிண்டி மாறுதல்

7204) விஷ்ணு பகவான் கோலத்தை இவ்வாறு கூறியது ஏன்?
அரிசி மாவினால் அதிகாலையில் வீட்டு வாசலில் கோலமிட அந்த மாவை எறும்புகளும் காகங்களும் பிற உயிரினங்களும் உண்பதிலிருந்து நம் தர்ம சிந்தனை தொடங்க வேண்டும் என்பதுதான் அவர் சொன்னதன் பொருளாகும்.

7205) இந்த அரிசி மாவை உண்ணும் எறும்புகள் என்ன செய்யுமாம்?
இப்படிப்பட்ட தர்மத்தைச் செய்தவர்களின் கண்பார்வை நன்கு விளங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுமாம்.

7206) வைகுண்டத்தில் யார் கோலம் போட்டதாக புராணங்கள் கூறுகின்றன?
மஹா லட்சுமி

7207) மாக்கோலம் இடும்போது செம்மண் கரை தீட்டுவார்கள் இது ஏன்?
அழகுக்காகவா? அழகுக்காக மட்டுமல்ல, வெள்ளையும் சிவப்புமாய் கோலம் போடுவது விஷ்ணுவிற்கே கோயில் கட்டுவது போலாகுமாம்!


(இராஜகோபுரம்)

7208 இராஜகோபுரத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?
தூலலிங்கம்

7209 தூலம் என்பதன் பொருள் என்ன?
கண்ணால் பார்க்கக்கூடியது

7210 யோகிகள் கோபுரத்தை என்னவென்று குறிப்பிடுவார்கள்?
பிரமந்திர மத்ய கபாலத்வாரம்.

7211 கோபுரம் எத்தனை அடுக்குகளைக் கொண்டு அமைக்கப்படும்?
3, 5, 7, 9.

7212 மூன்று அடுக்கு கோபுரம் எதனை குறிக்கும்?
ஐம்பொறிகளை

7213 ஐந்து அடுக்கு கோபுரம் எவற்றைக் குறிக்கும்?
ஐம்பொறிகளுடன் மனம், புத்தி

7214 ஒன்பது அடுக்கு கோபுரம் எவற்றைக் குறிக்கும்?
ஐம்பொறிகளுடன் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவற்றை

(தீபாராதனை)

7215 இறைவனுக்கு எத்தனை வகை உபசாரங்கள் செய்யப்படும்?
16 வகை

7216 16 வகை உபசாரங்களில் மிகச் சிறந்தது எது?
தீபாராதனை.

7217 முக்கோடி தேவர்களும் தீபங்களில் அமர்ந்து இறைவனை தரிசித்துச் செல்வது எப்போது? தீபாராதனையின்போது.

7218 தீபாராதனையின் போது தீபத்தை இறைவனுக்கு எத்தனை முறை காட்டுவார்கள்? மும்முறை.

7219 முதல் சுற்று எதற்காக காட்டப்படுகிறது?
அண்ட சராசரத்தை காக்க.

7220 இரண்டாம் சுற்று எதன் பொருட்டு காட்டப்படுகிறது?
அண்ட சராசரத்தில் உள்ள ஜீவராசிகளை காக்க.

7221 மூன்றாம் சுற்று எதற்காக காட்டப்படுகிறது?
பஞ்ச பூதங்களை காக்க.

7222 ஒன்பது தீபங்கள் எதைக்குறிக்கும்?
நவசக்தியை.

7223 ஏழு தீபங்கள் எதைக் குவிக்கும்?
சப்த கன்னியரை

7224 ஐந்து தீபங்கள் எதைக் குறிக்கும்?
ஐந்து கலைகளை.

7225 மூன்று தீபங்கள் எதைக் குறிக்கும்?
சூரிய, சந்திர, அக்கினியை.

7226 அகிலாண்டேஸ்வரி ஆதிபராசக்தியை குறிப்பது எந்த தீபம்?
ஒற்றைத்தீபம்.

7227 தீபாராதனையில் இறுதியாக காட்டப்படுவது எந்த தீபம்?
கும்ப தீபம்

7228 கும்பதீபம் எதை குறிக்கும்?
உலக தத்துவமான சதாசிவத் தத்துவத்தை.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

அறநெறி அறிவு நொடி
கே. ஈஸ்வரலிங்கம் - தலைவர்/ ஸ்தாபகர்,
தமிழர் நற்பணி மன்றம்

(கோலங்கள்)


7184) அழகு மட்டுமன்றி நம்மை பக்தி பாதையிலும் அழைத்துச் செல்பவை எவை?
கோலங்கள்

7185) புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட இந்த கோலங்கள் எத்தன்மையை கொண்டவை?புனிதத் தன்மை

7186) கோலங்கள் போடுவதால் கிடைக்கும் பலன் என்ன?
புண்ணியம்

7187) ஆண்டவனின் அவதாரங்களையும் வடிவங்களையும் என்னவென்று கூறுவர்?
திருக்கோலம்

7188) கோலங்கள் வெறும் வடிவங்கள் மட்டும்தானா?
இல்லை, அது விஷயங்களை வெளிப்படுத்தம் உருவங்கள்

7189) ஒரு வீட்டில் நடைபெறும் விசேஷத்தை முற்றத்திலேயே சொல்லுவது எது
வாசலில் இடப்படும் கோலம்.

7190) ஒரு பூஜை முழுமையடைய முதல் காரணமாக அமைவது எது?
கோலம்

7191) கோலங்களுக்கு பூஜை செய்வது எப்போது?
(சித்திரமான கோலத்திற்கு) சித்திரா பெளர்ணமி அன்று.

7192) பூஜிப்பதற்குரிய வேறு கோலம் என்ன?நவக்கிரஹ கோலம்

7193) நவக்கிரஹ கோலங்கள் எவ்வாறு போடப்படும்?
அந்தந்த கிரகத்திற்கு உரிய தானியத்தை தாம்பாளத்தில் பரப்பி, அதில் வரைந்து பூஜிக்கப்படும்.

7194) கோலங்களை அரிசி மாவினால் போடுவதால் ஏற்படும் பலன் என்ன?
ஆயிரக் கணக்கான பேருக்கு அன்னமிட்ட புண்ணியம்.

7195) அரிசி மா கோலத்தில் இந்த அன்னமிட்ட புண்ணியம் எவ்வாறு கிடைக்கிறது?
எண்ணற்ற எறும்புகள் அதனை உண்பதால்

7196) வளைவுகளான கோடுகளாக இருந்தாலும் வாழ்க்கை நேராக இருக்க இறைவனின் ஆசியை பெற்றுத் தருபவை எவை?
கோலங்கள்

7197) புராண காலத்திலிருந்து புகழ்பெற்று விளங்குபவை எவை?
கோலங்கள்

7198) இராமன் முடிசூடப்போகின்றான் என்பதை அறிந்த மக்கள் தமது மகிழ்ச்சியை தெரிவித்தது எவ்வாறு?
வீடு வாசல், வீதி என எல்லா இடங்களிலும் குதூகலத்துடன் கோலம் போட்ட தன் மூலமேயாகும்.

7199) சந்தோஷத்தின் வெளிப்பாடாக மட்டுமல்லாது நல்லதையே நடத்தித் தரும் அச்சாரமாக விளங்குவது எது?
கோலம்

7200) மஹா லட்சுமிக்கு கோலத்தின் மகிமையை எடுத்துரைத்தவர் யார்?
மஹா விஷ்ணு

7201) மஹா விஷ்ணு இதனை எப்போது எடுத்துரைத்தார்?
வராக அவதாரம் எடுத்தபோது

7202) மஹா விஷ்ணு கூறியது என்ன?
கலியுகத்தில் மக்கள் மனக்குழப் பத்திலும் துன்பத்திலும் உழல்வார் கள் தர்மம் நலிவுறும் அப்போது அவரவர் இல்லங்களில் இடப் படும் கோலங்கள் மக்களின் மனதை நல்வழிக்குத் திருப்ப உதவும்

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம் தலைவர் / ஸ்தாபகர், தமிழர் நற்பணி மன்றம்


(வரலக்ஷ்மி விரதம்)


7154. இல்லந்தோறும் திருமகளை நோன்பிருந்து வரவேற்பது எப்போது? வரலட்சுமி விரதம் அன்று

7155. வரலட்சுமி விரதம் எப்போது வரும்?ஆடி அல்லது ஆவணி மாதம் வெள்ளிக்கிழமையில்

7156. வரலட்சுமி விரதம் குறிப்பாக எப்போது வரும்?குறிப்பாக ஆவணி மாதம் பெளர்ணமி நாளுக்கு முந்தையாக வரும் வெள்ளிக்கிழமையில்

7157. வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் என்றால் அம்மனை எப்போது அழைக்க வேண்டும்?முதல் நாளான வியாழனன்று

7158. பூஜை செய்யப் போகும் இடத்தில் என்ன செய்ய வேண்டும்? இழை கோலம் போட்டு காவியிட்டு ஒரு தட்டில் அட்சதை பரப்பி அம்மனை ஆவாஹனம் செய்யப்போகும் கலசத்தை அதன் மீது வைக்க வேண்டும். கலசத்தினுள் அட்சதையுடன் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், ஒரு வெள்ளிக்காசு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழம் என்பன வைத்து மாவிலையைக் கலசத்தின் மீது வைத்து அதன் மீது தேங்காயை வைக்க வேண்டும். அம்மனின் முகத்தைக் கலசத்தோடு இணைத்து வைத்து விளக்கேற்றி வெண்பொங்கல் நிவேதனம் செய்யலாம். அதன்பின் அம்மனை அழைப்பதாக உள்ள பாடல்கள் பாடி வரலட்சுமி அம்மனை வரவேற்கலாம்.

7159. வரலட்சுமி நோன்புக்கு முதல் அம்மனை அழைத்து மறுநாள் என்ன செய்ய வேண்டும்? நோன்பிருந்து பூஜை செய்து அம்மனை ஆராதனை செய்ய வேண்டும்.வெள்ளிக்கிழமையன்று விளக்கேற்றி வைத்து நல்ல நேரத்தில் பிள்ளையார் பூஜை செய்து கலசத்தில் அம்மனை ஆவாஹனம் செய்து கலச பூஜை செய்து பின் லக்ஷ்மி அஷ்டோத்திரம் முடித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.

7160. அட்சதை என்பது என்ன? அரிசி

7161. நிவேதனங்களாக எதை அளிக்க வேண்டும்? மஹா நிவேத்யத்தை

7162. மஹா நிவேத்யத்தில் அடங்கி இருப்பவை எவை? அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி, முதலியவற்றுடன் பழவகைகள்.

7163. மஹா நிவேத்யத்தை அளித்தபின் என்ன செய்ய வேண்டும்?நோன்பு சரடிற்கு தனியே பூஜை செய்ய வேண்டும்.

7164. நோன்பு சரடி என்பது எதனை? நோன்பு நூலை

7165. நோன்பு சரடிற்கு பூஜை செய்தபின் செய்ய வேண்டியது என்ன? நோன்பு நோற்றதன் அடையாளமாக மணிக்கட்டில் சரடைக் கட்டிக் கொள்ளலாம்.

7166. எந்த மணிக்கட்டில்? வலது மணிக்கட்டில்

7167. பூஜை முடிந்த பின் நாள் முழுவதும் விளக்கு எரிந்து கொண்டிருந்தால் நல்லதா? ஆம் நல்லது.

7168. மாலையில் என்ன செய்யலாம்? பால் பழம் நிவேதனம் செய்து இரவு தொடங்கும் நேரம் தீபத்தை சாந்தி செய்யலாம்.

7169. மறுநாள் சனிக்கிழமையன்று செய்யக்கூடியதைத் தருக? புனர் பூஜை என்கின்ற பூஜை செய்து சுமங்கலப் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம் நிவேதனம் செய்த சுண்டல் முதலியவற்றைக் கொடுப்பது வழக்கம்.

7170. அம்மனை மனம் குளிர பாட்டுக்கள் பாடி அரிசி வைக்கும் பாத்திரத்தை பூஜை செய்த இடத்திற்கு அருகில் வைத்து ஆரத்தி எடுத்தபின் அம்மனை மெதுவாக அந்த அரிசியுடன் கூடிய பாத்திரத்தில் வைப்பார்கள் இது ஏன்? நம் ஆராதனைகளை ஏற்ற திருமகள் நம்முடன் தங்குவதாக ஒரு ஐதீகம்.

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர்/ஸ்தாபகர்

(தமிழர் நற்பணி மன்றம்)

முருகப் பெருமான்

7036) ‘முருகு’ என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன?

இளமை, மனம், அழகு, தெய்வம்

7037) சங்ககால மக்கள் மலையும் மலை சார்ந்த பகுதிக்குரிய கடவுளாக வழிபட்டது யாரை?

முருகன்

7038) முருகப் பெருமானின் அருட்திருட் நாமங்களை தருக.

முருகன், குமரன், குகன், சரவணபவன், சேனாதிபதி, சுவாமிநாதன், வேலன், கந்தன், கார்த்திகேயன், சண்முகன், தண்டாயுதபாணி, வடிவேலன், குருநாதன், சுப்பிரமணியன்

7039) முருகன் என்பதற்கு உரிய பொருள் என்ன?

அழகுடையவன்

7040) குமரன் என்பதற்குரிய பொருள் என்ன?

இறைவனாய் எழுந்தருளியிருப்பவன்

7041) குகன் என்பதன் பொருள் யாது?

கங்கையால் தாக்கப்பட்டவன்

7042) சரவணப் பொய்கையில் உதித்ததால் முருகனுக்கு ஏற்பட்ட பெயர் என்ன?

சரவணபவன்.

7043) முருகன் சேனைகளின் தலைவனாக விளங்கியதால் ஏற்பட்ட பெயர் என்ன?

சேனாதிபதி

7044) முருகனுக்கு சுவாமிநாதன் என்ற பெயர் வரக் காரணமென்ன?

தந்தைக்கு உபதேசித்ததால்

7045) வேலன் என்ற பெயர் வரக் காரணம் என்ன? வேலினை ஏந்தியதால்

7046) கந்தன் என்ற பெயரின் பொருள் என்ன?

ஒன்று சேர்க்கப்பட்டவன்

7047) கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் ஏற்பட்ட பெயர் என்ன?

கார்த்திகேயன்

7048) ஆறுமுகங்களை உடையவன் என்பதால் ஏற்பட்ட பெயர் என்ன?

ஆறுமுகன், சண்முகன்

7049) தண்டாயுதத்தை கையில் ஏந்தியதால் வந்த பெயர் என்ன?

தண்டாயுதபாணி

7050) அழகுடைய வேலை ஏந்தியதால் வந்த பெயர் என்ன?

வடிவேலன்

7051) தந்தைக்கு குருவாக இருந்து உபதேசித்ததால் வந்த பெயர் என்ன?

குருநாதன்

7052) சுப்பிரமணியன் என்ற பெயர் வரக் காரணமென்ன?

மேலான பிரம்மத்தின் பொருளாக இருப்பவன் என்பதால்

7053) முருகனுக்கு உரிய பழமொழிகள் சில தருக.


வேலை வணங்குவதே வேலை

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை;

சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை

வயலூர் இருக்க அயலூர் தேவையா?

காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி

அப்பனை பாடிய வாயால்-

ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?

முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;

மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.

(சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)

கந்தபுராணத்தில் இல்லாதது

எந்த புராணத்திலும் இல்லை.

கந்தன் களவுக்கு கணபதி சாட்சியாம்

பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?

சென்னிமலை சிவன்மலை சேர்ந்தோர் பழனிமலை.

செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?

திருத்தனி முருகன் வழித்துணை

வருவான் வேலனுக்கு ஆனை சாட்சி

வேலிருக்க வினையுமில்லை;

மயிலிருக்கப் பயமுமில்லை.

செட்டிக் கப்பலுக்குச் செந்தூரன் துணை

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812