திங்கள், 8 அக்டோபர், 2018

நடிகை ப்ரியா ஜெயந்திக்கு விருது

கொழும்பு பிரதேச சபையினால் அண்மையில் நடத்தப்பட்ட சாஹித்திய விழாவில் பழம்பெரும் சினிமா, நாடக
நடிகையான ப்ரியா ஜெயந்திக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வீணை இசை கச்சோி

கொழும்பு பிரதேச சபையினால் நடத்தப்பட்ட சாஹித்திய விழாவில்  தமிழா் நற்பணி மன்றத்தினால் மேடையேற்றப்பட்ட
வீணை இசை கச்சோியை படத்தில் காணலாம். திருமதி சுபாஷினி பிரணவனின் மாணவிகளான செல்விகளான எஸ். சனுக்கா, எஸ். சாய்ந்தவி, கே. கௌஷிகா, டீ. ஆர்த்தி, பீ. தேஜஸ்வினி ஆகியோார் இதில் கலந்து கொண்டனர். இதில் பிரபல கலைஞர் பீ. பிரம்மநாயகம் மிருதங்கம் வாசிப்பதை காணலாம்.

கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்



மனதால் கண்ணனை நினைத்தாலே நன்மைகள் தேடி வரும் என்பதற்கு பக்தர்களின் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை செய்து இருக்கிறார் பகவான்.

துரியோதனன் சூதாட்டத்திற்கு பாண்டவர்களை அழைத்தபோது, தர்மர் மறுத்தாலும் பிறகு சபையில் கர்ணன், பாண்டவர்களை கிண்டல் செய்ய, அர்ஜூனன் கோபமாக பேச, தேவை இல்லாமல் வாக்குவாதம் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையில் தர்மரும் சூதாட்டம் ஆடத் தொடங்கினார்.

என் சார்பாக என் மாமா சகுனி ஆடுவார் என்றான் துரியோதனன். பாண்டவர்களின் சார்பாக நான் ஆடுவேன் என்றார் தர்மர் யோசிக்காமல். சகுனியின் தந்திரத்தால் பாண்டவர்கள் சூதில் தோற்றார்கள்.

முருகன்

முருகன் அழித்த ஆறு பகைவர்களும் யார்?
ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் உள்ள ஆறு ஆயுதங்களும் எவை?
அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல்

இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் உள்ள ஆறு ஆயுதங்களும் எவை?

வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில்

முருகப் பெருமானை வணங்க உகந்த நாட்கள் எவை?
திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகியவை ஆகும்.

முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று பாடியவா் யார்?
அருட்கவி அருணகிரி நாதர்

யார் யாரின் கூட்டுக் கலவை முருகன்?
அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம்

முருகனின் கையில் உள்ள வேல் எதனை குறிக்கும்?
இறைவனின் ஞானசக்தியை

விசாகன் என்று அழைப்பது யாரை?
முருகனை

விசாகன் என்றால் என்ன பொருள்?
மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

குக்குடம் என்று அழைப்பது எதனை?
முருகனின் கோழிக் கொடியை

கந்தனுக்குரிய விரதங்கள் எவை?
1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம்.

முருகனின் மூலமந்திரம் எது?
ஓம் சரவணபவாய நம

முருகனை எத்தனை முறை வலம் வருதல் வேண்டும்?
ஒரு முறை

மந்திரங்கள்





தேவியின் அருள்பெறுவதற்கான சாதனங்கள் எவை?

மந்திரமும் யந்திரமும்


மந்திரம் என்பது எத்தனை அங்கங்களைக் கொண்டது?
ஏழு


மந்திரத்தின் 7 அங்கங்களும் எவை?
1. ரிஷி 2. சந்தஸ் 3. தேவதை 4. பீஜம் 5. சக்தி 6. கீலகம் 7. அங்க நியாசம் என்பன.


மந்திரங்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கியவா்கள் யார்?
ரிஷிகள்


ஒவ்வொரு மந்திரமும் முக்கியமான மூன்று விடயங்களைக் கொண்டுள்ளது. அந்த மூன்று விடயங்களும் எவை?
ரிஷி, தேவதை, சந்தஸ்



இங்கு ரிஷி என்பது யார்?

மந்திரத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்த ரிஷி,



தேவதை என்பது யார்?

அந்த மந்திரத்துக்குரிய தேவதை,



சந்தஸ் என்பது என்ன?

அந்த மந்திரத்தின் சொல்லமைப்பு



மந்திர ஜெபம் செய்யும் போது என்ன செய்ய வேண்டும்?

மூன்றையும் போற்றித் துதிக்க வேண்டும் என்பது விதி.


மந்திரத்தை வெளியிட்ட ரிஷி யார்?
ஆதி குரு
அம்மந்திரத்தை நமக்கு உபதேசித்தவர் யார்?
மானிட குரு



ஆதி குரு, மானிட குரு ஆகியவா்களை வணங்குவதற்காக என்ன செய்ய வேண்டும்?
வலது கையால் சிரசைத் தொட்டு உரிய மந்திரம் சொல்ல வேண்டும்.



இதனை என்னவென்று சொல்லுவார்கள்?

ரிஷி நியாசம்


நமக்குச் சமமானவரை வணங்கும் போது எப்படி வணங்க வேண்டும்?
நமது கூப்பிய கைகளின் விரல்களை அவா்கட்கு எதிரே நீட்டி வணக்கத்தைத் தெரிவிக்க வேண்டும்.



தேவதையை வணங்கும்போது எப்படி வணங்க வேண்டும்? இதயத்தில் வசிப்பவராகப் பாவனையோடு மார்புடன் ஒட்டி நிமிர்ந்த கைகளைக் கூப்பியும் குருவைச் சிரமேல் கைகூப்பியும் வணங்குவது முறை.


சந்தஸ் என்பது என்ன?
மந்தரத்தின் சொல் அமைப்பு.



அதற்கு வணக்கம் தெரிவிக்கும் முறை என்னவென்று அழைக்கப்படுகிறது?
அதற்கு வணக்கம் தெரிவிக்கும் முறையில் உதட்டின் வெளியே வலது கையால் தொடுவது சந்தஸ் நியாசம் எனப்படும்.


தேவதையை இதயத்தில் அமா்ந்திருப்பதாகப் பாவனையுடன் அதயஸ்தானத்தைத் தொடுவதை என்னவென்று அழைப்பர்?

தேவதா நியாசம்


பீஜம் என்பது எதனை?
மிகச் சிறிய ஆலம் விதையிலிருந்து மிகப் பெரிய ஆலமரம் வளா்ந்தோங்கிப் பயன் தருகிறது. மாபெரும் மரம் வளா்வதற்கான சக்தி அனைத்தும் அந்தச் சிறிய விதையிலே அடங்கிக் கிடக்கிறது. அந்த வித்தை பீஜம் என்பா்.


இந்தப் பிரபஞ்சமும் பஞ்ச பூதங்களும் எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கு வந்தவை?
சூக்கும நிலையிலிருந்தே தூலமான நிலைக்கு வந்தவை



அந்தச் சூக்கும நிலைக்கு முன்பாக எந்த நிலையில் இருந்தது?
அதி சூக்கும நிலையிலிருந்தன. இந்த ஒவ்வொரு சூக்குமும் ஒலியிலிருந்தே வெளிப்பட்டன. அந்த நுண் ஒலியை பீஜம் என்பா்.



சக்தி என்பது என்ன?
அந்த விதையில் அடங்கிக்கிடக்கிற வீரியம் சக்தி எனப்படும்.



சக்தியின் வெளிப்பாடுகள் எவை? வீரியம் தேஜஸ், பலம் என்பன


கீலகம் என்பது என்ன?
சக்தி தேவையின்றி வேறிடத்துக்குச் செல்லமுடியாதபடி கட்டி வைக்கும் முளைக்குச்சி போன்றது கீலகம். ஒரு தேரின் சக்கரத்திற்கு அச்சாணி போல மந்திரத்துக்குக் கீலகம் ஒரு முக்கியமான அங்கமாகும்.

கொலு கோலாகலம்




நவராத்திரிப் பண்டிகை என்
று ஒன்பது நாட்களைக் குறிக்கும் இப்பண்டிகையைக் கொலுப் பண்டிகை என்ற பெயரிலும் பொருத்தமாக அழைப்பது இப்பண்டிகைக்கே உள்ள தனிச்சிறப்பு.
நவராத்திரி பண்டிகையின் நோக்கமே இக, பர வாழ்வின் உயர்வுதான். அந்த உயர்வினைப் படிகள் மூலம் விளக்குவதே கொலுவின் முக்கிய அம்சம். இந்தப் படிகள் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என ஒன்றைப்படையில் அமைந்திருக்க வேண்டும். அவரவர் இடம், பொருள் ஆகியவற்றின் வசதியைப் பொறுத்து இந்த எண்ணிக்கைகளில் படிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால் பொம்மைகளின் வைப்பு முறையில் இயன்றவரை ஒன்பது படிக்கான முறையைப் பின்பற்ற வேண்டும்.
உயிரினங்கள் ஓருயிரி முதல் ஆறறிவு மனிதன்வரை வளர்ச்சி அடைவதையே இவை நினைவுபடுத்துகின்றன. பின்னர் மனிதன் தன் எண்ணம், செயல்களால் மேலும் உயர்ந்து இறை நிலையை அடைய வேண்டும் என்பதையும் நினைவுறுத்துகின்றன. இதற்காக சக்தியின் அம்சங்களை எண்ணிப் பூஜித்தால் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெறலாம் என்பது ஐதிகம்.
நவராத்திரி கொலுவின் கதை
மகாராஜா சுரதா, எதிரிகளை வெல்வதற்குத் தனது குருவான சுமதாவிடம் ஆலோசனை கேட்டார். அதன்படி சுத்தமான ஆற்று மணலைக் கொண்டு காளிரூபத்தைச் சிலையாக வடிக்கிறான். அதை அலங்காரம் செய்து உண்ணா நோன்பிருந்து மனமுருக வேண்டுகிறான். காளி அவனது பூஜையால் மகிழ்வுற்று அம்மன்னனின் பகைவர்களை அழித்து ஒரு புது யுகத்தினை உருவாக்கி அளிக்கிறாள். தன் ரூபத்தை மண்ணால் செய்து பூஜித்தால் சகல சுகங்களும், செளபாக்கியங்களும் பெறலாம் என்று அம்பிகையான தேவி அருளுகிறாள்.
தேவி மகாத்மியம்
ஆதிபராசக்தியான தேவி அசுரர்களை அழித்து தேவர்களையும், பாபங்களை அழித்து மனிதர்களையும் காப்பவள். இவள் கொண்டிருக்கும் ரூபங்கள் மூன்று: தடைகளை நீக்கும் துர்க்கை, ஐஸ்வர்யங்களை அருளும் லஷ்மி, கல்வியையும், ஞானத்தையும் அருளும் சரஸ்வதி.
அசுரர்கள் தேவர்களுக்குத் துன்பம் இழைக்கும் வழக்கத்தைக் கொண்டவர்கள். அவர்கள் வரம் கேட்கும்பொழுதே, பெண்கள் வலிமையற்றவர்கள் என்று நினைத்து, தாங்கள் எந்த ஆணாலும் கொல்லப்படக் கூடாது என்றே வரம் கேட்பார்கள். அதுபோன்ற வரங்களைக் கேட்ட அசுரர்கள் சண்டமுண்டன், ரக்த பீஜன், சும்ப நிசும்பன், மகிஷாசுரன். இவர்களை தேவி அழித்த நிகழ்வுகளே தேவி பாகவதம்.
முப்பத்து முக்கோடி தேவர்களும் தங்கள் சக்தியினைத் திரட்டி அம்பாள் போர் புரியச் செல்லும்பொழுது உதவுகிறார்கள். சக்தி அனைத்தையும் கொடுத்துவிட்டதால், பொம்மை போல் ஆகிவிடுகிறார்கள். அதுவே கொலு என்ற ஐதீகமும் உண்டு.
ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகளைப் படி ஒன்றில் வைக்க வேண்டும். இது தவிரப் பொதுவாகக் கொலு வைக்கும் இல்லங்களில் பூங்கா அமைப்பது உண்டு.
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள். அந்தக் காலத்தில் திண்ணைகளில் அமர்ந்து சோழி உருட்டி விளையாடுவது வழக்கம். இந்தச் சோழிகளையும், சோழிகளால் செய்யப்பட்ட பொம்மைகளையும் இந்தப் படியில் வைக்கலாம்.
மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு, சிறு பூச்சிகள், மண் புழு ஆகியவற்றின் பொம்மைகள்.
நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு, பட்டாம்பூச்சி ஆகியவற்றின் பொம்மைகள்.
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகளை அழகுற வைக்கலாம்.
ஆறறிவு மனிதர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். சாதனையாளர்கள், உலகத் தலைவர்கள் ஆகியவற்றை வைத்தால், இல்லத்திற்கு வரும் விருந்தாளிகள் அச்சிலையில் உள்ளவர்களின் சாதனைகளை நினைவுகூர முடியும்.
மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரமணர், வள்ளலார் முதலானோரின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
தேவர்கள், அஷ்டதிக் பாலர்கள், நவக்கிரக அதிபதிகள், இந்திரன், சந்திரன் ஆகிய தெய்வ உருவங்களை மண் பொம்மைகளாக வைக்கலாம்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் சிலையுடன் அவ்வவர்களின் தேவியருடன் அமைந்திருக்குமாறு இந்த மேல் உச்சிப்படியில் வைக்க வேண்டும். இவற்றின் நடுவில் ஆதி பராசக்தி இருக்குமாறு அமைக்க வேண்டும்.

நவராத்திரி நாளை ஆரம்பம்


18ஆம் திகதி சரஸ்வதி பூஜை
19 ஆம் திகதி விஜயதசமி




ஒன்பது ராத்திரிகளை முன்கொண்டு முத்தேவிகளின் ரூபங்களில் அன்னை பராசக்திக்கு விழாவெடுப்பது நவராத்திரியாகும்.
அகில உலகையும் காக்கும் அன்னை பராசக்தியை பூஜித்து வழிபட்டு விழாவெடுத்து அவரது கருணை, ஆசீர்வாதம், அருள் கடாட்சம் தன்னை பெறும் பாக்கியமாக நவராத்திரி விழாவைக் கொண்டாடுவதில் இந்துக்கள் பெருமை கொள்கிறார்கள்.
வழக்கம் போலன்றி இம்முறை துர்க்கா, லக்ஷ்மிக்கு மும்மூன்று நாட்களும் சரஸ்வதிக்கு நான்கு நாட்களுமாக உள்ளது. 11ஆவது நாள் விஜயதசமியாக வருகிறது. இந்தவகையில் இம்மாதம் 09ஆம் திகதி நவராத்திரி ஆரம்பமாகி 19ஆம் திகதி விஜயதசமியன்று நிறைவு பெறுகிறது.
இல்லங்களிலும் ஆலயங்களிலும், தொழில் நிறுவனங்களிலும் கல்வியகங்களிலும் தோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
அமைச்சு மட்டத்திலும் நாடாளுமன்றத்திலும் இவ்விழா கொண்டாடப்படும் அளவுக்கு நவராத்திரியின் மகிமையும் பெருமையும் மேலோங்கியுள்ளது.
பெண்கள் முக்கியமாக நவரத்திரி காலத்தில் விரதம் நோற்று பக்தி பரவசத்துடன் நவராத்திரியை கொண்டாடி வருகிறார்கள். கன்னிப் பெண்கள் நல்ல வரன் கிட்ட வேண்டி நவராத்திரியில் வழிபட்டு வருகின்றார்கள்.
நவராத்திரி விழா நாடளாவிய ரீதியில் மாத்திரமா கொண்டாடப்படுகிறது, உலகளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அன்னை பராசக்தியின் அருள் கடாட்சம் வேண்டி இந்நவராத்திரியின் மகிமை, பெருமை குறித்து பக்தி சிந்தையுடன் கொண்டாடுவோமாக!

வெள்ளி, 5 அக்டோபர், 2018

முருகன்

முருகன் அழித்த ஆறு பகைவர்களும் யார்?
ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் உள்ள ஆறு ஆயுதங்களும் எவை?
அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல்

இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் உள்ள ஆறு ஆயுதங்களும் எவை?

வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில்

முருகப் பெருமானை வணங்க உகந்த நாட்கள் எவை?
திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகியவை ஆகும்.

முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று பாடியவா் யார்?
அருட்கவி அருணகிரி நாதர்

யார் யாரின் கூட்டுக் கலவை முருகன்?
அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம்

முருகனின் கையில் உள்ள வேல் எதனை குறிக்கும்?
இறைவனின் ஞானசக்தியை

விசாகன் என்று அழைப்பது யாரை?
முருகனை

விசாகன் என்றால் என்ன பொருள்?
மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

குக்குடம் என்று அழைப்பது எதனை?
முருகனின் கோழிக் கொடியை

கந்தனுக்குரிய விரதங்கள் எவை?
1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம்.

முருகனின் மூலமந்திரம் எது?
ஓம் சரவணபவாய நம

முருகனை எத்தனை முறை வலம் வருதல் வேண்டும்?
ஒரு முறை

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812